மாட்டு லோன் பற்றிய பதிவில் அய்யா குப்புசாமி ஒரு அருமையான பின்னூட்டம் தந்துள்ளார்.இதை தனிப்பதிவாக போடுவதில் பெருமையடைகிறேன்.
இதைப்பற்றி என் கருத்து அவர் கருத்தோடு ஒத்துபோனாலும் சில இடங்களில் மாறுபடுகிறேன்.இதை பிறகு எழுதுகிறேன். சம்மர் ஹாலிடே முடிந்ததால் இனி எழுதுவது சற்றே(?) குறையும்.
இனி ஓவர் டு குப்புசாமி
*******
தன் முதலாளிக்கு எது உகந்ததோ அதைச் செய்வது தான் எந்தத் தொழிலாளிக்கும் (வங்கி என்பதால் ஊழியன்) அழகு. நீங்கள் சொல்வதிலிருந்து பொதுத்துறை வங்கி எதிலோ பணியாற்றுவதாக யூகிக்கிறேன். அதன் அடிப்படையில் அதன் முதலாளியாகிய அரசுக்கு எது உகந்ததோ அதைச் செய்வதுதான் அழகு. அதைத் தான் செய்திருக்கிறீர்கள் எனத்தெரிகிறது. குடிகளுக்கு எது உகந்ததோ அதைச் செய்வது அரசுக்கு அழகு.
100% அரசு மட்டுமே வங்கியின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் குடிகளுக்கு உகந்ததைச் செய்ய யார் அனுமதியும் பெறத்தேவையில்லை; தற்போதைய இரயில்வே நிர்வாகம் போல. கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தன் பங்குகளின் சிறு/பெறு பகுதியை வெளியே விட்ட பிறகு, என்னதான் பெரும்பான்மை பங்குதாரதாக இருந்தாலும், மற்ற பங்குதாருக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை/நலனை குறைக்கும் வகையில் செயல்படுவது இந்த வங்கிகள் தனியார் துறை வங்கிகளுடன் போட்டியிட்டு உலகத்தரத்திற்கு உயர்வதைக் குலைக்கும். சில வருடங்களில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அவங்கியாக வளர்ந்து நிற்கிறதே ICICI! பல ஆண்டுகளாக இருந்த பொதுத்துறை வங்கிகளால் ஏன் முடியவில்லை?
Survival of the fittest என்பது இங்கே செல்லுபடி ஆகுமா? அரசு இந்த வட்டி வீதத்தில் தான் கடன் தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது. அதே சமயத்தில் சந்தையில் நிலவும் வட்டி அளவில் கடன் தருவதில் வங்கிக்கு எந்தத் தயக்கமும் இருக்கலாகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களைப் போல அனைத்து வங்கி அதிகாரியும் இருப்பதில்லை. You guys have loan processes that can drain not only his time but also his energy. His எனபது உழவனுடையதைக் குறிக்கிறது. வங்கியில் 8% க்கு லோன் கிடைகும் என்றால் (அது கிடைக்காததால்) கீழ்த்தட்டுக் குடியானவர்கள் கந்து வட்டி (>2% மாத வட்டி) தான் வாங்குகிறார்கள். சரி.. விவசாயக் கடன்களுக்கு இந்த வட்டி தான் என அரசு கட்டாயப் படுத்தினாலும் கூட அதனால் உண்டாகும் வருவாய் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும்.
"குடியானவர்களுக்கு மானியம், இலவசம் என எதுவுமே இருக்ககூடாது. நாம் கட்டும் வரிப்பணம் இவர்களுக்கு ஏன் போய்ச் சேரவேண்டும்?" என்பதான எண்ணங்கள் நிலவாமலுமில்லை. 'அவர்கள் எலிக்கறி தின்னாலும் பரவாயில்லை, இலவச மின்சாரம் தரக்கூடாது' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். We should learn from America எனச் சொல்பவர்களுக்கான ஒரு செய்தியுடன் முடிக்கிறேன். அமெரிக்க அரசு வருடந்தோறும் சுமார் இரண்டு இலட்சத்தும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியத்தைத் தன் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
//The US spends $50-60 billion annually on agricultural subsidies, 90 per cent of which goes to the foodgrains and oilseeds sectors.
