Wednesday, May 17, 2006

தி.ரா.மு.மு தன்னார்வலர்கள் தேவை

திராமுமு இயக்கம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.பலரும் ஆர்வமாக இதில் இணைந்தும் உள்ளீர்கள்.நம்முடைய எண்ணம், ஆசை, கொள்கை, நமக்கு எதிரான சவடால்களுக்கு பதி்ல் ஆகியவற்றை முழங்க நமக்கென்று ஒரு தொலைக் காட்சி,வாரப்பத்திரிக்கை,ஒரு ரூபாய் பேப்பர் என்று எதுவுமே இல்லாதது என் உள்ளத்தை உறுத்தியது.

ஆகவே அண்ணன் பிளாக்கரின் உதவியுடன் இலவச வலைத்தளத்தை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

வலைத்தளத்தின் தேவை

திராவிடம் என்றாலே கெட்ட வார்த்தை என்பது போல் ஒரு கட்டமைப்பு படிப்படியாக இந்த நாட்டில் செய்யப்பட்டு வருகிறது.அதை தடுப்பதே நம் தலையாயக் கடமை.

வாழ்க்கையில் முன்னேறிய ஆட்கள் திராவிடத்தைப்பற்றி தாங்கள் வைத்திருக்கும் தவறான பார்வையை மீள்பார்வை செய்ய தூண்டுவதும் படித்தவர்கள் மத்தியில் திராவிடத்தை பரப்புவதும் நம் நோக்கம்.

நடுநிலையாளர்களை திராவிடத்தை அனுதாபத்துடன் பார்க்கவைப்பது நம் இன்னுமொரு நோக்கம்.

இந்த பதிவில் திராவிட வரலாறு, திராவிடபெருமை,திராவிடத்தின் தேவை ஆகியவற்றை பற்றி செய்திகள்,கட்டுரைகள் ஆகியவை வெளிவரும்.

திராவிட பெரியவர் கலைஞரைப்பற்றி வரும் விஷம பிரச்சாரங் களுக்கு பதில் தரும் ஒரே இடமாக இது திகழும்.அதே சமயத்தில் கலைஞர் பாதை மாறினால் தட்டிகேட்கும் இடமாகவும் இது திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்

தம்மை தமிழனாக உணரும் எவரும் இதில் இணைந்துக்கொள்ளலாம். கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.பெயருடனோ பெயரில்லாமலோ பிரசுரிக்கப்படும்.

திராவிடம் சம்பந்தப்படட விஷயங்களை உலகிற்கு கொண்டுச்செல்ல் வாருங்கள் திராமுமு வலைத்தளம்.

சாதி,மதம்,ஊர் ஆகியவை தடையில்லை.பிறப்பால் எந்த சாதியில் இருந்தாலும் தமிழரின்,திராவிடரின் இருப்பை அங்கீகரிக்கும் எவரும் இதில சேரலாம்.

சாதியால் மதத்தால் பிரிக்கப்பட்ட நாம் இனத்தால் மொழியால் ஒன்றுபடுவோம்.

முக்கியமான சட்டதிட்டம் நாகரீகமாக எழுதவேண்டும் என்பதுதான்.பல்வேறு சமயங்களில் பல்வேறு தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கஇருக்கும் இந்த வலைத்தளம்,உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பிற்காலத்தில் ஒரு கட்சியாகவும் ஆகும்.

நாத்திகனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.திராமுமு பன்முகத் தன்மையை ஆதரிக்கிறது.மதவெறியை எதிர்க்கிறது.எந்த மதத்திற்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவே திராமுமு இருக்காது.

புனிதபிம்பங்களின் பாணியி்ல சாதியை பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது, ஆனால் தேவையான நேரம் சாதி பார்ப்பது என்ற கொள்கையில் திராமுமு விற்கு நம்பிக்கை இல்லை.

விருப்பப்படுபவர்களுடைய உறுப்பினர் விவரம் ரகசியமாகவும் வைக்கப்படும். ஒரு கூகிள் குழுமம் துவக்கும் எண்ணமும் உண்டு.

இப்போதைக்கு நிர்வாகிகள் தேர்வு பின்வருமாறு:

தலைவர்: குழலி

செயல் தலைவர் : தமிழினி முத்து

துணைதலைவர்: பொட்டீக்கடை

பொதுசெயலாளர்: பேராசிரியர் தருமி

துணைபொதுசெயலாளர்: ஜோ

சிந்தனைகிட்டங்கி பொறுப்பாளர்: முத்துகுமரன்

கொ.ப.செ : நியோ

(கடும்போட்டிக்கிடையில் இந்த பதவியை இவருக்கு கொடுக்க காரணம் இவரின் அனுபவம் தான்.பல இடங்களில் பின்னூட்டங்களில் உணர்ச்சிகரமாகவும், தகவல்பூர்வமாகவும் பட்டையை கிளப்புவார்)

செய்தி தொடர்பாளர்: பாலபாரதி

இளைஞர் அணி செயலாளர்: அருள்மொழி

அந்தந்த ஏரியாக்களுக்கு வட்ட செயலாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். மத்திய பொதுக்குழுவிற்கும் உறுப்பினர் தேர்வு உண்டு

ஆகவே நண்பர்களே பதவி என்பது ஒரு முள்கீரிடம் என்பதை உணருங்கள். தலைவர் என்பவர் பலபேர் வாயில் விழுந்து எழுந்திருக்கவேண்டும்.எந்த பதிவு போட்டாலும் பல (-)குத்துக்களும் பல பதிவுகளிலும் திட்டும் உள்குத்தும் வாங்கியிருக்க வேண்டும்.ஆகவே நானும் குழலியும் அதற்கு சரியாக பொருந்துவோம் என்பது உங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை.

ஆகவே இதில் கூறப்பட்டிருக்கும் நிர்வாகிகளும் மற்றும் ஆர்வமுள்ள நண்பர்களும் உடனடியாக தங்கள் கருத்துக்களை எழுதும்படி வேண்டப் படுகிறார்கள்.

126 comments:

நந்தன் | Nandhan said...

இந்த பதிவு போதுமா?

Sivabalan said...

நல்ல முயற்சி!!

வெற்றியடைய வாழ்த்துக்கள்!!

குசும்பன் said...

நீங்கள் அடிக்கடி சொல்லும் ஸ்டேட்மெண்ட் வெட்ட வெட்ட வளரும் தி.ரா...

//தலைவர்: குழலி//

ஏங்க தலீவரு (குழலி) கோச்சுக்கப் போறாரு...

ஆனாலும் உங்களுக்கு பயங்கர குசும்புங்க :-)

ஜோ/Joe said...

நன்றி!அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

- யெஸ்.பாலபாரதி said...

பதவி கொடுத்து கவுரவப் படுத்தியமைக்கு நன்றி..
இயக்க தேர்வு செய்யப் பட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்...
//திராவிட பெரிய ராஸ்கல் கலைஞரைப்பற்றி வரும் விஷம பிரச்சாரங் களுக்கு பதில் தரும் ஒரே இடமாக இது திகழும்.அதே சமயத்தில் கலைஞர் பாதை மாறினால் தட்டிகேட்கும் இடமாகவும் இது திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//
ஆமென்!
---
யாணையிடுங்கள்.. மன்னிக்க.. ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன்...

Pot"tea" kadai said...

உள்ளேன் ஐயா...
ஏற்கனவே "ப்லாக்கரில்" தீஞ்ச வாட தாங்கல...இதுல "அதிகாரபூர்வ வலைப்பூ"வா...
ஏற்கனவே நிறைய பேர் எழுதறத நிறுத்திடலாம்னு நெனச்சிட்டு இருக்காங்க. அப்புறம் உள்குத்து, வெளிகுத்து, - குத்து போட ஆளில்லாம போயிட போகுது!!!
பசிபிக்-ஆசியாவிற்கு தலைவர் மற்றும் செயல் தலைவரின் ஆசியோடு பணியை செவ்வனே செய்ய காத்துக் கிடக்கிறேன்.

அருண்மொழி said...

தலைவா,

நான் இதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் செய்துவிட்டீர்கள்.

அருண்மொழி
தி.ரா.மு.மு

Vaa.Manikandan said...

இதோ நான் இருக்கேன் தலைவா!!!

Vaa.Manikandan said...

கலைஞரை ராஸ்கல் என்று குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சல்மான் said...

//தலைவா,

நான் இதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் செய்துவிட்டீர்கள்.
//

ஸ்ஸ்ஸ். குளிருது. அருண்மொழி இப்பவே அரசியலில் புகுந்து பின்னுகிறார். முத்து, நோட் பண்ணுங்கள்

Muthu said...

இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.நன்றி

Muthu said...

தமிழ்மணத்தில் லிஸ்டிங் ஆவதற்கு மூன்று பதிவுகள் தேவைப்படுகின்றன. உறுப்பினர்கள் அனுப்பலாம்.

திராவிடர் வரலாறு, திராவிடர் பெருமை, சவடால்களுக்கு பதில் ஆகியவை இருக்கலாம்.

பரஞ்சோதி said...

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

(பொருளாளர் அல்லது கணக்காளர் பதவி இருந்தால் எனக்கு கொடுங்கள் :))

என்னையும் ஒரு பதிவாளராக சேர்த்து கொள்ளுங்க.. பதவி எல்லாம் வேண்டாம்.

Muthu said...

பரஞ்சோதி,

வெறும் உறுப்பினராக ,,,,,


அட அட அட உள்ளம் உருகுதையா..உன்னடி காண்கையிலே...அள்ளி அணைத்திடவே ...முருகா...

நன்றி தலைவரே


(மீண்டும் நடல் வென்றார் பார்த்தீர்களா?)

இரா.சுகுமாரன் said...

திராவிடம் என்றால்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு பேசுபவர்களுக்கான முன்னேற்ற முன்னணி.

இதில் கர்நாடகத்துக்காரன் காவிரியில் தண்ணீர் விட மாட்டேங்கிரான்.

மலையாளத்தான் பெரியார் அணைய உயர்த்த விட மாட்டேங்கிறான்.

தெலுங்கன் பாலாற்றில் அணைக்கட்டி இங்க தண்ணி விட மாட்டேங்கிரான்.

இதையெல்லாம் பார்க்காம திராவிடம் பேசுவது இவர்களுக்கான முன்னேற்ற முன்னணி அமைப்பது தவறு.

திராவிடம் என்றொரு இனம் இப்போது இல்லை.

திராவிட இனங்கள் இப்போது பிரிந்துள்ளன.

இனம் என்பது, மொழி, வரலாற்று ரீதியாக அமைக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒரே மாதிரியான கலாச்சாரம் உள்ளிட்ட ஐந்து நிபந்தனைக் குட்பட்டது.

எனவே உடனடியாக கலைத்துவிட்டு தமிழ் தேசிய முன்னேற்ற முன்னணி தொடங்கவும்.

சமீபத்தில் திராவிடம் என்றால் என்ன? என்று தெரியாமலே சோசியக்காரர்கள் சொன்ன பெயரை வைத்த விசயகாந்த் கட்சி மாதிரி உள்ளது. உங்கள் அமைப்பு.

இதுக்கு இவ்வளவு "சீரியசான" பதிலா?
அப்படின்னு கேட்க வேண்டாம்.

இந்த கட்சிகள் திராவிடர் என்ற பெயரை கட்சிகள் முன் வைத்துள்ளதே தவறு என்பதே என் கருத்து.

