Tuesday, May 02, 2006

கவிதைக்கு வந்த சோதனை

நண்பர் மணிகண்டன் எழுதிய இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்தது. கவிதைகளைப்பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகெர்ண்டுள்ளார்.


எனக்கு இந்த கவிதைகள் புரிவதே இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். பலமுறை படித்துப்பார்ப்பேன். குழப்பமாகிவிடும் விட்டுவிடுவேன். கவிஞர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். உணர்ச்சி வசப்பட்டால்தான் கவிதை வரும் என்று சில நண்பர்கள் கூறினார்கள். நானும் சில நாட்களுக்கு முன் உணர்ச்சிவசப்பட்டேன்.ஒரு கவிதை உருவானது. இது ஒரு கன்னி முயற்சி என்பதை புரிந்துக்கொண்டு அஸ்திரங்களை ஏவுங்கள்.நன்றி.


அடிபட்ட நாய்

மனிதா

வாலை சுருட்டிக்கொண்டு

அடுத்த வீதிக்கு

ஓடி

நின்று திரும்பி

குரைக்கும் பழக்கம்

உங்களிடம் பழகுவதற்கு

முன்பு எங்களிடம்

இல்லை

67 comments:

ramachandranusha(உஷா) said...

இதைப்படிச்சிட்டு எத்தினி பேரூ உணர்ச்சிவசப்படப் போறாங்களோ தெரியலை :-)
ஒரு சிறு திருத்தம்- ஆரம்பம் ஓ மனிதா என்று ஆரம்பித்தால் நல்லா இருக்காது.

Muthu said...

ஓ மனிதா என்று நானும் எழுதலையே.. மனிதா என்றுதான் எழுதி உள்ளென்..


அமெச்சூர் கலைஞனை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி...

சிங். செயகுமார். said...

முதல் பின்னூட்டம் கொடுத்தவர்.கவிதைக்கும் எனக்கும் காத தூரம் என ஓடியவர். திருத்தங்கள் சொல்லும் அளவிற்கு கவிதை பக்கம் அவர் பார்வை திரும்பியமைக்கு வணக்கங்கள்!

சிங். செயகுமார். said...

அப்புறம் கவிதை நல்லா இருந்திச்சி. ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க!

Muthu said...

சிங்,

இன்னொரு முறை சொல்லுங்க.. கவிதைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சே...:)))

நன்றி சிங்...

வினையூக்கி said...

கதை, கட்டுரை இப்பொழுது கவிதை கலக்குங்க சார்

Muthu said...

selva,

இப்ப போட்டாதான் இதையெல்லாம் கவிதைன்னு சொல்லி ஒப்பேத்த முடியும்னு எனக்கு தெரியும்.. அதான்..ஹிஹி

வினையூக்கி said...

முத்து(தமிழினி), உடனடியாக பின்னூட்டங்களை வெளியிடுகிறீர்கள். நன்றி.

சிங். செயகுமார். said...

எழுதியது கவிதைதான்
என் பார்வையிலும்
எழுதியவர் பார்வையிலும்

Muthu said...

சிங்,

இதுவே ஒரு கவிதைதான்(உங்க பின்னூட்டம்)

தப்பா இல்லை சிங்..என் கன்னி முயற்சியை நீங்க பாராட்டியதால் சந்தோசத்தில் அப்படி சொன்னேன்..மிகவும் நன்றி நண்பா

ilavanji said...

முத்து,

என்ன விளையாட்டு இது!

//அஸ்திரங்களை ஏவுங்கள்// சரி விடுங்க! கேட்டுட்டீங்க... ஏவுகனையா இல்லாம கலந்துரையாடலா உங்க கவுஜையை கொஞ்சம் செதுக்கலாம்.

முதல்ல முதல் வரி...

மனிதா

படிச்சு பாருங்க. ஏதாவது உணர்ச்சி வருதா?! அதனால முதல்ல கவிதாயினி உஷா சொன்ன திருத்தம்! (அவங்க சொன்னது ஓ போடனும் என்பது)

ஓ மனிதா

இப்ப படிங்க! கொஞ்சம் தேவலை. ஆனால் மக்களெனும் மந்தையாட்டுக் கூட்டத்தினை உசுப்பி உய்விக்க தேவையான உணர்ச்சிப் பிழம்பான ஒரு ஜெர்க்கு அதில் இல்லை! அந்த ஜெர்க்குதான் ! -ஆ.. ஆச்சரியக்குறி! இது இல்லாம தொடங்கவே கூடாது!

ஓ மனிதா!

இப்ப படிங்க! சரி... சரி.. இதுக்கே உணர்ச்சிவசப்பட்டா எப்படி?! கடைசி ஜெர்க்குக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க!

