Saturday, April 22, 2006

இப்படிக்கூட ஆயிடுமாண்ணே.....

லண்டன் நகர அ.இ.அ.தி.மு.கழக கிளை செயலாளரும் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் தினமலர் ஏஜெண்ட்டுமான அருமை அண்ணன் ஜெயகுமாரின் பதிவையும் நேற்றைய லயோலா கல்லூரி கருத்து கணிப்பை தங்களிஷ்டம் இஷ்டம் போல் வளைத்து பொருள் கொண்ட அருமை அண்ணன் உடனடி செய்தி இட்லி வடை மற்றும் சன் செய்திகள் ஆகியவற்றை பார்த்தவுடன் உடன்பிறப்புக்கு நாமும் கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.(உடனே என்னை மங்களூருக்கான தினகரன் ஏஜெண்ட்டா என்று கேட்கும் நண்பர்கள் தயைகூர்ந்து அதற்காக ஏற்பாடுகளை கவனித்தால் நானும் நாலு காசு பார்த்த மாதிரி இருக்கும்)


கலைஞரின் இரண்டு ரூபாய் அரிசி அறிவிப்பை கிண்டல் செய்த பொருளாதார மேதைகள் இன்றைய தினம் அம்மாவின் 10 கிலோ இலவச அறிவிப்பினால் தேள் கொட்டிய திருடன் போல் இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள எல்லா 1.88 லட்ச ரேசன் குடும்பமும் இலவச அரிசி 10 கிலோ மட்டும் எங்களுக்கு போதும் என்று கூறிவிட்டால் அது கலைஞரின் 2 ரூபாய் அரிசி சமாச்சாரத்தைவிட கேலி கூத்தாகிவிடும் என்பது இவர்களுக்கு தெரியாதா?


அண்ணன் ஜெயகுமார் தினமலர் பேப்பரில் இருந்து சுட்டி காட்டியிருந்தபடி ஒருவேளை தி.முக வென்று அதன் கூட்டணி கட்சிகளினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்தால் பல பகீர் எண்ணங்கள் தோன்றுகின்றன்.


கலைஞர் இந்த திட்டங்களை நிறைவேற்ற மறுத்துவிட்டால் இந்த கூட்டணி கட்சிகள் அதிமுக வை ஆதரிக்க போய்விடுமா அல்லது அதிமுக தான் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இருக்குமா?

தொண்டர் முதல் மந்திரிகள் வரை காலில் விழவைக்கும் அம்மா அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற கோதாவில் போயஸ் தோட்டத்து கேட்டை சுவாதீனமாக திறந்து அம்மாவின் முன்னால் கால் மேல் கால் போட்டு ராமதாஸ், வைகோ திருமா, கம்யூனிஸ்டு தோழர்கள் அமர்ந்தால் அதை தாங்கி கொள்வாரா?

அந்த சூழ்நிலையில் அம்மாவின் இமேஜ் காலியாகிவிடும். அம்மா எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கமுடியாது. அப்போதும் வைகோ ஜெயா டிவியில் ஏன் தன்னை காட்டவில்லை என்று வம்பு பண்ணுவார்.(காமெடி பஜார் நிகழ்ச்சியில் இவரை காட்டலாம்.ஜெயாடிவி ரேட்டிங்கும் ஏறும்).

பொதுவாக கடும்போட்டி என்று கருத்து கணிப்புகள் கூறினால் அது எதிர்கட்சிகளுக்கு சாதகம் என்று நினைக்கிறேன்.திமுக மற்றும் எதிர்கட்சிகளின் பிரச்சாரத்திலும் கூட்டம் சேர்கிறது.இது தமிழனின் வேடிக்கை பார்க்கும் மனோபாவம் என்று கூட கூறலாம்.

எப்படியும் அதிமுகவும் தனியாக ஆட்சி அமைப்பது சிரமம்தான். கூட்டணி ஆட்சி என்பதே தமிழகத்திற்கு புதுசு.அதுவும் அம்மாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றால் காமெடிகளுக்கு குறைவு இருக்காது. என்ஜாய்.

31 comments:

குழலி / Kuzhali said...

