"ரோகவனத்தில் உதிரும் பாறைகளில் செதில் உதிரும் பாதரச எலும்பின்தூள் படிந்த கல்கோவிலில் நூல் சுருளும் சர்ப்பம் மணல் உதிர நகர்ந்தது."
ஏதாவது புரிகிறதா? ஆனால் இது அனைத்தும் தமிழ் சொற்கள் தாம். இப்படி எல்லாம் எழுதாமல் நான் எளிமையாக எழுதுவதையே விரும்புகிறேன்..(மேற்கண்ட வாக்கியத்தை நான் சுட்டது வெப்உலகம் தளத்தில் ஒரு கட்டுரையில் இருந்து).
என்னுடைய பதிவுகளும் எழுத்தும் அனைவருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறேன்.கடுமையான மொழியையோ அல்லது அதிக சிந்தனையை வேண்டி நிற்கும் விஷயங்களையோ நான் எழுதாமல் இருப்பதற்கு காரணம் அது எனக்கு புரிவதில்லை(?) என்பதற்காக மட்டும் அல்ல.கடுமையாக இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் பார்க்கவோ படிக்கவோ விரும்பாத சில நல்ல விஷயங்களை சற்று எளிமையாக கொடுக்க ஆசை.அவ்வளவுதான்.
***********************************
நான் இந்த தமிழ்மணத்திற்கு வந்தது ஒரு விபத்துதான்.வேலை இல்லாத நேரங்களில் எழுத்தாளர்களின் பெயர்களை கூகிள் தேடுபொறியில் இட்டு அது துப்பும் பக்கங்களை படித்து பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் சுந்தர ராமசாமியின் பெயரை கொடுத்து படித்துக்கொண்டிருந்தபோது அது என்னை பிரகாஷின் தளத்தி்ல் கொண்டு தள்ளியது.அன்று ஆரம்பித்தது தமிழ்மணத்திற்கு சனி. நானும் வலைபதிக்க வேண்டி உதவி கேட்டு பிரகாஷிற்கு மெயில் தட்டிவிட்டேன்.ஆனால் அவரின் மெயில்சர்வர் என் மெயிலை ஸ்பம் என்று கூறி ட்ராஷில் போட்டது.
பிறகு கூகிள் முதலிய பொறிகளின் உதவியோடு நானே பிளாக்கர் அக்கவுண்ட், தமிழில் டைப் அடிப்பது, யூனிகோடு முதலிய சமாச்சாரங்களை கற்றேன். ஆங்கில டைப்பிங் தெரியுமாதலால் இரண்டே வாரங்களில் தமிழ் டைப்பி்ங் (யளனகபக) கற்றுத்தேர்ந்தேன்.தமிழ்மணத்தில் நுழைந்தேன். சோ பற்றி நான் எழுதிய பதிவுகளும் திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியுமா என்று எழுதிய இந்த பதிவும் என்னை இங்கு ஓரளவு அடையாளம் காட்டியுள்ளது.தெரிந்தோ தெரியாமலோ ஒரு இமேஜ் (சிலருக்கு தவறாகவும்) உருவாகிவிட்டது. வருத்தம் இல்லை.பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்(?).
***********************
என் இளமைக்காலம் முதல் சுமார் 12,13 வயது முதல் நான் திராவிட மற்றும் அரைகுறை இடதுசாரியாகத்தான் இருக்கிறேன்.என் தந்தை எங்கள் வீ்ட்டு பீரோவில் அடுக்கி வைத்திருந்த பழைய பெரியாரின் புத்தகங்களும் சோவியத் நூல்களும் இதற்கு தூண்டுகோலாய் இருந்தது. ஸ்புட்நிக் என்று ஒரு புத்தகம் மாதமாதம் வரும்.யாருக்காவது தெரியுமா?
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தினமலர்,துக்ளக் போன்ற புத்தகங்களை படித்து இந்துத்வா கொள்கைகளையும் பேசியிருக்கிறேன். நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி சொந்தபுத்தி வந்தவுடன் அதை நிறுத்திவிட்டேன்.
இது திராவிட கருத்து, இது இடதுசாரி கருத்து என்ற வார்த்தைகள்(ஜார்கன்ஸ்) எல்லாம் மிக தாமதமாகத்தான் தெரியவந்தது.ஆனால் அதற்கு முன்பே அந்த கருத்துக்கள் என் மூளையில் ஏறிவிட்டது.
நண்பர் செல்வனின் பதிவில் நான் படித்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்த கருத்து.உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் மனிதன் என்று முறையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்.
பொதுவாக நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கும் மற்றவர் நம்மை என்னவாக நினைக்கவேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாக எனக்கு படுகிறது.இந்த வித்தியாசம் சிறிதாக இருந்தால் பிரச்சினை இல்லை.இந்த வித்தியாசம் பெரிதாக பெரிதாக பிரச்சினைகள் முளைக்கின்றன்.இந்த வித்தியாசத்தை குறைப்பது அவசியம்.
ஜெய்ஹிந்த என்று கோஷத்தைப்பற்றி நாம் வேண்டிய மட்டும் பேசியாகி விட்டது.கடந்த வாரத்தில் குழலி ஒருமுறை இந்த கோஷத்தை கிண்டலடித்து புனித பிம்பங்களிடம் வாங்கிக்கட்டிகொண்டார்.சில மாதங்களுக்கு முன் நான் வாங்கி கட்டியிருக்கிறேன்.
இந்த கோஷத்தை நாம் மிஸ்யூஸ் செய்வதும் பிரச்சினை. சோவை விமர்சித்தால் ஜெய்ஹிந்த் போடுவது நியாயமா? போலி டோண்டு பிரச்சினைக் கெல்லாம் ஜெயஹிந்த் போட்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்வதை விட்டுவிட்டு காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா காரனிடம் ஏன் ஜெயஹிந்த் போட்டு தண்ணீர் வாங்கிவரகூடாது?
இதை கூறினால் பிரிவினைவாதிகள்,இந்திய ராணுவ வீரர்கள் உங்களை காக்கிறார்கள், தமிழக போலீஸை வைத்து இலங்கையை பிடித்துவிடுவீர்களா என்று சரமாரியாக புனித பிம்பங்கள் கேள்விகளை கேட்கும்போது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
மொழி,இனம் என்ற வரலாற்றின் அடிப்படையில் எனக்கு உணர்ச்சி வருவதில்லை என்று கூறும் பலர் வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்ட மதம் என்று வரும்போது வரிந்துகட்டிக் கொண்டுவருவது ஏன் என்பதும் எனக்கு விளங்காத பல கேள்விகளில் ஒன்று.
**********************
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் பிறந்த ஒருவன் உலகாள்வான் என்று யாரோ சொன்னதை பலகாலமாக நம்பியதும் இல்லாமல் அது என்னை பற்றித்தான் கூறுப்பட்டுள்ளது என்று சிறுபிள்ளை த்தனமாக நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.
இந்த விஷயத்தை எல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டாலும் இன்னமும் தன்னம்பிக்கை நமக்கு ஜாஸ்திதான்.யாரையும் விட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என்று நினைத்துக் கொள்வதும் தகுதிக்கு மீறிய எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாததும் எனக்கு பல வகைகளிலும் உதவியாகத்தான் உள்ளது.
