Tuesday, October 27, 2009

பெட்ரோல் லிட்டர் 5 ரூபாய்

கேரளாவில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு நாம் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிக மிக அதிகம் என்றும் இந்தியா இனிமேல் என்றுமே பெட்ரோலியம் இறக்குமதியே செய்ய வேண்டியிருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோல் ஐந்து ரூபாய்க்கும் டீசல் மூன்று ரூபாய்க்கும் வரும் காலம் மிகத்தொலைவில் இல்லை என்று இந்த தகவலை எனக்கு கூறிய நண்பர் தெரிவித்தார்.

கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நிலம் வீட்டு மனை போன்றவை சதுர அடி கணக்கில் வியாபார ஆவதற்கு பதிலாக இன்ச் கணக்கில் வியாபாரம் ஆவதாக பெரிய குண்டை தூக்கி என் தலையில் போட்ட அந்த நண்பர் மேலும் கூறியதாவது:

கூடிய விரைவில் மன்மோகன்சிங்கை தூக்கிவிட்டு ராகுல்காந்தி பிரதமராக போவதாகவும் பிறகு கேரளாவில் உள்ள எண்ணெய் வளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உலகப்புகழ் பெற போவதாகவும் தெரிவித்தார்.

கொஞ்சம் சுதாரித்த நான், ' அப்படின்னா முல்லை பெரியாறு பிரச்சினையில் கூட கேரளாவிற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க இதுதான் காரணமா?' என்றேன். இந்த சிந்தனை அவனை பெரிதாக கவரவில்லை.

கோபமடைந்த நான் உடனே இந்த தகவல்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம் என்றேன். ஒரு அரசாங்க அதிகாரியிடம் இருந்து இந்த தகவல் கிடைத்ததாக கூறிய நண்பன் தொடர்ந்து சிரிக்காமல் கூறிய ஹாட் நியூஸ் " பூகோள அமைப்பின்படி கேரளா சரியாக துபாய்க்கு அடியில் இருக்கிறது. கேரளாவில் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால் துபாயில் உள்ள எண்ணெய் இங்கே வந்துவிடும், இந்த விவரம் எல்லாம் தெரிந்து அமெரிக்கா முதற்கொண்டு எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு பயப்படுகின்றன்" என்பதுதான்....

என்னத்த சொல்ல????????

Thursday, July 16, 2009

துரோகிகள் பலவிதம் - ஆதவன்,சுகுணா மற்றும் பலர்

பாகம் 1


புலிகளை விமர்சிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். ஜெயமோகனும்,சாருவும் சாத்வீக யோகிகளாக மாறி ஒத்த கருத்தினை சொலகிறார்கள்.ராயகரன்,சிரிரங்கன்( ம.க.இ.க போன்ற) அவர்கள் ஒரு பார்வையில் விமர்சிக்கிறார்கள். அ.மார்க்ஸ் முதலானவர்கள் ஒரு புறம்...

தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமான பிரச்சினையை பார்க்கும்போதும் சரி, சுகுணாவின் பதிவினை பார்க்கும்போதும் சரி, பலரும் இன்று தங்களை தங்கள் நிலைப்பாடுகளை காத்துக்கொள்வதற்காகவே இந்த போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை பற்றி பேசக்கூடாது என்று மற்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.துரதிஷ்டவசமாக தமிழின போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவை சந்தித்திருப்பது இவர்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.

ஆனால் எத்தனை காலம் இதை பேசாமல் நாம் இருக்கமுடியும்? ஆதவன் - தமிழ்நதி விவாதத்தில் ஆதவன் "நேற்று விமர்சித்த போது களத்தி்ல் இருக்கிறார்கள் என்றீர்கள். இன்று விமர்சித்தால் துக்கத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள், எப்போது இதை பேசமுடியும்?" என்று எழுதுகிறார். அவர் கண்டிப்பாக மானுட விரோதி அல்ல அவர்.மனு விரோதி மட்டுமே. "நான் ஒரு மனு விரோதன்" என்று புத்தகம் எழுதி பின்னர் தம்மையறியாமலே ஆணாதிக்க சிந்தனை தமக்கு வருகிறது என்று கூறி "நான் ஒரு மனு விரோதி" என்றுதான் தன் புத்தகம் இருந்திருக்க வேண்டும் என்று பேசியதாக கேள்விப்பட்டேன். அது போலத்தான் உணர்ச்சிவசப்பட்டு தலைவிரிக்கோலம் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டார்.அதற்காக அவர் கேட்ட கேள்விகளை நாம் புறந்தள்ளமுடியாது.


ஒரு வகையில் பார்த்தோமென்றால் புலிகளின் மேல் நாம் வைத்த இந்த விமர்சனமற்ற ஆதரவு(கண்மூடித்தனமான ஆதரவு) வெளியுலக சிந்தனையை, ஒரு வெளிப்படையான பார்வையை புலித்தலைமைக்கு தராமல் தடுத்தது என்றும் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பு எடுக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கு புலிகளுக்கு அனைத்து வகையான சப்போர்ட்டும் தந்து வருகிறவர்கள் என்ற வகையில் அதிக பொறுப்பு இருந்தது.


அவர்கள் கள நிலையை புரிந்துக்கொள்ளவில்லை.தமிழக தலைவர்களை திட்டுவது, பிறகு(தேர்தலுக்கு பின்) தமிழர்களையே திட்டுவது என்றும் தான் இருந்தது. இதில் புலி ஆதரவாளர் என்று பெயர் எடுத்த நார்வே தலைவர் எரிக் சோல்கமும் தப்பவில்லை.


