நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திராவிட தமிழர்கள் வலைத்தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இன்னும் எந்த பதிவும் அதில் உள்ளிடப்படவில்லை. கீழே உள்ளது அந்த தளத்தின் சுட்டி. http://dravidatamils.blogspot.com/
கட்டுரைகள் அளிக்க விரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். மூன்று இடுகைகள் சேர்ந்தவுடன் இதை தமிழ்மணத்தில் சேர்க்கவும் தேன்கூட்டில் சேர்க்கவும் தரலாம் என்று முடிவு செய்து உள்ளோம்.கவிஞர் மணிகண்டனின் கட்டுரை வந்துவிட்டது என்ற பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிலர் கிண்டல் செய்வார்கள், நக்கலடிப்பார்கள் என்றெல்லாம் நினைக்காமல் அனைத்து இன உணர்வாளர்களும் மொழி உணர்வாளர்களும் இதில் சேர்ந்து இந்த முயற்சியை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
தளத்தைப்பற்றிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
Thursday, May 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
செயல் தலைவர் அவர்களே!
படைப்புகளை யாருக்கு எப்படி அனுப்புவது என்பது குறித்து விவரங்கள் கொடுக்கலாமே?
GREETINGS
அய்யா! ராசா!!
கவிஞர் அது இதுனு சொல்லி பொழப்புல மண்ணள்ளிப் போடாதீங்கய்யா...ஏதோ நானும் 'தொங்கா தொஸுக்கா'னு வண்டி ஓட்டுறேன்....அது புடிக்கலையா அப்பு???? :)
அட்டகாசமான ஆரம்பம்.... அசத்த வாழ்த்துக்கள்!!!
தமிழர் என்றால் அதில் நான் இல்லையா?
என்னப்பா? அநியாயம் இது.
திராவிடப்பிரிவை மற்றவர்கள் பார்க்கட்டும். தமிழர் பிரிவில் எனக்கு பங்கு வேண்டும். இல்லையேல் போராட்டம் நடைபெறும்.
இப்போதைக்கு செயல் தலைவரின் இமெயிலுக்கு படைப்புகள் அனுப்பலாம்.
போக போக பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும்....
படைப்புகள் தலைப்புடன் இருத்தல் அவசியம்..
பெயர் வெளியிடவேண்டாம் என்றால் வெளியிடப்படாது...
யுனிகோட்டில் இருக்கவேண்டும்....
எது திராவிடம்? என்ற ஒரு தலைப்பிலும் ஒரு பதிவு அமைந்தால் என்னைப் போல் உள்ளவர்களுக்கு அடிப்படையை முதலில் புரிந்து கொண்டு பின் விவாத களத்தில் இறங்க ஏது வாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
லக்கிலுக்,
அப்படி எல்லாம் சொல்லிவிட்டு தப்பித்துவிட முடியாது.
ஏதாவது கட்டுரை அனுப்புங்கள்.
சுகுமாரன்,
திராவிட பிரிவில் ரொம்ப ஆக்டிவ்வாக இருப்பவர்கள் தமிழர்கள் என்ற முறையில் உங்கள் பங்களிப்பு இல்லாமல் இங்கு எதுவும் நகராது.
மணி,
எவன் எவனையோ கவிஞர் அது,இது என்கிறோம். உனக்கென்னய்யா..
செல்லகுட்டி, சிங்கக்குட்டி
பொதுசெயலாளர் தருமி அவர்களெ,
நமக்குள் என்ன வாழ்த்தெல்லாம்?
உங்களுக்கும் சாதிப் பிரிவினை பற்றி பேசித் திரிபவர்களுக்கும் என்ன வித்தியாடம். அவர்கள் micro நீங்கள் macro. அவ்வளவுதான்.
ராபின்,
நன்றி.
வினையூக்கி,
கண்டிப்பாக உண்டு.
யாருப்பா இந்த ராபின்ஹுட் ரெண்டு மூணு நாளா சைக்கிள் கேப்புலே ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கிறாரு.... ஆரியரா?
//உங்களுக்கும் சாதிப் பிரிவினை பற்றி பேசித் திரிபவர்களுக்கும் என்ன வித்தியாடம். அவர்கள் micro நீங்கள் macro. அவ்வளவுதான்.
//
சாதிப்பிரிவினைகளை களையவும், சாதி ஒழிப்பிற்குமான ஆயுதம்தான் தமிழ்த் தேசியம். திராவிடம் என்பதை தமிழ் என்பதாக உணர மறுப்பவர்களுக்கு ஒரே பதில்தான். அது உங்கள் உரிமை. வாழ்த்துகள். எங்களுக்கு தர முத்திரை குத்தும் வேலையை விட்டு வேறு எதாவது சிந்திக்க முடிந்தால் சிந்தித்து பேசுங்கள்.