எப்போதே திமுக ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், இப்போது விசயகாந்த் உள்ளிட்டோர் இந்த திராவிட மாயையிலிருந்து இன்னும் விடு படவில்லை என்பதையே காட்டுகிறது.

அதன் தாக்கம் நம்மில் பலருக்கு வெளிப்படுகிறது.

வெற்றி said...

//தம்மை தமிழனாக உணரும் எவரும் இதில் இணைந்துக்கொள்ளலாம்.//

முத்து,
தமிழ் காக்க வீர வேங்கைகள் களம் கண்டு போராடும் மண்ணில் பிறந்தவன் , இக் கேள்வி கண்டும் பேசாமல் இருப்பானோ? இதோ நானும் வருகிறேன்.

Anonymous said...

எனக்கு தெரிந்த ஆர்யம்,திராவிடம் இதுதான்

ஆர்ய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது

அடுத்த வரிகளெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே.
உங்க திராவிடத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம், துளுகெல்லாம்
இடம் உண்டா

Muthu said...

சுகுமாரன்,

பெயர் என்பது குறியீடுதான். செயல்தான் முக்கியம்.

Muthu said...

//எனக்கு தெரிந்த ஆர்யம்,திராவிடம் இதுதான் ஆர்ய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது//

அடுத்த வரி எனக்கு தெரியாது. சொல்லவும.ஆபாசமாக இருந்தால் மட்டுறுத்துவேன்.எனக்கு தெரிந்துக்கொள்ளத்தான்


//உங்க திராவிடத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம், துளுகெல்லாம்
இடம் உண்டா //

இந்த மொழிகளை தாய்மொழியாக கொண்டு ஆனால் வாழ்வது தமிழ்நாட்டில் என்பதால் தம்மை தமிழராக உணர்பவர்களுக்கு என்றுமே இடம் உண்டு.


மேலும் இது ஆர்யர்கள் என்பவர் களுக்கு எதிராக அல்ல. திராவிடத்தை கொச்சைப்படுத்து பவர்களுக்கு எதிராக மட்டுமெ என்று அறிக.

இரா.சுகுமாரன் said...

Anonymous அவர்களுக்கு,

//உங்க திராவிடத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம், துளுகெல்லாம் இடம் உண்டா//

அய்யா, திராவிடம் என்பதே இலலை என்கிறேன் நான். அதில் ஏது மற்ற மொழிக்காரர்களுக்கு இடம்.

Anonymous said...

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,பிறகு விரிவாக எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால் ராஸ்கல் என்ற வார்த்தையை உபயொகிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

Anonymous said...

When you discriminate against another Tamlian by brnading him
or her as forward caste and deny them equal opportunities and justify that in name of social justice why should you criticise the other states who put their states' collective interest before your state's interest. That is their way of implementing social justice.Your kazhagams are unable to do anything about it.
Will your 69% reservation ensure water flow in Cauvery or Palar.
Go and weep in the grave of
Periyar and all those who
talked of Dravida vs Arya.

அருண்மொழி said...

//இதில் கர்நாடகத்துக்காரன் காவிரியில் தண்ணீர் விட மாட்டேங்கிரான்.

மலையாளத்தான் பெரியார் அணைய உயர்த்த விட மாட்டேங்கிறான்.

தெலுங்கன் பாலாற்றில் அணைக்கட்டி இங்க தண்ணி விட மாட்டேங்கிரான்.//

வந்தே மாதரம். வாழ்க பாரத மணித்திருநாடு.

அருண்மொழி said...

தலைவா,

ரொம்ப பயமா கீது. வரும் ஆதரவை பார்த்தால் 2011ல் தமிழ்நாட்டை நாம்தான் ஆள்வோம் போல கீது. எதுக்கும் எல்லா பொருப்பாளர் மற்றும் தொண்டர்களிடம் வெத்து Paperல கைநாட்டு வாங்கி வைக்கவும். முக்கியமான கட்டளைகள்:

1. தனிக்கட்சி ஆரம்பிக்க கூடாது (முக்கியமாக அ.தி.ரா.மு.மு / தே.தி.ரா.மு.மு)
2. கணக்கு கேக்க கூடாது.

எல்லாம் நம்ம பெத்த படிச்ச புள்ளைங்களை ( அதாம்பா Lokparithran) பாத்து வந்த பயம்.

இரா.சுகுமாரன் said...

முத்துவிற்கு,

//சுகுமாரன்,

பெயர் என்பது குறியீடுதான். செயல்தான் முக்கியம்.//

நான் ஏற்கனவே களத்தில் உள்ளவன் தான். எனவே இந்த செயல்களில் நானும் இதில் பங்கு கொள்வேன்.


//வழிப்போக்கன் said...
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்,பிறகு விரிவாக எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால் ராஸ்கல் என்ற வார்த்தையை உபயொகிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.//

செயல் தலைவர் கவனத்திற்கு,

நண்பர் எப்படி உணர்வுப்பூர்வமாக இருக்கிறார் பாருங்கள். பெயரை ஒரு குறியீடு என்று சுறுக்க முடியாது. நண்பரின் கோரிக்கைபடி ஒரு சொல்லை விலக்கவேண்டும்.

Anonymous said...

கொ(ல்)ள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு பொம்பிளய போடுய்யா. அப்பதான் உறுப்பினர் சேர்க்கை தூள் பறக்கும். தமிழ்நாட்டு அரசியலில் இது ரொம்ப முக்கியம்...............

திரு.தமிழினி முத்து,
இத்தகைய பின்னுட்டங்களை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

Muthu said...

நண்பர்களே,

பெண்களை குறித்து வந்த பின்னூட்டத்தில் ஆபாசமாக எதுவும் இல்லை..ஒரு நகைச்சுவை என்று நினைத்தே அனுமதித்தேன்..


ராஸ்கல் என்ற வார்த்தையை அனைத்து உறுப்பினர்களும் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.ஜனநாயக முறைப்படி இதை செய்யலாம்.

எத்தனை பேருக்கு பெயர் காரணம் தெரியும்?

பட்டணத்து ராசா said...

உறுப்பினர் ஆக ஏதாவது அடிப்படை தகுதி தேவையா? தொண்டனுக்கு இருக்காது என நினைக்கிறேன்?

லக்கிலுக் said...

எனக்கு ஏதாவது சென்னை மாவட்ட பொறுப்பை வழங்குமாறு தாழ்மையுடன் தலைமைக் கழகத்தை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்....

முத்துகுமரன் said...

//சமீபத்தில் திராவிடம் என்றால் என்ன? என்று தெரியாமலே சோசியக்காரர்கள் சொன்ன பெயரை வைத்த விசயகாந்த் கட்சி மாதிரி உள்ளது. உங்கள் அமைப்பு.//

நியாயமான விமர்சனம் சுகுமாறன். அதே போன்று தமிழ்த் தேசிய முண்ணனி என்றழைப்பது குறித்தும் விவாதிக்கலாம். நான் வரவெற்கிறேன்

Anonymous said...

திராவிடம்
What is this - race or community or ideology or group or school of thought.You have not defined what you mean by திராவிடம்
Not all Tamils consider MK as their leader.
So how can you
defend him in the first place as
திராவிட பெரியவர் கலைஞரை.
In fact they have rejected him five times (1977,80,84,1991,2001)
and chosen him three times (1989, 1996,2006) to lead tamil nadu.
He never enjoyed the broad support that Anna or Periyar enjoyed.

ஜோ/Joe said...

தலைவர் அவர்களே!
எனக்கு தெரிந்து சில திராவிட ராஸ்கி (ராஸ்கலுக்கு பெண்பால்!)-களும் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன் .அவர்களையும் நமது பேரியக்கத்தில் சேர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

Muthu said...

சென்னை மாவட்ட செய்லாளராக நண்பர் லக்கிலுக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Muthu said...

சில அனானி நண்பர்களின் கேள்விகளுக்கு பதில்கள் தயாராகிவருகின்றன.

Prasanna said...

Hi Muthu

Good Initiative if you are serious about this

However few concerns.Why do you want to use race as mobilisng tool?Why are we caught in time warp?

Race based mobilisation is dangerous.It will logically lead to racial assertion and superiority

EDUCATED and enlightened souls like u cannot be blind to the such as events like holocausts
.Millions of innocents got masscared because Hitler believed in a stupid theory that so-called Aryans are the pure race
I am sure you must be aware that inmature European democracies any race based groupings are considered
unlawful

EVEN if u have good intentions (I am sure you have),history always prove that movements like this get hijacked by illogical/irrational elements

While i find you to reasonably balanced and mature,some of the office bearers of your proposed movement are prone to spewing venom against specific caste groups
This should never be permitted in any civil society

Sukumar made a good
suggestion.Why dont look at the movement AS ONE that espouses the cause of Tamil Nadu

Why dont you look at
syntheising the good elements of Dravidian ideology with Pan Indian nationalism-PRogressive and irreligious Tamil Sociey free of caste and religious evils showing the way for the rest of country

பரஞ்சோதி said...

// பரஞ்சோதி,

வெறும் உறுப்பினராக ,,,,,

அட அட அட உள்ளம் உருகுதையா..உன்னடி காண்கையிலே...அள்ளி அணைத்திடவே ...முருகா...

நன்றி தலைவரே

(மீண்டும் நடல் வென்றார் பார்த்தீர்களா?) //

முத்து என்னங்க இது,

இப்படி பாட்டு பாடி கூச்சப்படுத்துவிட்டீங்க. நல்லாவே ஆள் பிடிக்கிறீங்க, உண்மையான அரசியல்வாதியாகி விட்டீங்க. :)

(ரோஜர் செமி பைனலிலேயே தக்கி முக்கி தான் வென்றார். அதே நேரம் நடல் நச்சென்று அடித்து நொறுக்கி பைனல் வந்தார், நான் எதிர்பார்த்தபடியே நடல் வென்றார். ஆனாலும் கொஞ்சம் பொறுங்க, எப்படியும் நம்ம தலை ரோஜர் களிமண்ணில் நடலை போட்டு புரட்டி எடுப்பார் :))

Muthu said...

பிரசன்னா,

என் எண்ணம் திராவிடம் என்ற வார்த்தைக்கு இருக்கும் கெட்ட அர்த்தத்தை எடுப்பதுதான்.

பார்ப்பனராக இருந்தாலும் தமிழரின் இருப்பை வரலாற்றை அங்கீகரித்தால் அவருக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்லிஉள்ளேன்.

மற்றபடி தி.மு.க அதிமுக மதிமுக போன்ற திராவிடம் இல்லை இது.கண்டிப்பாக மதத்தையொ சாதியையொ வைக்கமாட்டோம்.தமிழ்இனபெருமை முக்கியம்.மற்ற இனத்தையும் அழிக்க நினைக்கமாட்டோம்.

பன்முகத்தன்மையை காப்போம்.
hope this clarifies.

திராவிட என்ற வார்த்தை ஒரு குறியீடுதான்.கண்மூடித்தனமாக தேசியத்தையும் ஆதரிக்கமுடியாது.அனைவருக்கும் சமஉரிமை உள்ள தேசியம் ஒ.கே.

லக்கிலுக் said...

கொள்கைகள் சூப்பர்.....

கொள்ளைக்காரர்களை கொள்கைகளால் கொல்வோம் என்று சென்னை மாவட்ட திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்....

