சில பதிவுகளில் மாட்டு லோன் தரும் திராவிட குடிதாங்கி என்பவரைப்பற்றி படிக்க நேர்ந்தது.பலருக்கும் வலைப்பதிவாளர் டிக்ஸ்னரி தெரியவில்லை என்ற சோகம் ஒருபுறம் இருக்க மாட்டு லோன் எப்படி வங்கிகளில் தருகிறார்கள் என்ற குழப்பமும் இருப்பதாக தெரிகிறது.இதை தீர்க்க என்னாலான எளிய பதிவு இது.
மாட்டு லோன் என்பது விவசாயிகளுக்கு வழங்கும் நேரடி கடன்திட்டங்களில் ஒன்று. அனைத்து வங்கிகளும் விவசாயத்திற்கு என்று இவ்வளவு சதவீதம் கடன் தரவேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஆணை.பல வங்கிகளில் தருகிறார்கள்.ஆனால் அமர்ந்திருக்கும் மேனேஜர்களை பொறுத்து இதில் சுணக்கமும் உள்ளது.
இதை தெளிவாக வரையறுத்தால் கறவை மாட்டு கடன் எனலாம். ஏழை விவசாயி ( 99 சதவீதம் இவன் திராவிடனாகத்தான் இருப்பான் என்பது திண்ணம்) வியாபாரியிடம் மாட்டை விலைபேசிவிட்டு அவன் பங்காக ஒரு சிறிய தொகையை போட்டால் மீதி தொகையை வங்கி தரும். பிறகு அருகில் உள்ள பால் கூட்டுறவு சொஸைட்டியில் அவரை மெம்பராக்கி பாலை அங்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.இந்த லோன்கள் தனிப்பட்ட முறையிலும் பால் சொசைட்டி மூலமாக மொத்தமாகவும் தரப்படுகிறது.
மாடு கன்று ஈன்று பால் கறக்க ஆரம்பித்தவுடன் அந்த சொஸைட்டியில் இருந்து நேரடியாகவோ அல்லது கடன் பெற்ற விவசாயி மூலமாகவோ மாதாமாதம் இந்த கடன்தொகை வசூல் செய்யப்படும்.இதில் ஏழைகளுக்கு அவர்கள் பங்காக மாடு வாங்க பணம் போட முடியவில்லை என்றால் அரசாங்கம் மானியமாக தரும்.
மேலும் வங்கியின் உதவியுடன் அந்த மாட்டை இன்சுரன்ஸ் செய்து தருவோம். ஒருவேளை மாடு இறந்தால் பணத்திற்கு பாதுகாப்பு. அவ்வளவு தான் சங்கதி. இதில் திராவிட குடிதாங்கியின் பங்கு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
டீக்காக ட்ரஸ் செய்து அழகாக இருந்தால்,அவர்கள் நல்லவர்கள் என்றும் புனிதபிம்ப கட்டுமானம் நம் சமுதாயத்தில் உள்ளது.அவர்கள் செய்யும் அளப்பரியை பார்த்து மயங்கி லோன் கொடுக்கும் பலர் எளிய விவசாயிகளை புறக்கணிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நமக்கு யாரென்றே தெரியாத ஒரு விவசாயி.தனக்கென்று போட்டுக்கெள்ள சட்டைக்கூட இல்லாத விவசாயி.( என்னுடைய தாத்தா இன்னமும் முழுக்கை பனியனைத் தான் சட்டை என்று நினைத்துக் கொண்டுள்ளார்)வங்கிக்கு வந்து இங்கு மாட்டு லோன் தருவாங்களா தம்பி என்று அப்பாவித்தனமாக என்னை கேட்டால் நான் "ச்சீ டர்ட்டி ஃபெல்லோ, போய் அப்ளிகேஷன் ஃபில் பண்ணு என்று கூறியதில்லை. இல்லை பெரிசு என்றும் திருப்பி அனுப்பியதில்லை.
எங்கள் மேனேஜரை நச்சரித்து அதுபோன்ற பல விவசாயிகளுக்கு தேவை யான கையெழுத்தை போட்டு லோன் வாங்கி தந்துள்ளேன்.மாடுதான் அந்த லோனுக்கு செக்யூரிட்டி என்னும்போது கொடுப்பதில் பெரிய பிரச்சினை யும் இல்லை.
மாடு கன்று ஈன்றவுடன் சீம்பாலை எடுத்துக்கொண்டு வந்து இந்தாங்க தம்பி சாப்பிடுங்க என்று சொல்லும்போது அவர்கள் குரலில் இருக்கும் நெகிழ்வும் நன்றியும் யாருக்கும் கண்ணீரை வரவழைக்கும்.
