Thursday, May 11, 2006

அட ஆமாங்க..நிசமாத்தான்...

இந்த பதிவு எழுதுபவர் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரத்தைப்பற்றிய ஒரு ஆழமான நடுநிலை(?) பதிவு எழுதவேண்டி பல தகவல்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதாலும்....

வேலை செய்யற தாவுல ஒரு பரிட்சை இருப்பதாலும் சில நாட்களுக்கு இங்கன எதுவும் எழுத மாட்டாருங்கோவ்....

(இப்படித்தான் சொல்லுவ..ஆனா அடுத்த நாளே வந்து பல்லிளிப்ப என்று சொல்பவர்களுக்கு நோ கமெண்ட்ஸ்)

இப்போதைக்கு சுருக்கமாக சில கருத்துக்கள் மட்டும்:

பெரிதாக அதிருப்தி இல்லாததால் அதிமுக தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவாகிவிட்டது எனலாம்.

தி.மு.க வின் செல்வாக்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் பலமும் காரணம் (இந்த இரண்டும் திருமா சொன்னது.அதில் அர்த்தமுள்ளது)

வைகோவின் காமெடி தேர்தலுக்கு அப்புறமும் தொடர்கிறது.இவருக்கு கட்சியை வளர்ப்பது பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை போலும்.

காங்கிரஸ் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக உள்ளது.

விஜயகாந்த் ஒரு சில சீட்டுக்களை மட்டு்ம் குறிவைத்து பிரச்சாரம் அழுத்தமாக செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிடித்திருக்கலாம்.ஜெவை பெரிதாக விமர்சிக்காமல் கலைஞரை மட்டும் விமர்சிக்கும் அரசியலை மாற்றினால் இன்னும் வளர்ச்சி இருக்கும்.

கூட்டணி ஆட்சி கடிவாளம் நல்ல நிகழ்வு

பா.ம.கவிற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை.டாக்டர் சிந்திக்கவேண்டும்.

சல்மா தோல்வி,ரவிகுமார் வெற்றி.இலக்கிய அரசியல்

திருமாவளவன் தன் இயங்குமுறையை,இயங்குதளத்தை மாற்றவேண்டும்.

தயாநிதி மாறன் டாட்டா விவகாரம் தோண்டப்பட வேண்டும்.

இனியாவது துக்ளக் சோ ஆளுங்கட்சியை எதிர்த்து பத்திரிக்கை நடத்தலாம். பரம்பரை பகையை தீர்த்த மக்களுக்கு நன்றி.

திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி இனிமேல் நிபந்தனையற்ற ஆதரவினை திமுக அரசுக்கு தராது. உதாரணமாக இலவச டிவி திட்டத்திற்கு எங்கள் ஆதரவு இல்லை. இலவச அரிசி,நிலம் ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிகுழு அமைத்து(அதிமுக உள்பட) பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்.

(விளக்கமான பதிவு சில நாட்களுக்கு பிறகு)

30 comments:

மாயவரத்தான் said...

91-96 ஆளுங்கட்சியை எதிர்த்து பத்திரிகை நடத்தியவர் தான் சோ.

என்னுடைய கவலையெல்லாம் நம்ம நக்கீரன்கோவாலு இவ்வளவு நாள் அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த போது அதனை எதிர்த்து 'புலன் விசாரணை' கட்டுரையெல்லாம் போட்டார். தி.மு.க. ஆட்சியிலிருந்த போது பார்ட்-டைமாக காட்டுக்கு போய் பேட்டியெல்லாம் எடுத்து வந்தார்.

இந்த தபா பொஸ்தகம் விக்க என்ன பண்ணுவாரு?!

தருமி said...

"....ஒரு பரிட்சை இருப்பதாலும் ...."//
wish you all the best in that exam.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது போல அதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் - இல்லை..இல்லை..தனித்து நின்று, மெஜாரிட்டி பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Mookku Sundar said...

//திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி இனிமேல் நிபந்தனையற்ற ஆதரவினை திமுக அரசுக்கு தராது. உதாரணமாக இலவச டிவி திட்டத்திற்கு எங்கள் ஆதரவு இல்லை. இலவச அரிசி,நிலம் ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிகுழு அமைத்து(அதிமுக உள்பட) பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்.//

அதே அதே...

//வைகோவின் காமெடி தேர்தலுக்கு அப்புறமும் தொடர்கிறது.இவருக்கு கட்சியை வளர்ப்பது பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை போலும்.//

மதிமுகவை அமிலத்துல கரைச்சு, கூவத்துல ஊத்தணும்.

//காங்கிரஸ் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக உள்ளது//

ப.சிதம்பரம் தமிழ்நாட்டு அரசியல்ல இன்னம்ய்ம் கவனம் செலுத்தணும்.சில அதிசயங்கள் நிகழலாம்.

//பா.ம.கவிற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை.டாக்டர் சிந்திக்கவேண்டும்.//

ஹை..யா...

//திருமாவளவன் தன் இயங்குமுறையை,இயங்குதளத்தை மாற்றவேண்டும்.//

நானும் ஏற்கனவே எழுதியதுதான் இது.

//தயாநிதி மாறன் டாட்டா விவகாரம் தோண்டப்பட வேண்டும்.//

ஆம். அதை போலவே மிடாஸ் மதுபான தொழிற்சாலை பற்றிய விசாரணையும், காஞ்சி/கலவை சாமிகளைப் பற்றிய விசாரணையும்.

திமுகவின் அடுத்தகட்ட தலைமை தயாராகாவிட்டால், இந்த வெற்றி அந்த பெரியவரை மரியாதையாக வழியனுப்பி வைக்க மட்டுமே உதவும். இல்லாவிட்டால் காத்திருக்கீன்றன ஏராளமான கட்சிகள்.

கலைஞருக்கு வணக்கங்களுடன் என் வாழ்த்துகள்.

gulf-tamilan said...

//சில நாட்களுக்கு பிறகு//
one day R two!!???

Pot"tea" kadai said...

//திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி இனிமேல் நிபந்தனையற்ற ஆதரவினை திமுக அரசுக்கு தராது. உதாரணமாக இலவச டிவி திட்டத்திற்கு எங்கள் ஆதரவு இல்லை. இலவச அரிசி,நிலம் ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிகுழு அமைத்து(அதிமுக உள்பட) பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்.//

வழிமொழிகிறேன்.

மற்ற விடயங்களைக் கொஞ்சம் அலசிவிட்டு எழுதுகிறேன்.

கலைஞருக்கு வணக்கங்களுடன் என் வாழ்த்துகள்.

அருண்மொழி said...

//இந்த தபா பொஸ்தகம் விக்க என்ன பண்ணுவாரு?!//

அம்மாவின் புது ஊழல்கள் பற்றி நோண்டி எடுத்து போடுவார்.

எதுவும் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு கிளு கிளு சுப்பிரமணி மேட்டர். திருப்பி ஒரு தபா போட்டால் மக்கள் படிக்காதா என்ன?

வேண்டுமென்றால் சொல்லுங்க "வலைப்பூ அத்தாரிடி" மாயவரத்தார் என்று ஒரு கவர் ஸ்டோரி ஏற்பாடு செய்து விடலாம்.

அருண்மொழி
தி.ரா.மு.மு

Sivabalan said...

//தி.மு.க வின் செல்வாக்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் பலமும் காரணம் (இந்த இரண்டும் திருமா சொன்னது.அதில் அர்த்தமுள்ளது)//

இதில் அர்த்தம் இருப்பதாக் நான் கருதவில்லை!! அதிமுக சென்ற தேர்தலில் ஒரு இடம் கூட பெறாமல், அடுத்த முறை ஆட்சியை பிடித்தது. மக்களின் மன் நிலை மாறிக்கொன்டேயிருக்கும்.