**************************
இந்த வார தத்து(பித்து)வங்கள்
இது படிக்க எளிமையாக இருப்பதால் இந்த தத்துவத்தை சாதாரணமாக எண்ணவேண்டாம்.இதில் பல அரிய தத்துவங்கள் இலைமறைகாயாக மறைந்து உள்ளனஉலகத்தில் உள்ள மக்களை கீழ்க்கண்ட நாலு வகையாக பிரிக்கலாம்.
1.உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.அதே சமயம் தனக்கு விவரம் பத்தாது என்பதையும் உணர்ந்துக்கொண்டவர்கள்.(நானெல்லாம் இந்த வகையில்தான் வருகிறேன் என்று நினைக்கிறேன்)
2.உண்மையில் புத்திசாலிகள்.தான் புத்திசாலி என்பதை உணர்ந்துக் கொண்டவர்கள்.
3.உண்மையில் புத்திசாலிகள்.ஆனால் தாங்கள் புத்திசாலிகள் என்று அவர்களுக்கு தெரியாது.
4.உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.ஆனால் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்பவர்கள்.
இனி கருத்து:
இதில் முதல் மூன்று வகையில் அடங்கும் ஆட்களுக்கும் வாழ்க்கையில் அதிக பிரச்சினை வராது.கடைசி வகை ஆட்கள் வாழ்க்கையில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.ஆனால் கொடுமை என்ன என்றால் கடைசி வகை ஆட்களுக்கு தாங்கள் இந்த கேட்டகிரியில இருக்கிறதே தெரியாது. இது தான்யா வாழ்க்கை.
***********************
இந்த வாரம் முழுவதும் தினமும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை (சில மீள்பதிவுகள்) எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.நட்சத்திரம் என்பதை மிகவும் ஆக்டிவ்வாக தமிழ்மணத்தில் இயங்குவது என்ற அடிப்படையில் முடிந்தளவு மற்றவர்களின் நிறைய பதிவுகளையும் படித்து கருத்து(?) சொல்வது என்று நினைத்துள்ளேன்.பார்ப்போம்.
நான் எழுத உத்தேசித்துள்ள சில தலைப்புகள் பின்வருமாறு :
காதல்,ஜல்லிகட்டு,கவிதை, கம்யூனிசம், சுந்தர ராமசாமி, அ.மார்க்ஸ், தருமிக்கு சில கேள்விகள்,கனவு காணும் வாழ்க்கை,மதுரையில் ஒரு வாரம்,பகவான் சத்யசாயிபாபா
இன்று என்னுடைய முதல் சிறுகதையினை மீள்பதிவு செய்துள்ளேன். நண்பர்கள் இந்த சுட்டியில் சென்று இதைப்படித்து தங்கள் கருத்துக்களை கூறலாம்.
நண்பர்கள் எப்போதும் போல் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.
Monday, May 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
152 comments:
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.மிகப் பொருத்தமானவரை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கும் வாழ்த்துக்கள்.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைப்புக்கள் அனைத்தும் நல்ல தலைப்புக்கள்.படிக்க ஆவலாக உள்ளேன்.வித்யாசமான கலக்கலான நட்சத்திர வாரத்தை தருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
All the best my friend.
தமிழினி,
நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
ஆரம்பமே கேள்விகளும், பதில்களுமாக இருக்கிறது...
பலே...பலே...
வாய்யா முத்து...
நீர்தான் நட்சத்திரமா..?? இந்த வாரம்தானா..?? ச்ச்...ஏமாந்து போய்விட்டேனே இவ்வளவு வாரம்..??
;-) :-)
ஜமாயுங்க.
தி.ரா
முத்து, தமிழ் மண முகப்பில் தெரிந்த முதலிரண்டு வரிகளைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன ஆச்சு,
இலக்கியவாதியாய் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டாரா என்ற ப்யந்துப் போனேன் :-)
மெல்ல தைரியம் பெற்று கிளிக்கிப் பார்த்தேன். பட்டியல் நல்லாத்தான் இருக்கு. "பகவான்" ச. சா பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் என்று ஆவலாய் இருக்கு. நாலாய் பிரித்த மனுஷப் பிறவிகளில் கடைசி ஆளுங்க அடிக்கிற கூத்து தாங்கலை சாமி. அத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
பார்க்கலாம் இந்த வாரம் எப்படிப் போகுது என்று :-)
வாங்க நட்சத்திரமே!
வாழ்த்து(க்)கள்.
கொடுத்த தலைப்புகளைப் பார்த்தா 'பயமா' இருக்கேப்பா:-))
நன்றி செல்வன்,
உங்கள் எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
நன்றி டி தி டிரிமர்
நன்றி நெருப்பு சிவா,
இந்த கேட்டகிரி இதிலே இல்லையா? மீள்வாசிப்பு செய்யவும்.
நன்றி பரமு,
கண்டிப்பாக செய்கிறேன்.
நன்றி பொட்டீக்கடை
நன்றி மூக்கு,
கிண்டல்தானே வாணாம்கிறது...கொஞ்சம் அதிகமா எழுதுறென்.. இல்லைன்ல...(காஞ்ச மாடு கம்மங்கொல்லையில் பாஞ்ச மாதிரிதான்..தானாக குறைஞ்சிரும்)
உஷா,
இலக்கியவாதி(கவனிக்கவும் இலக்கியவியாதி அல்ல) ஆகிறது தான் என் லட்சியம் என்றாலும் அது எளிமையாக இருக்க முயற்சி செய்யலாம் என்றுதான்.
பகவான் சாயிபாபா அப்படிங்கறது ச்சும்மா கூட்டம் சேர்க்கத்தான்.போட்டு தாக்குவோம்ல.
மனுஷ பிறவிகள்ள நீங்க எந்த பிரிவு?
நன்றி துளசி,
பட்டியல் எல்லாம் ச்சும்மா.பயப்படாதீங்க.வந்துட்டு போங்க...
அடடா பாத்தீங்களா, எங்க ஊரு மண்ணை மிதிச்சதும் நட்சத்திரமா ஆயிட்டீங்க பத்தீங்க்ளா..?
வாழ்த்துக்கள் - கலக்கல் மிக்க வாரம் தர.
sylvia,
போட்டோவில் இருப்பதைவிட கொஞ்சம் இளமையாகவும் அழகாகவும் இருப்பேன்(?) என்று என் மனைவி சொல்லுகிறாள்.(வேற வழி)
நல்ல வாரமாக சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே!
முடிந்தால், வங்கிகளை அனுகும்போது பாமரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றியும், கிரிக்கெட் எந்த வகையில் இளைய சமுதாயத்தை வீணடிக்கிறது என்பது பற்றியும் எழுதவும்
நட்புடன்,
ஸல்மான்
வாழ்த்துக்கள் நடசத்திரமே! இனிய தமிழ் வாரம் இனிதே மலரட்டும்!
நட்சத்திரமாகி இருக்கும் எங்க ஊர் மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள்...
