போலி டோண்டுவின் அடாவடியை கட்டுப்படுத்த தமிழ்மண நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கைகளை ஆதரித்தும் எதிர்த்தும்(முணுமுணுத்தும்) பதிவுகள் பல வந்தாகிவிட்டன.
ஒவ்வொரு கமெண்டையும் மாடரேஷன் வைத்து அனுமதிப்பது என்பது பலருக்கும் மிகவும் கடினம். பிரவுசிங் சென்டர் சென்று தான் பதிவையே இடவேண்டிய நிலைமை வந்தது எனக்கு.இதில் பின்னூட்டத்திற்கு பதில் மாடரேசன் பார்த்து எப்போது போடுவது?
கிரிக்கெட் விளையாடி கையை சுளுக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் நான் இதை பற்றி தனி பதிவாக போடவேண்டாம் என்று அமர்ந்திருந்தேன்.இந்த நடவடிக்கையில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.போலிடோண்டுவை ஒடுக்க தமிழ்மணம் அவர்களால் ஆன, அவர்கள் சரி என்று நினைக்கிற ஒரு நடவடிக்கையை எடுக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நடைமுறைப்படுத்தலாம். மற்றவர்கள் சில நண்பர்களை போல வெளியேறலாம். தமிழ்மணத்தின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் ஒத்துக்கொண்டுதான் நாம் இடுகைகளை கொடுக்கிறோம். தமிழ்மணம் சுமூகமாக இயங்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது நம் கடமை.ஆனால் அது தொடர்பாக நம்முடைய கருத்துகளை(கருத்து இருந்தால்) கூறுவது நம் உரிமை.அரசியல் சட்டத்தை எல்லோரும் ஏற்று நடக்கிறோம்.ஆனால் எல்லா சட்டத்தின் மீதும் நமக்கு விமர்சனமே இல்லையா என்ன?
அந்த உரிமையை பலபேர் பயன்படுத்தி இருந்தனர். கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்ற நிலையை பலரும் எடுக்காமல் இருந்தது கருத்து சுதந்திரம் தமிழ்மணத்தில் வாழ்வதாகவே தெரிகிறது.இது குறித்து சந்தோஷ் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார்.அதில் திரு.டோண்டு அவர்களுக்கு சில கேள்விகளை வைத்திருந்தார். ஜோ, அப்படிப்போடு ஆகியோர் முதற்கொண்டு பலரும் கேட்ட கேள்விகள்.என் மனதிலும் இருந்த கேள்விகள்.ஆகவே அவரை பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டு வைத்தேன்.இன்று காலையில் தான் பார்த்தேன்.ஒரு நண்பர் என்னை பண்ணையார் என்று விமர்சித்திருக்கிறார். சந்தோஷம்.
சந்தோஷின் பதிவில் சமுத்ரா என்பவரை பற்றி நான் விமர்சித்திருந்தேன்.அவர் ஒரு வித்தியாசமான ஜீவராசி என்றும் பொது புத்திக்கு உதாரணம் அவர் என்றும் கூறி இருந்தேன்.உடனே நான் பண்ணையார்தனம் செய்வதாக நண்பர் ஒருவர் எழுதி உள்ளார்.விளக்கமும் கேட்டு உள்ளார்.அதற்கு விளக்கமே இந்த பதிவு.
1.இந்த பதிவில் லிங்க் சந்தோஷ் தெளிவாக ஒரு பாயிண்டை கூறினார்.
//சபைல வந்துட்டா எல்லாரும் ஏதாவது ஒண்ணு செல்லத்தான் செய்வாங்க(நான் இங்க செல்ல வந்தது போலியை பத்தி அல்ல நீங்க ஜோவை பாத்து கேட்டீங்களே ஒரு கேள்வி டேய் இது என்னோட பக்கம் அதுல நான் எதை வேணா எழுதுவேன் உன் வேலையா பாத்திட்டு போன்னு).இல்லாட்டி உங்க பதிவுகளில் போட்டு விடுங்க யப்பா பாருங்கப்பா இந்த பதிவை என்னுடைய கருத்தை ஆதரிக்கறவங்க மட்டும் இதை படிங்க மத்தவங்க போங்கடான்னு அப்பறம் ஏதாவது சென்னா கேளுங்க.//
இதுக்கு சமுத்ரா என்பவர்கள் கொடுத்த பதில்
////சபைல வந்துட்டா எல்லாரும் ஏதாவது ஒண்ணு செல்லத்தான் செய்வாங்க(//
அப்போ சபை நாகரீகம் ?
உங்க அப்பா, அம்மா, தங்கை பத்தி என்ன வேனும்னாலும் எழுதலாம் அனா அதை பற்றி யாரும் எதுவும் பேச கூடாது.//
அதாவது ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கூறி உள்ளார்கள். அதற்கு கீழே சந்தோஷ் எழுதியுள்ள எதையுமே அவர்கள் பார்க்கவில்லை. பார்க்க விரும்பவில்லை.
2.அதையும் தொடர்ந்து அ.மார்க்ஸ் எழுதிய பார்ப்பனர் ஆடும் ஆரிய கூத்து என்ற கட்டுரையை குறிப்பிட்டு சில வாக்கியங்களை அடித்துவி்ட்டுள்ளார். மார்க்ஸ் கட்டுரையை இந்த இடத்தி்ல் குறிப்பிட என்னய்யா அவசியம்? அவர் எழுதிய சூழ்நிலை என்ன? அதில உள்ள விஷயம் என்ன?
3.ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி கேவலமாக திட்டி எழுதும் பதிவுகளில் உங்கள் எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை என்றும் கேட்டுள்ளார்.பிறகு சாதியை ஒழிக்க ஒரு வழிமுறை வேறு. "Levelling up". இதைப்பற்றி ஒரு விளக்கமான பதிவாக போட்டால் சந்தோஷம். மற்றபடி இவர் கூறியிருப்பவை எல்லாம் பலரும் பதில் சொல்லி புளித்துப்போன கேள்விகள். பதில்கள். இதைத்தான் நான் குறிப்பிட்டு பொது புத்தி என்று சமுத்ராவை விமர்சித்திருந்தேன்.