G.Ragavan said...

முத்து மிகச் சரியான பார்வை. கிட்டத்தட்ட இதே பார்வையில்தான் நானும் முடிவு அலசலைப் போட்டிருக்கிறேன். நடுநிலையோ சுடுநிலையோ தெரியாது. எனக்குப் பட்டதைப் போட்டிருக்கேன்.

வரவனையான் said...

முத்து, நலமா ?

படித்தீர்களா?http://kuttapusky.blogspot.com/2006/05/blog-post_13.html

Anonymous said...

பா.ம.கவிற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை.டாக்டர் சிந்திக்கவேண்டும்.

I am very Happy to see this.I hope they will stop destroying cuddalore and adjacent districts.Tell you what Vanniars lost interest in this guy.There is a very good reason and a fact, In cuddalore area, In the industries and in the private business you can't get job if you are associated with PMK.After I left cuddalore belt , when I came to chengalpattu industrial belt same thing was true.
so this trend doesn't surprise me.He has to reap what he did to cuddalore Fisher man and people in seathia thopu from late 80's till 2001.

Also I would like you to stop callng him as doctor.From what I know,His degree was seized long time back and he cannot practice Medicine.

//தயாநிதி மாறன் டாட்டா விவகாரம் தோண்டப்பட வேண்டும்.//

I am looking forward to this matter..

//இந்த தபா பொஸ்தகம் விக்க என்ன பண்ணுவாரு?!//

Uncle SAM needs some one to visit binladen in TORA BORA mountains.Since Govalu has very good experience and special skills he can try for this job, who knows he may get A H1B..

நியோ / neo said...

>> இலவச அரிசி,நிலம் ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிகுழு அமைத்து(அதிமுக உள்பட) பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும். >>

1. கலைஞர் - "அனைத்துக்கட்சிக் குழு அமைக்கப்பட்டு (சட்டசபையில் இடம்பெறப்போகும் அனைத்துக் கட்சிகளும்) - அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - என்பதை பல 'தேர்தல் பரப்புரை' (நன்றி : சகோ ஜெகத் காஸ்பர், குட்வில் கம்யூனிகேஷன்ஸ்) கூட்டங்களில் தெளிவாகச் சொன்னார் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

2. இலவச அரிசி அம்மா சொன்னது! கலைஞர் தான் சொன்னதை ஏற்கெனவே அமல் நடத்த உத்தரவு பிறப்பித்துவிட்டார்! (2 ரூபாய் அரிசி)

3. 2 ஏக்கர் தரிசு நிலம் தருவது என்பது - would largely depend upon how soon the exact quantification of 'available' farmland (tillable but not being tilled presently or otherwise) is completed - and might also involve some legal hurdles.

எனவே அது பற்றி சட்டசபையில் ஒரு அவசரச் சட்டம் கொண்டுவரப்படவும் வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன்.

நியோ / neo said...

>> தி.மு.க வின் செல்வாக்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. >>

கலைஞர் சொன்னது போல "அடித்த பணப்புயலில் கூட்டணிப் படகு இத்தனை தூரம்தான் பயணம் செய்ய முடிந்திருக்கிறது!"

உங்கள் கூற்று மெய்யாகிவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு திமுக-வின் இளைய தலைவர்களுக்கு வந்துவிட்டால் போதும்.

நியோ / neo said...

>> தி.மு.க வின் செல்வாக்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. >>

தினகரனின் திங்கட்கிழமைப் பதிப்பில் வந்துள்ள கட்டுரை இதை மறுக்கிறது. அதன் கணக்குடன் நான் ஒத்துப் போகிறேன்.

ஆனால் திமுக தன் அடிப்படைக் கட்டுமானங்களிலும், வளர்ச்சிப்பணிகளிலும் இன்னும் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்கிற தொனியிலான உங்கள் கருத்தும் ஏற்கத்தகதே.