இதில் நாம் இழக்க ஒன்றுமே இல்லை.அந்த கிராமத்தை விட்டு நான் வந்து சில வருடங்கள் ஆனாலும் பம்பாய்க்கும் இங்கே மங்களூருக்கும் இன்றும் போன் பேசி அன்பை தெரிவித்துக்கொண்டிருக்கும் பல எளிய உள்ளங்கள் நான் பெற்ற பெரிய லாபம்.
இது ஒரு கிராமத்தின் கதைதான். இது போன்ற எண்ணற்ற கிராமங்களில் உள்ள எண்ணற்ற ஏழைகளும் திராவிடர்களாகவே இருக்கும்போது நான் திராவிட குடிதாங்கியாக மாறுவதில் எனக்கு வெட்கம் இல்லை.நீங்க என்ன சொல்றீங்க?
Saturday, May 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
நல்ல விளக்கம்!!
நன்றி!!
அவ்வாறு பேசியவருக்காக நான் வருந்துகிறேன்!
இது பொன்ற 'அனானி'கள் எங்கும் இருக்கிறார்கள்!
என்ன செய்வது?
நல்ல விளக்கம் தலைவா ! ஆனா உங்கள முதன்முதலா மாட்டுக்கு லோன் தாரவருன்னு சொன்னது நாந்தான், அதுவும் உரிமையோட....
சொன்ன இடம்http://vittudhusigappu.blogspot.com/2006/05/blog-post_114734369152357964.html
சொன்ன கருத்து:
//வரவனையான் said...
ஏப்பா நீங்க அடங்கவே மாட்டிங்களா ! அவன நிறுத்தச்சொல் நான் நிப்பாட்டுறேன்னு சொல்லி இப்பத்தான் அந்த பேங்குல மாட்டுலோன் தாரவரு (முத்து(தமிழினி) ) பஞ்சாயத்து பன்னி முடிச்சு வச்சிருக்காரு. அதுக்குள்ளையும் நீங்க ஆரம்பிக்ரேங்களே .......
அப்புறோம் அவய்ங்களும் "இருக்குது ரீவீட்டு" ந்னு ஒரு பிலோக் ஆரம்பிக்கபோறாய்ங்க...//
torsdag, maj 11, 2006 3:24:15 PM
"அந்த கிராமத்தை விட்டு நான் வந்து சில வருடங்கள் ஆனாலும் பம்பாய்க்கும் இங்கே மங்களூருக்கும் இன்றும் போன் பேசி அன்பை தெரிவித்துக்கொண்டிருக்கும் பல எளிய உள்ளங்கள் நான் பெற்ற பெரிய லாபம்."//
touched...
be such a dravida-kudithangi for ever and ever....
அந்த காலத்தில் கலைஞர் முதல்வராக பதவியேற்றபின் தனது உடன் பிறப்புகளுக்கு கடன் கொடுக்கச் சொல்லி ஒன்றிய ஆணையர் மூலம் ஏற்பாடு செய்தார் வங்கிமேலாளரும் கடன் வழங்கினார். இந்த நபர்கள் ஒழுங்காக தவணை திருப்பித்தரவில்லை வங்கி மேலாளர் ஆள் அனுப்பினால் பால் எடுக்க ஆள்வரவில்லை பால் விற்க முடியவில்லை என்றனர் அதற்கு ஒரு பால்காரரை வங்கியில் ஏற்பாடு செய்தனர். அந்த பால்காரர் வருவதற்கு முன்னமே இவர்கள் பாலைக் கறந்து விட்டு அவர் வரும்போது கண்றினை அவிழ்த்து விடுவார் அது சென்றால் தாய் ஊட்ட விடாது இப்படி செய்தனர் .
பார்த்தார் மேலாளர் சில ஆண்டுகள் கழித்து வழக்குத் தொடுத்தார் இன்று வரை அதனால் யாருக்கும் அந்த கிராம்த்தில் கடண் வழங்குவதில்லை அந்த வங்கியில்
மாடு கன்று ஈன்றவுடன் சீம்பாலை எடுத்துக்கொண்டு வந்து இந்தாங்க தம்பி சாப்பிடுங்க என்று சொல்லும்போது அவர்கள் குரலில் இருக்கும் நெகிழ்வும் நன்றியும் யாருக்கும் கண்ணீரை வரவழைக்கும்.