4.தொடர்ந்து எழுதும் சமுத்ரா "Dravidian Rascals" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.இதையும் குறிப்பிட்டு ஆரியர் திராவிடர் என்ற வித்தியாசமே இல்லை என்று கூறும் அவர் தாமும் ஆரியரா திராவிடரா என்று தெரியாமல் இருக்கிறார் என்றும் எழுதியிருந்தேன்.இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சமுத்ராவின் பின்னூட்டத்திற்கு சந்தோஷ் பதில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நானும் தனிமனித தாக்குதலை செய்துவி்ட்டேன் என்று நினைத்து எனக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்.அதை நான் தவறாக கருதவில்லை.ஒரு மூத்த வலைப்பதிவாளர் தம் பதிவுக்கு வந்து தனக்கு அறிவுரை கூறியுள்ளதால் அவர் உணர்ச்சி வசப்பட்டிருக்கக்கூடும். அவர் கூறியது சரி என்றும் நான் கூறியது தனிமனித தாக்குதல் என்றும் தோன்றியிருக்கலாம்.தப்பில்லை.சந்தோஷின் மற்ற பதிவுகளில் எனக்கு எவ்வளவோ கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன.அதற்காக இந்த பதிவை நான் கண்டிக்க வேண்டுமா என்ன?
ஒருவர் காலையில் எழுந்து தினமலர் படித்து பொழுதுபோக்குக்கு துக்ளக் படித்து தேசியம் தேசியம் என்று கனவில் கூட காரியத்துடன் புலம்பும், தேவையில்லாமல் கண்ட இடத்தில் ஜெய் ஹிந்த் போடும் ஆட்களுடன் பேசி படித்து அறிவை வளர்த்துக்கொண்டால் வருவது தான் பொது புத்தி.இது என் கருத்துதான்.மற்றவர்கள் இதற்கு நேர்மாறாக சொல்லலாம்.அதை நான் மறுத்து பண்ணையார்த்தனம் என்று சொல்லமுடியுமா? இதை மூத்த வலைப்பதிவாளர்கள் சொன்னால் வாதத்திறமை என்பதும் நாங்கள் சொன்னால் பண்ணையார்த்தனம் என்பதும் நியாயமல்ல. நாங்களும் மூத்த வலைப்பதிவாளர் ஆவது எப்போது? எங்களுக்கு அப்ரெண்டீஸ்ஷிப் எப்போது முடியும்?
நண்பரே,மேற்கண்ட சமுத்ரா என்ற நண்பரின் பதிவில் இருந்து உங்களுக்கு சில விஷயங்கள் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு அது குப்பையாகவும் தெரியலாம். அதுவெல்லாம் அவரவர் மனம் இயங்கும் தளத்தையும் விதத்தையும் பொறுத்தது.என் பதிவுகளை மிகவும் பாராட்டுபவர்களையும் பார்த்துள்ளேன்.(நம்புங்கய்யா).குப்பை என்று விமர்சிப்பவர்களையும் பார்த்துள்ளேன்.
சமுத்ரா ஒருவரே அல்ல.அவர் ஒரு குழு என்றும் போலி என்றும் கருத்து கொண்ட நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள்.நான் அதை குற்றம் சொல்லவில்லை. அறிவுபூர்வமான விவாதங்களுக்கு ஒரு பதிவும் சில்லுண்டித்தனமான விசிலடிச்சான் குஞ்சு ஆக்ட்டிவிட்டிசுக்கு( வார்த்தை உதவி நன்றி: திரு ராம்கி அண்ட் ரோசா வசந்த) ஒரு பதிவும் பலரும் வைப்பது அவரவர் உரிமை.அதிலும் தவறில்லை என்பேன்.அவரை விமர்சிப்பதால் நீங்கள் வெகுண்டு எழுவதையும் நான் வித்தியாசமாக பார்க்கவில்லை.கருத்தை எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதுதான் என் நிலை.
நிற்க.திரு.டோண்டு ராகவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் என்ற ஒத்துகொள்வதில் எனக்கு வெட்கமோ,பயமோ ஒன்றும் இல்லை. அதை நான் ஒரு பதிவாகவே போட்டுள்ளேன்.ஆனால் போலி டோண்டு பிரச்சினை இவ்வளவு பெரிதானதற்கு அவரும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.அதற்காக அவரின் மீதான தனிப்பட்ட கோழைத்தனமாக தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. போலியாக ஒளிந்துக்கொண்டு அடுத்தவரின் குடும்பத்தைக்கூட விடாமல் ஆபாசமாக எழுதி தாக்குபவர்களை கண்டிப்பது நம் சமூக கடமை. என் பதிவிலும் போலி டோண்டு எழுதினான்.ஐ.பி செக் எல்லாம் வைத்துள்ளேன் தான். சட்டபூர்வமான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல் உண்டு.
இன்னும் சொல்லபோனால் திரு.டோண்டுவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு குழுவே போலி் டோண்டுவை Provoke செய்தது..ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. டோண்டு இதில் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டார் என்றும் எனக்கு சந்தேகம் உள்ளது. போலி டோண்டு பத்து பின்னூட்டம் கேவலமாக எழுதினால் அதை பெரிதுபடுத்திய கும்பல் அதை இரண்டு முறையாவது கட் காப்பி பேஸ்ட செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். இன்னும் பலரும் இதே போல கருதுவதாக தெரிகிறது. போலியால் பாதிக்கப்பட்ட சிலர் கூட இது ஒரு குழு என்பதாக கருத்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு நபராக இருந்தால் 24 மணிநேரம் இதைத்தான் செய்து கொண்டிருக்க முடியும்.வேறு பிழைப்பை பார்க்கமுடியாது.ஆனால் எப்படிப்பட்ட குழு என்பதில்தான் குழப்பம் உள்ளது.
ஒரு குடும்பத்தை கேவலமாக பேசுவது சில்லறைத்தனம்.(இன்னும் கடுமையான வார்த்தைகளும் போட்டுக்கொள்ளலாம்)ஆனால் அதே சில்லறைதனத்தை ஒரு இனத்தையே குறித்து யாராவது பேசினால் அது முற்போக்கா? என்னை பொறுத்தவரை இரண்டுமே கண்டிக்க, தண்டிக்கப்பட வேண்டிய சில்லறைத்தனம்தான்.(இது தனியாக எழுதவேண்டிய விஷயம்).
போலி டோண்டுவை போட்டு தள்ளியாயிற்று.(இது சாத்தியமா என்பது போக போகத்தான் தெரியும்). இனி அடுத்ததாக யாரும் பார்ப்பனீயத்தை பற்றி பேசவே கூடாது என்ற நிலைமைக்கு தமிழ்மணத்தை எடுத்து செல்ல நினைப்பது நடக்காது, நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.