http://www.thehindubusinessline.com/2006/05/
03/stories/2006050300621000.htm//
நமது குடியானவன் அவனது அமெரிக்க சக குடிமகனை விட ஏழைப்பட்டவன்; நவீன தொழில் நுட்பங்கள் இல்லாதவன். அவனை மேம்படுத்த ஏதாவது செய்தாக வேண்டியது அவசியமாகிறது.நீ பயன்படுதும் சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.125 மானியம் தரப்படுகிறது, அதை வாங்கிக்கொள்ள உனக்கு வெட்கமில்லை! பெட்ரோல் லிட்டர் ஒன்று உனக்குத்தர அரசு 10 ரூபாயை எரிக்கிறது, அது பரவாயில்லை! இந்தியன் ஆயில் கம்பெனி நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டப்படுகிறதே, அது பரவாயில்லை!
ஆனால் உழவனுக்கு சலுகைகள் எனும் போது அதைச் சகிக்க உன்னால் முடியவில்லை?
Monday, May 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
விவசாயிக்கு உதவி யாரும் செய்ய வேண்டாம் என சொல்லவில்லை.அரசு வேறு எதற்கு இருக்கிறது?சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவனுக்கு உதவி செய்யத்தான் அரசு.
சலுகைகளை நெறிப்படுத்த வேண்டுமென்போர் மேல்தட்டு மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் சேர்த்தே தான் சொல்லுகின்றனர்.கேஸ் விலை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு போடும்போது ஒரு தரப்பு அதை எதிர்த்து கூப்பாடு போடும்.அவர்களையும் கண்டித்தே தான் சலுகைகளை நெறிப்படுத்த வேண்டுமென்போர் எழுதுவார்கள். இருந்தபோது அதை ஒழிக்க வேண்டுமென பல தரம் பல பத்திரிக்கைகளில் இவர்கள் எழுதியுள்ளனர்.
வங்கிகளில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் உதவி பல விதங்களில் துஷ்ரயோகம் செய்யப்படுகிறது.லோன்மேளா,காஸ் ஸ்டவ் வாங்க லோன் என கட்சிக்காரனுக்கு லோன் கொடுப்பதையும் வாங்கும் கடனை திருப்பி தர வேண்டாம்(நாம் ஏழை என்பதால்) என்ற மனப்பான்மை ஒரு தரப்பு மக்களிடையே வளர்வதையும் சுட்டிக்காட்டினால் உடனே அவர்கள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.
"மேல் தட்டு மக்கள் மட்டும் ஏமாற்றுகிறார்கள்.அதனால் கீழ்தட்டு மக்களும் ஏமாற்ர வேண்டும்" என்பது சரியான வாதம் அல்ல.ரெண்டுதரப்பிலும் ஏமாற்றுவது குற்றம்தான்.பணக்காரனுக்கு லோன் தந்து அல்வா தந்த இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனையும் இவர்கள் கண்டித்தே தான் உள்ளனர்.அர்ஷத்மேத்தா,கேத்தன் பரேக் என அனைவரையும் கண்டிப்பதுபோல் தான் கீழ்மட்ட அளவில் நடைபெறும் முறைகேடுகளையும் கண்டிக்கின்றனர்.
ஏழைகளுக்கு லோன் தர வேண்டாம் என சொல்லவில்லை.லோன் தரும்போது அதனால் அவர்களுக்கு உண்மையிலேயே பலன் உண்டா என பாருங்கள்.கினறுவெட்ட கடன் வாங்கி மகனுக்கு கல்யானம் செய்வோர் உண்டு.அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி கடனை தள்ளுபடி செய்துவிடும் என்ர நம்பிக்கையே இதற்கு காரனம்.