Anonymous said...

பார்ப்பனராக இருந்தாலும் தமிழரின் இருப்பை வரலாற்றை அங்கீகரித்தால் அவருக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்லிஉள்ளேன்

So according to you brahmins are not Tamils and by default are anti Tamils and their existence, history. In other words you are
forming an anti-brahmin front
in the name of Dravida.Now the
cat is out of the bag.

Muthu said...

//So according to you brahmins are not Tamils .Now the
cat is out of the bag. //

அனானி அண்ணாச்சி,

பூனைக்குட்டி சாக்குக்குள்ள போனாத்தானே வெளியே வர்றதுக்கு...பூனை உள்ளெயெ போகலியே...

தமிழர் என்று தம்மை உணர்பவர்கள் சம்ஸ்கிருதத்திற்கு வரிந்துக்கட்ட மாட்டார்கள்.இது போதுமா இன்னும் வேண்டுமா?

குழலி / Kuzhali said...

தலைவரின் பின்னூட்டம் கடைசியாக வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி

அருண்மொழி said...

தலைவா,

அதுக்குதான் நம்ம கொள்கைகளை Lok Parithran மாதிரி ஒன்னுமே பிரியாம வைக்கனும். பேசாம நம்ம ரோசா அண்ணனை கேட்போமா?. அவரு நல்லா ஒரு பதிவு போட்டார்ன்னு வச்சுக்குங்க, என்ன மாதிரி ஆளுங்க ஒன்னுமே பேச முடியாது.

அப்பால தலீவர்னா மத்தவங்க எழுதி கொடுக்கிறதைதான் பேசனும் அல்லது கட்டுரையா போடனும். அதான் Style.

(ரோசா அண்ணா கோயிச்சுக்காதீங்க!!!)

Anonymous said...

There are castes in Tamil Nadu who speak Telugu and Kannada as mother tongue and you will consider them as Tamils.But just because some brahimins at some point supported
Sanskrit you will brand all of them as anti-tamils.Have not brahmins contributed anything to Tamil culture, society and tradition.Do you know Parthimar Kalaignar was the first to call
for classical language to Tamil.
Neelakanta Sastry, Rengasawamy
Iyengar contributed immensely to
history of tamils.Madaviah, Rajam
Iyer were pioneers as Tamil novelists. The list is endless.
But a brahmin hater like you
will never bother to know this.
Your education has not made you
a liberal.You are a casteist.

அருண்மொழி said...

//தமிழர் என்று தம்மை உணர்பவர்கள் சம்ஸ்கிருதத்திற்கு வரிந்துக்கட்ட மாட்டார்கள்.இது போதுமா இன்னும் வேண்டுமா?//

சூப்பர். சப்பாசு சப்பாசு. அப்படி போடு அரிவாள.

இரா.சுகுமாரன் said...

முத்துகுமரன் said...
//சமீபத்தில் திராவிடம் என்றால் என்ன? என்று தெரியாமலே சோசியக்காரர்கள் சொன்ன பெயரை வைத்த விசயகாந்த் கட்சி மாதிரி உள்ளது. உங்கள் அமைப்பு.//

நியாயமான விமர்சனம் சுகுமாறன். அதே போன்று தமிழ்த் தேசிய முண்ணனி என்றழைப்பது குறித்தும் விவாதிக்கலாம். நான் வரவெற்கிறேன்

வாங்க முத்துக்குமரன் விவாதிப்போம்.

//திராவிட என்ற வார்த்தை ஒரு குறியீடுதான்.கண்மூடித்தனமாக தேசியத்தையும் ஆதரிக்க முடியாது.அனைவருக்கும் சமஉரிமை உள்ள தேசியம் ஒ.கே.//

முத்து தமிழினி

உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நீங்க பழைய தேசியத்தை பற்றி சொல்கிறீர்கள். (திராவிடம்)

நான் சொல்வது புதிய தேசியம் அவ்வளவுதான்.

//அனைவருக்கும் சமஉரிமை உள்ள தேசியம் ஒ.கே.//

தேசியம் என்பது முழுதும் உரிமை தொடர்பானது இல்லை.

Muthu said...

இதை வெறும் பார்பனீய எதிர்ப்பாக காட்ட(கொச்சைப்படுத்த) நினைக்கும் அனானி பார்ப்பனராக இருக்கும் பட்சத்தில்

1. எல்லாம் வல்ல கடவுளுக்கு தமிழ் புரியும், சம்ஸ்கிருதம் தேவையில்லை என்று கூறும் பட்சத்தில்

2.பிறப்பு அடிப்படையில் பாகுபாடு பார்க்கும் வேதங்கள் ஆகியவற்றை தவறு என்று ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்

3.இந்தியாவில் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும் என்று ஒத்துக் கொள்ளும்பட்சத்தில்

4.சாதி அடிப்படையில் கல்வி பெறாமல் பலஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஒத்துக்கொள்ளும் பட்சத்தில.


அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க நாங்கள் தயார் என்கிறேன் நான்.எனி டேக்கர்ஸ்?

வரவனையான் said...

என்னை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாத அன்பு அண்ணன் முத்து-வின் முடிவைக்கண்டித்து நான் தனியே லட்சிய தி.ர.மு.மு என்றொரு கட்சியை ஆரம்பித்து எனது தன்மானத்தை வலியுருத்தும் விதமாக கிழே பார்த்த முக்கோணத்தை கொடியில் பொறித்து தமிழ்நாடு முழுவதும் வலம் வரபோகிறேன் என்று அறிவிக்கிறேன்.


(அன்பு சுகுமாறன், உங்கள் தமிழ்த்தேசிய உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள். ஆனால் திராவிட இயக்க கொள்கைகள் சிந்திக்க தரும் பரந்த இடத்தை தேசிய இன சித்தாந்தங்கள் தருவதில்லை என்பதுதான் என் போன்ற திராவிட சிசுக்களின் எண்ணம்.ஆகையால் தமிழனாய் பிறந்தாலும் பெரியாரின் வழியில் நிற்கத்தான் விரும்புகிறேன். நம் போன்றவர்கள் இனைந்து நிற்பதற்கான இடங்கள் நிறைய உண்டெனினும் தமிழ்த்தேசிய கடும்போக்கிற்கு எமக்கு விருப்பமில்லை)

Muthu said...

சுகு,

உருப்படியான விவாதங்களை திராமுமு வரவெற்கிறது.நீங்கள் ஒரு கட்டுரை இதைப்பற்றி எழுத வேண்டும் என்று திராமுமு வேண்டுகிறது.

திராவிடம் தேவையில்லை தமிழ் தேசியம்தான் வேண்டும் என்றால் அதை ஒரு அழகான கட்டுரையாக வடித்து தரவும்.நன்றி.

Muthu said...

அனானி,

என் பிராமண காதலைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள்.
என் சொக்கதங்கம் சோ பதிவின் மூன்றாம் பாகத்தை பார்க்கவும்.

நான் சாதி வெறியனா? நல்ல ஜோக்.உங்களுக்கு என்னைப்பற்றி பர்சனலாக என்ன தெரியும்?

ஜோ/Joe said...

எந்த ஜாதியை,மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் ,அவருடைய மூதாதையர் தமிழராக இல்லாதிருப்பினும் ,இன்றைய சூழலில் தன்னை தமிழனாக உணர்ந்து தமிழ் தன் தாய் மொழி என்று பெருமிதம் கொள்ளுகிற யாரும் என் தமிழ்ச் சகோதரனே!

Muthu said...

எனக்கு பிடித்த நடிகர் கமல், பிடித்த எழுத்தாளர் சு.ரா. கவிஞர் பாரதி இவர்களெல்லாம் யார்?

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமுதாயம் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அப்படி இருக்க யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு சம்ஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்து போலி தேசியம் பேசுவதை நான்
தவறு என்றுதான் நினைக்கிறேன்

Muthu said...

சுகு,

கட்டுரை தேவையில்லை.இங்கெயெ விவாதிப்போம்.உங்கள் கருத்துக்களை இடுங்கள்.

தெளிவான புரிதல்களோடு துவக்குவது நல்லதுதான்.

Anonymous said...

தயவு செய்து தமிழர் முன்னேற்றம் என்று மட்டும் வைத்துவிடாதீர்கள். தமிழர் என்றால் பார்ப்பனர்களும் ஒட்டிக்கொள்வார்கள், பிறகு உங்கள் செலவிலேயே சூனியம் வைத்துக்கொள்வீர்கள்,கொஞ்சம் கொஞ்சமாக...

திராவிடம் என்ற வார்த்தை எவ்வளவு அவசியம் என்பது குறித்து பின்பு பார்ப்போம்.

இதை அதற்குள்ளா மறந்தீர்:

வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்,
தன் நிலை உயர்ந்தபின் தமிழரையே பழித்தார் - கலைஞர்.

Anonymous said...

Do you know that RSS in Tamil Nadu is supported more by OBCs and Dalits than by brahmins.Swami Sidhbhavanda was a major supporter
and helped RSS to establish a base
in southern TN.He was a non brahmin
swami.He advocated that all should
recite gayatri japa.he knew both sanskrit and tamil well.In the earlier generations many non brahmin scholars knew both languages.Pandithamani Kathiresan
translated from sanskrit to Tamil.
Sri Rama desikan translated in both directions.You try to pit sanskrit vs tamil.For many scholars both are like two eyes.
Try to grow up.

இரா.சுகுமாரன் said...

இப்போது வேண்டாம். இப்போதைய தேவை. என்னை விட மற்றவர்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என்பது தான். மற்றவர்களுக்கு பதில் அளியுங்கள், நாம் பிறகு விவாதிக்கலாம்.

- யெஸ்.பாலபாரதி said...

தலிவா நானும் பார்த்துட்டுவாரேன்.. தனி ப்ளாக் தொடங்குமுன்னே சண்டையா?
இது தேவையற்றது..அவர்களை நம் இடத்துக்கு அழைத்து வாங்க../வரச்சொல்லுங்க..
இங்கே இப்படி பேசிக்கொண்டிருப்பதால்.. நம்மோடு சேர நினைப்பவர்கள் கூட கொஞ்சம் பயப்படலாம்..
கவனிக்க..

Anonymous said...

தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருப்பவர்கள். தமிழ் பற்றாளர்கள் என்றால் அங்கே திராவிடம் என்ற அடைமொழி எதற்கு.தமிழர் என்பது போதாதோ. ஒரு தலைவரை எதற்கு நீங்கள் அப்படி
ஆதரிக்க வேண்டும் உங்கள் ஆதரவை நம்பியா கருணாநிதி இருக்கிறார். கலைஞரை எல்லா
தமிழர்களுமா தலைவராக ஏற்றிருக்கிறார்கள். தலித்களன் நாங்கள் ஏற்கவில்லை.அப்புறம் இட ஒதுக்கீடு குறித்து வாய் கிழியப் பேசும், எழுதும் நீங்கள் 20% இட ஒதுக்கீடு அனைத்து மட்டத்திலும் தலித்களுக்கல்லவா தந்திருக்க வேண்டும். பொறுப்புகள் இடஒதுக்கீடு ரீதியாக இருக்க வேண்டாமா. எனவே முதலில் 20% தலித்களுக்கு என்று அறிவித்து விட்டு எப்பொறுப்புகளில் தலித்கள் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்
திருமா வாழ்க ஒன்று சேர் கற்பி புரட்சி செய்
வி.சியில் ஒ.சி

Muthu said...

balabharathy,

அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாகரீகமான விவாதம் நல்லதுதான்.படிப்பவர்களுக்கும் புரியவைக்கலாம் அல்லவா?

