Saturday, July 31, 2010

கொள்கை சிங்கம் நாஞ்சில் சம்பத்

வைகோ தான் காமெடியன் என்றால் அவரை போலவே மேனரிசங்களுடன் பேசும் நாஞ்சில் சம்பத் மகா காமெடியனாகிவிட்டார். நேற்று செய்திகளில் பார்த்த அந்த மேட்டர் தான். இப்படி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு எதுக்கு தனிக்கட்சி? பேசமா கட்சியை கலைச்சிட்டு அதிமுகவில் சேர்ந்துவிடலாமே?

இன்னும் காங்கிரஸ் காரங்க அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அப்புறம் வெற்றி கூட்டணி என்ற அடிப்படையில் பா.ம.க தேமுதிக எல்லாரும் அங்க வந்திடுவாங்க. அப்புறம் வைகோவுக்கு ஐந்து சீட் கிடைக்கிறதே கடினம். திமுகவிற்கு காங்கிரஸ் கத்தி சொறுகிறது எல்லாம் இருக்கட்டும். இவங்க ஆப்பில் உட்காராம இருக்கறது எப்படின்னு முதல்ல பார்க்கட்டும்.

இந்த ஆளையெல்லாம் ஒலகமகாபுரட்சிக்காரர் என்ற ரேஞ்சுக்கு பேசிய பிளாக் புரட்சியாளர்கள் என்ன சொல்ல போறாங்களே?

நாஞ்சில் சொன்னது இதுதான்." காங்கிரஸ் அதிமுக கூட்டணி ஏற்பட்டால் மதிமுக எதிர்க்காது". உயிர்தியாகம் செய்த ஈழத்தமிழர்கள் ஆவி உங்களை எப்படி மன்னிக்கும் வைகோ அவர்களே?

Tuesday, July 27, 2010

அது நான் இல்லை -பிரபல நடிகை மறுப்பு

சில நாட்களுக்கு முன்பு ஒரு இணைய இதழில் ஒரு சிறிய துணுக்கை பார்த்தேன். ஒரு பிரபல தேசிய நடிகையின் பிட் படம் ஏதோ வெளியாகி விட்டதாம். அதைப்பற்றி நடிகை கருத்து தெரிவிக்கையில் தானும் அந்த படத்தை பார்த்ததாகவும் அந்த படத்தில் இருந்தது தான் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இதை நாம் படிக்கும் போது நம்முடன் அமர்ந்திருந்த நண்பர் அடித்த காமெண்ட். " அந்த மாதிரி படத்தில் நான் எப்போதும் நடத்ததில்லை. நடிக்க மாட்டேன் என்று அந்த நடிகை சொல்லவில்லை. அதில் இருப்பது நானில்லை என்றுதான் கூறி உள்ளார்கள். இது ஏதோ தான் அந்த மாதிரி நடித்த படம் நல்லவேளை வெளியாகவில்லை என்று சொல்வது போலத்தானே இருக்கிறது" அடக்கடவுளே......

சவுக்கு - திமுக போகும் பாதை

சவுக்கு இணையத்தளத்தை ஒரு நண்பர் கூகிளில் பகிர்ந்து இருந்தார். எப்படி இத்தனை நாள் இது நம் கண்ணில் படவில்லை என்பதே நமக்கு புரியவில்லை. பல தகவல்கள் உண்மை தகவல் என்ற தொனியையே தருகின்றன. வெவரம் உள்ள வழக்கறிஞர்கள் இதையெல்லாம் வைத்து எதுவும் வழக்கு தொடுக்க முடியாதா என்ன?

இதுவே அதிமுக ஆட்சியாக இருந்து திமுக எதி்ர்க்கட்சியில் இருந்திருந்தால் இந்த மாதிரியான தகவல்களை வைத்து திமுக பொறி கிளப்பி இருக்கும். இந்தியாவே பொங்கி இருக்கும். ஆனால் அதிமுக ஆகட்டும் மற்ற எதிரி கட்சிகள் ஆகட்டும். சோம்பி திரிவது பெரும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இது அதிமுக மேல் எனக்கு பல நாட்களாக இருக்கும் அபிப்பிரயாயத்திற்கு வலு கூட்டுகிறது. கூறு உள்ள ஆட்கள் அங்கு இல்லை அல்லது ரொம்ப கம்மி.

