முதலில் இந்த கைகால் நடுக்கத்தை பற்றிய தகவலை கூறிவிடுகிறேன். வரும் ஞாயிறு ஒரு தேர்வு இருப்பதால் வலைப்பதிவை விட்டு சற்று விலகி இருக்கலாம் என்று நினைத்தால் முடியவில்லை. கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்துள்ள பழைய கேள்வித்தாள்களை எடுக்க வந்தால் தமிழ்மணம் ஐகான் என்னை பார்த்து கெக்கலி கொட்டி சிரிக்கிறது.
சரி.ச்சும்மா பார்ப்போம். கமெண்ட்ஸ் மட்டும் மாடரேட் செய்வோம்.பதிவு எதுவும் வேண்டாம் என்று பார்த்தால் கைகால் எல்லாம் நடுங்குகிறது. எப்படியும் என் சப்த நாடியையும் ஒடுக்கும் மகாசக்தி சம்மர் கேம்ப் முடிந்து திங்கள் மங்களூர் வந்து சேருவதால் இந்த வியாதியில் இருந்து மீளுவேன் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நடுவில் நேற்று மாலை போட்ட பதிவை பிளாக்கர் தின்றுவிட்டது.
*********************
மேட்டுக்குடி மாணவர்கள் என்.டி.டி.வி நியூஸ் டுடே போன்ற செய்தி சானல்கள் உதவியுடன் போராடுகிறார்கள். எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள், டாக்டர்கள் என்று இவர்கள் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. ஆனால் புஜ்ஜீக்குட்டி அர்ஜுன்சிங் மிகவும் தெளிவாக இருக்கிறார்.கண்டிப்பாக பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு வந்தே தீரும் என்றுகூறிவிட்டார். இடங்களை அதிகப்படுத்தி இந்த விஷயத்திற்கு மத்திய அரசு தீர்வு காணும் என்று தெரிகிறது.
இந்த இடங்களை அதிகப்படுத்தும் திட்டத்திற்கும் மேட்டுக்குடியினர் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இதுதான் இதற்கு லாஜிக்கல் முடிவு.இதை உணர்ந்து இவர்கள் இந்த தோற்கும் போராட்டத்தை நிறுத்துவது நல்லது.புனித பிம்பங்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தால் இந்த பிரச்சினை கடைசியில் தலித் போராளி காஞ்சி இலையா கூறியதுபோல் வீதியில்தான் தீர்க்கப்படும்.
இப்போது இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. எப்படியும் அரசாங்கம் உறுதியாக இருந்து இதை முடித்துவைக்கும் என்ற உறுதியால் இந்த கும்பலின் வேகம் வெளிப்படவில்லை.
பல மருத்துவ கல்லூரிகளில் வெறும் பணத்தின் அடிப்படையில் மட்டுமே சீட் கொடுக்கப்படுவதாகவும் அங்கு மெரிட் என்ன ஆகின்றது, ஏன் இந்த மாணவர்கள் அறசீற்றத்தை அங்கு காட்டவில்லை என்றார் ஒரு பம்பாய் மாணவர்.இவர் கிராமப்புறத்தில் இருந்து இடஒதுக்கீட்டினால் மருத்துவர் படிப்பை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீ்ட்டினால் படித்து ஆபரேசன் செய்து பேஷண்ட் செத்த சம்பவம் எதுவும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்னும் சொல்லப் போனால் அடித்தட்டு மக்களின் நிலை தெரிந்து உதவும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்து மருத்துவர்களை நிறைய நான் பார்த்துள்ளேன்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஓப்பன் காம்படிசனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மெரிட் பிரச்சினை இல்லை ஒரு முன்னேறிய சமூக மாணவனின் எதிர்காலம் பாழாகிறது என்றால் இடங்களை அதிகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே?
தமிழகத்தில் டாக்டர்கள் சங்கம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.இந்தியா முழுவதும் புனித பிம்பங்கள் அதிகரித்துள்ள வேளையில் தமிழக மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் இதை ஆதரிப்பது சந்தோஷமான விஷயம்.
இதை வங்கிகளில் மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் வேலை பார்க்கும் பிற்படுத்தப்பட்டவர்களும் (மண்டல் கமிஷனுக்கு பிறகு நல்ல முன்னேற்றம்) தாழ்த்தப்பட்டவர்களும் வேலை பார்க்கும் பின்னணி யிலேயே நான் புரிந்துக் கொள்கிறேன்.குறிப்பாக இவர்களின் மக்களிடம் கலந்து பழகும் திறனும் முன்னேறிய சாதியினரைவிட கூடுதலாகவே இருக்கிறது. வங்கிப்பணிக்கு இதுவும் தைரியமும் மிக அவசியம். கூட்டல் கழித்தல் கணக்குகள் இப்போது கம்ப்யூட்டரால் சரியாகவும் வேகமாகவும் செய்யப்படுகிறது.
அர்ஜுன்சிங் காங்கிரசுக்கு மறுபிறவி அளிக்கும் நோக்கத்தில் இதை செய்தாலும் அவரின் அணுகுமுறை சூப்பர்.எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் மிரளவில்லை. மீடியாவை வைத்து மேட்டுக்குடியினர் காட்டும் பூச்சாண்டியை அவர் புரிந்து தான் உள்ளார்.