//உடனே என்னை மங்களூருக்கான தினகரன் ஏஜெண்ட்டா என்று கேட்கும் நண்பர்கள் தயைகூர்ந்து அதற்காக ஏற்பாடுகளை கவனித்தால் நானும் நாலு காசு பார்த்த மாதிரி இருக்கும்
//
ஹி ஹி

முத்து(தமிழினி) said...

ஆவேசமாக என் சார்பு தன்மையை தாக்கி பின்னூட்டம் இடும் நண்பர்களே

நான் ஒரு "நடுநிலைவியாதி" இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.ஆகவே வேறு ஏதாவது பதிவுக்கு சம்பந்தப்பட்டு எழுதவும்

வெங்காயம் said...

ஜெயக்குமாரு அப்புடி என்னத்தைக் கண்டாரோ ஜெயாவிடம்? மாயவரத்தான் ரமேஷ்குமார் மாதிரி மாஞ்சு மாஞ்சுல்ல எஉதுறாரு!

முத்து(தமிழினி) said...

வெங்காயம்,

அது அவங்கவங்க உரிமை...நம்ப எழுதறமில்ல..அதுமாதிரிதான்

வெங்காயம் said...

இரண்டு ரூபாய்க்கு அரிசிபோட்டால் அது அப்படி முடியும் என்று கேள்வி கேட்ட வைகோவே, ஒன்னேமுக்கால் ரூபாய்க்கு அரிசிபோடுவேன் என்று ஜெயா சொன்னதும் ஜிஞ்சாவை மாற்றிப் போட்டாரே ஞாபகம் இருக்கிறதா? அதே கதைதான் ****************(one word deleted-admin(

Anonymous said...

Padithavarkalukum padikathavarkalukum aracial parvai ondrakathan ullathu, londonlil erukirar padithavar aracialai nadu nilamaiyodu sinthiparkal endru ethir parpathu ven! padikatha pamarankum paditha jayakumar pondra allukum vithiyasam ellai, ethil padithavarkal aracialuku vanthal nattai madralam enbavarkaluku nan solvathu sinthiparvakal aracialuku vanthal mattuma urpudum nadu, thayavu cheithu netil eluthupavarkal charpu nillai ellamal aracialai vimarciungal, ethu ungalukum serthuthan, ennada sampantham ellama eluthi erukkan endru ninaiperkal, aracial eluthupavarkal ellorukkum en vendukol, ovaru bloga poi elutha neram ellai, so ungal blogil eluthukindran, aracial eluthupavarkal ellam inga varuparkal endru ninaithuthan eluthukiran, ok thankyou Mr. Tamilan,

சந்திப்பு said...

ஜெயலலிதா தலைமையில் கூட்டணி ஆட்சியா? கற்பனை செய்யக்கூட முடியவில்லை. என்னைப் ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் அம்மாவுக்கும் இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் இதுவரை அவர்களுக்கு சாதகமாகவே இருந்தாலும், மக்களின் மனநிலை மாற்றத்தை கொடுக்கும். புதிய ஆட்சி மலரும். அது கலைஞர் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தால் சிறப்பானதாகவே இருக்கும். நிச்சயம் அந்த ஆட்சியில் பொதுவுடைமைவாதிகள் பங்கேற்க மாட்டார்கள்.

முத்து(தமிழினி) said...

அனானி,

தமிங்கிலீஷ் புரியவில்லை... ஆயினும் ஆட்சேபகரமாக ஏதும் இல்லை என்பதால் விடுகிறேன்.

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் ஜனநாயக நாட்டில் என்பதில் எனக்கும் ஒப்புதல் உள்ளது.நன்றி.

Anonymous said...

Muthu,

//யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் ஜனநாயக நாட்டில் என்பதில் எனக்கும் ஒப்புதல் உள்ளது.நன்றி./

It is true. But DINA-MALAM agent was just doing cut&paste until today. He didnt even bother to put that it was copied from DINA-MALAM.

Only today he has mentioned that it was taken from DINA-MALAM - That too complaining that anonymous is bothering him!!!.

Every person has their own choice. But doing cut&paste anti-DMK letters (who wrote them - no one knows) from DINA-MALAM almost everyday is too much.