உங்களது பணி மெச்சத்தக்கது. நாங்கள் கூட மாடு வைத்துத்தான் பொழைப்பை தள்ளினோம். மாடு கட்டி மேய்க்கிறது என்பது சாதாரண விஷயமே இல்லை. 24 மணி நேரமும் அதுகூடவே இருக்கனும். ஒரு கல்யாணம், காட்சிக்கு கூட போக முடியாது! உங்களை மாதிரி ஒரு நண்பர் முன்னாடியே கிடைத்திருந்தால் நாங்கள் இன்னும் நிறைய மாடு வைத்திருந்திருப்போம்!
வாழ்த்துக்கள் முத்து! தொடரட்டும் உங்கள் பணி.
தன் முதலாளிக்கு எது உகந்ததோ அதைச் செய்வது தான் எந்தத் தொழிலாளிக்கும் (வங்கி என்பதால் ஊழியன்) அழகு. நீங்கள் சொல்வதிலிருந்து பொதுத்துறை வங்கி எதிலோ பணியாற்றுவதாக யூகிக்கிறேன். அதன் அடிப்படையில் அதன் முதலாளியாகிய அரசுக்கு எது உகந்ததோ அதைச் செய்வதுதான் அழகு. அதைத் தான் செய்திருக்கிறீர்கள் எனத்தெரிகிறது. குடிகளுக்கு எது உகந்ததோ அதைச் செய்வது அரசுக்கு அழகு.
100% அரசு மட்டுமே வங்கியின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் குடிகளுக்கு உகந்ததைச் செய்ய யார் அனுமதியும் பெறத்தேவையில்லை; தற்போதைய இரயில்வே நிர்வாகம் போல. கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தன் பங்குகளின் சிறு/பெறு பகுதியை வெளியே விட்ட பிறகு, என்னதான் பெரும்பான்மை பங்குதாரதாக இருந்தாலும், மற்ற பங்குதாருக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை/நலனை குறைக்கும் வகையில் செயல்படுவது இந்த வங்கிகள் தனியார் துறை வங்கிகளுடன் போட்டியிட்டு உலகத்தரத்திற்கு உயர்வதைக் குலைக்கும். சில வருடங்களில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அவங்கியாக வளர்ந்து நிற்கிறதே ICICI! பல ஆண்டுகளாக இருந்த பொதுத்துறை வங்கிகளால் ஏன் முடியவில்லை?
Survival of the fittest என்பது இங்கே செல்லுபடி ஆகுமா? அரசு இந்த வட்டி வீதத்தில் தான் கடன் தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது. அதே சமயத்தில் சந்தையில் நிலவும் வட்டி அளவில் கடன் தருவதில் வங்கிக்கு எந்தத் தயக்கமும் இருக்கலாகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களைப் போல அனைத்து வங்கி அதிகாரியும் இருப்பதில்லை. You guys have loan processes that can drain not only his time but also his energy. His எனபது உழவனுடையதைக் குறிக்கிறது. வங்கியில் 8% க்கு லோன் கிடைகும் என்றால் (அது கிடைக்காததால்) கீழ்த்தட்டுக் குடியானவர்கள் கந்து வட்டி (>2% மாத வட்டி) தான் வாங்குகிறார்கள்.
சரி.. விவசாயக் கடன்களுக்கு இந்த வட்டி தான் என அரசு கட்டாயப் படுத்தினாலும் கூட அதனால் உண்டாகும் வருவாய் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும்.
"குடியானவர்களுக்கு மானியம், இலவசம் என எதுவுமே இருக்ககூடாது. நாம் கட்டும் வரிப்பணம் இவர்களுக்கு ஏன் போய்ச் சேரவேண்டும்?" என்பதான எண்ணங்கள் நிலவாமலுமில்லை. 'அவர்கள் எலிக்கறி தின்னாலும் பரவாயில்லை, இலவச மின்சாரம் தரக்கூடாது' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
We should learn from America எனச் சொல்பவர்களுக்கான ஒரு செய்தியுடன் முடிக்கிறேன். அமெரிக்க அரசு வருடந்தோறும் சுமார் இரண்டு இலட்சத்தும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியத்தைத் தன் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
//
The US spends $50-60 billion annually on agricultural subsidies, 90 per cent of which goes to the foodgrains and oilseeds sectors.
http://www.thehindubusinessline.com/2006/05/03/stories/2006050300621000.htm
//
நமது குடியானவன் அவனது அமெரிக்க சக குடிமகனை விட ஏழைப்பட்டவன்; நவீன தொழில் நுட்பங்கள் இல்லாதவன். அவனை மேம்படுத்த ஏதாவது செய்தாக வேண்டியது அவசியமாகிறது.