மற்றபடி என் மனசாட்சி நீங்கள் தான் முத்து:-)))...
நான் நினைச்சதை அப்படியே சொல்லி இருக்கீங்களே:-))))))))
முத்து,
யாருங்க கிடைக்கும் இந்த வாய்ப்பு?இன்னைக்கு ஆரம்பிச்சு தேர்தல் அன்னைக்கு முடிக்கறீங்க!! தேர்தலுக்கு முந்தினநாள் சன் டிவில போடற அம்மா ஆட்சி அவலங்கள் மாதிரி!! அடிச்சு ஆடுங்க! :)
//உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.ஆனால் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்பவர்கள் //
உங்களுக்கும் உஷாவுக்கும் ஒரு கேள்வி! இந்த கடைசி வகை ஆட்களை நீங்க எப்படி கண்டுபிடிக்கறீங்க?! நீங்களே முதலாம் வகையில் இருக்கிறேன் என சொல்லிக்கொள்ளும்போது நாலாம் வகை ஆட்களை எப்படி கண்டுபிடிக்கறீங்க! உங்களால் முடியும் எனில் நீங்க நாலாம் வகையில் வருவதை தவிக்கமுடியுமா??
இன்னொன்னு
//உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் மனிதன் என்று முறையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்// என்பது உண்மையானால் புனிதபிம்பங்கள் புனிதபிம்பங்களாக அவர்கள் கட்டமைத்த கருத்துக்களை முன்வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?!
முத்து பதிவுன்னா ஒரு சூடு வேணாமா?! ஆரம்பமே அடிபொளியாக இருக்க இந்த கேள்விகள்!!! :)
முத்து,
வாழ்த்துக்கள். எழுதுங்கள். நல்ல படைப்புகள் உங்களிடம் இருந்து வரும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
மிகவும் ஆக்டிவ்வாக இயங்க வாழ்த்துக்கள்!
//"நட்சத்திரம்**:எனக்கு ஆழமாக எழுத தெரியாது" //
இங்கே கிடைக்கும்! ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி ? என்பதற்கான வழிமுறைகள்!!
----------
//
1.
2.
3.
4.உண்மையில் விவரம் இல்லாதவர்கள்.ஆனால் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்பவர்கள்.
கொடுமை என்ன என்றால் கடைசி வகை ஆட்களுக்கு தாங்கள் இந்த கேட்டகிரியில இருக்கிறதே தெரியாது.//
அப்படி...யென்றும் சொல்ல இயலாது!
;-))
----------
//பகவான் சாயிபாபா அப்படிங்கறது ச்சும்மா கூட்டம் சேர்க்கத்தான்.போட்டு தாக்குவோம்ல.//
எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே போட்டுத் தாக்கவும்
============
ஜெய்ஹிந்த்
வாழ்த்துகள் முத்து,
அப்படியே டென்னிஸ் பற்றிய ஒரு பதிவையும் போடுங்க.
முத்து அண்ணாச்சி,
ந்ல்லா இருக்கியளா?
நல்லா இருங்கடே!!
வாரம் முழுக்க அசத்துங்க வழக்கம் போல. நானும் முடிஞ்சவரைக்கும் எட்டிப் பார்த்துட்டு போறேன் :-)
வாழ்த்துகளுடன்
சாத்தான்குளத்தான்
ஆழமா எழுதத் தெரியாட்டா என்ன, அகலமா எழுத தெரியும் தானே?! :)
சொல்லப்போனா, ஆழமா எழுதறதுக்கும், * பதிவர் என்பதற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. (அப்படீன்னா என்ன?!)
எப்பவும் எழுதற மாதிரி எழுதுங்க. என்னவோ இந்தியாவோட பிரதம மந்திரி போஸ்டிங் ஒரு நாளைக்கு (ஒரு வாரத்துக்கு?!) கொடுத்துட்ட மாதிரி 'கருத்து கந்தசாமி' மாதிரி அள்ளி விட வேண்டாம். உங்க இயல்பான எழுத்து நடையிலேயே எழுதி கலக்குங்க முத்து.
வாழ்த்துக்கள் முத்து. தமிழ்மணத்தின் கண்மணி ் பங்கேற்கும் 'முத்தான' நட்சத்திர வாரமாக அமையட்டும்.
முத்து மே தின வாழ்த்துக்கள்!
மே முதல் நாள் துவங்கும் வாரத்தில், தாங்கள் நட்சத்திரமாக, அதுவும் செந்நட்சத்திரமாக ஜொலித்திட வாழ்த்துக்கள்!
இன்று மே தின வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் உள்ள ஒரு சில பணிகளை செய்து விட்டு தமிழ்மணத்தை பார்வையிட்டபோதுதான் நட்சத்திரத்தில் முத்து
ஜமாயுங்க....
"இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் பிறந்த ஒருவன் உலகாள்வான் என்று யாரோ சொன்னதை பலகாலமாக நம்பியதும் இல்லாமல் அது என்னை பற்றித்தான் கூறுப்பட்டுள்ளது என்று சிறுபிள்ளை த்தனமாக நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன்"
அற்புதம், அசத்திட்டீங்க... இந்த கற்பனையும், முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனையும் அனைத்து தலைகளுக்கு உள்ளேயும் ஆட்டம் போட்டுக் கொண்டும், ஆட்டி வைத்துக் கொண்டும் இருக்கத்தான் செய்யும். இதுதான் நம்பிக்கையின் முதல் ஆதாரம்!
முத்து,
மனம் நிறைந்த நட்சத்திர வாழ்த்துக்கள்!
தேர்தல் களத்தின் இறுதிக்கட்டத்தில் பொருத்தமான நட்சத்திரம்.
பொழுது கிடைக்க....
வாழ்த்துகள் முத்து. நல்லா கலக்குங்க!
ஒரு அரசியல், ஒரு மற்றது என கண்டிப்பாக தினமும் ஒரு வாரம் வரவேண்டும். அதற்கு மேல் உங்களிஷ்டம் போல...
அதற்காக, அகல உழுதல்ல, ஆழ உழுதே, முத்துவிடமிருந்து முத்தான பதிவு வரவேண்டும். வரும்.
தருமி,
வாழ்த்துக்களுக்கு நன்றி...
சல்மான்,
நன்றி சல்மான். உங்கள் வங்கி பற்றிய யோசனை நன்றாக உள்ளது.கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.ஆனால் சாத்தான் வேதம் ஓதலாமா?(கிரிக்கெட் பற்றிய பதிவு)
நன்றி சிங்.செயகுமார்..(இந்த பத்திரிக்கையில் ஜோக் எழுதுவாரே அந்த ராஜாசிங் செயகுமாரா நீங்க)
மனசாட்சி முத்துகுமரனுக்கு நன்றி.
இளவஞ்சி,
ஆப்பு வைச்சிட்டான்யா ஆப்புங்கற மாதிரியில்ல ஆயிடுச்சு..
