சரியாக மே மாத இறுதியில் வரவேண்டிய பருவ மழை இங்கு ஆரம்பித்து விட்டது.சரியாக சீசனில் துவங்கிவிட்டதால் இது தொடர்ந்து தமிழகத்திற்கும் தேவையான பருவ மழை இந்த வருடம் பெய்யும் என்று நம்புவோம். மழை குழந்தைப்பருவம் முதல் கடைசி வரை நமக்கு மனதுக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் அனுபவமாகவே இருக்கிறது.
மழை பெயுது..மழை பெயுது
நெல்லு வேவிங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
..........என்ற பாட துவங்கிய நினைவு தெரிந்த பருவம் முதல் இன்று காலை சன்னல் வழியாக தெரு நிறைய ஓடும் தண்ணீரை பார்க்கும்போதும் ஏற்படுவது ஒரே உணர்வுதான்.மழை என்றால் குஷி.
நாம் மும்பயில் சிறிது காலம் இருந்தபோது ஏற்பட்ட அனுபவம் இது.தினமும் லோக்கல் எனப்படும் ரயிலில் அலுவலகத்திற்கு சென்று திரும்பும் வழக்கம் ஆதலால் (மும்பயில் பெரும்பாலானோர் இப்படித்தான்) மாலையில் திரும்பும் போது சர்ச்கேட் ரயில் நிலையம் ஜே.ஜே என்று இருக்கும். நான் மும்பயில் சேர்ந்திருந்த புதிது. ஒரு நாள் மாலை ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஆயிரக் கணக்கானோர் நாரிமன் பாயிண்ட்டில் இருந்து சர்ச்கேட் நோக்கி நடந்துசெல்வது வழக்கம்.
சட்டென்று மழை பிடித்தது. எனக்கு குழப்பம். திடீரென்று மழை வருகிறதே. இத்தனை பேர் எப்படி ஒரே சமயத்தில் எங்கே ஒதுங்குவார்கள்? பிரச்சினை தான் என்று நினைத்தேன். ஆனால் யாரும் அனாவசியமாக அசையவில்லை. நடந்துகொண்டிருந்த அனைவரும் (ஆம்.அனைவரும்) சட்டென்று எங்கிருந்தோ ஒரு குடையை உருவி தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு போய்கொண்டே இருந்தனர். நான் என்னை ஏமாளியாக உணர்ந்த கணங்களில் அதுவும் ஒன்று.
பொதுவாக தமிழ்நாட்டில் தொடர்மழை அது இது என்று நமக்கு பழக்கம் இல்லை. வெயிலுக்கு கூட குடை பிடிக்கும் பழக்கம் நம் பெண்களுக்குக்கூட கிடையாது. ஆனால் பல இடங்களில் சீசன் என்றால் கண்டிப்பாக மழை பெய்யும் என்று இருக்கிறது.
மங்களூரில் ரெயின கோட் போட்டுகொண்டுதான் இரண்டு நாட்களாக அலுவலகம் செல்கிறேன். கார் வாங்கலாம். லோன் எல்லாம் தருகிறார்கள். எனக்கென்னவோ யானையை கட்டி தீனி போடுவது ஞாபகம் வருகிறது. இன்னும் இரண்டு பிரமோஷன் வாங்கினால் அலுவலகத்தில் தருவார்கள். அதுவரை இங்கே தொடரவேண்டுமே?
Saturday, May 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//வெயிலுக்கு கூட குடை பிடிக்கும் பழக்கம் நம் பெண்களுக்குக்கூட கிடையாது.//
நீங்க ஸ்கூலுக்குப் போன காலத்துல இருந்த பெண்களா? புறநகர் மற்றும் கிராமப்புறப் பெண்களை மட்டுமே குறித்த பார்வையாக இல்லாதிருக்குமேயானால், இதை நான் மறுக்கிறேன். You should see in Chennai & you can't blame them as well. Sun burns
-குப்புசாமி செல்லமுத்து
//மழை பெயுது..மழை பெயுது
நெல்லு வேவிங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
..........என்ற பாட துவங்கிய நினைவு//
சின்ன வயச நல்லாவே ரசிச்சிருக்கீங்க
///மழை பெயுது..மழை பெயுது
நெல்லு வேவிங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
..........என்ற பாட துவங்கிய நினைவு தெரிந்த பருவம் முதல்/////
என்னுடைய குழந்தைப் பருவ மழைக்காலத்தை திரும்பிப் பார்க்க வைத்தது இந்தப் பதிவு.... நல்ல பதிவுக்கு நன்றி!!!!