ஏற்கனவே பாடபுத்தகங்களில் கைவைக்கிறார் என்றெல்லாம் பல இந்துத்வா வாதிகள் இவரை குற்றம் சாட்டினர்.அவர் அசரவில்லை. காந்தி நல்லவர் என்று ஒரு கையாலும் காந்தியை கொன்றது பகவத் கீதையின்படி நியாயம்தான் என்று இன்னொரு கையாலும் எழுதும் புனிதபிம்பங்களுக்கு அர்ஜுன்சிங் பயப்பட தேவையில்லைதான்.
***********************
அர்ச்சகர் சமாச்சாரத்தில் இட்லிவடை முதற்கொண்டு ரவி சீனிவாஸ் வரை அனைவரும் தம்மை வெளிப்படுத்திகொண்டுவிட்டனர் என்பதை பார்க்க முடிந்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது சமத்துவத்திற்கான ஒரு அடையாளம் தான் என்பதை உணர முடியாமல் பலரும் ஆவேசமாக சாமியாடுவது நகைப்பிற்குரியது."நடுநிலை"யாளர்களும் சமத்துவபுர ஜென்டில்மேன்களும் இதை கவனிக்க வேண்டும்.
ஒரு நண்பர் அர்ச்சகர் ஆவதற்கு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும் என்றார்.ஒரு பெரிய கோவிலில் இருக்கும் சில "அறிவாளிகளை" ரேண்டமாக எடுத்து சோதனை செய்துவிடலாமா?
அறிவாளித்தனம் என்பது சில சம்ஸ்கிருத சுலோகங்களை மனப்பாடமாக ஒப்பிப்பதுதான் என்றால் இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்க முடியாது.இதை நான் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
கருணாநிதி போடபோகும் முதல் கையெழுத்து எது என்ற ரீதியில் கிண்டல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவர் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.முக்கியமில்லாததாகத்தான் இருக்கும்.வாழும் வரலாறு அதன் கடமையை சரியாகத்தான் செய்கிறது.
ஏற்கனவே இந்த ஆணையை உச்சநீதிமன்றம்வரை சென்று எதிர்த்த சின்ன புத்திக்காரர்களைப்பற்றி யாராவது எழுதலாமே?
(திராவிட ராஸ்கல்களுக்கு தேவை இந்த நாட்டில் இன்னும் இருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் மறுக்கிறீர்களா?)
Tuesday, May 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது சமத்துவத்திற்கான ஒரு அடையாளம் தான் //
இந்த ஆணையின் பின் உள்ள வரலாறும், அரசியலும் தெரியாது எனக்கு.
ஆனால் இது தேவையற்ற வேலை என்பது எனது கருத்து. அர்ர்ச்சகர் என்ற ஹோதாவில் சில ஜாதிகளில் உள்ள சில ஆசாமிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால், அதை வேறு விதமாக அணுகலாம். அதை விடுத்து, எல்லா சாதிகளும் அர்ர்ச்சகர் ஆவது என்று ஆணை பிறப்பிப்பது, ஏதோ அர்ச்சகர் ஆவதற்காக பிற சாதியினர் துடித்துக் கொண்டிருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.
பீடம் என்ற கற்பிதங்களை உடைக்க வேண்டுமே தவிர, அதற்கு பலியாகக் கூடாது.
இருப்பதிலேயே வருமானம் குறைவான வேலை. நடைமுறைக்கு ஒவ்வாத வேலை. பரம்பரை பரம்பரையாக இதை செய்து வரும் குடும்பங்களே அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பறந்து கொண்டிருக்க, இது யாருக்காக போடப்பட்ட ஆணை. தவிரவும் இது ஏற்கனவே ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் விஷயம்.
ஒன்று செய்திருக்கலாம். தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். வடமொழி/தேவபாஷை, தமிழ்நாட்டுக் கொயில்களில் உள்ளே நுழையக்கூடாது. ஆண்டவனை அர்ச்சிக்கும் மந்திரங்கள், காசு கொடுத்து புஜை செய்பவனுக்கும் புரிய வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தால் அது உருப்படியான வேலை.
இன உணர்வுடன், விவேகமும் உள்ள தி.ரா அதைத்தான் செய்வான்.dont get carried away by what the crowd feels Muthu. sometimes sensible thinking can be different from what the crowd feels.
Thanks.
//அறிவாளித்தனம் என்பது சில சம்ஸ்கிருத சுலோகங்களை மனப்பாடமாக ஒப்பிப்பதுதான் என்றால் இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்க முடியாது.//
அளவாகச் சொன்னாலும் அழகாக சொன்னீர்கள் :-)
//அவர் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்//
அதிர்ச்சி தொடரட்டும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை மனபூர்வமாக வரவேற்கிறேன்.
அதே சமயம் கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை சொல்வதை தடை செய்தல் கூடாது.தமிழும்,சமஸ்கிருதமும் இறைவனை வழிபட பயன்படுத்த வேண்டும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதையும் இதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
//(திராவிட ராஸ்கல்களுக்கு தேவை இந்த நாட்டில் இன்னும் இருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் மறுக்கிறீர்களா?) //
மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை!!
மிகவும் தேவையான நல்ல பதிவு!!
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
appu super appu.