Muthu said...

வரவணை,

உங்களுக்கு என்ன பதவி வேண்டும்?

திங்க் டேங்க் பதவி மற்றும் ஏரியா செயலாளர்கள் பதவி நிறைய காலியாக உள்ளது.

பட்டணத்து ராசா said...

திராவிடம் என்னும் சொல்லே நம்ம பக்கத்து மக்களை குறிக்கும் சொல்லாக வடமொழி புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளதாக படித்த நினைவு பெரியார் இந்த சொல்ல ஏன் தேர்வு செய்யதார் என்று புரியவில்லை ஆனால் தமிழ் தமிழன் அப்படின்னு முன்னிறுத்தி கண்டிப்பாக இருக்காது என்பது அவருடைய தமிழ் பற்றியான விமர்சனங்களிலிருந்து தெரியவரும். தமிழ்நாடு தவிர வேறு மாநிலங்களிக் இந்த திராவிட சொல்ல் புழக்கித்தில் இருப்பதாக தெரியவில்லை இங்க இருக்கும் மற்ற பொழி பேசும் தங்களை தமிழ்னாகவே முன்னிறித்து கொள்ளுவதாக எனக்குப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சாதி அடிப்படையில் அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டு தஙகள் உரிமைக்கு போராடுவதும், அதனால் சில பயன்களை பெற்றிருக்கும் இந்த நேரத்தில் திராவிடம் என்ற குறியீடு எந்த இனங்களை இனங்காணுகிறது என்பது கேள்வியே?

முத்துகுமரன் said...

முத்து,
தமிழ்த் தேசியமும் திராவிட சிந்தாந்தமும் வேறு வேறானதல்ல. தமிழ்த் தேசியம் என்பது இன்று வந்திருக்கும் விழிப்புணர்வு நிலை. மேலும் திராவிடம் என்பது தமிழாகத்தான் முன்னுறுத்தப்பட்டதென்பதை மறந்துவிடலாகாது. . திராவிடம் என்னும் சொல்லும் அந்தப்பயன்பாட்டிலேதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Muthu said...

அப்பப்பா,

பின்நவீனத்துவ பாணியில் பிரித்து மேய்ந்த நண்பர்களுக்கு நன்றி....


(மழை பெய்து ஓய்ந்த மாதிரி உள்ளது)

Muthu said...

இரு பின்னூட்டங்கள் மட்டும் மட்டுறுத்தப்பட்டு நண்பர்களுக்கு தெரியபடுத்தியாகிவிட்டது.

மற்றபடி நன்றாக செல்கிறது.

Muthu said...

முத்துகுமரன்,

இந்த திராவிட சிந்தாந்தம் தமிழ் தேசிய சிந்தாந்தமும் வேறுபடும் புள்ளிகள் என்ன?

லக்கிலுக் said...

////தமிழர் என்று தம்மை உணர்பவர்கள் சம்ஸ்கிருதத்திற்கு வரிந்துக்கட்ட மாட்டார்கள்.////

சம்ஸ்கிருதத்திற்கு மட்டுமா வரிந்து கட்டுகிறார்கள்.... இந்திக்கும் சேர்த்து வரிந்து கட்டுவார்கள்....

தமிழ்நாட்டில் தமிழ் படிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கெல்லாம் என்னவோ வேப்பங்காயைக் கடித்த மாதிரி கசப்பு.....

எந்த இந்திக்காரனாவது தமிழ்நாட்டில் கிடைக்கும் வேலைவாய்ப்புக்காக தமிழ் படிக்கிறானா? இங்கு வந்தபிறகு சாவகாசமாக தமிழ் கற்றுக் கொள்வதில்லை.....

அதுபோல தமிழன் எவனுக்காவது தப்பித்தவறி வடநாட்டில் வேலை கிடைத்தால் அங்கே போய் சாவகாசமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டியது தான்....

Muthu said...

பட்டணத்து ராசா,

இதை படிக்கவும்..

http://valavu.blogspot.com/2006/04/blog-post.html

பட்டணத்து ராசா said...

muthu, thanks for the link

Anonymous said...

சம்ஸ்கிருதத்திற்கு மட்டுமா வரிந்து கட்டுகிறார்கள்.... இந்திக்கும் சேர்த்து வரிந்து கட்டுவார்கள்....

முட்டாள்கள் அவர்கள். கலைஞர் போல் வாரிசுகளை இந்தி படிக்கச் சொல்லிவிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இந்தி எதிர்ப்பு ஊருக்கு வீட்டுக்குள் இந்தி படிப்பு
என்றல்லவா இருக்க வேண்டும். தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும், தில்லியில் அது பயன்படும்.
அது ராஜதந்திரம், நீயோ நானோ இந்தி படித்தால் நல்லது என்று சொன்னால் அது தமிழ்த் துரோகம்,
பார்ப்பனியம். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே.

நாகை சிவா said...

வைணவ கோவில்கள், மற்றும்
கடல் கடந்த பொருப்புகளை நான் ஏற்பதை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் கட்சி தலைமை கட்டளையிட்டால் பொருப்புகளை ஏற்று, பணிகளை திறன்பட செய்வேன் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்கின்றேன்

லக்கிலுக் said...

////தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும், தில்லியில் அது பயன்படும்.
அது ராஜதந்திரம், நீயோ நானோ இந்தி படித்தால் நல்லது என்று சொன்னால் அது தமிழ்த் துரோகம்///

தயாநிதி படிக்கும் போது அவர் தந்தை எம்.பி... வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது.... படிக்க தயாநிதிக்கு விருப்பமும் இருந்தது....

அந்த நிலையிலா வடுகபட்டியில் வசிக்கும் குப்பன் இருக்கிறான்.... அவனுக்கு ஆங்கிலம் படிப்பதே சுமை... அதையே எப்படியோ தத்தி தத்தி படித்து பத்தாவது பாஸ் செய்கிறான்.... அவன் கிட்டே போய் நீ இந்தி படிச்சா தான் பத்தாம் கிளாஸ் பாஸ் என்று சொன்னால் பேசாமல் மாடு மேய்க்க போய் விடுவான்..

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி முன்னேறிய நிலையில் இருக்கும் பிராமணர்களுக்கு வேண்டுமானால் இந்தி கற்பது பெரிய சுமையாக இல்லாமல் இருக்கலாம்.... ஆனால் சோற்றுக்கே வழி இல்லாத தமிழன் நிலை அப்படி இல்லை.....

Muthu said...

சில அனானிகள் முனை மழுங்கிய வாதங்களை மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள்.அவற்றிற்கு இங்கு பதில் கிடைக்காது. மீண்டும்
அடிப்படைகளை படித்துவிட்டு வரலாம்.எனக்கும் போரடிக்கிறது.

குழலி / Kuzhali said...

எது நடக்க வேண்டுமென்று நினைத்தார்களோ அது நன்றாகவே நடக்கின்றது, திராவிட ராஸ்கல்களுக்கும் பெரிய திராவிட ராஸ்கல் கருணாநிதிக்கும் ஒரு ஒற்றுமை, இவங்க விளக்கம் சொல்லியே ஓஞ்சி போறவங்க.....

தி.ரா.மு.மு. வை யாருக்கோ எதிரானது என திரிக்க வேண்டிய அவசயமில்லை, பதிவில் கொள்கைகள், விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன, செயல் தலைவர் தமிழினி முத்து பின்னூட்டத்திலும் விளக்கியுள்ளார்.

கூட்டு சேர்க்கின்றீரா கும்மியடிக்கின்றீரா குய்யோ முய்யோ என்று புலம்ப வேண்டாம், குய்யோ முய்யோ என்று கதறுவது கருத்து தளத்தில் நிற்க முடியாது என்பதாலும் இப்படி கதறுவதால் ஏதோ அவர்கள் சொல்லுவதிலும் நியாயம் உள்ளது போல என்று தோற்றத்தை உருவாக்கவும் தான் என்பதை உணர உள்குத்து வெளிக்குத்து அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை....

ஒரு பிரச்சினையை தொடர்ந்து பேசாமல் இங்கும் அங்கும் தாவிக்குதித்து திசை திருப்பும் தந்திரம் அறிந்ததே, ஒரே இடத்தில் எல்லாவற்றையும் பேச வேண்டிய அவசரம் இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்...

நன்றி

இரா.சுகுமாரன் said...

ஆரியர்கள் இங்கு வந்தபோது, அந்த இனத்தவரை வேறுபடுத்தி குறிப்பிட ஆரியர் என்றும்,இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர் என்பதற்கான சொல்லாகும்.

ஆரியர் வந்தபோது சொன்ன வார்த்தை இன்னும் அப்படியே உள்ளது.

அதாகப்பட்டது, ஆரியர் எனும் போது வந்தவர் என்றும், திராவிடர் என்றால் இங்குள்ளவர் என்றாகிறது.

தமிழன் என்றால் இங்குள்ளவர் களுக்கிடையேயான பிரிவாகி ஆரியர் என்பது பற்றி பேசப்படாது என்பதால் திராவிடம் என்ற சொல் கெட்டியாக பிடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் திராவிடம் என்பது இப்போது தமிழர் மட்டுமல்ல.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பேசும் மொழியாக தமிழ் தான் இருந்தது என அம்பேத்கார் தெரிவித்துள்ளார். அதனால் தான் தமிழ் திராவிடமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்ற விவாதமெல்லாம்.

Anonymous said...

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே

Film Chellame
Music Harris Jayaraj (arya or dravida - i dont know.not a brahmin
so dravida is the logic)
female star reema sen (arya)
male star Vishal (dravida,
having aryan name, what a shame)
song written by 300% dravida
vairamuthu
film directed by gandhi krishna
(looks like an aryan name, non tamil?)
dialog sujatha (arya)
seen and enjoyed by tamils.

This can be theme song of
தி.ரா.மு.மு
if தி.ரா.மு.மு wants
to be popular

Anonymous said...

அந்த நிலையிலா வடுகபட்டியில் வசிக்கும் குப்பன் இருக்கிறான்.... அவனுக்கு ஆங்கிலம் படிப்பதே சுமை... அதையே எப்படியோ தத்தி தத்தி படித்து பத்தாவது பாஸ் செய்கிறான்.... அவன் கிட்டே போய் நீ இந்தி படிச்சா தான் பத்தாம் கிளாஸ் பாஸ் என்று சொன்னால் பேசாமல் மாடு மேய்க்க போய் விடுவான்..

Sir, you can have Hindi as an
optional language without need
to pass.Anyway there are hindi
knowing and speaking Kuppans.

Muthu said...

ஒரு நண்பர் தமிழ் தேசியம் மற்றும் திராவிட சிந்தாந்தம் பற்றி அருமையாக கூறிஉள்ளார்.அவை எனக்கு புரிய செய்தி.

பலபேர் என்னை குத்தினாலும் இவரை போன்ற சிலரால் நான் பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்கிறேன்.நன்றி.

