Sunday, May 07, 2006

Schumi is back with a bang

ஆம்.நண்பர்களே.கிழட்டு சிங்கம் கர்ஜித்தது. இன்று மாலை ஜெர்மனியில் நடந்து ஐரோப்பியன் கிராண்ட் ஃப்ரி எனப்படும் கார்பந்தயத்தில் ஜெர்மனியின் மைக்கேல் சுமேக்கர் பட்டம் வென்றார்.

கடந்த வாரத்திலும் அவர் பட்டம் வென்றது ஃபெராரி அணி மீண்டும் கன்ஸ்ட்ரக்டர் பட்டமும் டிரைவர் பட்டமும் வெல்ல தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

நேற்றைய போட்டியில் போல் பொசிஷன் எடுக்கமுடியாத சுமேக்கர் இரண்டாவது ஆகத்தான் ஆட்டத்தை தொடங்கினார்.நடப்பு சாம்பியன் அலான்சோவிற்கு பின்னால் ஆட்டத்தை துவங்கிய சுமேக்கர் இரண்டாவது பிட் ஸ்டாப்பின் போது வெறும் ஆறு வினாடிகள் மட்டுமே எடுத்து அலான்சோவை முந்தினார்.

தலைவர் போல் பொசிசன் போட்டி முடிந்தவுடன் டுமாரோ வில் பி இன்ட்ரெஸ்டிங் என்றார்.அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது.
போட்டியில் அலான்சொ இரண்டாவது இடமும், ஃபெராரியின் மற்றொரு டிரைவர் பெலிப் மாசா மூன்றாவதாகவும் வந்தனர்.இவருக்கு இது வாழ்க்கையி்ல முதல் போடியம் ஃபினிஷ் எனப்படும் வெறறி.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மெக்லாரன் அணி இன்னும் தங்கள் இன்சினின் நம்பகத்தன்மையை (Reliability) சரி செய்யமுடியவில்லை.ஆனால் கடைசி பத்து சுற்றுக்கள் பரபரப்பாக இருந்தன.சுமேக்கரை அலான்சோ துரத்த, அலான்சோவை மாசா துரத்த, மாசாவை ராய்கோனன் துரத்த ஒரே குஜால்தான்

Formula one at its best என்று சொன்னால் மிகையாகாது.

எனக்கு ஏன் என்று தெரியாமலே சுமேக்கரை மிகவும் பிடிக்கிறது.அவர் சிரிப்பா? வென்றவுடன் அவர் கொண்டாடும் அந்த ஸ்டைலா ( இரண்டு கைகளையும் தூக்குவதும்,போடியத்தில் ஏறியவுடன் ஒரு குதி குதிப்பார் பாருங்கள், தேசியப்பண் பாடிமுடியும்வரை அவர் சிரிப்பும் துள்ளலும்).எதுவோ ஆனால் அவர் ஒரு மிகப்பெரிய சாதனையாளர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

முப்பத்தி ஏழு வயதான சுமேக்கரை கடந்த ஆண்டு எப்போது ரிடையர் ஆகிறீர்கள் என்று கேட்டார்களாம்.Retirement? what Retirement? என்றாராம் இவர்.சுமேக்கர் ஒரு ஐகான்.அவர் இன்னும் சில வருடங்கள் தாராளமாக இருக்கலாம்.

ஃபார்முலா ஒன் மீண்டும் சூடுபிடிக்கிறது.அதற்கு காரணம் Schumi is back. Yes he is back with a bang.

சந்தி்ல டென்னிஸ் பற்றியும் எழுதிவிடுகிறேன்.(நண்பர் பரஞ்சோதிக் காகவாவது)

புல்தரை மைதானங்கள் மற்றும் ஹார்ட்கோர்ட் எனப்படும் செயற்கை மைதானங்கள் ஆகியவற்றில் ரோஜர் பெடரரும் களிமண்தரையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரபேல் நடலும் ஆள்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால் நடல் என்பவர் புல்தரை போட்டிகளில் கலந்துகொள்வதே இல்லை. களிமண்தரையே போதும் என்கிறார்.ஆனால் ஃபெடரர் கவலைப்படுவதில்லை. முயற்சி செய்கிறார்.கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ஃபெடரர் எவ்வளவோ முயற்சி செய்தும் கடினமாக போராடியும் நடலை வெல்ல முடியவில்லை.(களிமண் தரை மைதானம்தான்)

வரும் பிரெஞ்சு ஓபன் நடலுக்குத்தான் என்பதுதான் இப்போதைய நிலை. பார்ப்போம்.ஆனால் புதுமுகங்கள் பிரென்சு ஓபனில் நிறைய ஜெயிப்பதுண்டு. பார்ப்போம்.பெண்களில் கிம் கிளிஸ்டர்ஸ் என் பெட். ரஷ்யா அழகி மரியா சரபோவா வையும் குறைத்து மதிபபிடமுடியாது.பார்ப்போம்.

சுமேக்கர்,ஸ்டீவ் வாக்,மைக்கேல்ஜோர்டான் ஆகியவர்கள் எப்போதும் என் ஆல்டைம் தி கிரேட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.

14 comments:

Pot"tea" kadai said...

தமிழினி,
நீங்கள் முந்திக் கொண்டீர்கள்..(னற...னற...)
//ஆம்.நண்பர்களே.கிழட்டு சிங்கம் கர்ஜித்தது//
தலையை கிழட்டு சிங்கம் என விளித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்...:-(
தன்னிகரில்லாத் தலைக்கு வாழ்த்துக்கள்!

பரணீ said...

//இரண்டாவது பிட் ஸ்டாப்பின் போது வெறும் ஆறு வினாடிகள் மட்டுமே எடுத்து அலான்சோவை முந்தினார்//
அதுக்கு முன்னாடி ஷுமியோட series of quick laps அதுதான் திருப்புமுனை & Ross Brawn அவருக்கும் ஷுமிக்கும் அப்படி ஒரு பொருத்தமும் understanding -ம், நல்ல ஜோடி.

முத்துகுமரன் said...

இதென்ன இலவச இணைப்பு பதிவா:-))))

Karthik Jayanth said...

////ஆம்.நண்பர்களே.கிழட்டு சிங்கம் கர்ஜித்தது//

இதை கண்டிக்கிறேன்..

தன்னிகரில்லாத் தலைக்கு வாழ்த்துக்கள்

பரஞ்சோதி said...

மிக்க நன்றி முத்து,

தலைவரின் வெற்றியானது உண்மையில் அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. இனிமேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துகள். அலான்சோவும் சாதாரணமானவர் இல்லை :)

டென்னிஸில் நடல் என்னமோ இன்னொரு லெண்டிலோ என்று நினைக்கத் தோணுது, ஆனாலும் அவரது ஆக்ரோஷமான ஆட்டம் பிடித்தே இருக்குது, அதே நேரம் பெடரரின் விடாமுயற்சி மிகவும் பாரட்டத்தக்கது.

பரஞ்சோதி said...

யோய் முத்துகுமரன், உங்களுக்கு என்னய்யா இத்தனை சிரிப்பு. உங்களுக்கு தீனி போட்ட மாதிரி எங்களுக்கு போட்டிருக்கிறார், அவ்வளவு தான் :)

பட்டணத்து ராசா said...

நினைச்சேன், நேற்று ரேஸ் பாக்கும் போது இப்படி ஒரு பதிவ, கீமி ராஜா வண்டிய அடிச்சு ஒட்டுப்பா நானும் ஒரு பதிவு போடனும் :-)

பட்டணத்து ராசா said...

முத்து, போனவருட ரேஸ்ல சுமீய வெப்பர் முட்டி தூக்கனப்ப சுமீ வெப்பர் பார்த்து வந்து முட்டுன்னு அவேசப்ட்டத பார்திங்கள, நேற்றுக்கூட புளு ஃப்ளக் ஆட்டியும் வழிவிடாத டைரவர அந்த வேகத்திலையும் ரீவியு மீரர்ல அர்ச்சனை.

முத்து(தமிழினி) said...

பொட்டீக்கடை,

கிழட்டு சிங்கம் என்ற வார்த்தையை வாபஸ் வாங்குகிறேன்.

தன்னிகரில்லாத் தலை வாழ்க

பரணீ,

நீங்கள் கூறியது சரியே...ராஸ் பிரான்னும் சுமேக்கரும் அடிக்கடி எதிர்அணிகளுக்கு ஆப்பு வைப்பது அருமை...

முத்து(தமிழினி) said...

கார்த்திக்,

தன்னிகரில்லா தலைக்கு இத்தனை சப்போர்ட்டா..நன்றி..


முத்துகுமரன்,

இலவச இணைப்புதான் ஹி.ஹி:))

முத்து(தமிழினி) said...

பரஞ்சோதி,

நடலை லெண்டிலுடன் கம்பேர் செய்யமுடியாது. லெண்டில் ஹார்ட் கோர்ட் மற்றும் இன்டோர் கோர்ட்டுகளிலும் கலக்குவார்...

நடல் களிமண்தரை மட்டும்தான் போல...

பார்ப்போம்...

முத்து(தமிழினி) said...

பட்டணத்து ராசா,

சுமேக்கரும் சுரண்டி பார்ப்பவர்களை கடுமையாக தாக்குவார் போல :)

(உள்குத்து புத்தகத்தை திருப்பி அனுப்பிய மாயவரத்தானுக்கு நன்றி)

நாகை சிவா said...

//சுமேக்கர்,ஸ்டீவ் வாக்,மைக்கேல்ஜோர்டான் ஆகியவர்கள் எப்போதும் என் ஆல்டைம் தி கிரேட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.//
நமக்கு சுமேக்கர் இருக்கும் இடத்தில் கபில். எப் 1 பார்ப்பதுடன் சரி, யாரு ஜெயித்தாலும் விருவிருப்பா இருந்தா சரி. தாங்கள் எந்த விளையாட்டில் புலி. மாடு பிடிக்கிற கதையா இருக்க கூடாது...சரியா
அன்புடன்
நாகை சிவா

Anonymous said...

arasiyal kamedy
sinima comedy
makkal entha comediku votu potarkalo
andha comediku avarkaley comedian aavargal


http://www.eci.gov.in/TAMILMay2006/index_st.htm?

தமிழ்வெளியை பார்த்தீங்களா?