நான் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி விடுதி போரடித்தது என்று வெளியே அறை ஒரு வருடம் எடுத்து தங்கியிருந்தேன். அப்போது என் அறைக்கு எதிர் அறையில் ஒரு கிறிஸ்தவ அன்பர் தங்கியிருந்தார் .நான் தங்கியிருந்த வீட்டு ஓனரின் கல்யாணம் ஆன மகளை கரெக்ட் செய்திருந்த அவர் விடலை பசங்களான எங்களிடையே நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்ததில் ஆச்சரியமில்லை.( இந்த தகவல் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இந்த பதிவின் பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டது. கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டும் பட்டமும் உண்டு )
நான் ஆர்வகோளாறு (அதான் நல்லா தெரியுதுன்னு நீங்க சிரிக்கறது இங்கே கேட்கிறது) என்பதால் அடிக்கடி மொட்டைமாடியில் அரசியல் , சமூகம், பெண்கள்(?) ஆகிய பிரிவுகளில் விவாதங்கள் நடக்கும் .அவ்வாறு ஒரு விவாதத்தின் போது அந்த குறிப்பிட்ட நண்பர் கூறிய ஒரு வாக்கியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு இன்றும் அது பசுமையாக நினைவில் உள்ளது .ஆச்சரியாகவும் உள்ளது.
"என்ன பேசறீங்க நீங்க, பைபிள்ளயே சொல்லியிருக்கு", இதுதான் அந்த வாக்கியம்.
"பைபிள்ளயே சொல்லியிருந்தால் அதை கேள்வி கேட்கக்கூடாதா" இது நான் .
இதற்கு மேல் என்னுடன் பேசுவதை அவர் குறைத்துக்கொண்டார்.நானும் ஒதுங்கிக்கொண்டேன். கிறிஸ்தவ மதம் மட்டும் அல்ல..இந்து மதம் ஆனாலும் சரி.. இஸ்லாம் ஆனாலும் சரி..தோன்றி பல காலம் ஆகிய மதங்கள். அந்த காலகட்டத்தின் நாகரீக வளர்ச்சி , அறிவியல் வளர்ச்சி ஆகியவை பொறுத்து ஆயிரம் கொள்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த நாகரீக யுகத்திலும் இது பைபிள்ளேயே சொல்லியிருக்கிறது ,குரானிலே சொல்லி இருக்கிறது, கீதையிலேயே சொல்லியிருக்கிறது என்றெல்லாம் கூறுவது சரியா ?இதையெல்லாம் மறுபரீசிலனை பண்ணுவதில் என்ன தவறு?
கிறிஸ்தவ மிஷன்கள் மேல் இந்துத்வாவாதிகளால் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதே.
அதற்கு கிறிஸ்தவ மிஷன்களை ஆதரிப்போர் கூறும் பதில்கள் சில .
1.அரசியல் சட்டம் மதமாற்றத்தை தடுக்கவில்லை.
2.அவர்கள் இந்து மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளினால் தானாகவே மதம் மாறுகிறார்கள்.
3.கிறிஸ்தவ மிஷன்கள் நிறைய சேவை செய்கின்றன.
இவை நியாயமான பதில்களா என்று நானும் யோசித்ததுண்டு.
மதமாற்றத்தை அரசியல் சட்டம் தடுக்காதது சரிதான் என்றுதான் என் சிறுமூளை சொல்கிறது . ஏனெனில் அது கடைசியாக தனிமனித உரிமையை தடுக்கும் செயல்.அதை நடைமுறைப்படுத்துவதும் கடினம். ஆகவே இந்த விஷயத்தி்ல் நம்முடைய அரசியல் சட்ட ஆசான்கள் சரியான வேலையை செய்துள்ளனர்.
மற்ற இரண்டு பிரச்சினைகளும் சுலபத்தில் தீர்க்க முடியாதவை.
சேவையே வாழ்வின் கடமையாக செய்யும் பாதிரிமார்களையும் பார்த்துள்ளேன் . சேவையை வியாபாரமாக செய்து மதமாற்றம் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். கல்லூரிகளில் இதை அவர்கள் இதை செய்வதில்லை என்றே அறிகிறேன்.
அன்னை தெரசா என்று நாம் போற்றும் அந்த அம்மாவும் மதம் மாற்றும் வேலையை தீவிரமாக செய்தவர்தான் என்று சில தகவல்கள் கூறுகின்றன. மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி என்ற அந்த அமைப்பு மதமாறியவர்களுக்குத்தான் உதவி செய்வதாகவும் கூறுகிறார்கள் . ஆனால் உறுதியாக தகவல் என்னிடம் இல்லை.லாஜீக்கலாக பார்த்தால் இது கடினம் .எப்படி ஃபில்டர் செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள். ஒரு சாரார் தெரசா பரவாயில்லை என்றும் இப்போது வந்துள்ள நிர்மலா இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். மதமாற்றம் செய்யவேண்டி மட்டுமே சேவை செய்தால் அது சேவை அல்ல.வியாபாரம்தான்.
ஒரு கிறிஸ்தவ கல்யாணத்திற்கு போன என்னை ரவுண்ட் கட்டி அவர்கள் ஃபெல்லோஷிப்புக்கு (அப்படின்னா என்னங்க) இழுக்க முயற்சி நடந்தது. கடைசியில் நம் பாணியில் குண்டக்க மண்டக்க கேள்விகளை எழுப்பியவுடன் தான் என்னை விட்டார்கள்.
சர்ச்கள் பல ஏக்கர் நிலத்தை சுருட்டியதாகவும் ஒரு கருத்து வந்தது.இது நான் இதுவரை கேள்விப் படாதது.(இது இடைசெறுகல் ம்யூசுக்காக). நானும் என் சிறு மூளையையும் சில நண்பர்கள் துணைகொண்டும் விசாரித்தேன். எவ்வளவு ஏக்கர் திருடப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை .ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைப்பற்றி மேல்விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்.
கத்தோலிக்க சர்ச் 175 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆகவே அன்றிலிருந்து சேர்த்த சொத்துக்கள் என்று அர்த்தம் . (லயோலா, ஜோசப், சேவியர்) .பிராட்டஸ்டண்ட் கல்லூரிகளான கிறிஸ்டியன் காலேஜ் அவ்வண்ணமே.அவ்வாறு பெற்ற நிலங்களை எப்படி திரும்ப கேட்கமுடியும் ? இந்த பார்வை சரியா என்று தெரியவில்லை.பின்னூட்டத்தில பார்க்கலாம் .
இன்னொன்று மலைகளில் சிலுவை போடுவது, பிளஸ் போடுவது அப்புறம் கொஞ்சநாள் கழித்து அங்கே தேவாலயம் கட்டுவது என்று நடக்கும் குறும்புகள் இதுவும் விமர்சிக்கப்படுகிறது.நான் இதை சில இடங்களில் பார்த்துள்ளேன்.இந்த விமர்சனத்தில் நியாயம் உண்டு. இது இந்து மதத்திலும் உண்டு.
நடுவில் இந்த பிரச்சாரகர்கள் வேறு. "நொண்டிகள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் " என்றெல்லாம் இவர்கள் பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இரத்த அழுத்தம் ஜிவ்வென்று ஏறும்.அப்புறம் எதுக்கய்யா ஆஸ்பத்திரி ?. இவர்களை பிடித்து 420 பிரிவில் ஜெயிலில் போடவேண்டும் என்பதுதான் என் கருத்து.
இதையெல்லாம் தருமிக்கு கேள்வியாக வைத்தால் நானும் இதைத்தான்யா சொல்றேன்னு சொல்லிடுவார்.அவர் என்னை மாதிரி ஒரு நவீனத்துவ(?) ஆத்மா. ஆகவே தலைப்பு ச்சும்மா துதுபுலாலாயி.. கண்டுக்காதீங்க.
(மட்டுடுடுடுடுறுறுறுறுறுத்தததல் இருக்கும்.யோசித்து எழுதவும்.
ரீஜண்ட்டாக எழுதவும்(சாரி.டீஸண்ட்டாக எழுதவும்
Friday, May 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
116 comments:
// ஆனால் இந்த நாகரீக யுகத்திலும் இது பைபிள்ளேயே சொல்லியிருக்கிறது ,குரானிலே சொல்லி இருக்கிறது, கீதையிலேயே சொல்லியிருக்கிறது என்றெல்லாம் கூறுவது சரியா ?இதையெல்லாம் மறுபரீசிலனை பண்ணுவதில் என்ன தவறு?
//
எந்த தவறும் இல்லையென்பது என் கருத்து. நமக்கு தரப்பட்டிருக்கிர 100 கிராம் மூளை, சினிமா படங்களையும், விளையாட்டுகளையும் தாண்டி - நம்மையும், இந்த அண்டத்தையும், அறிவதற்கு உண்டான திறனை பெற்றிருக்கிறது. வேதங்களை எந்த இறைவன் தந்தா(னோ/ளோ), அவனேதான் மூளையும் தந்திருக்கிறான். கவனித்தில் கொள்ளவேண்டிய ஒரே அம்சம் - முன்முடிவுகளுடன் பரிசீலனை செய்ய முயலாமலிருப்பது.
//நான் தங்கியிருந்த வீட்டு ஓனரின் கல்யாணம் ஆன மகளை கரெக்ட் செய்திருந்த அவர்...//
//"என்ன பேசறீங்க நீங்க, பைபிள்ளயே சொல்லியிருக்கு",...//
//ஒரு கிறிஸ்தவ கல்யாணத்திற்கு போன என்னை ரவுண்ட் கட்டி அவர்கள் ஃபெல்லோஷிப்புக்கு...//
ஒன்றோடொன்று தொடர்புடையதோ?
இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ..
டொப்தா.. எல்லாம் யோசிக்கத்தெரியாது முத்து..
ஆனா.. அடுத்தவங்க ரோசிச்சு.. பேசினா.. வேடிக்கை பார்ப்பேன்.
//"என் சமூகம் உனக்கு
முன்பாக செல்லும்"
போப்பாண்டவர்
முன்னால்
பூனைப்படை!// என்று எழுதிய ந.முத்து-வின் கவிதை இங்கு பயன் படலாம். இது போன்ற அவரின் மேலும் சில கவிதைகளுக்கு இங்கு
போங்கள்...
முத்து
இந்த பதிவு உங்களிடம் சில தகவல்களை எதிர்பார்க்கிறது. நன்றி
http://akaravalai.blogspot.com/2006/05/blog-post.html
அன்புடன்
வலைஞன்
// சேவையை வியாபாரமாக செய்து மதமாற்றம் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். கல்லூரிகளில் இதை அவர்கள் இதை செய்வதில்லை என்றே அறிகிறேன். //
காருண்யா பொறியியல் கல்லூரியில் இது நடந்துள்ளது. பொட்டு வைக்க கூடாது பூ வைக்க கூடாதுன்னு பல பல கெடுபிடிகள் பண்ணியது அந்த நிர்வாகம். 1997/98 பெரிய கலவரம் நடந்தது. அப்புறம் தான் மாணவர்கள் வெளியில் தங்கி படிக்கவே அனுமதிக்கபட்டது, அதுக்கு முன்னாடி நடந்து போற தூரத்தில் வீடு இருந்தாலும் கல்லூரி விடுதியில் தான் தங்கி படிக்கவேண்டும் என்பது விதி. காருண்யா பற்றி எழுதுனா ஒரு தொடர் பதிவே போடலாம்.
இந்த காருண்யா கல்லூரியை நடத்துவது 'அற்புத சுகமளிக்கும்' "பால் தினகரன்".