இரா.சுகுமாரன் said...

dontask said...
//இந்தி எதிர்ப்பு ஊருக்கு வீட்டுக்குள் இந்தி படிப்பு
என்றல்லவா இருக்க வேண்டும். தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும், தில்லியில் அது பயன்படும்.
அது ராஜதந்திரம், நீயோ நானோ இந்தி படித்தால் நல்லது என்று சொன்னால் அது தமிழ்த் துரோகம்,//

இந்தி திணிப்பு இருக்ககூடாது என்பதே தவிர விரும்பி படிப்பதற்கான எதிர்ப்பு இல்லை அது.

கட்டாயமாக மத்திய அரசில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியில் கையொப்பம் இடவேண்டும் என்பது தான் இந்தி திணிப்பு.

அவர்களாக ஏற்றுக்கொள்வது அப்படியில்லை. இந்திய அரசு செய்வது இந்தி திணிப்பு எனவே அதனை எதிர்க்க வேண்டியுள்ள்து.

இந்தி படித்தால் யாருடைய கையையும் பிடித்து படிக்ககூடாது என்பதல்ல இந்தி எதிர்ப்பு.

சிங். செயகுமார். said...

ராஸ்கல் ரஜ்ஜியதிற்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

http://keetru.com/anicha/Nov05/marx_9.html

ஆரிய இனம் மற்றும் ஆரியப் படையெடுப்பு குறித்த கருத்தாக்கத்தை ஆய்வுலகம் கைவிடுதல்

ஆரிய மொழிக் குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்பம் ஆகியவை குறித்த கண்டுபிடிப்புகள் இந்தோ ஆரியப் பரவல், ரிக்வேத காலம் முதலியன குறித்து ஜோன்ஸ, மார்ஷல், கால்டுவெல், எல்லிஸ் ஆகியோர் முன் வைத்த கருத்துக்களை இன்றளவும் ஆய்வுலகம் ஏற்றுக் கொள்வதற்கான நியாயங்களை விளக்கினேன். சிறிய மாற்றங்கள், செழுமையுறுத்தல்கள் ஆகியவற்றுடன் அவை காலத்தை வென்று நின்றுள்ளன. இவ்வாறு ஆய்வுலகம் மாற்றிக்கொண்ட அம்சங்களில் முக்கியமானவை இரண்டு. அவை.

1. 1950க்குப் பின் மானுடவியலாளர்கள் ‘இனம்’ என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையொட்டி இந்தியவியலாளர்கள் ஆரிய இனம் என்கிற கருத்தாக்கத்தைக் கைவிட்டனர். பதிலாக இந்தோ ஆரிய மொழிக் குழுவினர் கிறித்துவிற்கு முந்திய இரண்டாயிரங்களின் நடுவில் ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பதாக இக்கருத்து திருத்தம் கண்டது.(22)

2. ஆரியப் படைஎடுப்பு என்று மேற்கொள்ளப்பட்டு சிந்து வெளி நாகரிகம் அழிக்கப்பட்டது என்கிற கருத்து மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. மேய்ச்சல் இனப்பண்பாடுடன் கூடிய ஆரிய மொழிக் குழுவினர் பல நூற்றாண்டு காலம் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல நுழைவுப் புலன்களின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். முதிர்ச்சியடைந்த சிந்துவெளி நகர நாகரிகம் வீழ்ச்சியடைந்த பின்பே ஆரிய மொழிக் குழுவினரின் நுழைவு தொடங்கியது. சிந்துவெளி நாகரிகம் திடீரென அழியவில்லை நகர நாகரீக வீழ்ச்சிக்கு ஆரியப் படையெடுப்பு ஏதும் காரணமில்லை.(23)

சற்று விரிவாகப் பார்ப்போம்: இந்தோ-அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய அனைத்து மக்களையும் நாம் ஆரியர் என்கிறோம். அவர்களது இன அடையாளங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. மொழி அடையாளத்தில் அடிப்படையிலும், சமூக உயர்நிலை, சடங்கு ஆசார நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலுமே ஆர்ய என்னும் சொல் ரிக் வேதத்தில் பயிலப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் சமஸ்கிருதம் பேசுகிற உயர் நிலையினரே ஆரியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து மேய்ச்சல் இனச் சமூகமாகப் புறப்பட்ட இவர்கள் பரவல் குறித்து முன்பே குறிப்பிட்டோம். இங்கு வந்த ஆரிய மொழியினருக்கும் ஈரானுக்கும் (பழைய இரானிய மொழியினர்) இருந்த தொடர்பைப் பற்றியும் சொன்னோம். போரிடும் உயர்நிலையினர், சடங்குகளை நிகழ்த்துவோம், உற்பத்தியாளர்கள் என்கிற பிரிவுகள் இரு சமூகங்களிலும் பொதுவாக இருந்தன.

இந்தோ-ஈரானிய எல்லைப்பகுதி ஆப்கானிஸ்தான் வழியாக நீர்ப்பரப்பில் (சப்த சிந்து) பகுதியில் நுழைந்த ஆரிய மொழியினரை வெறுமனே நாடோடிகள் எனச் சொல்வது இயலாது. மேய்ச்சல் இனத்தவர் அல்லது நாடோடி மேய்ச்சலினத்தவர் என்பதே பொருந்தும். ஆடு, மாடுகள், குதிரைகள், சக்கர வண்டிகள் ஆகியவற்றுடன் வந்த இவர்கள் சிறிய அளவில் விவசாயமும் செய்தனர். விவசாயிகளைப் போலவே மேய்ச்சல் இனத்தவர்களுக்கும் நீர்விவசாயம் முக்கியம். எனவே ஆற்றங்கரைகளை ஒட்டியே இவர்களின் பயணம் அமைந்தது. அடிக்கடி திசைமாறும் சட்லஜ் போன்ற நதிகள் திசைமாறும்போது அவர்களும் இடம் பெயர நேர்ந்தது. புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடித் தேடி அவர்கள் நகர வேண்டியதாயிற்று. பல்லாயிரக்கணக்கில் இவர்கள் கைபர் கணவாய் வழியாகப் புகுந்து பஞ்சாப் பகுதியில் குடியேறினார்கள் என்பதில்லை. சிறிய எண்ணிக்கையிலான பல குழுக்கள் பல்வேறு நுழைபுள்ளிகள் வந்தனர். இதனைத் தவளைப் பாய்ச்சல் குடிபெயர்ப்பு என்பார் ரொமிலா(24).

அதாவது A என்னும் குழுமம் X க்குச் செல்கிறது. A யில் ஒரு பிரிவு மேலும் சிறிது தூரம் சென்று Y யை அடைகிறது. B யில் உள்ள ஒரு பிரிவு இன்னும் சிறிது அகன்று Z அய் அடைகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை அவை பரஸ்பரம் உறவு கொண்டுள்ளன. அவை சிறு தொலைவுகள் நகர்கின்றன. வெவ்வேறு திசைகளில் அவற்றின் நகர்ச்சி உள்ளன. இந்த நகர்ச்சியின் ஊடாக பெருந்தொகையில் மக்களோ, கலாச்சாரமோ இடம் பெயர்வதில்லை. புதிய கருத்துக்கள், புதிய தொழில் நுட்பங்களுடன் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து வருவதாகவே இந்த இடப்பெயர்வுகள் அமைந்தன.

இவ்வாறு இடம் பெயர்ந்து வருகிற மேய்ச்சல் இனத்தவருக்கும் ஏற்கனவே அங்கு நிலைபெற்றுள்ள உள்ளூர் விவசாயச் சமூகத்திற்குமான உறவு சிக்கலானது. எப்போதுமே அது மோதல் உறவாக இருப்பதில்லை. மேய்ச்சல் சமூகமும் விவசாயசச் சமூகமும் ஓரளவு ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கவும் நேர்ந்தது. மேய்ச்சல் இனத்தவர் கொணரும் பொருட்கள் விவசாய மக்களுக்கும், இவர்களின் விளை பொருட்கள் மேய்ச்சல் இனத்தவருக்கும் தேவையாயிருந்தது. தவிரவும் மேய்ச்சல் சமூகத்தினர் ஓட்டி வரும் இடைகளை விவசாய நிலங்களில் தங்க வைப்பதன் மூலம் கால்நடைகளின் கழிவுகள் நிலங்களுக்கு உரமாயின.

எனினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்த உறவு சுமூகமாகவே இருந்ததில்லை. ஆரியப் படையெடுப்பு இல்லை என்பதன் பொருள் திரைப்பாடல்களில் வருவதுபோல ஆயிரமாயிரம் ஆயுதப் படையினர் குதிரைகள் மீது பறந்து வந்து தாங்கி நகரங்களையும் ஊர்களையும் அழிப்பது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பது மட்டுமே. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் தாசர்கள் அல்லது பாணிகள் எனப்படும் உள்ளூர் மக்களுக்கும் இடம்பெயர்ந்து வந்த ஆரிய மொழியினருக்கும் இடையில் மோதல்களும் இருக்கவே செய்தன. நாசர்களில் இந்த அல்லது அந்த கிராமத்தை (தாசபுரம்) தாக்குவதற்கு உதவி வேண்டி இந்திரன், அக்னி போன்ற கடவுளரை வணங்குவதாக ரிக்வேதத்தில் பல பாடல்கள் உண்டு. இந்தத் தாக்குதல்களின் நோக்கமெல்லாம் கால்நடைகளைக் கைப்பற்றுவதுதானேயொழிய அவர்களது நாட்டை வெல்வதல்ல. நமது சங்க இலக்கியங்களில் வரும் ஆநிரை கவர்தல் போல. சிறிய அளவிலான சூறைத் தாக்குதல்களே அவை. பத்து மன்னர்கள் பங்கு பெற்றதாகக் கூறப்படும் அந்தப் புகழ் பெற்ற போரும் கூட ராவி நதி நீர் தொடர்பான ஒரு பிரச்சினையே. சிறிய பிரதேசங்களுக்குள் நடைபெற்றவை அவை. ரிக் வேதத்தைப் பொருத்தமட்டில் சொத்துக்கள் என்றால் பசுக்கள் மற்றும் குதிரைகளே. தனஸ்துதி பாடல்களில் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் இவை வேண்டப்படுவதைக் காணலாம். தானியங்கள், பயிர்கள் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களைக் காட்டிலும் கால்நடைகள் குறித்த சொற்களே ரிக் வேதப் பாடல்களில் அதிகம்.

உள்ளூர் மக்களின் மொழியும் புலம் பெயர்ந்து வந்த மக்களின் மொழியும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. உள்ளூர் மக்கள் பேசிய மொழி பூர்வ திராவிடம் அல்லது அஸ்ட்ரோ-ஆசியவாதம் மொழிக் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது மொழிபெயர்ப்பாளர்களின் கருத்து. ஆரிய மொழியினரின் வருகைக்கு முன்பு இம்மொழிகளும் திபேத்தோ-பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையுமே (வடகிழக்கிலும், இமயமலை அடிவாரத்திலும் பேசப்பட்டவை) துணைக் கண்டம் முழுவதும் பரவியிருந்தன. அஸ்ட்ரோ ஆசியாவின் மொழிகள் (குறிப்பாக முண்டா) மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கிலிருந்தன. திராவிட மொழிகள் இன்றுள்ளதைப்போல தென்னிந்தியப் பகுதியில் இயங்கவில்லை. பலூசிஸ்தான் பகுதியில் இன்றும் வழக்கிலுள்ள ப்ராஹிய் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் பெயர்ந்து வரும் மக்கள் குழுமத்தில் எண்ணிக்கை சிறிதாக இருக்கும்போது கலப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மொழி, திருமண உறவு, சடங்கு வடிவங்கள் ஆகியவற்றிலும் இத்தகைய பரிமாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். இருமொழிச் சமூகமாக அது மாறுகிற வாய்ப்பும் உண்டு. இத்தகைய மொழி கலப்பு மிகுகிற போது யஸ்கர் போன்ற வல்லுனர்கள் உருவாகி அவர்களின் விளக்கங்களை அளிக்கவும் பாணினி போன்றவர்கள் (கி.மு. 4ஆம் நூ.) இலக்கண விதிகளை உருவாக்குவதற்கும் அவசியம் ஏற்படுகிறது. மாற்றங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்துகிற முயற்சியாக அது அமைகிறது.