(யாருகிட்டயும் சொல்லாதீங்க..அம்மா தோத்தா ஒரு பதிவும்(திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது) அம்மா ஜெயிச்சா ஒரு பதிவும்(சோற்றாலடிச்ச பிண்டங்களை திருத்த முடியாது) ரெடி பண்ணிட்டேன்.மத்தபடி நமக்கெல்லாம் அரசியல் எதுக்குங்க(?)..
//உங்களுக்கும் உஷாவுக்கும் ஒரு கேள்வி! இந்த கடைசி வகை ஆட்களை நீங்க எப்படி கண்டுபிடிக்கறீங்க?//
1. நாலாம் வகை ஒன்று இருக்குதுன்னு தெரியுமே ஒழிய அதில் யாரு இருக்கறாங்கன்னு சத்தியமா தெரியாதுய்யா( உங்களுக்கு யாரையாவது தெரியுமா)
//புனிதபிம்பங்களாக அவர்கள் கட்டமைத்த கருத்துக்களை முன்வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை//
புனித பிம்பங்களின் கருத்துக்கள் அவர்களுடையது அல்ல என்பதுதான் அடிப்படை பிரச்சினை.பல நேரங்களில் அவர்கள் கேள்விப்பட்ட சில துணுக்குகள் தான் அந்த கருத்துக்கள். சிந்தனைதளத்தில் இவை அடிப்பட்டு போகும் என்று நினைக்கிறேன்.(அவர்களே சிறிது சிந்தித்தாலும் போதும்)
அடிபொளி என்றால் என்ன இளவஞ்சி?
வெற்றி,
நன்றி நண்பரே
ஞான்ஸ்,
அதை ஆழமாக எழுத பிடிக்காது என்று மாற்றிக்கொள்ளுங்கள் தலைவரே
//அப்படி...யென்றும் சொல்ல இயலாது! //
பொறியிலே விழுந்துட்டீங்களேய்யா
//ஜெய்ஹிந்த்...//
(அய்யோ அய்யோ ஐய்ஐய்யோ)
நன்றி பரஞ்சோதி,
நல்ல யோசனை.டென்னிஸ் பற்றி எழுதுகிறேன்.
நன்றி ஆசிப் அண்ணாச்சி,
ஒரு கவிதை எழுதிக்கட்டுமா( சங்கத்தில் இருந்து ஒரு வாரம் லீவு கொடுங்க)
மாயவரத்தான்,
//சொல்லப்போனா, ஆழமா எழுதறதுக்கும், * பதிவர் என்பதற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. (அப்படீன்னா என்ன?!)//
என்னங்க இப்படி சொல்லீட்டீங்க...எத்தனை பேர் புண்பட்டாங்களோ?:))
//என்னவோ இந்தியாவோட பிரதம மந்திரி போஸ்டிங் ஒரு நாளைக்கு (ஒரு வாரத்துக்கு?!) கொடுத்துட்ட மாதிரி..//
அப்படி ஏதாவது வாய்ப்பு இருக்கமாண்ணே?
நன்றி மணியன் சார்,
உஙகள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பாடுபடுவேன்
நன்றி சந்திப்பு,
மே தின வாழ்த்துக்கள்.உங்களை விமர்சித்து ஒரு பதிவு இருக்கலாம். உங்கள் கருத்துக்களையும ஆணித்தரமாக எழுதுங்கள் சந்திப்பு.
// இதுதான் நம்பிக்கையின் முதல் ஆதாரம்!//
மிகவும் நன்றி நண்பரே...உண்மையை சொல்லப்போனால் இன்னும் இந்த நப்பாசை மனதின் ஒரு மூலையில் உறங்குகிறது.
நன்றி ஜோ,
நன்றி வசந்தன்,
நன்றி வினையூக்கி,
நன்றி தங்கமணி
நன்றி கிருஷ்ணா.
எதில் அரசியல் இல்லை? எல்லாவற்றிலும் அரசியல் இருக்கும் யுகத்தில் வாழ்கிறொம் நாம்.
முத்து வாழ்த்துக்கள், sputnik எங்க அண்ணா வாங்கி படிப்பார், ஆன நான் அட்ட படத்தோட சரி :-)
முத்து(தமிழினி), சிறப்பு பின்னூட்டம் தங்களைப் பற்றி எனது பதிவில்.
வாழ்த்துக்கள் முத்து.
முத்து (தமிழினி),
இப்படியெல்லாம் எழுத மாட்டேன் என்னும் ஆரம்பமே அட்டகாசம்.
இனிய வாரமாக அமைய என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் முத்து.
உங்க மீள்பதிவு கதைக்கு நான் ஏற்கனவே புரியாம ஒருதரம் புரிஞ்சு ஒருதரம் பின்னூட்டம் போட்டாச்சு... :)
ஆமாம் இந்த வாரம் பின்னூட்ட அரசியல் க்ளாஸ் கிடையாதா... ?? :)
வாங்க நட்சத்திரமே! சிறப்பான ஒரு வாரம் காத்திருக்கிறது. சொல்ல தேவை இல்லை. தொடருங்கள்
அன்பு முத்து,
வாழ்த்துகள்.
வாழ்க! வளர்க!
நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய என் உளங்கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள முத்து,
நீங்க எழுதின கதையை முதல் முறையா படிச்சேன், ரொம்ப நல்லா இருந்தது.உங்க பழையபதிவையெல்லாம் போய் படிச்சு பார்க்கப் போகிறேன்.
இந்த நட்சத்திர வாரத்தில் வரும் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
சாம்
வாழ்த்துகள் மாப்பிளே!
வாழ்த்துகள்!! கலக்கலான நட்சத்திர வாரத்தை தருவீர்கள் என நம்புகிறேன்
கொல கொலயா முந்திரிக்கா,
முத்து தமிழினி சுத்தி வா!!!
நல்வாழ்த்துக்கள்!!!
முத்து உங்கள் நட்சத்திர வாரம் நல்ல பதிவுகளாக வரும் என முதல் பதிவே சொல்லுது. நட்சத்திரமாக சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் முத்து
வாழ்த்துக்கள் முத்து.
நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
பட்டணத்து ராசா,
நன்றி..நானும்தான் பொம்மை பார்த்தேன்.(ஸ்புட்நிக் ஆங்கில புத்தகம் அய்யா)
நன்றி தேன்துளி
வாழ்த்துக்களுக்கு நன்றி பச்சோந்தி
நன்றி பொன்ஸ்,
பின்னூட்ட அரசியல் கிளாஸ் இந்த வார சனி அல்லது ஞாயிறு வரும்.