தமிழக தமிழர்களின் அழுத்தததையே புலிகளும் நம்பி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலேயே பல உள்சிக்கல்கள் இருக்கின்றன.ராஜீவ் கொலையில் ஆரம்பித்து, தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களிடம் புலிகளுக்கு உள்ள உறவு ( அமிர்தலிங்கத்தை கொல்ல வேண்டாம் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டும் அவர் கொல்லப்பட்டாராம் - குழலி பதிவில் பார்த்த ஒரு தகவல்) வரை பல விஷயங்களை பேசலாம்.மொத்தத்தில் இங்குள்ள நிலைமையை புலித்தலைமைக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு ஒரு விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளருக்கே இருக்கும்.நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் அந்த தகுதி கிஞ்சித்தும் கிடையாது.


என்னளவில் கிளிநொச்சி விழ்ந்தபோதே புலிகளுக்கு போரின் போக்கு பிடிபட்டிருக்கவேண்டும்.புலிகள் மட்டும் மக்களை விட்டுவிட்டு பின்வாங்கி முல்லைத்தீவிற்கோ மற்ற பகுதிக்கோ வந்திருக்கலாம். மக்களுக்கான போராட்டம் என்பது மக்களை விலையாக வைத்தோ பிணையாக வைத்தோ நடத்தப்படக்கூடாது. ஐ.பி.கே.எஃப் தோற்றோடியதற்கு காரணம் அப்போது மக்களோடு கலந்து இருந்து போராடினர்கள் புலிகள்.


இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள இந்த பதிவை பாருங்கள். இதில் உள்ள அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை. என்னுடைய சோர்ஸ் என்று கூறி அவர் சிலவற்றை கூறியிருக்கிறார். இதில் தமிழக மத்திய அமைச்சர் ( சிதம்பரம்?) மூலமாக கடைசி கட்ட பேசசுவார்த்தை நடந்தததாகவும் அப்போது புலிகள் நெடுமாறன் மற்றும் வைகோ பேச்சை கேட்டு அநத பேச்சுவார்த்தையை விட்டும் விலகியதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். தேர்தலி்ல் காங்கிரஸ் தோற்றால் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை நிற்கும் என்று நம்பும் அளவிற்கு புலிகளை கொண்டு போனது யார்?அத்வானியே வென்றிருந்தாலும் கடைசி நாளில் குண்டு போட்டு முதலல மேட்டரை முடிங்க அப்புறம் பேசலாம் என்றுதான் கூறியிருப்பார்.இதை யாரும் யூகிக்கலாம்.ஏனென்றால் போரை நடத்துவது இந்திய அரசாங்கம்.காங்கிரஸ் அரசாங்கம் அல்ல.இப்படி கூறுவது தகவல் மட்டுமே.அரசுக்கான ஆதரவு ஆகாது.


இன்று வரை பிரபாகரன் மரணம் என்று இலங்கையோ இந்தியாவே அறிவித்ததற்கும் இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதரத்தோடு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் இன்றும் மக்களை மாக்கான்களாக நினைத்துக்கொண்டு பேசுவது அருவெறுப்பாக இருக்கிறது.


என்னளவில் இந்திய அரசாங்கம் சரி என்றோ, புலியை விமர்சிப்பவர்கள் கூறுவது எல்லாம் சரி என்றோ கூற முடியாவிட்டாலும், புலிகள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் தங்கள் மேல் சிங்களருக்கு உச்சக்கட்ட பயம் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தாததும் (பேச்சுவார்த்தை காலம்) மிக தவறானது.

ஒரு தமிழின துரோகியின் வாக்குமூலம் - 1

சுகுணா திவாகர் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.இதே பதிவு சில நாட்களுக்கு முன்பு இடப்பட்டிருந்தால் ( போர் முடிந்த சமயத்தில்) கற்றறிந்த பிரபல பதிவர்கள் உள்பட பலரிடமும் பல மொக்கை பின்னூட்டங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருப்பார்.

ஈழத்தமிழர் போராட்டம் இந்த காலக்கட்டத்தில் இப்படி கடுமையான பின்னடைவை சந்தித்ததற்கு மிக முக்கியமான ஒரு தரப்பை நான் விமர்சனத்துக்கு ஆட்படுத்தவில்லை என்று சில பதிவுகளில் சொல்லி இருந்தேன். இந்த பதிவில் அழுத்தமாக இருந்த வரிகளை கவனிக்கவும்.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.


நம் எல்லார் மீதும் தவறு உள்ளது. இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி முதலானவர்கள் விடுதலைப்புலிகளை காலம் காலமாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் அஜெண்டா வேறு. அதை தவிர்த்து,ஒரு கால அளவிற்குள் இந்த கருத்தை கொண்டு வரவேண்டும் என்றால் கடந்த பத்து ஆண்டு அளவில் புலிகளின் மீதான விமர்சனங்களை நாம் நியாயமான முறையில் எதிர்க் கொள்ளவில்லை. துரோகிகள் என்று ஒரே வார்ததையில் அவர்கள் வாயை அடைத்தோம்.

அப்போது எனக்கு சுமார் பத்து வயதிற்குள் இருக்கும். நான் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களுக்கு என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்பு சமயத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டேன். அப்பா சில சமயம் பள்ளியில் இருந்து வரும்போது சில வழவழ தாள்களை கொண்டு வருவார். அதில் விடுதலைப்புலிகளின் படம், போர்க்காட்சிகள் இருக்கும். என் தந்தையிடம் தான் முதலில் அரசியல் கற்றேனாகையால் அவர் கூறியபடி என் மனதில் படிந்தது பிரபாகரன் ஒரு வீரன். சிங்கள வெறியர்களை எதிர்த்து தமிழர்களுக்காக போராடுபவன் என்பதே. புலிகளுக்கு பண உதவி செய்வது என்பது அப்போது சாதாரண விஷயம்.