நீ பயன்படுதும் சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.125 மானியம் தரப்படுகிறது, அதை வாங்கிக்கொள்ள உனக்கு வெட்கமில்லை! பெட்ரோல் லிட்டர் ஒன்று உனக்குத்தர அரசு 10 ரூபாயை எரிக்கிறது, அது பரவாயில்லை! இந்தியன் ஆயில் கம்பெனி நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டப்படுகிறதே, அது பரவாயில்லை! ஆனால் உழவனுக்கு சலுகைகள் எனும் போது அதைச் சகிக்க உன்னால் முடியவில்லை?
முத்து, எனது பார்வை உமது வார்வையிலிருந்து எந்த அளவில் வேறுபடுகிறது எனத் தெரியவில்லை. வேறுபட்டால் சொல்லுங்கள், விவாதிப்போம்.
-குப்புசாமி செல்லமுத்து
மிகச் சரியான விளக்கம்.
அதே பதிவில் வேறொருவர் அரசுடமையாக்கப் பட்ட வங்கியில் இருந்து கொண்டு வேலையில்லாமல் தமிழ், திராவிடம் போன்றவற்றைப் பேசுவதாகவும் அருகில் இருந்து பார்தது போலக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அனானி நண்பர் தான் என்ன தொழில்/வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டால் அவரின் தகுதியையும் நாங்கள் குறிப்பிடுவோம்.
தனிமனிதத் தாக்குதல் எதற்குச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
எதிர்க்கும் எல்லோருக்கும் சொல்வது என்னவெனில் விரும்பினால்/சேரத் தகுதியிருந்தால் இயக்கத்தில் இருங்கள். இல்லையெனில் வாயை மூடிக் கொண்டு இருங்கள்.
இதை முத்துக்குமரன் அழகாகச் சொன்னார். எங்களை மிதிக்கும் உரிமையை யாருக்கும் தரவில்லை என்று
முத்து வருத்தமாய் இருக்கிறது. கல்வி லோன் பற்றி நீங்களும், ஜோசப் சாரும் வங்கியில் பணி புரிவதால் உங்களைக் கேட்டால் தெரியும் என்ற எண்ணத்தில் உங்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டேன். அதற்கு அனானியாய் ஒருவர் வம்பிழுத்துள்ளார்.
அனானிமஸ் பெயரில் மெயில் இடுவதை ஏன் எல்லாரும் தடை செய்ய கூடாது? அப்படி அனுமதித்தாலும், பிறரை
விமர்சிக்கும் மறுமொழியை தடை செய்யலாமே?
எதிர்க்கும் எல்லோருக்கும் சொல்வது என்னவெனில் விரும்பினால்/சேரத் தகுதியிருந்தால் இயக்கத்தில் இருங்கள். இல்லையெனில் வாயை மூடிக் கொண்டு இருங்கள்.
கடைத்தெருவுக்கு வந்து விட்டால், கல்லடிப்பட்டே ஆகவேண்டும். எனவே விமர்சிக்கும் உரிமையே கூடாது என்பதுபோல் உள்ளது. இது சரியல்ல! உங்கள் கருத்தை நடுத்தெருவில் வைத்து நாக்கைப் புடுங்கும் கேள்விக்கும் நயமான பதிலைச் சொல்லி சாதித்திட வேண்டுமேயொழிய பதிலுக்கு சாடிடக்கூடாது.
//கடைத்தெருவுக்கு வந்து விட்டால், கல்லடிப்பட்டே ஆகவேண்டும். எனவே விமர்சிக்கும் உரிமையே கூடாது என்பதுபோல் உள்ளது. இது சரியல்ல! உங்கள் கருத்தை நடுத்தெருவில் வைத்து நாக்கைப் புடுங்கும் கேள்விக்கும் நயமான பதிலைச் சொல்லி சாதித்திட வேண்டுமேயொழிய பதிலுக்கு சாடிடக்கூடாது. //
கருத்துகளை விமர்சனம் செய்யுங்கள். வரவேற்கிறோம். ஆனால் அந்த இடத்தில் தனிமனிதத் தாக்குதல் நட்ந்துள்ளது. ஒருவர் செய்யும் பணியினை இழிவுபடுத்திக் கூறுவது எந்த விதத்தில் நியாயம். அதனைக் கண்டிக்கவே கடுமையாக எழுத வேண்டியதாகிவிட்டது.