நன்றி சிவா,
நன்றி ஞானவெட்டியான் அய்யா
நன்றி எஸ்.கே
பாராட்டிற்கு நன்றி சாம்
நன்றி குமரன்,
என்னங்க மாப்பிள்ளையை ஊரிலே வெச்சு கண்டுகிட மாட்றீங்க..(போன வாரம் வந்திருந்தம்ல)
நன்றி கல்ப் தமிழன்
நன்றி பாலு (பாலச்சந்தர் கணேசன்)
thanks thiru, balaji-pari,nilavu nanban and karthikramas
//அடிபொளி என்றால் என்ன ?//
சூப்பர் ,கலக்கல் ,அருமை என்பதற்கு மலையாளத்தில் 'அடிபொளி'
முத்து,
ஊர்ல இருந்திருந்தா கவனிச்சிருப்போம்ல. அதான் வெளிநாட்ல உக்காந்துக்கிட்றிக்கோம்ல. எங்க ஊர்க்கார பெரியவுக கண்டுக்கிட்டா நாம கண்டுக்கிட்ட மாதிரி. அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பாக்காம இந்த வாரத்துல(யாவது?) நல்ல பதிவுங்க போடுங்க (ச்சும்மா...) :-)
// தருமிக்கு சில கேள்விகள்//
Atha first podunga ...
chumanchum ellarkitaiyum avar kelvi kekuraru
Awaiting for your super ten
-swamy red bull
வாழ்த்துகள் முத்த ஒவ்வொரு முறையும் இந்த பதிவிற்கு வந்து பின்னூட்டமிட ஆரம்பித்து சில வரிகள் எழுதி பின் சென்றுவிடுவேன், பிறகு எழுதுகிறேன் முதலில் வாழ்த்துகளை சொல்லிவிடுகிறேன்....
நன்றி
//..(இந்த பத்திரிக்கையில் ஜோக் எழுதுவாரே அந்த ராஜாசிங் செயகுமாரா நீங்க)//
பத்திரிகைகளில் ஜோக் / ஜூ.வியில் டயலாக் எழுதும் தே. ராஜாசிங் ஜெயக்குமார் - ஒரு பள்ளி ஆசிரியர். கும்பகோணத்துக்காரர். தற்போது கோவையில் பணி புரிவதாகக் கேள்வி.
ஆஹா, முத்து. உங்கள் வாரமா?. கலக்குங்கள். வந்து கலந்து கொள்கிறேன்.
முத்து,
//மத்தபடி நமக்கெல்லாம் அரசியல் எதுக்குங்க(?)..//
//எதிர்க்காலத்தில் பத்திரிக்கையாளராய்.. பின்பு அரசியல்வாதியாக..//
நாராயண... நாராயண... (நன்றி: ஏஜெண்டு ஞான்ஸ்! )
// உங்களுக்கு யாரையாவது தெரியுமா // இங்க என்னைத்தவிர வேற யாரும் இந்த வகைல இருக்காங்களான்னு எனக்கு தெரியலை! :)
//புனித பிம்பங்களின் கருத்துக்கள் அவர்களுடையது அல்ல என்பதுதான் அடிப்படை பிரச்சினை.பல நேரங்களில் அவர்கள் கேள்விப்பட்ட சில துணுக்குகள் தான் அந்த கருத்துக்கள். சிந்தனைதளத்தில் இவை அடிப்பட்டு போகும் என்று நினைக்கிறேன்.(அவர்களே சிறிது சிந்தித்தாலும் போதும்) // கேட்டா அவங்களும் இதையேதான் சொல்லுவாங்க போல! :)
//அடிபொளி// ஜோவுக்கு என் நன்றிகள்...
முத்து,
மாயவரத்தான் கமெண்ட் கண்டுக்காதீங்க. அவர் சோகத்துல பேசறாரு. அடுத்த வாரம் கூப்பிட்டு " நீர்தான்யா நட்சத்திரம்னு சொன்னா எல்லாம் சரியாப் போயிடும்.
சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்துமதம் என்றாலே வெறுத்துப்போய் பேசுவதில்லையா..?? அதைப் போலத்தான் இதுவும்.அது புரிந்தவர்களுக்கு இதுவும் புரியும்.
என்ன சரிதானே மாயவரத்தான்.??
பொறுமையா இருங்க. உங்க வீர விளையாட்டைக் காட்ட உங்களுக்கும் (இன்னொரு முறை..??) சான்ஸ் கிடைக்கும். இந்துமத சட்டதிட்டங்களை விட தமிழ்மணத்தில் குறைவு. வேண்டுமென்று யாரையும் விலக்கி வைப்பதில்லை என நினைக்கிறேன்.
***********
மாயவரத்தான்,
//சொல்லப்போனா, ஆழமா எழுதறதுக்கும், * பதிவர் என்பதற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. (அப்படீன்னா என்ன?!)//
என்னங்க இப்படி சொல்லீட்டீங்க...எத்தனை பேர் புண்பட்டாங்களோ?:))
//என்னவோ இந்தியாவோட பிரதம மந்திரி போஸ்டிங் ஒரு நாளைக்கு (ஒரு வாரத்துக்கு?!) கொடுத்துட்ட மாதிரி..//
முத்து (தமிழினி),
நட்சத்திரம் ஆன மதுரை மாப்பிள்ளைக்கு என் வாழ்த்துக்கள்..
நீங்கள் சொன்ன ஸ்புட்னீக் புத்தகம் நான 5 வது வரை படித்திருக்கிறேன்..
//உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் மனிதன் என்று முறையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்.
இப்படின்னா என்ன ?. எனக்கு புரியலை
//வந்துவிட்டாலும் இன்னமும் தன்னம்பிக்கை நமக்கு ஜாஸ்திதான்.யாரையும் விட நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என்று நினைத்துக் கொள்வதும்...
Good on you.
நீங்கள் எழுதபோகும் சில சப்ஜக்ட்களில் நமக்கு எந்தவித அடிப்படை அறிவும் இல்லை என்பதால் அதை பற்றி நான் கேள்வி கேட்க முடியவில்லை :-(
மங்களூர் போலிடோண்டு ரசிகர்மன்றம் சார்பாக எங்கள் நண்பரை வரவேற்கிறோம். இந்த வாரத்தினை கலக்கு கலக்கென்று கலக்குங்கள். மாயவரத்தானுக்குஎல்லாம் பதில் சொல்லி நேரத்தினை வேஎஸ்ட் செய்ய வேண்டாம்.
அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் என்னை மாதிரி அரசியல் ஆர்வலர்களுக்கும் ஒரு அல்வா கின்டி போடுங்க...
வாழ்த்துக்கள்வே. நல்லா எழுதும்.
ஜோ,
அடிப்பொளி விளக்கத்தற்கு நன்றி..நீங்கள் சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது.இது மலையாள சொல் இல்லையா? ஆபிசில் மலையாள சேச்சிகளிடம் இதைப்பற்றி ஏற்கனவெ ஒரு முறை பறைஞ்சிருக்கேன்...
குமரன்,
//அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பாக்காம இந்த வாரத்துல(யாவது?) நல்ல பதிவுங்க போடுங்க (ச்சும்மா...) :-)//
சட்டில இருந்தாதானே ஆப்பையில் வரும்:))
அனானி சுவாமி ரெட் புல்,
இரண்டு நவீனத்துவ ஆத்மாக்கள் மோத முடியாது.....