He didnt post anything yesterday because there is no such letter in DINA-MALAM!!!.

வெட்டி said...

//சுட்டி காட்டியிருந்தபடி //
என்பதற்கும்
சுட்டி'க்' காட்டியிருந்தபடி

என்பதற்குமிடையில் பொருள் வித்தியாசமுள்ளது அன்பரே.

நீங்கள் சொல்ல வந்தது இரண்டாவது என்று நினைக்கிறேன்.

ஜெயக்குமார் said...

அடப்பாவிகளா!,
நான் இதுவரைக்கும் ஜெயலலிதாவையோ அல்லது அதிமுக-வையோ புகழ்ந்து ஒரு பதிவில் கூட எழுதியது கிடையாது. கருணாநிதியை விமர்சிப்பதால் அது அதிமுக ஆதரவு என்றாகி விடுமா?.

சென்ற தேர்தல் வரை திமுக-விற்கு ஓட்டுப்போட்டவன் தான் நான். என்றைக்கு அது மாறன் & கோ கம்பனி சொத்தாகி விட்டதோ. என்றைக்கு மக்களின் நலனை விட குடும்ப தொழில் தான் கருணாநிதி முக்கியம் என்கிற ரீதியில் போகத்தொடங்கினாறோ அன்றிருந்து நான் அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டேன்.
படித்தவன்னாலெ அவன் திமுகவை விமர்சிக்ககூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா. திமுக-காரர்களே படிக்காத காமரஜர் ஆட்சி அமைப்போம்-னு சொல்லிக்கிட்டு அழையுரானுங்க. ஒரு காலத்தில் அவர் கொண்டுவந்த சத்துணுவுத்திட்டத்தை விமர்சித்த கருணாநிதி இப்போ அதில் முட்டையும் சேர்த்து போடுவேன் என்கிறார். அடுக்கு மொழியிலும், சிலேடையாகவும் பேசினால் படித்தவர்கள் கருணாநிதி பின்னால் சென்று விடனுமா?. மூளையற்றவர்கள் அல்லது அடுத்தவர் மூளையால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அவர் பின்னால் செல்வார்கள்.

முத்து(தமிழினி) said...

பாவிகளா,

இப்பயாவது ஜெயகுமாரின் மனதை புரிந்து கொள்ளுங்கள்.

ஜெயக்குமார் said...

/It is true. But DINA-MALAM agent was just doing cut&paste until today. He didnt even bother to put that it was copied from DINA-MALAM.
/

தினமலர் வாசகரின் கருத்து என்கருத்துடன் ஒத்துப்போகும் போது அதை நான் என்னுடைய பதிவில் வெளியிடுவது ஒன்றும் தவறில்லை. அப்படி வெளியிடும்போது அதில் அதை எழுதியவரின் முகவரியோடுதான் வெளியிடுகிறேன். முகவரியற்ற உங்களை போன்று DINAM MALAM சாப்பிடுபவர்களுக்கா என்னால் அதை நிறுத்த முடியாது.

சோழநாடன் said...

முத்து,
யரும் என்னவேனாலும் எழுதலாம் தான். ஆனாலும்
சசி கட்டுரையை விமர்சித்து எழுதிய பதிவை படித்த பின்பு எனக்கென்னவோ அண்ணனுக்கு டோண்டு syndrome இருக்குன்னு நினைக்கிறேன். அட அதாங்க ஏதாவது எகனமொகனையா எழுதினா நாலு பேரு திட்டியே நம்மள பெரியாளாக்கிடுவாங்க.

ஐயோ யாரும் வரதுக்குள்ள ஜூட்.....

--சோழநாடன்

மாயவரத்தான்... said...

//தொண்டர் முதல் மந்திரிகள் வரை காலில் விழவைக்கும் அம்மா அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற கோதாவில் போயஸ் தோட்டத்து கேட்டை சுவாதீனமாக திறந்து அம்மாவின் முன்னால் கால் மேல் கால் போட்டு ராமதாஸ், வைகோ திருமா, கம்யூனிஸ்டு தோழர்கள் அமர்ந்தால் அதை தாங்கி கொள்வாரா//

ஓ...இதே ரீதியில் உட்கார்ந்தால் கருணாநிதி...இல்லை..இல்லை..தயாநிதி மாறன் தாங்கி கொள்வாராக்கும்?!

