Saturday, May 06, 2006

கனவு காணும வாழ்க்கை எல்லாம்...

நீங்கள் கனவு காண்பதுண்டா?.ஆழ்தூக்கத்தில் நம்மையறியாமல் வரும் கனவு இல்லை.இது விழிப்பு நிலையிலேயே நாம் காணும் கனவு.ரயிலில் தூர பிரதேசம் போகும்போது தூங்கவும் பிடிக்காமல் படிக்கவும் பிடிக்காமல் சில நேரம் அரை தூக்கத்தில் கிடப்போம்.அது போன்ற நேரங்களையும் பஸ்ஸில் போகும்போதும் நேரத்தை கடத்த நான் வைத்திருக்கும் உபாயம் இது.

நாம் காணும் பகல் கனவு நம் உள்மனதுக்கு(sub-consious mind) சென்று விட்டால் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்குமாம்.நாம் ஆசைப் பட்டது(கனவு கண்டது) நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

என் கனவுகள் இருவகைதான்.ஒன்று நான் இந்த நாட்டுக்கு சர்வாதிகாரியானால் செய்ய வேண்டிய உடனடி கடமைகள் என்ன என்பது பற்றி.இது மிக சுவாரசியமாக இருக்கும்.தருமி இதுபோல் ஒரு பதிவு போட்டிருந்தார்.இது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இன்னொருவகை கனவு என்னுடைய "பண்ணை இல்லம்" பற்றியது.எப்படி எனக்கு இந்த பண்ணை இல்லம் கிடைக்கிறது என்பதைப் பற்றி நான் மிகவும் குழம்புவதில்லை. அது தனி கனவு ட்ராக்.ஆனால் பண்ணை இல்லம் கனவைப்பற்றி மட்டும் விலாவாரியாக சொல்கிறேன்.

கேரளா மாதிரி ஒரு இடம்.மலைபிரதேசம் அல்ல. சமவெளிதான். ஆனால் என் பண்ணை இல்லம் ஒரு ஆற்றங்கரையோரம் உள்ளது.சலசலவென்று மெதுவாக செல்லும் ஆற்று நீர். சுற்றி அழகான வேலி அமைத்திருக்கிறேன். ஒரு பக்கம் வேலி இல்லை.அழகான ஆறு இருப்பதால் அந்தப்பக்கம் திறந்தவெளிதான்.

எல்லாவித பழ மரங்களும் உண்டு. மா, பலா, வாழை, கொய்யா, சாத்துக்குடி என்ற பழ வகைகளும் பூச்செடிகளும் பசும்புற்களுமாக ஒரு புறம். ஆடு,மாடு, நாய்,கோழி ஆகியவையும் இதே பண்ணையில் இருக்கின்றன.எந்த நேரமும் இரண்டு ஆட்டு குட்டிகளாவது அல்லது இரண்டு நாய்குட்டிகளாவது கொஞ்சுவதற்கு இருந்துகொண்டே இருக்கின்றன.

என் வீடு அந்த பண்ணை நடுவில் ஒரு சிறிய குடிசை.கூரை வேய்ந்த அந்த குடிசையில் உள்பக்கம் நடுவில் திறந்தவெளி.மழை பெய்தால் உள்ளிருந்தே மழையை ரசிக்கலாம்.அங்கே மின்விசிறி, ஏஸி முதலியன இல்லை.ஆனால் கம்ப்யூட்டர்,டிவி உண்டு.ஒரு சிறிய படிப்பறை.

எப்போதும் படிப்பதற்கு என்னிடம் ஐம்பது புத்தகங்களாவது இருந்துகொண்டே இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள் என்று பல நூல்கள் உள்ளன.

எனக்கு தேவையான காய்கறிகளை என் பண்ணை இல்லத்தில் நானே பயிரிட்டுக் கொள்கிறேன். பால் தயிர் வகைகள் எல்லாம் என் பண்ணை விலங்குகளிடம் இருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்.

