Wednesday, May 03, 2006

காதல்

என்னங்க நாளைக்கு பீச்சுக்கு போலாமா?"

"ம்..போகலாமே..சண்டே உல்லால் பீச்சுக்கு ஏகப்பட்ட ஃபிகர்ங்க வருமே"

"அடி செருப்பால,உனக்கு கல்யாணம் ஆயிருச்சுடா, அழகான பொண்டாட்டியும் அழகான மகளும் இருக்கு உனக்கு"

"அழகான மகள் சரி..முதல்ல சொன்னியே என்னமோ,அதுதான் புரியலை"

"காலைல டிபன் வேணுமா வேணாமா உனக்கு"

"என்னடி சும்மா விளையாட்டுக்கு கிணடல் செஞ்சா..இப்படி கோவப்படுற"

"ஏங்க,பீச்சில் இருந்து வரும்போது அப்படியே ஷாப்பிங்..அந்த லைட் ப்ளு சுடிதார் சொன்னேனே"

"ம்..வா பாத்துக்கலாம்"

********************************

"இன்னிக்கு ஈவினீங் பீச் சூப்பரா இருக்கு"

"ஆமா, திருச்செந்தூர் நாம போனமே"

"ஏண்டி,உனக்கு நாம லவ் பண்ண காலம் ஞாபகம் வந்திருச்சி போலிருக்கு"

"ஆமா, அப்பல்லாம் என்னை ரொம்ப லவ் பண்ணுவ.. இப்பல்லாம் என் மேலயும் பிள்ளை மேலயும் உனக்கு அக்கறையே இல்லை"

"அடியே அதெல்லாம் ஒரு காலம்.தூரத்தில் இருக்கறது மேல ஒரு கவர்ச்சி, வயசாயிடுச்சி இல்லையா?"

"ஓகோ, இப்பல்லாம் கம்ப்யூட்டர் இல்லாட்டி புத்தகம்,சுந்தரம் ராமசாமி, திருமுருகன்,மார்க்சு இதே வேலைதான்.."


"சரி ,சரி எழுத்தாளருங்க பேரை கொலை பண்ணாத..நீ கூடத்தான் ஜாவா, ஆரக்கிள்னு,பீன்ஸ்,காலிஃபிளவர்னு ஏதேதோ பெனாத்தற..நான் ஏதாவது கேட்கறனா? கண்டுகிறனா?"


"இன்னொரு முறை சொல்லு,நான் பெனாத்தறனா?"


"சும்மா சொன்னன்டி..எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா"

"உடனே வழிஞ்சிறுவியே"

"இல்லைடி, இறைவனிடம் கையேந்துங்கள்னு பாடினானே.அதை கொஞ்சம் மாத்தி மனைவியிடம் கையேந்துங்கள்,அவள் இல்லையென்று சொல்லுவ தில்லை, பொறுமையுடன் கேட்டுபாருங்கள்,அவள் நம்புபவர்களை கைவிடுவதில்லைன்னு மாத்த சொல்லலாம்னு இருக்கேன்"

"ரொம்ப, ரொம்ப பேசற நீ"

"சரி வா கிளம்பலாம், கடை சாத்திருவான்"

************************

"ஏங்க, சுடிதார் நல்லா இருக்கா?"

"சூப்பர்ர்ப்"

"ஆமா, என்ன கலர்னு கூட சொல்ல தெரியாது.ஆனால் பேச்சு மட்டும் வக்கனையா எட்டு ஊருக்கு, சூப்பராமில்ல"

"....."

"என்னங்க"

"என்னடி, மரியாதை எல்லாம் தூள் பறக்குது?"

