Friday, May 26, 2006

இளவஞ்சிக்கு ஆதரவாக

நண்பர் இளவஞ்சியின் பதிவுகளையும் இது தொடர்பான பிரச்சினைகளையும் பார்த்து இருப்பீர்கள்.இது சம்பந்தமாக என்னிடமும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. இளவஞ்சி யாருக்காக களம் இறங்கினாரோ அவர்கள் எல்லாம் அவரை கைவிட்டுவிட்டார்கள் என்ற விமர்சனத்தையும் பார்க்கமுடிந்தது.

இளவஞ்சி, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு வேறு வழியில்லை.நீங்கள் என்னை சில சந்தர்ப்பங்களில் குட்டி உள்ளீர்கள். சில சந்தர்ப்பங்களில் பாராட்டியும் உள்ளீர்கள். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.இதை எழுதவில்லை என்றால் நான் மனிதனே அல்ல.தூக்கமில்லாத இரவுகள், சந்தோஷ கணங்களையும் அனுபவிக்கமுடியாமல் இருத்தல் இவை என்னை போன்ற ஒருவனுக்கு கடினம்.

அய்யோ இளவஞ்சியா இப்படி எழுதினார் என்று கேட்பவர்களுக்கு சில வார்த்தைகள்:

ஆம். இளவஞ்சிதான் இப்படி எழுதினார். ஏனெனில் அவர் மந்தை ஆடுகளில் ஒன்றல்ல. தனித்துவமானவர். இப்படித்தான் எழுதுவார். தவறு என்றால் தவறு என்று சொல்லுங்கள். சரி என்றால் சரி என்று சொல்லுங்கள். அய்யோ இளவஞ்சி, நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களே என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன நிறுவ பார்க்கிறீர்கள்? தவறு, சரி என்பதையெல்லாம் பார்க்கும் அளவிற்கு திராணி இல்லையா உங்களுக்கு? தயவு செய்து பேசாமலாவது இருங்கள்.

என்னை போன்ற, முத்துகுமரனை போன்றவர்களுக்காக அவர் எழுதினார். நாங்கள் சொல்லியோ அல்லது காசி சொல்லியோ அவர் எழுதினார் என்று சொல்பவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்.நாங்கள் கவிஞர்கள் ஆகக்கூடாதா அல்லது எழுத்தாளர்தான் ஆகக்கூடாதா? ஒரு புத்தகம் போட்டால் கவிஞர் என்று ஒத்துக்கொள்வீர்களா? என் கட்டுரைகளை நானும் யார் கையை காலையாவது பிடித்தோ அல்லது கைகாசை செலவு செய்தோ புத்தகமாக்கினால் என்னையும் எழுத்தாளர் என்று ஒத்துக் கொள்வீர்களா?

நான் ஷகிலா டான்ஸ்தான் ஆடுகிறேன். ஆனால் என் தொடையில் சங்கராச்சாரியார் படத்தை பச்சை குத்திக்கொண்டு ஆடவில்லை. என் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக சொல்லித்தான் எழுதுகிறேன். நடுநிலைமை வேஷம் நான் கட்டுவதில்லை. தமிழ்மணத்தை பல்வேறு ஆட்கள் பல்வேறு காரணங்களுக்காக படிக்கிறார்கள். இப்படி படிப்பவர்கள் எல்லாம் ஷகிலா டான்ஸ் பார்க்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் என்று எழுதப்படுவதை படித்து ஆகா ஓகோ என்பவர்கள் இது தங்களையும் பார்த்துத்தான் சொல்லப்பட்டுள்ளது என்பதை ஏன் உணரவில்லை?

காசிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் அளவிலும் எழுதி வருகிறீர்கள் பலர். என்னய்யா பாவம் செய்தார் அவர்? ஒரு பர்ஸ் பிக்பாக்கெட்டில் இழந்தோம் என்றால் ஒரு வாரம் சோறு இறங்காது நமக்கு. கைகாசு லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டப்பட்டு நம் மொழிக்காக, சமூகத்திற்காக சேவை செய்யும் அவரையும் விமர்சிப்பவர்களை ஊக்குவிக்கிறீர்கள். இத்தனைக்கும் காசி இலக்கியவாதி என்று சொல்லிகொள்வதில்லை.