1991 - 1998 -ல் காருண்யாவில் படித்த மாணவர்களிடம் கேட்டால் வண்டி வண்டியா கதை சொல்லுவாங்க.
இதுக்கு எப்படி கமெண்டரது??.......
1. ஆம் இது சரி
2. இல்ல இது சரி இல்ல
3. சரியா, இல்லயா தெரியலயே!!!!
4. சரி இல்ல செஞ்ச முற சரி இல்ல... வேற முற? ஹி..ஹி.. தெரியல்ல
5. எந்த முறல செஞ்சாலும் அவங்க இஷ்டம், வரவங்க இஷ்டம், நம்ம இஷ்டம் பேசறது மட்டும் தான... எப்படி பேசினா என்ன.
முத்து, ஏதாவது புரிஞ்சிச்சா?
:-))
முத்து,
ஒரே குழப்பமா இருக்கு.எக்கு தப்பா இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல விருப்பல்ல .மற்றவர்கள்(சிலரின் வழக்கமான நுனிப்புல் கிறிஸ்தவ எதிர்ப்பு கருத்துக்கள் நீங்கலாக) உருப்படியாக என்ன சொல்லுகிறார்கள் என பார்ப்போம் .அதன் பின் ஏதாவது தேவையெனில் சொல்கிறேன்.
//இன்னொன்று மலைகளில் சிலுவை போடுவது, பிளஸ் போடுவது அப்புறம் கொஞ்சநாள் கழித்து அங்கே தேவாலயம் கட்டுவது என்று நடக்கும் குறும்புகள் இதுவும் விமர்சிக்கப்படுகிறது.நான் இதை சில இடங்களில் பார்த்துள்ளேன்.இந்த விமர்சனத்தில் நியாயம் உண்டு. இது இந்து மதத்திலும் உண்டு//
ஈழத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் அரசமரம் இருக்கிறதோ அவ்விடங்களில் புத்தகோவில் கட்டி கையகப்படுத்துவது சிங்களவர்களின் ஒரு தந்திரம்.
ஆயுதங்களைக்காட்டி கிராமங்களில் இருந்து மக்களை துரத்தியபின்னர் காடையர்களை குடியேற்றி கிராமங்களின் பெயரை சிங்களத்தில் வைப்பது வேறொரு வகை.
//"பைபிள்ளயே சொல்லியிருந்தால் அதை கேள்வி கேட்கக்கூடாதா?"// - நானும் அடிக்கடி கேட்கும் கேள்வி.
//இன்னொன்று மலைகளில் சிலுவை போடுவது, பிளஸ் போடுவது // - கொடைக்கானல் மலையில் இன்னொரு ஆச்ஸ்ரீயத்தை பார்த்தேன். "இயேசு நல்லவர்" என எழுதியிருந்தார்கள். இதயே சொல்லித்தான் தெரியவேண்டுமென்றால்...! ஒன்றும் சொல்வதற்கில்லை.
சில வருடங்களுக்கு முன்பு, பல நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கி.மீ கல்லிலும், திருக்கடையூர் அபிராமி பெயர் தார் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இது மடத்தனமாக பட்டடதைவிட மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது - இப்படி எழுத எத்தனைபேர் எப்படியெல்லாம் இயங்கினார்கள் என்று!
//கத்தோலிக்க சர்ச் 175 ஆண்டு பழமை வாய்ந்தது. //
முத்து,
இது என்ன கணக்கு?.என்னோட மூதாதையர்கள் கத்தோலிக்கராகி 400 வருடங்கள் தாண்டி விட்டது
முத்து...உண்மைதான்...மதமாற்றம் என்பது தனிமனித உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. கூடாது. ஆனால் அந்த மதமாற்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதில் ஒரு வரைமுறை உள்ளது என்றே நான் கருதுகிறேன்.
முன்பெல்லாம் எந்த நாட்டிலும் யாரும் போய் மதப்பிரச்சாரம் செய்து விட முடியாது. ஒரு பாதிரியாரைச் சென்னையில் ஒரு பூசாரி குத்தி விட்டதாகச் சொல்வார்கள். ஆனால் கிருஸ்துவ மதம் பரவியது எப்படி என்று நமக்கு மறந்து போகும். ஒவ்வொரு மதத்திலும் (நாட்டிலும்) அந்தக்காலத்தில் அப்படித்தான் இருந்தது.
தமிழகத்தில் முதன் முதலில் மதப்பிரச்சாரம் என்று ஒன்றைச் செய்ய அனுமதி கொடுத்தது மதுரைத் திருமலை மன்னர் என்று வரலாறு சொல்கிறது. (இதுலயும் மதுரதான் முன்னால வரனுமா! :-) )
நம்மாளுக என்ன மெழுகு பொம்மையா....எல்லாஞ் சரிதான் - என்று அவர் அனுமதி கொடுத்திருக்கிறார்.
மற்றபடி மதம் மாறினால்தான் சேவை என்பதும் உதவி என்பதும் வியாபாரமே.
அதே போல மற்ற மதத்தவர்களைப் பாவி என்பதும் இழிந்தவர்கள் என்பதும் கடும் குற்றம் என்பது என் கருத்து. குலத்தாழ்ச்சி சொல்வது எவ்வளவு பிழையோ...அவ்வளவு பிழை மதத் தாழ்ச்சி சொல்வதும். சாதியால் ஒருவனைக் குறைத்துச் சொல்வதைத் தடுக்கச் சட்டம் இருப்பது போல மதத்தாலும் ஒருவரைக் குறைத்துச் சொல்லாமல் இருக்கச் சட்டம் வர வேண்டும் என்பது என் கருத்து.
Love thy neighbor-ன்னு பைபிள்ளயே சொல்லியிருக்கு. வீட்டுக்காரரின் பெண்ணும் neighborதானே.
முத்து அதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி டோண்டுக்கள் எப்படி உருவாகிறார்கள்? - மயிலாடுதுறை சுத்தியல் - எஸ்.கே என்ற நல்லவர் - போலி டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்
படிக்க தவறாதீர்கள் மறந்துவிடாதீர்கள்-மறுந்தும் இருந்துவிடாதீர்கள்
மேலே குறிப்பிட்டது - என்னுடைய அடுத்த பதிவின் ட்ரெய்லர்
மத மாற்றம் என்பது தமிழகத்துக்கு ஒண்ணும் புதுசில்லையே... சோழ, பல்லவ, பாண்டிய காலத்திலேயே, சமண, புத்த மதங்களுக்கு மாறிகிட்டே தானே இருந்தாங்க..
முடியாட்சி காலத்துல மன்னர்கள் மதம் மாறினாலே மக்களும் வழிக்கு வந்துருவாங்கன்னு மதத் தலைவர்கள் நினைச்சாங்க..
இப்போ குடியாட்சி.. மக்கள் மதம் மாறினாத் தான் வசதி.. அதான் மக்களுக்குப் புரிஞ்ச/புரியாத விஷயங்களைச் செய்து மதம் மாற்ற முயற்சி செய்யறாங்க..
சட்டத்தில ஒரு விசயம் இல்லங்கறதுக்காக எல்லாம் யாரும் செய்வதாக எனக்கு தெரியவில்லை. அத இங்க குறிப்பிட்டு சட்ட ஆசான்களின் வேலைய நீங்க பாராட்டுவது ?. வேற எதாவது உள்குத்து இருக்கா ? புரியலையே முத்து ??
etho periya manushan solreenga kettukka vendiyathu thaan
11 வருடங்கள், கத்தோலிக்கப் பள்ளியில் படித்ததால் எனக்கு கிருத்தவ மதத்தின் தாக்கங்கள் அதிகமாகவே உண்டு. பைபிளை மத நூலாகப் பாராமல் தத்துவ நூலாக கருதி படித்துள்ளேன். நான் வாங்கிய பரிசுப் புத்தகங்களில் அதிகம் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம்தான். பொதுவாக எனக்கு கிருத்துவத்தின் மற்ற பிரிவுகளைக் காட்டிலும் எனக்கு கத்தோலிக்க கிருத்தவர்களைப் பிடிக்கும், அவர்கள் தங்களது பாரம்பரிய தமிழ் அடையாளாங்களை விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் இந்த பெந்தகோஸ்தே பிரிவினர் இவற்றையெல்லாம் "சாத்தானின்" அடையாளங்கள் என்று கூறுவது ஜீரணிக்க முடியவில்லை. பெந்தகோஸ்தே இல்ல வழிபாட்டு ஜெபங்களில் எல்லா சாத்தானின் வழிபாட்டு ஸ்தலங்களும் நாசமாகட்டும் என்று வெளிப்படையாக பாடுவார்கள். இந்த வெளிப்படையான "கோஷ்ங்களே" சிலரை ஆத்திரமடையச் செய்கிறது என்பது என் கருத்து.
உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்து போகிறேன். என்னுடைய அறை நன்பர் 'Genovah community' என்ற கிறிஸ்துவ அமைப்பை சார்ந்தவர். அவரின் பைபிள் குறித்தான புரிதல் மிகவும் வியப்பளிக்க கூடியதாய் இருந்தது.
இந்த நன்பரை மிக நெருங்கிய தோழர் அவரின் மகளுடைய 3வது பிறந்த நாள் பார்டிக்கு அழைத்திருந்தார். பிறந்த நாள் கொண்டாடத்திற்கு எல்லா எற்பாடுகளையும் செய்து கொடுத்த அவர், கடைசியில் கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள வில்லை. 'பைபிள் இது போன்ற கொண்டடங்களை அங்கிகரிப்பதில்லை என கூறினார்.
மிகவும் வேதனையாகவும், சிரிப்பாகவும் போய்விட்டது.
சல்மான்,
நன்றி நண்பரே..இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதி வைத்ததுதான். ஆகவே யாருக்காகவும் பயந்து நான் எழுதவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
பொட்டீக்கடை மற்றும் மற்ற நண்பர்கள்,
அந்த நண்பர் பிறன்மனை நோக்கியவர் ஆயினும் புனித பிம்பமாக பைபிளுக்காக வாதாடியவர்..இந்த முரணைத்தான் சொன்னேன்.
இது எல்லா மதத்திலும் குறிப்பாக பல புனித பிம்பங்களிடமும் உண்டு.
பாலபாரதி,
நன்றி...கவிதை படிக்கிற அளவிற்கு இப்போ நேரம் இல்லை...அடுத்த வாரம் ..கோவிச்சுக்காதீங்க தல..
வலைஞன்,
பதில் உண்டு...சுருக்கமாக..இது ஒரு மத்திய அரசு தி்ட்டம்... இருவருக்கும் இதில் பெரிய பங்கு இல்லை.
குறும்பன்,
காருண்யாவில் இந்த சீப்பான வியாபாரம் நடந்தால் அது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது...
இந்த தினகரன் ஒரு ஃபிராடு என்று கிறிஸ்தவ அன்பர்களே சொல்லி கேட்டுள்ளேன்.இவர் கடவுளை நேரில் பார்த்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமோ?
நன்மனம்,
உங்களை சில நாட்களாக புரிந்துக்கொள்ள முடியவில்லையே? ஏன்?
ஜோ,
வழக்கம் போல் எழுதுங்க..ஒண்ணும் பிரச்சினை இல்லை...
ஈழ அனானி.
தகவலுக்கு நன்றி
அருள்குமார்,
நன்றி..
வியாபார போட்டிதான்....வேற என்ன?
ஜோ,
நான் சொன்னது காலேஜ் வயசுதான்..ஏதாவது தவறு என்றால் தயங்காமல் பின்னூட்டத்தில் எழுதுங்கள்....
ராகவன்,
உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்...