அப்போது செல்வாவை பற்றியோ, அமிர்தலிங்கம் பற்றியோ எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.தினத்தந்தி இலங்கை போராட்டத்தை பற்றி தினமும் செய்திகளை தரும். பல வருடங்கள் நான் தினத்தந்தி படித்து வந்தேன். பிறகு ஆறாம் வகுப்பிற்கு பிறகு ராஜீவ்காந்தி ஈழப்போராட்டத்தை அதகளப்படுத்தியது, பிரபாகரனை மிரட்டி கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து துன்பியல் சம்பவம் நடந்ததுவரை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். புலிகளுக்கு ஏனைய அனைத்து தமிழர்களை போலவே முழு ஆதரவை கொடுத்தே வந்தேன். நடுவில் சில நேரம் நான் படித்த துக்ளக் என் மனதை மாற்றவில்லை. "சகோதர யுத்தம்" சமாச்சாரங்கள் எல்லாம் அப்போது எனக்கு பெரிதாக தெரியவில்லை.இன்றும் "துன்பியல் சம்பவம்" புலிகளின் நோக்கத்திற்கு எதிரான புத்திசாலித்தனமற்ற செயலாக மட்டுமே பார்க்க முடிகிறது.மற்றபடி ராஜுவ் காந்தியின் பக்குவமற்ற அரசியலே இதற்கு காரணம் என்பதுதான் என் பார்வை.

ஆனால் பிற்காலங்களில் புலிகளின் அரசியல் வெளிப்படை தன்மையற்றது என்று கருத்துக்கு நான் வந்தது 2000 ஆண்டுக்கு வெகுபின்னரே. இந்த பதிவு எழுதப்பட்ட சமயங்களில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது.

நார்வே முன்னிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது, யாரால் பேச்சு வார்ததை முறிந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் எங்குமோ தெளிவாக கூறப்படவில்லை.பச்சையாக சொல்லப்போனால் தன் தேவை தனிஈழமா, இல்லையா என்பதைக்கூட புலிகளால் மிகத்தெளிவாக கூறவில்லை என்றே எனக்கு தோன்றியது. தமிழக தமிழர்களில் பலபேருக்கு இந்த குழப்பம் இருக்கும் என்றே நம்புகிறேன்.


மகிந்த வென்றபிறகு என் சந்தேகம் உறுதிப்பட்டது.கருணா பிரிந்த பாதிப்பு, முஸ்லீம்களை விரட்டியது போன்ற சம்பவங்கள் எனக்கு தெரியவந்தது மிகப்பின்னரே.அதற்குள் பதிவுலகம் என்னை ஆக்ரமித்து இருந்தது. நண்பர்களிடம் விவாதிப்பேன். ஒரு நண்பர் புலிகள் தனிஈழததை அடைந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு இன்று தேவை அடுத்த நாடுகளின் அங்கீகாரம் மட்டுமே என்றார். இந்த விஷயததை இவ்வளவு சுலபமாக பார்க்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக விளக்கிக்கொண்டது என் சந்தேகத்தை போக்கியது.நண்பர்கள் மீண்டும் கூறினார்கள்.இது ஒன்றுமே இல்லை. இப்போது நடக்கும் சண்டையின் மூலம் இலங்கை அரசாங்கம் இனவெறி அரசாங்கம் என்பது உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் நோக்கம் என்றனர்.


கடைசி ஒரு வாரத்தில் பொங்கி எழுந்து மேற்குலகை போராட்டங்களால் உலுக்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது லாபி திறமைகளையும் போராட்ட நோக்கங்களையும், புலிகள் ஐரோப்பிய யுனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட போதோ காட்டியிருந்திருக்க வேண்டும். நம்மை விட புலிகளின் மேல் ஒரு சாகச பக்தியை இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் புலிகள் தோற்பார்கள் என்பதை இவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதற்கு இன்றும் சில நண்பர்களின் இடுகைகளே சாட்சி.


" புலிகள் சுட்டு ராணுவ வீரர் சாவு, இலங்கை ராணுவம் அதிர்ச்சி"

"அடுத்த பொய், பிரபாகரன் மகன் மரணம் என்று இலங்கை புதுக்கதை"

கடைசி கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு தெரிந்த சுடும் நிஜங்கள் - அடுத்த பதவில் தொடரும்

Sunday, May 17, 2009

டிட் பிட்ஸ் - சில சுவையான தகவல்கள்

ராஜ கண்ணப்பனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக கூட ஆகலாம். கண்ணப்பன் என்ன செய்வார் பாவம்? ஏதோ நடந்திருக்கிறது.

விஜயகாந்த் 100 கோடி முதல் 220 கோடி வரை காங்கிரசிடம் வாங்கிக்கொண்டு தான் தனியாக தேர்தலை சந்தித்ததாக தமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சராசரியாக 60000 ஓட்டு வாங்கியுள்ளார் கேப்டன். ஏழைகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட கல்லூரி அதிபர் விஜயகாந்த். இருந்தாலும் அவர் தில்லை நான் பாராட்டுகிறேன். திமுக ஓவராக ஆடினால் விஜயகாந்த் பக்கம் தமிழக மக்கள் திரும்பினாலும் தவறிலலை என்றுதான் நான் நினைக்கிறேன்.

பா.ம.கவினருக்கு ஆப்பை அதிமுகவும் திமுகவும் பேசி வைத்துக்கொண்டே சொருகியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கபாலு அவரே ஆப்பில் போய் அமர்ந்துக்கொண்டதாக நாடார் சங்கத்தினரும் காங்கிரசு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

தோழர்களுக்கு ஒரே கேள்வி. திமுக வையும் அதிமுக வையும் எதிர்த்தே மூன்றாவது சக்தியாக வந்துள்ள விஜயகாந்த் இரண்டே தேர்தலில் 10 சதவீத வாக்கு வாங்கும்போது பல வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் ஏன் விஜயகாந்த வீட்டு வாசல், ஜெ வீட்டு வாசல் என்று காவல் காக்கிறீர்கள்?
சந்திப்பு அப்ஸ்காண்ட் என்று எனக்கு தெரியும். தேசிய அளவில் ஆப்பு என்றால் சும்மாவா என்ன?