இப்போ அடுத்தது. இங்க எழுதியிருக்கறதையே மடக்கி மடக்கி போடாம படிங்க! ஒரு வாக்கியம்! அவ்வளவே! இந்த காலத்து கவிதை புரவலர்கள் எல்லாம் முன்னேறிட்டாங்க. சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதனால இந்த தப்பை மட்டும் செய்யவே கூடாது.

உங்க வாக்கியத்தினை ரெண்டா உடைங்க! முதலில் ஒரு Subject! பிறகு அதன்மூலம் வாசகனுக்கு கொடுக்கப்படும் ஆச்சரியம் கலத்த அதிர்ச்சி, குழப்பம், மனக்கிலேசம், கிறுக்கு, வெறுப்பு, வேட்கை எல்லாம்! இந்த இரண்டாமாவதை சொல்ல வந்த நீதியாகவும் கொள்ளலாம்!

முதலில் subject, பிறகு நீதி என்றால் அது சாதாரண வாக்கியம் அவ்வளவே! அதனால் முதலில் எழுதவேண்டியது சொல்ல வந்த கருத்து. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இதை முதலில் படிக்கும் பொழுது வாசகனுக்கு ஒரு சஸ்பென்ஸ் கிடைக்கும்! என்னாத்துக்குடா இவன் சம்பந்தம் இல்லாம இதை சொல்லறான் என்று! நன்றாக கவனிக்கவும்! ஒரு கவிதையின் வெற்றியின் சூட்சமம் இங்கே தான் அடங்கியுள்ளது!

இப்போது படியுங்கள்!

ஓ மனிதா!

உங்களிடம் பழகுவதற்கு
முன்பு எங்களிடம்
இல்லை

வாலை சுருட்டிக்கொண்டு
அடுத்த வீதிக்கு
ஓடி
நின்று திரும்பி
குரைக்கும் பழக்கம்

இப்போ எப்படி இருக்கு?! இது ஆரம்ப லெவல் கவிதை. இதெல்லாம் தினத்தந்திலதான் போடுவாங்க! இன்னும் ரெண்டு லெவல் இருக்கு! அதனை நமது வளைகுடா வேங்கை கவிதைக்கோன்ஐஸ் பினாத்தல் இங்கு வந்து மிசச்சிறப்பாக வகுப்பெடுப்பார் என நம்புகிறேன்!

கடைசியா ஒரு ஜெர்க்குன்னு சொன்னேனே.. அது எங்கன்னு கேக்கறீங்களா?! படிச்சி முடிச்சுடனே புரிஞ்சமாதிரியும் புரியாதமாதிரியும் இருக்க, இதுல மேலும் ஏதாவது உள், வெளி, மேல், கீழ், சைடு, டாப், பாட்டம், லெப்டு, ரைட்டு, சென்ட்டர் குத்துக்கள் உள்ளதான்னு மனசு ஆராயும் பாருங்க.. அங்க இருக்கு அந்த ஜெர்க்கு! :)

(எங்கள் கவுஜைக் கோமகன், மானசீக ஆசான் சாத்தான்குளம் ஆசீப்பு அண்ணாச்சி வந்து என் மண்டைல ஒரு குட்டு வைக்கறதுக்குள்ள நான் எஸ்கேப்பு!!!! )

Pot"tea" kadai said...

எனக்கு இந்த
கவிதைகள் புரிவதே
இல்லை

பலமுறை படித்துப்
பார்ப்பேன்

உணர்ச்சி வசப்பட்டால்தான்
கவிதை வரும்
என்று நானும்
உணர்ச்சிவசப்பட்டேன்

ஒரு கவிதை உருவானது
கன்னி"யாக"

இதில் "யாக" மட்டும் தான் நான் சேர்த்தது. மற்றது அனைத்தும் உங்கள் கவிதைக்கான உங்கள் முன்னுரை.

"பதிவு"ஆன கவிதை
இனிது!

ramachandranusha(உஷா) said...

முத்து, ஒரு வாரத்துக்கு ஆபீசுக்கு மட்டமா? ஆமாம், நான் எங்க "ஊக்குவித்தேன்"? சின்னதாக
ஒரு திருத்தம் சொன்னேன், அதாவது ஆரம்பத்தில் ஓ மனிதா என்றுப் போட்டிருந்தால் சரியாக
இருந்திருக்கும் என்று எம் குருநாதர் சொன்ன பாடங்கள் ஞாபகம் வந்தன.

ஒரு சின்ன சந்தேகம்- எழுதிய உங்களிடமே கேட்கிறேன்

தைரியமாக கேட்கிறேன்
இது கவிதை தானா
கவிதை தானா????

பினாத்தல் சுரேஷ் said...

கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க.. நட்சத்திரமான உடனே எங்களையெல்லாம் விட்டுட்டு நீங்க மட்டும் பெரிய இலக்கியவாதி ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?:-))

உஷா சொன்னது, அப்படி இருந்தா ஒரு எபக்ட் கிடைக்கும்னு! மேலும் விவரங்களுக்கு எங்கள் குரு சாத்தான்குளத்தானை அணுகவும். இந்தக்கவிதை எந்தவகையில் வருகிறது என்றும், நெடில் எழுத்து ஆரம்பத்தின் நன்மைகள் பற்றியும் அவர் சொல்வார்.