என்னங்க, மழைய ரசிச்சிகிட்டு ரைன்கோட் போட்டு நடந்தோ வண்டிலயோ போவீங்களா!! கார் வாங்குறாராமில்ல.. காரு..!! அதுக்குள்ளேர்ந்து பார்க்கும் போது தான் நனைஞ்சிகிட்டு போகக் கூடாதான்னு தோணும் :)
எனிவே, ஒரு சில சமயத்தில தான் இந்த மாதிரி மழையை ரசிக்கத் தோன்றும்.. நம்ம ஊர் மழையை விட மும்பை, பூனா சைட் மழை இன்னும் கொஞ்சம் குளிர்ந்த மழை என்று தோன்றியது எனக்கு...
//வெயிலுக்கு கூட குடை பிடிக்கும் பழக்கம் நம் பெண்களுக்குக்கூட கிடையாது.//
அது சரி.. நான் மழைக்குக் கூட குடை எடுத்துப் போனது கிடையாது :)
முத்து, இங்கே மும்பையின் மண்ணின் மைந்தர்கள் முதல் மழையில் முழுவதும் நனைவதையே பெரிதும் விரும்புகிறார்கள். மழையில் நனைவதும் ஒரு சுகம்தான், அடுத்தநாள் ஜுரம் வரும் வரை :)
இல்லை முத்து, சில Base Model கார்கள் உள்ளன. அவை அதிகம் தொல்லை தராது.
பெட்ரோல் கூட்டி கழித்து பார்த்தால் அதிகம் வித்தியாசம் வாராது.
//மழை வருது மழை வருது நெல்லு வெவிங்கோ//
எங்களூரில் இப்படி...
மழை வருது மழை வருது நெல்லல்லுங்கோ
முக்கா படி அரிசி போட்டு முருக்கு சுடுங்கோ
ஏர் ஓட்டற மாமனுக்கு எண்ணி வையுங்கோ
சும்மா இருக்கிற மாமனுக்கு......."
இப்படி பாடி விளையாடிய நினைவு
//முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க//
இத "மூணு படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க" அப்படின்னு பாடினதா நெனப்பு..
நம்ம நண்பர்கள் சரியான தீனிப்பண்டாரங்கள் போல... :))
ஜூன், ஜூலை மாத வாக்குல பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துல தென்மேற்கு பருவமழை கொண்டு வரும் சிறுதூறலை அனுபவித்தபடியே நடக்கறது, எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்.
- அதே அனானி...
////இன்னும் இரண்டு பிரமோஷன் வாங்கினால் அலுவலகத்தில் தருவார்கள். அதுவரை இங்கே தொடரவேண்டுமே?/////
ஏதேனும் உள்ளர்த்தம் உள்ளதா முத்து(தமிழினி)????!!!!!!!
புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
குப்புசாமி,
//நீங்க ஸ்கூலுக்குப் போன காலத்துல இருந்த பெண்களா? //
கீழே பொன்ஸ் கொடுத்த பின்னூட்டத்தை பார்க்கவும்.
மேலும் ஆபிசில் உள்ள சில அம்மணிகளின் கருத்தையும் கேட்டே அவ்வாறு எழுதினேன்.
நன்றி நன்மனம்...சின்ன வயசுதான்யா பிரச்சினை இல்லாதது...இது யாருக்கும் தெரியாதது இல்ல...ம்.
நன்றி லக்கிலுக்..