முத்து(தமிழினி) said...

வழிபோக்கனின் பின்னூட்டமும் ஜெயகுமாரின் சூடான பதிலும் ஜெயகுமார் கூறுவதில் உள்ள நியாயத்தின்படி நீக்கப்பட்டுள்ளன.

நன்றி ஜெயகுமார் அண்ட் வழிபோக்கன்

முத்து(தமிழினி) said...

//ஓ...இதே ரீதியில் உட்கார்ந்தால் கருணாநிதி...இல்லை..இல்லை..தயாநிதி மாறன் தாங்கி கொள்வாராக்கும்?! //

ஹிஹிஹி

அண்ணன் ராமகோபாலன் ஏதோ புத்தகத்தை கொடுத்துட்டு பத்திரமா வெளியே வந்தாரே..( வேற ஒரு புத்தகம் வாங்கிட்டு மூஞ்சில வழி்ஞ்சதை தொடச்சிட்டுத்தான் வந்தாருன்னாலும்)..இத அம்மாட்ட நினைச்சு பார்க்க முடியுமா தல..


(மாயவரத்தான் எங்க ரொம்ப நாளா காணோம்?)

ஜெயக்குமார் said...

/சசி கட்டுரையை விமர்சித்து எழுதிய பதிவை படித்த பின்பு/
என்ன சோழ நாட்டான் அவர்களே,

உங்கள் பார்வையில் சசி என்ன விமர்சனத்திற்கு அப்பார்பட்டவரா.

சரி.. சரி.. ஜால்ரா போட்டே பழகிய உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுதான்.

சசி-யிடம் சில நேரம் குடிதாங்கி சார்பு தெரியவில்லையா?
அது ஒரு வேளை சமூகப்பற்றாக கூட இருக்கலாம் என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்?!.

Anonymous said...

//தினமலர் வாசகரின் கருத்து என்கருத்துடன் ஒத்துப்போகும் போது அதை நான் என்னுடைய பதிவில் வெளியிடுவது ஒன்றும் தவறில்லை. அப்படி வெளியிடும்போது அதில் அதை எழுதியவரின் முகவரியோடுதான் வெளியிடுகிறேன். //

Hi DINA-MALAM agent,

If you just provide the name & town - How will the readers know??. If you put the name of the original source, that will make them understand.

If you cut & paste from Murasoli - it is going to be anti-JJ & most of the readers will ignore it. The same goes to Namadhu-MGR.

But you dont even have the basic courtesy to provide the source name. Refer the other bloggers - most of them provide the source (even if they republish the cartoons).

You once again did a cut & paste from DINA-MALAM & posted //காட்டுமிராண்டிகள் பற்றிப்பேச கலைஞருக்கு ஒரு வாய்ப்பு! //

What a shame!!!!.

neo said...

>> அப்போதும் வைகோ ஜெயா டிவியில் ஏன் தன்னை காட்டவில்லை என்று வம்பு பண்ணுவார்.(காமெடி பஜார் நிகழ்ச்சியில் இவரை காட்டலாம். ஜெயாடிவி ரேட்டிங்கும் ஏறும்). >>

ரொம்பத்தாம்யா உமக்கு குசும்பு! :)))

குழலி / Kuzhali said...

//சசி-யிடம் சில நேரம் குடிதாங்கி சார்பு தெரியவில்லையா?
அது ஒரு வேளை சமூகப்பற்றாக கூட இருக்கலாம் என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்?!.
//
ஆகா சசிக்கும் முத்திரையா? ஜெயக்குமார் அவர்கள் சசியின் சாதிச்சான்றிதழ் வைத்திருக்கின்றார் போல.... குடிதாங்கியை பல விடயங்களில் பல சமயங்களில் இணையத்தில் ஆதரித்தவர்கள் பத்ரி,ரோசாவிலிருந்து பலரையும் வரிசைபடுத்தலாம் அவர்கள் எல்லோருடைய சாதிச்சான்றிதழையும் ஜெயக்குமார் பார்த்திருப்பாரோ? பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி தொகுதி நிலவரத்தை பாமக பற்றி எழுதாமல் எழுதமுடியாது....ஜெயக்குமார் இது வரை இணையத்தில் முத்திரை குத்துபவர்கள் பத்தாதென்று நீங்கள் வேறா?

