Wednesday, May 03, 2006

முதலாளிகள் வெறும் வியாபாரிகளா?

நிறுவனங்களில் புதிதாக மக்களை பணியமர்த்தும்போது அவர்கள் சமுதாய ஏற்றத்தாழ்வு களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இயங்கவேண்டும் என்று நான் ஒரு பதிவில் கூறி இருந்தேன்.பல நண்பர்களும் இவ்விதமான கருத்தை கொண்டுஉள்ளனர். வழக்கம்போல் இதுவெல்லாம் சாத்தியமா என்று முழங்கும் நண்பர்களுக்கான ஒரு விழிப்புணர்ச்சி பதிவுதான் இது.

கடந்த சில மாதங்களுக்குமுன் எங்கள் வங்கிக்கு மென்பொருள் தரும் நிறுவனத்தின் முதலாளி தலைமை அலுவலகத்திற்கு வருவதாக பேச்சு அடிபட்டது. நான் அப்போதுதான் மும்பை அலுவலகத்தில் இருந்து மங்களூருக்கு மாற்றப்பட்டிருந்தேன். அவரை நான் பார்த்ததும் இல்லை. ஒரு சின்ன பிராஜக்ட். ஏ.டி.எம் மிஷின் மாதிரி.அதன் டெமோ என்று நினைக்கிறேன். டெமோ முடிந்தது. நான் அப்பாவியாக அருகில் இருந்தவரிடம் கேட்டேன்.

"ஏங்க, அவங்க எம்.டி சுரேஷ் காமத் வரவில்லை?"

"சரியாப் போச்சு, பிரசன்ட்டேஷன் தந்தவரே அவர்தான் " என்றார் என் மூத்த மேலாளர்.

அதிர்ச்சி அடைந்தேன் நான்.உப்புமா கம்பெனி வைத்திருக்கும் குப்பனும் சுப்பனும் Prop: Mr.Kuppan என்றெல்லாம் போட்டுக்கொண்டு கேபினை விட்டு வெளியே வராமல் கோட்டை போட்டுக்கொண்டு அளப்பரி செய்யும் காலத்தில் இவ்வளவு எளிமையாக ஒரு சேர்மன்(எம்.டி)இருக்கமுடியுமா? இத்தனைக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட வஙகிகள் இவர்களின் மென் பொருளால் இயங்குகிறது.

அதுதான் சுரேஷ் காமத்.எண்பதுகளில் ஐ.ஐ.டி பட்டதாரியான கர்நாடகத்தை சேர்ந்த காமத், அப்போதைய ட்ரெண்ட்படி சுலபமாக அமெரிக்கா போயிருக்கலாம். டாலர்களை எண்ணியிருக்கலாம்.ஆனால் மிகவும் சுலபமான, சாதாரண மனிதர்கள் தேர்தெடுக்கும் அந்த பாதையை, அவர் தேர்வு செய்யவில்லை.அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியுள்ளது.இத்தனைக்கும் அவர் பிறந்தது ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் தான்.

சமுதா சிந்தனைகளும் கொண்ட அந்த மனிதர் உருவாக்கிய இன்றைய தேதியில் , 20 கோடிக்கும் அதிகமான டர்ன்ஓவரை கொண்ட லேசர் சாப்ஃட் நிறுவனம் வங்கிகளுக்கு மென்பொருள் தரும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகவும் சமுதாயத்தில் ஒரு நிறுவனத்தின் கடமை என்ன என்பதை மற்றவருக்கும் புரியவைக்கும் ஒரு நிறுவனமாகவும் வெற்றி நடை போடுகிறது.

அப்படி என்ன சமுதாயத்திற்கு இவர் செய்துவிட்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

ஏழை மக்களுக்கு இலவச கணிணி பயிற்சி,பின்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது என்றெல்லாம் இவர்கள் செய்தாலும் முக்கியமாக சாதனையாக இவர் செய்திருப்பது, ஏறத்தாழ ஐநூறுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் differently abled என் இப்போது விளிக்கப்படும் உடல் ஊனமுற்றோர்.

