Wednesday, May 24, 2006

தலைப்பு செய்திகள்

வணக்கம் ஜெயாடிவியின் தலைப்பு செய்திகள்


பெரும்பான்மை பலம் இல்லாத திமுக அரசு இயற்றும் சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து.

நாம் இன்னும் தோற்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா உற்சாகம்

தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் அட்டூழியம்

கன்னியாகுமரியில் திமுகவினர் பயங்கர கொலைவெறி தாக்குதல்.வன்முறை.

சிறப்புச்செய்தி:கலைஞரின் கையாட்டு - பரபரப்பு செய்தி.

இனி விரிவான செய்திகள்:

பெரும்பான்மை பலம் இல்லாமல் பதவியேற்றுள்ள திமுக அரசு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி.

அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருப்பது தேவையில்லை என்று கண்டித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டதை சுட்டிகாட்டினார்.அதே சமயம் தற்கொலை செய்து சாகும் அந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கட்சியின் சார்பில் தரப்படும் என்றும் கூறி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கூறுகையில் இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும் கருணாநிதி காலையில் வந்து வெறும் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அது சமயம் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.


அஸ்ஸாமில் நேற்று இரவு அல்பைகுட்டி என்ற கிராமத்தில் இரண்டு மணிநேரம் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பொதுமக்களும் நடுநிலைமைவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.


நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.

நேற்று கருணாநிதி தலைமை செயலகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது கடற்கரை சாலையில் ஒரு ஆளுக்கு கையாட்டி டாட்டா கூறினார். நமது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கலைஞர் டாட்டா காண்பித்த தொண்ணூறு வயதான அந்த ஆளின் சகோதரர் 1967 ல் சிக்னல் இன்றி ரோட்டை கிராஸ் செய்த வழக்கில் அபராதம் கட்டியவர் என்று தெரியவந்தது.இது போன்ற கிரிமினல்களுடன் கருணாநிதி தொடர்பு வைத்திருப்பதுப்பற்றி நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ட்ராபிக் சார்ஜென்ட்டுக்கள் மற்றும் அதிமுகவினரின் கருத்துக்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கலைஞரின் கையாட்டு என்ற பெயரில் உங்கள் ஜெயா டிவியில் காலையும் மாலையும் ஒளிப்பரப்பாகும்.

இத்துடன் ஜெயா செய்திகள் முடிவடைந்தன.

30 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல கிச்சு கிச்சு, சிரிச்சி சிரிச்க்க வைத்தார் முனா, தான ( முத்து தமிழினி) ங்கோ

கொங்கு ராசா said...

நேத்து வரை 'சன்' இனிமேல் 'ஜெயா' அம்புட்டுதான?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நேத்து வரை 'சன்' இனிமேல் 'ஜெயா' அம்புட்டுதான?//

ஆமென்

:-)))))))

ப்ரியன் said...

என்ன இருந்தாலும் உங்களால் ஜெயா செய்திகள் (தொகுப்பவர்) எழுதுபவர் அளவுக்கு நகைச்சுவையாய் தர உங்களால் இயலவில்லை தமிழினி...

சீனு said...

//இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும்...//
சதாமை மிஞ்ச வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே...

ப்ரியன் said...

/*என்ன இருந்தாலும் உங்களால் ஜெயா செய்திகள் (தொகுப்பவர்) எழுதுபவர் அளவுக்கு நகைச்சுவையாய் தர உங்களால் இயலவில்லை தமிழினி... */

உள்குத்து வெளிக்குத்து அப்படின்னு (அப்படின்னா என்ன?) யாராவது கெளப்பிவிட்டுடாதீங்கப்பூ இது 200% பாராட்டு பின்னூட்டம்தான்...

சந்திப்பு said...

அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்.

அதற்கடுத்து கொஞ்சும் சி.என்.என்., டைம், என்.டி.டி.வி... கலாய்ங்கோ... ஜமாய்ங்கோ...

லக்கிலுக் said...

///இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி./////

தலைவரே.... செம பஞ்ச் கொடுத்தது இந்த பேராகிராப்புல தான்.... கலக்குங்க....

இரா.சுகுமாரன் said...

கருணாநிதி ஆட்சியில் இதுவரை 76 அ.தி.மு.க காரர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு கருணாநிதி மட்டுமே காரணம் என்ற செய்தி விடுபட்டுள்ளது. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

ஜெயக்குமார் said...

நேற்றைய சன் டிவி இன்றைய ஜெயா டிவி!, இன்றைய சன் டிவி நேற்றைய ஜெயா டிவி! அவ்வளவுதான். ஆட்சி மாறும் போது அது சார்ந்த தொலைக்காட்சிகளின் செய்திகளும் மாறுகிறது.

Sivabalan said...

செய்திக்கு நன்றி!!

Kuppusamy Chellamuthu said...

// அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்//
சொன்னவருக்கு நன்றி.
ஜெயா டி.வி. செய்தி என்ற பெயரில் காமெடி டைம் நடத்துவது அனைவரும் அறிந்தது. அதே போல் சன் டி.வி. ஒழுக்கத்தின் உச்சத்தில் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது முத்து.

துக்ளக் பத்திரிக்கை குறித்தான உங்களது கருத்துகளை அப்படியே ஏற்கிறேன்.

யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஐடியா.. எந்த டி.வி.யில் அவர்கள் காட்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் போதுமே...

-குப்புசாமி செல்லமுத்து

அருண்மொழி said...

தல.

இப்போது கிடைத்துள்ள முக்கிய செய்தி.

கருணாநிதி சதி.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்பிரமணியை விடுவிக்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அப்பாவி ரவி, சங்கர்ராமன் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

Anonymous said...

பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் டிவி பார்த்�

தயா said...

பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் டிவி பார்த்து நிறைய பயிற்சி எடுத்திருக்கீங்க போல!

நீங்கள் சிறந்த மாணவர் என்பதில் சந்தேகமேயில்லை! பின்ன, சொல்லிக்கொடுத்ததுக்கு மாறா "மாத்தி" யோசிச்சிருக்கீங்களே!

"சன்" தூங்கும்போது "இலை" மீண்டும் துளிர்க்கும். அன்றைக்கு "சன்" தலைப்பு செய்திகளோடு மீண்டு(ம்) வாருங்கள். இப்போது போலவே படித்து சிரித்து மகிழ்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

சரியா வரலை முத்து.. எல்லா செய்தியும் வேற யாரோ கேள்வி கேட்பது போல் சொல்லி இருக்கீங்க..

//திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.//

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது. - இப்படிச் சொன்னாதாங்க அது ஜெயா டீவி ஸ்டைல்.. மத்தவங்க கருத்தெல்லாம் அவங்க சொல்லிட்டாங்கன்னா அப்புறம் தனி சேனல் எதுக்கு?

கையாட்டு சூப்பர்.... :))))

விடாதுகருப்பு said...

தலை பின்றீங்க தலை.

முத்து(தமிழினி) said...

தயா,

உங்கள் ஃபீலிங் புரிகிறது. காத்திருங்கள். காலம் கனியும்.கண்டிப்பாக.

முத்து(தமிழினி) said...

குப்புசாமி.

கண்டிப்பாக சன் டிவி ஒழுக்கத்தின் உச்சியில் இல்லை.

எல்லாம் ஒப்பீட்டு அளவில் தான் எழுதி உள்ளேன்.

சன் டிவி ஜெயா டிவி அளவிற்கு தரம் தாழ்ந்திருந்தால் இந்த வளர்ச்சி இருந்திருக்காது.

பொன்ஸ்~~Poorna said...

//யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஐடியா.. எந்த டி.வி.யில் அவர்கள் காட்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் போதுமே...//
கரெக்டு.. ஒரு மாதம் முன்பு நிலைமை இப்படித்தான் இருந்தது :)

காசி (Kasi) said...

நல்ல நகைச்சுவை. ரசித்தேன். நன்றி.

விடாதுகருப்பு said...

எப்படி முத்து இதெல்லாம்? சும்மா பின்றீங்க..

ஜோ / Joe said...

//நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.
//

நம்ம ஊரு செய்தியாச்சேன்னு ஊருக்கு போன் பண்ணி விசாரிச்சேன் .நாகர் கோவில் தினமலர் பதிப்பில் இது குறித்து மேல் விவரம் வந்திருக்கிறதாம் .வாஸ்து படி பாறையின் மேல் 4 அடி இடம் விட்டு ஆகாயத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நிபுணர்கள் வற்புறுத்தியும் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் பாறையின் மேலேயே சிலை அமைத்ததால் வந்த தோஷ்த்தினால் தான் இப்படி நடக்கிறது என்று மக்கள் கருதுகிறார்களாம் .ஒருவர் இடித்துக்கொள்ளும் படியாக சாலையில் கிடந்த அந்த கல் ,கருணாநிதி சென்ற முறை ஆட்சியில் இருந்த போது திமுக தொண்டர் ஒருவர் போட்டு விட்டு ஓடி விட்டதாகவும் தெரிகிறது என்று தினமலர் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Hamid said...

உண்மைய சொல்லுங்க.. நீங்க ஜெயா TV ல தானே வேல பார்க்கறிண்க?

முத்து(தமிழினி) said...

ஹமீது,

ஜெயா டிவியில் நானா? ஹிஹி எதுவும் நடக்கலாம்.

முத்து(தமிழினி) said...

ஜோ,

:)

விடாது கருப்பு, காசி ஆகியோருக்கும் நன்றி

முத்து(தமிழினி) said...

கோவிகண்ணன்,

நன்றி ( என்னுடைய மற்ற பெயர்கள் உங்களுக்கு தெரியாதா, குடிதாங்கி இன்னபிற)

ராசா, பாலபாரதி

சன்னுக்கும் ஜெயாவிற்கும் சிறிது வித்தியாசம் உள்ளது

முத்து(தமிழினி) said...

ப்ரியன், சீனு, சந்திப்பு நன்றி.

எந்த டிவியாக இருந்தாலும் ஜெயா டிவி அளவிற்கு தரம் தாழ்ந்தால் நாம் எழுதுவோம்.

மீனாக்ஸ் | Meenaks said...

அருமையாகக் கவுத்திருக்கிறீர்கள். எக்ஸலண்ட்.

neo said...

சோ கருத்து பத்தி சொல்லும் இடம் - செம சூப்பர் தலைவா!

தமிழ்வெளியை பார்த்தீங்களா?