நன்றி டோண்டு,
பதில் மேலே பொட்டீக்கடையில் உள்ளது...நீங்கள் ஓரளவு நெருங்கிவிட்டீர்கள்...
பொன்ஸ்,
கருத்திற்கு நன்றி....வித்தியாசமான ஆங்கிளில் இருந்தது...வாழ்த்துக்கள்...
பட்டணத்து ராசா,
விளக்கமாக எழுதவும்..புரியவில்லை..நீங்கள் செர்லலுங்கள்..கட்டாய மதமாற்றத்தை எப்படி Define செய்வீர்கள்?
மணி,
கிண்டல் பண்ணாதீரும்.....
வினையூக்கி,
பொந்தேகொஸ்த் பற்றி நானும் கெள்விப்பட்டு அதிர்ந்திருககிறென்..கத்து ஊரை கூட்டுவாங்களெ அவங்கதானே?
நந்தன்,
அதேதான்..என்னத்தை சொல்றது?
இடது சாரி சிந்தனையுள்ளவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்களை விமர்சனம் செய்யும் போது அறிவுத்தளத்தில் வைத்து எடுத்துக் கொள்ளும்போது, ஒரு X மதத்தை சார்ந்தவன் Y மதத்தை சார்ந்த ஒரு குறிப்பிட்ட விசயத்தை விமரசனம் செய்யும் போது மக்கள் ஏன் கோபப் படுகிறார்கள். ஏன் மதவாதி(வியாதி) என்ற முத்திரை. மத சம்பந்தப் பட்ட விசயங்களை அறிவுப்பூரவமாக அணுக முடியாதா???????
முத்து,
இப்போதைக்கு ஒரே ஒரு கருத்தை சொல்கிறேன் .கிறிஸ்தவர்கள் குறித்த பரவலான தவறான புரிந்துணர்வும் ,அவற்றின் பிரிவுகள்குறித்த தெளிவும் பலரிடம் இல்லை என்பதே என் கருத்து .ஒரு ஊரில் 1000 கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் ,அதில் 600 பேர் கத்தோலிக்கர்களாகவும் ,350 பேர் புரோட்டஸ்டாண்டுகளாகவும் ,மீதி 50 பேர் பெந்தகோஸ்தே போன்ற மற்ற சபையினராகவும் இருப்பார்கள் .இதில் இந்த 50 பேர் தான் பெரும்பாலும் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள் .அறை ஒன்றை வாடகைப் பிடித்து மைக் கைட்டி ஜெபம் செய்வது ,மற்றவர்களை (கத்தோலிக்கர்களையும் சேர்த்து) பாவிகள் என்று சொல்லுவது ,வீதியில் நின்று பிட் நோட்டீஸ் கொடுப்பது என்று எல்லா வேலைகளையும் செய்பவர்கள் இந்த சொற்ப கிறிஸ்துவர்கள் ..ஆனால் இவர்களின் இந்த செயல் பாட்டால் மற்ற மதத்தினர் கிறிஸ்தவர்கள் எல்லோரும் இப்படித் தான் போலும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கே தெளிவில்லை .சமீபத்தில் தங்கத் தாலி கொடுப்பது என்ற வாக்குறுதியில் கிறிஸ்தவர்கள் மோதிரமாக போட்டுக்கொள்ளலாம் என்ரு விளக்கம் வேறு .தமிழக கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினரான கத்தோலிக்கர்கள் தங்கத் தாலி தான் அணிகிறார்கள் ,பொட்டு வைத்துக்கொள்கிறார்கள் என்று இவர்களுக்கு தெரியுமா?
A very different blog
I wonder how you are choosing a wide variety of topics.
Two per day....!!!
Great Stuffs.
//ஒரு கிறிஸ்தவ கல்யாணத்திற்கு போன என்னை ரவுண்ட் கட்டி அவர்கள் ஃபெல்லோஷிப்புக்கு (அப்படின்னா என்னங்க) இழுக்க முயற்சி நடந்தது.//
இது எனக்கே பல முறை நடந்துள்ளது .பெந்த கோஸ்தே போன்ற மற்ற சபையினர் இப்போது குறி வைப்பது மற்ற மதத்தினரை விட கத்தோலிக்கரைத் தான்.
கிறிஸ்தவ மிஷன்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஆதரிப்பவர்களின் முதல கருத்தாக நீஙகள வைத்துள்ள "அரசியல் சட்டம் மதமாற்றத்தை தடுக்கவில்லை" என்பது பொதுவில் அடிப்படை இல்லாதாக எனக்கு பட்டதால் அவ்வாறு சொன்னேன். சட்டத்தில் எதுஎது தடுக்குப்படவில்லை என்று பார்த்து இது செயயப்படுவதில்லை என்றே படுகிறது. ஆனால் ஜெயலலிதா கொண்டுவந்த கட்டாய மதமாற்று சட்டத்தை இங்கு கோடிட்டு காட்ட மட்டுமே நீங்கள் சொல்லியிருந்தால ம் சரி :-)
ஜோ,
இதுபற்றியான உங்கள் பதிவ படிச்சி இருக்கேன் இதுபற்றி தெரியாம் இருக்கோம் என்பது உண்மைதாம்.
//A very different blog
I wonder how you are choosing a wide variety of topics.
Two per day....!!!
Great Stuffs. //
தல..அப்படி இல்லை அது...நான் ஒரு அற்ப புழு..
என்னை கேட்டயே..அவன கேட்டயான்னு ஒவ்வொறுத்தரா சொல்ல ..சரி நீ தகவல் சொல்லு நான் கேக்கறன்னு நான் சொல்ல..
அப்படி வளருது இது..கடைசில எல்லோரும் என்னை உதைப்பான்னு நினைக்கிறேன்..
மத்தபடி பயப்படாதீங்க..என்னைக்கு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மாட்ச்?
// ஆனால் இந்த பெந்தகோஸ்தே பிரிவினர் இவற்றையெல்லாம் "சாத்தானின்" அடையாளங்கள் என்று கூறுவது ஜீரணிக்க முடியவில்லை. பெந்தகோஸ்தே இல்ல வழிபாட்டு ஜெபங்களில் எல்லா சாத்தானின் வழிபாட்டு ஸ்தலங்களும் நாசமாகட்டும் என்று வெளிப்படையாக பாடுவார்கள். இந்த வெளிப்படையான "கோஷ்ங்களே" சிலரை ஆத்திரமடையச் செய்கிறது என்பது என் கருத்து. //
வினையூக்கி இதைத்தான் நான் நினைத்திருந்தேன். தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்ததால் இரண்டு விதமான கிருஸ்துவர்களையும் பார்த்திருக்கிறேன்.
பொதுவாகவே ஊடகங்கள் கிருஸ்துவர் என்றால் பொட்டு வைக்க மாட்டார்கள் என்றுதான் வரும். ஆனால் கத்தோலிக்கர்கள் அப்படியல்ல. தமிழ் அடையாளங்களையும் சுமந்து கொண்டு கத்தோலிக்க அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது. இது மிகப் பெரிய பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பொட்டு வைத்துக் கொள்வார்கள். தாலி, விளக்கு (சாமிக்கு பதிலாக சிலுவை இருக்கும்)...இன்னும் நிறைய. நாம் ஏதாவது கொடுத்தால் கூட பொதுவாக வாங்கிச் சாப்பிடுவார்கள்.
தீபாவளி பொங்கல் பலகாரங்கள் கொண்டு போனால்....பள்ளியில் பலர் வாங்க மாட்டார்கள். தப்பென்று. ஆனால் அவர்கள் கிருஸ்துமஸ் கேக் தரும் போது...நான் வாங்கி வெட்டியிருக்கிறேன். ஹி ஹி...உள்ளபடிச் சொன்னா...அவங்க வீட்டுலயே போய் நல்லா கட்டோ கட்டுன்னு கட்டியிருக்கேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி பொங்கல் ஏன் தமிழர் பண்டிகையாக் கொண்டாடப் படுறது இல்லைன்னு ஒரு விவாதம் நடந்தது. அதில் ஒரு நண்பர் பொங்கல் பண்டிகையில் இந்துத்துவா நுழைந்து விட்டது. ஆகையால் கொண்டாட முடியாது என்றார். சரி. இந்துத்துவா இல்லாமல் அவர்கள் கொண்டாட வேண்டியதுதானே. அதில் என்ன தவறு இருக்கிறது?
அதை விடுத்து அடுத்தவரைச் சாத்தான் அடையாளங்கள் என்பதெல்லாம் டூ மச். தவறுதான்.
இன்னும் ஒரு தகவல். இதை நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் இங்கும் சொல்கிறேன்.
தமிழில் பெயர் வைக்க வேண்டும்...பலகை வைக்க வேண்டும் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது நினைவிருக்கும்.
அப்பொழுது அவர்களின் எண்ணம் சரி.செயல்படுத்தும் வண்ணம் மாறவேண்டும் என்றேன் நான். ஆனால் அந்தக் கட்சியின் வழியே சரி என்று பலர் கூறினார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால்....இவர்கள் யாருக்கும் முறையான தமிழ்ப் பெயர் கிடையாது...சரி...அதாவது பெற்றோர் வைத்தது. தம்முடைய பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயர் வைக்காதவர்கள்.
இதுதான் இன்றைய உண்மையான நிலை.
தினகரன் கடவுளை நேரில் பார்த்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமோ?//
இல்லைங்க.இது தப்பான செய்தி.நான் இவரை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.:-))
சென்ற பின்னூட்டத்தின் தொடர்ச்சி....
இதை ஏன் சொல்கிறேன் என்றால்...பன்முகத் தன்மை அழிகிறது அழிகிறது என்று சொல்கின்றவர்கள்...அது மதமாற்றத்தாலும் அழிகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். (நான் மதமாற்றத்தின் எதிரி அல்ல என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். அது அவரவர் உரிமை.)
மதம் மாறிய பிறகு பெரும்பாலானோர் அவர்கள் தமிழ் அடையாளங்களை இழக்கத்தானே செய்கிறார்கள். அதற்கு எதிராக யாரும் போராட்டம் செய்வதில்லை.
இந்தச் சூழ்நிலையில் தங்களது தமிழ் அடையாளங்களை முடிந்த வரை தொடர்ந்து செல்லும் தமிழ் கத்தோலிக்கர்களின் பெரும்பாலோனோருக்கு பாராட்டு தெரிவிப்பதே சரியாக இருக்கும்.
ராகவன்,
நீங்க நல்லா தெளிவா தான் இருக்கீங்க.
முத்து,
என்னுடைய பழைய பதிவு தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
//அதை விடுத்து அடுத்தவரைச் சாத்தான் அடையாளங்கள் என்பதெல்லாம் டூ மச்.//
இல்லை..த்ரீ மச்.
இந்த அதி தீவிர சபை கிறிஸ்தவர்கள் பைபிளை நன்றாக மனப்பாடம் செய்து வசன எண்களோடு ஒப்பிப்பார்கள் .ஆனால் புரிந்து கொள்வார்களா என்றால் இல்லை..ஜெபிக்கும் முறை பற்றி இயேசு சொல்லும் போது அறைக்குள் சென்று கதவை மூடி அமைதியாக தந்தையிடம் ஜெபிக்க வேண்டும் .இவர்களோ மொத்தம் 10 பேர் அறையில் இருந்து கொண்டு மைக் வைத்து ஊர் கேட்கவேண்டும் என்றே ஜெபிக்கிறார்கள் .."வெளிவேடக் காரர்களே !உங்களுக்கு ஐயோ கேடு"..இதுவும் இயேசு சொன்னது தான்.