ஹமீது,
எனக்கென்னவோ மழை மேல் எரிச்சல் வந்ததே இல்லை..தொப்பலா நனைஞ்சு போய் டி.வி.எஸ் 50 போட்டுட்டு விழுந்து முட்டியை உடைச்சிகிட்ட அப்பவும் மழை எனக்கு பிடிச்சுதான் இருந்தது...
//நம்ம ஊர் மழையை விட மும்பை, பூனா சைட் மழை இன்னும் கொஞ்சம் குளிர்ந்த மழை என்று தோன்றியது எனக்கு... //
சிஷ்யை,
இது உண்மைதான் என்று எனக்கும் யோசித்து பார்த்தால் தோன்றுகிறது...ரயிலில் போகும்போது அனுபவீத்தீர்களா?
மணியன்,
மும்பய் கதையே வேற...போன வருசம் நடந்து கூத்து உங்களுக்கு தெரியுமில்ல..
நான் இருந்த காந்திவிலி ஃபிளாட் முதல்தளம் முழுகிடுச்சாம்.
சிவபாலன் அண்ணா,
சிலர் அப்படித்தான் சொல்கிறார்கள்.எனக்கென்னமோ கார் வாங்கினால் மேட்டுகுடித்தனம் வந்துருமோன்னு ஒரு மூடநம்பிக்கை :)
மகேந்திரன்,
நீங்க நம்ம சைடு ஊர் ஆளா?
கொங்கு பெல்ட்??
அதே அனானி அண்ணாத்த,
குயப்புறீங்களே தல...
வினையூக்கி,
ஆசை இருக்கு...ஆனா....
முத்து,
என்னங்க என்னை போய் அண்ணானு சொல்லிடிங்க.. எனக்கு 32 வயது.
ஏன்னா அண்ணா சொன்னா இங்க அது வேற அர்த்தம். நிச்சயம் அந்த ஆளு நான் இல்லை.
பதிவுக்கு வரவேண்டான்னா சொல்லுங்க முத்து..
சிவபாலன்,
அது வித்யாலய மரியாதை..வேண்டாமா..சரி விடுங்க..
உங்க பதிவை பார்த்தேன்..:)) (நிறைய எழுதுங்க சாமி)
இப்ப தெளிவா புரிஞ்சுது முத்து...
//ரயிலில் போகும்போது அனுபவீத்தீர்களா? //
போன மழைக்காலத்தில்..(அதாங்க, மும்பைல வரலாறு காணாத மழையெல்லாம் இருந்துதே..அப்போ) பூனாவில் இருந்தேன்.. நல்லா நனைஞ்சி ஜுரம் வராமல் தெரிஞ்சிகிட்டது இது :)
அப்போ நீங்க தமிழினிக்கு rain..rain go away; come again another day சொல்லித்தர மாட்டீங்க..இல்ல? :-)
oru naal iravu mani pathu irukum naan chennai chengkundram vazhiaga vanthu kondu iruthan ap pozthu nalla mazhai paithu kondu irunthathu.Thideer ena oru uruvam nalla panai mara uyara alavu irukum, kurukala chendru
maraithathu,inru kuda kiramathil munesearan enru choluvarkalae, aathu unmaiya?allathu arevival vilakam unda ?
வர வர மழையை ரசிக்க எல்லாம் அனானியா வர்றாங்க.. இதுல அறிவியல் விளக்கம் வேற!!! ம்ஹும்
// முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க //
அந்த முறுக்கு எங்க முத்து? ரெண்டு நமக்கும் குடுக்குறது?
மழைன்னா எனக்கும் ரொம்பப் பிடிக்கும். பெங்களூரில் பழைய அலுவலகத்திற்கு பைக்கில்தான் போவது. ஒரு லெதர் பேக் தோளில். மழை வருமானால் என்ன செய்வது....போன், வாட்ச், எல்லாம் பைக்குள் போட்டு விட்டு....மழையிலேயே வண்டி ஓட்டுவது...ஆகா....ஆகா....ம்ம்ம்ம். இப்பொழுது இருக்கும் அலுவலகத்திற்கு பஸ்சில் போவதால் அந்த நனைப்பு கிடைப்பதில்லை.
