Tuesday, October 27, 2009

பெட்ரோல் லிட்டர் 5 ரூபாய்

கேரளாவில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு நாம் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிக மிக அதிகம் என்றும் இந்தியா இனிமேல் என்றுமே பெட்ரோலியம் இறக்குமதியே செய்ய வேண்டியிருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோல் ஐந்து ரூபாய்க்கும் டீசல் மூன்று ரூபாய்க்கும் வரும் காலம் மிகத்தொலைவில் இல்லை என்று இந்த தகவலை எனக்கு கூறிய நண்பர் தெரிவித்தார்.

கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நிலம் வீட்டு மனை போன்றவை சதுர அடி கணக்கில் வியாபார ஆவதற்கு பதிலாக இன்ச் கணக்கில் வியாபாரம் ஆவதாக பெரிய குண்டை தூக்கி என் தலையில் போட்ட அந்த நண்பர் மேலும் கூறியதாவது:

கூடிய விரைவில் மன்மோகன்சிங்கை தூக்கிவிட்டு ராகுல்காந்தி பிரதமராக போவதாகவும் பிறகு கேரளாவில் உள்ள எண்ணெய் வளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உலகப்புகழ் பெற போவதாகவும் தெரிவித்தார்.

கொஞ்சம் சுதாரித்த நான், ' அப்படின்னா முல்லை பெரியாறு பிரச்சினையில் கூட கேரளாவிற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க இதுதான் காரணமா?' என்றேன். இந்த சிந்தனை அவனை பெரிதாக கவரவில்லை.

கோபமடைந்த நான் உடனே இந்த தகவல்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம் என்றேன். ஒரு அரசாங்க அதிகாரியிடம் இருந்து இந்த தகவல் கிடைத்ததாக கூறிய நண்பன் தொடர்ந்து சிரிக்காமல் கூறிய ஹாட் நியூஸ் " பூகோள அமைப்பின்படி கேரளா சரியாக துபாய்க்கு அடியில் இருக்கிறது. கேரளாவில் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால் துபாயில் உள்ள எண்ணெய் இங்கே வந்துவிடும், இந்த விவரம் எல்லாம் தெரிந்து அமெரிக்கா முதற்கொண்டு எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு பயப்படுகின்றன்" என்பதுதான்....

என்னத்த சொல்ல????????