Sunday, November 30, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் தேவை. ஆரம்ப எழுத்து முக்கியமல்ல. பின்னூட்டமாக பெயர்களை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, November 08, 2008

அப்புறம் என்ன வெங்காயத்துக்கு பொடி?

அடப்பாவிகளா..இது உங்களுக்கே அநியாயமா தெரியல...

கவனமாக படிக்கவும்...


செய்முறை:

500 கிராம் காய்கறி அல்லது 25 கிராம் உலர்ந்த காய்கறி வத்தல், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சமையல் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் 25 கிராம் புளி, 2 தக்காளி இவற்றின் கரைசல், தேங்காய் விழுது 1 கப், 50 கிராம் சக்தி வத்தல் புளிக்குழம்பு பொடி, தேவைகேற்ப உப்பு ஆகியன சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான வத்தல் புளிக்குழம்பு இப்போது தயார்.



இதுதான் நான் வாங்கின வத்தல் புளிகுழம்பு பொடி பாக்கெட்டில் இருந்த செய்முறை:


வத்தலும் நாம போடணுமாம். புளியும் நாம சேர்க்கணுமாம்.இன்னும் என்ன என்னமோ சொல்றான்.அதெல்லாம் நம்ம தான் சேர்க்கணுமாம். உப்பும் நாமதான். அப்புறம் உன் பொடில என்னதாண்டா இருக்கு?

we the people supporting eelam

வீ த பீப்பிள் என்றால் நாம் எல்லாரும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார். ரொம்ப சந்தோசம். ஏத்தி விடுவதற்கு முன் அந்த செய்தியின் பின்னூட்டங்களில் ஈழத்தமிழன் சொல்லியிருக்கும் அனைத்து விசயங்களையும் மேற்படி தேசியவாதி ஒத்துக்கொள்கிறாரா என்பதை சொன்னால் பரவாயில்லை. அல்லது அவரது தலைவி பாணியில் செலக்டிவ்(?) நச் போடுகிறாரா?

அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.

கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? ஊர் ஊருக்கு எத்தனை தமிழன் போராட்டம் நடத்தி கைதானான்? எத்தனை கட்சிகள் இன்று ஈழத்தமிழர்களுக்காக கச்சை கட்டி நிற்கின்றன? ஒரு பதிவில் பார்த்தேன்.(வீ.எம்). அமீரையும் சீமானையும் பாராட்டினாராம் புலிக்கோ. ஆனால் புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)

ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை. தேர்தலும் நெருங்கும் நேரம். ரொம்ப நஷ்டம் வராது. ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ரொம்ப படம் காட்டினால் நாளை ஜெயா கூட்டணியில் சேர முடியாதே என்று காய் நகர்த்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.ஏதோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்று உண்ணாவிரதமோ என்னமோ. கடைசியில் அது அதிமுக வுடன் கூட்டணி சேர ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாம். அதையும் விஜயகாந்த் கெடுத்துவிட்டார் :)

ஆக நாம் தமிழர்கள் அனைவரும் யாரையாவது குற்றம் சாட்டி இந்த பிரச்சினையில் நாம் நல்லவனாக முயற்சிக்கிறோம். இருக்கவே இருக்கார் தாத்தா. ஏற்கனவெ வயதாகி குடும்பம் உள்பட யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறார்.போட்டு தாக்கு. எல்லாவற்றையும் கலந்து கட்டி ஊடு கட்டலாம்ல.

இந்த மாதிரி திசை திருப்பல்களை தவிர்ப்பதற்காகவாவது கலைஞர் அரசியலிருந்து விலகிவிடுவது நல்லது.

Monday, November 03, 2008

அவ்ளோதாங்க பிளாக் என்பது......

சொல்றேன் கேளு.

காலை முழிச்சிப்பவே ஏழு மணிக்கு மேல் ஆச்சு. இன்னைக்கு டையத்துக்கு ஆபிஸ் கிளம்பறது கஷ்டம்தான்னு நெனச்சிட்டுகிட்டே கிளம்பினேன். நைட் அடிச்ச எஃபஸ் சரக்கு சரியில்லை. உண்மையிலே சரக்கு சரியில்லையா அல்லது லோக்கல் கிங்பிஷரை பழகுன ஆளுக்கு இது சரியா வராதா என்று தெரியலை. இங்கே லோக்கல் சரக்கு என்னன்னு கேட்டு வாங்கனும் அடுத்த வாரம்.