இதை ஹைக்கூவாக மாற்ற வேண்டுமெனில்:

சாலை ஓரத்தில் திரும்பிக்குரைத்தேன்..
நன்றி மனிதா..
நீயே குரு!

சுயவிலாசமிட்ட மின்னஞ்சலை, பினாத்தலுக்கு பத்து பின்னூட்டங்களுடன் அனுப்பினால், எல்லாப்பாடங்களும் கணினி தேடி வரும்.

வினையூக்கி said...

இரண்டு நாட்களில் 5 பதிவுகள், இருநூறுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் கலக்குறிங்க முத்து(தமிழினி). கண்பட்டுவிடப் போகுது, திருஷ்டி கழிங்க (எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டுங்கோ!!!!!)

ramachandranusha(உஷா) said...

*பிரிந்தொருக்கால் சென்று
பின் நோக்கி குலைக்கும்
பிளிந்தாளும் குணம்
பிறவியில் எமக்கில்லை
உன்னில் பழகி
உன் மன ஆளுமை எம்மில்
உட் புகுந்தது மனிதா *

இது இலக்கியத் தரமாய் இருக்கான்னு சொல்லுங்க.

இளவஞ்சி, நீங்கத்தான் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் :-)

ஒரு தினமலர் வகையறா, ஒரு அய்கூ தேறி விட்டது. ஏதோ, பின் பெஞ்சு ஸ்டூடண்ட் முயன்றிருக்கிறேன்
பார்த்து மார்க் போடுங்க.

Muthu said...

வாங்க கோவைபிரதர்,
(இவங்க அழும்பு தாங்கலைங்க..(சத்யராஜ்,சிபிராஜ்)..கொஞ்சம் சொல்லக்கூடாதா?)என் கவுஜையை நல்லவேளை கவிச்சின்னு சொல்லாம வுட்டுட்டீங்க...

//படிச்சு பாருங்க. ஏதாவது உணர்ச்சி வருதா?! அதனால முதல்ல கவிதாயினி உஷா சொன்ன திருத்தம்! (அவங்க சொன்னது ஓ போடனும் என்பது)//

ஏன் ஏ மனிதான்னு போடப்படாதா

//மக்களெனும் மந்தையாட்டுக் கூட்டத்தினை உசுப்பி உய்விக்க தேவையான உணர்ச்சிப் பிழம்பான ஒரு ஜெர்க்கு//

யாரை சொல்றீங்க?

//உங்க வாக்கியத்தினை ரெண்டா உடைங்க! முதலில் ஒரு Subject! பிறகு அதன்மூலம் வாசகனுக்கு கொடுக்கப்படும் ஆச்சரியம் கலத்த அதிர்ச்சி, குழப்பம், மனக்கிலேசம், கிறுக்கு, வெறுப்பு, வேட்கை எல்லாம்! இந்த இரண்டாமாவதை சொல்ல வந்த நீதியாகவும் கொள்ளலாம்!//

டேய்..பாலகா..அந்த சூடத்தை கொளுத்துடா.....

//முதலில் subject, பிறகு நீதி என்றால் அது சாதாரண வாக்கியம் அவ்வளவே! அதனால் முதலில் எழுதவேண்டியது சொல்ல வந்த கருத்து. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இதை முதலில் படிக்கும் பொழுது வாசகனுக்கு ஒரு சஸ்பென்ஸ் கிடைக்கும்! //

என் கையில் ஏத்துடா..டேய்.....

//உங்களிடம் பழகுவதற்கு
முன்பு எங்களிடம்
இல்லை
வாலை சுருட்டிக்கொண்டு
அடுத்த வீதிக்கு
ஓடி
நின்று திரும்பி
குரைக்கும் பழக்கம்//

கலக்கல்ஸ்...சாமி மலையெறிடிச்சு......நானும் பலவாறு கட் பண்ணி போட்டேன்..எனக்கே குழம்பிடுச்சு...

//படிச்சி முடிச்சுடனே புரிஞ்சமாதிரியும் புரியாதமாதிரியும் இருக்க, இதுல மேலும் ஏதாவது உள், வெளி, மேல், கீழ், சைடு, டாப், பாட்டம், லெப்டு, ரைட்டு, சென்ட்டர் குத்துக்கள் உள்ளதான்னு மனசு ஆராயும் பாருங்க.. அங்க இருக்கு அந்த ஜெர்க்கு! :)//

உஷாவிற்கான பதிலில் கீழே பார்க்க...

Muthu said...

நன்றி பொட்டீக்கடை,
இத்தனை கவிதை
ஒரே இடத்தில்
அப்ப இது பூத்தோட்டமா

Muthu said...