Anonymous said...

நண்பர்களே,

நம்ம தின-மலம் ஏஜென்ட் என்ன சொல்கிறார்

//மூளையற்றவர்கள் அல்லது அடுத்தவர் மூளையால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அவர் பின்னால் செல்வார்கள்.//

ஆனால் அவரே இப்படி சொல்கிறார்.

//சென்ற தேர்தல் வரை திமுக-விற்கு ஓட்டுப்போட்டவன் தான் நான்.//

ஒன்னுமே பிரியலப்பு!!!!

Gopalan Ramasubbu said...

:)

Anonymous said...

Missing !!!!

Enadu arumai annan...

Adivanginalum azuhada singam....

Maama veetu manikam thalaivar "SUPRAMANIYA SWAMY"

Kaandupudithu kodupavaruku BJPil oru seat ilavasamha vangi tharapdum

-Swamy red bull(muthu ...oru changekupa )

முத்து(தமிழினி) said...

நண்பர்களே,

நம்ம தின-மலம் தாங்கி (புதிய பட்டம்) ஜெயகுமார் சொல்வதை பாருங்கள்.

//At 12:44 AM, வரவனையான் said...
தம்பி, நீங்க தினமலத்தில சை தினமலருல இருந்து வாசகர் கடித்த உருவி போடுறதுல ஒரே ஒரு நன்மைதான் இருக்கு, அது இங்க இருக்குற பார்ப்பன பருப்புக்கு****களூக்கு மட்டும்தான் சந்தோசமா இருக்கும்,ஆனா அந்த கோவை வாசகர் எழுதியிருக்குற கடிதத்தோட ஒவ்வொரு வரியும் மாறாம "குலமங்கலத்தில் இருந்து சுரேஷ்" எழுதுகிறார்ன்னு நெல்லை பதிப்புல ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துருச்சு.இப்ப தெரியுதா நீங்க வால் புடிக்கிற தினமலருடைய லட்சனம்.//

அதுக்கு அவர்

//விசயத்தை யாரு சொன்னா என்ன, அதில இருக்கிற உண்மையைப்பாருங்க, மூலத்தை பார்க்காதீர்கள். நமக்கு திருவள்ளுவரின் மூலமும் தெரியாது, திருகுறளின் மூலமும் தெரியாது. ஆனால் அதில் உள்ள நல்ல கருத்துகளை உண்மைகளை நம்புவதில்லையா? அது மாதிரிதான் இதுவும்//

இது எப்படி இருக்கு!!!.

திருக்குறளையும் தின-மலத்தையும் ஒப்பிட்டு (few lines moderated here).

பாலசந்தர் கணேசன். said...

ஆனா அந்த கோவை வாசகர் எழுதியிருக்குற கடிதத்தோட ஒவ்வொரு வரியும் மாறாம "குலமங்கலத்தில் இருந்து சுரேஷ்" எழுதுகிறார்ன்னு நெல்லை பதிப்புல ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துருச்சு.இப்ப தெரியுதா நீங்க வால் புடிக்கிற தினமலருடைய லட்சனம்.//


என்னங்க இது அரசியலை விட மோசமாக இருக்கு ... பத்திரிக்கை காரங்க பண்றது. என்ன வேண்டுமானாலும் கருத்து எழுத இவர்களுக்கு உரிமை இருக்கிறது. (நக்கீரன் ஜெயலலிதாவை எப்போதும் தாக்குவதை போல) ஆனால் வாசகர் கருத்து என்ற பெயரில் இவர்களாகவே ஏதேனும் எழுதினால் அதை வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று.

சோழநாடன் said...