தருமி பெயரையா இந்தப்பதிவுக்கு உபயோகப்படுத்துவது? யாராவது மதநம்பிக்கை கொண்டவர் பெயர் கூடாதா?
ஜோவின் பின்னூட்டங்கள் பல சந்தேகங்களை நிவர்த்திக்கின்றன. நல்ல பதில்கள்.
மதமாற்றம் தவறல்ல - மற்றவரைப்புண்படுத்தி மாற்றுவது - மகேந்திர பல்லவன் காலத்தில் இருந்தாலும் இன்று இருந்தாலும் தவறு என்பதே என் கருத்து:-)
Dear Muthu,
I need one day leave for today
as today is a holiday and as a house wife i have lot of work today.
Pls, excuse me.
Muthu,
Is there any internet/power cut in Madurai.
Senior is yet to comment on this topic eventhough the title is pointing to him.
Even Muse is very quiet!!!. Looks like he is not happy with your post. You should write more strongly against Christians (read some RSS materials - you will get enough info!!!).
"நொண்டிகள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் " என்றெல்லாம் இவர்கள் பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இரத்த அழுத்தம் ஜிவ்வென்று ஏறும்.
ஐய்யோ அத ஏன் கேக்குறீங்க முத்து!
நானும் என் நன்பர் ஹரியும் சென்னை கடற்கரைக்கு சென்றிருந்தோம். அப்போது பிரம்மாண்டமான கிறித்துவ பிரச்சாரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நாங்களும் சரி என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கப்போயிருந்தோம். நாங்களும் கூட்டத்தில் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டோம். மேடையில் இருப்பவர் ஆங்கிலத்தில் கத்த, அதை தமிழில் இருப்பவர் திரும்ப கத்த... தாங்கலை...
அல்லே லூயா என்று குரலெழுப்பும் போது ஆவேசமாக கண்ணீரோடு பெண்கள் கதறுவதும், பித்துப் பிடித்தவர்களைப் போல் மக்களை மாக்களாக்குவதும் சகிக்கலை... நிச்சயம் இதுல ஒரு சைக்காலஜி இருக்கு.
அத்தோடு நீங்கள் கூறிய பாணியில் முடவன் நடக்கிறான், குருடன் பார்க்கிறான் என்று கத்திக் கொண்டே இருக்கே, அந்த நேரத்தில் இரண்டு காலையும் இழந்த ஒரு நாய் நடக்க முடியாமல் இழுத்துக் கொண்டே மேடை பக்கமாக நடந்து கொண்டு சென்றது அவரது பேச்சை கேலி செய்வது போல் அமைந்து இருந்தது. அப்புறம் என்ன பரிதாபத்தோடு நாங்களும் வெளியேறினோம்...
2. இதேபோல் இன்னொரு சம்பவம். நான் சிறு வயதில் இருந்தபோது நடந்தது. எங்களுக்கு தெரிந்த கிறித்துவர் வீட்டில் அழகான 3 பெண்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு தீவிர காய்ச்சல் வந்து விட்டது. அவர் ஜூரம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களோ கடவுள் காப்பாற்றுவார் என்று பைபிளை இரவும் - பகலுமாக வாசித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் கடவுள் அந்த அழகான பெண்ணை (அக்காவை) அவரிடம் அழைத்துக் கொண்டார். இதுவும் என் மனதில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம். மூடநம்பிக்கைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். அதைவிட கொடுமை இவர்கள் மதம் என்ற பெயரால் மக்களிடையே போதையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சுகபோகிகளாக சுற்றுவது ஒரு விந்தை.
3. இன்னொரு அனுபவம் ஷாக்கானது. கொஞ்ச நாள் வேலையில்லாம் இயக்க வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் நன்பன் ஹரி எனக்கு மரத்திற்கு வார்னிஷ் போடும் வேலை செய்வதற்கு கற்றுக் கொடுத்தான். இப்போது நான் நல்லா வார்னிஷ் போடுவேன். (அதுக்காக யாரும் கூப்பிட்டுடாதீங்க...) நாங்கள் இருவரும் சேர்ந்து பல இடங்களில் காண்ட்டிராக்ட் எடுத்து நல்ல வேலை செய்தோம். அந்த நேரத்தில் மூலக்கடையில் உள்ள ஒரு பெரிய பெந்தகோசுதே சர்ச் கட்டிக் கொண்டு இருந்தனர். அங்கு பெரிய - பெரிய கதவு வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த இடத்தில் சென்று வேலை கேட்டோம். அவர்கள் பாதிரியாரை பார்க்கச் சொன்னார்கள். நாங்களும் பாதிரியாருக்கு எங்கள் கைங்கிரியத்தை நன்றாக எடுத்துரைத்தோம். அப்புறம் என்ன! சரி வீட்டுக்க வாங்க என்று கூப்பிட்டுச் சென்றார். அங்கு ரேட்டெல்லாம் பேசி முடித்து விட்டது. பின்னர் அவர் கூறினார். இதை வெளியில் சொல்லக் கூடாது. இதில் எனக்கு 25 சதவீதம் கமிஷன் கொடுத்து விட வேண்டும் என்று...
அப்புறம் என்ன அய்யய்யோ உங்களையெல்லாம் ஏசுதான் காப்பாத்தனும்னு.... நாங்கள் வந்துட்டோம்....
பட்டணத்து ராசா,பெனாத்தல் சுரேஷ்..நன்றி!
நான் பள்ளி செல்லும் வழியில் ஒரு பனைமரம். திடீர்னு ஒருநாள் அதில அடிக்கபட்ட ஆணியில மாலை ஒண்ணு. கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்போ கோவில் ஒண்ணு. நமது மக்களின் நம்பிக்கையின் வளர்ச்சி.
எங்கு பார்த்தாலும் காளான் முளைத்தது போல ஜெபக்கூடங்கள். ஜெபக்கூட அதிபர் (தொழிலுங்க! :)) சில வருடங்களில் பெரும் பணக்காரர் ஆகிடுறார். கேட்டா, ஜீசஸ் தறாராம். தினகரன் கதை எல்லாருக்கும் தெரியும். மோகன் சி. லாசரஸ், பெர்க்மான்ஸ் என இந்த பட்டியல் வளருது.
இன்றைய காலச்சூழலுக்கு ஏற்றபடி எல்லா மதங்களையும் புனித நூல்களையும் மறுபரிச்சீலனை செய்வதும், தெளிவான திருத்தங்கள் செய்வதும் அவசியம். ஒரு காலச்சூழலில் சொல்லப்பட்ட தத்துவங்களை மறு காலச்சூழலுக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்வது அவசியம்.
//ramachandranusha said...
Dear Muthu,
I need one day leave for today
as today is a holiday and as a house wife i have lot of work today.
Pls, excuse me.//
உஷா-அக்காவுக்கு லீவு குடுத்தீங்களா முத்து? லீவு லெட்டர் வந்திருக்கே :D
///முன்பெல்லாம் எந்த நாட்டிலும் யாரும் போய் மதப்பிரச்சாரம் செய்து விட முடியாது. ஒரு பாதிரியாரைச் சென்னையில் ஒரு பூசாரி குத்தி விட்டதாகச் சொல்வார்கள். ஆனால் கிருஸ்துவ மதம் பரவியது எப்படி என்று நமக்கு மறந்து போகும். ஒவ்வொரு மதத்திலும் (நாட்டிலும்) அந்தக்காலத்தில் அப்படித்தான் இருந்தது.
தமிழகத்தில் முதன் முதலில் மதப்பிரச்சாரம் என்று ஒன்றைச் செய்ய அனுமதி கொடுத்தது மதுரைத் திருமலை மன்னர் என்று வரலாறு சொல்கிறது. (இதுலயும் மதுரதான் முன்னால வரனுமா! :-) )
///////
அந்த காலத்துல பல பாதிரியார்கள் கடல் கடந்து வந்து நம்ம நாட்டுல மதப் பிரசாரம் பண்ணி இருக்காங்க. முக்கியமா கடலோர மக்களை அவங்க ஈஸியா கவர் பண்ணாங்க. சமீபத்துல ஒரு பதிவுல, அந்தணர்களும், மந்திரிகளும் எப்படி எல்லாம் இந்த மீன் பிடி ஜாதிகளிடமும், நாடர் மக்களிடமும் அத்து மீறினார்கள்னு படிச்சேன். அதனால கிறித்துவ மெஷினெரிகள் பண்ண நல்ல காரியங்கள் அவங்கள நேரடியா அடைஞ்சது. மக்கள் கூட்டம் கூட்டமா மதம் மாறினாங்க.
ஆனா இப்போ நிலமை வேற; அதிகமா கிறிஸ்டியன் டிராமாவுல நடிப்பதால் என் அம்மாவை மதம் மாறும்படி அன்புடன் கேட்கிறார்கள்.
என் அண்ணன் மதம் மாறினால் வெளினாடு பயணத்துக்கு ஸ்பான்ஸ்ர் செய்வதாக ஒரு பாஸ்டர் சொன்னார்.
"Is there any internet/power cut in Madurai."// மன்னிக்கணும் முத்து..காலையில இருந்த நானும் மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தேன். கரண்ட் இருக்கு; நெட் கனக்ட் ஆயிருக்கு; ஆனா ஒண்ணும் வேலைக்காகலை. இப்போதான் ஒருவழியா நெட் கதவு திறந்திச்சு. உடனே ஓடியாந்தேன்..மூச்சு வாங்குது...ஹப்பா...
அது என்னங்க நானும் பயந்துகிட்டே வந்தா நம்ம சமாச்சாரம் ஒண்ணுமில்லே!சுரேஷ் சொன்னதுமாதிரி தினகரனுக்கு/????/ ....க்கு கேள்வின்னு போடறத விட்டுட்டு...என்னங்க நீங்க.
மதமாற்றம் சரியா தவறா என்பதைவிடவும் exகிறித்துவன் என்ற முறையில் ஒன்றுமட்டும் சொல்ல முடியும். நீங்க என்ன ரூல்ஸ் போட்டாலும், என்ன செய்தாலும் கிறித்துவர்களை மதமாற்றம் செய்ய முயலுவதிலிருந்து மாற்ற முடியாது என்பது என் கருத்து. ஏனெனில் பைபிளில் எனக்கு மிகவும் பிடித்ததும், முற்றிலும் பிடிக்காததும் இந்த இரண்டு:
1. உன் அயலான் உனக்கு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாயோ, அதை அவனுக்குச் செய்துவிடு. (இதைவிட மனித நேயத்தை அழகாகச் சொல்ல முடியுமா என்ன?)
2. இதை (ஏசுவின் போதனைகளை) நாலா திசையிலும் போய் பிரசங்கியுங்கள். ???
உங்கள் பதிவில் உள்ல கருத்துக்கள் பற்றி இரண்டு, மூன்று மறுப்புகள்:
* எனக்குத் தெரிந்தவரை மதர் தெரசா பாவப்பட்டவர்களுக்கு நல்ல மரணத்தைத் தர உதவினார்; அவர் யாரையும் மத மாற்றம் செய்ததாகக் கேள்விப்படவில்லை. அதனாலேயே அவர்கள் மீது எனக்கு மிக்க மதிப்பு உண்டு.
* எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பேயே 45 மாணவர்கள் மட்டுமே இருக்கும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரக்கூடிய main hall-யைக் கட்டிய மிஷனரிகளை (Zumbro) நல்ல vissionaries என்றுதான் சொல்லவேண்டும். இதை எதற்குச் சொல்கிறேனென்றால், பள்ளிகளும், கல்லூரிகளும், கோயில்களும் கட்டியவர்கள் பெரிதாகவே நினைத்து, நிறைய இடங்களை வாங்கியதனால்தான் இன்றைய கிறித்துவ பள்ளிகள், கல்லூரிகள் பெரிய வளாகங்களோடு உள்ளன.