எந்த தரப்பையாவது ஆதரிக்கிறாரா?தெரியாமல் தான் கேட்கிறேன்.லட்சியம், கொள்கை, சேவை என்று யாராவது சொன்னால் ஏனய்யா எரிகிறது உங்களுக்கு? காந்தி மகான் என்று சொன்னால் உணர்ச்சிவசப்படும் நீங்கள் உங்களில் யாராவது கொஞ்சம் இதே வார்த்தைகளை சொன்னால், ஆசைகளை சொன்னால் ஏன் எரிந்து விழுகிறீர்கள்?விஷம் கக்குகிறீர்கள்?


நான் சொக்கதங்கம் அல்ல.எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது என் லட்சியம் அல்ல. அது எனக்கு அவசியமும் இல்லை. என்னை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்ப்பேன்.அதை பொறுத்துத்தான் என் எதிர்வினையும் இருக்கும்.இன்று நண்பர் இளவஞ்சிக்கும் அதையே கூறுகிறேன்.இளவஞ்சி உங்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் இந்த விஷயத்தை பொறுத்தமட்டும்.

ஒரு ஆளாவது இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இங்கே எழுதினாலும் இளவஞ்சிக்கு தன்னுடைய ஆதரவினை தைரியமாக உரத்து கூறினாலும் நான் சந்தோசப்படுவேன்.

28 comments:

ilavanji said...

முத்து,

அட விட்டுத் தள்ளுங்கப்பு...

//ஆனால் ஸ்லோ பாய்சன் போல் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றப்பட்ட ஆள் பயங்கரவாதி.// இதில் எனக்கும் உடன்பாடில்லை! மாற்றுக்கருத்து உண்டு...

ஆமா.. ஆன்மீகம், நாத்திகம் பற்றிய உங்கள் கட்டுரை என்ன ஆச்சு?! :)))

G.Ragavan said...

இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Muthu said...

இளவஞ்சி,

//வெறியேற்றப்பட்ட ஆள் பயங்கரவாதி.// இதில் எனக்கும் உடன்பாடில்லை! மாற்றுக்கருத்து உண்டு... //

இருக்கவேண்டும்.தவறில்லை.கம்பேரிசன் எப்படி வேண்டுமானாலும் பண்ணலாமே?

//ஆமா.. ஆன்மீகம், நாத்திகம் பற்றிய உங்கள் கட்டுரை என்ன ஆச்சு?! :))) //

வருது அப்பு...வருது..இப்பல்லாம் கொஞ்சம் டைம் கிடைக்கறதில்ல..அதான்..

Muthu said...

//இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

நன்றி ராகவன்,

இதுதான் நான் வேண்டியது.

முத்துகுமரன் said...

முத்து என்னை பொறூத்தவரை என் மீதான விமர்சனங்களை நானே சந்தித்து கொள்வேன்.

நல்ல எழுத்துகள் எது என்பதை காலம் சொல்லும். அதானல் எந்த ''பீடாதிபதிகளின்'' அங்கீகாரத்திற்காகவும் நான் காத்துக் கொண்டிருக்கவில்லை.
என் பதிலை நான் கவிதையாகவே சொன்னேன்.

காலம் சொல்லுமெந்தன் உயிர்ப்பை...

வார்த்தைகளின் தயவில்
மறைந்தொதுங்கி
வேடந்தரித்துகொண்டு
ஓலமிடும் அற்பமே

நாங்களியங்குவதும்
எழுதுவதும்
முகங்காட்டித்தான்
ஒளிந்தல்ல..

நீ கோமியம் தெளித்து
புனிதப்படுத்த
வாயிலில் காத்துக்கொண்டிருக்கும்
எழுத்துகளல்ல எமது.

காலம்
உரத்துச் சொல்லுமதன்
உயிர்ப்பை..

**

இளவஞ்சி பதிவில் நான் இட்ட பின்னூட்டம் நன்றி:-) **அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள்** - இது அங்கத பின்னூட்டம்.

யாரும் கேட்காமலே குரல் கொடுத்த இளவஞ்சிக்கு எனது நன்றியும் ஆதரவும்.

*

போலியின் விசயத்தை பொறூத்தவரை அவன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவன். அடிப்படை மனிதத்தன்மைய்ற்றவனுக்காக எந்தவிதமான சமரசங்களையும் ஏற்க முடியாது. ஆனால் போலிகள் மலிந்து விரவிக்கிடக்கிறார்கள் என்பதைத்தான் சமீப நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
**

குழலி / Kuzhali said...

//இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

நானும் ....