பார்ப்பனீயத்தை எதிர்ப்பதை வெறும் ஒரு சாதி எதிர்ப்பாக மட்டும் பார்ப்பது தவறு. அது ஒரு சமூக அவலம் என்ற கருத்து என்னைப்போன்ற பல பண்ணையார்களுக்கும்(?) உண்டு. கூலிக்காரர்களுக்கும் உண்டு.
பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல பார்ப்பன நண்பர்கள் உள்ளார்கள் என்பதை எப்படி அர்த்தப்படுத்துவீர்கள்?
கருணாநிதி குடும்பத்தில் சாமி கும்பிடுகிறார்கள்.அவர் பேரன் இந்தி படிக்கிறான், ராமதாஸ் பேரன் ஆங்கிலம் படிக்கிறான் என்ற லெவலில் விமர்சிப்பவர்கள் அவர் அய்யர் குடும்பத்தில் பெண் எடுத்ததைப்பற்றி கொச்சைப்படுத்தித்தான் பேசமுடியும். பாஸிடிவ்வாக திங்க் பண்ண முடியாதுதான்.
உங்களின் சில பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும்
"சொல்கிற கருத்தை மட்டும் பார்..சொல்கிற ஆளைப் பார்க்காதே.அவன் பின்புலத்தை பார்க்காதே"
என்பதாக ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறீர்கள்.அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.அது எல்லா விஷயத்திற்கும் பொருந்தாது.பேசப்படும் விஷயத்தை பொறுத்து அது மாறலாம்.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆர்க்யுமெண்ட், ரீஸனிங் எல்லாம் பலமாக இருக்கும். உங்களோடு வார்த்தை லாவணி பாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அருமையாக உங்களுடைய பாணியில் ஒரு பதிவு போடுங்கள்.சோதாத்தனம்,பண்ணையார்த்தனம் என்றெல்லாம் அதில் நீங்கள் எழுதலாம்.யாரும் கேட்க மாட்டார்கள். மூத்த வலைப்பதிவாளர் அல்லவா?.
யார் யாருக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்பதை சொல்ல சொல்லி இருந்தீர்கள்.நான் என் விருப்பம் போலத்தான் பதில் சொல்வேன்.ஒரு சில விஷயங்களை படிப்பவர் பார்வைக்கு வைத்து அவர்களை முடிவு எடுக்க விடுவதுதான் சரி என்பதுதான் என் நிலைப்பாடு.
இன்னும் சொல்லபோனால் பதிவிடுவதோடு என் வேலை முடிந்தது. படிப்பவர்கள் ஜட்ஜ்மெண்ட்டுக்கு விடவேண்டும் என்பது தான் என் வழிமுறை.இதற்கு காரணம் உண்டு.ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆட்டத்தின் விதிமுறைகளை அமைப்பார்கள். அந்த விதிமுறைப்படி தான் ஆட்டத்தை ஆடவேண்டும் எனபார்கள்.எனென்றால் விதிமுறைகள் அவர்களுக்கு சாதகமானவை.நாங்கள் விதிமுறைகளையே ஏற்றுக்கொள்ளவில்லை. கேள்விக்குட்படுத்துகிறோம். அப்புறம் ஆட்டத்தை எப்படி ஆடுவது?.இதுதான் விஷயம்.
இல்லை சமுத்ரா மீது நான் தனிமனித தாக்குதல் நடத்தினேன் என்று உறுதியாக கூறீனீர்கள் என்றால் "சமுத்ரா அவர்களே! இந்த எளியோனை மன்னியுங்கள்".
மன்னிப்பு கேட்க நான் வெட்கப்பட்டதேயில்லை.ஆனால் அதே சமயம் மனதிற்குள் உள்ளதை மறுத்து சமரச சன்மார்க்கம் பேசவும் நான் தயாரில்லை.எதிர்ப்பு அரசியல் கடினம்தான்.கேவலப்படுத்தப்படும் தான்.ஆனால் அது எங்கள் உயிரில் கலந்துள்ளது.
கடைசியாக ஒன்று....திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
(இது ஆரிய திராவிட பதிவு இல்லை.ஆரிய திராவிட விஷயத்தை பற்றி எழுதும் அளவிற்கு எனக்கு படிப்பு இப்போதைக்கு கிடையாது. பின்னாளில் எழுதலாம். பண்ணையார்த்தனத்தை பற்றி மட்டும்தான் எழுதியுள்ளேன். இதைப்பற்றி ஆட்சேபமோ,ஆதரவோ,கருத்தோ தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டம் இடலாம்.பதில் கொடுக்க சொல்லி வூடு கட்டவேண்டாம்.என்னை சீர்தூக்கி பார்த்து திருத்திக் கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் உதவும் என்று நம்புகிறேன்.ஒரு மனிதன் எப்போதும் தன்னையும் தன் கருத்துக்களையும் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது)
Monday, January 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
// என்னை சீர்தூக்கி பார்த்து திருத்திக் கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் உதவும் என்று நம்புகிறேன் // என்று நீங்கள் சொன்னதால் மட்டும் ::
பரவலாக அறியப்படாதவராக இருக்கும் (அட்லீஸ்ட் நான் மற்றும் சந்தோஷ் என்ற அளவில் வைத்துக்கொள்வோம்) ஒருவரை பற்றி வந்து சம்பந்தமில்லாத இடத்தில் ஜீவராசி என்று சொல்கிறீர்கள். ஒருவர் துக்ளக் படித்து கண்ட இடத்தில் ஜெய்ஹிந்த் போடுவதால் அவருக்கு பொது புத்தி என்ற முடிவுக்கு நீங்கள் வந்த விதத்தை வைத்து உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட புத்தி என்று நான் நினைக்கலாம். ஆனால் அதை வெளியில் சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் ப்ரச்னை.
இதில் irony என்னவென்றால் அந்த பதிவின் ஆதார விஷயங்களில் ஒன்று தனி மனித தாக்குதலை பற்றியது. சந்தோஷ் பதிவை பற்றிய உங்கள் கருத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை. அதில் சம்பந்தமில்லாத தனி மனித தாக்குதலை பற்றியதுதான் அது. அதை படித்துவிட்டு எப்படி எதிர்வினை செய்கிறார் என்பதை பொறுத்து சமுத்ராவுக்கு ஆதரவோ அறிவுரையோ வழங்க அறிவு ஜீவிகள் வரலாம்.