நன்றி,
குழலி, நாம் தொடர்ந்து சோர்வு இல்லாமல் எழுத வேண்டியது அவசியம்.வேறு வழியில்லை.எழுதுங்கள்.ஜெய்கிந்து...:)))
மாயவரத்தான்,
//பத்திரிகைகளில் ஜோக் / ஜூ.வியில் டயலாக் எழுதும் தே. ராஜாசிங் ஜெயக்குமார் //
அவர் வேற..இவர் வேறன்றீங்க'''.அவரு டயலாக்ஸ் எல்லாம் நல்லாவே இருக்கும்...(கற்பனை என்றாலும்)
நன்றி அப்படிபோடு,
இளவஞ்சி,
//எதிர்க்காலத்தில் பத்திரிக்கையாளராய்.. பின்பு அரசியல்வாதியாக..//
இதுக்குமேல் இரண்டு வரி எழுதியிருந்தேனே...தேர்தல் முடிவை பொருத்து வேற வேற பதிவு ரெடியாயிடுச்சு என்று...அதத்தான் நீங்க பார்க்கணும்..இது ச்சும்மா ஜோக்...(எதிலங்க அரசியல் இல்லை:)))
//இங்க என்னைத்தவிர வேற யாரும் இந்த வகைல இருக்காங்களான்னு எனக்கு தெரியலை//
நாலாவது குரூப்ல நீங்களா? நெனைச்சேன்..பார்த்து அப்பு :))
புனித பிம்பங்கள் என் சீரியஸ் பிரச்சினைகளில் ஒன்று...நீங்க தங்கமணியின் பின்னூட்டததை எடுத்து போட்டீங்களே..அதுவே அதுதான் அய்யா...
(ஒண்ணுமே தெரியாதது மாதிரி கேட்கறது..மனசுக்குள் சிரிக்கிறது..தம்பி கோயமுத்தூர் குசும்பு எனக்கும் தெரியும்..ஐந்து வருஷம்(91-96)..அங்க குப்பை கொடடியிருக்கு அப்பு:))))
மூக்கு,
மாயவரத்தான் ஜோக்தான் அடிச்சிருக்காருன்னு நெனைச்சேன்...எதை எழுதனும் எதை எழுதக்கூடாதுன்னு ஏதாவது அறிவுரை அதில ஒளிஞ்சிருக்கான்னு மீள்வாசிப்பு பண்ணணுமா என்ன?
கார்த்திக்,
நீரும் மதுரையா...நன்றி..
//உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் மனிதன் என்று முறையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்.
இப்படின்னா என்ன ?. எனக்கு புரியலை//
இதைப்பற்றி தனிப்பதிவு ரெடியாகுது....
போலி டோண்டு ரசிகர் மன்றம்,
மங்களூர்ல தமிழ்குப்பை (நன்றி: ஆப்பு) கொட்டுவது நான் ஒருவன்தான்.அதுல என்ன மங்களூர் கிளை..வம்புதானே..ஆனா பின்நவீனத்துவ நோக்கில் பார்த்தால் போலி டோண்டுவை நான் வேண்டாமய்யா..:)))
முத்து,
எளிமையாக மட்டுமல்லாமல், மிக யதார்த்தமாகவும் இருக்கிறது உங்கள் நடை. போலித்தனம் சிறிதளவு கூட ஒளிந்திருக்கவில்லை.
வாழ்த்துக்கள்
நன்றி - சொ. சங்கரபாண்டி
சுடலை சங்கரபாண்டி,
மிகவும் நன்றி நண்பரே...
நன்றி கோவிகண்ணன் அண்ட் இலவசகொத்தனார்
இளவஞ்சி,
அது வந்து, வந்து ஐ மீன்.... இருங்க, இது முத்துவோட பதிவு. அதனால அவரூ எழுதினத அவரே விளக்குவாறு :-) கடைசி கேட்டகிரி சுப்பரூ என்று சொல்லிக்கிட்டே போறதுதான் நியாயம்.
( தப்பிச்சேன்)
என்ன முத்து நட்சத்திர வாரத்துல நிறைய எழுதணுமேன்னு ஒரு வாரம் லீவு எடுத்துக்கிட்டீங்களா?
ஜமாய்ங்க..
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் முத்து. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.
ஆனா இந்த நாலு மட்டும் இல்லீங்க...இன்னும் நெறைய இருக்குன்னு நெனைக்கிறேன். என்னை இதுல எதுலயுமே போட முடியலையே!
உஷா,
என்ன பெரிய பதில்? கொடுக்க முடியவில்லை என்றால் தனிமனித தாக்குதல் தொடுக்கும் இளவஞ்சியை கண்டிக்கிறேன் ஒரு போடு போட்டுறுவேன் கடைசியா, நீங்க கவலைபடாதீங்க..வெற்றி நமக்கே...
ஜோசப் சார்,
நன்றி சார்..எங்க சார் ஒரு மாசமா இதே வேலைதான்...ஆனா கொடுமை என்னன்னா ஏகப்பட்ட பதிவு ரெடி பண்ணிட்டேன்...
ஒவ்வொண்ணா போடறேன்..இன்னும் பத்து இருக்கு...லீவு அதுக்கில்ல சார்..(தருமி வீட்டுக்கு போனேன்..பதிவை பாத்தீங்களா)
நன்றி ராகவன்,
இந்த கேட்டகிரியில் அடங்காத ஆட்கள் உலகிலேயே இல்லை என்கிறேன் நான்.
(அப்புறம் நண்பர்களே...இன்னும் கொஞ்சம் அமுக்குனா 100 பின்னூட்டம் ஆயிடும்.. தள்ளுங்க..ஒரு கை பிடிங்க..ஹி..ஹி)
இதுக்குதாம்யா மலையேறுதக்கும் மச்சினன் தயவு வேணும்னு சொல்வாய்ங்க:-))))))))
முத்துகுமரன்,
மீண்டும் நன்றி...இந்த பழமொழியின் கதை தெரியுமா?
(ம்..தள்ளு..விடாதே..இன்னும் கொஞ்சம்தான்)
//இதுக்குதாம்யா மலையேறுதக்கும் மச்சினன் தயவு வேணும்னு சொல்வாய்ங்க:-)))))))) //
// இந்த பழமொழியின் கதை தெரியுமா?
//
இந்த மாதிரி ஒரு பழமொழி இருக்கிறதே எனக்குத் தெரியாதே... குரு, கொஞ்சம் அந்தக் கதையும் சொல்லுங்க..
பொன்ஸ்,
அந்த பழமொழியை விடுங்க..எனக்கு தெரியலை அந்த கதை..இதை படிங்க..
http://muthuvintamil.blogspot.com/2005/12/blog-post_29.html
மற்றபடி குருவிற்கு ஒண்ணுண்ணா ஓடிவர உங்க மனதை போற்றுகிறென்.
இப்படி கொஞ்சம் காத கொடுங்களேன்.. சொல்றேன்:-)))))))
என்னமோ போங்க நீங்க செய்றது நல்லாவே இல்லை
100வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள் முத்து(தமிழினி)
முத்து, இந்தக் கதையும் நல்லா இருக்கே.. நானே உங்க பழைய பதிவுகளா படிக்கிறது போக, நீங்க வேற லிங்க் கொடுக்கறீங்க... இந்த வாரம் நிஜமாவே முத்து வாரம் ஆய்டிச்சு.. :) :)
நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நான் சென்ற வாரமே யூகித்திருந்தேன், அடுத்த வாரம் உங்களதாக இருக்க கூடுமென.