//கடைத்தெருவுக்கு வந்து விட்டால், கல்லடிப்பட்டே ஆகவேண்டும். எனவே விமர்சிக்கும் உரிமையே கூடாது என்பதுபோல் உள்ளது. இது சரியல்ல! உங்கள் கருத்தை நடுத்தெருவில் வைத்து நாக்கைப் புடுங்கும் கேள்விக்கும் நயமான பதிலைச் சொல்லி சாதித்திட வேண்டுமேயொழிய பதிலுக்கு சாடிடக்கூடாது.//
உங்கள் கருத்திற்கு நன்றி சந்திப்பு. நேர்மையான முறையில் விவாதிக்க விரும்பும் மாற்றுச் சிந்தனை உள்ள
நண்பர்களோடு விவாதிப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. தன் கருத்தைச் சுயமாகவும், நேர்மையாகவும் வைக்க இயலாமல் போகிற போக்கில் உமிழ்ந்து கொண்டு போகும் வீணர்களுக்காக நேரத்தை விரயம் செய்ய தயாராக இல்லை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற சொல்வீர்களே அந்த வகையிலான எதிர்வினைதான் இது.
தொடக்ககால ஏற்ற இறக்கங்கள் எல்லா இடத்திலும் உண்டு. நண்பர்கள் யாரும்
அடிப்படை ஜனநாயகத் தன்மையிலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம். அதே நேரத்தில் குதர்க்கவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டியதன் அவசியத்தையும் புரிந்திருக்கிறோம்.
சந்ிப்பு.
உங்களுக்கு இது புரியவில்லையா,
ம்..நடத்துங்கள்
சிவபாலன் நன்றி
எஷ்கே.
நன்றி..அந்த பதிவிலும் எனக்காக பேசியதை பார்த்தேன் நன்றி
வரவணையான்,
நீங்க சொன்னதை நான் முதலிலேயெ பார்த்துவிட்டேன். நான் கூறியது அந்த வாக்கியத்தையும் திராவிட குடிதாங்கியையும் இணைத்து ஜால்ரா கோஷ்டி என்று கூறியதற்காகத்தான்.
//touched...
be such a dravida-kudithangi for ever and ever.... //
thanks dharumi sir
ennar,
அப்படிப்பட்ட மக்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சந்திப்பு,
நீங்க செய்யாத தொழிலே இல்லையா? ம்..கலக்குறீங்க நீங்க..
மகேஸ்,
திராவிடம் என்று பேசினாலே இதெல்லாம் வரும். அதற்குத்தான் இந்த விளக்கம். தனிமனித தாக்குதல் என்றால் என்ன என்ற விளக்கம் பலருக்கு தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது.
உஷா,
விடுங்கள்..இதெல்லாம் சகஜம்..சில நேரம் டென்சன்..சில நேரம் சிரிச்சுட்டு போகவேண்டியதுதான்.
குப்புசாமி,
ஏறக்குறைய உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.இந்த பின்னூட்டத்தை தனிபதிவாக உபயோகப்படுத்திகொள்கிறேன்
முத்து, மாடு லோன் மட்டும் தானா? "கோமாடம்" அமைத்து "கோமாதா பூஜைக்கு" லோன் தர மாட்டீங்களா? :D.
உங்களது பணி, எழை மக்களின் வாழ்வை உயர்த்த பயன்படுகிறது என்பதால் பெருமைப் படுகிறேன். மாடு லோன் வாங்கி, அந்த மாட்டின் வருமானத்தில் குடும்பம் நடத்துகிற ஏழைகள் இந்த நாட்டில் இருக்கும் வரை உங்களை போன்றவர்கள் பணி மிக்க அவசியமானது. கார்பரேட்.நாராயணமூர்த்திகளுக்கு கடன் கொடுப்பதை விட இது மக்களின் முதுகெலும்பை நிமிர வைக்கும் அவசிய முயற்சி!
உங்களின் பின்னூட்டம் சிந்திக்க வேண்டிய விடயம் குப்புசாமி செல்லமுத்து. உழவனின் நிலைமையை நன்றாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்.
முத்து, நீங்கள் இன்னும் நிறைய மாட்டுலோன் வழங்குவீர்களாக:))
அனானிமஸ் பெயரில் மெயில் இடுவதை ஏன் எல்லாரும் தடை செய்ய கூடாது? "//
நானும் இதை வழிமொழிகிறேன் - எப்போதும் போல் !
Post a Comment