ஜெயகுமார்
உங்கள் பாணியில்...
லூசாயா நீங்க... நான் சொன்னது என்ன என்று புரிந்து கொள்ளாமல் ஜால்ரா அது இதுவென உளகின்றீர். சசி தன் பதிவில் சன் தொலைக்காட்சியின் உள்ளடக்கத்தை உயர்த்தி எதுவும் சொல்லவில்லை. மாறாக அவர்களது வியாபார உத்தியை பற்றித்தான் சொல்லியிருக்கின்றார். சசி எழுதியதற்கான எதிர்வினை மா சிவகுமார எழுதியது(சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள்). அதைவிட்டு நீங்கள் லூசுத்தனமாக எழுதுவதை எதிர்த்தால் ஜால்ராவா?.

மற்றவர்கள் புரிந்துகொள்ள:
இந்த பின்னூட்டம் தொடர்புடைய சுட்டிகள்
சசியின் பதிவு
ஜெயக்குமாரின் பதிவு
மா சிவகுமார(இதுவரை 8 பதிவுகள்)

(உங்கள் பின்னூட்டத்தில் லூசு என்ற பதத்தை பார்த்த எரிச்சலால்தான் அதே பதத்தை உங்களுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளேன். தனிமனித தாக்குதல் என் நோக்கமல்ல.)

ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

அப்டிப்போடு... said...

//தொண்டர் முதல் மந்திரிகள் வரை காலில் விழவைக்கும் அம்மா//

இப்போ எல்லோரும் கார் சக்கரத்தைதான் தொட்டுக் கும்பிடுறாங்க... இங்க கூட ஒரு கில்லி அந்தப் படம் போட்டுருந்தார்.

Sam said...

அன்புள்ள முத்து

இந்த வார நட்சத்திரத்திற்கு,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாம்

வரவனையான் said...

ஜெயக்குமார் சைட்...

//சென்ற தேர்தல் வரை திமுக-விற்கு ஓட்டுப்போட்டவன் தான் நான். என்றைக்கு அது மாறன் & கோ கம்பனி சொத்தாகி விட்டதோ. என்றைக்கு மக்களின் நலனை விட குடும்ப தொழில் தான் கருணாநிதி முக்கியம் என்கிற ரீதியில் போகத்தொடங்கினாறோ அன்றிருந்து நான் அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டேன்.
படித்தவன்னாலெ அவன் திமுகவை விமர்சிக்ககூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா. திமுக-காரர்களே படிக்காத காமரஜர் ஆட்சி அமைப்போம்-னு சொல்லிக்கிட்டு அழையுரானுங்க. ஒரு காலத்தில் அவர் கொண்டுவந்த சத்துணுவுத்திட்டத்தை விமர்சித்த கருணாநிதி இப்போ அதில் முட்டையும் சேர்த்து போடுவேன் என்கிறார். அடுக்கு மொழியிலும், சிலேடையாகவும் பேசினால் படித்தவர்கள் கருணாநிதி பின்னால் சென்று விடனுமா?. மூளையற்றவர்கள் அல்லது அடுத்தவர் மூளையால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அவர் பின்னால் செல்வார்கள்.//


தம்பி ஜெயக்குமாரு உங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலப்பா. போன தேர்தல்ல இருந்து நீ புத்திசாலி ஆனதுக்கு சந்தோசம். அதுல பாரு முரசொலிமாறன் அண்ணா காலத்துலேயே "மக்களால்" தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி ஆனவரு. நீங்க சொல்ற அதே குற்றச்சாட்ட 93லேயே நம்ம "நாற்பது" புகழ் வைகோ சொல்லிட்டாரு. ஆனா நீங்க என்னமோ தினமலத்தோட இன்வெஸ்டிகேசன் ஜர்ன்னலிசத்துக்கு பிறகுதான் திமுக ல்ல மாறன் குடும்பம் ஆதிக்கம் இருக்கிறதே உலகத்துக்கு தெரியவந்தமாதிரி சொல்லியிருக்கீங்க.நீங்க 2001 வரைக்கும் ஓட்டு யாருக்கு போட்டிங்கன்னும் தெரியும் அதுக்கு பிறகு திமுக வை ஏன் கடிச்சுகுதறுரிங்கன்னும் தெரியும்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?