"இல்லைடா, உன்னை மாதிரி புருஷன் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்"

"ம்..நீ சொல்லு..உங்கப்பன் இதை ஒத்துக்க மாட்டேங்குறானே..போறப்பல்லாம் முறைச்சு முறைச்சுல்ல பாக்குறான்"

"அதான,என்னடா உனக்குள்ள இருக்கற சைக்கோ இன்னும் எட்டி பாக்கலையேன்னு பார்த்தேன்.. எங்க அப்பாவ இழுக்காதன்னு எத்தனை முறை சொல்றது"


"ஆமா, பெரிய பாசபறவைகள் பாரு..உனக்கு ஏதோ மாப்பிள்ளை பாத்தாரே.. அந்த மினரல் வாட்டர் மாப்பிள்ளை..கொடுமை,ஒண்ணும் மட்டும் சொல்றேன் அவனை கல்யாணம் பண்ணியிருந்தா உனக்கு தண்ணீ பஞ்சமே இருந்திருக்காதுடி..."

"...."

"ஏய்,பிள்ளையை தூக்கிட்டு எங்க போற"

"நாங்க ஹால்ல படுததுக்கறோம்,நீ இங்கேயே கட"

"ஏய், சும்மா விளையாட்டுக்குதானே சொன்னேன்"

"...."

"இப்பத்தான் கொடுதது வச்சவன்னு டயலாக் அடிச்ச, அதுக்குள்ள கசந்துட்டனா"

"......"

"போடி, பெரிய இவ..கோவம் மட்டும் பொத்துகிட்டு வந்துரும்,எங்களுக்கு கோவம் வராதா"

"....."

"பிள்ளையை கொடு என்கிட்ட..பாப்பி கண்ணு..அப்பாகிட்ட வாம்மா"
"மாத்தேன்,போ"

"...."


************************************

"என்ன டார்லிங் காலைல குளிச்சுட்டு ஃபிரஷ்ஷா இருக்கற"

"நாங்க சிலர் மாதிரி அழுக்கு ஃபாமிலி கிடையாது"

"அழுக்கு ஃபாமிலியா(?!),...இன்னும் கோவம் போகலை போலிருக்கே.. ம்..சரி..என் தங்கம்..என்ன வேணா சொல்லலாமே,காலைல என்ன டிபன்"

"......"

"இன்னிக்கு சாயங்காலம் எக்ஸ்பிஷன் போறோம்"

"யார்கூட போற...ஆபிசுல கேரளாவுல இருந்து புதுசா பொண்ணுங்க ஜாயின் பண்ணியிருக்குங்கன்னயெ..அவங்க கூடயா?"


"உன் கால்தூசிக்கு ஈடாகுவாங்களா டார்லிங் அவங்கள்ளாம்?"

"ரொம்ப கொஞ்ச வேண்டாம்,நான் கோவமா இருக்கேன், தள்ளி நில்லு..நான் காலைலயே குளிச்சாச்சு"

"கோவமா இருக்கேன்னு சொல்லும்போதே கோவம் இல்லேன்னு தெரியுதே.. அட எனக்கு புடிச்ச புதினா சட்னி செஞ்சிருக்க"

"தெரியுதுல்ல,தள்ளி நில்லு..உன் பிள்ளை எந்திரிக்கற நேரம்,கையை எடு முதல்ல"

"பார்த்துக்கலாண்டி, பெரிய சுத்தம் இவ"

"ப்பா"

"போச்சு, வந்துட்டா உன் புள்ளை அப்படியே அப்பன் புத்தி,இந்த போர்ன்விடாவை போய் குடு அவளுக்கு"

"ம்..சரி..வாடா தங்கம் காப்பி குடிக்கிலாமா?."

"ஏங்க,"

"என்னவாம்"

"ஈவினிங் எக்ஸிபிஷன் புரோக்கிராம் உண்டுல்ல"**************************

54 comments:

Karthik Jayanth said...

முத்து (தமிழினி),

இந்த பதிவுல இருக்குறத ஆழமான காதலை கண்டுபுடிக்க கல்யாணத்த விட்டா வேற வழியே இல்லயா ?

உள்குத்து பதிவா இருக்குமோ ?

யாரோ 2 பேரு பேசிகிடுறது தவிர வேற என்ன இருக்கு இதுல ?

துளசி கோபால் said...

100க்கு வாழ்த்து(க்)கள்.

பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
ப்ரைவேட்!

இலவசக்கொத்தனார் said...

100ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முத்து.

priya said...
This comment has been removed by a blog administrator.
முத்து(தமிழினி) said...