//ஆனால் புஜ்ஜீக்குட்டி அர்ஜுன்சிங் மிகவும் தெளிவாக இருக்கிறார்.கண்டிப்பாக பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு வந்தே தீரும் என்றுகூறிவிட்டார். இடங்களை அதிகப்படுத்தி இந்த விஷயத்திற்கு மத்திய அரசு தீர்வு காணும் என்று தெரிகிறது.//
Oh yes. 534 seata 1000 seats aaakitu, adhullayum reservation kondu varuvara unga bujjikuti A singh. Enna avara electionla 3 times manna kavvanavaru dhana.
//இடஒதுக்கீ்ட்டினால் படித்து ஆபரேசன் செய்து பேஷண்ட் செத்த சம்பவம் எதுவும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.//
But politiciancukku oru chinna vayathu vali vandhalum en periya hospitalukko illa foreignukko treatment edukka odaranga?
//தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஓப்பன் காம்படிசனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை//
ammam. 294/300 == 284/300 adhana unga kanakku.
//அர்ஜுன்சிங் காங்கிரசுக்கு மறுபிறவி அளிக்கும் நோக்கத்தில் இதை செய்தாலும் அவரின் அணுகுமுறை சூப்பர்.//
idhu dhan unmai. All for pichai votes.
//வாழும் வரலாறு அதன் கடமையை சரியாகத்தான் செய்கிறது.//
Romba comedy sense pa ungalukku. valarndha porulaadharam adhan velayaai seigiradhunnu ezudhuppa. Manja payyoda vandhavaru innaiku 1000 of croresukku sondha kaarar. Manjala marakka mudiyama dhan innum tholula pottirukkaru.
வணக்கம் தமிழினி!
உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
//அறிவாளித்தனம் என்பது சில சம்ஸ்கிருத சுலோகங்களை மனப்பாடமாக ஒப்பிப்பதுதான் என்றால் இதைவிட பெரிய அயோக்கியத்தனம் இருக்க முடியாது//
பிராமணன் என்பவர் உஞ்ச விருத்தி செய்து தான் உணவு ஈட்ட வேண்டும் என்பதை தங்கள் வசதிக்கு மறந்து விட்டு ஜாவாவில் பயணம் செய்கிறார்களே அவர்களுக்கு புரியுமா இதெல்லாம்.ஆதி சங்கரர் உஞ்ச விருத்தி செய்து உணவு உண்டார்,அப்படி யாசகம் கேட்கப்போன பொழுது கனக தார தோத்திரம் சொல்லி தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.இபோது மனப்பாடமாக சுலோகம் சொல்லும் அறிவாளிகள் சொன்னால் தங்க மழை என்ன வெறும் மழை கூட வராது!
//ஒன்று செய்திருக்கலாம். தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். வடமொழி/தேவபாஷை, தமிழ்நாட்டுக் கொயில்களில் உள்ளே நுழையக்கூடாது. ஆண்டவனை அர்ச்சிக்கும் மந்திரங்கள், காசு கொடுத்து புஜை செய்பவனுக்கும் புரிய வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தால் //
நமது மாண்புமிகு நீதிமன்றங்கள் தடை போட்டிருக்கும். அவ்வளவுதான் நடக்கும்...
தாய்மொழிக் கல்வி விசயத்தில் நடந்த கூத்து தெரியதா??
"தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஓப்பன் காம்படிசனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை"
If so, why can't we have point system instead of percentage reservation(quota).In addition to the mark whatever the students score , credit extra 5 or 10 marks and let them come through merit system.I don't see any problem with this.Competetion will increase and will see more good people in different fields...
I hate to write this , still lets do....How long are we going to talk about caste system , get education thru reservation system, get job thru reservation, get promotion thru reservation,
Try not to scare away other community people( whom you hate) from INDIA.
Try not to divide the country or state on this basis, you will go no where.
Please don't preach a new defnition for DEMOCRACY.
If you are really interested in developing the life of the people, Make sure you mentor your pals and buddies, if not create atleast show them opportunities.
we don't have power to study , and your IDOL is signing (as you said)
some useless paper which is not going to make anybodies life better.
Muthu please grow up !!
அனைவருக்கும் எனக்கு தெரிந்த பதிலை கூறுவேன்.திங்கள் கிழமை.அதுவரை மற்றவர்கள் விவாதம் செய்யலாம்.
//அதே சமயம் கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை சொல்வதை தடை செய்தல் டாது.தமிழும்,சமஸ்கிருதமும் இறைவனை வழிபட பயன்படுத்த வேண்டும்//
இந்த பெருந்தன்மை ஜகத்குரு(?!!)வுக்கு இல்லையே. "தமிழில் மந்திரம் சொன்னால் தீட்டு" என்று சொல்பவர்களிடம் செல்வன் மாதிரி என்னால் பொறுமையாக பேச முடியாது. தமிழ் என்கிற அடையாளத்தை மறுப்பவர்களிடம், அவர்கள் தரும் வடமொழி என்ற ப்ரஸாதம் வெறும் மண் என்கிறேன். அவ்வளவே.