பின்னூட்டம் வரும்போது ஒரு பகுதிக்கு மட்டும் பதில் சொல்வது பதில் சொல்பவரின் இஷ்டம். அதில் வெறுமை இருந்தால் அதை விளக்குங்கள். சும்மா போகிற போக்கில் கமெண்ட் எழுதாதீர்கள். புதிதாக வருபவர்களுக்கு யாரையாவது எக்ஸ்போஸ் செய்யவேண்டும் என்று நினைத்தால் அவரை பற்றி நேர்மையாக ஒரு பதிவு எழுதி எக்ஸ்போஸ் செய்யுங்கள். இப்படி கண்ட இடத்தில் போய், இவனுக்கு எல்லாம் பதில் சொல்லிகிட்டு டைம் வேஸ்ட் செய்யாதீர்கள், அவன் ஒரு ஜீவராசி ஜந்து என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். அது நேர்மையற்றது. அது பண்ணையார்த்தனம்தான். இதற்கும் மூத்த வலைப்பதிவு அப்ரண்டீஸ் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு உங்கள் இஷ்டம்.
பண்ணையார்த்தனம் மட்டும்தான் எழுதியுள்ளேன் என்று சொல்லிக்கொண்டே ஆரிய திராவிட பார்ப்பனீய விஷயங்களை (அதை எல்லாம் எழுதும் அளவு படிப்பு இல்லை என்று சொல்லிக்கொண்டே) இழுத்து எழுதும் நீங்களா அப்ரண்டீஸ்? ஆல் த பெஸ்ட்.
முத்து அவர்களே,
//சமுத்ரா ஒருவரே அல்ல.அவர் ஒரு குழு என்றும் போலி என்றும் கருத்து கொண்ட நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள்.//
கோவை வந்தால் எனக்கு ஒரு email அனுப்புங்கள்.
இந்த 21 வயது மானவன் உங்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்கின்றான்.
இந்த வார கடைசியில் பெங்களூரூ வருவதாக இருந்தேன்(Bryan Adams concertக்காக).உடல் நிலை சரியில்லை என்பதால் முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன்.
இந்த தமிழ்மனத்தில் நான் ஒரு சிறுவன்.என்னை சுற்றி எதற்காக இத்தனை Conspiracy theoryகள் ?
இப்போது நான் எதை எங்கு எழுதினாலும் எனது கருத்துக்கு அதாரமாக ஒரு சுட்டி கொடுத்து வருகிறேன்.
//கடைசியாக ஒன்று....திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.//
இருந்தால் தானே ஒழிக்க? :-)
திராவிடம் சம்பந்தமாக எனது கேள்விகளை எனது வலைபூவில் பதிவு செய்து உள்ளேன்.
உங்களுக்கு அதை பற்றி எதாவது தெரிந்தால் தாராளமாக அங்கு வந்து உங்கள் கேள்விகளை கெட்கலாம்.
என்னிடம் திராவிடம் என்பது ஒரு 420 வேலை என்பதற்க்கு அதாரம் உள்ளது.
அறிவியல் பூர்வமாக,Y Chromosomes களை ஆய்வு செய்து கண்டுபிடிக்க பட்ட விசயங்களை அதாரமாக கொண்டு இந்த "திராவிடம்" பொய் என்று நான் கூறிகிறேன்.
இதை மறுக்க நிங்கள் Phylogeography என்ற அற்புத Branch of Scienceஐ மறுக்க வேண்டும்.
இந்தியாவில் 45 ஜாதிகள், 32 ஆதிவாசி tribeகள் - இவர்களின் Y Chromosomeகளையும் அடிபடையாக கொண்ட National DNA Analysis Centre, Central Forensic Science Laboratory, Kolkata 700014, India; Department of Zoology, University of Oxford, Oxford OX1 3PS, United Kingdom; Estonian Biocentre, 51010 Tartu, Estonia; and National Institute of Biologicals, Noida 201307, India ஆகிய Institutionகளின் ஆராய்ச்சிய எதை கொண்டு எதிர்க்க முடியும் ?
//இல்லை சமுத்ரா மீது நான் தனிமனித தாக்குதல் நடத்தினேன் என்று உறுதியாக கூறீனீர்கள் என்றால் "சமுத்ரா அவர்களே! இந்த எளியோனை மன்னியுங்கள்".//
உங்கள் மீதோ, என்னை பாகிஸ்தான் போக சொல்லும் நபர்கள் மீதோ எனக்கு எந்த விதமான வருத்தமும் கிடையாது.
யார் எங்கள் ஊருக்கு வந்தாலும் அவர்களை கிளப்புக்கு அழைத்து சென்று நல்ல விதமாக உபசரித்து அனுப்புவேன், நிச்சயமாக எங்காவது போய் தொலையுங்கள் என்று கூறமாட்டேன்.
நான் கேட்பது எல்லாம் இது தான் :
"தமிழ்மனத்தில் தனிபட்ட ஒரு மனிதரை பற்றி பதிவு போடுவதை நிறுத்துங்கள்."
அப்படிபட்ட பதிவுகள் எனது பழைய வலைபூவில் இருந்ததால் அதை அழித்து விட்டு புதிதாக தொடங்கியுள்ளேன்.
//இதையும் குறிப்பிட்டு ஆரியர் திராவிடர் என்ற வித்தியாசமே இல்லை என்று கூறும் அவர் தாமும் ஆரியரா திராவிடரா என்று தெரியாமல் இருக்கிறார் என்றும் எழுதியிருந்தேன்//
நான் ஒரு மனிதன்.
அதில் உங்களுக்கு எதாவது சந்தேகம் உள்ளதா? :-)
//கடைசியாக ஒன்று....திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்//
முத்து...நல்ல பதிவு. இந்த
வி(வ)காரத்தில் எழுதப்பட்ட எல்லா பதிவுகளையும், பின்னூட்டம் என்ற பெயரில் வந்து விழுந்திருக்கின்ற தூஷணைகளையும் படிக்காதது ஒரு விதத்தில் ந்ல்லதுதான் போல. வயசான காலத்தில் எதுக்கு இந்த போக்கத்த டென்ஷன் வேலை.