உங்களது புலிகேசி கதை மீள்பதிவாக வருமா?
ஸ்ருசல்,
நன்றி..வேறு பல மீள்பதிவுகள் வரும்...
நன்றி முத்துகுமரன் மற்றும் பொன்ஸ்
(நூறு பின்னூட்டம்..அப்பாடி)
"காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது"
சில குற்றங்கள் இருக்கலாம்.திருக்குறளில் ஞானவெட்டியான்,குமரன்,ராகவன் போன்ற அறிஞர்கள் மன்னிப்பார்களாக
யோவ் முத்துகுமரன்,
எப்படிய்யா சரியா நூறாவது பின்னூட்டத்திற்கு வந்தே?
ஆஹா.... கொஞ்சம் அசந்து இருந்துட்டேனே; 100வது பின்னூட்டம் முத்துவுக்கு குமரன் போடலாம்னு இருந்தா ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு முத்துகுமரன் போட்டுட்டாரே. போகட்டும். நாங்க ரெண்டு பேரும் அவருக்குள்ள தானே அடக்கம்.
முத்து, 100+ பின்னூட்டங்களுக்கு வாழ்த்துகள். விண்மீன் வார முதல் பதிவில் 100+ பின்னூட்டம் இதற்கு முன் வாங்கியவர் ஒரு மதுரைக்காரர் தான். ஆனா அவர் சாதனையை மதுரை மாப்பிள்ளை நீங்க மிஞ்சணும்ன்னா, நீங்க 185+ பின்னூட்டம் வாங்கணும். அது என்ன முடியாத செயலா? முத்துகுமரன் மச்சான் இருக்கும் போது.... சரியா?
குமரன்,
ஸ்ஸ்சப்பா...இப்பவே கண்ணை கட்டுதே...(சாரி இளவஞ்சி)..
(குமரன் 90 வது பின்னூட்டத்தில் இருந்து பாருங்க காமெடிய)
//கடைசி கேட்டகிரி சுப்பரூ என்று சொல்லிக்கிட்டே போறதுதான் நியாயம்.//
அடடா! உஷாஜி.. எங்களைப்பற்றி பாராட்டாக ஒரு வார்த்தை சொல்ல நீங்களாவது இருக்கீங்களே!
நீங்க சொன்ன "சூப்பரு" என்பதை பாராட்டு என நம்பிவிட்டால் நான் எந்த வகை? அது சும்ம்ம்ம உட்டாலக்கடி என உணர்ந்துகொண்டால் நான் எந்த வகை?!
ஐயோ கொழப்பமா இருக்கே!!!!
ராகவன்,
நீர் எந்த வகையிலுமே வரவில்லையா?!
அண்டம் கடந்த அணுவைப்பிளந்த ஆழ்ந்தநுன் பட்டறிவைக்கொண்ட நீர் மனித கேட்டகிரியிலா வருவீர்!
தெய்வமைய்யா நீர் தெய்வம்!! (இந்த வாரம் எனக்கு பொன்னுசாமில பிரியாணி போதும்! ஹிஹி.. )
//தனிமனித தாக்குதல் தொடுக்கும் இளவஞ்சியை //
அடடா! என்ன ஒரு அதிபயங்கர சதி இது?!
வலையில் எனக்கிருக்கும் புனிதபிம்பத்தை கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் உடைத்தெறிய முயலும் "மைறாபொ" கொண்ட ஒரு "மதுரை சின்னப்பையனின்" வெற்றிபெற முடியாத ஒரு சதியாகவே நான் இதை பார்க்கிறேன்!
சரிடா.. அதுக்கெதுக்கு 3 (ஹிஹி.. இதோட நாலு) பின்னூட்டம்னா கேக்கறீங்க!
எல்லாம் ஒரு கெத்து தான்! மதுரை மைந்தனா இல்லை மதுரை மாப்பிள்ளையான்னு ஒரு கை பாத்திருவம்ணே!!!
முத்து, வாழ்த்துக்கள்.
இளவஞ்சி, நம்மகிட்ட வேணாம்.... குஜிலியானந்தா கிட்ட சொல்லிடுவேன். அப்புறம் அடுத்த வாரப் பேட்டியில உங்களைக் கிழி கிழின்னு கிழிச்சுடுவார் ஆமாம். :-)
இளவஞ்சி,
//நீங்க சொன்ன "சூப்பரு" என்பதை பாராட்டு என நம்பிவிட்டால் நான் எந்த வகை? அது சும்ம்ம்ம உட்டாலக்கடி என உணர்ந்துகொண்டால் நான் எந்த வகை?!//
இப்ப எனக்கே லேசா கண்ணை கட்டுதே.....
//இந்த வாரம் எனக்கு பொன்னுசாமில பிரியாணி போதும்! //
இப்படி ஒரு சைடு ரீல் அங்க ஓடுதா
//வலையில் எனக்கிருக்கும் புனிதபிம்பத்தை கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் உடைத்தெறிய முயலும் "மைறாபொ" கொண்ட ஒரு "மதுரை சின்னப்பையனின்" வெற்றிபெற முடியாத ஒரு சதியாகவே நான் இதை பார்க்கிறேன்!//
கொங்கு சீமையின் செல்ல மகனான என்னை மதுரை சின்னப்பையன் என்று சொல்லும் உமக்கு நா கூசவில்லையா?:))ஒண்டிக்கு ஒண்டி வரமுடியுமா(தயாநிதி நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல)
சுதர்சன்,
நன்றி நண்பரே..
குமரன்,
என்ன இது? யார் இந்த குஜிலியானந்தா?
குஜிலியானந்தாவின் பேட்டி இங்கே இருக்கிறது:
http://valaippadhivu.blogspot.com/2006/05/151.html
//யோவ் முத்துகுமரன்,
எப்படிய்யா சரியா நூறாவது பின்னூட்டத்திற்கு வந்தே?//
நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது
ஆனா?
வரவேண்டிய நேரத்துக்கு சரியா வந்திடுவேன்.
இப்படிக்கு
முன்னாள் ரஜினி ரசிகன்:-(((
//யோவ் முத்துகுமரன்,
எப்படிய்யா சரியா நூறாவது பின்னூட்டத்திற்கு வந்தே? //
பார்க்க 94 வது பின்னூட்டம்
//ஆஹா.... கொஞ்சம் அசந்து இருந்துட்டேனே; 100வது பின்னூட்டம் முத்துவுக்கு குமரன் போடலாம்னு இருந்தா ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு முத்துகுமரன் போட்டுட்டாரே. போகட்டும். நாங்க ரெண்டு பேரும் அவருக்குள்ள தானே அடக்கம். //
குமரன் எனக்கு ரெம்ப வெக்கமா இருக்கு:-))))))
//முத்து, 100+ பின்னூட்டங்களுக்கு வாழ்த்துகள்.//
ஆமாம் முத்து வாழ்த்துகள்
//நீங்க 185+ பின்னூட்டம் வாங்கணும்.//
அவ்வளவுதானா... வாங்கிட்டா போச்சு:-))
//முத்துகுமரன் மச்சான் இருக்கும் போது.... சரியா? //
குமரன் சொன்னதை முத்துகுமரன் தப்புனு சொல்லுவானா??