//ஆனால் ஸ்லோ பாய்சன் போல் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றப்பட்ட ஆள் பயங்கரவாதி.இது எந்த ஊர் நியாயம்?போலி டோண்டு ஒரு நாளில் உருவானவரா?.//
இதைப்பற்றி பேசவேண்டாமென்று நினைத்தாலும் யார் எந்த ***** தேடுகிறார்கள் என்று மோப்பம் பிடித்தவர்கள் :-)(ஒரு ஸ்மைலி போட்டுட்டேன் இனி என்ன எளவு வேனாலும் எழுதலாம்) இவனுக்கு/இவள்/இவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல....

ஒரே ஒரு பதிவு இவர்களின் தரத்தை அதாங்க மூன்றாம் தரத்தை சந்தி சிரிக்கவைத்தது தான் பெரிய ஆச்சரியம்.

Muthu said...

நன்றி முத்துகுமரன்,

நானும் வாய்மூடித்தான் இருந்தேன்.ஆனால் இளவஞ்சி கைகழுவி விடப்பட்டார் என்ற வார்த்தைகள் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது.

நாளை இதுபோன்ற போக்குகளை எழுத நினைப்பவர்களும் எழுத துணியாவண்ணம் இருப்பதை உறுதிபடுத்தும் எண்ணம் இந்த வார்த்தைகளில் உள்ளது.(ஒரு மறைமுகமான மிரட்டல் என்று சொல்லலாம்).

********
எல்லா போலிகளையும் ஒழிக்கலாம் என்று ஒரு நண்பர் கூறிய கருத்தை நான் வழிமொழிகிறேன்.

போலிகளுக்கிடையே நல்ல போலி, கொடிய போலி, கொஞ்சம் பரவாயில்லையான போலி என்றெல்லாம் என்ன கிடக்கு?

Muthu said...

காலம்
உரத்துச் சொல்லுமதன்
உயிர்ப்பை


****அருமையான வரிகள்*******

Muthu said...

ஆதரவிற்கு நன்றி குழலி..

போலியை திருந்த விடாமல் பார்த்துக் கொள்பவர்கள் சத்தியம் பேசுவது நல்ல காமெடி.

நாளைக்கு எனக்கு பென்டகனில் ஜார்ஜ் புஷ் முன்னாடி விசாரணை:) வந்திருங்கப்பு:))

Pot"tea" kadai said...

இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தின் "டர்புர்", முக்காடு முனுசாமி ஆகியோருக்கு அவர்களுடைய பாணியிலேயே இ(ளவ)ஞ்சி வைத்தியமளித்ததால், பதில் பதிவு போடுவதற்கு பட்டபாட்டைக் கண்டு தான் உலகமே சிரித்ததே!

அதைவிட கொடிய வக்கிரம் என்னவென்றால் இளவஞ்சியின் பதிவில் நீங்களா இப்படி என்று கேள்வியெழுப்பியவர்கள், முக்காடு முனுசாமி பதிவில் ரசித்து + போட்டாச்சு என்று கூவிவிட்டு வந்தவர்கள். ஆனால் இங்கே வந்து அந்த பதிவின் அர்த்தமே தங்களுக்குத் தெரியாது என்று சாதிப்பார்கள். அம்மாதிரியான நடுநிலைவாதிகளின் துகிலை அவர்களே உரித்துக் காட்டியதைக் கண்டும் உலகமே சிரித்ததே.

//இளவஞ்சி யாருக்காக களம் இறங்கினாரோ அவர்கள் எல்லாம் அவரை கைவிட்டுவிட்டார்கள் என்ற விமர்சனத்தையும் பார்க்கமுடிந்தது.//

இப்படி பேசிப்பேசி தானே கலங்காலமாக தரகு வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சினையை பெரிதாக்கவோ, தர்க்கம் செய்யவோ விரும்பாததினால் தான் "...." செய்யப்படுகிறதேயொழிய வேறு எந்தவொரு காரணமும் சொல்ல இயலாது. இது அந்த முக்காடிட்ட மண்டையில் எட்டுவதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என்பதையும் இவ்வுலகம் அறியும்.

//ஆனால் ஸ்லோ பாய்சன் போல் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றப்பட்ட ஆள் பயங்கரவாதி.இது எந்த ஊர் நியாயம்?போலி டோண்டு ஒரு நாளில் உருவானவரா?. அந்த முயற்சி எந்த அளவிற்கு பலன் கொடுத்தது. எப்படி தோல்வி அடைந்தது என்பதெல்லாம் ரகசியம் அல்ல.//

போலியை தர்க்கம் செய்து தூண்டிவிட்டதே ஒரு சிலர் தான் அவர்களை பதிவுலகம் நன்றாகவே அறியும். அப்புறம் குத்துதே குடையுதே என்று அலறினால்...