சலுகைகளால் வரும் சுமைகள் இறுதியில் விழுவது ஏழை மக்கள் மீதுதான்.
There is no free lunch.Concessions ultimately rob peter to pay paul.Concessions need not be be avoided but they can be reformed.
சலுகைகளை ஒழிக்க யாரும் சொல்லவில்லை.அதில் உள்ள களைகளை களைய மட்டுமே சொல்கின்ரனர்.
oil pool deficit இருந்தபோது அதை ஒழிக்க வேண்டுமென பல தரம் பல பத்திரிக்கைகளில் இவர்கள் எழுதியுள்ளனர்" என திருத்தி வாசிக்கவும்.
//சலுகைகளை ஒழிக்க யாரும் சொல்லவில்லை.அதில் உள்ள களைகளை களைய மட்டுமே சொல்கின்ரனர். //
million dollar question...but how?
Allow P.Chidambaram and Manmohan to take free decisions and they will tell how to reform the system.
அவ்வளவு சுலபம் இல்லை செல்வன். நாலட்ஜ் கமிஷன் என்பவர்கள் அரசுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று ஆலோசனை கூறிகிறார்கள்.
இதுவெல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும் மக்களுக்கு கடைசியில் பாதிப்புதான்.
சிதம்பரம் ஷேர் மார்கெட்டை விழாமல் காக்க தினமும் அறிக்கை விடுகிறார்.
சிஸ்டம்ஸ் அண்ட் புரொசீஜர்ஸ் என்று அரசு ஊழியர்கள் (உங்கள் பதிவு) பற்றி பேசினோமே...அதுதான் சரியான தீர்வு
உதாரணம் தேர்தல் கமிஷன் சிஸ்டம்ஸ் பல பிரச்சினைகளை தீர்த்திருப்பதை பாருங்களென்.
முத்து,
குப்புசாமி அவர்களை முதியவர் என்று நினைத்து இருக்கிறீர்களா?
அவரு செம யங்...செம ஸ்மார்ட்.
என்னை இளையவன் என வர்ணித்த கவிஞர் மணிகண்டனுக்கு நன்றிகள்.
//
இதைப்பற்றி என் கருத்து அவர் கருத்தோடு ஒத்துபோனாலும் சில இடங்களில் மாறுபடுகிறேன்.
//
சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை அரவணைத்துச் செல்லும் பண்பு என் மனதில் பதிந்திருக்கும் உங்களது படிவத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
ஒரு மணி நேரம் BSE & NSE தற்காலிகமாக மூடும் அளவிற்கு இன்று வர்ணிக்க முடியாத அளவு பங்குச் சந்தை வீழ்ச்சி. அதனால் பின்னூட்டம் இடுவது போன்ற அம்சங்களை உடனுக்குடன் கவனிக்க முடியவில்லை.
மற்றபடி என்னுடைய கருத்தையும் அம்பலம் ஏற்றிய உங்களது பெருந்தன்மைக்குக் கடமைப் பட்டுள்ளேன்.
-குப்புசாமி செல்லமுத்து
சிதம்பரம் பங்குச் சந்தையைத் தாங்கிப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டு. ஹர்சத் மேத்தாவிடம் client ஆக இருந்த காலம் தொட்டு அந்தக் கட்டமைப்பில் புகுந்து விளையாடும் பெரும் புள்ளிகளில் அவரும் ஒருவர் என எங்கோ கேட்டதாக ஞாபகம்.. (எதுக்கு வம்பு)
-குப்புசாமி செல்லமுத்து
//சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை அரவணைத்துச் செல்லும் பண்பு என் மனதில் பதிந்திருக்கும் உங்களது படிவத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது//
கிழிஞ்சது கிருஷ்ணகிரி...இதை பத்தி அப்புறம் பேசலாம் அப்பு... உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு...
இப்ப மார்கெட்ல நுழையலாமா வேண்டாமான்னு ஒரு பதிவு போடுங்க சார்...