நக்கீரன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

சில கலக்கலான சம்பவங்கள். வட மாவட்ட ஒன்றில் திமுகவினர் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பா.ம.கவினர் கைப்பற்றி வெற்றி பெருமிதப்பட்டனராம். ஆனால் அது நெல் விற்ற பணம் என்றும் திருடப்பட்டது என்றும் உடன்பிறப்பு புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பா.ம.கவினர் கைது செய்யப்பட்டனராம்.


கடைசிகட்டத்தில் அதிமுகவும் பா.ம.கவும் பணத்தை இறக்கிவிட்டாலும் பட்டுவாடா செய்யும் தொழில்நுட்ப திறனும் ஆள்பலமும் இல்லாமல் போயிற்றாம்.


கொங்குமுன்னேற்றபேரவை சில ஓட்டுக்களை வாங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற ரமேஷ் என் பள்ளித்தோழன். எல்.கே.ஜீ முதல் 12 ம் வகுப்பு வரை. சுமார் பதினைந்தாயிரம் ஓட்டு வாங்கியுள்ளான். எல்லா கவுண்டர்களும் சாதி பார்த்து ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.இந்த சமூகத்தினர் பா.ம.கவை பார்த்து அது போல் தாங்களும் ஆகவேண்டும் என்றே அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர். பி.சி.ஆர் சட்டம் ஒழிப்பு ( தலித்துக்கள் இவர்கள் மேல் பொய் புகார் கொடுப்பதை தடுக்கணுமாம்), கள் இறக்க அனுமதி ( காட்டை வித்து கள்ளை குடிச்சாலும் ஹிஹி ) போன்ற உயரிய கொள்கைகளோடு களத்தில் இறங்கினர். சட்டசபை தேர்தலிலும் கலக்குவோம் என்கிறார்கள். ஜனநாயகம் நாடு. அவங்களுக்கும் உரிமை உண்டு.

ஆங்கில தொலைக்காட்சி பரதேசிகள் இன்னமும் திமுக வெற்றியை ஜீரணிக்கமுடியாமல் கழிந்துக்கொண்டி இருக்கின்றனர். ( வார்த்தை பிரயோகம் கேவலமாக தான் இருக்கிறது.ஆனால் காண்டு அதற்கு மேல் உள்ளது). எல்லா ஆங்கில சேனலிலும் வந்துகொண்டிருந்த அதிமுக தகவல் தொடர்பாளர் சோவை காணோம். அடுத்த துக்ளக் இதழ் படிக்க நான் ஆவலாக உள்ளேன்.


அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர். திமுக அது போல் லூசுத்தனங்களை செய்யக்கூடாது. கனிமொழி அன்புமணியின் இலாகாவை வாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.


இந்த கூட்டணி வென்றதை வைத்து இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவே கூடாது என்று மக்கள் கூறுவதாக மத்திய காங்கிரஸ் கேனத்தனமாக எடுத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். கருணாநிதி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி செயலாற்ற வேண்டும்.

Saturday, May 16, 2009

ஆட்டம் ஆர்ப்பாட்டம் - தொடர்ச்சி

ராமதாசு படுதோல்வியை சந்தித்து இருப்பது இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ( கவுண்டணுங்க புண்ணியத்துல கணேசமூர்த்தி கரைசேர்ந்தார். கூடவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வாய்கொழுப்பும்). வைகோ இதோ அதோ என்று தொங்குகிறார்.மத்தபடி பா.ம.க வாஷ் அவுட் என்பது மிக மிக தேவையான ஒன்று.

என் கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று பினாத்தி திரி்ந்த ராமதாஸ் என்ன பதில் ( காரணம்) சொல்லப்போகிறார் என்று உலகே எதிர்ப்பார்க்கிறது. அம்மா உறுதி கொடுத்த ராஜ்யசபா பதவியும் கிடைக்காது. (இந்த முறை தலைமை செயலகம் என்ன...போயஸ் தோட்டம் கேட்டுக்குள்ளே கூட போகமுடியாது டாக்குடர் அய்யா). அன்புமணி கடுப்பு ஆயிருப்பார். இவர் அடிச்ச கூத்தில் பாவம் சின்னய்யா. ஒரு நல்ல மத்திய அமைச்சரை இந்தியா இழக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி ஒண்ணுமே பண்ணலைன்னு சொன்ன புண்ணியவானுங்க ஒன்று தனிக்கூட்டணி கண்டிருக்கணும் அல்லது தேர்தலை புறக்கணிச்சிருக்கணும். அவங்களுக்கு வக்காலத்து வாங்கிய எணைய அறிவுசீவிகள் திமுக, அதிமுக இருவரையும் புறக்கணித்து குறைந்தபட்சம் கேப்டனை ஆதரிக்கலாம்னு எழுதியிருந்தா கூட இவங்களுக்கு ஒரு தார்மீக பலம் இருந்திருக்கும். புர்ச்சிதலைவியை நம்பி...ஹிஹிஹி.....

திமுக எப்பவுமே பா.ம.கவை உள்குத்துமாம். அதுனால் செயற்குழுவே அதிமுக கூட்டணின்னு முடிவு செஞ்சதாம். அய்யா இப்ப அதிமுக உள்குத்து, உள் நடுக்குத்து, வெளிக்குத்து, குருக்குத்து என்று ஏகப்பட்ட குத்து குத்திருச்சே. என்ன பண்ணலாம்?இருக்கவே இருக்கு அம்மா ஸ்டைல் பல்டி. எதையாவது சொல்லுங்க. கள்ள ஓட்டு. பணம் கொடுத்தாங்க அப்படின்னு காரணமா இல்ல. இவிங்க கொடுத்த பணத்தை நானும்தான் பார்த்தேன்.

