Monday, May 01, 2006

தருமி அங்கிள்...

ஒரு வாரம் தமிழ்மணத்தில் என் பதிவுகள் இல்லை என்று அனைத்து நண்பர்களும் வருத்தப்பட்டார்கள்.(சரி,சரி.அடங்கு). கடந்த வாரம் மதுரை சென்றிருந்தேன்.ஆகையால் புதிய பதிவு எதுவும் எழுத முடியவில்லை. வட்டியும் முதலுமாக இந்த வாரம் உங்களை எல்லாம் பழிவாங்குவதுதான் என் நோக்கம்.

தருமி என்றொரு வலைப்பதிவர் மதுரையில் இருக்கிறார்.சாமி இல்லை, சோதிடம் பொய் என்றெல்லாம் எழுதிக்கொண்டு திரிவார்.இவரின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் நீங்கள் அங்காங்கே பார்த்திருக்க க்கூடும். புரொபைல் புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் ஒரு அறிவுஜீவி லுக் இருக்கும்.இவரை சந்தித்தே ஆகவேண்டும் என்பது என்னுடைய பிளான்.

ஏற்கனவே எனக்கு மதுரையில் தெரிந்த இடம் கொஞ்சம்தான். மாமனார் வீட்டிலிருந்து நடந்து கிளம்பினால் மீனாட்சி பஜார் வழியாக ரயில்வே ஸ்டேஷன், நேராக சர்வோதய புத்தக மையம், குறுக்கே திரும்பி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.வந்த வழியிலேயே திரும்பி விடுவேன்.பக்கத்தில் பிரவுசிங் சென்டர்.

எனக்கு பிடித்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குக்கூட(என் பிற்போக்கு புத்தியை தேடி அலையும் நண்பர்களுக்கு வசமான பிடி) என் மனைவியுடன் தான் செல்வேன். வழி தவறிவிடும் என்ற பயம்தான். ஒரு முறை தனியாக சென்று கோவிலைச்சுற்றி சுற்றி வந்தேன்.வெளியே வர முடியவில்லை.

தருமியின் மொபைல் நம்பரை அடித்தேன்.அவரை வந்து என் பிக்அப் செய்யச்சொல்லி கேட்டேன்.அப்போதே அவர் உஷார் அடைந்திருக்க வேண்டும். ஆகலையே. அப்பாவியாக உடனே தன்னுடைய மொபட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். என் மகளுக்கு இவர்தான் தருமி அங்கிள் என்று அறிமுகப் படுத்தினேன். உஷாரானார் தருமி.

"தாத்தா என்று சொல்லுங்கள், என்ன அங்கிள் வேண்டிகிடக்கு.. pseudo சந்தோஷம் எனக்கு தேவையில்லை", என்றார்.இரண்டு நவீனத்துவ ஆத்மாக்கள் மோதும்போது இதெல்லாம் சகஜம் என்று உணர்ந்து அமைதி காத்தேன்.

தருமியுடன் அவரின் இல்லத்திற்கு சென்றேன். வீடு மதுரை அவுட்டரில் என்றார்.இன்னும் கொஞ்சம் தூரம் போனால் திண்டுக்கல் வந்துவிடும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே விளாங்குடி என்ற இடத்தில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தோம்.

கம்ப்யூட்டரை சிறிது நேரம் நோண்டினோம். எந்த கமெண்ட்டும் என் மெயிலுக்கு வருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார். எல்லா காமெண்ட்டும் ஸ்பம்முக்கு போனால் எப்படி இன்பாக்ஸ் க்கு வரும் என்று கூறி சரிசெய்து கொடுத்தேன். அவரே தயாரித்த ஜுஸ் அளித்தார். மதுரையில் இருக்கும்வரை எப்போது வேண்டு மானாலும் வாஙக என்று வார்த்தை விட்டார் தருமி. அதுக்குத் தானே நாம் இருக்கோம் என்று நினைத்துக் கொண்டு அவரே அதிசயக்கும் அளவிற்கு இம்சை கொடுக்க ஆரம்பித்தேன்.

ஆப்புவின் செய்கையினால் வருத்தப்பட்ட தமிழ்காவலன் அய்யா ஞானவெட்டியானை பற்றி பேசினோம்.திண்டுக்கல் போகலாம் என்று நினைத்தோம். பிறகு ஒரு முறை மதுரை ஏரியா வலைப்பதிவர் சங்க கூட்டத்தை கூட்டலாம் என்றும் முடிவு செய்தோம்.

வலைபதிவின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான நட்புகளில் தருமியும் ஒருவர்.என் குடும்பத்துடன் தருமியின் வீட்டுக்கு சென்று ஒரு மாலை வேளையை கழித்தோம்.மனது நிறைந்த மாலைவேளை.நன்றி தருமி.(தருமி சிக்கன் நன்றாக செய்கிறார். மதுரை வரும் நண்பர்கள் கவனிக்க)

இன்னும் முத்துகுமரனும் குமரனும் என்னிடம் சிக்கவில்லை. பார்ப்போம். உலகம் உருண்டைதானே.

மதுரை சென்ட்ரல் லைப்ரரி

புத்தக செலவு ஏகப்பட்டது ஆகிறது என்று வீட்டில் கடுமையாக எதிர்ப்பு எழுந்ததால் நூலகத்தில் உறுப்பினர் ஆகலாம் என்று முடிவு செய்தேன். மதுரை மததிய நூலகம்.பேருதான் பெத்த பேர். பராமரிப்பு ஒரு வெங்காயமும் இல்லை.

புத்தகங்கள் எல்லாம் தூசி படர்ந்து கிடக்கின்றன.அறிவுப்பசி என்று வந்தவன் வியாதியுடன்தான் போவான்.நூலக ஊழியர்கள், உதவியாளர்கள் எல்லாம் படுமோசம்.எந்த புத்தகங்களும் ஒரு முறையாக அடுக்கிவைக்கப்படவில்லை. இதற்கு அந்த நூலகத்தையே மூடிவிடலாம்.

இந்த முறை நியூ செஞ்சுரி புக் ஹவுசில் நான் வாங்கிய புத்தகங்கள்.

பெருமாள்முருகனின் பீக்கதைகள்-சிறுகதை தொகுப்பு

பெருமாளமுருகனின் துயரமும் துயரநிமித்தமும் -கட்டுரை தொகுப்பு

அ.மார்க்ஸின் சொல்வதால் வாழ்கிறேன் -கட்டுரை தொகுப்பு

ராகுல்ஜீயின் வால்கா முதல் கங்கை வரை-வரலாற்று கதைகள் தொகுப்பு

இந்த புத்தகங்களைப்பற்றி படித்துவிட்டு பிறிதொரு நாள் விளக்கமாக எழுதுகிறேன்.

23 comments:

குமரன் (Kumaran) said...

தருமி ஐயாவும் (சரி எனக்கும் அவர் தாத்தாவா இருந்துட்டுப் போகட்டும் தருமி தாத்தாவும்) நீங்களும் நம்மளைப் பத்தி எல்லாம் பேசலையா? என்னய்யா இது? நம்மளைப் பத்திக் கூட பேசாம என்னத்தைப் பேசினீங்க ரெண்டு பேரும்? :-(

சரி சரி, இந்த பதிவுலயாவது நம்ம பேரைச் சொன்னீங்களே. அதனால போனா போவுதுன்னு விட்டாச்சு. நான் ஊருக்குப் போறப்ப சொல்றேன். வந்து பிடிச்சுக்கோங்க. :)

Dharumi said...

போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்கு :-)

முத்துகுமரன் said...

//இன்னும் முத்துகுமரனும் குமரனும் என்னிடம் சிக்கவில்லை. பார்ப்போம். உலகம் உருண்டைதானே.//
அய்யன்மீர் ஆகஸ்டில் சந்திப்போம் சிக்கனோடு:-))))))))))))

குமரன் (Kumaran) said...

//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//

இந்த தகவலுக்கு மிக்க நன்றி. உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் தலையாயது சிக்கன் கறி. :-)

வினையூக்கி said...

முத்து(தமிழினி)
நான் கூட ஒரு வகையில் மதுரைக்காரன் தான். நான்கு வருடங்கள் தியாகராஜரில் பொறியியற் படித்தாலும் நாற்பது வருட வாழ்ந்த அனுபவம். இனிமேல் விளாங்குடி என்றால் தருமி ஞாபகம் வருவார். இன்னும் எங்க வீட்டில் "பற்வைக் காய்ச்சல்" காரணமாக சிக்கன் வாங்குவதில்லை.

Dharumi said...

குமரன்,
நான் உங்களுக்கும் தாத்தான்னா உங்க குழந்தைக்கு நான் ...? வேணாங்க உங்க குழந்தைக்கு மட்டும் தாத்தாவாக இருக்கிறேன். சரியா?
முத்துக்குமரன் ஆகஸ்ட். அப்ப நீங்க..?

பரஞ்சோதி said...

நானும் தருமி அய்யாவை என் மகளுக்கு தாத்தா என்றே அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன் :)


முத்துகுமரன், அந்த சிக்கனில் ஒரு லெக் பீஸ் எனக்கு தான் :)

Thekkikattan said...

//தருமியுடன் அவரின் இல்லத்திற்கு சென்றேன். வீடு மதுரை அவுட்டரில் என்றார்.இன்னும் கொஞ்சம் தூரம் போனால் திண்டுக்கல் வந்துவிடும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே விளாங்குடி என்ற இடத்தில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தோம்.//

நல்ல விபரமான ஆசாமிதான் போல. ரொம்ப யோசிக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி choices எல்லாம் எடுப்பாங்க...எனக்குப் பிடிச்சிருக்கு, being away from the hustle bustle of city...quiety and nice!

TheKa.

priya said...

Totally agreed including me who didn't see your posts for the past 1 week.
How can we miss someone who beats the record?
Checking rainbow inside the temple makes you unforgettable. Very funny.....

I think all public libraries not well maintained. I have seen many pages misisng from the library when someone loans it. Those few pages, satisfies the reader. But what about the book?? Hmm goes to trash. Nobody even bothers to check at our libraries.

துளசி கோபால் said...

//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//

என்ன ? மெய்யாலுமா?

தருமி, இதை எப்படி நம்மகிட்டே சொல்லாம மறைச்சிட்டீங்க?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இதுதான்.....:-)

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா, நாம அடுத்து எப்ப ஊருக்கு வர்றதுன்னு இன்னும் ஒரு தெளிவானத் திட்டமும் இல்லை. வர்றப்ப சொல்லிட்டு வர்றேன்.

Anonymous said...

நல்ல சந்திப்பாக அமைந்தது கண்டு மகிழ்ச்சி. எங்களை, எங்கள் தலைமையை சந்திக்க ஆவல் இல்லையா?

(போலிடோண்டு ரசிகர்மன்றம்
மங்களூர் கிளை)

முத்து(தமிழினி) said...

குமரன்,
நம்ப பிள்ளைகளுக்குத்தான அவர் தாத்தா..கதையை மாத்தாதீங்க...(சிக்கன் கறி கலக்குவார் அவர்..முதல் முறை என்பதால் ஒரு பிளேட்டுடன் விட்டுவிட்டேன்..என் மனைவிக்கு ஆச்சரியம்தான் இதில்.இவரும் பயந்துர கூடாதில்ல)

முத்து(தமிழினி) said...

தருமி,
//போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்கு :-)//
என்ன இது? பாதிதான் எழுதியிருக்கு..இதுக்கே இதா? இன்னும் எவ்வளவோ இருக்கு...
give the devil its due என்பது என் கருத்து ( பழமொழி அவ்ளோ பொருத்தமா இல்லையோ:)))

முத்து(தமிழினி) said...

முத்துகுமரன்,

ஆகஸ்ட்டா..என்னய்யா இது..தீபாவளி டைமில போடுமையா..அது ஆரிய பண்டிகை என்பீர்..பார்த்து பண்ணுங்க...

முத்து(தமிழினி) said...

வினையூக்கி,
பறவை காய்ச்சலா...நல்லா வேக வைங்க சாமி..கறியெல்லாம் பச்சையா எப்பவுமே சாப்பிடக்கூடாது....

முத்து(தமிழினி) said...

பரஞ்சோதி,
தனி பீஸ் வாங்கிக்கோங்க..இதுல என்ன சண்டை? அய்யய்யெ..


தெக்கத்தி,

//நல்ல விபரமான ஆசாமிதான் போல//
விடிய விடிய ராமாயணம் கேட்டு...நல்ல கதைய்யா உங்ககிட்டே...

முத்து(தமிழினி) said...

பிரியா,
நன்றி...உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகமூட்டுகிறது...என்னுடன் சேர்ந்து நூலகங்களின் அவல நிலையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி..

முத்து(தமிழினி) said...

துளசி,
விடுங்க..அடுத்த முறை அமுத்திடுவோம்....


போலி டோண்டு மன்றம்,
உங்கள் தலைமையா? அய்யா...போலீஸ் கேஸ் எதுவும் ஆகாதே? அப்படின்னா வர்றேன்..

ஜெய. சந்திரசேகரன் said...

இப்படி சென்னைக்கும் மதுரைக்கும் நடுவுல தொங்கவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களே? நான் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு கல்லூரி முடிக்கிற வரை மதுரை! அப்புறம் நாடோடி, ஒரு வழியா, 9 மாசம் முன்னதான் சென்னைய அடைஞ்சிருக்கேன்! அடுத்த முறை மதுர 'மீட்' போட்டா முன்னாடியே சொல்லுங்க. நானும் வந்துர்றேன். (இது 'சேர்தல்' யா, உடனே ஆங்கிலத்துல meat னு புரிஞ்சுகிட்டு ஒரு கோஷ்டி கால் வேணும் கை வேணும்,முழுசா வேணும்னு அலையுது; தருமி சார் ரொம்பவே கவனிச்சுட்டீங்க போல? கோழிக்காரங்க கோவிக்காதிங்க; நான் சைவம்)

Dharumi said...

ஏன் முத்து,
நான் இத்தனைப் பேரப் பிள்ளைகளைப் பார்க்கிறதா..இல்ல மக்களுக்குக் கோழி செஞ்சு வைக்கிறதா..?ஸ்ஸ்...ஸ்ஸப்பா இப்பவே தல சுத்துதே! :-)))

முத்து(தமிழினி) said...

மரபூராரே,
சொல்லிடுவோம்....கலக்கிடுவோம்..சைவக்கோழியா நீங்க?

முத்து(தமிழினி) said...

தருமி,
கவலைப்படாதீங்க..காக்காய் பிரியாணி ரெடி பண்ணிடலாம்.விவேக் மதுரைதானே!

தமிழ்வெளியை பார்த்தீங்களா?