திராவிட ராஸ்கல்கள் நீர்த்தாவரம் மாதிரி. வெட்ட வெட்ட வளருவார்கள் என்று இன்னமும் அழுத்திச் சொல்லுவோம்.
thanks mugamoodi for advice
thanks samudra for clarification..(we may meet in kovai in future)
thanks mooku sundar
ஐயா மன்னிக்கவும்.. டோண்டு ரொம்ப உணர்ச்சிவசப்படுவதாக சொன்னோரில் நீரும் ஒருவர்தானே.. ஒருவர் 'பண்ணையார்', அல்ல 'பண்ணையார்த்தனம்' என்று சொன்னதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படும் நீவிர் , ஒரு வயதான, தமிழ்மணத்தை தன் வாழ்க்கையென பார்க்கும் ஒருவரின் உறவினரை கண்ட கண்ட இடங்களில், வாய் கூசும் அளவுக்கு எழுதுவதை கண்டு, அவர், அவருக்கு தெரிந்த அளவில் செய்யும் வினைகளை ஏன் குறை கூறுகிறீர்கள்? நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே எனக் கூறுவதை நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது. எப்படி நீருபிப்பது ? சைபர் சட்டம் ஒரே நாட்டுக்குள் தானா? வெளிநாடுகளிலும் அது செல்லுபடியாகுமா? அந்த தைரியத்தில் தானே அவனும் ஆடுகிறான் ? அவ்வாறே நீருபித்து தண்டனை வாங்கி கொடுத்தாலும் , இங்கே அவர் செய்தது அநியாயம், ஒரு சக வலைப்பதிவருக்கு,ஒரு தமிழனுக்கு, ஒரு திராவிடனுக்கு செய்யும் அநியாயமாகத்தான் பார்க்கப்படும் .
சமுத்ரா குரோமோசோம்களையெல்லாம் ஆதாரம் காட்டிப் பதிலளிப்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்பி ஒரு கேள்வி.திராவிடம் என்பது புனைகதை என்றால் ஆரியம் என்பது உண்மைக்கதையா?ஆரியர் என்ற இனம் இந்தியாவில் உண்டா?இந்திய சமுதாயத்தைப் பிரித்ததில் திராவிட ராஸ்கல்களுக்கு மட்டும் தான் பங்குண்டா தாம் ஆரியர் எல்லோரிலும் மேலானவர் தூய இரத்தம் என்றெல்லாம் பெருமை பேசிய ஆரிய ராஸ்கல்களுக்கு அதில் பங்கில்லையா?இன்றும் தாம் ஆரியர் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்க ஒரு பதிவு போடுவீர்களா?
//திராவிடம் என்பது புனைகதை என்றால் ஆரியம் என்பது உண்மைக்கதையா?//
ஆரியன் என்றால் ஆங்கிலத்தில் noble என்று தான் அனைத்து சமஸ்கிரத dictionaryகளிலும் சொல்லபட்டுள்ளது.
//ஆரியர் என்ற இனம் இந்தியாவில் உண்டா?//
ஆரியர் என்ற சொல ஒரு இனத்தை கூறிப்பது அல்ல.அதனால் ஆரியர் என்ற இனம் எங்கும் இல்லை. :-)
//தாம் ஆரியர் எல்லோரிலும் மேலானவர் தூய இரத்தம் என்றெல்லாம் பெருமை பேசிய ஆரிய ராஸ்கல்களுக்கு அதில் பங்கில்லையா?//
தூய இரத்தும் என்று ஒன்றுமே இல்லை ஈழநாதன் அவர்களே.
யார் தன்னையோ தனத் இன/மத மக்களையோ மற்றவர்களைவிட உயர்ந்த்வர்/தூயவர் என்று சொன்னாலும் அவர்களை சமுத்திரா எனும் நான் எதிர்ப்பேன் - கண்டிப்பேன்.
//இன்றும் தாம் ஆரியர் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்க ஒரு பதிவு போடுவீர்களா?
//
நிச்சயமாக ஈழநாதன்.
தற்போழுது உடல்நிலை சரி இல்லாத என்பதால் நான் எழுத நினைத்த Chromosome அராய்ச்சியை பற்றி எழுத முடியவில்லை.
"ஆர்யவர்தா"(அல்லது Brahmarshi தேசம்) - the land of the Arya's என்றும் ஒரு சொல் உண்டு, அது ஒரு இனத்தை குறிக்கும் சொல் அல்ல, ஆரியர் என்ற ஒரு இனம் இருந்ததில்லை.
Aryavarta, or alternatively Brahmarshi desa covered the river plains of northeastern India, in the modern state of Uttar Pradesh, so it is also debatable if this name could apply to all of India. Aryavarta was also a collection of city-states and Vedic tribes, not a political entity by itself.
ஈழநாதன்,
ஜாதி,மதம், இனம் எதை வெய்த்து பார்த்தாலும் யாரும் யாரை விடவும் தாழ்ந்தவர்/உயர்ந்தவர் இல்லை
எழுதுபவர் அவரின் மத/இன/மொழி - இதில் எதன் மேல் பற்று கொண்டு அந்த பொய் பதிவை எழுதினாலும் அதில் தவறு உள்ளது என்றால் அதை தவறு என்று நான் சொல்லாமல் விடமாட்டேன்.
Everything can be sacrificed for the Truth.
But, Truth cannot be sacrificed for anything.
லார்டு லபக் தாசு,
நீங்கள் பதிவின் கருத்தை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். திரு.டோண்டுவை போலி டோண்டு கோழைத்தனமாக தாக்குவதை உங்களைப்போலவே நானும் வன்மையாக கண்டிக்கிறேன். எனிவே கருத்துக்கு நன்றி..
ஈழநாதன், கருத்துக்கு நன்றி...
சமுத்ரா,
பல ஆழமான கருத்துகளை கூறியுள்ளீர்கள். நன்றி. உடம்பை பார்த்துக்கொள்ளவும்.
இங்கு எல்லோரும் உங்களை பற்றியே நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் கூட இருப்பதாய் நினைத்து எழுதியுள்ளீர்கள்.அப்படி எல்லாம் இல்லை. 21 வயதிலேயே நீங்கள் இவ்வளவு அறிவாளியாகவும்(பல தகவல் மற்றும் லிங்க்களுடன்) இருப்பதையும்,உங்களுக்கு 24 மணிநேரமும் இண்டர்நெட் வசதி செய்து தந்திருக்கும் கல்லூரி நிர்வாகத்தையும் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது என்பது உண்மை.
