இளம் தலைவர்களுக்கும் காலதேவனுக்கு அப்படி என்னதான் உறவோ? ராஜீவ்காந்தி,ராஜேஷ்பைலட்,மாதவராவ்சிந்தியா,ரங்கா (எங்கள் ஊரை சேர்ந்த ரங்கராஜன் குமரமங்கலம்), பாலயோகி இந்த வரிசையில் கடைசியாக இப்போது பிரமோத் மகாஜன்.பனிரென்டு நாட்களாக உயிருக்கு போராடிவந்த பிரமோத் மகாஜன் நேற்று மாலை மரணமடைந்தார்.
நான் மும்பயில் வேலை பார்த்தப்போது எங்கள் அலுவலக அடுக்குமாடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் போல் நடந்து வந்துதான் சர்ச்கேட் மின்வண்டி நிலையத்திற்கு வரவேண்டும்.நேரங்காலம் இல்லாத வேலை என்பதால் அடிக்கடி சர்ச் கேட் செல்லவேண்டிவரும்.அந்த வழியில்தான் பி.ஜே.பி கட்சி ஆபிஸ்.சில முறை பிரமோத் மகாஜனை அங்கு பார்த்துள்ளேன்.அதே அழகான சிரிப்பு.அவருக்கே அழகான அந்த உடை.இன்னும் கண்ணுக்குள் நிற்கிறார் அந்த இளம் தலைவர்.
சிவானி பட்நாகர் கொலை கேஸ், ரிலையன்ஸ் உடனான இவர் தொடர்பு (பம்பாயில் ரிலையன்ஸ் உடன் இணைத்து பேசப்படாதவர் யார்?)எலலாம் சர்ச்சைதான்.ஆனால் லெவல் ஹெட்டட் தலைவர்.சிரிப்பு மாறாதவர். புரட்சிதலைவியிடம் பேசுவதுதர்ன உலகிலேயே கடினம் என்று ஜோக் அடித்தவர். வாஜ்பாய்,அத்வானி இருவருக்கும் நல்லபிள்ளையாக இருந்தார். அவ்வளவு தீவிரமான ஹிந்துத்வாவாதி என்று சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
இங்கு கட்சி முக்கியமல்ல.கொள்கை முக்கியமல்ல.அரசியல்வாதியாக அவர்கள் தவறான முடிவுகளை சில நேரம் எடுத்திருக்கலாம். இதை யாரும் தவிர்க்கமுடியாது.தவறுகள் செய்வதும் அதிலிருந்து கற்றுக்கொள்வதும்தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.ராஜீவ்காந்தி கூட இன்னும் அனுபவம் கூடியிருந்தால் இலங்கை பிரச்சினையை நன்றாகவே அணுகியிருக்கலாம்.
இளம் தலைவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக செல்வது மனதை வலிக்க செய்வதாக உள்ளது.இவர்கள் எல்லாரும் சவாடல் வகை அரசியல்வாதிகள் இல்லை என்பதும் இன்னொரு ஒற்றுமை.
மிகவும் வருந்துகிறேன்.
பிரமோத்துடன் நேர் அனுபவம் உள்ள பாலபாரதியின் அஞ்சலி
http://balabharathi.blogspot.com/2006/05/blog-post.html
Thursday, May 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
தெரிந்தோ தெரியாமலோ விழுந்த அந்தத் தட்டெழுத்துப்பிழை கூட பதிவுக்கு இன்னும் மெருகு சேர்த்திருக்கிறது!
'சவாடல்', 'சவடால்'
நல்ல மனிதரின் மறைவுக்கு என் அஞ்சலி!
பிரமோத் மகராஜன் இழப்பில் தவிக்கின்ற உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பி ஜே பி ஒரு தலைவனையும் இந்தியா ஒரு "பொடென்ஷியல் ப்ரைம் மினிஸ்டர்" கேன்டிடேட்டையும் இழந்து விட்டது.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
அஞ்சலிகள் முத்து.
(கை துறுதுறுக்கிறது... பதிவைப் படித்தவுடன் எண்ணியதை சொல்லிடறேன்; உங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை (என்னையும் சேர்த்துதான் என்னும் டிஸ்க்ளெய்மருடன்)
இறந்தவுடன் ஒருவரின் நல்ல செயல்களை மட்டும் நினைவு கூர்வதும்; கொஞ்ச நாள் கழிந்த பின் அவரின் அல்லாத செயல்களைப் பதிவதும் வலைஞருக்கு அழகு?)
56 இளம்வயதா?
bostan bala,
நீங்கள் கூறியுள்ள கருத்தும் சிந்திக்கத்தக்கதுதான்.
தீர்ப்பு எதுவும் நான் சொல்ல வில்லையே.. இத்தனையையும் மீறி அவரின் முக்கியத்துவம் என்பதாக த்தான் கூறினேன்...
அனானி,
அரசியல்வாதிக்கு 56 இளம் வயதுதான். 80 வயது ஆட்களை எல்லாம் நானே என் கையால ஆதரிச்சு எழுதும்போது....
கீழ்தட்டு மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரை பா.ஜ.கட்சி இழந்து விட்டது.
வேற்றுமை பாராமல் இளம் தலைவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.
"bostan bala" கூறுவது போல்.. அப்படி சொல்வதில் தவறு இருப்பதாக தோன்ற வில்லை.