ஆரிய மொழியினர் இங்கு நுழைகிறபோது ஹரப்பா நகர நாகரிகம் வீழ்ச்சியடைந்திருந்ததை நாம் மறந்துவிட இயலாது. உள்ளூரிலிருந்த விவசாயச் சமூகத்தை பாதுகாக்க வலுவான அமைப்பு ஏதுமில்லை. மேய்ச்சல் இனமக்கள் இங்குள்ள ஆடுமாடு வளர்ப்போரைத் தாக்குகிறபோது இங்கிருந்த விவசாயச் சமூகம் ஏதோ ஒரு வகையில் ஆரிய மொழியினருடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவும் சமாதானமாகப் போகவும் தயாராக இருந்தது எனவே புலம்பெயர்ந்து வந்த மேய்ச்சல் இனத்தவர் உள்ளூர் மக்கள் மீது ஏதோ ஒரு வகைகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவே புதிய உறவுகள் அமைந்தன. ஆரியப் படை எடுப்பு இல்லை என்பதன் பொருள் ஆரிய மொழிகளில் ஆதிக்கம் உருவாகவில்லை என்பதல்ல. இந்த ஆதிக்கம் போர்மூலமான அடிப்படையில் அடிமைப்படுத்துதல் என்கிற வகையில் நிகழவில்லை என்பதே நாம் சொல்ல வருவது.

ரிக்வேத மொழியிலேயே உள்ளூர் மொழிச் சொற்கள் (பூர்வ திராவிடம் அல்லது அஸ்ட்ரா ஆசியாடிக்) ஏராளமாக ஊடுருவி உள்ளன என்பதை மொழியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். இதில் சுவையான அம்சம் என்னவெனில் இவ்வாறு ஊடுருவியவற்றில் விவசாயம் சார்ந்த சொற்கள் அதிகம். கலப்பை எனப் பொருள்படும் வங்கலம், கலம், உளுகலம் முதலிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய மொழிகளில் ஆங்கிலம் இன்று கலந்துள்ளதைக் காட்டிலும் பலபல மடங்கு அதிகமாக சமஸ்கிருதத்தில் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்கின்றனர்(25). பேச்சு வழக்கில் மட்டுமின்றி சடங்குப் பாவிப்புகளிலும் கூட இது நிகழ்ந்துள்ளது.

வெறும் சொற்கலப்பாக வந்து மொழி அமைப்பிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டன. திராவிட மொழிக் குடும்பமும், இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை. மொழியியலாளர்கள் திராவிட மொழிகளை ஒட்டியயல்பானவை’ என்பர். அதாவது சொல்லுடன் சொல் பகுதி நிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையக் கூடியவை. இந்தோ அய்ரோப்பிய மொழிகள் - பின் வளைவியல் தன்மையுடவை. சொல்லிறுதியில் சிதைவு ஏற்பட்டு இணையக் கூடியவை. இந்தோ ஆரிய (சமஸ்கிருதம்) மொழியில் திராவிட மொழி அமைப்பு ஊடுருவியுள்ளது. நான்கு வகை ‘ட’ ஒலிப்புகள், ‘ண’ ஒலிப்பு முதலிய பின்வளைவு மெய்யொலிகள் பூர்வ திராவிடக் கொடை என்பர். சொற்றொடரியல், புவியியல் மற்றும் இலக்கண வடிவங்களிலும் சமஸ்கிருதத்தில் பூர்வ திராவிடக் கூறுகள் உண்டு.

ஒரு கேள்வி இப்போது எழுகிறது. ஆரியர் & தாசர் என்பது இரு வெவ்வேறு இனங்களில்லையா? இந்த முரணை ரிக்வேதம் பிரதிபலிக்கவில்லையா? வெற்றி கொண்டு அடிமையாக்கப்பட்ட கருப்புநிற தாசர்கள் திராவிட இனத்தவரில்லையா? வெள்ளைத் தோல் ஆரியர், கறுப்புத் தோல் தாசர் என்கிற அடிப்படையிலேயே இங்கு வருகிற / சாதிய ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்படவில்லையா? இப்படியான ஒரு கருத்து கலந்த சுமார் இருநூறு ஆண்டுகளாக இங்கே ஆதிக்கம் செலுத்துவதை நாம் அறிவோம். வருண சாதியத் தோற்றத்தை இன அடிப்படையில் அணுகும் முயற்சியின் விளைவு இது. இன்று இன அடிப்படை அணுகல் முறையை அறிஞர்கள் ஏற்பதில்லை என்பதை அறிவோம். சாதிகளின் தோற்றம் குறித்த இத்தகைய இன அடிப்படை அணுகல் முறையை முதன் முதலில் வலுவாக மறுத்தவர் டாக்டர் அம்பேத்கர். இது குறித்தும் பின்னர் பார்ப்போம்.

ஆரிய மொழிகளைப் பேசுகிற அனைவரையும் ஒரே ஆரிய இனம் எனக் கூறுவது எவ்வகை தவறோ அது போலவே திராவிட மொழிகளைப் பேசுவோர் அனைவரையும் ஒரே திராவிட இனம் எனக்கூற இயலாது. இந்தோ அய்ரோப்பிய மொழிகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் இவை அனைத்தும் ஒரே பூர்வ (இந்தோ ஐரோப்பிய மொழி) தாயிலிருந்து பிறந்தவை எனக் கருதினார் வில்லியம் ஜோன்ஸ். அதே போல திராவிட மொழிகள் அனைத்தும் ஒரே பூர்வ திராவிடத்திலிருந்து பிறந்தவை, அது தமிழாக இருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. தமிழ்தான் பூர்வ திராவிடம் என்கிற கருத்தை மொழியிலாளர்கள் ஏற்பதில்லை. தாசர்களைத் திராவிட இனமாய் பார்ப்பதையும் ஏற்க முடியாது. கறுப்புத் தோல், சப்பை மூக்கு முதலான தாசர்கள் குறித்த ரிக்வேத விவரணங்களுக்கு அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து ஒரு நூற்றாண்டு காலம் இங்கே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தாசர்களின் உடலியல் ரீதியான வேறுபாடுகள் குறித்த குறிப்பு ரிக்கின் கடைசிப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இந்த வேறுபாடு வலிமையானதாக இருந்திருந்தால் தொடக்கம் முதலே இது பற்றிய பதிவுகள் இருந்திருக்கும். ரிக்வேதத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் இறுதியிலும் பத்தாம் அத்தியாயத்திலும் மட்டுமே இவை குறிக்கப்படுகின்றன. வித்தியாசமான மொழி பேசுபவர்களாகவே (‘மருத்ரவாக்’ தாசர்கள் அறியப்படுகின்றனர். ஆரிய வர்ணம் / தாச வர்ணம் என்பன மொழி அடிப்படையிலான வேறுபாடுகளையே காட்டுகின்றன. ஆரியர்களின் சடங்குகளைச் செய்யாதவர்களாகவும் (‘அவ்ரதா’), அவர்களின் வழமைகளைப் பின்பற்றாதவர்களாகவும் (‘அகர்மன்’) தாசர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அலெஸ்தாவின் கூட ‘தாஹ்யூ’ (தாசர்) என்பது ‘மற்றவர்’ என்கிற பொருளிலேயே கையாளப்படுகிறது. ‘வர்ணம்’ என்கிற சொல் நிறம் என்கிற பொருளில் மட்டுமின்றி உறை என்கிற பொருளிலும் பயன்படுத்தப்படுறிது. ‘வர்ணம்’ என்கிற சொல்லாட்சிகளை எல்லாம் தொகுத்தால் அவற்றில் பெரும்பான்மை தோலின் நிறத்தைக் குறிப்பனவல்ல. குறியீட்டு ரீதியிலான பயன்பாடுகளே மிகுதி. காலையில் வர்ணம், பகலில் வர்ணம், இரவில் வர்ணம், மேகத்தில் வர்ணம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன.

‘அன்சா’ என்கிற சொல்லை ‘அ+நசா’ எனப் பிறித்து மூக்கற்றவர், சப்பை மூக்குடையவர் எனத் தாசர்கள் வருணிக்கப்படுவதாக விளக்கமளிப்பது வழக்கம். 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரையாசிரியர் சாயனர் அளிக்கும் விளக்கங்கள் முற்றிலும் இன அடிப்படையற்றது. ‘அன்-அஸ’ எனப் பிரித்து ‘வாய் அற்றவர்’ அதாவது மொழி அற்றவர், பேச்சற்றவர் என்கிற விளக்கத்தை சாயனர் அளிக்கிறார். அதாவது சமஸ்கிருத மொழி தெரியாதவர் என்ற பொருளில், கருப்புத்தோல் என்கிற பொருளில் அடிக்கடி விளக்கமளிக்கப்படும் ‘த்வஸம் கிருஷ்ணம்’ என்கிற சொல்லுக்கும் சாயனர் அளிக்கும் பொருள் வித்தியாசமானது. ‘க்ருஷ்ணன்’ என்கிற அரக்கனின் தோலை இந்திரன் கிழித்துப் போட்டதையே இது குறிக்கிறது என்பார் அவர்!

தவிரவும் தாசர்கள் கறுப்புத் தேவர்கள் என்றால் ஆரியர்கள் வெள்ளை அல்லது சிவப்புத் தோவர்கள் என்கிற பதிவு இருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லை. ஆரிய, தாச என்கிற சொற்கள் பெயர்களாக மட்டுமின்றி வினைகளாகவும் (ஆர்யந்தி-மதித்தல் / தாசதி-அவமதித்தல்) பயன்படுத்தப்படுகிறது. எனவே இது இனத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்க முடியாது என்பார் ரொமிலா.(26)

தாசர்கள் எப்போம் ஆரியர்களுடன் மோதிக்கொண்டே இருப்பதில்லை. ஆரியர்கள் ஆரியர்களுடன் போரிட்டதற்கும் பதிவுகள் உண்டு. சடங்குகள் புரியும் ஆரியர்களுக்கு (ர்த்விக்) ஆதரவளித்த தாசத் தலைவர்களும் உண்டு. பல்புதன், துருங்கன், பிருகு, சம்பரன் முதலிய தாசத் தலைவர்கள் ர்த்விஜ்களுக்குத் தட்சிணை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் சம்பரன் போன்ற தாசத் தலைவர்கள் ஆரியர்களின் எதிரிகளாகவும் கருதப்பட்டனர். தாசபுரங்கள் அவற்றில் கால்நடை வளத்திற்காக அடிக்கடி ஆரியர்களால் தாக்கப்பட்டது.