உஷா,

ஒரு மாசமா இதுதானே வேலை..கால்வாசிதான் எடுத்து வுட்டிருக்கேன்..

//தைரியமாக கேட்கிறேன்
இது கவிதை தானா
கவிதை தானா????//

யாராவது ஏதாவது முக்கியமாக கேள்வியை கேட்டா ரஜினிகாந்த் மேலே பார்த்து பேன்ட் பாக்கெட்ல கையை விட்டுக்கிட்டு ஹா..ஹா..ஹா..ஹா...சிரிச்சுகிட்டு ஒல்லிப்பிச்சு காலை(?) போட்டுகிட்டு ஸ்டைலா ஓடுவாரு..அதை நினைச்சுக்குங்க:)))))

Muthu said...

சுரேஷ்,

தனியாக போய் இலக்கிய சகதில் விழ எனக்கு என்ன பைத்தியமா? ஒரு ஆளை தனிமெயிலில் கூப்பிட்டுக்கொண்டு உள்ளென்...அவர் வந்தார் என்றால் வுடு ஜுட்தான்.

//சாலை ஓரத்தில் திரும்பிக்குரைத்தேன்..
நன்றி மனிதா..
நீயே குரு!//

சூப்பர்....கண்ணில் நீர் முட்ட சிரித்தேன்..நன்றி சுரேஷ்......
(ஒரு பொருட்குற்றம்..அடிப்பட்ட நாய் என்ற அர்த்தம் வரவில்லையே)

Muthu said...

வினையூக்கி,

நண்பர்கள் இல்லையேல் நான் ஏது? நீங்கள் ஏது? இந்த உலகம் ஏது? நண்பர்கள் வாழ்க்கையை ஒளிமயம் ஆக்குகிறார்கள். உங்களை வெறுத்தாலும் நீங்கள் விரும்பினர்ல அவர் உங்களுக்கு குளோஸ் பிரண்ட்தான்.

Muthu said...

உஷா,


இலக்கிய திருட்டு இதை கேட்பார் யாருமில்லையா?

பொன்ஸ்~~Poorna said...

குரு..இதென்ன.. கவிதையை இப்படி பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க... :)

இருந்தாலும் நல்ல முயற்சி :-D ஹி ஹி..

Mookku Sundar said...

உங்க அரசியல் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் ;-)

Muthu said...

பொன்ஸ்,

கவிதையா இது,எருமை மாடுன்னு திட்டறதுக்கு பதிலா இப்படி ..வஞ்ச புகழ்ச்சிதான:)))

Muthu said...

மூக்கு ,

கவுத்தீடாதீங்க அப்பு..

Priya said...

Manidha (!!!/???)

It looks dead with nothing to add close to it.
Its point blank!!

May be that's why the dog behaves seeing "manidha".
JK...

An all in all super hero!!!

Muthu said...

priya,

could be more specific? i could not follow

பட்டணத்து ராசா said...

அண்ணே இளவஞ்சி, உங்க ஜெர்க்கு ரொம்பபப ரொம் நல்லாயிருக்கு :-)

பிரிந்தொருக்கால் சென்று
பின் நோக்கி குலைக்கும்
பிளிந்தாளும் குணம்
பிறவியில் எமக்கில்லை
உன்னில் பழகி
உன் மன ஆளுமை எம்மில்
உட் புகுந்தது மனிதா *

சாரிங்க, இப்படியில்லாம் எழுதினா உங்களுக்கு பின் பெஞ்சு இடங்கிடையாது :-)

Priya said...

Oh boy!!

By saying just "manidha"- its totally blank.
It must have made the dog scary as "manidha" cud be good/bad :-)
We know what we are and do to animals.

/உங்களிடம் பழகுவதற்கு
முன்பு எங்களிடம்
இல்லை /

It barks only when it sees human
:-) Are we too scary??

I am a tiny tot in this subject.

பாலசந்தர் கணேசன். said...

Muthu...
A way to organize all your articles into categories has been found and the necessary template changes are listed in my blog
http://bunksparty.blogspot.com

Will be glad if you can use it and organize your blog.

சிவா said...

முத்து! நான் ஒன்னுஞ்சொல்லல! ஏதாவது சொன்னா! சிங்கு உஷாவுக்கு சொன்னதையே எனக்கும் சொல்வார் ( காதை கொடுங்க சொல்றேன் 'கவிதை நல்லா இருக்கு. நானும் கூட சிங்குக்கு போட்டியா ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..ஹி ஹி ஹி' :-))

thiru said...

அகா கலக்கல்! கவிதை எழுதுவது எப்படி என நானும் தெரிந்து கொண்டேன். எதாவது கிறுக்கல் செய்து பாக்கணும். கலக்குங்க முத்து.

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் எழுதறீங்களே. இதை வெண்பாவா சொல்ல பார்க்கலாமே. என் முயற்சி பாருங்க.