மூக்கு,
சுருக்கமாக சொல்கிறென்
அர்ச்சகர் என்ற உரிமையில் கர்ப்பகிரகத்தில் ஒரு சூத்திரன் நுழைந்தாலே போதுமய்யா..இதன் உள்ளர்த்தம் உமக்கு புரிய வேண்டும்
"தமிழில் மந்திரம் சொன்னால் தீட்டு" என்று சொல்பவர்களிடம் செல்வன் மாதிரி என்னால் பொறுமையாக பேச முடியாது. தமிழ் என்கிற அடையாளத்தை மறுப்பவர்களிடம், அவர்கள் தரும் வடமொழி என்ற ப்ரஸாதம் வெறும் மண் என்கிறேன். அவ்வளவே.////
வடமொழி தமிழை போலவே செம்மொழி தான்.இந்து மதத்தோடு நெருங்கிய தொடர்புள்ள மொழி தான்.இவ்விரு மொழிகளையும் தமிழக கோயில்களில் பயன்படுத்துவதில் எந்த தப்பும் இல்லை.தற்போது நடைபெறும் மொழி அரசியலுக்கு திருக்கோயில் வழிபாடு பலியாக்ககூடாது என்பது தான் என் விருப்பம்.
வடநாட்டு கோயில்களில் யார் வேண்டுமானாலும் கர்ப்பகிரகத்தில் நுழைந்து பூஜை செய்ய முடியும்.தமிழ்நாட்டிலும் அப்படி செய்தால் பிரச்சனை இல்லை.
//பல மருத்துவ கல்லூரிகளில் வெறும் பணத்தின் அடிப்படையில் மட்டுமே சீட் கொடுக்கப்படுவதாகவும் அங்கு மெரிட் என்ன ஆகின்றது, ஏன் இந்த மாணவர்கள் அறசீற்றத்தை அங்கு காட்டவில்லை என்றார் ஒரு பம்பாய் மாணவர்.இவர் கிராமப்புறத்தில் இருந்து இடஒதுக்கீட்டினால் மருத்துவர் படிப்பை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.//
May be he came in Reservation.
But what he said is 100% truth. You please dont hide the correct argument by blaming an individual.
Try getting some reservation in some private colleges. At least in the form of fee waiver. are you able to fight for that?
I will call them selfish who is asking reservation in Medical colleges, IITs and IIMs. These people dont have any interest in nation's development.
Based on canste system, these idiots will even ask reservation to the god for getting health, aging and death also.
Who own these private collages that charge exorbitant fees and
have sold seats for money.Most of them are owned by OBCs and minorities.Thandarampattu Velu,
minister in MK's cabinet runs about half a dozen private institutions including two engineering colleges.Mr.Muthu
will never open his mouth
against such persons as they
are also from OBC. Has MK ever
taken any step to stop commercialise education.
Both DMK and ADMK promoted
that from LKG to deemed
university.Yet they talk
of social justice.Muthu and
his 'dravida rascals' would
prefer not to talk about
such issues but will support
200% reservation.They have
a vested interest in that.
Let them come clean and say
'yes we want OBCs to dominate
and benefit from reservations'.
"Romba comedy sense pa ungalukku. valarndha porulaadharam adhan velayaai seigiradhunnu ezudhuppa. Manja payyoda vandhavaru innaiku 1000 of croresukku sondha kaarar. Manjala marakka mudiyama dhan innum tholula pottirukkaru."
well said pal!
Our CM has special attraction towards yello color, Making people to file for bankruptcy(Manjal paper), Making all the Lorry owners to paint their veichle in yellow colour.
AAmma Velakennai veetuku pakathla ulla krishnar koiluku mattum why we need a brahmin Archakar.I don't think we need a government order to do this.......Ayya krishnar-I kumbidama car -la erra mattarun goi..Nallu kala poojaiyum Ayyavoda selavula thampa.
Muthu Annachi, Yedho unga punniyathla(Quota moolam) , engineering college ulla vandhu , ippa pass-um panniachu(Senate pota grace mark than). oru pakkam ,Velai kedaika perum pada iruku.Indha pakkam Atha Nann America poganumunu Asai paduthu.Nama Bush kitta solli GRE, TOFEL illama padikka vazhi panna kudaha.Appadiya H1B - layum reservation kondu vanthigana , Namaku pidikathavanga ellaraiyum porati eduthadalam.Enna Naan sollurathu.......
Nama Tholar Maran kitta solli , INFOSYS Narayana moorthya oru vangu vanganupa.Romba than Bigu pandrango.
Dont worry, annoy, Muthus and Ramadosses are at it.To begin with they will demand 50% quota in infosys and WIPRO.They will demand 50% quota in H1B visas,J1 visas and green cards for OBCs.
Veeramani will demand that in GMAT,TOFEL and GRE OBC candidates should be given 50% grace marks.
Ramadoss will ask 50% of 50% in
visas and green cards for vanniyars.Mr.Muthu will support each of these demands.
முத்து!
தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்ப்பாக்கவில்லை. U too muthu????
//தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஓப்பன் காம்படிசனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. //
230/300 எடுத்தவனுக்கு(பொருளாதார ரீதியில் பலமாக உள்ள தாழ்த்தபட்டவன்) மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கிறது. 294/300 எடுத்தவனுக்கு(பொருளாதார ரீதியில் பலம் இல்லாத முற்படுத்தப்பட்டவனுக்கு) இடம் கிடைக்கவில்லை. இதை சரி என கூற வருகின்றீர்க்களா????
என்னுடைய நிலைப்பாடு இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியில் தான் இருக்க வேண்டும்.