சுருக்கமாகச் சொல்வதானால் ஆரிய / தாச வேறுபாடு இன அடிப்படையிலானதன்று. மொழி / சமூக / சலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையிலானதே. தாசர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நிலைப்படுத்தப்பட்டனர். அடிமைகளாக்கப்பட்டனர். தம்மிடமுள்ள கால்நடை வளத்திற்காக எதிரியாகக் கருதப்பட்டார்கள் இகழ்ச்சிக்குரிய வறுமை வயப்பட்டவர்களாயினர், சூத்திரர்களாக்கப்பட்டனர். வேள்விகள் மற்றும் சடங்குகள் செய்யும் உரிமைகளற்றவராயினர். வேடிக்கை என்னவெனில் ஒரு காலத்தில் இந்தச் சடங்குகளைச் செய்ய மறுத்தவர்கள் பின்னாளில் சடங்குகளுக்கு உரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். சதபத பிராமணம் தாசர்களான அசுரவம்சா வழியினர் எனக் குறிப்பிடப்பட்டது.(27)

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,

உங்க நிர்வாக குழுவில விமர்சகர்னு ஒரு போஸ்ட் க்ரியேட் பண்ணி என் பெயரையும் சேர்த்துக்குங்க. நானும் தமிழந்தாங்க.. அதோட திராவிடன்..

ஜோவையும் தருமியையும் திராவிடனா பாக்க முடியும்னா என்னையும் பாக்கலாமில்லையே.. என்ன.. இந்திய நாடு என் வீடு.. இந்திய மக்கம் என் குடும்பம்னு இடைஇடையில எதிர்க்குரல் குடுப்பேன். அவ்வளவுதான்..

அத சகிச்சிக்க முடியும்னா சேத்துக்குங்க.. இல்லன்னா வேணாம்:))

இரா.சுகுமாரன் said...

//ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே//

எல்லா ஆரியர்களும், சேரியில் பெண் எடுத்து பெண் கட்டினால் நாங்கள் எதற்கும் தயார்.

டிபிஆர்.ஜோசப் said...

அட யார்யா இந்த சுகுமாரன்,

என்னோட நிழலா? நான் சொல்ல வந்தத அப்படியே சொல்லிட்டீரு..

வாழ்க.. எனக்கும் ஒரு ஆள் இருக்கு முத்து..

லக்கிலுக் said...

///you can have Hindi as an
optional language without need
to pass.Anyway there are hindi
knowing and speaking Kuppans.///

Dear anony sir, Don't you have guts to say your name?

Anyway, If Hindi is an optional language, not need to pass... there will be no objection to learn it.....

Yeah...I also know hindi speaking kuppans... they are living in Bihar... Actually his name is Kuppanshah.... :-)

நியோ / neo said...

>> கொ.ப.செ : நியோ

(கடும்போட்டிக்கிடையில் இந்த பதவியை இவருக்கு கொடுக்க காரணம் இவரின் அனுபவம் தான்.பல இடங்களில் பின்னூட்டங்களில் உணர்ச்சிகரமாகவும், தகவல்பூர்வமாகவும் பட்டையை கிளப்புவார்) >>

"தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்க வா என்றாலும் இரண்டையும் ஒன்றென்று கருதுபவன்" இந்த நியோ!!

தலைவரும, செயல் தலைவரும்் ஏனைய உடன்பிறப்புகளும் எமக்களித்த பொறுப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்!! :)

தோழியர் 'அப்படிப்போடு' அவர்களுக்கும் சிறந்த பொறுப்பை - தலைவரும் மற்ற பொறுப்பாளர்களும் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர்தம் பெயரை முன்மொழிகிறேன்! :)

வரவனையான், நயனம் போன்றோருக்கும் ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வுக் குழு ஆகியவற்றில் உரிய பதவிகள் தந்து அழகு பார்க்க எம்மியக்கம் தயாராயுள்ளது என்பதை எண்ணியெண்னிப் பார்த்துப் பெருமையடைகிறேன்! :)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

- புரட்சிக்கவிஞன்

Anonymous said...

//Neelakanta Sastry, Rengasawamy
Iyengar contributed immensely to
history of tamils.//

Oh yeah. Especially Neelakanta Sastry contributed immensely.
Please check the fact with the tamils in Malaysia & Singapore.

In 1950s Malaya University wanted to open a department for indian studies. our good friend suggest Sanskrit. Local tamil leaders in Malaya came to the streets and protested. The government realised the situation and introduced Tamil.

Tamil would not be an official language now if the local leaders didnt woke up at that time.

வரவனையான் said...

ஒரு தொண்டனின் மனச்சுமையை உண்ர்ந்துகொண்ட தானைத்தலைவன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் முத்துவின் கரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தாய் கழகத்துடன் இனைந்தே இருப்பது என்று , பொதுக்குழு, செயற்குழு,தீர்மானக்குழு,ஆட்சிமன்றக்குழு,ஆகிய அனைத்து குலுக்கலின் சீ, குழுக்களையும் கூட்டி ஏகமனதாக நான் ஒருவனே தீர்மானம் நிறைவேற்றி தாங்கள் பார்த்து இந்த கட்சி பதவிகளை காட்டிலும் வரவனையானின் சொந்த தொழிலான மாடு சம்மந்தமான கால்நடைத்துறையின் அமைச்சர் எங்கிற சின்ன பதவி தந்தால் வைகோ போன்ற புரட்சியாளர்களின் தயவால் சீக்கிரம் புகழ் பெறலாம் என்பது சின்ன அவா.

நந்தன் | Nandhan said...

தமிழ் தேசியமும் திராவிட சித்தாந்தமும் எங்கே மாறு படுகிறது? விளக்கமுடியுமா?

1. தமிழ்/தமிழின் அடையாளங்களை காப்பது
2. சாதியின் பெயரால் தாழ்த பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது
3. பகுத்தறிவை வளர்ப்பது ஆகியவை இந்த இயக்கத்தின் கொள்கை யெனில் - நானும் ஆஜர்.
இருப்பது வட மேரிக்கா...ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா?

thiru said...

ore kuzhapama iruke! intha nerathila ipadi our kazhagam vanthiruke! athuvum... seri ellarum sernthu amukura munadi naan joot :D

Chellamuthu Kuppusamy said...
This comment has been removed by the author.
பூங்குழலி said...

எனக்கு ஏதாவது பதவி மிச்சமிருக்கிறதா?

ஜோ/Joe said...

//ஜோவையும் தருமியையும் திராவிடனா பாக்க முடியும்னா என்னையும் பாக்கலாமில்லையே.. என்ன.. இந்திய நாடு என் வீடு.. இந்திய மக்கம் என் குடும்பம்னு இடைஇடையில எதிர்க்குரல் குடுப்பேன். அவ்வளவுதான்..

அத சகிச்சிக்க முடியும்னா சேத்துக்குங்க.. இல்லன்னா வேணாம்:))//

ஜோசப் சார்,
அது என்ன ஜோவும் தருமியும் திராவிடர்களில் தனித்து தெரிகிறார்கள் உங்களுக்கு ?

நாங்க மட்டும் இந்தியன் இல்லைண்ணு சொல்லுற மாதிரி மத்தவங்க போல சொல்லாதீங்க ..

இப்போ சொல்லுறேன் கேட்டுகுங்க...

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!

Muthu said...

ஜோசப் சார்,

1.விமர்சகர் நிர்வாக குழுவில் இருக்கமுடியாது.

2.நீங்கள் தமிழர்,திராவிடர் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

3.உங்களுக்கு தலைமைகழக கெளரவ ஆலோசகர் பதவி காத்து இருக்கிறது.

3.இந்தியா என் வீடு.இந்தியமக்கள் என் மக்கள் என்பதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.

(இதுபோன்ற விஷயங்களில்தான் நாம் முரண்படுகிறோம்.நீங்கள் சிலரின் பிரச்சாரத்தை நம்பி எங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் என்று நினைக்கிறீர்கள். நாங்கள் எங்கள் உரிமைகளை மட்டுமே கேட்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இன்று இன அடிப்படை தவறு என்று சொல்லும் புனித பிம்பங்கள் நாளை மதம் அடிப்படையும் தவறு என்று சொல்லி எல்லோரையும் இந்துவாக மாற சொன்னால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

Muthu said...

அன்பின் ஐயா குப்புசாமி செல்லமுத்து,

உங்களின் பங்கு வணிகம் குறித்த அருமையான வலைத்தளத்திற்கு நாங்கள் வாசகர்கள்.

நீங்கள் ஊக்கமூட்டுவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.

உங்கள் பின்னூட்டத்தை பெரிதாக்கி ஒரு கட்டுரையாக தரமுடியுமா?

Muthu said...

கொள்கை பரப்பு செயலாளர் முன்வைத்த ஆலோசனையை ஏற்று வீரமங்கை "அப்டிபோடு"வை பொதுசெயலாளர்களில் ஒருவராகவும் மகளிர் அணி பொறுப்பாளராகவும் நியமிக்கிறோம்.

Muthu said...

நாகை சிவா மற்றும் வரவணையான் ஆகையோர் ஏதோ நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதை போல் நினைத்து இருப்பதாக தெரிகிறது.

அவர்கள் கேட்கும் பொறுப்புகளை வைத்து சொல்கிறேன்.

கட்சி பணிகளில் என்ன பொறுப்பு வேண்டும் என்று சொல்லவும்.ஆவன செய்யப்படும்.

இரா.சுகுமாரன் said...

Kuppusamy Chellamuthu said

//காவிரியில் தண்ணீர் தராததால் கன்னடர் திராவிடர் அல்ல என்ற வாதமும் நியாயப்படுத்தப்பட்டது அல்ல. பங்காளிகளுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் பங்காளிகளே//

பங்காளிச்சண்டை தான் பிரமோத் உயிரை குடித்தது.

இப்படி அநியாயமாக நியாயப்படுத்த வேண்டாம்

Anonymous said...

தலித் இட ஒதுக்கீடு குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே.இட ஒதுக்கீட்டில் உங்களுக்கு உள்ள
பிடிப்பு இவ்வளவுதானா.உங்கள் திராவிடம் தலித்களைப் புறந்தள்ளிய திராவிடம். இது ஒரு
ஜாதிக் கூட்டணி
வி.சியில் ஒ.சி

Muthu said...

ஓரு நண்பர் இடஒதுக்கீடு என்றும் தலித் என்றும் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார்.

காமெடி காட்சிகள் படத்தில் இருப்பது நல்லது என்ற காரணத்தால் இவை அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால் காமெடி தெளிவாக இல்லை.விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.

Chellamuthu Kuppusamy said...

நன்றி முத்து (தமிழினி) அவர்களே. 'பங்கு வணிகம்' வலைத்தளம் குறித்தான உமது வாசகம் ஊக்கமூட்டுவதாக உள்ளது.

திராவிடம் குறித்த என் பின்னூட்டத்தை நிச்சயமாக ஒரு கட்டுரையாக எழுதித் தருகிறேன். ஏதோ என்னால் முடிந்தது.

-குப்புசாமி செல்லமுத்து

டிபிஆர்.ஜோசப் said...

நாங்க மட்டும் இந்தியன் இல்லைண்ணு சொல்லுற மாதிரி மத்தவங்க போல சொல்லாதீங்க ..//

சேச்சே.. அப்படி நான் சொல்ல வரவில்லை.