குளிச்சி,கிழிச்சி, காண்டினன்டல் உணவுமுறைங்கற பேர்ல நான் தங்கற ஓட்டல்ல தினமும் தர்ற சமாசாரத்தை போய் சாப்பிட்டு வந்தேன்.வழக்கம் போல் ஒரு கப் பழரசம், இரண்டு முட்டை ( அதுல ஒண்ணை மதியத்துக்கு எடுத்து வைச்சிட்கிட்டேன்), காஞ்ச பன், அதுக்கு தொட்டுக்க ஜாம், பட்டர், மற்றும் டீ சாப்பிட்டேன். இன்னைக்கு என்னமோ தயிரு வச்சிருந்தான். (மதியத்துக்கு ஆவும்னு அதையும் பேக் பண்ணிட்டேன்!).

முத நாள் ராத்திரி நானே செஞ்சு வந்திருந்த பருப்பு குழம்பு ( அப்படித்தான் நினைக்கிறேன்) சுடவச்சேன். இங்கேயே வாங்கின அரிசியை( வழவழன்னு சரியாவே வரலை. பச்சரியாம், நம்ம ஊரில் நாம சாப்பிடுறது புழுங்கலரிசியாம்.யாருக்கு தெரியும் இதெல்லாம்?) வடிச்சி பேக் பண்ணி எடுத்துட்டு நிமுந்து பார்த்தா மணி எட்டுக்கு மேல ஆயிருந்தது. சாதாரணமா நம்ம ஊரா இருந்தா நான் கிளம்பறதுக்கு ரெண்டு நிமிசம் தான் ஆகும். இங்கன எனக்கு டை கட்டவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. ஒரு பக்கமா தொங்கிகிட்டு காமெடியாதான் இருந்துச்சு. அப்புறம் கோட்டு, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு கிளம்ப எட்டே முக்கால் ஆயிடுச்சு.

மெட்ரோ புடிச்சு ஆபிசு போக கால் மணி லேட்டாயிடுச்சு. ஒரு ஆளு கேட்டான். நம்ப ஊருகாரன்தான். இங்க ரொம்ப நாளா இருக்கான். என்ன சார் இனிமே ஒன்பது மணிக்கு முன்னாடி வந்துருங்க சார்ங்கான். டேய் நான் வந்து ரெண்டு வாரத்துல உன்னிய ஒன்பது மணிக்கு முன்னாடி ஒரு நாளும் பார்த்ததே இல்லையெ என்று நினைச்சிகிட்டு மையமா சிரிச்சி வைச்சேன்.

கூட வேலை செய்ற சைனாகாரன் வேலை என்னன்னே சொல்லி குடுக்கவே ரெண்டு வாரத்திற்கு மேலே எடுத்திட்டு இருக்கான். எப்பவுமே ஒண்ணுமே இல்லாத மேட்டர பெரிசா பேசறதே இவனுங்க வேலையா இருக்கு. எது எடுத்தாலும் உடனே ஹரிசாண்டல், வெர்டிகல், லீவரேஜ் அப்படி இப்படிம்பாங்க. கடைசியில் அது ஒண்ணுமே இருக்காது. அப்படித்தான் ஓடுச்சி மதியம் வரைக்கும். நீ ஆணியெ பிடுங்க வேண்டாம். ஏற்கனவே புடுங்கின ஆணிக்கு டாக்குமெண்ட் வெச்சிருப்பயே அதகொடுன்னுனென்.

மதியம் சாப்பாடு பத்தல. டிபன் பாக்ஸ் சமாசாரமே ஆகாம இருந்துட்டு இப்ப டப்பா தூக்கினா அப்படித்தான் இருக்கும்டா சுனா பானா, கண்டுக்காத அப்படியெ போய்கிட்டு இரு அப்படின்னு தேத்திகிட்டு டீயை குடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன். நாளைக்கு கொஞ்சம் அதிகமா சமைச்சி டப்பால அடைச்சி வெச்சி கொண்டாரணும்னு நெனச்சிட்டுகிட்டேன்.