அம்மா மிகப்பெரிய மிருக பல பெரும்பான்மையில் ஆட்சியில் இருந்த போது கடைசி சில காலம் இதுபோல் ஆடித்தான் அதிமுக ஏறக்குறைய காணாமல் போனது. ரஜினி எல்லாம் கூட சவுண்ட் விட்டு நல்ல பெயர் வாங்கிய நேரம் அது. திமுக அந்த பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் விழித்துக்கொள்ளவில்லை என்றால் அதோ கதிதான்.

உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

நண்பர் ஒருவரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் தொடர்ந்து இந்த கட்டுரையை படித்தேன். http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar . அதுதான் இந்த பதிவின் தலைப்பு.

அரைப்பக்கம் கூட படிக்க முடியாத (தராசு, தமிழக அரசியல் என்றெல்லாம் உப்புமா பத்திரிக்கைக்களை போன்ற) நக்கீரனை விட கேவலமான 'அளகில்' எழுதப்பட்ட இந்த கட்டுரைதான் இன்று தமிழின உணர்வாளர்களின் சிந்தனையை வளர்க்கிறது. காலக்கொடுமை.

இந்த கட்டுரை எழுதியவர்கள் மாதிரி ஒரு நூறு ஆட்கள் இருந்தால் போதும். மிச்சம் மீதி இருக்கிற தமிழினமும் அழிந்துவிடும்.

Sunday, May 30, 2010

பொதுக்குழு கூட்டல.....ஓட்டெடுப்பு நடத்தல.....

வரலாற்று கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் :)

தமிழர் வாழ்வு காக்கவே அவதரித்த டாக்குடர் அய்யா கடைசியாக கருணாநிதி காலில் விழுந்துவிட்டார். இது முதலும் அல்ல. கடைசியும் அல்ல. கலைஞர் அண்ணன் உருவிய கோவணத்தை திரும்ப தந்துவி்ட்டாராம். கோவணத்தை மீட்ட மாவீரன் வாழ்க.


நமக்கு தோணிய சில சந்தேகங்களும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில நிகழ்வுகளும்.....


கூட்டணி திரும்பவும் வைக்க எந்த பொதுக்குழு கூடியது? ஓட்டெடுப்பு நடந்ததா?

காடுவெட்டி குரு இவ்வளவு அவமானத்திற்கு அப்புறமும் எப்படி அரசியல் செய்வார்? சரி சரி ராமதாசே அரசியல் செய்யும்போது அவருக்கு என்னங்கறீங்களா? விடுங்க..

எல்லாவற்றிற்கும் மேலாக ராஜ்யசபா சீட் 2011க்கு அப்புறம் என்று நேற்று செய்தி கேட்டதும் எனக்கு சிரித்து சிரித்து விக்கலே வந்துவிட்டது. இது உண்மையா? இல்ல கலைஞர் நக்கல் அடிக்கிறாரா என்றே தெரியவில்லை. இதைவிட ஒரு கட்சிக்கு பெரிய அவமானம் எதுவுமே இல்லை. ஆனா டாக்குடர் இதுக்கெல்லாம் அசைய மாட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் திரும்பவும் அன்புச்சகோதரியுடம் பேச்சு வார்த்தை நடக்கும்.எப்படி பா.ம.க அடிமட்ட தொண்டர்கள் திமுகவை வெறுக்கிறார்கள் என்று அடிபொடிக்ள ஆதாரக்கட்டுரை எழுதுவார்கள்.என்ன கொடுமை சார் இது?

நாளைக்கு அய்யாவின் அறிக்கை மற்றும் ( அனேகமாக அந்த 2011 சீட் விவகாரத்தை டாக்குடர் அய்யா ரசிக்க மாட்டார்.என்ன பண்றது அய்யா? நம்ம _______ அப்படி?) பதிலை பார்த்துவிட்டு மீதி படத்தை ஓட்டலாம்.

Tuesday, March 30, 2010

என்ன பண்ணி தொலைக்கறது?

இன்னுமொரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த தொகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிட போகிறார்கள் என்று பார்ப்போம்.

திமுக ஆயிரம்,
அதிமுக ஐநூறு,
பா.ம.க முன்னூறு
ஆகமொத்தம் ஆயிரத்து எண்ணூறு.