//எல்லாம் அர்ச்சகர் ஆகலாம்,//
வைணவ மற்றும் சைவ கோவிகளை தவிர மற்ற கோவில்களில் மற்ற சாதியினர் தான் அர்ச்சகர்களாக உள்ளார்கள். கவனம் செலுத்த வேண்டிய மக்கள் பிரச்சினை நிறைய உள்ளது. இது எல்லாம் தேவை இல்லாத வேலை. இவர்களுக்கு தான் மதத்தின் மேல் நம்பிக்கை இல்லையே. பின் ஏன் மதத்தில் தலையிடுகின்றார்கள்.
இவர்கள் மற்ற மதத்தில் தலையிடாமல் இந்து மதத்தின் மேல் மட்டும் தலைவிடுவது ஏன்? என்று மற்றவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் உள்ளது என்று எண்ணும்படி இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் உள்ளது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணை பற்றிய விவாதத்தில் பல நண்பர்கள்
குழப்படி கருத்துக்களை வெளியிடுவதாகத் தோன்றுகிறது.
1. திருமுறைகள், ஆகமங்கள் (என தேவைப்படுகிறவற்றில்) "முறையான" பயிற்சி பெற்றவர்கள் /
இறை உணர்வு உள்ளவர்கள் மட்டுமே - அர்ச்சகர் ஆகப் பணிசெய்யப் போகிறார்கள். இதுகாறும்
இருந்தது போல "ஒரு சில" சாதியார் மட்டுமே இவ்விறைப்பணி செய்ய முடியும் என்கிற
போலித்தனமான/அயோக்கியத்தனமான நிலை இனி மாறும்.
2. முத்துக்குமரனின் பதிவில் ரவி குறிப்பிட்டது போல 2002-இலேயே உச்சநீதிமன்றம் இதற்கான
அனுமதி வழங்கி தீர்ப்பளித்துவிட்டது. எனினும் 1970-களின் துவக்கத்திலேயே இதற்கான
முயற்சிக்கு வித்திட்டது அப்பொதைய கலைஞர் அரசுதான். பார்ப்பனர்களின் தூண்டுதலால்
அப்போது கடும் எதிர்ப்புக் கிளப்பட்டு அதை நிறைவேற்ற முடியாது போனது. மீண்டும் 1989-இல்
கலைஞர் அரசு வந்த பிறகும் இது பற்றிய முயற்சிகள் பலன் தரவில்லை (வெங்கட்ராமன்கள், சுப்பு
சாமிகள், செயலலிதாக்கள் சேர்ந்து 1991-இல் திமுக ஆட்சியக் கலைத்துவிட்டார்கள்).
3. 2002-இல் உச்சநீதிமன்றம் இவ்விடயத்தில் ஆதரவுத் தீர்ப்பு தந்த பிறகும் - 'கிளுகிளு'
சுப்பிரமணியர்களின் எதிர்ப்பால் முந்தைய ஜெ. அரசு இவ்விடயத்தைக் கிடப்பில் போட்டது -
அவாள்களைத் திருப்தி செய்ய (ஆனால், பிஜேபி இதை எதிர்க்காதது போல 'முகமூடி' போட்டு
நன்றாகவே நாடகமாடியது!)
>> ஏதோ அர்ச்சகர் ஆவதற்காக பிற சாதியினர் துடித்துக் கொண்டிருப்பது போல ஒரு பிம்பத்தை
உருவாக்குகிறது.
பீடம் என்ற கற்பிதங்களை உடைக்க வேண்டுமே தவிர, அதற்கு பலியாகக் கூடாது. >>
மூக்கு சொல்வது சரியாக இல்லை. இந்த நடவடிக்கையின் மூலம் 'பீடங்களும்' புனித பிம்பங்களும்
உடைபடும் என்பதே உண்மை.
'சூத்திரன்' கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்த பிறகே ஈராயிரமாண்டுச்
சனியன்(பார்ப்பனீயம்) தமிழகத்தை விட்டு விலகும் , அல்லது விலகத்துவங்கும்!
Muthu,
Please publish this comment. Thanks
http://www.ibnlive.com/videos/fullbvideo.php?id=10757
" From rags to riches, thanks to quota "
Chennai: From roaming the lanes of a slum in Chennai as a boy to studying in the classrooms of prestigious business school Indian Institute of Management, Ahmedabad, life has changed drastically for Sarath Babu, who has just started his catering business in Ahmedabad.
And yes, he does credit the reservation policy to have played a role in this journey.
Helped by his friends, Sarath Babu is all set to launch his own food chain, Food King.
//இவர்களுக்கு தான் மதத்தின் மேல் நம்பிக்கை இல்லையே. பின் ஏன் மதத்தில் தலையிடுகின்றார்கள்.//
இதுபோல் கூறும் பலர் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில்லை.
திமுக என்பது ஒரு கட்சியாக இருக்கும் வரையில், மதத்தில் தலையிடக்கூடாது எனக்கூறலாம். ஆனால், அரசு என்பது கட்சியினர் மட்டுமின்றி அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் கவனித்தாக வேண்டும். தனிப்பட்ட முறையில் மதத்தின்மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், முறைகேடுகள் நடக்கும்போது மதத்தில் தலையிடுவது அவசியம். மற்ற மதங்களிலும் இதுபோன்ற சமூகநீதிப் பிரச்சினைகள் வரும்போதும் அரசு தலையிட்டுத்தான் வந்திருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள். ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் எனப் பிறகு புரியும்.