சாயங்காலம் ஆறு மணிங்கறது எப்படியும் ஏழாயிடுது. தங்கற இடத்துக்கு வந்து சேர ஏழரை ஆயிடுது. அப்படியெ வழியில் ஒரு கடையில் லெக் பீசா ஒரு பாக்கெட் சிக்கன் வாங்கிட்டு வந்துட்டேன். எண்ணெயில் பொரிச்சிரலாம்னு ஐடியா. நேத்து சிககன் குழம்பு வைக்க போய் என்ன சொதப்பினென் என்ன ஆச்சுனு தெரியலை. கசப்பா இருந்தது.

நைட்டுக்கும் நாளைக்கும் சமைக்கணும். அப்புறம் நாளைக்கு எந்த ஆணியை புடுங்கணும்னு பார்க்கனும். கொஞ்ச நேரம் பி.பி.சி. (செய்தியில் அவ்வளவு ஆர்வமான்னா அதெல்லாம் இல்ல.வேற எந்த சேனலும் கிடையாது).

இப்படித்தான் டெய்லி ஓடுது. செரி வாரகடைசியில் ஏதாவது பண்ணலாம்னா துவைச்சி போட்டா துணிகூட காயறதில்லை.....


குழப்பமா இருக்கா....


(நண்பர் ஒருவர் சாரு ரசிகர். தமிழ் பிளாக் எழுத்தாளர்களை பற்றி சாரு வைத்திருக்கும் மட்டமான அபிப்பிராயத்தை என்னிடம் சொன்னார். அவர் கெடக்கறார்.பிளாக் எழுதறது ஒரு டைரி மாதிரிதாண்டா என்றேன். அவருக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் பொட்டி தட்டும் ஒருவரின் வாழ்வில் ஒரு நாளை படம் பிடித்துள்ளேன்.)

Sunday, November 02, 2008

கலைஞரை கும்முவது தவறா?

இலங்கை தமிழர்கள் யார், இந்திய தமிழர்கள் ,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளின் வரலாறு என்ன என்று எந்த வரலாறும் தெரியாமல ( என் அலுவலக நண்பர் ஒருவர்.நன்கு படித்தவர்.அவரே என்னிடம் " தமிழன் ஏன்யா அடுத்த நாட்டில் போய் உட்கார்ந்துகிட்டு தனிநாடு கேட்கிறான்" என்றார்) சகலரும் சகட்டுமேனிக்கு இலங்கை பிரச்சினை பற்றி போட்டு தாக்குகிறார்கள். உனக்கு என்ன வரலாறு தெரியும் என்று எசிரி போடாதீங்க சாமி.அதை அப்புறம் பார்ப்போம்.

ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் வசதியாக வீட்டில் அமர்ந்துக்கொண்டு, சத்யராஜ் ஏன் போர்முனைக்கு போகவில்லை என்றெல்லாம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார். சிபிராஜ் இன்னும் ஃபீல்டில் செட் ஆகவே இல்லை. அதுக்குள்ள சத்யராஜ் ஏங்க போர்முனைக்கு போகவேண்டும்? இல்ல நாம தான் போர்முனைக்க போவமா? எதுக்கு அலம்பல்?

அப்பாவி மக்கள் இலங்கை அரசாங்கத்தால் கொடுமையாக தாக்கப்பட்டாலும், இந்த முறை கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதால்தான் விடுதலைப்புலிகளின் வேண்டுக்கோளுக்கிணங்க தமிழக அரசியல்வாதிகள் சவுண்ட் கொடுப்பதாக ஆங்கில ஊடகங்கள் எழுதி வருகின்றன. புரட்சித்தலைவியும் இதுப்பற்றி பேசி உள்ளார் என்று நினைக்கிறேன்.

இந்த பின்னணியி்ல் உண்ணாவிரதம்,மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும் கலைஞர் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் பரவலாக குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைவரை கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் மீது இந்திய நீதிமன்றங்களில் வழக்கு இருக்கும்போது விடுதலைப்புலிகளுக்கு காங்கிரஸ் உதவும் என்று நினைப்பது கொஞ்சம் அதிகப்படிதான். மத்திய அரசு ஏற்கனவே தன்னுடைய கடைசி கட்டத்தில் உள்ளது. அடுத்த தேர்தலிலும் வெல்ல வாய்ப்பே இல்லை என்பதுதான் நிலைமை. கலைஞருக்கும் மாநிலத்தில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசை விட்டால் வேறு வழியே இல்லை.