பர்சனல் அனுபவம்னு எங்கயாவது சொல்லியிருக்கா? கதை சாமி இது...

குமரன் (Kumaran) said...

இன்னும் பதிவை முழுசா படிக்கலை. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

Gopalan Ramasubbu said...

Muthu,

Is there any other way to understand love in this story without getting married?:)

வினையூக்கி said...

பாலசந்தர், மணிரத்னம் கலந்த நடையிலான உரையாடல். நல்லா இருக்கு

முத்து(தமிழினி) said...

ராமசுப்பு,

பல வழிகள் இருக்கு..இதிலேயும் இருக்குன்றதுதான் நான் சொல்றது...

Pot"tea" kadai said...

இந்த நூறாவது பதிவிற்காக "தமிழினி" எழுதிய காதல் க(வி)தைக்கு வாழ்த்துக்கள்!
:-)

பொன்ஸ்~~Poorna said...

முத்து,
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

கதையோ உண்மையோ நல்லா இருக்கு.. ஆனா இதுல காதலைத் தான் கண்டுபிடிக்க முடியலை.. :). அது சரி, உஷாக்காவோட மனை மாட்சி க்ளாஸ்ல படிச்சுட்டு வந்து தேடிப் பாக்கறேன்

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கு மிகவும் பிடித்திருந்த கதை முத்து.

எனக்கென்னவோ, வர்ணனிகள் மூலம் எளிதாக காட்சியை விளக்குவதை விட, உரையாடல் மூலமே இடம், காலம் நேரம் அனைத்தையும் விளக்குவது சவாலாகத் தெரிகிறது, என் கதை முயற்சிகளிலும் அப்படியே செய்திருப்பேன்.

இந்தக்கதையில் "..." சொல்லும் அர்த்தங்கள் அவள் முகத்தில் வெடிக்கும் எள்ளையும் கொள்ளையும் எனக்குக் காட்டுகிறது. (எனக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல!) நல்ல உத்தி, நல்ல பேசுபொருள், நல்ல Presentation. ஆமாம், உலகம் ஃபுல்லாவே இப்படித்தானா? அவங்க பேமிலி பத்திப் பேச ஆரம்பிச்சா?

100க்கு வாழ்த்துகள், 1000த்துக்கு அட்வான்ஸ்.

Mookku Sundar said...

அசத்துங்க...!!

ஜாலியா இருக்கு..கல்யாணம் பண்ணிகிட்டு(ம்) மனசை ஃப்ரெஷ்ஷா வச்சிக்கிரது பெரிய விஷயம்.


//"சரி வா கிளம்பலாம், கடை சாத்திருவான்" //

எந்தக் கடை ;-)

நந்தன் | Nandhan said...

:) 100 க்கு வாழ்த்துக்கள்
நாங்கெள்ளாம் இன்னும் தூரம் போகனும் போல இருக்கே..
அட பதிவையும் சேர்த்தே சொன்னேன்பா

முத்து(தமிழினி) said...

சுரேஷ்,

நன்றி நண்பனே

மகாஜனங்களே,

கல்யாணம் ஆகாத ஆட்களுக்கு இது புரிவதில் சிக்கல் இருக்கலாம். முன்னுரையை சரியாக படித்திருந்தால் தமிழ் சினிமாவில் மட்டுமே பார்க்க கிடைக்கும் காதல் காட்சிகளை இதில் தேட மாட்டீர்கள்:))

முத்து(தமிழினி) said...

நன்றி

கார்த்திக்,துளசி,இலவசகொத்தனார்,
குமரன்,வினையூக்கி,பொட்டீக்கடை,ராமசுப்பு,பொன்ஸ்,சுரேஷ்,மூக்கு மற்றும் நந்தன்

இளவஞ்சி said...