பண்ணையின் ஒரு புறம் உலகத்தரத்தில் ஒரு அமைக்கப்பட்ட ஒரு டென்னிஸ் மைதானம் அமைத்திருக்கிறேன்.அதில் காலை நேரம் நான் விளையாடுகிறேன்.அந்த பகுதி இளைஞர் களுக்கு பயிற்சியளிக்கிறேன்.ஒரு சிறிய கிராமப்புற பாணி உடற்பயிற்சி மையமும் உண்டு.மாலை நேரம் அந்த பகுதி குழந்தைகள் எல்லாம் என் பண்ணை இல்லத்திற்கு வருகின்றன. விளையாடு கின்றன.படிக்கும் குழந்தைகளுக்கு என்னாலான பாடத்தை நான் சொல்லித்தருகிறேன்.

இந்த பண்ணை இல்லத்தில் அமர்ந்துகொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தருகிறேன்.( திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி தலைவர் திரு.தமிழினி முத்து அவர்கள் அவருடைய பண்ணை இல்லத்தில் வைத்து தந்த பேட்டியில் தான் வருங்கால முதல்வர் மட்டும் அல்ல,தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரும் கூட என்றார். பேட்டியின் போது துணைத்தலைவர் "அஞசாநெஞ்சன்" பொட்டீக்கடையும், பொதுச்செயலாளர் "இனமான பேராசிரியர்" தருமியும்,துணை பொதுச்செயலாளர் "வியட்நாம் வென்றான்" ஜோவும் உடன் இருந்தனர்)

சரி.சரி.நிறுத்திக்கொள்வோம்.ஆனால் எனக்கு இந்த கடைசி பத்தி நீங்கலாக மற்ற விஷயங்களுடன் ஒரு கனவு வாழ்க்கை கிடைத்தால் அமெரிக்க ஜனாதிபதி பதவியே ஆனாலும் சரி, ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியே ஆனாலும் சரி, வேண்டாம் என்றுதான் கூறுவேன்.


(அவரவர் கனவு வாழ்க்கைப்பற்றி பின்னூட்டத்தில் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்)

37 comments:

Pot"tea" kadai said...

இது மாதிரியான "utopian dreams" - "self sustainable living" எல்லோருக்கும் உண்டு!
நம்மளோடதும் இதே மாதிரி தான் . ஆனால் இடம் மட்டும் வேறு. உலகின் இரண்டாவது மிகப் பெரிய "அழிந்த" நகரான ஹம்பியில், துங்கா நதிக்கரையோரத்தில் எனக்கொரு இடம் வேண்டும். இது நிச்சயமாக "வசப்படும்" எனற நம்பிக்கை கனவுகளில் ஒன்று.

பட்டணத்து ராசா said...

கல்யாணம் ஆகாத பசங்க வேற என்னத்த கனவு காணப்போறாங்க. ஆனா தூக்கத்துல புரவியில் மன்னராட்சி எதிர்க்கும் புரட்சியாளனாக. நம்ம உருவத்துக்கு கண்ணாடிக்கும் சிறுதும் சம்பந்தேமே இல்லாம என் கனவோ :(

அருண்மொழி said...

தல,

நம்மள listல விட்டுடீங்களே?

தளபதி அருண்மொழி
அகில உலக super star ரசிகர் மன்றம்.

PRABHU RAJADURAI said...

ஆழ்தூக்கத்தில் கனவுகள் வருவதில்லை, முத்து :-)

Muthu said...

பிரபு ராஜதுரை,

ஆழ்தூக்கத்தில் வராதா? சரி அரைதூக்கம் என்று மாற்றி படிக்கவும்...

Muthu said...

பொட்டீக்கடை,

ஹம்பி,துங்கா இத்தெல்லாம் தெரியாதுங்க..இப்ப என்ன பேருன்னு சொல்லுங்க..

(ஹி..ஹி.அப்படியே பக்கத்தில் ரெண்டு கிரவுண்ட் வாங்கி போடுங்க)

Muthu said...

பட்டணத்து ராசா,

ஓய், ரொம்ப குறும்பு ஓய்..மன்னராட்சி முடிஞ்சிருச்சிங்க..

//கல்யாணம் ஆகாத பசங்க வேற என்னத்த கனவு காணப்போறாங்க//

ச்சி..அசிங்கமா பேசாதீரும்...