ராமதாசு ஐயா விஜயகாந்த் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்று அறிந்தால் விஜயகாந்த் உள்ள கூட்டணியில் துண்டை வீசி இடம் பிடித்துவிடலாம். கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கனவே விஜயகாந்திடம் சரண் அடைந்தாகிவிட்டது.

திமுக மட்டுமே தமிழகம் இல்லை. திமுக அளவிற்கு பெரிய கட்சியான அதிமுக இருக்கிறது. அரசியலுக்கு வந்தவுடன் இலங்கை பிரச்சினையில் ஆச்சர்யமான அமைதி காக்கும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்கள் யாராவது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கூட தமிழகத்தில் சலசலப்பு இருந்திருக்காது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவியை இழந்து சூடுபட்டவர் கலைஞர்.ஆகவே அவரை கும்முவதை விட்டுவிடுவதே நல்லது.

**********************


நேற்று என்னுடைய் நண்பன் தேசிகவிநாயகத்துடன் ( பெயர் பொருத்தத்தை கவனிக்கவும்) பேசிக்கொண்டிருந்தேன். ஆளு பக்கா தேசியவாதி என்றாலும் இலங்கையில் தமிழரின் சுயநிர்ணய போராட்டத்தையும் ஆதரிப்பான். கேட்டால் ஒருவேளை நாளைக்கு ஈழத்தமிழருக்கு தனிநாடு கிடைச்சிடுச்சின்னா என்ன பண்றது என்பான்.

"இலங்கைக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் ரேடார் எல்லாம் தருவது எப்படிடா நியாயம், அதை வைச்சி தான அவன் தமிழனையே கொல்றான்",என்றேன்.

"அதுல தாண்டா நம்மோட ராஜ தந்திரமே இருக்கு, தமிழக அரசியல்வாதிகளும் சரி,நீயும் சரி இதை புரிஞ்சுக்கலை", என்றான்.

"எப்படிடா"

"நம்மோட ரேடாரதான இலங்கை ராணுவம் பயன்படுத்துது, நம்ம கொடுக்கலின்னா சீனாகாரன் கொடுத்திருப்பான், ஒருவேளை சீனாக்காரன் ரேடாரா இருந்திருந்தா விடுதலைப்புலி விமானத்தை அந்த ரேடார் கண்டிபிடிச்சிருக்காதா, அதுனாலதான் முந்திக்கிட்டு நாம கொடுத்துட்டோம்" , என்றானே பார்க்கலாம்.

டர்ஜ் ஆனேன் நான். இப்படியெல்லாமாடா டேய்!!!
.
.
.
.

.
.
.
.
.
(காமெடியை காமெடியாத்தான் எடுத்துக்கணும்)

Saturday, November 01, 2008

சின்ன சோ சலசலப்பு, எங்கு முடியுமோ?

அதிமுகவில் தொடர்ந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்படும் எஸ்.வி்.சேகர் இன்றைய தினம் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்திால் தெய்வகுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருப்பார். நல்ல வேளை.அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.

ஒரு பேட்டியில் அவர் கூடியவிரையில் எம்.பி ஆக இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஒருவேளை பி.ஜே.பியில் சேரலாம் என்று தெரிகிறது.

அவர் எப்படி சின்ன சோ ஆவார் என்று கேட்பவர்களுக்கு பதில் அவர் கொடுத்த பேட்டியில் உள்ளது. கீழே படியுங்கள்.

கேள்வி:சுயேட்சையாக நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?


பதில்: இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!

இனிமேலும் யாருக்காவது சந்தேகம் இருக்கா? சோ.ராமசாமிக்கு வயதாகிவிட்டது. சேகருக்கும் சோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தமிழகம் எங்கும் பரவலாக விஷ விதைகளை தூவ அவருக்கு பிறகு தகுதியுள்ள ஒரே ஆள் எஸ்.வி.சேகர். டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது.