Tuesday, July 27, 2010

உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

நண்பர் ஒருவரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் தொடர்ந்து இந்த கட்டுரையை படித்தேன். http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar . அதுதான் இந்த பதிவின் தலைப்பு.

அரைப்பக்கம் கூட படிக்க முடியாத (தராசு, தமிழக அரசியல் என்றெல்லாம் உப்புமா பத்திரிக்கைக்களை போன்ற) நக்கீரனை விட கேவலமான 'அளகில்' எழுதப்பட்ட இந்த கட்டுரைதான் இன்று தமிழின உணர்வாளர்களின் சிந்தனையை வளர்க்கிறது. காலக்கொடுமை.

இந்த கட்டுரை எழுதியவர்கள் மாதிரி ஒரு நூறு ஆட்கள் இருந்தால் போதும். மிச்சம் மீதி இருக்கிற தமிழினமும் அழிந்துவிடும்.

Sunday, May 30, 2010

பொதுக்குழு கூட்டல.....ஓட்டெடுப்பு நடத்தல.....

வரலாற்று கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் :)

தமிழர் வாழ்வு காக்கவே அவதரித்த டாக்குடர் அய்யா கடைசியாக கருணாநிதி காலில் விழுந்துவிட்டார். இது முதலும் அல்ல. கடைசியும் அல்ல. கலைஞர் அண்ணன் உருவிய கோவணத்தை திரும்ப தந்துவி்ட்டாராம். கோவணத்தை மீட்ட மாவீரன் வாழ்க.


நமக்கு தோணிய சில சந்தேகங்களும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில நிகழ்வுகளும்.....


கூட்டணி திரும்பவும் வைக்க எந்த பொதுக்குழு கூடியது? ஓட்டெடுப்பு நடந்ததா?

காடுவெட்டி குரு இவ்வளவு அவமானத்திற்கு அப்புறமும் எப்படி அரசியல் செய்வார்? சரி சரி ராமதாசே அரசியல் செய்யும்போது அவருக்கு என்னங்கறீங்களா? விடுங்க..

எல்லாவற்றிற்கும் மேலாக ராஜ்யசபா சீட் 2011க்கு அப்புறம் என்று நேற்று செய்தி கேட்டதும் எனக்கு சிரித்து சிரித்து விக்கலே வந்துவிட்டது. இது உண்மையா? இல்ல கலைஞர் நக்கல் அடிக்கிறாரா என்றே தெரியவில்லை. இதைவிட ஒரு கட்சிக்கு பெரிய அவமானம் எதுவுமே இல்லை. ஆனா டாக்குடர் இதுக்கெல்லாம் அசைய மாட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் திரும்பவும் அன்புச்சகோதரியுடம் பேச்சு வார்த்தை நடக்கும்.எப்படி பா.ம.க அடிமட்ட தொண்டர்கள் திமுகவை வெறுக்கிறார்கள் என்று அடிபொடிக்ள ஆதாரக்கட்டுரை எழுதுவார்கள்.என்ன கொடுமை சார் இது?

நாளைக்கு அய்யாவின் அறிக்கை மற்றும் ( அனேகமாக அந்த 2011 சீட் விவகாரத்தை டாக்குடர் அய்யா ரசிக்க மாட்டார்.என்ன பண்றது அய்யா? நம்ம _______ அப்படி?) பதிலை பார்த்துவிட்டு மீதி படத்தை ஓட்டலாம்.

Tuesday, March 30, 2010

என்ன பண்ணி தொலைக்கறது?

இன்னுமொரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த தொகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிட போகிறார்கள் என்று பார்ப்போம்.

திமுக ஆயிரம்,
அதிமுக ஐநூறு,
பா.ம.க முன்னூறு
ஆகமொத்தம் ஆயிரத்து எண்ணூறு.

பா.ம.க ஏதோ மூக்குத்தி, தோடு என்று திட்டம் போட்டதாகவும் அதில் யாரோ மடப்பயக மாம்பழம் சின்னத்தை பதித்துவிட்டதால் அது செயல்படுத்தப்படவில்லை என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது.அதை விட்டுவிடுவோம். விஜயகாந்த் கட்சிகாரர்களும் டெபாசிட் வாங்கும் நோக்கத்தோடு ஓரளவு பணத்தை செலவு செய்ததாகவும் அதனால்தான் கடந்த முறை வாங்கிய அளவு ஓட்டு மீண்டும் வாங்க முடிந்தது எனவும் தகவல்கள் வருகின்றன.

பிரியாணி(?) எல்லாம் எல்லா தொண்டர்களுக்கும் கிடைக்கறதுதான். அது வயித்தோட மறுநாள் காலைல வரைக்கும்தான்.மத்தபடி மேற்கண்ட கணக்குப்படி வரும் ஆயிரத்து எண்ணூறு (1800) எல்லாருக்கும் கிடைச்சிருக்காது. ஆக ஆவரேஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ரொம்ப கம்மி.அடுத்த தேர்தலில் தலைக்கு ஐயாயிரமாவது இல்லாமல் எவனும் ஓட்டு போடவே போகக்கூடாது என்று மக்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்.

வழக்கம் போல் அதிமுக ஆரம்பித்த ஒரு அரைகுறை வழக்கம் திமுகவினரால் முழுமை படுத்தப்பட்டு உள்ளது. விவரம் தெரியாதவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிமுக தான் ஆரம்பித்தது என்பதை நி்னைவு படுத்தி கொள்வது நலம். இல்லாவிடில் சில லூசு பசங்க வேற மாதிரி சொல்லிடுவாங்க. பலமுறை இதை செஞ்சவங்கதான் நம்மாளுங்க. தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).

டாக்டர் அய்யா இரண்டாம் இடம கிடைத்ததை தைலாபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று மாதமாக குடும்பம், மாமன், மச்சான் எல்லாருடனும் சென்று சாதிக்கார பசங்க 70 சதவீதம் இருக்கற ஒரே தொகுதியில் வேலை செய்தால்தான் இவர் நாற்பது ஆயிரம் ஓட்டு வாங்குவார். கடந்த முறை தனியாக நின்று வாங்கியதை விட இது எததனை ஓட்டு அதிகம்?

வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டால் என்ன ஆவார்? அதிகபட்சம் பத்து இடங்களில் இரண்டாவது இடம் கிடைக்கலாம். தனியாக போட்டியிட்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் எத்தனை இடங்களில் இவர் வாங்கினார் என்று பார்க்கவேண்டும்.....அது எல்லாம் அந்த காலம் என்பதையும் கணக்கில் வைத்துத்தான் இதை பார்க்க வேண்டும். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சொருகிய ஆப்பு வேறு நினைவுக்கு வருகிறது.

கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்தாஸ் நாளைக்கே காங்கிரசு கூட்டணிக்கு போகமாட்டார்னு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு கூறமுடியாது.

நேரம் கிடைச்சா இந்த பணம் கொடுக்கற விவகாரம் எங்க வந்து முடியும்னு எனக்கு தோண்றதை எழுதலாம்னு இருக்கேன்.