எனக்கெல்லாம் 21 வயதில் ஒன்றுமே தெரியாது.( நீ இப்பவும் அப்படிதாண்டா என்கிறீர்களா.அதுவும் சரிதான்.நானும் கோவையில்தான் ஐந்து வருடங்கள் படித்தேன்.இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பி.எஸ.ஜீ ஆர்ட்ஸ்.கண்டிப்பாக நாம் கோவையில் சந்திப்போம்)
//அப்படி எல்லாம் இல்லை.//
அட நிங்க வேற உங்களுக்கு பதில் எழுத கை வலிக்குமேன்னு நானே எழுத வேண்டியத பாதி தான் எழுதியுருக்கேன்....
Bryan Adams concertக்கு போக முடியவில்லை என்பது தான் எனக்கு மிக பெரிய வருத்தம். :-(
//உங்களுக்கு 24 மணிநேரமும் இண்டர்நெட் வசதி செய்து தந்திருக்கும் கல்லூரி நிர்வாகத்தையும் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது என்பது உண்மை.//
நான் வீட்டில் இருந்து தான் இனையத்தை நோண்டுகிறேன். :)
//நானும் கோவையில்தான் ஐந்து வருடங்கள் படித்தேன்.இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பி.எஸ.ஜீ ஆர்ட்ஸ்.கண்டிப்பாக நாம் கோவையில் சந்திப்போம்)
//
அட, நிங்க ரொம்ப பக்கமா வந்தாச்சு.
எங்க வீடு ஆர்ட்ஸ்ல இருந்து 1கி.மி கூட இருக்காது.
சித்ராவுல இறங்கி பொடி நடையா வந்தா எங்க விட்டுக்கு முனு நிமிஷத்துல வந்துவிடலாம்.
கண்டிப்பாக கோவை வந்தால் எனக்கு சொல்லுங்கள்.
பி.ஸ்.ஜி பக்கத்தில் பார்க்க வேண்டிய விசயங்கள் நிறைய வந்துவிட்டன.
மிக்க நன்றி சமுத்ரா அவர்களே உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்
முதற் பின்னூட்டத்தில் திராவிடம் என்பது புனைவு என்று சொன்னதால் ஆரியம் என்பதும் புனைவாக இருக்கும் என நினைத்தேன்.ஆனால் இப்போது நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் திராவிடம் என்பதை புனைவாக்கும் அதேவேளையில் ஆரியம்/ஆரியர்/ஆரிய தேசம் என்ற கருத்தாடலை நோக்கி முன்னகர்வதாகத் தோன்றுகின்றது அதாவது ஆரியம் என்றொரு இனம் இல்லை ஆனால் சமஸ்கிருதத்தில் ஆரியமென்றால் Noble அதாவது பெரியது உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆக உயர்ந்தோர்(Noblemen)எனக் கருதப்படக்கூடிய மக்கள் கூட்டமொன்று இந்தியாவில் ஆரியவர்த்த என்று குறிப்பிடப்படும் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளது என்பது உங்கள் கூற்று அப்படித்தானே
ஈழநாதன் அவர்களே,
//உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்//
மிக்க நன்றி.
//Noble அதாவது பெரியது உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆக உயர்ந்தோர்(Noblemen)எனக் கருதப்படக்கூடிய மக்கள் கூட்டமொன்று இந்தியாவில் ஆரியவர்த்த என்று குறிப்பிடப்படும் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளது என்பது உங்கள் கூற்று அப்படித்தானே
//
சம்ஸ்கிரத "ஆரியா" என்ற வார்த்தையின் origins பற்றி எனக்கு தெரிந்தவரை அது ஒரு குறிபிட்ட மக்களை குறிப்பது அல்ல.
ஒரு சிறு உதாரனம் : ஆர்யா என்ற வார்த்தை புத்த/சமன scripturesகளிலும் அடிக்கடி வருகிறது.
மேலும், துல்லியமாக "ஆர்யா" என்ற சம்ஸ்கிரத வார்த்தைக்கு கி.பி.450ஆம் ஆண்டை சேர்ந்த "Amarakosha" என்ற சம்ஸ்கிரத புத்தகத்தில் இப்படி விளக்கம் அளிக்கபட்டு உள்ளது : "An Arya is one who hails from a noble family, of gentle behavior and demeanor, good-natured and of righteous conduct. (mahakula kulinarya sabhya sajjana sadhavah.)"
இந்த definition ஒரு குறிபிட்ட இனத்தை/மக்களை பற்றி இருக்க முடியாது அல்லவா ஈழநாதன்?
உதாரனம் : aryabhatta , aryasanda(இவர் புத்த மத philosopher)
புத்த மததின் நான்கு உன்மைகளை(Four noble truths) Arya Satyani என்று தான் சொல்வார்கள்.
:-)
இதில் arya - noble, satyani - truths?
பொதுவாக ஜனபாதங்கள்(vedic janapadas) இருக்கும் பகுதிகளை Arya-Varta என்று அழைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஈழநாதன், மேலே நான் சொன்ன எதுவும் மிகவும் சுலபமாக சரியா தவறா என்று எடைபோட்டு விட முடியும்.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.
சமுத்ரா.
SAMUDRA YOU ARE NUMBER RACISIT
சமுத்ரா,
இது பண்ணையார்த்தனத்தை பற்றிய பதிவு.ஆரிய , திராவிட விவாதம் செய்யும் பதிவு அல்ல இது. ஆகவே நீங்கள் உங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளை சிறிது காலத்திற்கு உங்களுடன் வைத்திருங்கள். நாம் கோயமுத்தூரில் சித்ராவில் சந்திக்கும்போது ஏர்போர்ட் எதிரில் இருக்கும் சேட்டான் கடையில் அமர்ந்து அதை பேசி முடிவு எடுப்போம்.ஒரு நண்பரின் பின்னூட்டத்தை நான் பார்வேர்ட் செய்துள்ளேன்(தனி மடலில்).அதையும் வைத்து ஆராய்ச்சி செய்யுங்கள்.இதைப்பற்றி இன்னும் சில லிங்க்குகளை நான் உங்களுக்கு கொடுத்ததாக ஞாபகம்.வெறும் லிங்க்குகளில் எனக்கு ஆர்வம் இல்லை.நாமும் சிறிது சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து என்றாலும் நீங்கள் லிங்க்குகளை பெரிதாக எண்ணிகொண்டிருப்பதால் நானும் கொடுக்க
வேண்டி இருந்தது.