* "கத்தோலிக்க சர்ச் 175 ஆண்டு பழமை வாய்ந்தது."// இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount. அவர்கள் நிறுவிய பல பள்ளிகள், கல்லூரிகள் 100 முதல் 175 ஆண்டு பழமையானவைகள்.
"இதையெல்லாம் தருமிக்கு கேள்வியாக வைத்தால் நானும் இதைத்தான்யா சொல்றேன்னு சொல்லிடுவார்."//
பாத்தீங்களா, நான் எவ்வளவு எதிர் கருத்துக்கள் கொடுத்திருக்கேன். ஹ..!
முத்து,
//Anonymous said...
Muthu,
Is there any internet/power cut in Madurai.
Senior is yet to comment on this topic eventhough the title is pointing to him.//
என்னைத் தேடிக் களைத்த அந்த அனானி யாருன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்...
எனக்கு ஒரு சந்தேகம்! ஜெபம் பண்ணும்போதும் பைபிள் வாசகங்களைச் சுவர்களில் எழுதியிருப்பதிலும் பயன்படுத்தற தமிழ் ஏன் வித்தியாசமாக இருக்கிறது? யாருக்காவது தெரியுமா?
நன்றி
கமல்
//எனக்கு ஒரு சந்தேகம்! ஜெபம் பண்ணும்போதும் பைபிள் வாசகங்களைச் சுவர்களில் எழுதியிருப்பதிலும் பயன்படுத்தற தமிழ் ஏன் வித்தியாசமாக இருக்கிறது? யாருக்காவது தெரியுமா?//
பைபிளை தமிழ் படுத்துவதில் வெவ்வேறு கிறிஸ்துவ சபைப்பிரிவுகளும் வேறு வேறு நடையை கையாண்டிருக்கின்றன. உதாரனமாக 'தேவன்' ,'வாசம் செய்கிறார்' 'ஸ்தோத்திரம்' ,'அனுகூலம்' இப்படிப்பட்ட வார்த்தைகள் கத்தோலிக்கர் அல்லாத பைபிளில் இருக்கும் .பொதுவாக கத்தோலிக்கர் அல்லாத கோவில் சுவர்களில் பைபிள் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் .ஆனால் தப்பித்தவறி கத்தோலிக்க கோவிலில் வாசிக்கப்படும் பைபிள் வார்த்தைகளை நீங்கள் கேட்க நேரிட்டால் ,உங்களுக்கு வித்தியாசம் புரியும் .அவை 'தேவன்' என்பதை 'இறைவன்' அல்லது 'கடவுள்' என்றும் ,'வாசம் செய்கிறார்' என்பதை 'வாழ்கிறார்' அல்லது 'வீற்றிருக்கிறார்' என்றும் ,'அனுகூலம்' என்பதை 'உதவி' அல்லது 'பயன்' என்றும் இயல்பான தமிழில் இருக்கும்
வினையூக்கி,
என் நம்பிக்கையை புண்படுத்தி விட்டாய் என்று அனாவசியமாக அடுத்தவரை மிரட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
ஜோ,
உங்கள் பழைய பதிவை படித்துள்ளேன்.பல பின்னூட்டங்களில் உங்கள் நிலைபாட்டை பார்த்துள்ளென். நீங்க எழுதுங்க.நான் சொன்னது ஒரு விமர்சன அணுகுமுறை.அவ்வளவுதான்.கலக்குங்க.
உங்களையே கத்தோலிக்ல இருந்து பெந்தேகோஸ்த் மாற்ற முயற்சியா? இன்ட்ரெஸ்ட்டிங்..
பட்டணத்து ராசா,
my simple question to you is " how will you define forcible conversion?
செல்வன்,
செல்வன் டச் என்பது இதுதானோ?:))
பினாத்தல்,
நன்றி...தருமி பெயருக்கு விளக்கம் கடைசியில் உள்ளது...
உஷா.
லீவு லெட்டர்ல மிஷ்டேக்..இருக்கு..ரிஜெக்டட்...
அனானி,
தருமி வந்துட்டாருய்யா..வந்துட்டாரு...
சந்திப்பு,
//அல்லே லூயா என்று குரலெழுப்பும் போது ஆவேசமாக கண்ணீரோடு பெண்கள் கதறுவதும்,//
ஆமாங்க..நானும் பாத்திருக்கேன்..இது ஏங்க?
//ஆனால் அவர்களோ கடவுள் காப்பாற்றுவார் என்று பைபிளை இரவும் - பகலுமாக வாசித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் கடவுள் அந்த அழகான பெண்ணை (அக்காவை) அவரிடம் அழைத்துக் கொண்டார். //
really..how foolish?
//இதில் எனக்கு 25 சதவீதம் கமிஷன் கொடுத்து விட வேண்டும் என்று...
அப்புறம் என்ன அய்யய்யோ உங்களையெல்லாம் ஏசுதான் காப்பாத்தனும்னு...//
இந்தியா....
திரு,
மறுபரிசீலனை என்றாலே துள்ளி குதிக்கிறார்களே?
//உஷா-அக்காவுக்கு லீவு குடுத்தீங்களா முத்து? லீவு லெட்டர் வந்திருக்கே :D//
application Rejected...
thanks prasanna,
//என் அண்ணன் மதம் மாறினால் வெளினாடு பயணத்துக்கு ஸ்பான்ஸ்ர் செய்வதாக ஒரு பாஸ்டர் சொன்னார்.//
வெளிநாடு போயிட்டு அப்புறம் ஆப்பு வெச்சிருக்கலாமே?
தருமி,
pls forgive i have misused your name :) your responses are appropriate..thanks..
thanks kamal
thanks joe
தமிழினி,
உங்களது இந்த பதிவைப் பற்றி அப்புறமாக என் கருத்தை சொல்லுகிறேன்.
இப்போது ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
ஏசு சொன்னார்: I am the way.
போப்பாண்டவர் சொல்கிறார்: Mine is THE way
ஜி ராகவன்,
>>>>>>ஆனால் கத்தோலிக்கர்கள் அப்படியல்ல. தமிழ் அடையாளங்களையும் சுமந்து கொண்டு கத்தோலிக்க அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.<<<<<
>>>>>>>ஒரு நண்பர் பொங்கல் பண்டிகையில் இந்துத்துவா நுழைந்து விட்டது. ஆகையால் கொண்டாட முடியாது என்றார்.<<<<<<<
மலையாள கிருத்துவர்கள் ஓணத்தன்று தங்களின் மலையாளக் கலாச்சாரத்தைப் பெருமையாக வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. தங்க ஜரிகை போட்ட வெண்பட்டுப்போன்ற புடவை அணிந்து, விரிந்து பரவும் கூந்தல் நுனியில் மட்டும் முடிக்கப்பட்டு, ஹ்ம்ம்ம்ம்ம், ...... என் மக்கள், என் மக்கள் என்று மனது பெருமிதம் கொள்ளும். இத்தனைக்கும் வாமனின் வரத்தால் மகாபலி பாதாள லோகத்திலிருந்து வெளிவந்து தன் மக்களை பார்க்கும் நிகழ்ச்சியே ஓணம். இந்திய கலாச்சாரத்தை போற்றுவது யேசுவுக்கும் பிடித்தது என்பது அவர்களுக்குத் தெரிகிறது.
தமிழர்கள்?
அது சரி. எவனோ ஒரு வெள்ளைக்காரன் ஜெர்மனியில் அம்மணமாக போனான் என்று தானும் அம்மணமாக நின்று அதை புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.
திரு. கமல் அவர்களே,
>>>>பைபிள் வாசகங்களைச் சுவர்களில் எழுதியிருப்பதிலும் பயன்படுத்தற தமிழ் ஏன் வித்தியாசமாக இருக்கிறது? <<<<<
ஏனென்றால் அது பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்தில் இருந்த பேச்சுத் தமிழ். அக்காலத்தில் கிருத்துவத்தை தமிழில் பரப்ப மேற்கொண்ட முயற்சிகளில் தமிழுக்குக் கிடைத்த வரப்ரஸாதம் தமிழ் பைபிள் (பைபிளில் மலை பிரசங்கம் படிக்க மறந்துவிடாதீர்கள்). அக்காலத்தில் பாதிரிகள் கிருத்துவத்தை பரப்ப நம் நாட்டு, மொழி, கலாச்சாரம், நாகரீகங்களை அப்படியே பின்பற்றினர். அவர்களின் வரவால் நமது மொழியானது மேலும் வளமை பெற்றது. உதாரணமாக அவர்களுக்கு பிற்காலத்தில் வாழ்ந்த வீரமா முனிவர் இல்லாவிட்டால் இப்போதும் நாம் வட்டெழுத்துக்களில்தான் எழுதிக் கொண்டிருப்போமோ என்னவோ. இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். தமிழில் உரை நடையை அறிமுகம் செய்த அவர் தன்னுடைய சமாதியில் என்ன எழுதி வைக்க சொன்னார் தெரியுமா?
"இங்கே ஒரு தமிழன் ஓய்வெடுக்கிறான்"
சிறப்பான பதிவு
ஆரோக்கியம்
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
திரு. சந்திப்பு,
>>>மேடையில் இருப்பவர் ஆங்கிலத்தில் கத்த, அதை தமிழில் இருப்பவர் திரும்ப கத்த... தாங்கலை...
<<<
ஜோக் என்ன தெரியுமா? இதில் ஆங்கிலத்தில் பேசுபவரும் தமிழ் தெரிந்தவர். அவர்கள் பேசுமிடம் தமிழ் நாடு.
பின் ஏன் இப்படி செய்கிறார்கள்?
அவர்கள் கத்துவது (அதாவது, ப்ரார்த்தனைங்க) ஏசு ராஜனை நோக்கி இல்லை. அவர்களது ப்ரச்சார படங்களை பார்க்கவிருக்கும் இவர்களுக்கு பிச்சை போடும் காசு ராஜாக்களுக்கு.
>>>>இறுதியில் கடவுள் அந்த அழகான பெண்ணை (அக்காவை) அவரிடம் அழைத்துக் கொண்டார்<<<<
என் உடன் வேலை பார்த்த ஒரு மெட்ராஸ் கிருத்துவ பெண்ணை பார்க்க அவரது மாமா பெங்களூர் வந்திருந்தார். அவர் வந்த விஷயம் தெரிந்த பின்னும் அந்த பெண் அவரை பார்க்க லன்ச் டைம் வரை போகவே இல்லை. காரணம் அந்த மாமாவின் ஒரே பையன். சாதாரண காச்சலாகத்தான் அரம்பித்திருக்கிறது. ஆனால் ப்ரேயரின் மூலமே அவனை குணப்படுத்த வேண்டும் என்றும், டாக்டரிடம் போகக்கூடாது என்றும் இந்த மனிதர் ஒரு வாரமாக தன் குடும்பத்துடன் ப்ரேயர் மட்டும் செய்து கொண்டிருந்திருக்கிறார். விளைவு. அந்த சிறுவனின் மரணம்.
"தந்தையே, இவர்கள் தாம் செய்வது யாது என்று அறிகிலர்"
கட்டாய மதமாற்றும் என்றால் என்ன?
ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயபடுத்தி மதமாறச்செய்வது கட்டாய மதமாற்றும் எனப்படும்.