ஆனால்... அதற்கு உகந்த தருணம் இதுவல்ல.. மேலும் இறந்து விட்டதாலேயே முசோலினியைக்கூட நல்வர் என்று சொல்லமுடியாது தானே?
மனம் வருந்துகிறது..ஆழ்ந்த இரங்கல்!
பாலா,
பாஸ்டன் கூறியது சரிதான். முசோலினியை வைத்து நீங்கள் கூறியதும் சரிதான்.
ஜெயகாந்தன் அளவிற்கு கேவலமாக(அறிஞர் அண்ணாவை) பேசுவது தவறு.
சர்ச்சைகள் இருக்கின்றன.அதையும் மீறி பிரமோத் நல்ல தலைவர் என்பது என் எண்ணம்.இதை எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள்.
நல்ல பதிவு. இளம் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவர் போவது பற்றி ஒரு சதித்திட்டத் தியரி மக்களுள் பேசப்படுகிறது. பலருக்குத் தெரிந்திருக்கும். சொல்லத்துடிக்குது மனசு! ஆனால் வலைப்பதிவுகளில் அரசியல் பேசக் கூடாது எனும் என் கொள்கைக்கு வேட்டு என்பதால் பேசவில்லை.
//இறந்தவுடன் ஒருவரின் நல்ல செயல்களை மட்டும் நினைவு கூர்வதும்; கொஞ்ச நாள் கழிந்த பின் அவரின் அல்லாத செயல்களைப் பதிவதும் வலைஞருக்கு அழகு?//
இதை நீங்கள் ஜெயகாந்தனிடம்தான் கேட்கவேண்டும்? ;-)
நல்ல மனிதரின் மறைவுக்கு எனது அஞ்சலி.
அரசியல்வாதி என்றாலே controversy என்னும் சூழலில் நல்லவர்; வல்லவர். குறையில்லாத மனிதரும் உண்டோ ?
ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகள் நமது இன்றைய பார்வை, காலம், இடம், பொருள், ஏவல் எல்லாம் பொறுத்து மாறிக் கொண்டுதான் இருக்கும். காந்தியை கடவுளாக கருதிய காலமும் உண்டு; நான் ஏன் காந்தியை சுட்டேன் என படம் எடுக்கும் காலமும் உண்டு :)
சிலரைப்பார்த்தாலே பிடிக்காமல் போய்விடும்; சிலரைப் பார்த்தால்பிடித்து விடும். எனக்கு பிரமோத் இரண்டாம் வகை.
உங்கள் அனைவரின் இரங்கல்களோடு நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன்.
இறந்தவுடன் மட்டுமே ஒருவரைப்பற்றி நல்லவிதமாக எழுதுவது என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் போய்ச்சேர்ந்த மனிதரைப்பற்றி கெட்டது சொல்லி நமக்கு என்ன கிடைக்கப்போகிறது எனக்கேட்டால் அட்லீஸ்ட் ஒரு பொய்யான பிம்மத்தை ஏற்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா?
ஆனால் "ஜென்டில்மேன்" "நல்ல மனிதர்" என்ற வார்த்தைகளில் எனக்கு ஒப்புமை இல்லை! 10 வருடங்களுக்கு முன்பு என் தந்தை ஊட்டியில் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது அங்கு ஓய்வெடுக்க வந்த பிரமோத் குடி, குட்டிகளென அடித்த கூத்துக்கள் கொஞ்சமல்ல! அங்கு நடந்த அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! விபச்சாரத்தினை தடுக்க வேண்டிய நிலையிருக்கும் ஒரு அதிகாரி விபச்சாரத்திற்கு பந்தோபஸ்து அளிப்பது எப்படிப்பட்ட வேதனை! ஒரு காவல்துறை அதிகாரியாக அவருக்கு பாதுகாப்புக்கு சென்றிருந்த என் தந்தை இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து வீட்டுக்கு வந்து புலம்பியது எனக்கு தெரியும்!
பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது இவர் எந்த விதத்திலும் கூடவோ குறையவோ இல்லை! ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரது சமுதாய பணிகளை எடைபோடக்கூடாது என என்னுடன் சண்டைக்கு வரப்போகும் அன்பர்களுக்கு, உங்களுக்கான பதில் என்னிடம் இல்லை...
பிரமோத்தின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்!
தருமி சொல்வது போல் எந்தக் காரணமும் இல்லாமல், எனக்கு பிரமோத் மகாஜனைப் பிடிக்கும்..
அவர் பிழைத்து வந்து விடுவார் என்று தான் நினைத்தேன்.. பாவம்.. ஆழ்ந்த அனுதாபங்கள்.. :(
//ராஜீவ்காந்தி கூட இன்னும் அனுபவம் கூடியிருந்தால் இலங்கை பிரச்சினையை நன்றாகவே அணுகியிருக்கலாம்//
ஆமென், ஆமென்!
//பி ஜே பி ஒரு தலைவனையும் இந்தியா ஒரு "பொடென்ஷியல் ப்ரைம் மினிஸ்டர்" கேன்டிடேட்டையும் இழந்து விட்டது.
//
ஆமென், ஆமென்! தாவூத் தொடர்பை நானும் மறந்துட்டேன்!
:-)
கொள்கையில் மாறுபட்டிருப்பினும், ஒரு சக மானிடன் மறைவில் என் ஆழ்ந்த துக்கங்கள். சகோதர பிணக்கில் ஒரு அரசியல் தலைவரை இழந்தோம்.
Post a Comment