அப்புறம் புரட்சிதலைவியும் உங்க மேல கோவமா இருக்காங்களாம். சும்மா இருந்த புரச்சிதலைவியை ஈழ பிரச்சினையை பேசவச்சி உண்மையான உணர்வாளர்களின் ஓட்டை திமுக பக்கம் திருப்பியதற்கு காரணம் நீங்கதானாமே?

அப்புறம் முதல்ல விஜயகாந்த்கிட்டே மோதிட்டு அப்புறம் கருணாநிதியை ஒண்டிக்கு ஒண்டி வரசொல்லுங்க அய்யா....

எப்பவுமே கருணாநிதியை எதிர்க்கும் பிராமண ஆதரவாளர்கள் கள்ள மெளனம் காத்தனர். தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். புரட்சிதலைவி செட்டியார் கடையில் ஈழம் வாங்கித்தருவேன் என்று கூறியதை இவர்கள் ஒரு ஜோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டு கருணாநிதியின் தோல்வியை ஆவலோடு எதிர்ப்பார்த்தார்கள். சோவின் பேச்சு, பேட்டிகளை கவனிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். பதிவுலகிலும் சில பதிவுகள் இந்த அப்ரோச் செய்திருந்தன. அவர்களுக்கும் கு** கிழிக்கப்பட்டது தெரியாமல் கிழிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது.

கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....

தமிழின துரோகிகளுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. ஈழ தமிழர்களை கிள்ளுக்கிரையாக நினைத்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பை ஆழமாகவும் அகலமாகவும் தந்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

சில பதிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் கருணாநிதியை படு கேவலமாக எழுதி தள்ளினார்கள். நண்பர் குழலி போன்ற ஒரு கட்சி சார்பானவர் என்று கூறப்படுபவர்களுக்கு கருணாநிதியை திட்ட காரணம் உள்ளது. கூட்டணி மாறப்போவதை முன்னமே கணித்து அதற்கு ஏற்றாற் போல் அவர் களத்தை அமைத்துக்கொண்டார். மற்ற பல நண்பர்களுக்கும் என்ன காரணம் என்பது உளவியல் ரீதியாக ஆராயப்படவேண்டியது.

நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நினைத்தது நடக்கவில்லை என்பதால் மேலும் கருணாநிதியை திட்டுவது கவைக்குதவாது. நல்லவேளை விடுதலைப்புலிகள் இந்த காகித புலிகளை நம்பி கருணாநிதியை எதிர்த்து எதுவும் கடைசி நேர அறிக்கை எதையும் விட்டு விடவில்லை.

இனி ஆயிரம் வியாக்கியானங்கள் வரும். விளக்கங்கள். பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. பணம் கொடுத்தார்கள் என்றெல்லாம் புலம்புவது முட்டாள்த்தனம். என்னவோ இந்த தேர்தலில்தான் அதுவும் திமுக மட்டும்தான் பணம் கொடுத்தது என்பது போல் வெட்டி(நொண்டி) சாக்கு சொல்வார்கள். இது கலைஞர் தமிழக வாக்காளர்களை சோற்றலாடைத்த பிண்டங்கள் என்று சொன்னதற்கு ஒப்பானது.(நான் நடுநிலைவியாதி யாக்கும்)


தமிழின ஆர்வலர்கள் என்றும் உணர்வாளர்கள் என்றும் தீடிரென்று கிளம்பிய இவர்கள் புரட்சித்தலைவியை ஆதரித்ததுதான் இந்த தேர்தலில் அலையை திமுக பக்கம் திருப்பியது. ( ஒரு வேளை இதுவும் கலைஞரின் திட்டமோ:)


என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் என்ற ரீதியில் ஈழ பிரச்சினையை தமாசாக அணுகிய புர்ச்சிதலைவியை ஆதரித்த அறிவுசீவிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. ( நண்பர்கள் மன்னிக்க).சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் அரசியல் அறிவை நான் கேள்வி கேட்டபோது என்னை பெயர் சொல்லாமல் தாக்கினார்கள். இன்று ஓபாமாவையே வேலையை பாருய்யா வெங்காயம் என்ற அளவில் இலங்கை பேசுகிறது.

இன்று அதையே தமிழ்சசி எழுதுகிறார். என்ன பதில்?


( தொடரும்)


http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html

Wednesday, March 25, 2009

ஈழ துரோகியும் ஈழ நாயகியும்

நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.


http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

ஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.

பொதுவாக தமிழ் ஆர்வலர்கள் அம்மா ஆட்சியில் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பதும் கலைஞர் ஆட்சி வந்தால் ஆடுவதும் சகஜம்தான். ஆனாலும் இந்த முறை ரொம்ப ஓவர்.கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை பல ஈழத்தமிழர்களும் கருணாநிதியை போட்டு தாக்கியதை பார்க்க முடிந்தது. உணர்வுபூர்வமாக பார்க்கும்போது அது பெரும் குற்றமாக தெரியவில்லை என்றாலும் ஈழத்தமிழர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும் விட ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெறும் பொறுப்பு யாருக்கு உண்டு? கருணாநிதிக்கா?

சரி. தேர்தல் கணக்கை பார்ப்போம். மதிமுகவை கணக்கில் எடுக்க முடியாது. வடமாவட்டங்களில் பா.ம.க ஆதரவு உள்ளதால் அதிமுக எளிதில் வெல்லும் என்றே நினைக்கிறேன். விஜயகாந்த் எந்த அளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள்.

நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)லும் மத்தியில் ஆட்சி அமைக்க நிலைக்கு காங்கிரஸ் வந்தால் டாக்டர் காங்கிரஸ் கூட்டணிக்கு போய்விடுவார். ( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).

காங்கிரசுடன் சேரும் டாக்குடர் அய்யா அப்படியே அம்மாவையும் கொண்டு போனால் திமுக ஆட்சி இங்கு பணால்தான். ஆக தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது.

திமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டம். ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் போகும். கூட்டணி கட்சியான காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாக இருக்கும். நரேஷ் குப்தா..எப்படிப்பா இருக்கே?