பா.ம.க ஏதோ மூக்குத்தி, தோடு என்று திட்டம் போட்டதாகவும் அதில் யாரோ மடப்பயக மாம்பழம் சின்னத்தை பதித்துவிட்டதால் அது செயல்படுத்தப்படவில்லை என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது.அதை விட்டுவிடுவோம். விஜயகாந்த் கட்சிகாரர்களும் டெபாசிட் வாங்கும் நோக்கத்தோடு ஓரளவு பணத்தை செலவு செய்ததாகவும் அதனால்தான் கடந்த முறை வாங்கிய அளவு ஓட்டு மீண்டும் வாங்க முடிந்தது எனவும் தகவல்கள் வருகின்றன.

பிரியாணி(?) எல்லாம் எல்லா தொண்டர்களுக்கும் கிடைக்கறதுதான். அது வயித்தோட மறுநாள் காலைல வரைக்கும்தான்.மத்தபடி மேற்கண்ட கணக்குப்படி வரும் ஆயிரத்து எண்ணூறு (1800) எல்லாருக்கும் கிடைச்சிருக்காது. ஆக ஆவரேஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ரொம்ப கம்மி.அடுத்த தேர்தலில் தலைக்கு ஐயாயிரமாவது இல்லாமல் எவனும் ஓட்டு போடவே போகக்கூடாது என்று மக்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்.

வழக்கம் போல் அதிமுக ஆரம்பித்த ஒரு அரைகுறை வழக்கம் திமுகவினரால் முழுமை படுத்தப்பட்டு உள்ளது. விவரம் தெரியாதவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிமுக தான் ஆரம்பித்தது என்பதை நி்னைவு படுத்தி கொள்வது நலம். இல்லாவிடில் சில லூசு பசங்க வேற மாதிரி சொல்லிடுவாங்க. பலமுறை இதை செஞ்சவங்கதான் நம்மாளுங்க. தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).

டாக்டர் அய்யா இரண்டாம் இடம கிடைத்ததை தைலாபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று மாதமாக குடும்பம், மாமன், மச்சான் எல்லாருடனும் சென்று சாதிக்கார பசங்க 70 சதவீதம் இருக்கற ஒரே தொகுதியில் வேலை செய்தால்தான் இவர் நாற்பது ஆயிரம் ஓட்டு வாங்குவார். கடந்த முறை தனியாக நின்று வாங்கியதை விட இது எததனை ஓட்டு அதிகம்?

வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டால் என்ன ஆவார்? அதிகபட்சம் பத்து இடங்களில் இரண்டாவது இடம் கிடைக்கலாம். தனியாக போட்டியிட்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் எத்தனை இடங்களில் இவர் வாங்கினார் என்று பார்க்கவேண்டும்.....அது எல்லாம் அந்த காலம் என்பதையும் கணக்கில் வைத்துத்தான் இதை பார்க்க வேண்டும். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சொருகிய ஆப்பு வேறு நினைவுக்கு வருகிறது.

கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்தாஸ் நாளைக்கே காங்கிரசு கூட்டணிக்கு போகமாட்டார்னு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு கூறமுடியாது.

நேரம் கிடைச்சா இந்த பணம் கொடுக்கற விவகாரம் எங்க வந்து முடியும்னு எனக்கு தோண்றதை எழுதலாம்னு இருக்கேன்.

Thursday, March 04, 2010

நித்தியானந்தரும் உண்மைத்தமிழன்

சாமியார் அகப்பட்டு கொண்டது தமிழ்நாட்டு வாய்க்கு குறைந்தது இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவலை போடும் என்று தெரிகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற ஒரு விசயம் வெளிவந்தால் பின்நவீனத்துவ கருத்துக்கள் சில நாட்கள் கழித்துத்தான் வலையுலகில் வெளிவரும். இப்போதெல்லாம் முதல் நாளிலேயே வருகின்றன.


உண்மைத்தமிழன், செந்தழல் ரவி ஆகியோர் பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஏமாற்றமே வருகிறது. பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி கொண்டு இருந்துள்ளார் இந்த சாமியார். காவி உடையில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு உள்ளார். அப்பாவி ஆத்மாவின் வாழ்க்கையில் அநியாயமாக மீடியாக்கள் தலையிட்டு விட்டதாக எழுதுகிறார்கள். நித்யாவை நம்பி பல லட்சம் கொட்டிய பக்தர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


சன் டிவி மிட்நைட் மசாலா போடுவது பற்றி எழுதுவது எல்லாம் காமெடி. அப்படி பேசினால் அய்யா உண்மைத்தமிழன் அவர்களே அஜீத் பலகோடி சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துக்கொண்டு தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மறுப்பதை ஆதரிப்பது ஏன்? நடிகனுக்கு நடிப்பு மட்டும்தான் தொழில் அதில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு மற்றபடி உத்தம புத்திரன் வேடம் போடலாம் ( மிரட்டறாங்கய்யா) என்பதை ஒத்துக்கொண்டால மீடியாவிற்கும் எது தொழில் என்பது என்பது உங்களுக்கே தெரியும். பல காலம் மீடியாவில் காலூன்ற முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு ஒப்புமைக்காகத்தான்.