இப்போது எனக்கு ஒன்று மட்டுமே தோன்றுகிறது.
சாதிச் சங்கங்களும், மத அமைப்புகளும் உங்களைப் பார்த்து இணையத்திற்குள் நுழையப் போவது என்னவோ நிச்சயம். இப்போதே சாதியால் மதத்தால் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் நம்மளுக்குள். விரைவில் வன்னியர்களும், பார்ப்பணர்களும், நாடார்களும், தலித்துகளும் தமிழ்மணம் வாயிலாக தங்களின் சங்கக் கருத்துகளைச் சொல்லப் போகிறார்கள். பின்னர் அரசியல் கட்சிகளும் தங்களின் கொள்கை பரப்புச் செயலாளர்களை ப்ளாக் ஆரம்பித்து கட்சியினை வளர்ப்பார்கள். நீங்கள் ஒரு தவறான முன்னுதாரனமாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.
அமைதியாக, சுவாரசியமாக ப்ளாக்குகளைப் படித்த அந்த நாட்கள் மீண்டும் திரும்பிவராது என்றே தோன்றுகிறது.
நான் ஆரியன் இல்லை அய்யா. ஒரு சாதாரண மனிதன்.
இப்படியெல்லாம் வெளிப்படையா பேசக்கூடாது. வெளியில
politically correctஆ பேசிட்டு undergroundல
ஆவணி அவிட்டத்தப் பத்தி பேசலாம்.உங்களுக்கு அந்த திறமையெல்லாம்
இல்லன்னு நெனைக்கிறேன்.
>> விரைவில் வன்னியர்களும், பார்ப்பணர்களும், நாடார்களும், தலித்துகளும் தமிழ்மணம் வாயிலாக தங்களின் சங்கக் கருத்துகளைச் சொல்லப் போகிறார்கள். >>
பார்ப்பனர்கள் ஏற்கெனவே சொல்ல ஆரம்பித்தாயிற்று!
'வன்னியர்' என்று முத்திரை குத்தப்பட்டவர் இப்போது தமிழர்களுக்கான இந்த இயக்கத்தின் (தமிழ்மண தளத்தில்) - தலைவராக இப்போது செயல்படுகிறார்.
யார் கிணற்றுத் தவளைகள் - யார் வஞ்சக ஜெண்டில்மேன்கள் - யார் சமூக நீதி மற்றும் மொழிவழி தேசிய இன உணர்வாளர்கள் என்பதெல்லாம் இப்போது 'கருத்துக்' குருடர்களைத் தவிர மற்றவர்களுக்கு மிகச் சரியாகவே புரியும்.
சில 'மார்க்சிஸ்ட்டு' சிந்தனையாளர்களுக்கே இந்த அடிப்படை விபரம் இல்லாதபோது நம்முடைய 'பரம்பரைப் பகைவர்'களுக்கு எப்படி விவரம் புரியப்போகிறது?!
காத்திரமான எதிர்வினை ஆற்றத் தகுந்த 'ஒரு' பதிவோ - பின்னூட்டமோ கூட - தி்.ரா.மு.மு இயக்கம் பற்றி வைக்கப்படவில்லை இதுவரை!
கொ.ப.செ நியோ அவர்களே,
இதை எல்லாம் எதிர்ப்பார்த்தும் தெரிந்தும் தானே இதை ஆரம்பித்தோம்.
நாம் நம் வழியில் செல்வோம்.உருப்படியாக எதுவும் எழுதாமல் மட்டையடி ஜல்லி அடிக்கும் ஆட்களை நாம் புறக்கணிப்போம்.
ஒரு செமி போட்ட பின்னூட்டம் நீக்கப்பட்டுள்ளது.
//திராவிடத்தை விட்டு விலகுகிறாரா கலைஞர்?//
தப்பு சார். "திராவிடத்தை விட்டு விலகுவிட்டார் கலைஞர்"
சீனு,
எப்படி என்று ஒரு கட்டுரை போட்டீர்கள் என்றால் நாங்களும் தெரிந்துகொள்வோம்.
(உங்களுக்கு திராவிட கருத்தாக்கத்தில் நம்பிக்கை உள்ளதா?)
இயக்கம் நல்ல விசயத்திற்காக உருவாக்கப்பட்டது.
நிச்சயம் வெல்லும்.
Post a Comment