பண்ணையார்தனத்தை பற்றி நீங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன். சோ,உங்களுக்கு பெரிதாக வருத்தமில்லை என்று நினைக்கிறேன்.
. மொபைல் நம்பர் ஏதாவது கொடுத்தால் நான் வரும்போது உங்களுக்கு தகவல் தெரிவிக்க வசதியாக இருக்கும்.
( தனி மடலில் தரலாம்.காசி கோவையில் தான் உள்ளார்.தெரியுமா).
நன்றி திரு சன்னாசி,
உங்கள் கருத்தை நான் பப்ளிஷ் செய்திருந்தேன்.அது டெலிட் ஆகிவிட்டது.டெக்னிகல் தவறா அல்லது நீங்களே டெலிட் செய்தீர்களா என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு
தெரியபடுத்தினால் எனக்கு உபயோகமாக இருக்கும்.
மற்றும் ஈழநாதன், வழவழகொழகொழ, அனானி ஆகிய அனைவருக்கும் நன்றி.
நண்பர்களே,
நான் யாரையும் எக்ஸ்போஸ் பண்ணவேண்டும் என்பதற்காகவே "INTIMIDATE" செய்யவேண்டும் என்பதற்காகவே பதிவோ அல்லது பின்னூட்டமோ கொடுப்பதில்லை.
நீஙகள் சோதா, நீங்கள் வால் நட்சத்திரம்,நீங்கள் பண்ணையார், நீங்கள் கூலிக்காரர், நீங்கள் அரசு ஊழியர் என்றெல்லாம் யாரையும் நான் சொல்லுவதில்லை. இதைத்தான் எழுதவேண்டும் இதை எழுதக்கூடாது என்றெல்லாம் மறைமுக பிரஷர் கொடுப்பதில்லை.
விளக்கம் கேட்கப்பட்டது.கொடுத்தேன். பண்ணையார்த்தனம் என்று குற்றம் சாட்டுவது உங்கள் உரிமை.அதை மறுப்பது என் உரிமை.அவ்வளவுதான்.(ஆனால் நிஜமாகவே ஒரு பண்ணை இல்லம் அமைக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.எப்படிய்யா உங்களுக்கு இதெல்லாம் தெரியுது?)
மற்றபடி என் அவசர பதிவை நான் மீண்டும் இன்று படிக்கும்போது நான் என்
கருத்தை தெளிவாகவே எழுதியிருப்பதாக படுகிறது. ஐ ஸ்டேண்ட் பை தட்.
திராவிட ராஸ்கல்ஸ் என்று விமரிசிக்கிற ஒருவரிடம் இருந்து சில நல்ல விஷயங்களும் அதற்கு பதிலாக ஜீவராசிகள் என்று விமரிசிக்கிறவரிடம் இருந்து பண்ணையார்த்தனமும் சிலர் கண்களுக்கு தெரிந்தால் பிரச்சினை பார்வையிலும் நோக்கங்களிலும் தான் என்று நினைக்கிறேன்.
எனிவே,என் அப்ரெண்டிஸ்ஷிப்பை முடித்து வைத்த நண்பருக்கு நன்றி. "வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" ஆனேன்.நன்றி
//"வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" ஆனேன்.நன்றி//
:-))))))))))))))))))))))))
some comments deleted with information to the people concerned thank you
//ஒருவர் காலையில் எழுந்து தினமலர் படித்து பொழுதுபோக்குக்கு துக்ளக் படித்து தேசியம் தேசியம் என்று கனவில் கூட காரியத்துடன் புலம்பும், தேவையில்லாமல் கண்ட இடத்தில் ஜெய் ஹிந்த் போடும் ஆட்களுடன் பேசி படித்து அறிவை வளர்த்துக்கொண்டால் வருவது தான் பொது புத்தி.இது என் கருத்துதான்.மற்றவர்கள் இதற்கு நேர்மாறாக சொல்லலாம்.//
நன்றாகச் சொன்னீர்கள். என் கருத்தும் இதுதான்.
//இன்னும் சொல்லபோனால் திரு.டோண்டுவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு குழுவே போலி் டோண்டுவை Pரொவொகெ செய்தது..ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. டோண்டு இதில் புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டார் என்றும் எனக்கு சந்தேகம் உள்ளது. போலி டோண்டு பத்து பின்னூட்டம் கேவலமாக எழுதினால் அதை பெரிதுபடுத்திய கும்பல் அதை இரண்டு முறையாவது கட் காப்பி பேஸ்ட செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். //
உங்கள் எழுத்தில் உள்ள உண்மையை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே என்றேனும் அவர்களுக்கு அந்த நிலைவரும் போது(Pரொவொகெ ) நினைத்துப் பார்ப்பார்கள்.
//ஒரு நபராக இருந்தால் 24 மணிநேரம் இதைத்தான் செய்து கொண்டிருக்க முடியும்.வேறு பிழைப்பை பார்க்கமுடியாது.ஆனால் எப்படிப்பட்ட குழு என்பதில்தான் குழப்பம் உள்ளது//.
எப்படிப்பட்ட குழு என்பதை சின்னவன், நாட்டாமை, குசும்பன் (இப்பத்தான் இப்படி ஒரு ஆளு இருப்பதெல்லாம் நமக்கு தெரியுது!!) மற்றும் பலர் தளங்களுக்கு சென்று பாருங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
//ஒரு குடும்பத்தை கேவலமாக பேசுவது சில்லறைத்தனம்.(இன்னும் கடுமையான வார்த்தைகளும் போட்டுக்கொள்ளலாம்)ஆனால் அதே சில்லறைதனத்தை ஒரு இனத்தையே குறித்து யாராவது பேசினால் அது முற்போக்கா? என்னை பொறுத்தவரை இரண்டுமே கண்டிக்க, தண்டிக்கப்பட வேண்டிய சில்லறைத்தனம்தான்.(இது தனியாக எழுதவேண்டிய விஷயம்)//.