//சைபர் க்ரைம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டும் காமெடியன்களுக்கு சொல்கிறேன். இதைவிட பெண்டகனே வந்தாலும் நான் பேச தயாராக இருக்கிறேன்//

ஆகா...பென்டகன் கிட்ட பேசனுமா...:-))
பதிவெழுதத் தொடங்கியதுல இருந்து, ஐபி அட்றஸ் கெடச்சிடுச்சி, வூட்டு அட்றஸ் கெடச்சிடுச்சின்னு பத்திரிகையில பீலா உட்டவங்க மொதல்ல ஒரு "புகாரை" பதிவு செய்யட்டும் அப்புறம் மத்ததப் பேசலாம்.

இவர்கள் பதிவெழுத பரிதாபத்திற்குரிய ஒரு தோற்றம் தேவை அதற்கு "போலி"யின் தயவு இவர்களுக்கு தேவை. இல்லையென்றால் எப்பொழுதோ எல்லாம் அடங்கியிருக்கும்.

Pot"tea" kadai said...

முத்துக்குமரன்,

//முத்து என்னை பொறூத்தவரை என் மீதான விமர்சனங்களை நானே சந்தித்து கொள்வேன்//

இவர்களுக்கு விமரிசனம் செய்யுமளவிற்கு திறமை இருக்கிறதா என்ன? கை போன போக்கில் நக்கல்/நையாண்டி என்ற பெயரில் வாந்தியெடுப்பவர்கள் ஒரு கூட்டமாகவும், அதை நக்குவதற்கு ஒரு கூட்டமாகவும் இருப்பவர்களிடத்தில் விமரிசனத்தை எதிர்பார்க்கிறீர்களே!!

நியோ / neo said...

இளவஞ்சியின் 'அறச்சீற்றத்திற்கும்' - 'அங்கதத் திறனுக்கும்' என் முழு ஆதரவும், வாழ்த்துக்களும், நன்றிகளும், வணக்கங்களும் உரித்தாகுக!

May your tribe Increase in thamizhmanam ilavanji! ;)

தருமி said...

முத்து,
நான் சொல்லவும் வேணுமோ..இளவஞ்சியின் பக்கம் நானும்..அவருக்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவு 'அட்டா, நமக்கு இந்த யோசனை வராம போச்சே' - ரகம். அதற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

வாழ்க இளவஞ்சி!!!

Muthu said...

நன்றி லக்கிலுக்,



***********

போலியை பற்றிய கருத்துக்கள் சில பதிவில் இருந்து நீக்குகிறேன்.அவை என் கருத்துக்கள்.ஆனால் பதிவின் நோக்கத்தை அது மாற்றுவது போல் இருப்பதால் இந்த முடிவு.

Muthu said...

நன்றி பொட்டீக்கடை, தருமி , நியோ

Anonymous said...

Well written.

சிங். செயகுமார். said...

வாத்தியார் இளவஞ்சிக்கு என்னோட ஆதரவுகள்!

அருள் குமார் said...

நானும் இளவஞ்சி அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளவஞ்சி அவர்களின் குறிப்பிட்ட அந்த பதிவை பார்த்ததும், இவர் இப்படி ஏன் எழுதவேண்டும் என வருத்தப்பட்டேன். அதன் பின் இந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட பதிவிகள் அனைத்தையும் தேடி படித்தபின்தான் தெரிந்தது இது அவசியம் என்று.

இங்கு பல்வேறு விதமான ரசனைகளைக் கொண்டவர்கள் எழுதிக்கொண்டும் படித்துக்கோண்டும் இருக்கும்போது, யாராலும் அனைவரும் ஏற்கும்படியான விஷயத்தை சொல்ல முடியாது. எதிர்மறையான கருத்துக்கள் இருப்பின் நாகரிகமான முறையில் விவாதிக்கலாம். அல்லது ஒதுங்கிவிடலாம். அன்றி, கேவலப்படுத்துவது கண்டிக்கத்தகுந்ததே என்பதால் இளவஞ்சி அவர்களை முழுமையாய் ஆதரிக்கிறேன்.