நடந்துள்ளது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மோசடி. இதை கோர்ட்டில் சாமியாரோ நடிகையோ பேசினால் அதை டிவிக்காரர்கள் எதிர்க்கொள்வார்கள். நாம் இதிலிருந்து என்ன எடுத்துக்கொள்வது என்பதுதான் முக்கியம்.சன் டிவி இவ்வளவு பில்ட் அப் கொடுக்காவிட்டால் இது இவ்வளவு பரபரப்பாகி இருக்காது. சுரணை கெட்ட ஜனங்கள் இதுபோன்ற சாமியாரை தேடிக்கொண்டு சென்று கொண்டு தான் இருப்பார்கள. துரதிஸ்டவசமாக இவ்வளவிற்கு பிறகும் இன்னமும் போகத்தான் செய்வார்கள்.


நாமெல்லாம் உத்தமர்கள் இல்லை உண்மைத்தமிழன். ஆனால் நீங்களும் நானும் காவி உடை கட்டிக்கொண்டா ரோட்டில் திரிகிறோம்? அல்லது வாழ்ந்தால் உண்மைத்தமிழன் போல வாழவேண்டும் என்று குறைந்தது ஒரு நூறு பேர் கே.கே.நகரில் வாழ்கிறார்களா? ரஞ்சிதா நித்தியானந்தம் காதல் ஒரு அக்மார்க் காதல் என்கிறீர்கள். பேசாமல் கல்யாணம் செய்திருக்கலாமே. பணம், புகழ் மரியாதை, அஜால் குஜால் எல்லாம் வேண்டும்.நம்பிக்கை மோசடி செய்யலாம். ஆனால் அதை வெளிப்படுத்துபவர்களுக்கு எல்லா ஒழுக்க விதிகளும் வேண்டும்.என்னங்க இது? எல்லாவற்றையும் விட ஒரு நிறுவனத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தை தயாரிப்பினை வாங்காதீர்கள் அல்லது பார்க்காதீர்கள் அல்லது பயன்படுத்ததாதீர்கள் என்று நீங்கள் கூறியதாக எழுதி இருந்தீர்கள்..என்ன கொடுமை சார் இது?


http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_04.html

Tuesday, February 23, 2010

அண்ணன் திருமா - பகீர் உண்மைகள்

திருமாவளவன் ஜாக்குவார் தங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இன்னும் மற்றும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.இதை தொடர்ந்து லட்சோப லட்ச அஜீத் ரசிகர்கள் திருமாவளவன் கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆனால் நமது கழுகார் கொண்டு வந்த தகவலின்படி அண்ணன் திருமாவிற்கு நடந்து உண்மைகள் எதுவுமே தெரியாதாம். அவர் பெயரில் வெளிவந்த அறிக்கையே அவருடையது இல்லை என்று ஒரு சோர்ஸ் செய்தி தந்தது. கருணாநிதி தன் கைப்பட எழுதி அனுப்பிய அறிக்கையாம் அது.

அவர் போல் வேடம் அணிந்து ஜாக்குவார் தங்கம் வீட்டுக்கு சென்றது திருமா போலவே உள்ள ஒரு திமுக தொண்டர்தானாம். இன்னும் சொல்லப்போனால் இலங்கைக்கு சென்று ராஜபக்சேவிற்கு பொன்னாடை போர்த்தியது கூட அந்த திருமா போலவே தோற்றமளிக்கும் ஆள்தானாம். ஆக அண்ணன் திருமா எந்த தவறும் செய்யவில்லை.தமிழ் உணர்ர்ர்ர்ர்ர்ர்வாளராகத்தான் இருக்கிறார் என்றார் நண்பர்.Monday, February 22, 2010

எண்ணிக்கையில் ஒன்று கூடியது....