நன்றி
கமல்
முத்து மற்றும் ஏனைய பிறரே....
NDTV வாயிலாக நடக்கும் குறுஞ்செய்தி வினாக்கள் (SMS questions) மக்களின் ஒட்டு மொத்தக் கருத்தை அறிந்து விட்டதாகச் சொல்லி அந்த முடிவின் அடிப்படையில் பரிந்துரை நிகழும் போது, ஜனநாயகத்தின் இறையான்மை கேள்விக்குறியாகிறது. மக்கள் கருத்தை SMS மூலம் நாடி பிடித்துப் பார்த்துவிடலாம் என்றால் தேர்தலைக் கூட அப்படியே செய்து விடலாமே? பின் எதற்காக இத்தனை பிரச்சாரம், செலவு, வாக்குச் சாவடி etc..?
இட ஒதுக்கிட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராடும் அனைவரும் உணர்ச்சியின் அடிப்படையில் பேசுவதும், செயல்படுவதும் எதிர்பார்க்கக் கூடியது. இத்தனை காலமும் அனுபவித்து வந்த செளகர்யத்தை இழந்து விடக்கூடாது என்ற ஒரு சமுதாயமும், 'அட.. நமக்கும் ஒரு வாய்ப்பா?' என்ற ஆவலில் வந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாதென அதைத் தவிர்த்த அடுத்த சமுதாயமும் நினைப்பது தெரிகிறது.
"ஒரு SC/SD கலெக்டராக இருக்கிறார். அவரது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டில் பங்கு கிடைப்பதில் எங்களுக்கு ஒப்புமை இல்லை. இட ஒதுக்கீடு கூடாது; அப்படியே இருந்தாலும் அது பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும்" என்று கூறுகிறார்களே? அதில் உண்மை இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. 'அப்படி எல்லாம் இல்லை' என்பது போல இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் கண்ணை மூடிக்கொண்டு பேச வேண்டாம். அவர்கள் சொல்வதிலும் ஒரு கோபம், நியாயம் இருக்கிறது. அதைப் புரிந்த்து கொண்டு உங்கள் தரப்பு நியாயங்களையும் விவாதிக்க வேண்டும்.
சரி..பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கிட்டை அமுல்படுத்த அதற்கென்ற வரையறைகள் நிறுவப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் 'இன்னார்' இந்த மேற்கல்விக்கு/வேலைக்கு தகுதியானவர் என் சான்றிதழ் அளிக்கும் அதிகாரியின் நேர்மை, ஒரு தலைப் பட்சமாக நடக்காத கண்ணியம் எனத் தொடங்கி பல சிக்கல்களும் குழப்பங்களும் இதில் வர வாய்ப்புண்டு.
மருத்துவம், மேலாண்மை போன்ற படிப்புகளுக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்ள மேல் தட்டுக்காரனுக்கும், கீழ் தட்டுக்காரனுக்கும் சமமான வாய்ப்புகள் இருப்பதில்லை. என்ன தான் ஏழையாக இருந்தாலும் பிறப்பிலேயே அமையும் புத்தி சாதுர்யம், தேவையான தொடர்பு ஏற்படுத்தி முன்னேறுதல் போன்ற soft skills அமையப் பெற்றவர்கள் ஒரு பகுதியினர். சரி..திறமை இருப்பவன் வெற்றிபெற வேண்டியவன் தானே? பிறகெதற்கு இட ஒதுக்கீடு? இந்தக் கேள்விக்கு நிறையப் பேர் பதில் வைத்திருக்கலாம். அதனால் நான் அதிகம் விவாதிக்கவில்லை.
சரி.. புனிதர்கள் நிஜமாலுமே எத்தனை பேர் ஏழையாக, உடல் வருத்திக் கொண்டு கஷ்டப்படுகின்றனர் எனப் பார்க்கலாம். இது வரை ஒரு கட்டுமானப் பணியாளராக, ஆட்டோ ஓட்டுனராக, ஆபீஸ் பையன்களாக, கடற்கரையில் சுண்டல் விற்பவனாக, பஸ் ஓட்டுனராக, வண்டி இழுப்பவனாக, சாக்கடை அள்ளுபவனாக, விவசாயக் கூலியாக இவர்களை நான் பார்த்தது இல்லை. பெரும்பாலான ஏழைகள் கோவில் அர்ச்சகர்களாகவும், ஜோதிடர்களாகவும், இன்சூரன்ஸ் ஏஜென்ட்களாகவும், சமையல் வல்லுனர்களாகவும் தான் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக பெரும் செல்வராக இல்லாவிட்டாலும், வாழ்க்கைத் தரம் என்ற ரீதியில் ஒன்றும் சோடை போனவர்களாக இல்லை இவர்கள். (இந்த இரு வாக்கியங்களுக்கும் எதிர்ப்புகள் எழலாம். Yes.. there can be exceptions with couple of people here & there).