பள்ளிகூடத்திலிருந்தே இந்த define, breif கேள்விக்கு சரியா பதில் தெரியாது :(. முத்து ஏதோ பார்த்து மார்க் போடுங்க. :(
புதுசா சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் வாங்கி இருக்கிங்க சந்தோஷத்தில் மார்க்க அள்ளிப் போடுங்க வாத்தியார். :)
town(?) raasa,
//ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயபடுத்தி மதமாறச்செய்வது கட்டாய மதமாற்றும் எனப்படும்.//
விரும்பாம எப்படிங்க ஒருத்தர் மதம் மாற முடியும்?
என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவகையில் கட்டாய மதமாற்றம் எனப்படுவது யாதெனின், க்ழுத்தில் கையை வைத்து "மவனே ஒழுங்கு மறியாதையா கிறித்துவனா மாறிடு, இல்லன்னா ஒனக்கு ஆப்பு தான்" என்று செப்பி மதம் மாற்றுவது தான்.
மகனே, யேசு தான் மெய்யான கடவுள். அவரை நம்பு, உனக்கு எல்லாம் கிடைக்கும். யேசுவை நம்பினோர் கைவிடப்படார்... என்பது ஒரு சிறந்த "மார்க்கெட்டிங் தந்திரமே". இதை கட்டாய மதமாற்றம் என்று கூறுவோர் ஒரு கட்டிங் அடித்து விட்டு தனிமையில் அமர்ந்து சிந்திக்கவும்.
மிக லகுவான வார்த்தையில் சொல்ல வேன்டுமானால் "சன் டிவிக்கும் ஜெயா டிவிக்கும்" நடக்கும் "ப்ரொஃப்பெஷனலிஸ" வேறுபாடுகளே சிறந்த எடுத்துக்காட்டுக்கள்.
முத்து ( தமிழினி) said...
தருமி,
pls forgive i have misused your name :) your responses are appropriate..thanks..//
த.மு.,
misused ஒண்ணும் இல்லை; just usedதான். ஏதோ உங்க புண்ணியத்தில நம்ம பேருக்கு free advertisement ஆகிப்போச்சு; யார்ரா இந்த தருமின்னு நம்ம பக்கம் கொஞ்சம் பேரு வராமலா போய்டுவாங்க??!!
இங்க நான் எதுவும் சொல்ல வரல, கத்திய வச்சுகிட்டு ஒருத்தர் ரெடியா இருக்காரு.
------தமிழர்கள்?
அது சரி. எவனோ ஒரு வெள்ளைக்காரன் ஜெர்மனியில் அம்மணமாக போனான் என்று தானும் அம்மணமாக நின்று அதை புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.---------
கலாச்சாரம் பற்றி மூஸ் பேசுகிறார் - அப்படியே ஜெர்மனியில் நிர்வாண காம்ப்பில் நிர்வாணமாய் நின்ற ஒரு \'தமிழரை\'ப் பற்றியும் (பெரியாரா ஐயா இது?) சந்தடி சாக்கில் ஒரு உள்குத்து. நிர்வாணமாய் நின்றது இந்தியக் கலாச்சாரம் இல்லையாம். காமசூத்திரமும், கஜூராஹோவும், சூரியக் கோவிலில் நிர்வாணமாய்ப் புணரும் சிலைகளும் தமிழகத்தில், பாலியல் குறித்து எதுவும் தெரியாமலிருந்த தன் மகளுக்கு மறைமுகமாய் அதுகுறித்து உணர்த்தக் கட்டிய ஓர் குறுநில மன்னன் கட்டிய குளத்தின் கரைகளில் செதுக்கிய பாலியல் குறித்து விளக்கும் கற்சிலைகளும் (சின்னப்பநாய்க்கன் குளம் என்று நினைக்கிறேன்...), அசுரர்களை அழிக்க அவர்களது மனைவிகளைப் புணர்ந்து \"கற்பு தரும் கவசத்தை\" நொறுக்கிய தேவர்களைக் கொண்டதும் எந்தக் கலாச்சாரம் என்று தெரியவில்லை.
வெள்ளைக்காரனோ தமிழனோ, அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தானும் அம்மணமாக நிற்பதில் என்ன தவறென்று தெரியவில்லை - அடுத்தவன் கோவணத்தில் கையை வைத்து உருவினால்தான் தவறு என்று பட்டறிவு சொல்கிறது; அதிலும், பிறர் கோவணத்தை உருவமுயல்பவனின் கோவணத்தைப் பதிலுக்கு உருவுவதிலும் தப்பேதுமில்லை - பெரியார் உருவிய அனைத்துக் கோவணங்களும் அப்படிப்பட்டவையே.
இதைவாசித்த போது ஏற்பட்ட உந்தலில் வந்த என் அனுபவத்தைச் சொல்லும் தனிப்பதிவு.
Muse,
//தமிழர்கள்?
அது சரி. எவனோ ஒரு வெள்ளைக்காரன் ஜெர்மனியில் அம்மணமாக போனான் என்று தானும் அம்மணமாக நின்று அதை புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.// தெளியவைத்த அனானிக்கு நன்றி.
ஏம்பா பெரியார் எப்போ உங்களுக்கு தமிழர் ஆனார்???. அவர் கன்னடியர்தானே!!!!.
//ஜோக் என்ன தெரியுமா? இதில் ஆங்கிலத்தில் பேசுபவரும் தமிழ் தெரிந்தவர். அவர்கள் பேசுமிடம் தமிழ் நாடு.//
தமிழ் நீச பாஷை ஆச்சே?? தமிழ்நாடு - இது அண்ணா ஆட்சியில் வைத்த பெயர் ஆயிற்றே??. இதை நீங்கள் கூறலாமா??
ஏம்பா Muse,
உனக்கு என்னா பிரச்சனை??. அதை தெளிவா ஒரு பதிவு போடு. அப்புறமா அங்க வந்து பேசிக்கலாம்.
தலைவர் பதிவு ஊடால எதுக்கு பிரச்சனை.
தளபதி அருண்மொழி
அகில உலக Super Star ரசிகர் மன்றம்.
அனானி,
//அப்படியே ஜெர்மனியில் நிர்வாண காம்ப்பில் நிர்வாணமாய் நின்ற ஒரு \'தமிழரை\'ப் பற்றியும் (பெரியாரா ஐயா இது?) //
அவரு அனுராதாரமணன் மற்றும் சொர்ணமால்யா முன்னால் காட்சி கொடுத்தவரை பற்றி சொல்லி இருப்பாரு.
Muse நான் சொல்றது கரீக்டுதானே?
முத்து, பொட்டி
ஸ்ப்பா கண்ணக்கட்டுதே ...
//இந்த தினகரன் ஒரு ஃபிராடு என்று கிறிஸ்தவ அன்பர்களே சொல்லி கேட்டுள்ளேன்.இவர் கடவுளை நேரில் பார்த்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமோ?
//
தினகரன் புண்ணிய ஆத்மா அவர் சொல்வதை கேட்டுகும் எல்லோரும் பாவிகள். பாவிகள் கண்ணுக்கு எப்படியப்பா யேசு தெரிவார்?
தினகரனுக்கு தென் தமிழகத்தில் நல்ல செல்வாக்குன்னு கேள்வி. அவர் சொல்வதை வேதவாக்கா நினைத்து செயல்படுற கூட்டம் அதிகம் என்றும் கேள்வி. பிராடு கிராடுன்னு சொல்லி மாட்டிக்காதிங்க :-))
கோயமுத்தூரில் படித்திருந்தா காருண்யா பற்றி தெரிந்திருக்கனுமே???
ஜோ நல்லா விளக்கம் கொடுத்திறுக்கார். இந்த பெத்தகொஸ்தே அல்லலூயா கூட்டத்தால கிறித்துவ மதத்து மேல வெறுப்பு வந்தது தான் மிச்சம்.
தற்போது கிறித்துவத்துவம் வளரதுன்னா அதுக்கு பெத்தகொஸ்தே அல்லலூயா கூட்டம் தான் காரணம்.
மொதல்ல ஒரு ஆளு பிட் நோட்டீஸ் கொடுப்பார். அப்புறம் அந்த பகுதியில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து 4 பேர் சேர்ந்து கூட்டம் போடுவார்கள், இனிமேல் தான் வளர்ச்சியே, 1 மாசத்தில் 4 பேர் 40 பேரா இருப்பாங்க , இம்சையும் ஆரம்பமாகிடும் வாரா வாரம் மைக் வச்சு கத்த ஆரம்பிச்சுடுவாங்க, சுத்து வட்டாரத்தில் இருக்கிற பெண்களை யேசுவின் மகத்துவத்தை கூறி ஜெபத்திற்கு அழைப்பார்கள். அதில் சில பெண்கள் தீவிரமாகி பிரச்சாரர்கள் ஆகிடுவாங்க. பொட்டு , பூ வைப்பதை நிறுத்திவிடுவார்கள், நகை அணிய மாட்டார்கள், வீட்டிலுள்ள சாமி படத்தையெல்லாம் எடுத்துட்டு யேசு படத்தை மாட்டிடுவாங்க.
இதனால் சில குடும்பங்களில் கணவன் மனைவி தகராறே நடந்திருக்கு.
1 ஆண்டு கழித்து ஒரு மாநாடு போட்டுடுவாங்க. அந்த பகுதியே கலகலக்கும் எங்கிருந்து தான் அவ்வளவு கூட்டம் வருமோ? அல்லலூயா அல்லலூயா அல்லலூயா.
கட்டாய மத மாற்றத்திற்கு இதில் பதில் தெரிகிறதா?
//முத்து ( தமிழினி) said...
திரு,
மறுபரிசீலனை என்றாலே துள்ளி குதிக்கிறார்களே?//
முத்து மறுபரிசீலனை என்றதும் எல்லா மதங்களிலும் சிலருக்கு பயம். அதன் காரணம், இதுவரை நாம் நம்பிய தத்துவம், கடவுள், நெறிகள் சரி தான் என நிரூபிக்க துடிக்கிற மனித மனதின் அழுத்தம்.
இறையியலாளர்களின் பணி மதங்களை காலச்சூழலுக்கு, மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவர வேண்டியது. என்ன செய்ய சில நேரங்களில் தத்துவங்கள் பிதற்றும் மானிடர்களுக்கு மக்களின் வாழ்வின் உண்மை நிலை தெரியாததால் எதாவது பிதற்றுகிறார்கள். சிலர் திட்டமிட்ட தங்களுடைய கருத்தியலை நிரூபிக்க முற்படுகிறார்கள்.
உதாரணமாக: கீதையில் கண்ணன், "எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குமோ அங்கே நான் தர்மத்தை நிலை நாட்ட அவதாரமெடுப்பேன்" என்கிறார். அதர்மம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? கண்ணன் எப்படி வருவார்? எந்த வடிவில், எப்படி தான் மக்களின் குழப்பமே! அதை மோடிகள் ரூபத்தில் பார்க்கும் மானிடர்களும் உண்டு. உயிர் கொடுத்தாவது சமூக நலன் காக்க வேண்டும் என போராடும் மேதாபாட்கர் வடிவில் பார்க்கும் மனிதர்களும் உண்டு!
rewriting, contextualising and reinterpreting the religious dogmas, doctrines and hollybooks are very much essential in our world today! சரி ரொம்ப உணர்ச்சிவச படாம நிறுத்திக்கிறேன்! :))
//rewriting, contextualising and reinterpreting the religious dogmas, doctrines and hollybooks are very much essential in our world today!//
A coherent thought which is much needed for architectural Milieu.
:))
Thiru,
You should have been an Architect, Mate. :))
//பெரியார் உருவிய அனைத்துக் கோவணங்களும் அப்படிப்பட்டவையே.//
உய்..உய்..
விசில் சத்தம்தான்...