Sunday, February 08, 2009

திருமாவளவன் - தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியுமா?

பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் மக்கள் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு.

"திமுக, அதிமுக ரெண்டுமே வேஸ்ட். வேற கட்சியை கொண்டு வரணும்க". காங்கிரசை அந்த இடத்தில் வைத்து அவ்வபோது சில தேசியவியாதிகள் காமெடி செய்வதுண்டு. சிலர் ரஜினிகாந்தை வைத்து செத்த பிணத்திற்கு உயிரூட்ட முயன்றனர். அது நடக்கவில்லை.

சமீப காலமாக விஜயகாந்த் மேல் அந்த பொறுப்பு (?) விழுந்திருக்கிறது. மாற்று வேண்டும் என்று சொல்லும் அம்பிகள் விஜயகாந்த்தை தான் தொடர்ந்து முன்னிறுத்தவார்கள் என்பது என் அனுமானம். (கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி வரை விஜயகாந்த் 70 தொகுதிகளில் வெல்வார் என்று ஒரு கூட்டம் சீரியசாக நம்பியது.). இன்றைய சூழ்நிலையில் விஜயகாந்த் கட்சி இன்னொரு அதிமுக வாக ஆவதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன. பி.ஜே.பி யுடன் கூட்டணி மற்றும் "சோ" வுடனான நட்பு மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை. அதுவும் நடந்தால் இது உறுதியாகிவிடும்.

ஆனால் அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற இடத்திற்கு பொறுத்தமான ஒரு தலைவராக திருமாவளவன் இருப்பார் என்று நினைக்கிறேன். சினிமா கவர்ச்சி இல்லை. குடும்ப அரசியல் என்றெல்லாம்சொல்வதற்கு குடும்பமும் இல்லை. தமிழ் உணர்வாளர் என்ற அடிப்படையில் தினமலர், துக்ளக் மற்றும் அம்பிகளின் ஆதரவு அவருக்கு கிடைக்காது.

சரி. இப்போதைய ஈழ பிரச்சினையைப் பற்றி பலரையும் போல் (சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலர் சுயநலத்திற்கு பாற்பட்டு ) வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டாமல் மிக முதிர்ச்சியாக அணுகும் திருமாவளவன் என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


" திமுக மாநில ஆட்சியை தக்க வைக்க ஆசைப்படுகிற காரணத்தால்தான் காங்கிரசை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரசை திமுக விட்டால் காங்கிரசு அதிமுகவுடன் சேர்ந்துவிடு்ம். இதன்மூலம் இருப்பதையும் விட்டுவிடுவோம் என்று திமுக பயப்படுகிறது.( எல்லாருக்கும் தெரிந்ததுதான் இது, கலைஞர் குடுமி சோனியா கையில்). மற்ற அனைத்து கட்சிகளும் செய்யவேண்டியது.... .....


தொடர்ந்து சில அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்...வீடியோ பார்க்க இங்கே செல்லவும்.


திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் திருமாவளவன் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனாக தெரிகிறார்.ஆனால் பல காரணங்களால் திருமாவளவனின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழக அரசியல் அரங்கில் சுலபமாக இராது.

Wednesday, February 04, 2009

கலைஞர்- புலிகள்- அரசியல்

கருணாநிதி இந்த விஷயத்தை கொண்டு பதவியை தான் விடுவதாக இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். சில மாதங்களாகவே அவரது சொல்லும் செயலும் இதை நோக்கித்தான் இருந்ததால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பலரும் இதை எதிர்ப்பார்க்காதது போல அதிர்ச்சி அடைவது ஏனென்று புரியவில்லை. ஏதோ நமக்கெல்லாம் ஒரு ஆறுதல். ஏதோ ஒரு வகையில் கருணாநதியை கும்மி நம்முடைய ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துவிட்டோம்.

கலைஞர் இன்று புதிதாக சில வார்த்தைகளை சேர்த்து விட்டுள்ளார். பிரபாகரன் சர்வாதிகாரியாக நினைத்தாராம். புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றனராம். (அதுதானே அவர் சொன்னதற்கு அர்த்தம்). ஆக அவர்களுக்கு நான் உதவ முடியாது. விடுதலைப் புலிகள் அழிந்தவுடன் இலங்கை தமிழருக்கு உதவுகிறேன் என்று அவர் நிலையை கூறிவிட்டார். புலிகள் அழிந்தவுடன் தமிழர் சார்பாக பேச யார் இருப்பார்கள் என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

ராமதாஸ் அடிக்கும் கூத்து இன்னும் கொடுமையானது. வாயால் மட்டும் சிரிக்க முடியாதது. அதாவது அவருக்கு திமுக செயற்குழு முடிவு அதிர்ச்சி அளிக்கிறதாம். ஏது எதுக்கோ மரத்தை வெட்டினோமே அய்யா!! சட்டசபை தேர்தலில் ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போக போகிறார் என்பதில் இருக்கு சூட்சுமம். மூடிட்டாவது இருக்கலாம் கருணாநிதி மாதிரி.

கலைஞருக்கு அப்புறம் திமுக வை கைப்பற்றும் ஆசையில் இருக்கும் வைகோவிற்கு கலைஞர் தமிழின உணர்வாளர்களால் அடிபட்டு ரணகளமாக இருக்கும் இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிட்டுமா? அவர் சாவதானமாக இருப்பதை பார்த்தால் அப்படி ஒண்ணும் அவர் வாய்ப்பை உபயோகிப்படுத்த போவது போல் தெரியவில்லை.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.

ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.

பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.