தெருமுனை சேர்ந்து திரும்பி குரைக்கும்
வெறும்பழக்கம் வந்ததே வீணாய் - கருமமே!
உன்னிடம் சேர்ந்தபின் ஒட்டியதே மானிடா
நன்மையி ழந்ததே நாய்

Maraboor J Chandrasekaran said...

முத்து, நீங்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க, ராமசந்திரன் உஷா, இளவஞ்சி, இலவசக் கொத்தனார் போன்றவர்களை வைத்து நன்றாகவே க-விதைப் பாடம் நடத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

இது ஆசிரியப்பா. எதுகை, மோனையெல்லாம் பாக்கலை.


வாலைச் சுருட்டி வீதியின் ஓரமாய்
ஓடி நின்று பின்னர் திரும்பி
வீரமாய் குரைத்திடும் விலங்காய் ஆனது
மானிடன் உன்னிடம் வால்தனை
குழைத்து நின்ற பிந்தான் என்றதே.

பாருங்க. மரபு விதிகள் மீறாம எழுதறது கஷ்டமில்லை. அப்படியே முயலுங்களேன்.

பொன்ஸ்~~Poorna said...

வாலைச் சுருட்டி வேறு வீதிக்கு
ஆளே இல்லா தெருவுக்கு ஓடி
திரும்பி நின்று தீரமாய்க் குரைத்தோம்
விரும்பியா செய்தோம்?! வீர மானிடா
உன்னிடம் இருந்து பழகிய தோஷமே

கொத்ஸ் இது எப்படி இருக்கு? எதுகை மோனை பார்த்து எழுதினது...
என்னைக் கேட்டா, முத்து எழுதினது, இளவஞ்சி எழுதினதே நல்லா இருக்கு.. சிலதெல்லாம் ஆசிரியப்பா வெண்பாவில் சொல்ல முடியாதுங்க :)

இலவசக்கொத்தனார் said...

எஸ்கிஸ்மீ. பொன்ஸ்.

எதுகை மோனை பார்த்து எழுதினா மாதிரி தெரியலையே. சரி போகட்டும்.

ஆசிரியப்பா நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்க சரி. வெண்பா பத்தி ஒண்ணும் சொல்லலையே.அது அவ்வளவு மோசமா?

இலவசக்கொத்தனார் said...

அவங்க எழுதினது நல்லா இல்லன்னு சொல்லலை. வெறும்ன்ன உடைச்சு போடறதுக்கு பதிலா கொஞ்சம் மரபிலக்கணத்தோட எழுதிப் பழகலாமேன்னுதான் சொன்னேன்.

Muthu said...

கொத்ஸ்,

உங்க கவிதையும் பொன்ஸ் கவிதையும் நல்லாத்தான் இருக்கு..

ஆனால் ஃபிலீங்ஸ்தான் முக்கியம் என்பேன் நான்.


நவீன கவிதை மரபிலக்கியத்தின் தளைகளை அறுத்துகொண்டு திமிறி வெளிப்படும்.

(மேட்டர் என்னன்னா எங்களுக்கு தமிழில் புலமை கம்மி)

Muthu said...

பாலச்சந்தர்,

நன்றி எனக்கு மிகவும் தேவையான ஒரு உதவி..முழுதாக செட்டில் ஆனவுடன் கண்டிப்பாக உபயொகப்படுத்துவேன்..நன்றி நண்பரே...

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், வெண்பாவில் உம்மை மிஞ்ச முடியுமா? வெண்பா வித்தகர்னு உமக்கு வ.வா.ச சார்பா பட்டம் கொடுக்கிறோம்... அப்டியே பிடிச்சிகிட்டு.. இந்தப் பக்கம் வந்துடுங்க.. :)

இலவசக்கொத்தனார் said...

தளைகள் இல்லைங்க. அதுதான் நான் சொல்லறது. அதன் படி எழுதினா அழகு வரும். ஓசை நல்ல இருக்கும். படிக்கும்போதே பாடறா மாதிரி இருக்கும்.

அதுக்குத்தானே இலவச டுவிஷன் எல்லாம் சொல்லித்தரோம்.வந்து ரெண்டு கிளாஸ் அட்டெண்ட் பண்ணுங்க. சரியா வரும்.

மத்தது எல்லாம் நல்லா எழுதறீங்க இதுக்கு மட்டும் என்ன பயம்?

Muthu said...

நன்றி சிவா அண்ட் திரு,

நம்ப கத்து(குட்டிகள்)கிறதே இங்கதான..எடுத்து வுடுங்க உங்க சரக்கையும்...

பொன்ஸ்~~Poorna said...