Muthu said...

அருண்மொழி,

கட்சியின் இளைஞர் அணி, கலைஞர் அணி பதவிகள் காலியாக உள்ளன.உடனே ப்ராப்பர் பார்மேட்டில் அப்ளை செய்யவும்.

ஜோ/Joe said...

//"வியட்நாம் வென்றான்" ஜோவும் //
நல்ல வேளை தமிழ்-ல எழுதுனீங்க .இல்லைன்னா ஒரு வேளை "எவண்டா அவன் வியட்நாம வென்றது..அமெரிக்கா காரனே துண்டைக் காணோம் .துணிய காணோம்-னு ஓட வச்சவங்க நாங்க. புடிடா அவன" -ன்னு புடிச்சு உள்ள போட்டுடுவாங்க .போதாத குறைக்கு தற்சமயம் வியட்நாம்-ல தான் இருக்கேன்.

அப்புறம் இதே மாதிரி பஸ்பயணங்களின் போது நானும் கனவு காண்பதுண்டு .மகிழ்ச்சியாகவும் இருக்கும் .நேரமும் போகும்.

Muthu said...

////"வியட்நாம் வென்றான்" ஜோவும் //
நல்ல வேளை தமிழ்-ல எழுதுனீங்க .இல்லைன்னா//

அன்பால் வெல்வான் ஜோ என்று மாத்திவிடலாம் தல..

//அப்புறம் இதே மாதிரி பஸ்பயணங்களின் போது நானும் கனவு காண்பதுண்டு //

நான் மட்டும்தான் இப்படி என்று பயந்தேன்..கம்பெனி இருக்கு:)

Pot"tea" kadai said...

ஹம்பியில், துங்கா நதிக்கரையோரத்தில்

பொன்ஸ்~~Poorna said...

முத்து, எனக்கு ஒரு சந்தேகம்... இப்படி காலை மாலை எந்த நேரம் வந்தாலும் தமிழ்மணத்துல இருக்கீங்களே.. எப்போ இப்படி கனவெல்லாம் வரும்??!!

Muthu said...

பொன்ஸ்,

அதுதான் சொன்னேனே.. பஸ்லே.. ட்ரெயினில்..

(நட்சத்திரம் என்பதால் மெனகெடுகிறேன்...வேண்டாமா)

பொன்ஸ்~~Poorna said...

முத்து..

நீங்க வேறே.. இப்படி எழுதிகிட்டே இருக்கீங்களே. நடுவில நான் தூங்கற, சாப்பிடற நேரத்துல எல்லா பின்னூட்டமும் படிக்க முடியாம மிஸ் ஆகுதேன்னு வருத்தத்துல கேட்டேன்..

(மத்தபடி நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி, இப்படி கேட்ட ரெண்டு மூணு தேறும் இல்ல- பின்னூட்டம் தான் ;) )

துளசி கோபால் said...

இப்படித்தான் நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்குங்க.

பொன்ஸ், நல்லா சொன்னீங்க:-)))))

Anonymous said...

நாட்டைத் திருத்த

சட்டங்கள் செய்ததும்

விடியும் பொழுது.

கிளம்பும் பரபரப்பில்

சற்று ஓய்வு.

வெற்றியை எட்டியவனுடன்

எதிர்ப்பவனின் தோல்வியைப்

பேசி நடப்போம் வேலைக்கு.

யதார்த்தத்தின் பரிச்சயம் சற்று

வேலை நேரத்தில்.

நோபல் எழுத்தாளனும்

நோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்

உடன்வரத் திரும்புவோம்.

அறைக்கதவடியில்

செய்தித்தாள்

என் சாதனைகளை

சாதித்தவனைப்பாராட்டும்.

நனவை மறக்க

மீண்டும் இரண்டாம் உலகில்

நான்.

Muthu said...

துளசி நன்றி

Geetha Sambasivam said...

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்-அங்கு தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்-
மகாகவி சுப்ரமண்ய பாரதி சொன்ன கனவு இது.பிரசுரம் செய்வீர்களா தெரியாது. என் நினைவில் உடனே வந்தது.

Muthu said...