பொருளாதார (அல்லது வாழ்க்கைத் தர) ரீதியான இடஒதுக்கீடு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாலும், அப்படியே கொண்டு வந்தாலும் சமுதாய அடிப்படையில் அமையும் இடஒடுக்கீட்டில் இருந்து அது மிக வேறுபடாது என்பதாலும், அர்ஜுன் சிங் இது போன்ற முடிவில் வலுவாக இருக்கலாம். அதில் நிச்சயமாக அரசியல் நோக்கம் இருக்காமல் இல்லை.
முப்பது ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வரும் இட ஒதுக்கீட்டால் நாம் உற்பத்தி செய்த மருத்துவர்களின் தரம் குறைந்ததாகத் தெரியவில்லை. பல்வகைச் சமுதாயத்தினரும் முன்னேற வழிவகை நடந்திருக்கிறது. வரவேற்கிறோம்..ஆனாலும் எங்கோ நெருடுகிறது.
30 வருடம் என்பது இரண்டு தலைமுறை. இத்தனை காலம் இட ஒதுக்கீடு இருந்தும் நாம் பொருளாதார, சமுதாய சமநிலை எய்தவில்லையா? எனில், எங்கு தவறு நடந்திருக்கிறது. பிற்படுத்தப் பட்ட மக்களை உயத்த அரசு என்ன செய்துள்ளது? இந்த 30 வருடத்தில் பிறந்த பிற்படுத்தப் பட்ட மக்களின் கல்வி விழுக்காடு அவர்களின் கல்வி, பகுத்தறிவு, சுகாதாரம் என பல முனைகளிலும் ஏமாற்றம் தான். 2000 வருங்களாக கோலோச்சிய வருணாசிரம ஆதிக்கம் 30 ஆண்டுகளில் தளர்ந்து விடாது. பொருளாதார சமநிலை ஓரளவு எட்டி விட்டதாகச் சொன்னாலும் சமூக நீதி கிட்டவில்லை. இராமானுஜம் சலூன் கடையும், பெரிய கருப்பன் அர்ச்சகம் செய்யும் பார்த்தசாரதி கோவிலும் இன்னும் கனவு தான்.
இருப்பினும் இட ஒதுக்கீடு சலுகைகள் என அரசாங்கத்தை மட்டும் நம்பி எந்த நல்லதும் நடக்கப் போவது இல்லை. உலகத்தரத்திற்கும் இந்தியத் தரத்திற்கும் உன்னை நீ தயார் செய்து கொள்ள வேண்டும். படித்தாலும், பட்டம் பெற்றாலும் சிந்தனைகள் மேம்படாமலே வாழாமை வேண்டும். உன் தலைமுறையில் இட ஒதுக்கீடு மூலம் நீ மேலே சென்றால் உனது அடுத்த தலைமுறையைத் தானாக நீந்தக் கற்றுக்கொடு. தந்திரம், சாதுர்யம், இடைவிடா உழைப்பு இதெல்லாம் உனக்கு இல்லவிட்டாலும், அதைதான் உலகம் எதிர்பார்க்கிறதென்றால் you dont have a choice.
பி.கு: முத்து.. இதையே கூட நீங்கள் கட்டுரை ஆக்கி புதிய திராவிட வலைப் பதிவில் போட்டால் எனக்கு ஆட்சேபனை இல்லை.
- குப்புசாமி செல்லமுத்து
//சரி.. புனிதர்கள் நிஜமாலுமே எத்தனை பேர் ஏழையாக, உடல் வருத்திக் கொண்டு கஷ்டப்படுகின்றனர் எனப் பார்க்கலாம். இது வரை ஒரு கட்டுமானப் பணியாளராக, ஆட்டோ ஓட்டுனராக, ஆபீஸ் பையன்களாக, கடற்கரையில் சுண்டல் விற்பவனாக, பஸ் ஓட்டுனராக, வண்டி இழுப்பவனாக, சாக்கடை அள்ளுபவனாக, விவசாயக் கூலியாக இவர்களை நான் பார்த்தது //
குப்புசாமி செல்லமுத்து மிகக் சரியானக்கருத்து.மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் அரசு வேலை அது ,பென்ஷன் இதர சலுகைகளும் உண்டு ஏன் அந்த வேலைக்கு முற்படுத்தப்ட்டோர் யாரும் ஒருவர் கூட விண்ணப்பிப்பதில்லை.அங்கேயும் வந்து தங்கள் இட ஒதுக்கீடு உரிமையை கோரிப்பெறலாமே. மருத்துவம் போன்ற உயர்கல்வி என்றால் வேண்டும் இதெல்லாம் கசக்கிறதா.இல்லை ஏழை எளியோர்க்கு காட்டும் கருணையா இதெல்லாம்.என்னே ஒரு கருணை.
ஆச்சாரம் ,அனுஷ்டானம் பேசுவோர் மருத்துவ தொழிலுக்கு வரலாமா சதையைக் கூறுப்போட வேண்டுமே. ஒரு மருத்துவர் என்னவெல்லாம் செய்யா வேண்டி இருக்கும் என்பது வெளியில் அவ்வளவாக தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் உரோமம் இருந்தால் முதலில் அதனை மழிக்க வேண்டும்(நாவிதர் வேலை தான்!) சில சமயங்களில் அடிப்பட்டு சீழ்பிடித்தவற்றை கையால் எடுக்கவேண்டும்(சாக்கடை கழி அள்ளுவது போன்றது தான்) இன்னொன்று உள்ளது , சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால் அதனை அல்ட்ரா சோனிக் ஒலி வைத்து உடைத்து கரைத்து எடுப்பார்கள்.அதற்கு ஒரு புரொப் (probe) சிறு நீரக கல் உள்ள வரை செலுத்த வேண்டும் அது ஆண் உறுப்பின் சிறு நீர்க்கழிக்கும் துவாரத்தின் வழியே செலுத்தப்படும்,சிறு நீர்த்துவாரம் பெரிதாக வேண்டும் அதற்கென உள்ள ஒருவகையான களிம்பினை போட்டு நன்கு உருவி விட வேண்டும். இதனையும் செய்வது மருத்துவர் தான்.இதை எல்லாம் சொல்வது மருத்துவர்களை இழிவுப்படுத்த அல்ல அத்துறையில் உள்ள பல்வேறுப் கடினமான பணிகளை சொல்லவே.