தன் வாழ்நாளையே நமக்காக அர்பணித்து., தன் சொத்துக்களை நமக்காக கல்விக்கூடங்களாகவும்., அநாதை இல்லங்களாகவும் விட்டுச் சென்றவர்களின் முகங்களில் கன்னடர் என்றும், இளவயதுப் பெண்ணை ஏமற்றி மணந்தததாகவும் சில வரிகளைப் போட்டும்., ஒரு கட்டுரை முழுவதும் அண்ணாவைப் புகழ்ந்து விட்டு., கடைசி பத்தியில் அழுக்கு வேட்டி என கிண்டல் செய்து மனதுக்குள் மகிழ்வதும். பள்ளம் என்ற ஊர் பற்றி எரிந்து 12 பேர் (மீனவர்கள்) செத்தாலும்., கலவரம் செய்யவே ஊர்வலம் நடத்தி., அதில் ஒருவர் செத்தால்., அதை இன்று வரை சுமந்து திரிந்து நல்ல., நாசூக்கான எழுத்தில் நயமாக ஒரு ஊர் தரை மட்டமாகிய இடத்தில் உள்ள சாம்பலின் மீது போட்டு ஒப்பாரி வைப்பதுதானப்பா முற்போக்கு!!!.
//பார்ப்பனீயத்தை எதிர்ப்பதை வெறும் ஒரு சாதி எதிர்ப்பாக மட்டும் பார்ப்பது தவறு. அது ஒரு சமூக அவலம் என்ற கருத்து என்னைப்போன்ற பல பண்ணையார்களுக்கும்(?) உண்டு. கூலிக்காரர்களுக்கும் உண்டு.//
தாங்கள் சமாளிக்க முடியாத, அறிவிற்கு எட்டாத கேள்விகளை கேட்டால் பண்ணையார்தனம் என்ற பட்டம்தான் எங்களால் குடுக்கமுடியும்., பின்ன பதில் சொல்வோம் என்றா எதிர் பார்த்தீர்கள்?. சுட்டி கொடுத்தும்., நீங்கள் புரிந்து கொள்ளாமல் துள்ளினால்.., நீங்கள் பண்ணையார்தான்.
//தொடர்ந்து எழுதும் சமுத்ரா "Dரவிடிஅன் றச்சல்ச்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்//
***//திராவிடம் என்பது புனைகதை என்றால் ஆரியம் என்பது உண்மைக்கதையா?//
ஆரியன் என்றால் ஆங்கிலத்தில் நொப்லெ என்று தான் அனைத்து சமஸ்கிரத dictionaryகளிலும் சொல்லபட்டுள்ளது.
//ஆரியர் என்ற இனம் இந்தியாவில் உண்டா?//
ஆரியர் என்ற சொல ஒரு இனத்தை கூறிப்பது அல்ல.அதனால் ஆரியர் என்ற இனம் எங்கும் இல்லை. :-)
//தாம் ஆரியர் எல்லோரிலும் மேலானவர் தூய இரத்தம் என்றெல்லாம் பெருமை பேசிய ஆரிய ராஸ்கல்களுக்கு அதில் பங்கில்லையா?//
தூய இரத்தும் என்று ஒன்றுமே இல்லை ஈழநாதன் அவர்களே.
யார் தன்னையோ தனத் இன/மத மக்களையோ மற்றவர்களைவிட உயர்ந்த்வர்/தூயவர் என்று சொன்னாலும் அவர்களை சமுத்திரா எனும் நான் எதிர்ப்பேன் - கண்டிப்பேன்.
//இன்றும் தாம் ஆரியர் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்க ஒரு பதிவு போடுவீர்களா?
//
நிச்சயமாக ஈழநாதன். ***
ஆர்ய ராஸ்கல் (அதுதான் அப்படியொன்னு இல்லைன்னு அவர் சொல்லிட்டாரே., அந்த இடத்தில் வெற்றிடத்தை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்) எழுதும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.
அப்புறம் இந்தப் பதிவு முழுவதும் மூத்த வலைபதிவர்., மூத்த வலைபதிவர் அப்படின்னு எழுதியிருக்கிறீர்களே?., அது அறிவிலா?., வயதிலா?., அல்லது வலை பதிந்த காலத்தை கணக்கில் கொண்டா?. நீங்கள் அறிவில் என்றால் அப்படிப்பட்ட எல்லோரும் இப்போது சத்தம் போடாம., மூச்சுக் காட்டாம இருக்கிறார்கள் (ஒரிரு பதிவிட்டுவிட்டும்., சில பின்னூட்டங்களில் தலை காட்டிவிட்டும்) :-))). அவர்களை இங்கு தேடாதீர்கள்.
>> கடைசியாக ஒன்று....திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியாது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். >>
முத்து!
வாழ்க நீவீர்! ஆம் உண்மைதான்..என் போன்ற பல "திராவிட ராஸ்கல்கள்" அதிகம் இந்தப்பக்கம் எழுத வருவதில்லை என்றாலும், படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்!
வலையுலக பார்ப்பனீயவாதிகளுக்கு நெருப்புக் கோழி புத்தி கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது!
நீலகண்ட சாஸ்திரி முதல் ஐராவதம் மகாதேவன் வரை 'அவர்களே' இந்தியாவின் திராவிட மூலத்தை ஒப்புக் கொண்டுவிட்டபிறகும் - சில 'சோதா' பயல்கள் ஊளையிடுவது நல்ல வேடிக்கை.
குரோமோசோம் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோர் - ஒருமுறை Dr. Spencer Wells அவர்களின் முடிவுகளையும் படிப்பது நலம்!
மற்றபடி Asko Parpola-வின் உலகப் பிரசித்தி பெற்ற ஆய்வுகளியும் படித்துப் பயன் பெறலாம்!
" 'ஆரியர்கள்' இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களல்லர்; வெளியிலிருந்து வந்தேறியவர்கள்" - என்கிற விஷயத்தை மிக நாசுக்காக Micahel Witzel என்கிற உலகப் புகழ் பெற்ற Indologist கலாசுகிறார் அவருடைய - "Autochthonous Aryans ??" என்கிற விரிவான ஆய்வுக் கட்டுரையில்.
இந்த "சோதா" ஜீவிகளின் மரமண்டைக்கு பூமி தட்டை என்று கூட வாதாடும் துணிச்சல் இருக்கலாம்; நாம் சிரித்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான். :)
பார்க்க : "செவ்வியல் தமிழின் தொன்மை" - ஐராவதம் மகாதேவனின் கட்டுரை இங்கே
அன்பின் முத்து,
இந்த படைப்பினை இன்றுதான் படித்தேன். சிறந்த ஒரு நகைச்சுவைக் கட்டுரை படித்த நிறைவு. வாழ்த்துக்கள் முத்து.
Post a Comment