பினாத்தல் கவிதை உண்மையிலேயே சூப்பர்..

உங்கள் கவிதைகளை புகழ்ந்து (முத்துவின் நாய் கவிதை கிரேட்) ஒரு தனிபதிவே போடவேண்டும் அய்யா..அடுத்த வாரம் ...

அருண்மொழி said...

என்னா தல, இப்படி கலாய்கிரீங்களே.

இளைஞர் அணி - எனக்கு இன்னும் பேரன்/பேத்தி பொறக்கலீங்களே.
கலைஞர் அணி - நம்ம எல்லாரும் ஏற்கனவே அவர் அணிதாங்களே - அப்புறம் இன்னா இது.

மாணவர் அணி கீதா?. சொல்லுங்க - Apply பண்றேன். நம்ம வயசுக்கு அதான் சரிபடும்.

தளபதி அருண்மொழி
அகில உலக super star ரசிகர் மன்றம்.

Muthu said...

அம்மா கீதா,

எனக்கு உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை..முனை மழுங்கிய சில வாதங்களை அடிக்கடி அங்கங்கே போட்டு போவதால் சற்று கோபம் இருந்தது...என் மேல் தவறுதான்...கோபத்தை அடக்க முடியாமல் உளறிவிடுகிறேன்.. மற்றபடி எழுதுங்கள்..

உங்களின் பாரதி கவிதை சூப்பர்....நம் எல்லோருக்கும் இந்த கனவு அடிமனதில் இருக்கும்போல்..

ramachandranusha(உஷா) said...

கீதா, எனக்கும் இந்த கவிதைதான் நினைவில் வந்தது. ஆனால் "பத்தினி பெண்ணை" தேடிப் பார்த்து
ஏமாந்தேன் :-) ( இது முத்துவிற்கு)

முத்து, என் கனவு நிறைவேறும் தரும் வந்துக் கொண்டே இருக்கிறது. கனவில் நான் கண்டவைக்கும், நடப்பவைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. இதுக்கு மேலே சொல்ல முடியாது :-)))

கீதா, இன்னும் ஒரு விஷயம். இணைய நட்பு என்று நான் பாவிப்பது எல்லாரையும் ஓரே ஸ்தானத்தில்.
கருத்து ஒருமித்தவர் மட்டுமே நட்பு பாராட்ட முடியுமா என்ன? எனக்கு கிடைத்த நல்ல ஆத்மார்த்தமான
சில நட்புக்கள் உண்டு. ஆனால் அவர்கள் எண்ணங்கள், கருத்துக்கள், ரசனைகள் போன்று அனைத்திலும்
எனக்கு நேர் துருவம்.

சிலர் எதிர் கருத்து வைப்பவர்களின் கருத்தை எதிர்காமல், ஆளை தாக்குவார்கள். அத்தகையவர்களைக்
கண்டு ஒதுங்கி விடுகிறேன்.

கீதா, முத்து நான் எதுவும் தவறாய் சொல்லவில்லை என்று நம்புகிறேன்,

Muthu said...

usha,

கனவு வாழ்க்கை கைகூட போவதற்கு வாழ்த்துக்கள்..


(மற்றபடி நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை:)

மனுச பிறவியா பொறந்தா பிரச்சினை தான்.தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருக்கணும்.

வினையூக்கி said...

முத்து(தமிழினி) , பவுலோ கோயல்ஹோ எழுதிய, த அல்கெமிஸ்ட், படித்து இருக்கிறீர்களா....தன் ஆழ்மனக் கனவினைப் பின் தொடரும் ஒரு இளைஞனின் கதை.... When you want something, the whole world would conspire you to get that.

வினையூக்கி said...

கனவு
......
.......
........
கடவுள் மனிதனுக்கு அளித்த சினிமா

(கவிதை மாதிரி இருக்கா????!!!!!!)

Anonymous said...