மற்ற பெரிய நிறுவனங்கள் பலவும் இவர்களுக்கு என்று அலுவலகத்தில் பல வசதிகள் செய்துதரவேண்டும் என்பதற்காகவே இவர்களை ஒதுக்கும்போது ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் இத்தனை வசதிகளையும் செய்து இவர்களை கைதூக்கிவிடுவது சாதாரண காரியமே அல்ல .லாபம் வரும் இந்த துறையில் சிறிது பயிற்சி கொடுத்தால் நன்றாக வேலை செய்யும் இவர்களுக்கு இந்த வசதிகளை செய்வதற்கு உங்களை தடுப்பது எது? என்கிறார் சுரேஷ்.

மனதில் ஊனம் உள்ள நம்மில் பலரும் அது வெளியே தெரியாத ஒரே காரணத்தால் ஆடுகிறோம். ஆனால் இந்த பிஸிகல் குறைபாடு ஒரு குறையே இல்லை என்று கூறி ஒரு நிறுவனம் அவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களின் தன்னம்பிக்கை எவ்வளவு கூடும்?எனக்கு தெரிந்து ஒரு நண்பர் இந்தமுறை ஒரு முக்கிய அரசியல் கட்சியில் சீட்டே கேட்டுவிட்டார். (நீங்கள் இங்கே அந்த நம்பிக்கையை பார்க்கவேண்டும்)

இந்த அரிய சேவைக்காக இந்த நிறுவனம் பல விருதுகளையும் பெற்றுள்ளது .

உடல்ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய விருது 2005.

தேசிய உடல் ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு மையத்தின் ஹெலன் கெல்லர் விருது

தமிழக அரசின் சிறந்த தனியார் நிறுவனம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்கள் .

இத்தனைக்கும மேலாக,ஒரு மல்டிநேஷனல் கம்பெனி இவர்கள் கம்பெனியில் முதலீடு செய்ய போட்ட கன்டிஷன் இவர்களுடைய இந்த வேலையில் அமர்த்தும் கொள்கையை கைவிடவேண்டும் என்பதே . இதை மறுத்துவிட்டார் நிறுவனர்.( கவனிக்கவும், ஒரு வெறும் வியாபாரிக்கு இந்த முடிவு எளிதானதல்ல)

இங்கு தேர்தெடுக்கப்படும் உடல் ஊனமுற்ற இளைஞர்களும் இளைஞிகளும் ட்ரெயினிங் கொடுக்கப்பட்டு அவர்களின் திறனுக்கேற்ற பிராஜக்ட்டுகளில் போடப்படுகிறார்கள்.ஆரம்பத்தில் இந்த கொள்கையை பலரும் ஏற்கவில்லை என்று கூறம் இவர் எதிர்காலத்தில் பத்தாயிரம் டிப்ஃரன்ட்லி ஏபில்டு மக்களை வேலைக்கு அமர்த்துவது என்பது எங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்கிறார்.

ஐ.டி துறை ஏதோ வானத்தில் இருந்து வந்து குதித்த துறை என்பதுபோன்ற நிலை இன்று மாறி,அவர்களுக்கும் சமுதாய கடமை இருக்கிறது என்று உணர்வு இப்போது மெல்ல மெல்ல வருவதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் இவரின் திருமணம் உலக உடல் ஊனமுற்றோர் தினத்தன்று நடந்தது.இவரின் பிறந்தநாளும் பில்கேட்சின் பிறந்த நாளும் ஒன்று .இருபது வருடங்களுக்கு முன்பு இந்த கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட நாள் மே ஒன்று.

அரசாங் பணிகளில் உடல் ஊனமுற்றோருக்கு ஓரளவு இடஒதுக்கீடு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தனியார் நிறுவனங்களில் என்ன நிலைமை? பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள் இது போன்ற உருப்படியான காரியங்கள் எதையாவது தானாக முன்வந்து செய்திருக்கிறார்களா?

கன்னட தங்கங்கள் என்ற வரிசையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சில சாதனையாளர்களை ப்பற்றி எழுத போவதான சொல்லியிருந்தேன். ஏற்கனவே ராகுல் திராவிடைப்பற்றி எழுதியுள்ளேன்.இப்போது இரண்டாவதாக முதவாளிகளுக்கு இலக்கணமாக திகழும் லேசர் சாப்ஃட் நிறுவனத்தின் சுரேஷ் காமத்.

53 comments:

வினையூக்கி said...

இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் 20 ஆண்டுகளைக் கடந்து 21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

வினையூக்கி said...

//எனக்கு தெரிந்து ஒரு நண்பர் இந்தமுறை ஒரு முக்கிய அரசியல் கட்சியில் சீட்டே கேட்டுவிட்டார்.
(நீங்கள் இங்கே அந்த நம்பிக்கையை பார்க்கவேண்டும்)//


முத்து (தமிழினி) அந்த நபர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று வாழ்த்து கூறுகின்றேன்.

தேசாந்திரி said...

மிக நல்ல பதிவு முத்து. இந்த மாதிரி நல்ல விசயங்களைப் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

பதிவுக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி. தமிழினி என்பதன் பெயர்க் காரணம் என்னவோ?

பொன்ஸ்~~Poorna said...

பெரிய விஷயம் தான்..
//இத்தனைக்கும மேலாக,ஒரு மல்டிநேஷனல் கம்பெனி இவர்கள் கம்பெனியில் முதலீடு செய்ய போட்ட கன்டிஷன் இவர்களுடைய இந்த வேலையில் அமர்த்தும் கொள்கையை கைவிடவேண்டும் என்பதே . இதை மறுத்துவிட்டார் நிறுவனர்.( கவனிக்கவும், ஒரு வெறும் வியாபாரிக்கு இந்த முடிவு எளிதானதல்ல)//
என்ன சொல்றதுன்னு தெரியலை.. இந்தக் காலத்தில் இப்படியும் சிலர். !!

rajkumar said...

நல்ல செய்தி. நன்றி

Muthu said...

நன்றி தேசாந்திரி,


கீழே உள்ள சுட்டியை படிக்கவும்..

http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113802321930477282.html

Muthu said...

வினையூக்கி,

உங்கள் அழும்புக்கு அளவே இல்லையா?

பட்டணத்து ராசா said...

நல்ல பதிவு.
ஆனா..
//இவரின் பிறந்தநாளும் பில்கேட்சின் பிறந்த நாளும் ஒன்று //

நமக்கு எப்பவும் இந்த foreign foreigner obsession குன்சாவன விஷயம் இல்ல :-)

Muthu said...

பட்டணத்து ராசா,

தரமான படத்துல ஒரு குருவி குடைந்த கொய்யாப்பழம் பாட்டு வெக்கறதில்லையா? :))

Muthu said...

ராஜ்குமார்,

நன்றி

Muthu said...

பொன்ஸ்,

நன்றிங்க...நெனைச்சி பாருங்க.. நம்பளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்?

வினையூக்கி said...

முத்து(தமிழினி),
ஒரு பிரபலமான மசாலா கம்பெனியில் பேகிங் செக்ஷனில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் உடற் ஊணமுற்றவர், இந்தியா டுடே யின் கட்டுரையின் முலமாக லேசர் நிறுவனத்தைப் பற்றி கேள்விப் பட்டு, சென்னை வந்து திரு. சுரேஷ் காமத்தினை சந்தித்த போது , திரு. காமத் உடனடியாக , அவருக்கு எந்த கணிப்பொறி பின் புலம் இல்லாத போதும், உடனடியாக தனது டிரெயினிங் சென்டரில் சேர்த்து ஜாவாக் கற்றுக் கொடுத்து ஒரு கணிப்பொறி வல்லுனராக ஆக்கியுள்ளார். நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய விசயம்.

தேசாந்திரி said...

//தமிழினிக்கு கண் அழகுய்யா...//

ரொம்ப சரியாச் சொன்னீங்க.

Anonymous said...

ஆனால் தனியார் நிறுவனங்களில் என்ன நிலைமை? பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள் இது போன்ற உருப்படியான காரியங்கள் எதையாவது தானாக முன்வந்து செய்திருக்கிறார்களா?

Sure.Many organisations have policies for social welfare
including education and employment to physically challenged persons.
Many software companies including
Infosys and WIPRO fund directly
or indirectly many projects run
by NGOs etc.And what has reservation to do with this.Even if
Infosys rejects reservation in
employment you cannot find fault
with its philontharpic activities.
Give up your stupid obesession
with reservation.Manadl or suppoters of reservation did nothing for physcically challenged
persons.This includes Periyar also

பொன்ஸ்~~Poorna said...

//நன்றி தேசாந்திரி,
கீழே உள்ள சுட்டியை படிக்கவும்..//
எல்லாத்துக்கும் ஒரு சுட்டி வச்சிருக்கீங்க :)

உங்க வீட்டுச் சுட்டியும் ரொம்ப அழகுங்க.. :)

Muthu said...

நன்றி தேசாந்திரி , பொன்ஸ்

அப்பாவை போல் பிள்ளை என்ன ஆச்சரியம் இதில் :))

முத்துகுமரன் said...

மூளையை மட்டும் பயன்படுத்தும் முதலாளிகளுக்கு மத்தியில் இதயத்தையும் பயன்படுத்தும் சுரேஷ் காமத் போன்றவர்களை பற்றி அறிய வரும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. அவரது நிறுவனம் இன்னும் பல முன்னேற்றங்களையும், சாதனைகளைப் புரியவும் மனமாற வாழ்த்துகிறேன்..

சிறப்பான பதிவு முத்து.

தொடருங்கள் உங்கள் ராஜபாட்டையை:-)))

குழலி / Kuzhali said...

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட கிரிம்சன்லாஜிக் என்கிற IT நிறுவனம் அவர்களுடைய பெங்களூர் அலுவலகத்தில் உடல் ஊனமுற்றோருக்காக தனி ஒதுக்கீடு செய்து அதில் சிலருக்கு வேலைவாய்ப்பும் அளித்தது....

//பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள்
//
பிரேம்ஜிக்கும், நாராயணமூர்த்திக்கும் அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் திறமையற்று(?!) இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்குமா?

நன்றி

Muthu said...

//Many organisations have policies for social welfare
including education and employment to physically challenged persons.//

what policy? not recruiting them at any cost? you are not catching the exact point..iam talking about proactive part of service



//Many software companies including
Infosys and WIPRO fund directly
or indirectly many projects run
by NGOs etc//

This has nothing to do with this post...everybody is doing..iam not belittling it..but this is something different and great

//Give up your stupid obesession
with reservation.Manadl or suppoters of reservation did nothing for physcically challenged
persons.This includes Periyar also //

iam not talking about periyar here..that we will talk seperately..i may be stupid in talking abt reservation...
mandal talks about govt reservations..iam talking abt corporate social responsibility in which Mr.Suresh Kamath is doing a wonderful job..

dondu(#11168674346665545885) said...

"அரசாங்கப் பணிகளில் உடல் ஊனமுற்றோருக்கு ஓரளவு இடஒதுக்கீடு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தனியார் நிறுவனங்களில் என்ன நிலைமை? பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள் இது போன்ற உருப்படியான காரியங்கள் எதையாவது தானாக முன்வந்து செய்திருக்கிறார்களா?"

உடல் ஊனமுற்றோருக்கு இட ஒதுக்கீடு மிக அவசியம். சந்தடி சாக்கில் பிற்படுத்தப்பட்டோரையெல்லாம் இதில் ஏன் இழுக்க வேண்டும்?

லேஸர் சாஃப்ட் செய்வது ஒரு வேள்வியேயாகும். போற்றத் தக்கது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வினையூக்கி said...

அனானி, கூறி இருப்பது போல் பெரிய நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமுதாய நலனுக்கு பாடுபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இங்கு பணம் கொடுப்பதோடு மட்டும் காரியம் நின்று விடக்கூடாது. மீன் குழம்பு சாப்பாடு போடுவதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்கலாம். ஐ.பி.எம் நிறுவனம் சில வேலைகளை எல்லா நிலைகளிலும் உடற் ஊணமுற்றவர்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளது. வேலை வாய்ப்பு இணையதளத்தளங்களில் நேரிடையாகவே அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். ஐ.பி.எம். உடற் ஊணமுற்றவர்களுக்காக தனி வேலைவாய்ப்பு கொள்கையும் வைத்துள்ளது.

Muthu said...

நன்றி டோண்டு,

நன்றாக நான் எழுதியுள்ள வாக்கியத்தை மீண்டும் படிக்கவும்.

சந்திக்கு இழுத்து சீரழிக்க நினைக்கவில்லை நான். மனசாட்சியை தட்டி எழுப்பவே விழைகிறென்.

Muthu said...

நன்றி முத்துகுமரன்

Muthu said...

நன்றி குழலி,

இதை போன்ற முதலாளிகள் தான் வழிகாட்டிகளாகவும் ஐகான்களாவும் வேண்டும்...

Muthu said...

//மீன் குழம்பு சாப்பாடு போடுவதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்கலாம். //

இதுதான் அடிப்படை..நன்றி வினையூக்கி...

வினையூக்கி said...

ஐரோப்பிய யூனியனில், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ஊணமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை சமுதாய நலனுக்கு செலவிடப் பட்டதாக கணக்குக் காட்டப் பட வேண்டும். பெரும்பாலான கம்பெனிகள் இரண்டாவதையே தேர்ந்தெடுக்கின்றன. இந்தியாவில் டைடன் கம்பெனி உடற் ஊணமுற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றது.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லொருக்கும் பெய்யும் மழை

இவர் போன்றவரைத்தான் சொன்னார்களோ

இது போன்றவைகளை வெளிச்சத்திறக்கு கொணர பதிவு இட்டமைக்கு வாழ்த்துக்கள்

முதன் வரியில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

Anonymous said...

பிரேம்ஜிக்கும், நாராயணமூர்த்திக்கும் அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் திறமையற்று(?!) இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்குமா?

The govt. discriminates and the so called forward castes suffer.
The private sector takes people based on their qualifications and skills, not based on their caste.They dont discriminate on the basis of caste and persons like you benefit.In other words Narayanamurthy does
favor Raos or brahmins in employment in his company. Caste
is irrelevant there.Even then you all want quota in private
sector.Are you not ashamed.Cant
you all stand on your feet without
crutches like reservations and
quotas.Should you not say that I am second to none and can compete
with anyone and prove myself as
I also have a B.Tech or B.E degree.
Why do you want quotas and reservations everywhere from school
to employment,in promotions, in
selection to PG courses.

Anonymous said...

corporate social responsibility.
The private sector is trying to do something for society but dont bring reservations as a part of this.
Reservation is an example of govts
irresponsible behavior and it caters to cheap vote bank politics
and promotes casteism.You cannot abolish or reform the caste system as long as reservations for OBCs
exists.

Priya said...

Thanks for the info' tamil. Hats off to him and his works.

dondu(#11168674346665545885) said...

"நன்றாக நான் எழுதியுள்ள வாக்கியத்தை மீண்டும் படிக்கவும்."
படித்தால் போயிற்று.
"பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்றவுடன் துள்ளிகுதிக்கும் பல முதலாளிகள் இது போன்ற உருப்படியான காரியங்கள் எதையாவது தானாக முன்வந்து செய்திருக்கிறார்களா?"

இதில் தெரிவது உங்கள் ஆழ்மனதில் படிந்த செய்தி, அதாவது சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது. அதைத்தான் குறிப்பிட்டேன், இங்கு அது சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு

//படித்தால் போயிற்று.//

உங்கள் டச் இதுதான் அய்யா... என்னை சத்தத்தயே காணோம்.. எலக்சன் வேலை இல்லையா?

மணியன் said...

இத்தகையோராலேயே இந்தியா மிளிர்கிறது.
வளர்க அவர்தம் எண்ணிக்கை!

தருமி said...

ஒரு நல்ல விஷயத்தை, நல்ல மனிதரை வெளிச்சம்போட்டுக் காண்பித்தமைக்கு நன்றி

வினையூக்கி said...

We should have more people like Mr.Kamath.

வெளிகண்ட நாதர் said...

நல்ல சமுதாய தொலை நோக்குடன் கூடிய சேவை, வாழ்க! வளர்க அந்நிறுவனம்!

Muthu said...

குமரன்,
நன்றி...நல்லவர்களை நாம் அங்கீகரிக்கவேண்டும்.

Muthu said...

அனானி,
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியது எல்லாம் இங்கே ரிலவண்ட்டாக எனக்கு தோன்றவில்லை.நான் கூறியதிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.இடஒதுக்கீடுப்பற்றி என்னுடைய ஒரு பதிவு மிகவும் விளக்கமாக,தீர்வுகளுடன் எழுதப்பட்டுள்ளது.அங்கு எழுதவும்.

Muthu said...

பிரியா,
மிகவும் நன்றி.பிரபலமாகாத நல்லவர்களைப்பற்றி எழுதுவது நம் கடமையாகிறது.

Muthu said...

டோண்டு,
ஒரே வாக்கியத்தை நீங்கள் புரிந்துள்ளது வேறு.நான் புரிந்துள்ளது வேறு.நான் இன்சிஸ்ட் செய்தது ஒரு ஒப்பீடு.

Muthu said...

அன்பு மணியன்,
நன்றி சார்....

Muthu said...

அன்பு பாரதி,
வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி.

Muthu said...

அன்பு தருமி,
இது நம்முடைய கடமை.

Muthu said...

அன்பு எண்ணம்எனது,
உங்களுடைய கருத்து பதிவுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது போல் தெரிகிறதே...

Muthu said...

நன்றி வெளிகண்ட நாரதரே,

Pot"tea" kadai said...

அவசியமான பதிவு.நன்றி!
இங்கேயும் "டோண்டு" வந்து குத்தம் கண்டு பிடிக்கறதுலேயே குறியா இருக்கார்.அவருக்கு பதிவின் புரிதலில் குறை என்றே தோன்றுகிறது.

இங்கேயாவது 50வது இடம் கிடைக்குமா :-(

Pot"tea" kadai said...

50க்கு வாழ்த்துக்கள்...

Pot"tea" kadai said...

வேலையை விட்டு வெட்டியாக 50வது பின்னூட்டத்தை இட்ட எனக்கு நானே செல்ஃப் "சொம்பு"

100க்கு வாழ்த்துக்கள்.

Maraboor J Chandrasekaran said...

நல்ல பதிவு. மற்ற சில பின்னூட்டங்கள் தேவையில்லாமல் ரிசர்வேஷனைப் பற்றி பேசுகின்றன. தமிழினி எழுத முற்பட்டது, ஒரு நல்ல கம்பெனி முதலாளி அவரின் துணிந்த செயல். அவ்வளவே!

Muthu said...

நன்றி பொட்டீக்கடை,

டோண்டு அவர் கடமையை செய்யறார் பலனை எதிர்பாராமல்..அவ்வளவுதான்:)

Muthu said...

மரபூராரே,

நன்றிங்க..

you have taken this in the right spirit

குமரன் (Kumaran) said...

பதிவைப் படித்தேன் முத்து. முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. இனிமேல் தான் பின்னூட்டங்களைப் படிக்க வேண்டும். நிறைய தெரிந்து கொள்ளலாம் (?) என்று நினைக்கிறேன். :-)

dondu(#11168674346665545885) said...

"இங்கேயும் "டோண்டு" வந்து குத்தம் கண்டு பிடிக்கறதுலேயே குறியா இருக்கார்.அவருக்கு பதிவின் புரிதலில் குறை என்றே தோன்றுகிறது.

இங்கேயாவது 50வது இடம் கிடைக்குமா :-(

Thursday, May 04, 2006 7:47:31 AM
Pot"tea" kadai said...
50க்கு வாழ்த்துக்கள்...

Thursday, May 04, 2006 8:40:29 AM
Pot"tea" kadai said...
வேலையை விட்டு வெட்டியாக 50வது பின்னூட்டத்தை இட்ட எனக்கு நானே செல்ஃப் "சொம்பு"

அது சரி அவரவருக்கு அவரவர் குறி. டோண்டுவுக்கு தன் அருமை நண்பர் பதிவில் திசைதிருப்பல் ஏதும் நேர்ந்து விடக்கூடாதே என்பதில் குறி. பொட்'டீ'க் கடைக்கோ ஐம்பதிலும் நூறிலும்தான் கண்.

கண் என்றதும் பட்டினத்தார் பாடல் ஒன்று ஞாபகம் வந்து விட்டது. "பிறந்த இடத்தை நாடுதே மனம், கறந்த இடத்தைத் தேடுதே கண்"

இது என்ன திசைதிருப்பல் என்று யாராவது கூறுவதற்கு முன், "இது ஒரு ஹைப்பர் லிங்க்" என்று கூறி விட்டு, விடுகிறேன் ஜூட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்