வழக்கமாக சினிமா விழாக்களிலோ அல்லது அரசியல் கலந்த சினிமா விழாக்களிலோ இரண்டு பேர் பேச்சை நான் விடாமல் கேட்பதுண்டு. ஒருவர் கலைஞானி கமல். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

முக்கியமான காரணம் என்னவென்றால் இருவரும் கன்னாபின்னாவென்று உளருவார்கள் என்பதும் கேட்பதற்கு படு சுவாரசியமாக இருக்கும் என்பதுதான். அதுவும் ஒருவர் " திரையில் படு யதார்த்தமாக வரும் கமல் மேடையில் படு செயற்கையாக நடிப்பது ஏனென்று தெரியவில்லை" என்று கூறியது ரொம்பவே உண்மை என்று நினைத்தேன். சூப்பர் ஸ்டார் சொல்லவே வேண்டாம். தங்கமணி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு பேசுவார். ( "கூட" என்ற பதம் அவர் அரசியல் அறிவு பற்றி அறியாதவர்கள் கூட என்ற அர்த்தத்தில).

இப்போது லிஸ்ட்டில் ஒன்று கூடுகிறது. முன்னாள் அல்டிமேட் ஸ்டார். சத்தமில்லாமல் போய் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டு வந்துவிட்டதை மறந்தோ மறைத்தோ மக்கள் அவருக்கு வீரர் பட்டம் சூட்டுவது காமெடியாக உள்ளது.
அரசியல்வாதிகளுக்கு (கருணாநிதி, ஜெயலலிதா) போன்றவர்களுக்கு சற்றும் குறைவில்லாத மக்கள் நல விரும்பிகள் தான் இந்த நடிகர்கள். குறிப்பாக இந்த முன்னணி நடிகர்கள். இவர்கள் சம்பளம், டீலிங்ஸ் எல்லாம் என்ன? எழு கோடி, எட்டு கோடி அளவிற்கு முண்ணனி கதாநாயகர்களின் சம்பளம் எகிறிவிட்டதாக சொல்கிறார்கள். வெட்கமில்லாமல் பலகோடி வாங்கிவிட்டு அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு டிக்கெட்டை ஐநூறு ஆயிரம் என்று விற்பதை ஊக்கப்படுத்திக்கொண்டே திருட்டு விசிடி வாங்காதீங்க என்று வாயகிழிய பேசும் மக்கள் நல பணியாளர்கள் தான் இவர்கள். அதற்கு அரசியல்வாதிகளின் உதவி வேண்டுமாம்.


கூட்டுகளவாணிகளுக்குள் நடக்கும் சண்டையை பார்த்து சிரித்துவிட்டு போவதுதான் முறை. அனைத்து தரப்பினரும் ஆட்டம் போடலாம் என்ற அளவில் இன்று தமிழகத்தில் அனைவரும் எது கேட்டாலும் தரும் அளவிற்கு கருணாநிதி இறங்கியதற்கு என்ன காரணமாக இருக்கும்?
அவருடைய கடைசி ஆட்சிகாலம் என்பது மட்டும் காரணமா?
மாறன் சகோதரர்களுக்கு அளவிற்கு நம் குடும்பமும் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து களம் இறங்கியுள்ள அவர் குடும்ப வாரிசுகள் காரணமா?
உருப்படியாக ஆட்சி செய்தபோது பணம் புழக்கம் இல்லை..மசு* புழக்கம் இல்லை என்று ஆப்படித்த மக்களின் மீதான நம்பிக்கையா?
இந்த முறை கருணாநிதி ஆட்சிக்கும் கடந்த முறைகளில் அவர் நடத்திய ஆட்கிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி பிறகு எழுதலாம். அதிமுக திமுக ஆகமுடியாது என்றும் ஆனால் திமுக அதிமுக ஆகமுடியும் என்றும் நான் முன்பு ஒரு முறை நண்பர் ஒருவரிடம் கூறியிருந்தேன். அது நடப்பதை நேரில் பார்க்க முடிகிறது. திமுக அதிமுக ஆகிறது. ஆனால் அதிமுக திமுக ஆக முடியாது என்பது தான் உண்மை. இது தமிழகத்தின் எதிர்காலம் பற்றி யோசித்தால் பகீரிட வைக்கிறது.
மற்றபடி இன்று கருணாநிதி வெறுப்பில் உள்ள அனைவரும் அஜீத் ரசிகர் மன்றத்தில் சேருவது ரொம்ப சுவாரசியமான சினிமா பார்ப்பதை போல் உள்ளது. இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. விஜயகாந்த் கட்சியில் சேரலாமே?

தமிழ்வெளியை பார்த்தீங்களா?