Sunday, May 07, 2006

நடந்தது என்ன? - ஒரு விளக்கம்

சில வாரங்களுக்கு முன் மதி கந்தசாமி என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு மே ஒன்றிலிருந்து துவங்கும் வாரத்திற்கு தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கமுடியுமா என்று கேட்டார். மறுபேச்சில்லாமல் நானும் சரியென்று ஒத்துககொண்டேன். ஏற்கனவே வாரத்திற்கு இரண்டு மூன்று என்று காணாததை கண்டவன் போல் நான் பதிவு போட்டு திரிவது தமிழ்மணம் நண்பர்கள் அறிந்ததே.

ஆனாலும் தினம் ஒரு பதிவு கேட்கப்பட்டதால் பதிவுகள் தயார் செய்ய ஆரம்பித்தேன். தயார் செய்ய செய்ய பதிவுகள் நிறைய தயார் ஆக ஆரம்பித்தன. ஆகவே நட்சத்திர வாரத்திற்கு முன்பிருந்தே பதிவுகளை ரீலிஸ் செய்ய ஆரம்பித்தேன்.இந்த வாரத்திலும் நிறைய பதிவு போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.சராசரியாக தினமும் இரண்டு.பதிவுகள் போட்டிருக்கிறேன்.இந்த வாரம் மட்டும் இதுவரை பத்து ஆயிரம் ஹிட்ஸ்.மிகவும் நன்றி நண்பர்களே.


நான் எல்லோருக்கும் பின்னூட்டம் தொடர்ந்து போடுவதில்லை. நேரம் இருப்பதை பொறுத்தும், படிப்பதை பொறுத்தும் , புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் பின்னூட்டம் இடுவது என் பாணி.


பின்னூட்டத்தைவிட முக்கியமாக நிறைய பேர் என் பதிவுகளை படிக்கவேண்டும் என்று நான் நினைப்பேன். பெரிதாக அரிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதாக எனக்குள் ஒரு அல்ப எண்ணம் இருக்கிறது. தமிழ் மணத்திற்கு வந்த புதிதில் கவுண்ட்டரை அடிக்கடி பார்ப்பேன்.அடடே இன்னைக்கு ஐம்பது பேருக்கு நம்முடைய கருத்து ரீச் ஆயிட்டுதே என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டு போவேன்.


நான் அறிமுகபதிவில் போட்ட எல்லா தலைப்புகளிலும் பதிவு போட்டுவிட்டேன். எல்லா பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மட்டுறுத்தல் செய்யவேண்டிய தேவை எதுவும் எனக்கு வரவில்லை.

********************

போலி டோண்டு பிரச்சினைப்பற்றி நான் எழுதிய பதிவில் ஆத்திரம் கண்ணை மறைக்க ஒரு சகவலைப் பதிவரை விமர்சித்து எழுதியிருந்தேன்.நான் எழுதிய விஷயத்தில் எனக்கு வருத்தம் இல்லை என்றாலும் பிரச்சினை வேண்டாம் என்ற காரணத்தால் அதை திருத்தியுள்ளேன்.


போலி டோண்டு பிரச்சினையை இல்லாமல் போக செய்ய இந்த வாரத்தில் என்னாலான நடவடிக்கையை எடுத்தேன். இது வெற்றி பெறுமா என்று என்னால் சொல்லமுடியவில்லை.பார்ப்போம்.ஆனால் இதைப்பற்றி வலைப்பதிவில் விவாதிப்பதையும் எழுதுவதையும் தவிர்ப்பது இந்த பிரச்சினையை பெருமளவு குறைக்கும். இது என் வேண்டுகோள்.

**********************

அறிமுகப்பதிவில் இருந்து நண்பர் சிவபாலன் நான் ரசித்து எழுதிய வாக்கியததை எடுத்து எழுதி என் வயிற்றில் பால் வார்த்தார்.அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த கருத்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்று நான் மிகவும் விரும்பிய கருத்து.இதுபோல் அனைத்து பதிவுகளிலும் சில விஷயங்கள் எழுதியுள்ளேன். 150 க்கும் மேற்பட்ட பின்னூட்டம் பெற்று எனக்கு ஊக்கமூட்டிய பதிவு இது.


தருமியை நான் சந்தித்த பதிவில் தருமியின் கோழிக்கறி குருமாவை நான் பாராட்டப் போக கறி சமைத்து கூரியரில் அனுப்பச்சொல்லி அவருக்கு ஏகப்பட்ட ஆர்டர் என்று செல்லமாய் கோபித்துக்கொண்டார்.


அடுத்ததாக நான் போட்ட பதிவு கம்யூனிஸ்ட்டுகளை பற்றி. எனக்கு இதில் ஆழமான தேர்ச்சி இல்லை என்றாலும் ஓரளவு தெளிவு உண்டு. இதில் ஆர்வமாக பங்கு கொண்டு எழுதிய சந்திப்பு, புதுவை சுகுமாரன், சங்கர் நாராயணன், மா.சிவக்குமார் செல்வன் ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.இவர்கள் அனைவரும் தத்துவத்தில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர்கள்.இதை வைத்து சங்கரும், சுகுமாரனும், பட்டணத்து ராசாவும் தனிப்பதிவு போட்டார்கள்.தீ பரவட்டும்.


அடுத்தது நான் எதிர்பாராதது. நான் எழுதியதும் ஒரு கவிதை என்று அதை பாராட்டியதும் இல்லாமல் அதை பிரித்து மேய்ந்து கருத்து சொன்ன இளவஞ்சி, பினாத்தலார்,சங்கத்தலைவர் ஆசிப் மீரான், உஷா ஆகியோருக்கு இங்கு ஸ்பெஷல் நன்றிகள்.இதற்கும் தனிபதிவுகள் ஆசிப், பினாத்தல்,பட்டணத்து ராசா ஆகியோர் இட்டிருந்தனர். முத்துவின் நாய் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது என்று உஷா பொறாமைப் பட்டார்.ஜெர்மன் முத்துவும் நாய்களைப்பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.


அடுத்து காதல் என்று ஒரு கதை.சிலர் இதை அனுபவம் என்றார்கள். கல்யாணம் ஆன ஆட்களுக்கு இது அவர்கள் வீட்டிலும் அடிக்கடி நடக்கும் கதை என்பதால் நமுட்டு சிரிப்போடு நழுவினர். சின்ன பசங்களுக்கு ஒண்ணுமே புரியலை.சில பிஞ்சிலே பழுத்த ஆட்களுக்கு புரிந்ததாக நமுட்டு சிரிப்புடன் கூறினார்கள்.


அடுத்ததாக லேசர் சாப்ஃட் என்ற கம்பெனியின் முதலாளிப்பற்றி எழுதினேன். நல்ல உள்ளங்களை எழுதுவதில் நான் இனம்,மத பாகுபாடுகளை பார்ப்பதில்லை. தமிழ்ப்பற்று இருப்பதாலேயே நான் மற்றவர்களை வெறுக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த பதிவை எழுத எனக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருந்த என் அருமை நண்பர் வினையூக்கி செல்வக்குமாருக்கு நன்றி.


சாயிபாபா பற்றி எழுதிய பதிவு சாதனை படைத்தது.(என்னளவில்).அதில் வெறும் தாக்குதல் மட்டும் இல்லாமல் இவர்களின் சமூக சேவை பாராட்டத்தக்கதா என்று கேள்வியை ஆதாரங்களுடன் வைத்திருந்தேன். அதைப்பற்றி பெரிதாக விமர்சனம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் வலைப்பதிவாளர்களில் பெருவாரியானவர் இதுபோன்ற போலி சாமியார்களை மதிப்பதில்லை என்பது அறிந்து மகிழ்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை விமர்சித்து எழுதிய பதிவையும் நான் என்னளவில் நியாயமாகவே எழுதினேன்.எந்த மட்டுறுத்தலும் இல்லை. ஏற்கனவே இஸ்லாம் பற்றியும் எழுதியுள்ளேன். ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தனிப்பதிவு போட்டு நான் இதுவரை இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்பதுதான்.ஆயினும் அங்காங்கே பொதுவாக நான் மதங்களை நிராகரிப்பது, நாத்திகம் பேசியதற்காகவே என்னை பலபேர் சுரண்டிப் பார்த்தார்கள்.அவரை திட்டமுடியுமா? இவரை திட்ட முடியுமா என்பதுபோல் கேள்விகள். சவால்கள். அதற்காக நான் இவறறை எழுதவில்லை என்றாலும் இனிமேல் இந்த வெற்று சவடால்கள் வராது என்று நம்புவோம்.


நான் முரட்டுக்காளையை அடக்கியது பற்றி எழுதிய பதிவுக்கு ஏனோ பெரிய வரவேற்பு இல்லை. அது ஒரு காமெடிதான் என்றாலும் நான் உண்மை யிலேயே காளையை அடக்காதது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.ஹி.ஹி.

கனவு காணும் வாழ்க்கை என்று நான் போட்ட பதிவு இதே போல் கனவுகள் பலருக்கும் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது.எனக்கு பிடித்த எழுத்தாளர் சு.ராவைப்பற்றி எழுதியுள்ளேன்.

*********************

கமலைப்பற்றி எழுதுவது என் எதிர்கால பிளான். எனக்கு பிடித்த வலைப்பதிவு களை பற்றி நான் தயார் செய்திருந்த பதிவு, இந்து மத தத்துவ சிநதனைகள் ஆகியவற்றைப்பற்றி நான் தயார் செய்திருந்த பதிவு, ஒரு நகைச்சுவை பதிவு வங்கிகளை பற்றி பதிவு, விளையாட்டு பற்றிய பதிவு ஆகியவை பதிப்பிக்க முடியவில்லை.

இந்த நட்சத்திர வாரத்தில் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி உதயமாகி உள்ளது என்பதையும் உங்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிற்காலத்தில் துவங்கும் கட்சிக்கும் இதே பெயர்தான்.
இந்த கட்சியின் கொள்கைகள் பற்றி விளக்கமாக தொடர் பதிவு போடும் எண்ணம் உள்ளது.

*********************
தேர்தல் சமயம் என்றாலும் தமிழக தேர்தல் பற்றி என் பதிவில் எதுவும் எழுதவில்லை. நான் ஏற்கனவே என் சார்பு நிலையை வெளிகாட்டி (இதனாலேயெ சிலரிடம் வாங்கிகட்டி) விட்டதால் இதுப்பற்றி எழுத எதுவும் இல்லை.

தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் இதுப்பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதும் எண்ணம் உண்டு.யார் ஜெயித்தாலும் சரி.ஏதோ நம் கையில்தான் எல்லாம் உள்ளது என்ற பாணியில் சவடால் விடுவது நியாயமாக இருக்காது.
**********************

நடுவில் பல அருமையான பதிவுகளை பார்த்தும் வேலை மும்முரத்தால் அதைப்பற்றி விரிவாக எழுதமுடியவில்லை. பிறகு எழுதுகிறேன்.

இதில் குறிப்பிட்ட , குறிப்பிடப்படாத அனைத்து நண்பர்கள் என் பதிவுகளை தொடர்ந்து படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்கள் , இந்த வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
***********************

83 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஆகக் கூடி முடிச்சிட்டீங்களா? இன்னிக்கு ரெண்டு பதிவு போடுவீங்கன்னு பார்த்தேனே..

ஜோ / Joe said...

Muthu,
I couldn't follow your posts fully this week since I am out of singapore and unable to access net like before.I will go through it one more time later.

Best wishes!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ.. முஞ்சு போச்சா..
ஒன்ஸ்மோர் எல்லாம் கிடையாதா...
இதை எதிர்த்து தனிப்பதிவே போட வேண்டி இருக்கும்.
பாலா
கொ.ப.செ
திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி,
{நீங்க என்ன நியமிக்கிறது.. நானே எடுத்துகிட்டேன்.}
(ஆனாலும் முத்து.. நான் வேறு மாதிரி எதிர் பார்த்தேன். அதில் பாதி தூரம் தான் வந்து இருக்கீங்க.. )
:(

Dharumi said...

வழக்கமா சொல்ற cliche - கொன்னுட்டீங்க, சூப்பர் ஸ்டார்..etc...etc...

ஆனால் உண்மையிலேயெ நட்சத்திர வாரத்துக்காக நன்கு உழைத்துள்ளீர்கள்; உழைப்பின் பலன் நன்கு தெரிகிறது. மிக நல்ல வாரம்..மிக நல்ல நட்சத்திரம்..இன்று போல் என்றும் ஒளிர்க.

நன்மனம் said...

நல்ல விருவிருப்பான வாரம்.

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

முத்து,

உங்க நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. ஆனாலும் என்னைப் பொறுத்த அளவில்
பாயாசம் வேணாம் சக்கரைப் பொங்கல்( எல்லாம் தீனியா இருக்கேன்னு பார்க்காதீங்க.
தெரிஞ்சதைத்தானே சொல்ல முடியும்?) ஒரு சிறுகல் பல்லுலே பட்டுடுச்சுப்பா.

அதான் சாய்பாபா பதிவு. சாமியார்கள் மேல் நம்மில் பலருக்கு நம்பிக்கை இல்லைன்றது
ஒரு முக்கிய விஷயம்தான்.

ஆனா 'அவரை' கொஞ்சம் மரியாதையாச் சொல்லி இருக்கலாம். வயசு எம்பது ஆச்சேப்பா. வயசுக்குன்னு
ஒரு மரியாதை இருக்குல்லையா?வேண்டாதவங்கன்னாலும் ஒரு மரியாதை குடுக்கணும்ப்பா. அதுதான்
நல்லது. முக்கியமாப் பொதுவிலே சொல்றப்ப அப்படி இருக்கறதுதான் நல்லது.

நானும் அவரை நம்பமாட்டேன்.அது தனிப்பட்ட ஒரு கசப்பு அனுபவம். அதுக்காக 'ஏக வசனம்' சொல்ல முடியாது.

எல்லாம் இளரத்தமா இருந்துட்டீங்க, அதான் போல. அதுக்கு ரெட்டை செஞ்சுரி அடிச்சுட்டீங்க, பாருங்களேன்.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்.
வாழ்க! வளர்க!
தமிழ்மணத்தில் உன் சேவை தொடர்க..
அன்புடன்,
நாகை சிவா

மணியன் said...

முத்து, முத்தான பதிவிற்கு முத்தாய்ப்பு வைத்து விட்டீர்களா ? உங்கள் பதிவிடும் வேகத்திற்கு படிக்க முடியவில்லை. மெதுவாக படித்து வருகிறேன். தேர்தல் நேரத்தில் தேர்தலை சாராது நாளும் இரு இடுகைகள் இடுவது உங்களுக்கே சாத்தியம். உங்கள் தெளிவான கருத்துக்களும் மாற்றுக் கருத்தை மதிக்கத் தெரிந்த மனமும் நீங்கள் எட்ட நினைக்கும் உயரங்களை அடைய உதவும். நீங்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு அரசியல் நாகரீகம் வளப்படும் என நம்புகிறேன்.

பட்டணத்து ராசா said...

கலக்கிட்ட சந்துரு .. சரி சரி அப்படியே அந்த பின்னுட்ட அரசியல் வகுப்பு தொடர்ந்திங்கன்னா நல்லாயிருக்கும். ஏதோ நானும் உங்களுக்கு எதிரா ஒரு கழகத்தை நிறுவி பொழப்ப பாக்க வசதியா இருக்கும் :-)

Mookku Sundar said...

முத்து,

உங்களுடைய சிந்தனைகள் என்னைக் கவருபவை. ஒரே எண்ணவோட்டம் கொண்டவர் என்பதால் உங்கள் பதிவு நான் விரும்பும் பதிவுகளில் ஒன்று.

சலம்பல் கொஞ்ச்...ச்..சம் அதிகம். குறைத்தால் உங்கள் சிந்தனையின் தீவிரம் நீர்த்துப் போகாமல் இருக்கும். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுங்கள். பின்னூட்ட மயக்கத்திற்கு எழுத ஆரம்பித்தால், நல்லது/கெட்டதற்கு வித்தியாசம் தெரியாது.

நீங்கள் என் நண்பர் என்ற அக்கறையில் சொல்கிறேன். நீங்கள் நன்றாக வளரவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்

தி.ரா

செல்வன் said...

You had a great star week muthu.Keep this tempo up after this week too.Really enjoyed all your articles.

anbudan
selvan

வினையூக்கி said...

ஹே!!!!!!! நம்ம பேரெல்லாம் நன்றி உரையிலே இருக்கு...சூப்பர் பதிவுகள், சூப்பர் பின்னூட்டங்கள்... தொடரட்டும் உங்கள் "தோனி" ஆட்டம்....

முத்து(தமிழினி) said...

சில்வியா,

நண்பர்களை கிண்டல் செய்வது போல் இருக்கும் உங்கள் பின்னூட்டத்தை நீக்கி கொள்ளட்டுமா?


மூக்கு,

நன்றி...சிறிது தமாசும் தேவைப்படுகிறது..ஒரேயடியாக சீரியஸ் எனக்கும் பிடிக்காது...

i will reduce the quantity..that is sure

tbr.joseph said...

பின்னூட்ட மயக்கத்திற்கு எழுத ஆரம்பித்தால், நல்லது/கெட்டதற்கு வித்தியாசம் தெரியாது//

முத்து இதுதான் என்னுடைய கருத்தும்..

கோபித்துக்கொள்ளாதீர்கள்.

துளசி எழுதிய கருத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு..

ஒரு துவக்க எழுத்தாளனுக்கு கட்டுப்பாடு மிக மிக அவசியம். தூற்றுவதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்.

உங்களுடைய திறமையை வீணடிக்கிறீர்களோ என்று சில நேரம் எனக்கு தோன்றியதுண்டு..

நல்ல எண்ணத்துடன் எழுதிய என்னுடைய கருத்துக்களை அதே உணர்வுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,


வருத்தப்படுகிறென்......

பின்னூட்டங்களைப்பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கு எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு பின்னூட்டம் வரவில்லை என்று வருத்தப்பட்டதில்லை. படவும் போவதில்லை.தெளிவாக நான் கூறி இருக்கிறேன் இதைப்பற்றி.

விளையாட்டிற்கு பின்னூட்டங்கள் எழுதினோம். என் பதிவில் ஏதாவது தவறு இருந்தால் விவாதபூர்வமாக எழுதவும்.பதில் தர முயற்சிக்கிறென்.

தூற்றுவதைப்பற்றி நீங்கள் எழுதிய கருத்திற்காக தான் நான் வருத்தப் படுகிறேன். தெளிவாக சொல்லுங்கள்.யாரை எதற்காக தவறாக தூற்றி உள்ளென் என்று.

(உங்களை சாக்கு வைத்து யாராவது வந்து எழுதினாலும் பதில் தர தயாராக உள்ளென்)

Anonymous said...

அது தானே பார்த்தேன்????
கடைசி பதிவுக்கு பின்னூட்டம் குறையுதேன்னு...
சோசப் ஐயா தொடங்கி வச்சுட்டார் போல?

முத்து(தமிழினி) said...

mooku,


//சலம்பல் கொஞ்ச்...ச்..சம் அதிகம். குறைத்தால் உங்கள் சிந்தனையின் தீவிரம் நீர்த்துப் போகாமல் இருக்கும். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுங்கள். பின்னூட்ட மயக்கத்திற்கு எழுத ஆரம்பித்தால், நல்லது/கெட்டதற்கு வித்தியாசம் தெரியாது//பத்த வெச்சிட்டயெ பரட்டை..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//பத்த வெச்சிட்டயெ பரட்டை..//
ரிப்பீட்டே... ரிப்பீட்டே... ரிப்பீட்டே...

Anonymous said...

அன்பின் முத்து

நல்ல காலத்துல டெண்டுல்கர் ஆடுன மாதிரி அசத்திப்புட்டீக போங்க!!

நவீன எளக்கியம் பத்தி ஏதாவது எழுதுவீங்கன்னு பார்த்தேன். கவுஜைக்குப் பயந்து விட்டுட்டீங்களோ? :-)

வாழ்த்துகள்!!

சாத்தான்குளத்தான்

இளவஞ்சி said...

முத்து!

நெஜமாவே அடிபொளி! :)

பத்துவருசத்துக்கு முன்னாடி எங்க மக்கா எல்லாங்கூடி எங்கயாவது பட்டரைய போட்டு விடிய விடிய பொங்க போடுவோம்! பேசறதுல்ல அர்த்தம் இருக்குதோ இல்லையோ, செய்யற வாதத்துல சார்பு இருக்கோ இல்லையோ, அடிச்சிக்கறதுல நேர்மை இருக்கோ இல்லையோ, அப்பறம் கூடிக்குழாவறதுல சூடு சொரனை இருக்கோ இல்லையோ, அடுத்தவனை ஓட்டறதுல தயவுதாட்சண்யம் இருக்குதோ இல்லையோ... எங்க பொங்கல் மட்டும் விடிய விடிய ஓடும்!!!

அப்படி இருந்துச்சுங்க இந்த வாரம்!

இப்போ நாங்க எவ்வளவு மெனக்கெட்டாலும் அந்த காலம் வரப்போறதில்லை! அப்படியானதொரு சூழ்நிலையை இங்கே ஒருவாரம் கொடுத்ததற்கு நன்றி!

நண்பனா இன்னொன்னும் சொல்லனும். ஆனா, நீங்க இங்க ஆட்டத்தை ஆரம்பிக்கறப்ப நான் சத்தியமா இதை எதிர்ப்பார்க்கலை! :) பெரிய பெரிய விசயங்களை எழுதும்போது ஆழமாக இல்லாம உணர்ச்சிக் குவியலாதான் இருந்தது! "அடடா.. ஒரு புதுவிசயம் தெரிஞ்சுக்கிட்டமே! இந்த மேட்டரை இப்படியும் யோசிக்கலாமா?" என்பதற்கு பதிலா "அடடா.. முத்து இதற்கெல்லாம் இப்படி React செய்வாரா?" என்பதுதான் மனதில் முதலில் தோன்றியது!

வைகோ கிட்ட இருக்கற கூட்டம் சேர்க்கற பலமும், உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் பலவீனமும் உங்ககிட்ட அப்படியே இருக்கு!!!

வெளியூருல இருக்கறதால என் சிற்றுரையை இத்தோட முடிச்சுக்கறேன்! என்னை ஏதாச்சும் திட்டனிங்கன்னா லேட்டா வந்துதான் நானும் திட்டுவேன்! சொல்லிட்டேன்!!! :)

முத்து(தமிழினி) said...

இளவஞ்சி,

வாழ்த்துக்கு நன்றி...உங்களுக்கு பொதுவாக இங்கு ஒரு இமேஜ் உண்டு. நடுநிலையாளர் என்பதுதான் அது.அதற்கு ஏற்றாற்போல் நல்ல பின்னூட்டத்தை அளித்துள்ளீர்கள்.
சில மேலதிக விளக்கங்கள்
1. எனக்கு ஆழமாக எழுத தெரியாது என்பதை நான் முதல் பதிவிலேயே கூறிவிட்டேன்.மீ்ண்டும் அதையே இப்பவும் கூறுகிறேன்.... நீங்கள் என்னிடம் அதிகமாக எதிர்ப்பார்த்திருந்தால் அதற்கு என் மன்னிப்புகள்...சத்தியமாக நம்பினால் நம்புங்கள்
எனக்கு ஆழமாக எழுத தெரியாது
நான் நடுநிலைமைவாதியும் அல்ல
நான் முற்போக்குவாதியும் அல்ல.
என்னை எல்லோரும் ஒரு அறிவுஜீவியாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது.அரசியல் முன்னேற்றத்திற்கு அது தடை இளவஞ்சி.நண்பர்களில் ஒருவனாகத்தான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
2. எதிர்வினைகளைப்பற்றி...ஆம் என்னை மீண்டும் மீண்டும் அநியாயமாக யாராவது சுரண்டியதாக எனக்கு பட்டால் கடுமையாக எதிர் தாக்குதல் கொடுப்பேன்.மனித பலவீனம் அப்பப்ப திருந்த முயற்சிக்கிறேன்.தப்பில்லையே ஏன் திருந்த வேண்டும் என்ற எண்ணம் வந்து தடுத்துவிடுகிறது. தவறு என்று பட்டாலும் கூச்சம் பார்க்காமல் பலமுறை தவறை ஒத்தும் கொண்டிருக்கிறேன்.
3.வைகோவுடன் என்னை ஒப்பிட்டிருப்பது :))) தல உங்களுக்கே அநியாயமா தெரியலை....
( என் அரசியல் ஆசையை நான் மறைக்கவோ மறுக்கவோ இல்லை)
பின்குறிப்பு: இந்த வாரத்திலும் நான் கொண்டாடவில்லை என்றால் எப்போது கொண்டாடுவது? என் வருத்தத்தை புரிந்துகொள்ளவும்.

முத்து(தமிழினி) said...

பொன்ஸ்,
//ஆகக் கூடி முடிச்சிட்டீங்களா? இன்னிக்கு ரெண்டு பதிவு போடுவீங்கன்னு பார்த்தேனே..//
இதுக்கே அடிவிழுது....விட்டிருவோம்...

முத்து(தமிழினி) said...

joe,
it is ok joe..absolutely no problems..

முத்து(தமிழினி) said...

பாலபாரதி,
நன்றி நண்பரே..பதவியை எடுத்துக்கிட்டீங்களா? நன்றி அரசியல் வாழ்க்கையில் இத்தெல்லாம் சகஜம்...

முத்து(தமிழினி) said...

தருமி,
உழைப்பை நீங்களாவது புரிந்துகொண்டது என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

முத்து(தமிழினி) said...

நன்மனம்,
நன்றி

முத்து(தமிழினி) said...

துளசி,
சிறுகல் பல்லிலே பட்டால் எடுத்து தூக்கி எறிஞ்சிருங்க.. எல்லார்க்கும் நல்லவனா எழுதினா என்னை பொருத்தவரை அயோக்கியத்தனம்.(இது என் சொந்த கருத்துதான்.என் எழுத்து நோக்கத்தை வைத்து மட்டுமே இதை கூறுகிறேன்)
அதாவது ஒருவன் எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.அப்படி நினைத்தால் சுயம் போய்விடும்.
அவரவர்களை அப்படி அப்படியே விரும்ப பழகுவோம்.
ஆகவே பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள்...... பரட்டையனைப் பற்றிய என் கருத்தில் மாற்றம் இல்லை...

முத்து(தமிழினி) said...

சிவா,

நன்றி

முத்து(தமிழினி) said...

மணியன் சார்,
உங்கள் கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன். மிகவும் நன்றி சார்.

முத்து(தமிழினி) said...

பட்டணத்து ராசா,
நன்றி .விரைவில்...

முத்து(தமிழினி) said...

நன்றி செல்வன்,
மிக்க நன்றி

நன்றி வினையூக்கி

முத்து(தமிழினி) said...

அன்பின் ஆசிப்,

மிகவும் நன்றி நண்பரே..இந்த வாரத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்களில் நீங்களும் ஒருவர்.......தமிழ்மணத்திற்கு நன்றி

முத்து(தமிழினி) said...

நண்பர்களே,

என் பதிவுகள்தான் எல்லார் பதிவுகளையும்விட சூப்பர் என்று நான் சொன்னதே இல்லை.சொல்ல மாட்டேன். ஆனால் என்னை பொறுத்தவரை அவையும் நல்ல பதிவுகளே.நான் ஒரு மாதம் உழைத்தேன்.போட்டேன்.வெறும் அரசியல் மட்டும் எழுதக்கூடாது என்பதற்காக பல துறைகளிலும் எழுதினேன். கஷ்டப் பட்டுத்தான் எழுதினேன்.

எனக்கு தகுதிக்கு மீறிய எதிர்ப்பார்ப்புகள் இல்லை என்று என் அறிமுகப்பதிவில் கூறிஇருந்தேன்.இப்போதும் அதையே சொல்கிறேன்.

நான் எழுதுவதன் நோக்கத்தை திரும்ப திரும்ப சொல்கிறேன்.எனக்கு என்று சொந்த கருத்துக்கள் உள்ளது.அதை பொதுவில் வைக்கிறேன்.அதை யாரும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்றெல்லாம் நான் சொல்வதில்லை.விவாதங்கள் வீண் என்ற என் எண்ணம் இல்லை எனக்கு.விவாதங்கள் தேவை.நம் சூழ்நிலையில் விவாதங்கள் முக்கியம்.தேவை ஆபாசமற்ற, நேர்மையான விவாதங்களே...

யாராவது ஒருவர் இதை பாஸிடிவ்வாக எடுத்தாலும் நான் ரொம்ப சந்தோஷப் படுகிறேன்.அவர்களுக்காகவே நான் எழுதுகிறேன்.

ஜெய. சந்திரசேகரன் said...

நிஜங்களை நீரருவி போல் எழுதியிருந்தீர்கள்! வளர்க!துளசி கோபால் சொன்ன கருத்தும் மிக முக்கியம்.
சபையறிந்தும் பேசுக! தப்பா எடுத்துக்க மாட்டேங்கன்னு நம்பறேன், நண்பரே!

முத்துகுமரன் said...

முத்து(தமிழனி) நல்ல நட்சத்திர வாரம். அதரடி ஆக்சன் மசாலா படம் பார்த்த மாதிரி. சில பதிவுகள் டோனி அடித்த சிக்சர்கள் போலத்தான். காட்டடி..

மனதிற்கு பட்டதை நறுக்கென்று சொல்வது, வரும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதிக்க தயாராக இருப்பது என இயல்பாக போலித்தனமில்லாமல் இருக்கிறது உங்கள் இயங்குதளம். மாற்று சிந்தனைகாரர்களுக்கும் உங்கள் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றன உங்கள் எழுத்துகள். அதற்கு எனது வாழ்த்துகள்.

உங்கள் மிகக்கடுமையான உழைப்பிற்கு பாராட்டுகள்.

வழக்கம்போல தொடர்ந்து எழுதுங்கள்.. வழக்கம் போல நானும் எப்பவாச்சும் வந்து பின்னூட்டம் போடறேன்:-)))

சிங். செயகுமார். said...

"பின்னூட்ட மயக்கத்திற்கு எழுத ஆரம்பித்தால், நல்லது/கெட்டதற்கு வித்தியாசம் தெரியாது//

முத்து இதுதான் என்னுடைய கருத்தும்..

கோபித்துக்கொள்ளாதீர்கள்.

துளசி எழுதிய கருத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு.."


துளசி மற்றும் ஜோசப் சார் கருத்துகளில் எனக்கு உடன் பாடில்லை. தன் உயிர் பற்றி கவலை கொள்ளாமல் மக்கள் பணி செய்பவரை வேண்டுமானால் சாமியாராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் அந்த சாமி யார் ! நானே சாமி என்று சொல்லும் அவரோட படுக்கை அறையில் கூட ஏ.கே 47 பாதுகாப்பெல்லாம் இருக்காம். இவருக்கெல்லாம் போய் கால் வாங்குறாங்க....

அப்புறம் நிலாவின் வாரத்திற்கு பின் ஆரவாரமான வாரம் .
வாழ்த்துக்கள் நண்பரே!

penathalaar said...

முத்து,இது இந்த வார மொத்தப்பதிவுகளுக்குமான பின்னூட்டம், பதிப்பித்துவிடுங்கள்.எல்லாப்பதிவுகளையுமே படித்துவிட்டேன் என்றாலும், கதை கவிதை கனவில் மட்டுமே பின்னூட்டமிட்டேன். எனக்குப் பின்னூட்டமிடுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல் ஒரு காரணம்.சாய்பாபா பதிவில் பின்னூட்டமிட விரும்பவில்லை, எனக்கு பாபா மீது நம்பிக்கையில்லை, நம்பிக்கை உள்ளவர்கள் பெரிய தவறு செய்வதாக நான் கருதவில்லை என்பதால்.கம்யூனிசம் சம்மந்தப்பட்ட பதிவில், விஷ்யம் தெரியாததாலும், ஆர்வம் இல்லாததாலும் பின்னூட்டமிடவில்லை.கிறித்துவ நம்பிக்கைகளைப்பற்றிய பதிவில் ஜோவின் விளக்கங்கள் சுவாரஸ்யமாக இருந்தன (அங்கேயே சொல்லிவிட்டேன், இன்னொரு முறை சொல்வதில் தப்பில்லை)சுவாரஸ்யமாகச் சென்றது வாரம். என்ன, நகைச்சுவை கொஞ்சம் கம்மி (ஜல்லிக்கட்ட முயற்சித்திருந்தும்..) கொஞ்சம் கூட்டுங்கள்.எதிர்கருத்துக்களை எதிர்நோக்கும்போது வரும் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்

Pot"tea" kadai said...

இப்பதிவிற்கு நான் பின்னூட்டமும் இட வேண்டுமா?

எதிர்பார்த்து முதுகைக் காட்டிக் கொண்டிருந்த இடத்தில் யாரும் "டின்" கட்டவில்லை. இங்கே கை பரபரக்கின்றது...ஆனாலும் மட்டுறுத்தலுக்குட்பட்டது என்னுடைய பின்னூட்டம் மட்டுமே என்பதனால் கொஞ்சம் "பொட்டீ" யை அடக்கியே வாசிக்கின்றேன்.

ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ "திராவிட ராஸ்கலுக்கு" என்னுடைய வாழ்த்துக்கள்.

முத்து(தமிழினி) said...

//எதிர்கருத்துக்களை எதிர்நோக்கும்போது வரும் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.//

//வரும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதிக்க தயாராக இருப்பது என இயல்பாக போலித்தனமில்லாமல் இருக்கிறது உங்கள் இயங்குதளம்.//


so problem is i had to react people who come with vengence..
சுரண்டினால் கடும் தாக்குதல் கொடுப்பது நம் கடமையாகிறது.
விவாதித்தால் அலல.

முத்து(தமிழினி) said...

thanks
penathal

thansk muthukumaran

thanks singh...

thanks maraburaar...

Pot"tea" kadai said...

அடிபட்டவனுக்கு தானே வலி தெரியும்...எதையும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையானாலும் அடக்கி வாசிப்பதே நன்று.

முத்து(தமிழினி) said...

pottea kadai,

thanks dear

முத்து(தமிழினி) said...

pottea kadai,

i had to moderate some comments pertaining to poli dondu post..i forget to add that..

thanks for reminding...

sorry..(there was a valid reason behind that move)

ramachandranusha said...

சிஷ்யை பொன்ஸ் குழந்தாய்,
இதுதான் "தர்ம அடி சித்தாந்தம்" பார்த்தாயா நம் துளசியக்கா அவர்கள், ஒரு அடி போட்டதும், தபதபவென்று அடிகள் குமிகிறது.
இதை எப்படி தவர்க்கலாம் என்று நீ யோசித்தால், தவறிக்கவேக்கூடாது என்பதே முக்கிய பாடம். எத்தனை பின்னுட்டங்கள் மடமடவென்று விழுந்துள்ளன பார்த்தாயா? வெறும் நன்றியறிவிப்பு என்றால் இத்தனை பின்னுட்டங்கள் வந்திருக்குமா, அதுதான் நாலு பேரூ சூப்பர் என்று சொல்லி விட்டார்களே என்று ஞாயிற்றுகிழமை ஸ்பெஷல் உறக்கத்தில் எல்லோரும் ஆழ்ந்திருப்பார்கள்.
இந்த பாடத்தை கவனமாய் படித்து, பல பின்னோக்கிய சரித்திர உண்மைகளையும் ரெபர் செய்.

ramachandranusha said...

முத்து,
நல்லா சுவாரசியமாய் போனது ஒரு வாரம். படிப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றார்போல யாராலும்
எழுத முடியாது.

துளசி,
உங்கக்கிட்ட ஒரு வார்த்தை- கொலை போன்ற இழிவான செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த வயதிலும் அவன் என்று சொல்வார்கள். இந்த பதிவில் சாம்ராய்ஜ்ஜியத்தை உருவாக்க
முயலும் சாமியார்களைப் பற்றி எழுதியுள்ளேன். உங்கள் எழுத்திலேயே, சில சமயம் "என்னத்த
சொல்கிறது" என்ற அலுப்பைப் பார்த்திருக்கிறேன். இங்கு உரத்த குரல் எழுப்புவதால் எந்த உபயோகமும்
இல்லை, ஆனாலும் ஒரு ஆதங்கம், வயிற்றெரிச்சல்.

ஜோசப் சார்,
தினகரன் போன்றவர்களைப் பற்றி நீங்கள் உங்கள் "திரும்பி பார்க்கிறேன்" தொடரில் எழுதுகிறீர்கள்.
அனாதை ஆசிரமங்களுக்கு, ஏழைகள் கல்விக்கு வரும் வெளிநாட்டு பணத்தை தங்கள் சொந்த உபயோகத்திற்கு திருப்பிக் கொள்பவர்களை பற்றீ. அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஏழை, பாழை, கிழிந்த உடையுடன் இன்றைய ஆசிரமங்கள் உள்ளே உதவி என்று நுழைய முடியுமா?
சுனாமி போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் செய்யும் சேவை உயர்ந்ததே, ஆனால் அவ்வளவு கோடிகள், அதற்கு மேலே அவர்களிடம் இருப்பதற்க்கு என்ன கணக்கு? எப்படி இவர்களுக்கு கிடைத்தது? ஆன்மீகம் என்ற பெயரில் இருபது வயதுகளில் இருக்கும் இளைஞ, இளைஞிகள்
ஆஸ்ரமம் எங்கும் இருக்கிறார்கள். தங்கள் படிப்பு, வேலை , குடும்பம் இவைகளை துறந்து. இவர்களின் பெற்றோர் சிலராலே மெல்லிய எதிர்ப்பு கொடுக்க முடிகிறது. இந்த சாம்ராக்ஜ்ஜியங்களை அவ்வளவு சுலபமாய் எதிர்க்க முடியாது. பொதுவாய் இவர்கள் காலத்துக்குப் பிறகு அங்கு நடக்கும்
சொத்து சண்டைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
மொத்ததில் இந்த திடீர் சாமியார்களை ஆரம்பத்திலேயே அடக்க வேண்டும். ஜனாதிபதி உட்பட
அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த ஆஸ்ரம, மடங்களில் நுழையக்கூடாது.
மடங்கள் மேறு. அவை ஒரு குறிப்பிட்ட மதத்தில் ஒரு பிரிவின், அதில் உள்ள பல உட்பிரிவுகளில்
ஒரு பிரிவை சார்ந்தவை. இங்கு நடப்பவைகளைப் பற்றியும் பல விமர்சனங்கள் உண்டு. இங்கெல்லாம்
சாதி இரண்டொழிய வேறு இல்லை. அதுதாங்க இருக்கப்பட்டவர்கள், இல்லாதவர்கள்.
நிறைய எழுதிக் கொண்டே போகலாம். மதம், பக்தி என்ற பெயரில் மனிதனை முட்டாள் ஆக்குகிறார்கள்

குமரன் (Kumaran) said...

முத்து,

இந்த வார நடுவிலேயே உங்களின் விண்மீன் வாரக் கடைசிப் பதிவிற்கு என்ன பின்னூட்டம் இட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

அருமையான வாரம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கடந்த இரண்டு வாரமும் விண்மீன் வாரமும் வலைப்பூவே கதியாக இருந்திருப்பீர்கள். அதனால் இந்த வாரத்திலிருந்து இன்னும் குறைந்தது ஒரு இரண்டு வாரத்திற்காவது மனைவிக்கும் மகளுக்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். வேண்டுமானால் இருவாரம் விடுமுறையும் எடுக்கலாம் (வலைப்பூவிற்கு, வேலைக்கு இல்லை) :-) அதே நேரத்தில் இந்த வாரம் அலுவலகத்திலும் வேலை அவ்வளவாக நடந்திருக்காது. அதனையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கும்.

என் விண்மீன் வாரத்தில் பட்ட அனுபவங்களிலிருந்து இவை எல்லாம் சொல்கிறேன். எல்லா விண்மீன்களும் இதே போல் உழைப்பை நல்கினால் விண்மீன் வாரங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாகச் செல்லும். ஆனால் அவ்வாறு செய்யாமல் கடைசிப் பதிவில் என் பதிவுகள் எல்லாரையும் கடுப்படித்துவிட்டது; அதனால் எனக்குப் பின்னூட்டங்கள் கிடைக்கவில்லை; அதுவே எனக்கு வெற்றி என்றெல்லாம் பீலா, அளப்பரை விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. :-)

(இந்த பீலா, அளப்பரைக்குத் தகுந்த தமிழ்ச் சொற்களைப் பிடிக்கவேண்டும்).

மிக நல்ல வாரத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி முத்து. அலுவல் அதிகமாக இருந்ததால் எல்லாப் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. படித்தவற்றிலும் பின்னூட்டங்கள் படித்து முடியவில்லை. அதனால் என்ன இனி வரும் வாரங்களிலும் அவற்றைப் படித்துவிட்டால் போகிறது.

ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்கிய திராவிட புனிதபிம்பம் முத்து வாழ்க, வாழ்க!!! :-)

உங்களை திராவிட ராஸ்கல் என அழைக்க மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. நீங்கள் திராவிட புனித பிம்பம். புனித பிம்பம் என்பதற்கு நீங்கள் கொடுத்த வரையறையில் தான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறேன். :-)

முத்து(தமிழினி) said...

உஷா,

எனக்கு தெரியாதா? பொன்ஸ் அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதற்காகத் தான் அந்த பின்னூட்டங்களை கருத்து சுதந்திரத்தை(?) காக்கவேண்டி விட்டுவைத்துள்ளென்:))

//இந்த பாடத்தை கவனமாய் படித்து, பல பின்னோக்கிய சரித்திர உண்மைகளையும் ரெபர் செய்//
பொன்ஸ் ஒரே நாளில் ஏகப்பட்ட பாடம்.

முத்து(தமிழினி) said...

உஷா,

ஒரு கை கொடுத்ததற்கு நன்றி...

மகளிர் அணித்தலைவர் பட்டம் காலியாக உள்ளது:)

முத்து(தமிழினி) said...

குமரன் நன்றி...

வீட்டில் ஆட்கள் இன்னும் மதுரயில்தான் உள்ளார்கள்.சம்மர் ஹாலிடே...

உழைப்பை அங்கீகரித்த மனம்திறந்து பாராட்டிய உங்கள் செய்கை எனக்கு மிகவும் பிடிக்கிறது நண்பா..

//இதே போல் உழைப்பை நல்கினால் விண்மீன் வாரங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாகச் செல்லும். ஆனால் அவ்வாறு செய்யாமல் கடைசிப் பதிவில் என் பதிவுகள் எல்லாரையும் கடுப்படித்துவிட்டது; அதனால் எனக்குப் பின்னூட்டங்கள் கிடைக்கவில்லை; அதுவே எனக்கு வெற்றி என்றெல்லாம் பீலா, அளப்பரை விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. :-) //

No comments....எனக்கு அடி விழும்...


//புனித பிம்பம் என்பதற்கு நீங்கள் கொடுத்த வரையறையில் தான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறேன்//

புனித பிம்பங்கள் என் சீரியஸ் பிரச்சினை.கலைஞர் பாணியில் சொல்வது என்றால் புனித பிம்பங்களை ஒழிப்பதுதான் தி.ரா.மு.மு முதல் தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதி..:))

பினாத்தல் சுரேஷ் said...

//எதிர்கருத்துக்களை எதிர்நோக்கும்போது வரும் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.//

//வரும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளித்து விவாதிக்க தயாராக இருப்பது என இயல்பாக போலித்தனமில்லாமல் இருக்கிறது உங்கள் இயங்குதளம்.//

இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை முத்து.

விவாதிப்பதும், கோபமில்லாமல் விவாதிப்பதும் இரு வேறு கோடுகள் அல்லவே. நிச்சயமாக நீங்கள் மாற்றுக்கருத்தை - உங்களுக்கு சம்மதமில்லாதபோது எதிர்க்கக்கூடாது என்று நான் சொல்லப்போவதில்லை - அப்படிச்செய்யும்போது கோபம் குறைக்கவும் என்றுதான் சற்று உரிமை எடுத்துக்கொண்டு சொல்லி இருக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

அப்புறம் உஷாக்கா, தரும அடி சித்தாந்தத்தாலே பாதிக்கப்பட்ட முதல் நபரே நான்தான்:-(

காலையிலே பதிவு போட்டு, மாலை வரை மட்டுறுத்த முடியாமல், பின்னூட்டம் ஏற்றாமல் இருப்பதால், எப்படி அடிப்பது என்று தெரியாமல் யாரும் எதுவும் எழுதாமல் போய்விடுகிறார்கள்:-(

குமரன் (Kumaran) said...

புனித பிம்பங்களை ஒழிப்பது முதல் வேலை என்றால் அது திராவிட புனித பிம்பங்களையும் சேர்த்துத் தானா? அப்படியென்றால் நீங்கள் நிறைய நண்பர்களை இழக்க வேண்டி வருமே. :-)

Mookku Sundar said...

//பத்த வெச்சிட்டயெ பரட்டை//

முத்து,

அது என் நோக்கம் இல்லை. உஷா மாமி நினைப்பது போல துளசியக்கா பின்னூட்டத்தைப் பார்த்தௌம், நான் தரும அடிக்கு சேர்ந்து கொள்ளவில்லை. நான் என் பின்னூட்டம் அளிக்கும்போது, நீங்கள் அக்காவின் பின்னூட்டத்தை அந்த சமயம் அப்ரூப் பண்ணி இருக்கவே இல்லை. எனவே இது கும்பலில் ஜமுக்காளம் போட்டு தாக்கும் மனோபாவம் இல்லை.

நான் சொலவெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சலம்பல் கொன்ச்...சம் அதுகம் என்பதுதான். அந்த சலம்பல்தான் பின்னூட்டத்தை வளர்க்க உதவுகிறது என்பதையும் அறிந்தேதான், அதற்காக சலம்பலை அதிகம் வைக்காதீர்கள் என்றேன்.

பேசாமல் தனிமடல் இட்டிருக்கலாம்.(பொதுவாக அதை நான் விரும்புவதில்லை)

நீ கலக்கு மாமே..கொஞ்சம் பாத்து கலக்கு. அவ்வளவுதான் ;-)

KARTHIKRAMAS said...

முத்து நன்றி.

முத்து(தமிழினி) said...

penathal,

i understand the point...

முத்து(தமிழினி) said...

//அப்புறம் உஷாக்கா, தரும அடி சித்தாந்தத்தாலே பாதிக்கப்பட்ட முதல் நபரே நான்தான்:-(
//


:))

arasiyal vazhkaiyil ithallam jagajam

முத்து(தமிழினி) said...

kumaran


there is no punitha pimpam's among rascals..

that is our advantage.. we are ordinary humans

mooku,

thanks dear..just iam kidding..i know about you

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதற்காகத் தான் அந்த பின்னூட்டங்களை கருத்து சுதந்திரத்தை(?) காக்கவேண்டி விட்டுவைத்துள்ளென்:))
//

சனிக்கிழமை பின்னூட்ட அரசியல் வகுப்புன்னு சொன்னது இதுக்குத் தானா? :)

ப்ராக்டிகல் பாடம் :)!! க்ளாஸ்மேட் பட்டணத்து ராசா, உனக்கும் தாம்பா :)

வெற்றி said...

முத்து,
இவ் வாரம் முழுவதும் பல அருமையான பதிவுகளை எளிமையான தமிழ் நடையில் அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளீர்கள். சும்மா யாரையாவது நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து வாரம் முழுக்க எழுத வைக்காமல், சரியான, தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்த மதிக்கும் எனது பாராட்டுக்கள். முத்து, நட்சத்திர வாரம் முடிந்ததும் ஓய்ந்து விடாமல், இன்னும் பல அருமையான பல பதிவுகளை நீங்கள் தர வேண்டும் என அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

gulf-tamilan said...

//யாராவது ஒருவர் இதை பாஸிடிவ்வாக எடுத்தாலும் நான் ரொம்ப சந்தோஷப் படுகிறேன்.அவர்களுக்காகவே நான் எழுதுகிறேன்//
தொடர்ந்து எழுதுங்கள்
Best wishes

மலைநாடான் said...

முத்து!

முதலில் உங்கள் கடின உழைப்புக்குப் பாராட்டுக்கள்.
வலைப்பதிவில் நான் வந்த அண்மைக்காலத்தில், நட்சத்திரங்களாக மின்னியவர்களனைவர்க்கும் ஒரு பின்னூட்டமாவது இடுவேன். அது அவர்களது உழைப்புக்கான உற்சாகமூட்டல்.உங்கள் வாரத்தில் இறுதிவரை காத்திருந்தேன். காரணம் விறுவிறுப்பாக அமைந்த உங்கள் எழுத்துக்கள்.
உங்கள் எழுத்துக்கள் பற்றி நான் சொல்ல நினைத்த சில கருத்துக்களை ஏற்கனவே நண்பர்கள் சொல்லியுள்ளதால் சுருக்கமாக ஒருவிடயத்தை மட்டும்குறிப்பிட விரும்புகின்றேன். இந்தவாரத்தைய உங்கள் படைப்புக்களைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் 15 வருடங்களின் பின் உங்கள் கருத்தும் செயலும் இப்போது போலிருக்குமாயின் நீங்கள் வெற்றி பெற்ற மனிதர்.
மிக நீண்ட பின்னூட்டங்கள் எழுதுவது எனக்குப் பிடிப்பதில்லை. உங்களை பிடித்தது. அதனால் இவ்வளவும். வாழ்த்துக்களும் நன்றிகளும்

இளவஞ்சி said...

முத்து,

எனக்கு சேரனின் படங்கள் என்றால் உயிர்! "சரியான இம்சை செண்டிமெட்டுகளை வைத்தே படம் எடுக்கறான்யா! மத்தபடி அந்த படத்துல வேற என்ன இருக்கு?!" என்ற விமரிசனங்களை நான் கேட்டாலும் நானெல்லாம் "ஆமாம்! செண்டிமெண்டு இல்லாம இங்க வாழந்துற முடியுமா!?"னுட்டு படத்துல இறங்கிருவேன்! இவ்வளவு புடிக்குங்கறனே.. ஆனா சும்மாவா படம் பார்ப்பேன்னு நினைக்கறீங்க?! பார்த்துக்கிட்டு இருக்கறப்பவே பேண்ட்டை மடிச்சுக்கிட்டு கைவண்டி இழுக்கற மாதிரியான அபத்தக் காட்சிகள் வந்தா பகீருங்கும்! அடடா! இத்தன அற்புதமா படமெடுத்துட்டு இப்படி இங்க கோட்டை விட்டுட்டாப்லையேன்னு! இந்த புத்தி சேரனை மட்டம் தட்டும் புத்தியல்ல! நமக்கு புடிச்ச ஒருத்தரு செய்யற காரியத்துல ஏதாவது குத்தங்கொறை வந்தா உரிமையோட சொல்லிக்காட்டறதுல இருக்கற அக்கறை! அவ்வளவே! சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு ஒன்னும் கிடைக்கப்போறது இல்லை! ஆனா சேரனோட வெற்றியும் தோல்வியும் நம்முடையது என உணரும், உரிமையால் வரும் ஒரு மனநிலை! ஆரம்பத்துல இருந்து ஒரு வாசகனாக இப்படித்தான் உங்க பதிவுகளை படிச்சுக்கிட்டு வரேன்!

சரி! நம்ப பொங்கல் மேட்டருக்கே வருவோம்! ஆறேழு பசங்க கூடியிருக்கற சபைல ஒருத்தன் ஒரு புள்ளைய டாவடிக்கறான்னு தெரிஞ்சா மத்தவனுங்களோட ரியாக்சனை பார்த்திருக்கீங்களா?! அப்படியே பதறுவானுங்க! "இப்படி பண்ணாதடா! தப்பா போயிரும்! இப்படிச்செஞ்சா சரியாவரும்"னு ஆயிரம் ஐடியாங்க கொட்டும்! ஐடியாக்களை அள்ளிக்கொட்டற ஒருத்தனுக்கு திடீர்னு ஒரு பிகரு மாட்டுதுன்னு வைங்க! அன்னைக்கு அவன் இப்படித்தான் இஞ்சி-குரங்கு மாதிரி முழிப்பான்! மத்தவிங்க ஐடியா குடோனா மாறிருவாங்க! நீங்க சொல்லறாப்புல உங்களை நண்பர்களில் ஒருவராக வைத்துபார்ப்பதில் வரும் வினைதான் இது! மற்றபடி உங்களை உயரத்தில் வைத்து பார்த்திருந்தம்னா இருக்கவே இருக்கு "அசத்தல்","கலக்கிட்டீங்க" என்பது போன்ற பின்னூட்டங்கள் மட்டும்!

உங்களுடைய இந்த பதிவிற்கான நம் நண்பர்களின் பின்னூட்டங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன்! இவ்வளவு பேசறியே! நீ ஆழமா எழுதவேண்டியதுதானேன்னா எனக்கு தெரியாதுங்கறதுதான் உண்மை! ஆனா இவ்வளவு எழுதற நம்ப முத்து இப்படி எழுதினா இன்னும் நல்லா இருந்திருக்குமேங்கற அக்கறைதான் இந்த பின்னூட்டங்களுக்கு காரணமா இருக்கக்கூடும்! கடுகுக்கும் வெந்தயத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் விருந்துன்னு வந்துட்டா இலைக்கு நடுவுல தரை தெரியற அளவுக்கு வழிச்சுக்கட்டிட்டு "பாயாசத்துல முந்திரி லைட்டா தீஞ்சிருச்சு"ன்னு கருத்து சொல்லறாப்புல நெனச்சுக்கங்க! இந்த இடத்துல சமையக்காரரு "என்னால எல்லாத்துக்கும் புடிச்சாப்புல சமைக்க முடியாது! புடிச்சவங்க இஸ்டப்பட்டவங்க சாப்புடுங்க"ன்னு சொன்னா நல்லாவா இருக்கும்! நட்சத்திர வாரம்னவுடன ஒரு விருந்துக்கு வந்தோம்! சாப்புட்டமா! விருந்து அற்புதம்ப்பாங்கற வகையில ஒரு பெரிய ஏப்பம் விட்டுட்டு போறவுக ஒரு வகை! கையப்புடிச்சுக்கிட்டு "கலக்கிட்டீங்க"ன்னு சொல்லறவங்க ஒருவகை! "A1 ங்க.. முந்திரி மட்டும் கொஞ்சம் கருகாம இருந்திருந்தா இன்னும் அம்சமா இருந்திருக்கும்"கறவுக ஒரு வகை! வேற என்னத்த சொல்ல!

எல்லாத்துக்கும் புடிச்சமாதிரி யாரும் எழுதமுடியாது! அதுவும் "தனித்துவமானவன்"னு தலைப்பு வைச்சுக்கிட்டு அதனை எதிர்பார்ப்பனா என்ன?! "திராவிட ராஸ்கல், புனித பிம்பம்" இதெல்லாம் உங்களுக்கு சீரியஸ் மேட்டருன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க! மேலும் "உன்னுடைய கருத்துக்களை மற்றவன் கட்டமைத்தால் மனிதாக தோற்றுவிட்டாய்"ன்னும் நம்பறீங்க! நம்பிக்கைகளை கட்டுடைப்பவனும் தகர்ப்பவனும் ஒன்றல்ல! தகர்ப்பவனுக்கு மற்றவர்களுடைய நம்பிக்கைகளை பற்றி எந்தவித கவலைகளுமில்லை! தனது கருத்தினை திணித்தால் போதும்! கட்டுடைப்பவன் அப்படியல்ல! மற்றவர் ஒரு கருத்தினை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என தன் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நம்புகிறானெனில் முதலில் அவர்களுடைய நம்பிக்கைகளின் மீதான தவறான புரிதலை அவர்களுக்கு விளக்கவேண்டும்! அந்த தவறான நம்பிக்கைகளில் இருந்து அவர்களை அவர்களது சுயமும் இந்த மாறுதலின் மீதான நம்பிக்கைகளும் சிதைக்காவண்ணம் வெளிக்கொணர வேண்டும்! கட்டுடைக்கும் வேலையைச் செய்பவனுக்கு கட்டமைக்கும் பொறுப்பும் உண்டு! நீ செய்வது எல்லாம் அபத்தம் என அடித்து நிரூபிப்பது மட்டுமே அவனது வேலையல்ல! அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பின் நம் நல்ல நம்பிக்கைகளை அவர்களுடையதாக மாற்றும் பொறுப்பையும் செய்யவேண்டுமல்லவா!

சாயிபாபாவின் மீதான் நம்பிக்கைகளை "பரட்டையன்" என தகர்த்தெறிய முயலும் உங்கள் முயற்சியின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! அவரை திட்டுவதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடுமா? அவர் பொய்யராக இருப்பினும் அவர்மீது வைத்த நம்பிக்கையின் மூலம் பலன் பெற்றவர்களை மாற்ற இந்த கட்டுடைப்பு போதுமா? மனரீதியாக ஆதவரற்றவர்களுக்கு ஒரு வேடதாரி தினகரனின் மூலம் "இயேசு உங்கள் துயரங்களை ஏற்றுக்கொள்வார்" என மனமுருகிப் பிராத்திப்பாதாக சொல்லும்போது அதனை உண்மையென நம்பி அதன் மூலம் மன உறுதியை பெறுபவர்களுக்கு "தினகரன் ஒரு பொய்யர்" என கட்டுடைப்பதின் மூலம் அவர்களுக்கு இந்த போலி பிரசங்கங்களின் மூலம் கிடைக்கும் மனநிம்மதிக்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்? என்னைக்கேட்டால் நாத்திகம் தோல்வியடைந்ததே இங்குதான் என்பேன்! மதநம்பிக்கைகளின் மூலம் ஒரு வித பலனை பெற்றுவந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் அத்தனையும் மூடநம்பிக்கைகள் என்பதோடு நின்றுவிட்டது நாத்திகம்! அதன்பிறகு வாழ்க்கைக்கும் உறவுகளுக்கும் உள்ள பிடிப்புகளுக்கும் பிணைப்புகளுக்கும் ஒரு மாற்று சொல்லாமல் நிற்க... மக்கள் "எத்தை தின்றால் பித்தம் தெளியுமெனெ" ஆசாமிகள் பின்னே இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்! இதை ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன்! அவ்ளோதாங்க!

சரி விடுங்க! பின்னூட்டம்னா சின்னதா இருக்கனும்னு ஜோசப் சார் சொன்னதை துளசியக்கா தருமிசார் பதிவுல சொல்லியிருக்காக!
(எப்படி மூணுபேரு பதிவையும் படிக்கறதா ஒரே லைன்ல கொண்டுவரேன் பாருங்க! :) ) அதனால கடைசியா இத்த சொல்லிமுடிச்சுக்கறேன்! உஷா சொல்லற தரும அடி மேட்டரு கரெக்ட்! அது உங்க கருத்தை ஒத்துக்க முடியாதவக எப்படி சொல்லறதுன்னு தெரியாம யாராவது ஒருத்தரு ஆரம்பிச்சா வந்து சேர்ந்துக்கறதுல இருக்கலாம்! ஆனா இந்த விமரிசனங்கள் உங்களோட போன வாரத்தினை பற்றியது! அதாவது உங்களை பற்றியது! இதுல தர்ம அடி போட்டு எங்களுக்கு என்ன வரப்போகுது? இன்னமும் யோசிச்சு பாருங்க! இங்க கருத்து சொன்னவுக எல்லாம் இத்தனை நாள் உங்களுக்கு கூட்டத்தோட கூட்டமா உங்க கருத்துக்களுக்கு தர்ம அடி போட்ட உங்க கருத்து விரோதிகள் இல்லை! எல்லாருமே உங்க நண்பர்கள்! அதனால இந்த மேட்டரை உஷா ஒரு தவறான புரிதலோடு அனுகுவதையும் அதன்மூலம் பொன்ஸ்சை தவறாக வழிநடத்துதலையும் இங்கு மென்மையாக கண்டிக்கும் அதே வேளையிலே நான் 4ஆவது கேட்டகிரிதான் என்பதனையும் ஆணித்தரமாக இங்கே கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! (பிரச்சாரமெல்லாம் ஓஞ்ச்சாச்சு! அடங்குடா இளவஞ்சி!! )

வேற என்ன சொல்லறதுன்னு தெரியலை! அடிக்கடி வர்றேங்க! (என்னை நடுநிலையான ஆசாமி என்று ஒரு இமேஜ் இருக்கிறது என்ற உங்களது கூற்றின்மீதும் விமர்சனம் உண்டு! இன்னைக்கு இது போதுங்க! இன்னொருநாள் வாரேன்! )

சல்மான் said...

அளித்திருக்கிற பங்களிப்பும், பின்னணயிலிருக்கிற கடின உழைப்பும் கணிசமான தினங்களுக்கு திராவிட ராஸ்கல்களுக்கு உற்சாகம் அளிக்கும். கை கொடுங்கள்!

நட்புடன்
சல்மான்

நெருப்பு சிவா said...

அன்பு முத்து,

ஜனரஞ்சகத்திற்காக சேர்க்கப்பட்ட மாடுபிடி, காதல்படி இவை தவிர்த்து, மொத்ததில் இது மெச்சத்தக்க வாரம். மகத்தான நன்றிகள்!

நெருப்பு

Krishna said...

முத்து,

முத்து முத்தான பதிவுக்கு பாராட்டுக்கள். இதற்கு நீங்கள் செய்திருக்கும் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சிறப்பாய் எழுத உங்கள் சிந்தனை இன்னும் உயர வாழ்த்துக்கள்.

நிற்க. இளவஞ்சியின் மேற்கண்ட பின்னூட்டக் கருத்துக்களுடன் நான் பெரிதும் ஒத்துப் போகிறேன். (உஷா அவர்களின் ஜாலி கலந்த கேலியை இனங் கொள்ளத் தவறி விட்டீர்களோ இளவஞ்சி?) இன்னும் கூட ஆழமாய் எதிர்பார்ப்பதும், இன்னும் கூட தடாலடியாயில்லாமல் ஆணித்தரமாய் கருத்துக்களை வைக்கவேண்டும்/ எதிர்கருத்துக்களை எதிர்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதும் உங்களது உச்சவரம்பை உயர்த்தும் அவாவினால்தான் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் உங்களுக்குண்டு என நம்புகிறேன்.

சச்சினின் ஒவ்வொரு இன்னிங்ஸ்ம் சிறப்பாயிருக்க வேண்டும், ஒவ்வொரு மட்டை வீச்சும் துல்லியமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, அவரின் திறமை மேல் வைத்துள்ள நம்பிக்கையின்பாலும், அவரால் முடியும் என மனம் ஆழமாய் நம்புவதாலும் தான். அதனாலேயே, அவரது தோல்விகள் ஜீரணிக்க முடியாமல் போகின்றன. இது ரசிகனின் குற்றம்தானோ?

ஜோசப் சார் தான் அப்படி (பின்னூட்டம் சின்னதாயிருக்க வேண்டும் என) சொல்லவேயில்லை என்று சொல்கிறார். துளசி மேடம், பந்து இப்போது உங்கள் பக்கம் (இளவஞ்சி, பார்த்தீர்களா, எத்தனை பேரை, இதில் இழுத்து விட்டுள்ளேன். - எல்லாம் உங்கள் பயிற்சிதான்!!)

SK said...

நட்சத்திர வாரத்தில்
நாலு பேர் அதிகம் படிப்பார் என நம்பி
நல்லவரையும் அல்லவரையும்
நடுநிலைமை எனப் போர்த்து பதிவெழுதி
நாள் ஆயிரம் பின்னூட்டம் பெற்ற
நின்னைப் பாராட்டி, வாழ்த்தி,
தர்ம அடியில் சேராமல்
விடை அளிக்கிறேன் இன்று!


"ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு!"

முத்து(தமிழினி) said...

இளவற்சி,

உங்கள் கருத்துக்கள் பாஸிடிவ்வாக எடுக்கப்பட்டன.நன்றி..

எஸ்கே.

தயவு செய்து சுரண்ட வேண்டாம்..நன்றி

முத்து(தமிழினி) said...

பொன்ஸ்,

நன்றி...பட்டு திருந்தினால் மனிதன் அந்த பாடத்தை மறக்கவே மாட்டான்


வெற்றி,

மிகவும் நன்றி நண்பரே...ஆர்வம் உள்ளவரை எழுதிக்கொண்டே இருப்பேன்...

முத்து(தமிழினி) said...

கல்ப் தமிழன்,

நன்றி நண்பா,

மலைநாடான்,

உங்கள் கருத்து புரிந்தது.பிடித்தது.நன்றி நண்பா.

முத்து(தமிழினி) said...

//சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு ஒன்னும் கிடைக்கப்போறது இல்லை! ஆனா சேரனோட வெற்றியும் தோல்வியும் நம்முடையது என உணரும், உரிமையால் வரும் ஒரு மனநிலை! //


எனக்கு இது தெரியாதா என்னங்க இது?//இவ்வளவு பேசறியே! நீ ஆழமா எழுதவேண்டியதுதானேன்னா எனக்கு தெரியாதுங்கறதுதான் உண்மை
//

நம்மள்ளாம் ஒரே குரூப் மாமு..மற்றபடி கடைசி பகுதியில் நீங்கள் சொல்லியிருப்பது என்னை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளது.

உங்கள் பின்னூட்டத்தையும் அதற்கான என் குழப்பங்களையும் தனிப்பதிவாக சில நாட்கள் கழித்து இடுகிறேன்.


இடித்துரைக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.


இடித்துரைக்கும் நோக்கங்கள்தான் வேறு வேறு.


1. மூக்கு சுந்தரின் நோக்கம் வேறு.

2. துளசி அம்மாவின் நோக்கம் வேறு.

3.உங்கள் ஆதங்கத்தின் நோக்கம் வேறு.

4.ஜோசப் சாரின் நோக்கம் வேறு.

இதையெல்லாம் வேறுவேறாக நான் பார்க்கிறேன்.அதற்கேற்றவாறு ரியாக்ட் செய்கிறேன்.விளக்கமாக பிறகு.

முத்து(தமிழினி) said...

சல்மான்,

நன்றி...

நெருப்பு சிவா,

நன்றி...

முத்து(தமிழினி) said...

கிருஷ்ணா,

நன்றி..

இடித்துரைத்தலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம்..நோக்கத்தை கொண்டே நான் அவர்களை புரிந்துக்கொள்ள வேண்டி உள்ளது.

மோகன்தாஸ் said...

வந்துட்டோம்ல, முத்து பலபேருக்கு இங்க பின்னூட்டம் அதிகம் கிடைக்கலைன்னு பொறாமையில பேசுறாங்க. :-) அப்படியில்லைன்னா, என்னடா நமக்கு கிடைக்கிறதை விட அதிகம் கிடைச்சிறுச்சேன்னு அப்படின்னு ஒரு பொறாமை. :-)

நீங்க கலக்குங்க முத்து, எல்லாரும் ஒரே மாதிரி எழுதினா போரடிச்சிறும்.

நீங்க எழுதினதில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் அப்படிங்கிற மாதிரி பின்னூட்டம் உங்களுக்கு வேண்டுமென்றால் என்னுடையதை எடுத்துக்கொள்ளுங்கள்.

5/5 டெலிவரி டைம், புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பின்னூட்டம் இங்க தமிழ்மணத்தில் பெரிய அரசியல் செய்து கொண்டிருப்பது மட்டும் பிரகாசமாத்தெரியுது. மற்றபடிக்கு உங்க வாரம் சூப்பரா இருந்தது.

Krishna said...

முன்முடிவுகள் இல்லாமல் பின்னூட்டங்களை எதிர்கொள்ளுதல் கடினம்தானோ.

முத்து(தமிழினி) said...

//முன்முடிவுகள் இல்லாமல் பின்னூட்டங்களை எதிர்கொள்ளுதல் கடினம்தானோ//

முன்முடிவுகள் சரியா தவறா என்பதில் உள்ளது இதற்கு பதில்

முத்து(தமிழினி) said...

மோகன்,

அடிய்யா..அடி...
ச்சும்மா

நன்றி மோகன்...

விடாதுகருப்பு said...

கலக்கல் திராவிட ராஸ்கல் வாரம் :))

Thangavel said...

முத்து உங்கள் நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன்; 'ஜல்லிக்கட்டு' பதிவைத்தவிர (அதன் ஆரம்பமே எனக்குப் போரடித்தது-மன்னிக்கவும்) உங்களுக்கும், எனக்கும் பல விசயங்களில் கருத்தொற்றுமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (குறிப்பாக கமல், சு, ரா., போலிச்சாமியார்கள், நாத்திகம், கம்யூனிசம், கவிதையைப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கல், கருணாதியின் சனநாயகத்தன்மை போன்ற பல) வேற்றுமைகளும் இருக்கலாம்; இருக்கவேண்டும். உங்களை நேரில் சந்திக்க ஆசை.

முத்து(தமிழினி) said...

தங்கவேல்.


//வேற்றுமைகளும் இருக்கலாம்; இருக்கவேண்டும்.//

true..


//உங்களை நேரில் சந்திக்க ஆசை.//

தமிழ்கூறு நல்லுலகில் செட்டிலாவது என் லட்சியம்.லட்சியம் நிறைவேற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.எப்படியும் நாம் சென்னையில் சந்திப்போம்.இமெயில் தாருங்கள்.

முத்து(தமிழினி) said...

விடாது கருப்பு,

நன்றிய்யா நன்றி

ramachandranusha said...

இளவஞ்சி, கிருஷ்ணன் அவர்கள் சொன்னப்பிறகு பார்த்தால், தர்ம அடி சித்தாந்தத்தில் :-) இந்த
ஸ்மைலியைக் காணோம். மொதல்ல, நீங்க சொன்னதை நகைச்சுவையாகத்தான் நினைத்துக் கொண்டேன். இப்ப..........பயமாக இருக்கிறது.

போலி சாமியார், ஆத்திகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் தவறு என்பதற்கு நாத்திகர்கள் வைக்கும் தீர்வு என்ன என்றுக் கேட்டு இருக்கிறீர்கள். அரைகுறை நாத்திகவாதியான என்னால்
தீர்வெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும், சொல்ல சில விஷயங்கள் உண்டு. ஆனால் இப்ப முடியாது.

அப்படியே "எல்லாருக்கும் பிடித்த மாதிரி" எழுதுவது குறித்தும்
( எல்லாரும் இளவஞ்சி ஆக முடியுமா- நோ ஸ்மைலி) சொந்த பிரச்சனைகள் காரணமாய், இந்த புலி வால்களை பிடித்தால், விட முடியாது. பிறகு பார்க்கலாம். அதற்குள் யாராவது எடுத்து ஆட முயலவும்.

பி.கு முத்து, இவை எல்லாம் இங்கே எழுதினால், இங்கே பின்னுட்ட கணக்கு ஏறும் என்ற பயத்தில்
ஓடி விட்டேன் என்று கருத வேண்டாம் :-)

Pot"tea" kadai said...

பொட்டீயின் வெட்டி வேலை!
இப்பினூட்டத்தையும் சேர்த்து தங்களுடைய நட்சத்திர வாரத்தின் மொத்தப் பின்னூட்டங்களின் எண்ணிக்கை 1036*

ஹி...ஹி...

G.Ragavan said...

வாழ்த்துகள் முத்து. இந்த வாரம் இனிய வாரமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?