முத்து சும்மா புகுந்து கலக்குங்க. ஹெவி வெயிட் அயிட்டமா போடப்போறீங்க; வயத்த, காலியா வெச்சுகிட்டு காத்துருக்கேன் :-)
ஆகா!!!computerயை விட்டு எங்கும் போவதில்லையா ?? i will come back 2ooth comment!!??
முத்துகுமரன்,
ஊரு காறங்களுக்குள்ளே என்னவோய் பின்னூட்ட போட்டி..(நமக்கு நூறு பின்னூட்டமே எச்சு)
அதுக்காக ரஜினியை எல்லாம் ஏன்யா நினைவூட்டற..ரஜினிராம்கி வர்றாங்கட்டி நாம் வுடு ஜுட்.....
நன்றி மரபூராரே,
//குஜிலியானந்தாவின் பேட்டி இங்கே இருக்கிறது:
http://valaippadhivu.blogspot.com/2006/05/151.html//
குமரன்,
உங்களுக்கே அதிகமா தெரியலை?!!! பமக மாதிரி ஒரே ஒருவர் பதிவில் பின்னூட்டம் சேர்க்கும் சர்வாதிகார கட்சிக்கு எங்க பொதுவுடைமை குரு முத்து பதிவுல வந்து விளம்பரம் பண்ணறீங்க!!!
இதெல்லாம் வேண்டாம்.. ஆமாம் சொல்லிட்டேன்.. ஏதோ எங்க குருவோட நட்சத்திர பதிவுங்கறதுனால, சும்மா போறேன்..
லேட்டா வந்தாலும், வாழ்த்துக்கள்! நட்சத்திர வாரத்தில கலக்குங்க!
நன்றி வெளிகண்ட நாரதரே,
தமிழ்நாட்டு அரசியல்வாதியாகும் அனைத்துதகுதியும் தங்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
நன்றி ஆரோக்கியம்,
இது ஒரு நுணுக்கமான உள்குத்து இல்லையா?
நா 150வது ஆளாயிருப்பனா?
இல்லன்னா சொல்லுங்க...200 வது இடத்துக்காவது போட்டி போடறேன்.
உள்குத்தெல்லாம் இல்லை.
நேரடியான பாராட்டுதான். எப்படி எழுதினால், உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் தருவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும்?
வாழ்க வளமுடன்
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
வாழ்த்துக்கள் முத்து
ஆரோக்கியம்,
விடுங்க..நான் பாஸிடிவ்வாகவே எடுத்துக்கொள்கிறேன்.
பொட்டீக்கடை,
என்னங்க நீங்களும் கலாய்க்கறீங்க? நம்ம சரக்கை இன்னைக்கு பதினொரு மணிக்கு ரீலீஸ் செய்யறேன் ..வந்திருங்க..
ஆரோக்கியம்,
//உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் தருவார்கள் //
தமிழிலோ அல்லது வடமொழியிலோ எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த அறிவுஜீவி....சிலபேர் என்னை முற்போக்காளன் என்கிறார்கள்...அது திட்டமிட்ட சதி ஆரோக்கியம் அவர்களே...
குஷ்பு கருத்தைக்கூட எதிர்த்த பிற்போக்காளன் நான்.
thanks jayshri,
நல்லவேளைங்க..சொன்னீங்க...
டீ கடைகாரரே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...
என்னப்பா....
சாமியார் அருட்கடாட்சம் நிறையா இருக்கு போல இருக்கே...
இன்னும் கைப்பிடித் தூரம்தான்
இப்போதைக்கு ஒரு + போட்டு 150ஐ நோக்கிச் செல்கிறேன்...
//இப்போதைக்கு ஒரு + போட்டு 150ஐ நோக்கிச் செல்கிறேன்...//
முயற்சி வெல்லட்டும்:-))
//பலர் வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்ட மதம் என்று வரும்போது வரிந்துகட்டிக் கொண்டுவருவது //
Wow!! Super Lines!! Muthu
Good work!! Keep up!!
144 +, I will come back after you score maiden double ton!
All the best!
150 ஆவது பின்னூட்டத்தை நோக்கி வெற்றி நடை போடும் முத்து வாழ்ழ்க !!
(ஏதோ என்னால் ஆனது ) - 145 ?
//பலர் வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்ட மதம் என்று வரும்போது வரிந்துகட்டிக் கொண்டுவருவது //
இந்த வரியை யாராவது எடுத்து பார்ப்பார்களா என்று ஏங்கினேன்.நன்றி.
//இந்த வரியை யாராவது எடுத்து பார்ப்பார்களா என்று ஏங்கினேன்.நன்றி.//
I think our line thought synchronized with.
I feel proud about it.
Thanks
நண்பர்களே..
இந்த பதிவில் நான் பல உள்குத்து(நல்ல நோக்கம்தான்யா..தனிப்பட்ட தாக்குதல் இல்லை) வைத்துள்ளென்..
சிவபாலன் ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.அது போல் ஏதாவது எடுத்து விவாதம் செய்யலாமா?
//பலர் வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்ட மதம் என்று வரும்போது வரிந்துகட்டிக் கொண்டுவருவது //
மதம் என்று வரும் பொழுது அதிகமான நபர்களை ஒன்று சேர்க்கலாம், மொழியின் மூலம் சேர்த்ததை இழக்க நேரிடலாம்! இதுவும் ஒரு கரணமாகயிருக்கலாம்.
இதோ 150 ஆவது ...
150 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள்
150வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள்
//நல்லவேளைங்க..சொன்னீங்க...
//
Jayashreeக்கு இந்த பதில் போட்டிருக்கீங்களே? புரியலையே முத்து. ஒரு வேளை இவர் Jsriங்கற பெயருல சாதி, இந்து மதம் பதிவுல பின்னூட்டம் போட்டவர்ன்னு நினைச்சீங்களா? இவர் வேற Jayashreeன்னு நினைக்கிறேன்.
150*
மிக்க நன்றி குமரன். நானும் அவருக்கு அதைத் தெளிவுபடுத்திவிட்டேன். அதற்கு பதில்தான்
அது.
Thanks again ..
//ஸ்புட்நிக் என்று ஒரு புத்தகம் மாதமாதம் வரும்.யாருக்காவது தெரியுமா?//
சிறுவயதில் எங்கள் வீட்டுக்கும் இந்தப் புத்தகம் வரும் முத்து. தரமான தாளில் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும். படித்ததில்லை. யு.எஸ்.எஸ்.ஆர். வீழ்ந்தப் பின் அதுபோல புத்தகம் எதுவும் எங்கள் வீட்டுக்கு வரவில்லை என நினைக்கிறேன்.
இதே காலக்கட்டத்தில் தான் ரஷ்யப்புரட்சி, விளாதிமீர் இலியீச் லெனின் வாழ்க்கை வரலாறு எல்லாம் படித்தேன். லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு என் வீட்டு நூலகத்தில் இருந்தது. இன்று வரை ஏனோ அதை எடுத்துப் படிக்க வேண்டும் என்றே தோன்றவில்லை...
Post a Comment