இன்றைய நிலையில் தமிழகத்தின் அழுத்தம், மத்திய அரசு தலையீடு என்பதெல்லாம் வெறும் கனவுதான். அப்படி இருக்கு புலிகளின் எதிர்ப்பார்ப்பு, திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

Wednesday, January 28, 2009

ஈழ பிரச்சினை - கருணாநிதியை கும்முவது தீர்வாகாது

இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளை (தமிழ் மக்களை) அழிக்க இறுதி யுத்தம் நடத்தும் இலங்கை அரசை தடுக்க இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்பதும் இதற்கு முழுமுதற்காரணம் கருணாநிதிதான் என்றும் பரவலாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது.

இந்திய அரசின் நிலை கூட ஏதோ ஒரு கட்சியின் நிலை என்றும் சோனியாவில் தனிப்பட்ட பகை போல் சித்தரிக்கப்படுவது எனக்கு சரியாக படவில்லை. அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்.

மத்திய அரசின் ஆட்சிக்காலம் இருப்பது ஓரிரு மாதங்கள்.அதற்கும் கருணாநிதி என்ன செய்ய முடியும் என்று மக்கள் அவரை கும்முகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தமிழ் மக்களின் ஒரே காவலனாக இப்போதெல்லாம் தன்னை நினைத்துக்கொள்ளும் ராமதாசு கச்சிதமாக காய்களை நகர்த்துகிறார்.வீராவேசமாக பேசுகிறார்.ஆனால் பதவி என்று வந்தால் முதலில் கருணாநிதி பதவி விலகட்டும் என்கிறார். நாளைக்கே கருணாநிதி முற்காலத்தில் இழந்ததுபோல் ஆட்சியை இழந்தால் ராமதாசு ராஜுபக்சே தங்கச்சியின் கட்சியான அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான் நிஜம். அது கருணாநிதிக்கும் தெரியும்.

கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.


நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.


அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கே காங்கிரசு காரன் அதிமுக கூட கூட்டணி போடுவான். டாக்டர் அய்யாவும் தான்.

மக்கள் நிலை என்ன என்பதுதர்ன இங்கே முக்கியம். எத்தனை அரசியல் கட்சிகள் உளமார ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றன? எழுச்சி எப்படி வரும? மக்கள் வீதியில் இறங்கி போராடினால் நடக்கலாம்.











******************

Tuesday, January 13, 2009

கூச்சமே வேண்டாம்..கழட்டி விட்டுடுங்க

இடைதேர்தல் முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தி.மு.க அனுதாபியாகத்தான் இருந்தேன். ஆனா இன்னமும் தொடர்ந்து இருப்பேனாங்கறது சந்தேகம் தான். அது ஸ்டாலின் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.(ஓவரா இருக்கா).

என்னதான் லஞ்சம், லாவண்யம்னு சொன்னாலும் இத்தனை ஓட்டு வித்தியாசத்துல ஜெயித்து, கேப்டனுக்கு ஆப்பு அடிச்சி..என்ன கொடுமை சரவணன் இது?

கேப்டன் இனிமேல் விடும் அறிக்கைகள், பேசும் பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விடுவது நல்லது. சுப்ரமணிய சாமி அறிக்கை மாதிரியே தெரிகிறது. நேரம் இருக்கு தலைவரே. அவசரப்படாதீங்க. இனிமேலாவது சில விசயங்களை நேரடியா பேசுங்க. இலங்கை பிரச்சினை போன்றவை. தினமலர் வகையறாக்களின் சப்போர்ட்டுக்காக பேச ஆரம்பிச்சா உள்ளதும் போயிடும்.


சரி.அடுத்து திமுக என்ன பண்ணலாம்? அவட் ஆஃப் பாக்ஸ் யோசிச்சா..

ராஜீவ் அது இதுன்னு பேசற காங்கிரஸ் காரனுங்களை கழட்டி விட்டுட்டு பி.ஜே.பிக்கு ( ரெண்டு எம்.பி. சீட்டு, ஆட்சி அமைக்க சப்போர்ட்) கூட்டணி போட்டு, பதிலுக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவா நடக்கணும்னு ஒரு டீல் போடலாமா? ராமதாசும் வந்திருவார். அவருக்கு என்ன? அன்புமணி கன்டினியு பண்ணலாமே?

கலவரமா இருக்கும் இல்ல?

Saturday, January 10, 2009

மக்கா..சூதானமா இருந்துகோங்க

http://pulithikkaadu.blogspot.com/2009/01/blog-post.html

மேற்படி பதிவை பார்த்தேன். ரொம்ப ஆபத்தான ஒரு ஐடியாவை நண்பர் கொடுத்துள்ளார். பங்கு விலைகள் சரிவதனால் தின வர்த்தகம் செய்ய முடியாமல் இருப்பவர்கள் தின வர்த்தகமே செய்யாமல் இருப்பதே நல்லது. டெலிவரி எடுத்து வைத்திருக்கும் பங்குகளையும் தின வார்த்தகம் செய்ய உபயோகப்படுத்தி உள்ளதும் போச்சு என்ற கதையாகி விடக்கூடாது.

என்றாவது ஒரு நாள் அது மீண்டு வரும் என்று இருக்கலாம். அதுவும் போய்விட்டால்.....

தின வர்த்தகம் என்பதே ஒரு சூதாட்டம். பங்கு சந்தையில் ஒரு கணக்கெடுப்பின் படி 90 சதவீத பங்கு சந்தை வியாபாரிகள் நஷ்டமே அடைகிறார்கள். ஆக, பங்குகள் தினப்படி நகருவது பெரிய பெரிய முதலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவரின் நஷ்டம் தான் ஒருவரின் லாபம். அதுவம் டே டிரேடிங் எனப்படும் தினப்படி பங்கு வியாபாரத்தில் இதுதான் நிதர்சனம். பின்னூட்டத்தில் அனைவரும் வெற்றியாளராக ஆண்டவனை வேண்டுவோம் என்று ஒரே போடாக போடுகிறார் நண்பர்.

மக்கா....வேண்டாம்டா....