//கண்ணன் எப்படி வருவார்? எந்த வடிவில், எப்படி தான் மக்களின் குழப்பமே! அதை மோடிகள் ரூபத்தில் பார்க்கும் மானிடர்களும் உண்டு. உயிர் கொடுத்தாவது சமூக நலன் காக்க வேண்டும் என போராடும் மேதாபாட்கர் வடிவில் பார்க்கும் மனிதர்களும் உண்டு!//
அல்டிமேட் மேட்..நன்றி
//தினகரனுக்கு தென் தமிழகத்தில் நல்ல செல்வாக்குன்னு கேள்வி//
யாராயிருந்தா எனக்கென்ன
//கோயமுத்தூரில் படித்திருந்தா காருண்யா பற்றி தெரிந்திருக்கனுமே??? //
அது அந்த கடைசி..நாங்க இந்த கடைசி..பெரியநாயக்கன்பாளையம் எங்க காலேஜ்..நான் அதிகம் ஊர் சுற்றவனும் கிடையாது..ஹி..ஹி..
நீங்க சொன்ன பெந்தோகொஸ்தேவில் மதமாற்றத்திற்கு வழி தெரியவில்லை:) ஆனால் பெந்தேகோஸ்தே கலாட்டாக்களை அனுபவித்துள்ளேன்.
வசந்தன்,
நன்றி..உங்கள் பதிவும் நன்றாக இருந்தது...விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறென்.
//என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவகையில் கட்டாய மதமாற்றம் எனப்படுவது யாதெனின், க்ழுத்தில் கையை வைத்து "மவனே ஒழுங்கு மறியாதையா கிறித்துவனா மாறிடு, இல்லன்னா ஒனக்கு ஆப்பு தான்" என்று செப்பி மதம் மாற்றுவது தான்.
மகனே, யேசு தான் மெய்யான கடவுள். அவரை நம்பு, உனக்கு எல்லாம் கிடைக்கும். யேசுவை நம்பினோர் கைவிடப்படார்... என்பது ஒரு சிறந்த "மார்க்கெட்டிங் தந்திரமே". இதை கட்டாய மதமாற்றம் என்று கூறுவோர் ஒரு கட்டிங் அடித்து விட்டு தனிமையில் அமர்ந்து சிந்திக்கவும்.//
பட்டணத்து ராசா..துணைத்தலைவர் தெளிவாக கூறிவிட்டார்..
கட்டிங் அடித்துவிட்டு சிந்திக்கவும்:))
ஹெச்.செல்வா,
உங்கள் சுட்டிகள் நன்றாக இருந்தன.நன்றி.இதுபற்றி தெரிந்தவர்கள் ஏதாவது பதில் தருவார்களா என்று பார்ப்போம்.
ம்யூஸ்,
நன்றி..நீங்கள் பகிர்ந்துகொண்ட சில சம்பவங்கள் நிதர்சனமானவை..நன்றி..பெரியாரை உள்குத்து நீங்கள் குத்தியதால் சிலபேர் எதிர்வினையாற்றி உள்ளனர்..
ஆயினும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்த மாதிரி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.
நிலத்திருட்டு பற்றி ஏதாவது கேள்விகள் ஆதாரத்துடன் இருந்தால் வையுங்கள்.
மீண்டும் சொல்கிறென் நான் நடுநிலைமைவாதி அல்ல.ஆம்.அல்ல என்றுதான் சொன்னேன்.ஏனென்றால் நடுநிலைமை என்பதற்கு அர்த்தம் நம் சூழலில் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆரோக்கியம்,
நன்றி..
நல்ல விவாதத்திற்கானப் பதிவு ,நிறைய பின்னூட்டங்களும் பார்த்தேன்..
ஜோ வின் வேதனையும் சரியானது தான் ..வெண்ணிடை ஆடையில் கிருத்துவப் பெண்கள் சினிமாவில் கல்யாணம் செய்யும் போது விழுந்து விழுந்து சிரிப்பேன் நான்..
கத்தோலிக்கர் சொல்லாவிட்டால் அவர் இந்துவா கிருத்துவரா என்று கண்டே பிடிக்க முடியாது ..
//// ஆனால் இந்த நாகரீக யுகத்திலும் இது பைபிள்ளேயே சொல்லியிருக்கிறது ,குரானிலே சொல்லி இருக்கிறது, கீதையிலேயே சொல்லியிருக்கிறது என்றெல்லாம் கூறுவது சரியா ?இதையெல்லாம் மறுபரீசிலனை பண்ணுவதில் என்ன தவறு?
//
எந்த தவறும் இல்லையென்பது என் கருத்து. நமக்கு தரப்பட்டிருக்கிர 100 கிராம் மூளை, சினிமா படங்களையும், விளையாட்டுகளையும் தாண்டி - நம்மையும், இந்த அண்டத்தையும், அறிவதற்கு உண்டான திறனை பெற்றிருக்கிறது. வேதங்களை எந்த இறைவன் தந்தா(னோ/ளோ), அவனேதான் மூளையும் தந்திருக்கிறான். கவனித்தில் கொள்ளவேண்டிய ஒரே அம்சம் - முன்முடிவுகளுடன் பரிசீலனை செய்ய முயலாமலிருப்பது.
//
சல்மானின் பதில் தீவிர மத நம்ப்பிக்கை யாளர்களுக்கே பொருந்தும் ..ஆன்மீக ரீதியாகக் கூட கேள்வி கேட்காவிட்டால் விமோசனமே இல்லை ..
கவுன்ட் டவுன்...ஸ்டார்ட் ஆயிடுத்து போல...
97
98 கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை
99
டேய் பொட்டீ,
அடங்குடா...வெள்ளிக்கிழமையான ஜிப்பா மாட்டிகினு பட்டைய போட்டுக்கிட்டு சுண்டலும் பொங்கலும் வாங்கறதுக்கு கியூவில நிக்கறியே...
நா கூசல ஒனக்கு...
ஆஹா வெற்றி வெற்றி...
100 போட்டாச்சு...
ஒரே ஒரு சந்தேகம்...ஃபெலோஷிப்ல ஜெபம் பன்றவங்க ஈராக்கிலும், ஆஃப்கானிலும் மாட்டிக் கொண்டிருக்கிற எமது கிறித்துவ சகோதரர்களை எந்த சேதாரமும் இல்லாம காப்பாத்துன்னு வேண்டிக்கறாங்களே, மத்த மக்களெல்லாம் மனித உயிராத் தெரியலியா அவங்களுக்கு???
இப்படி சிங்கிளா அடிச்சு செண்ட்சுரி போட வச்சிட்டீங்க, பொட்டீக்ஸ். நம்ம பக்கமும் வாங்க..இழுத்துக்க பறிச்சிக்கன்னு ஒண்ணுநிக்குது அம்போன்னு!
பொட்டீக்கடை,
.... ( நா தழுதழுக்குதையா)
தருமி,
கவலைப்படாதீங்க..தனியொருவனுக்குபின்னூட்டம் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்....
//Pot"tea" kadai said...
//rewriting, contextualising and reinterpreting the religious dogmas, doctrines and hollybooks are very much essential in our world today!//
A coherent thought which is much needed for architectural Milieu.
:))
Thiru,
You should have been an Architect, Mate. :))//
architect எல்லாம் இல்ல பொட்டிக்கடை. சமூகவியலில் ஆர்வம் கொண்டு மனித உரிமைகளுக்காக உழைக்கிறேன். அதுவும் ஒருவித arcitecture இல்லையா?
//Pot"tea" kadai said...
ஒரு சந்தேகம்...ஃபெலோஷிப்ல ஜெபம் பன்றவங்க ஈராக்கிலும், ஆஃப்கானிலும் மாட்டிக் கொண்டிருக்கிற எமது கிறித்துவ சகோதரர்களை எந்த சேதாரமும் இல்லாம காப்பாத்துன்னு வேண்டிக்கறாங்களே, மத்த மக்களெல்லாம் மனித உயிராத் தெரியலியா அவங்களுக்கு??? //
மத்த மக்களை காப்பாத்த தான் மத்த தெய்வங்கள் இருக்காங்களே! ஜீசஸ் கிறிஸ்தவர்களை அதுவும் பெல்லோசிப் ஆட்களை மட்டும் தான் காப்பாத்துவாரோ?
ஒரிசாவில் வெள்ளத்திலும், குஜராத்தில் பூகம்பத்திலும் அப்பாவிகள் மடிந்த வேளை, "ஆஸ்திரேலிய பாதிரியாரை சங்பரிவார தீவிரவாதிகள் கொன்றதற்காக கடவுள் கொடுத்த தண்டனை" என நம்பினர். சுனாமி வந்து தெற்காசிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்த வேளை, "பெரியவாளை அரஸ்டு பண்ணிண்டு படுத்தினதுக்கு பகவான் கொடுத்த தண்டனை" என்றனர். இதெல்லாம் கடவுள் கொடுத்த தண்டனைன்னா, கடவுள் என்கிறவர்/வள்/து (ஆணா? பெண்ணா? இல்லை பொதுவானதா தெரியல்ல) கொடூர, குரூர மனம் படைத்த சக்தியா? அப்படிப்பட்டது நமக்கு அவசியமா? இது மனிதர்கள் தங்களுக்கு தாங்களே ஒவ்வொரு விளக்கம் சொல்லுவதின் எதிரொலி! நாகரீகம் அறிவியல் வளர்ந்தாலும் மதங்கள், அதன் தத்துவங்கள் பற்றி அறிவு வளராமல் இருப்பதும் இன்னும் பழைய ஏட்டை அப்படியே சுற்றி வருவதும் இதற்கு காரணம்.
//Anonymous said... architect எல்லாம் இல்ல பொட்டிக்கடை. சமூகவியலில் ஆர்வம் கொண்டு மனித உரிமைகளுக்காக உழைக்கிறேன். அதுவும் ஒருவித arcitecture இல்லையா?
Saturday, May 06, 2006 2:36:36 PM //
பொட்டிக்கடை இது எனது பதில் தான். அவசரத்தில் அனானியாக பதிவாயிருக்கிறது. வழக்கத்திற்கு மாறான ஒரு சிறு விபத்து இது :)
ஜோ & Muse,
விளக்கத்துக்கு மிக்க நன்றி. ஆனால் சந்தேகம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. இருவரின் பதில்களும் முரண்படுகிறதே! அதிலும் Muse வேறு உள்குத்து வைத்து எழுதியிருக்கிறார்.
நன்றி
கமல்
//முத்து ( தமிழினி) said...
//கண்ணன் எப்படி வருவார்? எந்த வடிவில், எப்படி தான் மக்களின் குழப்பமே! அதை மோடிகள் ரூபத்தில் பார்க்கும் மானிடர்களும் உண்டு. உயிர் கொடுத்தாவது சமூக நலன் காக்க வேண்டும் என போராடும் மேதாபாட்கர் வடிவில் பார்க்கும் மனிதர்களும் உண்டு!//
அல்டிமேட் மேட்..நன்றி//
முத்து இது உணர்ந்து சொன்ன வரிகள்! :)
தோழர் தமிழினி,
>>>நிலத்திருட்டு பற்றி ஏதாவது கேள்விகள் ஆதாரத்துடன் இருந்தால் வையுங்கள்.<<<
எந்த ஆதாரம் குடுத்தாலும் அதன் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியை முன்வைத்து மறுதலிக்கப்படுவதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது. பாபர் கட்டிடத்தின் கீழே புதைந்து இருக்கும் கட்டிடத்தின் அமைப்பு ஹிந்து கட்டிடக்கலையினை சேர்ந்தது என்று அறிவியல் பூர்வமாக இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நிரூபித்த பின்பும் அதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை.