//எங்கே காதல் உள்ளது என்று கேட்கும் திருமணமாகாதவர்கள் திருமணம் ஆகும்வரை காத்திருக்கவேண்டும்.// 101% உண்மை! ஆகவே கல்யாணம் ஆகாத குஞ்சு குளுவானுங்களே! பொறுங்கப்பு! காலம் கனியும்! :)

முத்து, ஏன் இதோட நிறுத்திட்டீங்க?! கரண்டிகள் வளையும் அழகையும் பூரிக்கட்டைகள் உடையும் உன்னத சத்தங்களையும் ஏன் விட்டுவிட்டீர்!? ( போட்டோல உங்க வலது கண்ணம் வேற கொஞ்சம் வீங்குனாப்புல இருக்கு! ஹிஹி.. )

சரி சரி.. விடுங்க கதைன்னு நம்பறேன்!!! :)

முத்து(தமிழினி) said...

//ஆகவே கல்யாணம் ஆகாத குஞ்சு குளுவானுங்களே! பொறுங்கப்பு! காலம் கனியும்! :)//

எதிர்பார்ப்பையும் கொறச்சுக்கோங்க தம்பி தங்கச்சிகளா...(சொல்றது நம்ப கடமையாகிறது)


//கரண்டிகள் வளையும் அழகையும் பூரிக்கட்டைகள் உடையும் உன்னத சத்தங்களையும் ஏன் விட்டுவிட்டீர்!? ( போட்டோல உங்க வலது கண்ணம் வேற கொஞ்சம் வீங்குனாப்புல இரு//

டோட்டல் சரண்டர்னு ஒரு கான்செப்ட் இருக்குங்க..அது ரொம்ப பவர்ஃபுலலான ஆயுதம்க..அதை வெச்சி நான் படம் காட்டுவேனுங்க...
அதனால இங்க பூரிகட்டை உடையறதேயில்லைங்க..//சரி சரி.. விடுங்க கதைன்னு நம்பறேன்!!! :) //

ஹி..ஹி...நம்ப கதையை யாரோ எழுதின மாதிரி இருக்குன்னு பல பேருக்கு தோணுதோ..:))

ramachandranusha said...

இது கதையல்ல காவியம். no :-)

குழந்தாய் பொன்ஸ் வரேன், வரேன்.

மோகன்தாஸ் said...

கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. :-) வாழ்த்துக்கள் நண்பரே.

Krishna said...

சின்னப்புள்ளத் தனமாயில்ல இருக்கு...

நம்ம ரேஞ்சுக்கு, நூறாவது பதிவுக்கு இது நூறுன்னு சொல்றது....

திருப்பதி மொட்டையை எண்ணி, இது நூறாவதுன்னு சொல்ற மாதிரி இருக்கு சாமி.. (சும்மா எண்ணிக்கைக்கான உதாரணம் சாமி, தரத்தில சொல்லல சாமியோவ்) அண்ணாத்தைக்கெல்லாம், கணக்கிலடங்காத எண்ணிக்கைதானே அழகு.

சதத்திற்கும், சதாபிஷேகங்களாய் தொடரவும், வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

முத்து இதுல உங்க சொந்தக் கதைதான் தெரியுது! சரியா? டேக் இட் ஈசி....

G.Ragavan said...

முத்து படிச்சுப் பாத்தா அழகான கதை மாதிரி இருக்கு. அனுபவத்தைக் கதை மாதிரி சொல்றதும் நல்லாத்தான் இருக்கு.

இது கதையா அனுபவமான்னு யோசிச்சுப் பாத்தேன். கதைன்னு உறுதியா முடிவு செஞ்சிட்டேன். ஆனா அனுபவத்தையும் இவ்வளவு அழகாச் சொல்லலாமே...

உள்ளாள் (உல்லால் இல்ல) பீச் ரொம்ப அழகா இருக்கும். மங்களூர் வந்தப்ப போக நேரம் கிடைக்கலை. இந்த உள்ளாள் பீச்சுதான் எனக்கு இந்தக் கதையில மொதக் குறிப்பு.....

G.Ragavan said...

// கல்யாணம் ஆகாத ஆட்களுக்கு இது புரிவதில் சிக்கல் இருக்கலாம். //

எனக்குப் புரிஞ்சிருச்சே முத்து........

அப்புறம் நூறாவது பதிவிற்கு எனது வாழ்த்துகள்.

முத்து(தமிழினி) said...