சல்மா அயூப் - பரபரப்பு நிமிடங்கள்

சல்மா அயூப் விவகாரத்தை பற்றியும் ஜெயராமன் சார் விவகாரத்தை பற்றியும் செந்தழல் ரவி மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோர் எழுதிய பதிவை பார்த்தேன். இது சம்பந்தமான சில தகவல்களை பொதுவில் வைத்துவிடலாம் என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ( போலி விவகாரம்) முழுமையாக ஓய்ந்துவிட்டபடியால் கணக்கை நேர் செய்துவிடலாம் என்ற எண்ணமும் மற்றும் வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டு இருப்பதாலும் ( இந்த காரணம் முக்கியமானது) இதை எழுதி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.


நான் பெங்களூரில் இருந்த சமயம். எனது நண்பர் ஒருவர் ( செந்தழல் ரவியின் பதிவில் பிரபல பத்திரிக்கையாளர் என்று விளிக்கப்பட்டவர்) எனக்கு தொலைபேசினார். அவர் கூறிய தகவல் என்னவென்றால் அந்த சமயம் பதிவுலகில் மும்முரமாக இயங்கிய தோழி ஒருவர் பெயரில் போலி பாணி வலைத்தளம் இருப்பதாகவும் அதை நடத்துபவர் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர் என்று சில ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.


நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வலதுசாரி அடிப்படைவாதி என்று நான் அறிந்திருந்தாலும் சாதுவானவர்.நான் அறிந்தவரை நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடியவர் தான். ஒரு உதாரணம். தகவல் அறியும் சட்டத்தை பற்றி ஒரு அருமையான பதிவை எழுதி இருந்தார் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்.. அதில் தேவை இல்லாமல் திராவிடம், கலைஞர் என்று எழுதி நக்கல் அடிந்திருந்தார். நான் நல்ல கட்டுரையில் இது போன்ற எள்ளல் எதற்கு என்று கேட்டிருந்தேன். உடனே கட்டுரையை அழகாக திருத்தினார். இது ஒரு உதாரணம் தான்.


விசயத்திற்கு வருவோம். தொலைபேசிய நண்பர் இது சம்பந்தமாக காவல் துறைக்கு போக போவதாக என்னிடம் கூறினார். எனக்கு அந்த சமயத்தில் அது அதிகமாக பட்டது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் அந்த தளத்தை துவக்கினார் என்ற தகவல் பதிவுலகில் பரவியவுடன் அந்த தளம் அகற்றப்பட்டது. ஆகவே வேண்டாம் என்றேன்.


எனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லும்படி கேட்டார் நண்பர்.நானும் இன்னொரு பிதாமகரின் மூலம் சம்பந்தப்பட்டவரிடம் பேசினேன். தெளிவாகவே நான் கூறியிருந்தேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.


ஆயினும் ஏனோ தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை பிரபல பத்திரிக்கையாள நண்பரிடம் ஒத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காகவே எழுதி வாங்குவதாக பிரபல பத்திரிக்கையாளர் என்னிடம் கூறினார். அந்த முடிவு பாதிக்கபட்டவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் சரியா தவறா என்பது நமக்கு தெரியும்.


அதுபோல் மெத்த படித்த ஒருவர் ச்சும்மா யாருக்கும் எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட மாட்டார். மேலும் இந்த இடத்திலும் நான் இதை வலியுறுத்தினேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.


கடைசியில் சல்மா தான்தான் என்றும் ஆனால் ஆபாசத்தளம் என்னுடையது இல்லை என்பது போல் எழுதி கொடுத்தார் என்று நினைக்கிறேன்.
ஆபாசத்தளம் முக்கிய பிரச்சினை என்றாலும் அவரை பொறுத்தவரை சல்மா அவர்தான் என்பது வெளிப்பட்டாலே பிரச்சினை என்று அவர் நினைத்தபடியால் அவர் இதற்கு ஒத்துக்கொண்டார் என்பதாகவே நான் நினைத்துக்கொண்டேன்.


ஆபாச்த்தளம் அவருடையது என்பதற்குரிய ஆதாரம் என்னை பொறுத்தவரை உறுதியானது என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் இல்லை என்று உறுதியாக என்னால் அன்று சொல்லமுடியவில்லை.

பிரச்சினை நடந்த சமயம் பதிவுலகே களேபரமானது.பிதாமகரின் சப்போர்ட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிறைய இருந்தது.
ஒரு சும்பன் என்னை பேட்டை ரவுடி என்று அப்போது திட்டினான். என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒருவரை திட்டுபவன் என்னை பொறுத்தவரை சும்பன்தான். அவனை பொறுத்தவரை இது இந்து முஸ்லீம் பிரச்சினை.அவன் இந்துவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது வேறு பிரச்சினை.

போலிக்கு ஆப்படித்த செந்தழல் ரவி, உண்மைத்தமிழன் ஆகியோர் கூற்று பிதாமகரின் கூற்றைவிட நம்பகமானது. மேலும் ரவிக்கு போலி விவகாரத்திற்கு பிறகு நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இன்னமும் சில வாய்ச்சொல் வீரர்கள் இந்த பிரச்சினையை காவல்துறைக்கு கொண்டு செல்லும்படி வீரமாக ஆனால் அனானியாக ( ஒரே ஐ.டி இருந்தாலும் யார் என்று தெரியவில்லை என்றால் அது அனானிதான்) அடிக்கடி எங்காவது எழுதுவது உண்டு. என்னமோ ரவி,உண்மைத்தமிழன் எல்லாம் போலீசையே பார்க்காதது மாதிரி.சம்பந்தப்பட்ட இரு தரப்புமே இதைப்பற்றி பேசுவதில்லை என்பது கூடுதல் செய்தி.


அது ஒரு துன்பியல் சம்பவம் என்று நினைத்து அதில் இருந்து ஒதுங்கி விட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். தமிழ்மணத்திலும் இல்லை.ஆயினும் அவரின் பழைய முடிந்த பிரச்சினையை தோண்டி அவரை அமுக்கலாமா?