Vaa.Manikandan said...

இளவஞ்சிக்கு முழுமையான ஆதரவு உண்டு. அது மட்டுமில்லை. தைரியமாக,உண்மையைப் பேசும் யாரையுமே ஆதரிக்கலாம். தப்பில்லை. அந்தக் கருத்துக்கு நீங்கள் உடன்பட்டாலும், படவில்லையென்றாலும்.

gulf-tamilan said...

இளவஞ்சிக்கு முழுமையான ஆதரவு உண்டு

வவ்வால் said...

வணக்கம் முத்து(தமிழினி)

என்னைப் போன்ற புதிய வலைப்பதிவர்களுக்கு இங்கு நடைப்பெறுவது எதும் புரிவதில்லை,சில புரிந்தாலும் ஏன் என்று தெரிவதில்லை.எதற்கு இத்தனை காழ்ப்புணர்ச்சி என்று என்னுள் எழும் கேள்விகளுக்கு காலம் தான் பதில் கூற வேண்டும்!( கருத்து கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை) தமிழ் என்ற பொது தளத்தில் இயங்கும் அனைவருக்கும் எனது தார்மீக ஆதரவு உண்டு.இப்போராட்டங்கள் வெகு விரைவில் சுமுகமாக முடிந்தால் பெரிதும் மகிழ்வேன்!

Anonymous said...

//தைரியமாக,உண்மையைப் பேசும் யாரையுமே ஆதரிக்கலாம். தப்பில்லை. அந்தக் கருத்துக்கு நீங்கள் உடன்பட்டாலும், படவில்லையென்றாலும்.//

நிச்சயமாக.

thiru said...

முத்து,

இளவஞ்சிக்கு ஆதரவாக இந்த பதிவை இட்டமைக்கு நன்றி! காலதாமதமாக தான் இது தொடர்பான பதிவுகளை படித்தேன்.

இணையதில் ஒரு சர்வாதிகார கும்பல் என எதாவது கட்டுரை வருமா? அதற்கு பொருத்தமாக ஒரு கும்பல் இருப்பது அதன் "நாய் படாத பாட்டின் வாந்தியெடுத்த நக்கல்" வழி வெளிப்படுகிறது.

கருத்துக்களை நேர்மையுடன் உரசிப் பார்ப்பது தான் அழகு. அது இல்லாதவரை இப்படி நாய் பட்ட பாடாக தான் அவை அலைய முடியும். இவர்களது அரசியலுக்கு "போலி வேடங்கள்" அவசியமானது என்பது அனைவரும் அறிந்தது.

இணையத்தின் இந்த சர்வாதிகார கும்பலால் நேர்மையான விவாதங்களும், தரமான படைப்புகளும் தமிழுக்கு தடைபடாமல் கிடைக்க இந்த போலிகள் அனைவரையும் புறந்தள்ளுவதே சிறப்பாக அமையும். போலிகள் பெயரில் ஒளிந்திருந்து தாக்கும் அடக்குமுறை அரசியல் பரம்பரை வழி இவர்கள் கற்ற பாடம்.

இளவஞ்சிக்கு ஆதரவான இந்த குரல்கள் இன்னும் வேகம் பெறட்டும்!

thiru said...

இது நாய்கள் வார சிறப்பு கவிதை. முடிந்தா படியுங்க முத்து! :)http://aalamaram.blogspot.com/2006/05/blog-post_27.html

Anonymous said...

Dr.இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

Having been raised (Thank you, God) in Canada, I don't understand too well all these 'behind the curtains' politics. I guess, the indifference received for such subjects by the educated mass is causing complexes.

Anyhow, though I haven't read into the details for Ilavanji's post, I can assume judging from some names that keep cropping up what it's all about. I wish magazines like Kumudam pick up this kind of 'intelligent-minded' threads and reports them as well:-) Curtains will then be raised!

Definitely, I back Ilavanji. There is nothing wrong in pointing out faces. It takes more guts and strong character than 'running around the bush' trying to post cheap thoughts humorously to save face.

Admire your guts and character in coming out and voicing your opinion. As the saying goes, not only those that do evil are guilty, but those that remain silent to the evils.
-Kajan

Balamurugan said...

இளவஞ்சிக்கு என்னுடைய ஆதரவும் உண்டு. என்ன எல்லோரும் சேர்ந்து கட்சி ஆரம்பிக்க போறீங்களா? பிரச்சாரம் பரபரப்பா இருக்குது?