சொன்னதைக் கேட்டு நான் சிரித்ததை இரு சிரிப்பான்கள் :-) :-) மூலம் வெளிப்படுத்துகிறேன்...
இப்ப நுழையலாமா வேண்டாமா..?? இப்பத்தான் ஒரு கட்டுரை எழுதினேன்.. நாளைக்குக் காலைல போட்ரலாம்..
(என் முதலீட்டை 25% உயர்த்தி விட்டேன் கடந்த ஒரு வாரத்தில். ஆனாலும், my recipe might not suit everyone's kitchen.)
அது சரி.. திராவிட் பேட்டிங்கை எடுத்துக் காட்டி பங்குமுதலீட்டை விளக்கலாம்னு பாத்தா, அத எத்தன பேரு படிச்சாங்கண்ணு தெரியல.. :-(
-குப்புசாமி செல்லமுத்து
ஏழை விவசாயி பணக்கார விவசாயி என்ற அடிப்படையில் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு மானியமா அல்லது வேறு வகையாகவா குப்புசாமி?
என்ன முத்து இப்படிக் கேட்டுட்டீங்க...
நமது நாட்டில் என்றில்லை, அமெரிக்கா போன்ற அதி முன்னேறிய தேசத்திலும் குடியானவர்கள் குறைந்த விலையில் இறக்குமதியாகும் விளைபொருட்களால் பாதிக்கப் படாமல் இருக்கும் வண்ணம் சலுகைகள் இடப்படுகிறது. இந்த உண்மையை நிரூபிக்கவே, 'பிசினஸ் லைன்' பொருளாதாரத் தினசரியில் வந்த செய்தியை கோடிட்டுக் காட்டினேன்.
மற்றபடி அங்கே எந்த பயிர்களுக்கு எந்த அளவில் மானியம் ஒதுக்கப்படுகிறது என்கிற விவரமெல்லாம் தெரியவில்லை. ஒரு வேளை அந்தத் தகவல் கிடைத்தால் சுவையான விவாதங்களுக்கு வித்திடும்.
மன்னிக்க வேண்டுகிறேன் அய்யா!
சரி.. என் கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்றீர்களே, என்ன அது?
-குப்புசாமி செல்லமுத்து
அய்யா நான் வேறுபடும் என்று சொல்வதைவிட அரசுடமை வங்கியாளாக சில விளக்கங்கள் தரமுடியும என்பதுதான் சரியாக இருக்கமுடியும்.
தனியார் துறை வங்கிகளுடன் போட்டி என்பது பொதுத்துறை வங்கிகளுக்கு இப்போதைக்கு கானல் நீர்தான்.
ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் லோன் குடுப்பது வசூல் செய்வது முதற்கொண்டு அனைத்தையும் அவுட்சோர்ஸ் செய்கின்றன. ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் இதில் குறைக்கப்படுகிறது.ஆனால் மார்க்கெட்டிங் செய்வதற்கு நிறையவும் பிஸினெஸ் டெவலப்மெண்ட் ஆட்களுக்கு ஏகப்பட்ட இன்சென்டிவ்வும் தரமுடிகிறது.
அரசுடைமை வங்கிகளுக்கு இந்த உரிமைகள் எல்லாம் இல்லை. சில நாட்களுக்கு முன் இது முன்மொழியப்பட்டு இப்போது அரசாங்கத் தாலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
.
என்னுடைய பழைய பதிவுகளின் சில சுட்டிகள்:
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_06.html
http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113706509480595359.html
உண்மை தான்... ஊழியர் சங்கங்கள் எந்த வகையிலாவது இதற்குக் காரணம் எனக் கருதுகிறீர்களா?
-குப்புசாமி செல்லமுத்து
//ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் லோன் குடுப்பது வசூல் செய்வது முதற்கொண்டு அனைத்தையும் அவுட்சோர்ஸ் செய்கின்றன. //
இப்போ ஸ்டேட் பாங்கும் அவுட் சோர்ஸ் செய்கிறார்கள் - to GE
Post a Comment