அதனால் ஒன்று செய்யலாம். தமிழினியும் மற்ற நண்பர்களும் பெரும்பாலும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் (உடலளவிலாவது) என நினைக்கிறேன். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு உங்கள் ஊரினை சுற்றி வாருங்கள். வேறு ஏதேனும் ஊருக்குப் போகும் வாய்ப்பு இருக்குமானால் அந்த ஊரையும் சுற்றிப் பாருங்கள். அப்படி சுற்றிப் பார்க்கும்போது எத்தனை கிருத்துவ அமைப்புகளின் சர்ச்கள், பள்ளிகள், கல்லூரிகள், இன்ன பிற கட்டிடங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். அதே போல ஹிந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்படும் மடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எத்தனை இருக்கின்றன என்பதையும் கணக்கெடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களுக்கு சில சமயங்களில் போகக்கூடும். அப்படி போகையில் நீங்கள் எத்தனை கிருத்துவ பாதிரிமார்களை, கன்யாஸ்த்ரீகளை பார்க்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். அதே போல எத்தனை ஹிந்து சாமியார்களை, சாமியாரிணிகளை பார்க்கிறீர்கள் என்பதையும் கணக்கிடுங்கள்.
நீங்கள் நல்ல புத்திசாலி. என்னதான் வாதம் செய்தாலும் மனசாக்ஷியின்படி நடப்பவராகவே எனக்குத் தெரிகிறீர்கள். நான் சொன்ன இந்த கணிப்புகளை செய்தீர்களேயானால் உங்களுக்கே உண்மை தெரியவரும். உங்களுடைய மனசாக்ஷி உங்களுடைய கொள்கைகளையும், நம்பிக்கைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புகளைப் பற்றியும் தெளிவுபடுத்தும்.
ம்யூஸ்,
பாபர் மசூதி பற்றி நீங்கள் கூறியதுப்பற்றி எனக்கு தெரியாது.அதற்காவது சுட்டி தாருங்கள்.
இரண்டாவது நீங்கள் கூறிய விஷயங்களின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன என்று தெளிவாக இல்லை.நிறைய பள்ளிகள் அவர்கள் நடத்துகிறார்கள்.அவர்கள் மக்கள்தொகை அதிகம் ஆகிவிட்டது என்பதுதான் மெஸேஜ் என்றால் அதன் அர்த்தம் என்ன?
நண்பர் தமிழினி,
நான் கூற வந்தது நம்முடைய நம்பிக்கைகள் உண்மையை அறிய விடாமல் தடுக்கக் கூடியவை என்பதே. பாபர் மசூதி பிரச்சினை பற்றியதல்ல நமது கலந்துரையாடல்.
எனினும், அது பற்றி நீங்கள் அறிய விரும்புவதால், கீழ்கண்ட சுட்டிகளை கொடுக்கிறேன். (மீண்டும் சொல்லுகிறேன், இந்த கட்டுரையில் நாம் விவாதிப்பது வேறு ஒரு பிரச்சினை).
http://en.wikipedia.org/wiki/Ram_Janmabhoomi#Archaeology_of_the_site
http://www.stephen-knapp.com/ayodhya_and_the_research_on_the_temple_of_Lord_Rama.htm
http://www.hinduonnet.com/fline/fl2021/stories/20031024001804300.htm
http://www.questia.com/PM.qst?a=o&se=gglsc&d=5007940895
http://www.muslimsonline.com/babri/babrikpp.htm
http://www.hvk.org/articles/0403/188.html
http://www.imc-usa.org/cgi-bin/cfm/BabriMasjidTimeline.cfm
>>>>...சொல்லவருவது என்ன என்று தெளிவாக இல்லை.நிறைய பள்ளிகள் அவர்கள் நடத்துகிறார்கள்.அவர்கள் மக்கள்தொகை அதிகம் ஆகிவிட்டது என்பதுதான் மெஸேஜ் என்றால்... <<<<
இல்லை. அவர்களுடைய மக்கள்தொகையை பற்றி நான் இங்கே கவலைப்படவில்லை. அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு அடுத்த அளவில் நிலங்களுக்கு உரிமையாளர்களாகவிருக்கிறார்கள் என்று நான் கூறினே. ஆதாரம் கேட்டிருந்தீர்கள். கொடுத்திருந்தேன்.
பிறகு மீண்டும் "நம்பகமான" ஆதாரங்கள் கேட்டிருந்தீர்கள். அதனலேயே நான் உங்களையே அதாரமாக ஆக்கிக்கொள்ளுவதற்கான வழி ஒன்றை கூறினேன். நீங்கள் நேரடியாக பார்த்தாலே கிருத்துவ அமைப்புகளிடம்தான் அதிக அளவில் நிலமிருக்கிறது என்று தெரிய வந்துவிடும் என்பதால் அங்கனம் கூறினேன்.
அதே போல நான் கிருத்துவர்களை கணக்கிடச் சொல்லவில்லை. கிருத்துவ, ஹிந்து அமைப்புகளை சேர்ந்த துறவிகளின் எண்ணிக்கையை கணக்கிடச் சொன்னேன். ஏனென்றால் அத்தனை மனிதர்கள் தங்கவும் செயல் புரியவும் நிலங்கள், வீடு, இத்யாதி, இத்யாதிகள் தேவைப்படும்.
முதல் பார்வையிலேயே உங்களுக்கு இந்த விஷயத்திலும் உண்மை தெரிந்து விடும். ஒரு ஹிந்து மத துறவியைக்கூட நீங்கள் பஸ் ஸ்டாண்டுகளிலோ, பேருந்து நிலயங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ காண முடியாது. ஆனால் இவர்கள் கிராமத்துக்கு கிராமம் இருக்கிறார்கள். கொத்து கொத்தாய்.
கை புண்ணிற்கு கண்ணாடி வேண்டுமென்கிறீர்களே, சகோதரரே.
Muthu,
I am sorry to take up this much space. I am really upset with these kind of guys. They never think.
//எந்த ஆதாரம் குடுத்தாலும் அதன் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியை முன்வைத்து மறுதலிக்கப்படுவதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது. பாபர் கட்டிடத்தின் கீழே புதைந்து இருக்கும் கட்டிடத்தின் அமைப்பு ஹிந்து கட்டிடக்கலையினை சேர்ந்தது என்று அறிவியல் பூர்வமாக இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நிரூபித்த பின்பும் அதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை.//
சில சங் பரிவாரக் கும்பல்கள் சொல்லிக் கொண்டு திரிவதைத் தவிர, நிரூபிக்கப்படாத ஒன்றை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்ட உண்மை என்று சொல்லிச் சொல்லி........ சங்பரிவார கோயபல்ஸ்கள்
Muthu,
I posted a comment addressing Muse. I could not find it in the posting. Did you get it?
arunmoli
i did not receive anything..sorry..post it again
ஏம்பா Muse உன்னோட amuse தாங்க முடியவில்லைபா.
////அப்படி சுற்றிப் பார்க்கும்போது எத்தனை கிருத்துவ அமைப்புகளின் சர்ச்கள், பள்ளிகள், கல்லூரிகள், இன்ன பிற கட்டிடங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். அதே போல ஹிந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்படும் மடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எத்தனை இருக்கின்றன என்பதையும் கணக்கெடுத்துக்கொள்ளுங்கள்.//
தமிழ்நாட்டில் இந்துக் கோவில்கள் இருப்பது தெரியுமா?. ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நிலம் சொந்தம் என்று தெரியுமா?. முதலில் அதை பற்றி தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். குறிப்பாக "இருள்நீக்கியார்" கூட்டம் எவ்வளவு நிலத்தை வளைத்து உள்ளது என்று பாருங்கள்.
தமிழகத்தில் ஏராளமான சைவ மடங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளன. சொத்துக்காக கொலை வரைக்கும் போன தருமபுரம் (பெயர் சரியாக நினைவில் இல்லை) மடம் விவகாரத்தில், அந்த மடத்திற்கு மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலம் உண்டு என்று படித்திருக்கிறேன்.
உங்கள் Listல் கோவில்கள் என்ற வார்த்தை இல்லையே. மறந்துவிட்டீர்களா அல்லது வசதியாக மறைத்துவிட்டீர்களா??
சர்ச்கள் = கோவில்கள் - கணக்கெடுங்கள். இந்தியாவில், ஏன் "அம்மணமாக நின்ற தமிழன்" இருந்த தமிழ்நாட்டில் பாருங்கள். குருடனுக்கு கூட சரியாக எது அதிகம் உள்ளது என்று தெரியும்.
பள்ளிகள், கல்லூரிகள் - அது யார் தவறு. உங்கள் தவறே. இந்துக்களிடம் இல்லாத பணமா. திருப்பதி என்று ஒரு கோவில் இருப்பது தெரியுமா - அல்லது அதுவும் ஒரு சர்ச்சாக உங்கள் கண்ணிற்கு தெரிகிறதா?
தமிழகத்தில் தமிழ் கடவுளான முருகனுக்கு இருக்கும் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா?. அவற்றில் கொட்டும் பணம் எவ்வளவு??
வரும் பணத்தில் தின்றது போக எல்லாம் வைர கிரீடமாகவும், தங்க தேராகவும் ஆகின்றது. ஏன் அந்த கோவில்கள் ஒரு பள்ளியோ, கல்லூரியோ கட்டக்கூடாது?
முற்றும் துறந்தவர்களுக்காக (அதுவும் சுங்க வரி கட்டாமல் - வெங்கட்ராமையரால் போலீஸ் பாதுகாப்புடன்) வந்த 80 கிலோ தங்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கட்ட முடியாதா?
அப்படியே கட்டினாலும், கட்டிய பள்ளியில எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த முடியுமா?.
இவ்வளவு ஏன். வெளிநாட்டில் உள்ள இந்துக்கள் பல மில்லியன் டாலர் செலவு செய்து கோவில்தான் கட்டுகிறார்கள். ஏன் அந்த பணத்தை வைத்து ஒரு பெரிய பல்கலைகழகத்தை கட்டக்கூடாது?? சிந்திப்பீர்களா?
அவன் நிலத்தை கொள்ளை அடிக்கிறான், அது செய்கிறான் இது செய்கிறான் என்று ஆத்திரப்படாதீர்கள். சிந்தித்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள தவற்றை முதலில் சரி செய்யுங்கள். பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.
Testing
அன்பு சுல்தான்,
>>>>சில சங் பரிவாரக் கும்பல்கள் சொல்லிக் கொண்டு திரிவதைத் தவிர, நிரூபிக்கப்படாத ஒன்றை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்ட உண்மை என்று சொல்லிச் சொல்லி........ சங்பரிவார கோயபல்ஸ்கள் <<<<<<
இதையேதான் நானும் கூறியிருந்தேன். உங்கள் பார்வைக்காக என்னுடைய பழைய பதிவையே மீண்டும் இங்கே காபி பேஸ்ட் செய்கிறேன்.
>>>>இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நிரூபித்த பின்பும் அதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை. <<<
நான் ஏற்கனவே கூறியிருந்த கீழ்கண்ட கூற்றிற்கு ஆதாரமாக உங்கள் பதிலிருப்பது எனக்கு சந்தோஷம்.
>>நான் கூற வந்தது நம்முடைய நம்பிக்கைகள் உண்மையை அறிய விடாமல் தடுக்கக் கூடியவை என்பதே.<<
தமிழினிக்கு இந்த கருத்தில் வேறு ஆதாரம் தேவைப்படாது என்று தோன்றுகிறது. நன்றிகள் சுல்தான்.
Post a Comment