//நவீன கவிதை மரபிலக்கியத்தின் தளைகளை அறுத்துகொண்டு திமிறி வெளிப்படும்.
//

முத்து, ஒரேடியா தளைன்னு சொல்ல முடியாதுங்க.. இப்போ உஷா சொன்னாங்க இல்ல, ஓ போட்டா நல்லா இருக்கும்னு.. அது மாதிரி தான்.. சில மரபுகள்.. ரொம்ப ஈசி தான்.. புதுக் கவிதை வரிக்கும் வந்துட்டீங்க. அப்படியே எங்க வெண்பா வாத்தி ஜீவாவோட பதிவெல்லாம் பார்த்தா எழுதிடலாம் :)

Muthu said...

நன்றி மரபூராரே,

சோதியில் கலந்து உங்க சரக்கையும் அள்ளி விடுங்க...

Muthu said...

பொன்ஸ் அண்ட் கொத்ஸ்,

சைடுல இதெல்லாம் நடக்குதா (இலவச ட்யூசன்,பாட்டு கிளாஸ்)..வரண்யா..ஒரு வாரம் ஆகட்டும்...

அப்படியே மணிகண்டன் பதிவில் கவிதைப்பற்றி எழுதியதை பார்த்தீர்களா?

இலவசக்கொத்தனார் said...

அதைப்படிச்சேன். சில விஷயங்களில் உடன்படுகிறேன். மற்றவைகளில் இல்லை. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

இலவசக்கொத்தனார் said...

அது சரி அவர் எழுதினத படிச்சீங்களான்னு ஒரு பின்னுட்டம், அதுக்கு பதிலா ஒரு பின்னூட்டம். நம்ம வெண்பா கிளாஸ் எல்லாம் கட் அடிச்சாலும் பின்னூட்டம் வாங்குவது எப்படி கிளாஸுக்கு கரெக்ட்டா வந்தா மாதிரி தெரியுது. :)

இலவசக்கொத்தனார் said...

இதுதானே 50ஆவது பின்னூட்டம். ஜமாய் ராஜா, ஜமாய்.

Muthu said...

கொத்ஸ்,

வம்புதானே:)))

ஆனந்த கண்ணீர்ல் இருக்கேன்யா.. என் கவிதைக்கு இத்தனை பின்னூட்டமா?

நட்சத்தர வாரத்தோட மரியாதையே தனிதான்.( காசி வாழ்க,மதி வாழ்க)

Muthu said...

நன்றி நெருப்பு,

நம்ம கடமையே அடிபட்டவனுக்கு கொரல் குடுக்கறது தானே...

இலவசக்கொத்தனார் said...

//நட்சத்தர வாரத்தோட மரியாதையே தனிதான்.( காசி வாழ்க,மதி வாழ்க)//

யோவ் கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடறவங்க நாங்க. எங்களை கண்டுக்க மாட்டியா? போராடுவோம் போராடுவோம். ;)

இந்த மாதிரி நாங்க எல்லாம் வந்து பின்னூட்டம் போடறா மாதிரி எழுதினா பரவாயில்லை. உம்ம லேட்டஸ்ட் டிரெண்ட் பயமுறுத்துதேப்பா.

Muthu said...

கொத்ஸ்,

மேலே வினையூக்கிக்கு கொடுத்த பதிலுல நண்பர்களுக்கு நன்றி சொல்லியிருக்கு..பார்க்கலியா நீங்க?

//உம்ம லேட்டஸ்ட் டிரெண்ட் பயமுறுத்துதேப்பா. //

நிஜமாகவே எனக்கு தெரியல..எதை சொல்றீங்க? ச்சும்மா சொலலுங்க..நான் சாகபட்சினிதான்..

G.Ragavan said...

அட முத்து...கவித.....நல்லாத்தான் இருக்கு. இன்னும் இப்பிடி நெறைய உணர்ச்சி வசப்படுங்க.......நானுங் கூட ஒரு கட்டத்துல கவிதகள எழுதுனேன். ஆனா அதைக் கவிஞர்கள் ஒத்துக்கிரலை...செய்யுள் மாதிரி இருக்குன்னு சொல்லீட்டாங்க... :-(((( ஆனாலும் என்னோட கவிதை ஒன்ன இங்க எடுத்து விடுறேன்.

இதுதான் காதலா?

அவளுக்குப் பின்னாலே ஒருவன்
நடக்கையில் நடக்கிறான்
நிற்கையில் நிற்கிறான்
முறைக்கையில் முழிக்கிறான்
என்ன ஆயிற்று?

காலையிலே அவள் எழுகையிலே
காலை வைப்பான் வாயிலிலே
கடை கண்ணி போகையிலே
நடை பயில்வான் தெருவினிலே
கல்லூரிக்குப் புறப்பட்டால்
வல்லூறாய் வட்டமிட்டான்
என்னதான் நினைக்கிறான்?

பேருந்து நிறுத்தத்திலே
தூணே இவன்தானே
பேருந்தின் படியினிலே
பறந்தே வந்தானே
நிறுத்தத்தில் அவள் இறங்கினால்
நெருக்கத்தில் அவன் மூச்சிறுப்பான்
என்ன நடக்கிறது?

பெண்ணென்றால்
பொறுக்கனுமா என்ன?
அடக்க மாட்டாமல்
அவளும் கேட்டாள்
அதென் காதிலும் விழுந்ததிப்படி

ஆனதென்ன? ஆவதென்ன?
காலில் இருப்பதை கழற்றனுமா
கையில் எடுத்ததைச் சுழற்றனுமா
அப்பனும் அண்ணனும் வந்தால்
ஆப்பமும் பன்னும் உன் உடம்பில்
வாயில் வந்ததைச் சொல்லிவிட்டு
நோயில் விழுந்ததுபோல் சென்றுவிடு

அவனும் அசரவில்லை
அசைந்தும் கொடுக்கவில்லை
நாவால் அவன் சொன்னதெல்லாம்
நானும் கேட்டேன் இங்கனமே

ஆசை இழுக்குதடி
ஆளை மயக்குதடி
காதல் தலைக்கேறி
கனவுகளாய்த் தோன்றுதடி
கண்ணில் உன்னுருவம்
கலர்ப் படமாய்த் தெரியுதடி
உன்னை எண்ணித்தானே
உயிர் மூச்சே ஓடுதடி
நாளை வரும்
நானும் வருவேன்
நீயும் வரனும்
நீலச் சேலையிலே
வந்தால்.........
நீயெனக்கு நானுனக்கு
இல்லையேல்
நானே இனி இல்லை

ஒன்றுஞ் சொல்லவில்லை அவள்
ஒரு திசையும் நோக்கவில்லை
ஓரமாய் நடந்தவள் ஒதுங்கிச் சென்றனளே
அப்பனும் அவனை இறுக்கி
அப்பனா அண்ணனா என்றால்!
நாளை வருமல்லவா!
பார்க்கலாம்!

நாளையும் வந்தது
நானும் வந்தேன்
அவனும் வந்தான்
அவளும் வந்தாள்
அட!
நீலச் சேலையிலே!

ஆண்டவா!
இதுதான் காதலா?
கிஞ்சித்தும் புரியவில்லை!
இஞ்சி தின்ன குரங்கானேன்!

இத எழுதி வருசம் அஞ்சாச்சுங்கோ!!

பொன்ஸ்~~Poorna said...

ராகவன்,
சொல் ஒரு சொல் எழுதும் தமிழ்ச் செம்மல், நீங்க இப்படி பொறுக்கனுமா , கழற்றனுமா, சுழற்றனுமான்னு ணை ன் ஆக்கி விட்டீங்க!!!

அது சரி, நீங்க ஏங்க அடுத்த நாள் அந்தப் பக்கம் போனீங்க.. அது ஒண்ணு தான் எனக்குப் புரியலை... :)

Muthu said...

ப்ரியன் said...
முத்து கவிதை அழகு மற்ரும் கருத்தும் அருமை

மனிதா என ஆரம்பிக்காமல் இருந்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.அதை கடைசி வாக்கியத்தில் கொண்டுவந்தால் சுகம்.இதோ என்

முயற்சி.

* அடிபட்ட நாய் *

வாலைச் சுருட்டி
காலிடுக்கில் திணித்து
அடுத்த வீதிக்கு
அவசரமாய் ஓடி
பத்திரமான இடம் பார்த்து
திரும்பி நின்று
குரைக்கும் பழக்கம்

மனிதா,
உங்களிடம் பழகுவதற்கு
முன்பு எங்களிடம்
இல்லை.

கவிதைப் பற்றிய கட்டுரைகள் பகிர்தலுக்கு

என்னின் சில கவிதைகளை வாசிக்க
http://priyan4u.blogspot.com

அன்பர் ஆசிப் அவர்களின் கவிதைப் பற்றிய அருமையான கட்டுரை (உங்களில் பலர் வாசித்திருக்கக் கூடும்) http://asifmeeran.blogspot.com
/2006/04/blog-post_16.html

அதை தொடர்ந்த அன்புடனில் விவாதம் வாசிக்க : http://groups.google.com/group
/anbudan/browse_thread/thread
/1d3b670f8c6a01be/79b6d1f50991
5437

(due to page alignment problem i had to recopy..)

Muthu said...

ராகவன்,
கட்டுடைப்போமா....

//அவளுக்குப் பின்னாலே ஒருவன்
நடக்கையில் நடக்கிறான்
நிற்கையில் நிற்கிறான்//

இதுவரை ஓ,கே.


//முறைக்கையில் முழிக்கிறான்//

சிறிய மாற்றம் இங்க....எதுகை பிழையா..

//காலையிலே அவள் எழுகையிலே
காலை வைப்பான் வாயிலிலே
கடை கண்ணி போகையிலே
நடை பயில்வான் தெருவினிலே
கல்லூரிக்குப் புறப்பட்டால்
வல்லூறாய் வட்டமிட்டான்
என்னதான் நினைக்கிறான்?//

ம்..அப்புறம்...


//பேருந்து நிறுத்தத்திலே
தூணே இவன்தானே//

:)))


//பேருந்தின் படியினிலே
பறந்தே வந்தானே
நிறுத்தத்தில் அவள் இறங்கினால்
நெருக்கத்தில் அவன் மூச்சிறுப்பான்
என்ன நடக்கிறது?//

:))) என்ன அடிக்கடி டவுட்டு...காதல் வந்தால் மூளையை
கழட்டி வீசிட்டுதான் திரிவாய்ங்க நம்ம ஆளுங்க..வேற வழியில்லைங்க...

//இஞ்சி தின்ன குரங்கானேன்!//

இதைத்தான் சொன்னேன்....

Muthu said...

பொன்ஸ்,
எத்தனை பேரை அலைகழிச்சீங்களோ நீங்க..நல்ல பிள்ளையா ராகவனை மடக்கறீங்க...(பெங்களூர் பஸ்ஸில)

Muthu said...

ப்ரியன்,
இரண்டு கவிதைகள் பார்த்தேன்..சூப்பர்..அனுபவித்து படிக்கவேண்டும்..அடுத்த வாரம் செய்வோம்...

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்,
எத்தனை பேரை அலைகழிச்சீங்களோ நீங்க..நல்ல பிள்ளையா ராகவனை மடக்கறீங்க...(பெங்களூர் பஸ்ஸில) //

நான் என்னங்க பண்ணினேன்.. எங்களுக்கு எல்லாம் புரியாத கதை ஜிராவுக்குப் புரியுது.. அதான், எல்லார் மனதிலும் இருக்கும் கேள்வியை நான் வெளியிட்டேன்.. அவ்வளவு தான்.. :)

Maraboor J Chandrasekaran said...

முத்து எல்லாத்தையும் எழுத விட்டுட்டு, ரசிச்சுட்டு அப்புறம்

//தனியாக போய் இலக்கிய சகதில் விழ எனக்கு என்ன பைத்தியமா? ஒரு ஆளை தனிமெயிலில் கூப்பிட்டுக்கொண்டு உள்ளென்...அவர் வந்தார் என்றால் வுடு ஜுட்தான்.//

இப்படி எழுதறேங்க, நியாயமா?

(பின்ன மாடரேட் செய்றப்ப reject ஐ அழுத்தவேண்டியது தானே?) எண்ணிக்கை கூட்டற ஆளு நீங்க இல்லைன்னு தெரியும்.பின்ன எப்படி? உதைக்குதே?

Anonymous said...

இது போன்ற கவிதைகெதிரான பாசிச போக்குகளை இனியாவது விட்டுவிடுமாறு கவிதைக் கண்மணிகளீன் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பொறவிக்கவிஞன்
சாத்தான்குளத்தான்

ilavanji said...

முத்து,,, பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம்...

தொப்புளானுக்கு!

பிளாக்கு ஆரம்பிச்சிட்டு இப்படி சும்மா வச்சிருக்கீரே? நியாயமா?!

பின்னூட்டத்திலேயே இந்த போடு போடுறீரே! (தருமியின் ஜோசிய பதிவுக்கான பின்னூட்டம் உட்பட.. ) நீரெல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சா எங்க டங்கு டனாரு தான் போல!!

சீக்கிரம் வாரும் ஓய்! வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!!!

Priya said...

/
உங்களை வெறுத்தாலும் நீங்கள் விரும்பினர்ல அவர் உங்களுக்கு குளோஸ் பிரண்ட்தான்.
/
Awesome!!!
No words to say.....

thiru said...

முத்து,

என் பங்கிற்கும் அடிபட்டது நாய். கவிதையா? உளறலா? குரைப்பா? நானறியேன்! :)

"ஒரு அந்தி இருளில்
பட்ட அடியின் வலியில் ஓடி
எதிர்வீதி முனையில் குரைத்தேன்!
துரத்தலின் முடிவில்
திரும்பிப் பார்த்தால்
எதிர்முனையில் நீ மனிதா!
இதுவரை இல்லாத பழக்கம்
இது எங்களிடம் எப்படி?
எதிர்த்து பழக்கப்பட்ட நாங்கள்
குரைத்து ஓடும் பழக்கம்
கற்றது உங்களிடமிருந்து!
துரத்தும் வரை ஓடி
துணையை சேர்த்து
குரைப்பது நீதானே!"

Muthu said...

திரு,

சூப்பர் கவிதைய்யா..குறைந்த வார்த்தையில் கருத்தை சொல்லணுமாமே?

எக்ஸ்ட்ராவா ஒரு வார்ததை இருந்தாலும் கழுவில் ஏற்றிவிடுவார்களாமே?