ராகவன்,

//எனக்குப் புரிஞ்சிருச்சே முத்து........//


பென்களூர்ல (பெங்களூர்) நீங்க் ஏதோ தப்பு தண்டா பண்றீங்க இல்லாட்டி இதை கண்டுபிடிக்கறது கஷ்டம் :)))//உள்ளாள் (உல்லால் இல்ல) பீச் ரொம்ப அழகா இருக்கும்//

சல்மான் டாவு கட்டறாரே..அந்த குட்டி சினேகா உள்ளாள்..இதுதானெ..

முத்து(தமிழினி) said...

உஷா, மோகன்தாஸ்,கிருஷ்ணா,சந்திப்பு ஆகியோருக்கு நன்றி

பட்டணத்து ராசா said...

நூறுக்கு வாழ்த்துக்கள், நமக்கு இன்னும் கொஞ்சம் வயசாகனும் காதல புரிஞ்சிக்க :(

Thangavel said...

எனக்கும், என் மனைவிக்கும் நடுவில நடக்குறது மாதிரியேல்லா இருக்கு.

பரணீ said...

படித்தேன், புரிந்தேன், ரசித்தேன் :-)

கலை said...

கதை அருமையாக உள்ளது.

உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன். எளிய நடையில், நகைச்சுவை கலந்து நீங்கள் எழுதுவது நன்றாக உள்ளது.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Prabu Raja said...

oodal oodal appdinnu solluvangale antha ragam thane ithu?

///

"ஏங்க,"

"என்னவாம்"

"ஈவினிங் எக்ஸிபிஷன் புரோக்கிராம் உண்டுல்ல"
////
lol
romba vazhiyaraangappa.. :-)

Congrats for Century!

R. Prabu

முத்துகுமரன் said...

கல்யாணம் ஆகாமலே அய்யயோ அய்யய்யோ எனக்கு வரிக்கு வரி காதல் தெரியுதே!! காதல் புரியுதே!!....

என்ன செய்வேன்:-)))))

KVR said...

பெண்களூர் சிங்கம் அண்ணன் முத்து வாழ்க!

Anonymous said...

//ஈவினிங் எக்ஸிபிஷன் புரோக்கிராம் உண்டுல்ல//

போகலைன்னாதானே இருக்கு...?!! இன்னைக்கு ராத்திரியும்..வெளியில தான் தூங்கனும்..

ஊடல் இல்லாத காதலில் சுவையில்லையே?!!

முத்து, கதை நல்லாருக்கு ..

முத்துகுமரன் said...

//டோட்டல் சரண்டர்னு ஒரு கான்செப்ட் இருக்குங்க..அது ரொம்ப பவர்ஃபுலலான ஆயுதம்க..//.

மறுபடியும் மறூபடியும் மனசாட்சியாய் குரல் கொடுக்கிறீர்கள்:-)))))))

ramachandranusha said...

முத்துகுமரரே! நல்லா பின்னுட்டங்களை ஒருக்கா படிச்சிப் பாருங்க. காதல் தெரியுதுன்னு சொல்லுகிறவங்க
கல்யாணம் ஆகாத சின்ன பிளைங்க. வேதனையும், வீர தழும்புகளும், ஏக்கங்களும், சோகங்களையும்
பரஸ்பரம் பரிமாறிக்கிரவங்க கல்யாணம் ஆன பெருசுங்க.

Dharumi said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்

ஆமா, போயி போயி திருச்செந்தூருக்குத்தான் போகணுமா?

gulf-tamilan said...

கதை மாதிரி தெரியவில்லை!!! 100ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முத்து

G.Ragavan said...

// பென்களூர்ல (பெங்களூர்) நீங்க் ஏதோ தப்பு தண்டா பண்றீங்க இல்லாட்டி இதை கண்டுபிடிக்கறது கஷ்டம் :))) //

அடடா! இப்பிடி நெனச்சுட்டீங்களா! என்ன பண்றது.......நா ஒன்னும் சொல்லலை....