சைவம் ,ஆச்சாரம் ,எல்லாம் சொல்வோர் ஏன் இதற்கு மட்டும் போட்டி போட வேண்டும், நகர சுத்தி தொழில் என்றால் சே சே என்று ஒதுங்கிப்போவது ஏன்.எல்லாம் பணம் தான் மாமு .. பணம்!மருத்துவர்னா பணத்த அள்ளு அள்ளு தம் புடிச்சு அள்ளேனு அள்ளலாமே.
//ஒரு SC/SD கலெக்டராக இருக்கிறார். அவரது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டில் பங்கு கிடைப்பதில் எங்களுக்கு ஒப்புமை இல்லை. இட ஒதுக்கீடு கூடாது//
உண்மையில் அவ்வாரு உள்ளோரின் எண்ணிக்கை வெகு குறைவே.மக்கள் தொகை விகிதாசாரம் படி பார்த்தால் ,ஒரு 10 சதமே உள்ளோரில் 99 சதவீதம் மேம்பட்டு இருக்கிறார்கள்,ஆனல் 90 சதவீதம் உள்ளோரில் ஒரு 10 சதவீதம் மட்டுமே கல்வி,பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளார்கள்.இந்த ஏற்ற தாழ்வு நீங்க ஒதுக்கீடு தேவைதானே!
புஜ்ஜுகுட்டி அர்ஜுன்சிங் கரன் தப்பாரின் கேள்விகளுக்கு பார்லிமெண்ட் தான் சுப்ரீம் என்று கூறி இங்கு நீங்கள் டிவியிலும் தொலைக்காட்சியிலும் வெற்று ஷோ காண்பித்து பிரயொசனம் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
அர்ஜுன் சிங் நோக்கம் பற்றி நமக்கு கவலையில்லை. செயல் தான் நமக்கு தேவை.
Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - OBC
25 - SC
20 - ST
5 - Handicapped
5 - Sports Persons
5 - Terrorist Affected
5 - Kashmiri Migrants
9 - Politicians
and if possible
1 - Astronnaut
1 - Astronnaut
That is reserved for a Dravida OBC. Qualifications:
IQ less than 60
should hate brahmins
should say Long Live Periyar
and Kalaignar 1000 times a day
should not have good understanding
of English or any language
should not be capable of independent thinking
in short (s)he should be a moron,
a Dravida moron
அனானிகளின் பின்னூட்டங்கள் அவர்களின் சிந்தனையை வெளிகாட்டவே பிரசுரிக்கப்படுகின்றன.
walkingstick,( what a nickname)
1.அர்ஜுன்சிங் எலக்சன்ல மண்ணை கவ்வுனதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?
2.அரசியல்வாதிகள் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு போவது நீங்கள் அரசியல்வாதிகளை பார்த்து கேட்கவேண்டிய கேள்வி.
3.எனக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்று நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கிறென்
சங்கர் ராமன் அண்ட் சுஜாதா சங்கர்ராமன்,
நீங்கள் சொல்லும் முறையும் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதாக ( நல்லதும் மற்றும் கெட்டது) தெரியவில்லையே..
யாரும் யாரையும் மிரட்டறதில்லைங்க..
இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விஷயத்தில் அரசுகளுக்கு என்ன நோக்கமிருந்தபோதும் சமத்துவம் நோக்கிய பயணம்தான் இது.மேலும் இந்துத்துவா அரசியல் சக்திகள் அர்ச்சகர் விஷயத்தில் பெரும் எதிர்ப்பு காட்டவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.இப்போது அவர்களுக்கு அது பெரிய விஷயமில்லை.தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு நாம் போராடும்போதுமட்டும்தான் அவர்கள் ஆத்திரப்படுவார்கள்.மொட்டைப்பார்ப்பான் சோவின் துக்ளக் அட்டைப்படம் பார்த்தீர்களா?
மிதக்கும் வெளி,
சோவையெல்லாம் நான் இப்ப படிக்கறதே இல்லை.
அது ஒரு தரப்பினர் படித்து தங்களை சந்தோசப்படுத்திகொள்ளும் பத்திரி்க்கை அல்லவா?
அது ஒரு தரப்பினர் படித்து தங்களை சந்தோசப்படுத்திகொள்ளும் பத்திரி்க்கை அல்லவா
Is your blog any different or
better.That is aryan nonsense,
this is dravidian nonsense.
Bias and prejudice are there
aplenty in both.Perhaps reading
Chos writings for many years
has helped you to write dravidian
nonsense.
Post a Comment