பொதுவாகவே கிறித்துவன் என்றால் அவன் திராவிடன் இல்லை என்பது சிலருடைய வாதம். அதனால்தான் தருமியையும் உங்களையும் என்னுடன் ஒப்பிட்டுச் சொன்னேன்..

வேடிக்கையாக நான் சொன்னதை நீங்க விவகாரமாக புரிந்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். (இந்த குசும்புதான வேணாங்கறது? என்று நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்)

முத்து, ஜோ: ரிலாக்ஸ் .. எப்ப பார்த்தாலும் இப்படி டென்ஷனாருந்தா எப்படி?

அதுவும் நம்ம பக்கத்து ஊர்க்காரங்களா இருந்துக்கிட்டு நக்கலடிக்காம இருக்கறத பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு..

Muthu said...

கெளரவ ஆலோசகர் பதவி ஓ.கேவா சார்?

வரவனையான் said...

"i think that we are in power now"

சரி தலைவா! நீங்கள் பார்த்து கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் பார்த்து எனக்கு என்ன பொறுப்பென்று நாளை காலைக்குள் அறிவித்தால் போதும், என்ன என் ரசிகர் மன்ற தம்பிகள்தான் என்ன பதவி உங்களூக்குன்னு நச்சரிக்கிறாய்ங்க, மற்றபடி நமக்கு இந்த பதவியெல்லாம் தோள்ல போடுற துண்டுகூட இல்ல அதையும் தாண்டி பெப்சி கிளாசு மாதிரி ஊத்தனமா குடிச்சமா கசுக்கி கிழே போட்டமாங்குற மாதிரித்தான், ஆனா கொள்கையிருக்கு பாருங்க அது சரக்கு மாதிரி அது தான் தல மேட்டரே.


டேய் யார்டா அது ! நம்ம தலைவரு பரிட்சை எழுத போறவழியில 40x40 வாழ்த்து தட்டி வைக்கச்சொன்னேல்ல வச்சாச்சா....அப்படியே பெரிய சைஸ் போஸ்டர் அடிச்சு "வெற்றிகரமா பரீட்சை எழுதிட்டுவரும் தலைவர் அவர்களே வருக வருக ! அவரு வரும்போது அவரு கண்ணுல படற மாதிரி ஒட்டிட்டு வாங்கடா....

லக்கிலுக் said...

காமெடி செய்பவர்கள் யார்?

விடாமல் சிகப்புக் கொடி பிடிப்பவர்களா?

Muthu said...

//காமெடி செய்பவர்கள் யார்?

விடாமல் சிகப்புக் கொடி பிடிப்பவர்களா//

லக்கி லுக்,

அவர்கள் இல்லை...

இங்கேயே பின்னூட்டங்களை பார்க்கவும்.

Muthu said...

வரவணை,

சிந்தனை கிட்டங்கியில் உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் வரவணை ஒன்றிய செயலாளர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள்.

Muthu said...

ஹமீது.

நன்றி நண்பரே.

வரவனையான் said...

தம்பி சென்னை மாவட்டம் ! நமக்கு எப்பவும் கருப்புக்கொடிதான், அதுவும் ஈரோட்டுக்கருப்பு.


(லக்கிலுக் என்னைத்தெரியவில்லையா)

Darren said...

தோ வந்துட்டேன் .......

Muthu said...

நண்பர்களெ,

அவசியம் இல்லாமல் ஆரியர்கள் என்ற வார்த்தையை உபயொகிக்க வேண்டாம்.

நம் மீதான வசவுகளுக்கு மட்டும் நாகரீகமாக பதில் சொல்லுவோம்.

வரவனையான் said...

தலைவா ! நன்றி. ஆனா ஒரு சந்தேகம், இரண்டு பொறுப்பு கொடுத்து இருக்கிங்களே பின்னால சுப்ரீம் கோர்ட்டு அது இதுன்னு சொல்லி பதவியை ராஜினாமா செய்வச்சிராதிங்க..... என்னாதான் பதவி பெப்சி கிளாசுன்னாலும் அது இல்லாம ராவா முடியாதுல....

ஆம தல' ராஸ்கலுக்கு தமிழ்ல என்ன அர்த்தம்

நாகை சிவா said...

சரி முத்து. கழகம் பார்த்து என்ன பதிவி கொடுத்து என்னை கட்டாயபடுத்தி ஏற்க சொல்கிறதோ, அதை கழகத்திற்காகவும், திராவிட வளர்ச்சிக்காகவும் ஏற்க தயார்

thiru said...

கழகத்தின் கொள்கை, லட்சியம், அதை அடையும் வழி,யுக்திகள். கழகக்கொடிம் இலட்சினை எல்லாம் எப்போ யாரு உருவாக்குறது?

என்னை உறுப்பினரா சேர்த்துட்டீங்களா [நான் திராவிடன் தானா]? கழகத்தின் உலக தலைமை பொறுப்பு கிடைக்குமா?

லக்கிலுக் said...

//(லக்கிலுக் என்னைத்தெரியவில்லையா)//

உண்மையிலேயே தெரியவில்லை வரவனையான்.... ஆனாலும் வேறு ஏதோ சம்பந்தம் இருப்பது போல தெரிகிறது.... எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்....

மாயவரத்தான் said...

கொ.ப.செ. பதவி காலியாக இருக்கிறதா?!

Sivabalan said...

//அதுக்குதான் நம்ம கொள்கைகளை Lok Parithran மாதிரி//

மயிலாப்பூர் வேட்பாளர் சந்தானகோபால் வாசுதேவிற்கு ஜாதி அடிப்படையில் முக்கியதுவம் கொடுத்ததால் Lok Parithran பிளவுற்றது.

இந்த பதிவுக்கும் இதற்கும் நிறைய சம்மந்தம் உள்ளது!!

எப்படி என்றால், இந்த ஜாதியின் ஆளுமையை ஒடுக்கவேதெ திராவிடத்தின் குறிக்கோளில் ஒன்று!!


முடிந்தால் இங்கே சென்று பார்க்கவும்

http://www.hindu.com/2006/05/18/stories/2006051819940300.htm

gulf-tamilan said...

என்னையும் ஒரு உறுப்பினராக சேர்த்துக்குங்க!!!?? too late??

Muthu said...

10 நாளாக வீட்டில் இணையத்தொடர்பு இல்லாததால் பலவற்றை கவனிக்க முடியவில்லை:-((...
தி.ரா கும்பலில் இருந்து கொண்டு இந்த பதிவிற்கு பின்னூட்டம் இடாவிட்டால் எப்படி... இதோ வந்துட்டேன்... நான் பெரும்பாலும் ஒரு மௌன வாசகன். அதனால் பெரிய பதவியெல்லாம் வேண்டாம். seattle மாவட்ட செயலர் மட்டும் போதும்.:-)

Santhosh said...

நிறைய பேர் இட்ட பின்னுட்டத்தை படிக்கும் பொழுது நிஜமா சொல்றாங்கலா இல்ல நக்கல் அடிக்கிறாங்கலான்னு தெரியலை.

ஜோ/Joe said...

//முத்து, ஜோ: ரிலாக்ஸ் .. எப்ப பார்த்தாலும் இப்படி டென்ஷனாருந்தா எப்படி?

அதுவும் நம்ம பக்கத்து ஊர்க்காரங்களா இருந்துக்கிட்டு நக்கலடிக்காம இருக்கறத பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு..
//
ஜோசப் சார்,
தருமி கிறிஸ்தவ மதத்துல இல்லைன்னு சொல்லிட்டாரு .அப்போ அவரு எந்த கணக்குல வருவாரு ?

நானும் நக்கலாதான் சொல்லுறேன் சார்..நீங்க சரியா புரிஞ்சுகல்ல .கடைசில பாரதி பாட்டெல்லாம் சொன்னேனெ .அது நிஜமா சொன்னது தான்.

krishjapan said...

தாய்மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன், பகுத்துணர்வால் மனிதன் என வாழ்வதற்கு முயன்று கொண்டிருப்பவன் என்ற முறையில், தன் உழைப்பால்/சிந்தனையால் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், தன் இனத்தாரையும் உயர்த்தும் திராவிடத் தமிழனாய் என்னையும் இனைத்துக் கொள்கிறேன்.

மானுடம் பயனுற வாழ்வதனை விட வேறு சிறப்பான வாழ்வு உண்டோ? இம்முயற்சியும் நம்மைச் சுற்றியுள்ள மானுடம் பயனடைய/உய்வடைய நம்மாலான செயல் என்றே கருதுகிறேன். முயற்சி நல்ல பலன்கள் விளைவிக்க வாழ்த்துக்கள்.

நமக்கும் ஏதாவது கவுரவமான பதவிய கொடுங்க சாமி. கவுரவத் தலைவர் பதவிய கொடுத்தா, கவுரவமா வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன்...:-)ஒரே தகுதி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது புரிந்து கொள்ளக்கூடிய, கொச்சையாகப் பேசக்கூடிய தமிழன் என்பதே (இந்தி நன்றாகத் தெரியும் என்பது பலம்தானே, பலவீனமில்லையே..)
கோபப்பட்டு, கவுரவ உறுப்பினர் பதவிய கொடுத்துராதீங்க தலைவரே...

Ravichandran Somu said...

நேரம் கிடைக்கும்போது தமிழ்மணம் பக்கம் வந்து அவ்வப்போது வாசிக்கும் வாசகன் நான். திராவிட இயக்கம் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். இயக்கத்தில் என்னை என்னையும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுங்கள். நம்ம சோழநாட்டுக்காரர் Seattle மாவட்டச் செயலாளர் கேட்டிருக்கார், நமக்கு Boston கிடைக்குமா ?!!

வாழ்த்துக்கள்.

-ரவிச்சந்திரன்

Muthu said...

வி.எஸ்.எஸ்.ரவி,

சீட்டில் வட்ட செயலாளர் பதவியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பெயர் குழுமத்தில் சேர்த்தாகிவிட்டது.

Muthu said...

கிருஷ்ணா அவர்களே,

உங்களுக்கு சப்பான் பெருநகர பதவி தரப்படுகிறது. குழுவில் சேர கூகிள் குழுமத்தில் அப்ளை செய்யவும்.

krishjapan said...

பெற்றால் கவுரவத் தலைவர் பதவி (ஜப்பான் நாட்டுக்கு மட்டுமாவது!!), இல்லையென்றால், வெளியிலிருந்து ஆதரவு....

Anonymous said...

அட! என்னப்பா இது! ஜப்பான் வட்டத் தலைவர் பதவிக்கு நாம அப்ளை பண்ணலாம்னு இருந்தா, கிருஷ்ணா முந்திக்கிட்டார். சரி, அப்ப நான் வெளியில இருந்து ஆதரிக்கிறேன்.

இயக்கம் வளர வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா, ஓஸகாவில் நீங்க எங்கே இருக்கீங்க? நானும் ஓஸகாவில்தான் (யுனிவர்சல் ஸ்டுடியோஸ் பக்கத்தில்) இருக்கிறேன்.

நன்றி
கமல்

ஜெயக்குமார் said...

//தலைவர்: குழலி

செயல் தலைவர் : தமிழினி முத்து//

நீங்கள் செயல் தலைவருன்னா? குழலி என்ன செயலற்ற தலைவரா?