அந்த ஆறு, டென்னிஸ் கோர்ட் தவிர ஏறக்குறைய அதேபோல் ஓர் இடத்திற்கு ஒரு மாலை-இரவுப் பொழுதில் வாட்டர் பார்ட்டிக்குச் சென்றோம். மதுரையிலிருந்து 30-35 கி.மீ. தள்ளி.மற்றபடி அதே போல் ஒரு குடில் - நீங்கள் சொன்ன வசதிகளோடு...சுற்றிலும் பசுமை..ஒரு புறம் மலை.. ம்.. ம்ம் ..ஒரே வார்த்தையில் சொல்லணும்னா..ரம்யம்..

ஆகவேதான் இது சாத்தியப் படக் கூடிய கனவு என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

"எனக்கு இந்த கடைசி பத்தி நீங்கலாக மற்ற விஷயங்களுடன் ஒரு கனவு வாழ்க்கை கிடைத்தால் .. "//ஆனாலும் கடைசியில இப்படி அத்து விட்டுட்டீங்களே! அதான் வருத்தமா இருக்கு. பொட்டீக்ஸ் எங்ஏயோ போறேங்கிறார். நான், அருள்மொழி..? :-(

பொன்ஸ்~~Poorna said...

வினையூக்கி, மறுபடியும் கவிதையா!!! :)

Pot"tea" kadai said...

//பொட்டீக்ஸ் எங்ஏயோ போறேங்கிறார். நான், அருள்மொழி..? //

திராவிட ராஸ்கல்கள் ஒரே இடத்தில் குழுமியிருந்தால் பல ஆக்கபூர்வமான??? செயல்கள் செயல்படுத்தப் படாமல் சென்று விடும். ஆகவே தட்ப வெட்ப் நிலைகளுக்கேற்ப பொதுக்குழுவைக் கூட்ட உலகெங்கிலும் "பகுத்தறிவுக்குடில்கள்" கட்டியெழுப்பப்படும் என்பதை தலைவர் வாயிலாக பொதுக் குழுவிற்கு தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

Geetha Sambasivam said...

முனை மழுங்கியது என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெரிந்தால் ஒன்று அதைத் திருத்திக் கொள்கிறேன் அல்லது முனை மழுங்கவில்லை என நிரூபிக்கச் சந்தர்ப்பம் கொடுங்கள்.

Muthu said...

வினையூக்கி,

இங்கிலிபிசு நாவல்ல நான் ஆர்.கே.நாராயணணை தாண்டியதில்லை....


கவிதை.

கருத்து ஓக்கே..வெட்டியே ஒட்டியோ ஒரு நாலு வரில வைச்சி தனிபதிவா போட்டு தாக்குங்க..

Muthu said...

தருமி,

ஒரு அனானி பின்னூட்டம் உங்களுதா?

Muthu said...

கீதா,

அடுத்த வாரம் கண்டிப்பாக இதைப்பற்றி நான் உங்களுக்கு எழுதுகிறென்.( நான் மறந்தாலும் ஞாபகப்படுத்தலாம்)

பொன்ஸ்~~Poorna said...

உங்க அடுத்த வார பதிவு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை மாதிரி ஏறிக்கிட்டே இருக்கு முத்து :)

சந்திப்பு said...

---அமெரிக்க ஜனாதிபதி பதவியே ஆனாலும் சரி, ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியே ஆனாலும் சரி, வேண்டாம் என்றுதான் கூறுவேன்.---

:)))....

ஈழநாதன்(Eelanathan) said...

இப்போதுதான் தெரிகிறது பண்ணையார்தனம் என்றால் என்னவென்று நட்சத்திரவாரம் நன்றாகப் போகிறது முத்து தொடருங்கள்

Muthu said...

ஈழநாதன்,

அது இன்னும் ஞாபகம் இருக்கா? கலக்கறே சந்துரு..

நன்றி..

நாகை சிவா said...

//அமெரிக்க ஜனாதிபதி பதவியே ஆனாலும் சரி, ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியே ஆனாலும் சரி, வேண்டாம் என்றுதான் கூறுவேன்.//---
அந்த பதவியில் எல்லாம் இருந்தால் நிம்மதி இருக்காது. எனக்கும் உங்கள் பண்ணை வீடு போன்ற கனவு வீடு உண்டு, நாகப்பட்டினத்தில் தான். கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள்
அன்புடன்
நாகை சிவா