ஆனால் ஒன்று...மழை வரும் போலிருந்தால் முன்னெல்லாம் "நான் வீட்டுக்குப் போயிக்கிறேனே. அப்புறமா பெய்யக் கூடாதா"ன்னு நெனப்பேன். இப்பல்லாம் "நான் வேணும்னா ஒதுங்கி நின்னுக்கிறேன் முருகா...மழை பெய்யட்டும்..அப்புறமா வீட்டுக்குப் போறேன் முருகா"ன்னு வேண்டிக்கிறேன்.
முத்து
மழையை அனுபவிக்காதார் யார்?
சட சட வெனப் பொழியும் பேய் மழை,
இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை,
காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழை - எல்லாவற்றையும் விட சுகமானது -
எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!
அன்புடன்,
அருள்.
என்னவோ போங்கப்பா??.. கர்நாடகாவில, நல்ல மழை பெய்ஞ்சா ந்மக்கு தான் லாபம்... காவிரில தண்ணிவருமில்ல?... சண்டை சீசன் வேற ஆரம்பிச்சிடுச்சி.
சீக்கிரமா, ந்ல்ல மழை பெய்து, பிரச்சனை இல்லாம பார்த்துக்கிட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்
என்ன குயப்பம்?
ஓ பாட்டிலா? இருக்கலாம்...
இந்த பெங்களூர் கதய கேளுங்க...
ஒரு வாட்டி நண்பர்கள் ட்ரீட் கொடுக்கறோமுன்னு MG ரோடு வரச்சொன்னங்க.. அவிங்க நேரா 8 மணிக்கு E.சிட்டில இருந்து MG ரோடு போயிட்டாங்க. நாங்க கோரமங்களாவிலருந்து 7:30 மணிக்கு கெளம்பினா மழை கொட்டுது. அப்படியே நனைஞ்சு 9 மணிக்கு MG ரோடு போய்பாத்தா அங்க ஒரு சொட்டு மழை இல்ல. நம்ம பசங்க ஏண்டா லேட்டுன்னு கத்தறாங்க...
அட வீட்டு பக்கத்தில அடைமழைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க..
கடைசியில திரும்பி வரப்போ ரோட்டுல ஓடுற தண்ணிய பாத்து நம்புனாங்க...
இப்படி பெங்களூர் மழை நம்மகிட்ட காமெடி பண்ணிருச்சு...
அதே அனானி...
அனானி என்ற அனானிமஸ்,
ஆமாங்க..சில நேரம் கோடு போட்டமாதிரி மழை பெய்த இடத்தையும் பெய்யாத இடத்தையும் நம்மால் பிரித்து பார்க்கமுடியும்.
அதே போல் மழை தூரத்தில் இருந்து வரும்போது அதனோடு போட்டி போட்டு ஓடுவதும் நல்ல பொழுதுபோக்கு.
அருள்,
நன்றி..(காதலிக்கிறீங்களா யாரையாவது)
நக்கீரன்,
ஆமாங்க..வருசம் வருசம் இங்க பேயுதோ இல்லையோ கர்நாடகாவில் நிறைய மழை பெய்ய நாம வேண்டணும்...
ராகவன்,
மழை பெய்யும்போது சுடச்சுட எண்ணெய் பலகாரம் சாப்பிடற சுகமே தனிதானே..
நான் பஜ்ஜி ப்ரியன்..(முருக்கு எல்லாம் பாட்டு பாடறதுக்கு மட்டும்தான்)
முனீஸ்வரனை பார்த்த அனானி,
அது மனப்பிராந்திதான். (தண்ணி அடிச்சிருந்தீங்களா அப்ப)
தருமி,
தமிழினிக்கு மழை பெய்யவில்லை என்றால் வருத்தமாகிவிடும்.மழை மழை என்று சன்னலை பார்த்து பேசிக்கொண்டே இருப்பாள்
Post a Comment