////உள்ளாள் (உல்லால் இல்ல) பீச் ரொம்ப அழகா இருக்கும்//

சல்மான் டாவு கட்டறாரே..அந்த குட்டி சினேகா உள்ளாள்..இதுதானெ..//

அதே அதே....ரொம்பச் சரியா சொன்னீங்க...அந்தப் பொண்ணோட முன்னோர்கள் அந்த ஊராத்தான் இருக்கனும். அந்தப் பக்கத்துல ஊர்ப் பேரை பின்னால சேத்துக்கிறது வழக்கும்.

ஒரு நண்பன் சொன்னான்...ஸ்நேகா உள்ளாள் நன்றாகவே உள்ளாள்-னு :-)))))

முத்து(தமிழினி) said...

பட்டணத்து ராசா,

கல்யாணம் ஆகலைன்னு சொல்லுங்க.. தொண்ணூறு வயசு ஆனாலும் கல்யாணம் ஆகாட்டி இது புரியாது...

முத்து(தமிழினி) said...

தங்கவேல்,
//எனக்கும், என் மனைவிக்கும் நடுவில நடக்குறது மாதிரியேல்லா இருக்கு//.
அதே, அஃதே...

முத்து(தமிழினி) said...

நன்றி பரணி,

நன்றி கலை

நன்றி பிரபு
நீங்க சொன்னதே தான் இது...

முத்து(தமிழினி) said...

முத்துகுமரன்,

காதலிக்க ஆள் தேடறன்னு நீங்க பதிவு போட்டவப்பவே உங்கள் வீட்டுக்கு நான் தகவல் சொல்லியிருக்கணும்..இப்பவும் எல்லாம் புரியுதுன்னு வேற சொல்றீங்க..

என்ன நடக்குது அரேபியாவில? (அங்க சட்டம் ரொம்ப ஸ்ரிக்டாமே)

முத்து(தமிழினி) said...

நன்றி கே.வி.ஆர்
நீங்கள் அண்ணன் ராகவனை நெனைச்சி குழம்பறீங்க தலை

முத்து(தமிழினி) said...

நன்றி அனானி
(ஏதோ ஒரு பெயர் போட்டுகிட்டு வாங்க..என்ன இந்து மதத்தை ஒழிக்கவா வந்து கருத்து சொல்றீங்க:))

முத்து(தமிழினி) said...

முத்துகுமரன்,

//மறுபடியும் மறூபடியும் மனசாட்சியாய் குரல் கொடுக்கிறீர்கள்:-)))))))//

மனசாட்சி என்னைக்குமே மெளனமாகாது..:))

முத்து(தமிழினி) said...

உஷா,
வேதனையும், வீர தழும்புகளும், ஏக்கங்களும், சோகங்களையும்

:))))

முத்து(தமிழினி) said...

தருமி,
அது ஒரு இன்பியல் சம்பவம்..என்ன நடக்குது எங்க போறோம்னு நமக்கு தெரியுமா ஒண்ணா?

முத்து(தமிழினி) said...

நன்றி கல்ஃப் தமிழன்

ஜெய. சந்திரசேகரன் said...

நல்லா கதைக்கிறீங்க ;-) அனுபவம் பேசுது? (உங்கதா, என்னதான்னு அடுத்தவர்கள் கேட்பார்கள்) கதைக்கறதுக்கு சீன் எடுத்து கொடுக்கற பின்னூட்டங்களுக்கு ஜே! பொன்சுக்கு உஷாக்கா எதோ எச்சரிக்கை விட்டுருக்காங்க; ஜாக்கிரதைம்மா!

பொன்ஸ்~~Poorna said...

ஆகா, ஐம்பதுக்கு ஒண்ணு குறையுதா!! முத்துக் குமரன் எங்க போனார்னு தெரியலையே...

இருக்கட்டும்.. நானே போட்டுறேன்.. :) :)

சிங். செயகுமார். said...

நூறில் காதல்
நாறுவதும் காதல்
வாழ்த்துக்கள் நண்பரே!

priya said...

Congrats on your 100th (best) post.
Hope your dreams will come true!!

Anonymous said...

En Veetil ottu kettu ezhuthiyathu pol ullathu...

Now i can understand that this is universal truth...

Superb...

Raj

தமிழ்வெளியை பார்த்தீங்களா?