ஜெயக்குமார் said...

//ப.சிதம்பரம் தமிழ்நாட்டு அரசியல்ல இன்னம்ய்ம் கவனம் செலுத்தணும்.சில அதிசயங்கள் நிகழலாம்.//

சிதம்பரம் கூட்டணி இல்லாமல் சிவகங்கைத்தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு டெபாசிட் கூட திரும்பக் கிடைக்காது என்பது உங்களுக்கு தெரியுமா?

Anonymous said...

//Also I would like you to stop callng him as doctor.From what I know,His degree was seized long time back and he cannot practice Medicine.//

wow...thats a new(s) for me!!!

how many more bullshits have u got CT?

மாயவரத்தான் said...

//வேண்டுமென்றால் சொல்லுங்க "வலைப்பூ அத்தாரிடி" மாயவரத்தார் என்று ஒரு கவர் ஸ்டோரி ஏற்பாடு செய்து விடலாம். //

எல்லா கவர் ஸ்டோரியும் 'ஏற்பாடு' பண்ணிதான் போடுவாருன்னு சொல்றீங்களா?!

Mookku Sundar said...

//சிதம்பரம் கூட்டணி இல்லாமல் சிவகங்கைத்தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு டெபாசிட் கூட திரும்பக் கிடைக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? //

அட ..அப்படியா..?
தினமலரில் போட்டிருந்தானா..?

சிதம்பரத்துக்கு எத்தனை முறை டெபாசிட் பறிபோனது என்று சொல்ல முடியுமா..? முன்கூட்டியே நன்றிகள்.

Anonymous said...

அட ..அப்படியா..?
தினமலரில் போட்டிருந்தானா..?

I don't think we need dinamalr to tell this.
Any one who is hailing from kandanur will tell you.My wife is from Kandanur, this guy won't get deposit if he is contesting as an independent or even from congress.I will tell you a fact , few years back in local election people who are supporters of Mr Palaniaapan Chidambaram lost in a very big margin.Notably a lady won the Kandanur chairman election.

when there is an appropriate thread , I will write about this Arivali.I US our indian business people and economist ripped his butt......
with best CT

சந்திப்பு said...

----விஜயகாந்த் ஒரு சில சீட்டுக்களை மட்டு்ம் குறிவைத்து பிரச்சாரம் அழுத்தமாக செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிடித்திருக்கலாம்.ஜெவை பெரிதாக விமர்சிக்காமல் கலைஞரை மட்டும் விமர்சிக்கும் அரசியலை மாற்றினால் இன்னும் வளர்ச்சி இருக்கும்.----


தே.மு.தி.க.வுக்கு விழுந்த ஓட்டுக்கள் விஜயகாந்த்துக்காக விழுந்த ஓட்டுக்கள் என்பதை விட இரண்டு திராவிட இயக்கங்களையும் புறக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக விழுந்த ஓட்டுக்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த ஓட்டுக்கள் நிரந்தரமானது அல்ல. இதனை பாயும் ஓட்டுக்கள் எனலாம். அடுத்த தேர்தலில் ரஜியும் - கமலும் கூட்டு சேர்ந்து நாங்கள் நல்லாட்சி தருவோம் என்று கப்சா விட்டால் போதும் இந்த ஓட்டுக்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போய்விடும். எனவே தமிழக மக்கள் இதன் மூலம் உணர்த்துவது போதும்டா சாமி... இதுக்குமேல திராவிட அரசியல் வேணாம் என்பதைத்தான். எனவே தமிழகத்தில் காங்கிரசு அல்லாத திராவிட இயக்கங்கள் அல்லாத வலுவான மூன்றாவது அணி உருவாக வேண்டும். அது ஒரு போராட்ட அணியாக உருவெடுத்து - கூட்டணியாக மலர்வது தமிழக அரசியலுக்கு சிறந்தது. இந்த கூட்டணி அடித்தள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடதுசாரிகள் + தலித் + பா.ம.க. (வைகோ இனியாவது உருப்படியாக சிந்தித்து இந்த அணியில் முதலிலேயே இடம் பிடித்துக் கொள்ளலாம்) சேர்ந்தால் நிச்சயம் வலுவான எதிர்காலம் உண்டு.

Muthu said...

//சோ பற்றி//
சோ பரம்பரை பகைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். 91-96ல் ஜெவை எதிர்க்காதவர் யார்?
நக்கீரன் கோபாலுக்கென்ன? புலனாய்வு பத்திரிக்கைதான..கண்டிப்பாக ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டமாட்டார்.....

தருமி,
நன்றி......எங்க டெபாசிட் போயிடும் போலிருக்கே....

Muthu said...

மூக்கு,

நன்றிய்யா..எப்படியாவது உம்மை சென்னையில் சந்திக்கணும்னு எனக்கு ஆச..பார்ப்போம்யா..இல்லாட்டி மங்களூர் வருகிறீர்களா?

கல்ஃப்,
கிண்டல் பண்ணாதீங்கப்பு...உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமாக இருக்கு...:))

Muthu said...

பொட்டீக்கடை,
வழிமொழிந்ததற்கு நன்றி

அருண்மொழி,

//அம்மாவின் புது ஊழல்கள் பற்றி நோண்டி எடுத்து போடுவார்.
எதுவும் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு கிளு கிளு சுப்பிரமணி மேட்டர். திருப்பி ஒரு தபா போட்டால் மக்கள் படிக்காதா என்ன?//
சூப்ப்ப்ர்ர்ர்ர்...

Muthu said...

சிவபாலன்,
நீங்கள் சொல்வதிலும் அர்ததம் உள்ளது. நியோவும் இதை சொல்கிறார்.ஆனால் புனித பிம்பங்கள் அதிகரிப்பது திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும்.

ராகவன்,
நன்றி..உங்கள் அலசல் அருமை..கருத்தும் எழுதிஉள்ளேன்.

Muthu said...

வரவணை,
பதிவை நீங்கள் சொல்லுவதற்குமுன் பார்த்துவிட்டேன்..நீங்களே உங்கள் பாணியில் அந்த உரையாடலை எழுதவும்....

சிடி.
பா.ம.க மீண்டு வர வாய்ப்பு உள்ளது. டாக்டரால் அது முடியும்.கோபால் எவ்வளவோ பரவாயில்லை சோ ராமசாமியை விட.

Muthu said...

நியோ,
சரிதான் நண்பரே..சரியான பயனாளிகளை தேர்வு செய்து இந்த நலத்திட்ட உதவிகளை செய்தால் திமுகவிற்கு அது நீண்டகால நோக்கில் நல்ல பலன் கிடைக்கும்.

ஜெயகுமார்,
கலக்கறீங்க் நீங்க...(சிதம்பரத்திற்கு செல்வாக்கு கம்மிதான் அய்யா..விஜயகாந்த எல்லாம் தனித்து ஓட்டு வாங்கும்போது சிதம்பரம் நின்னிருந்தால் வாங்கியிருப்பார் என்பது தான் லாஜீக்....

Muthu said...

சநதிப்பு,

//தே.மு.தி.க.வுக்கு விழுந்த ஓட்டுக்கள் விஜயகாந்த்துக்காக விழுந்த ஓட்டுக்கள் என்பதை விட இரண்டு திராவிட இயக்கங்களையும் புறக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக விழுந்த ஓட்டுக்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். //

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் உங்களின் காரணமற்ற(தவறான காரணத்தை கொண்ட) கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளென்.

Anonymous said...

"wow...thats a new(s) for me!!!

how many more bullshits have u got CT? "
Hi Anonumous ,
I know some one will come like this, I apologise for hurting your feelings anybody who got hurted by this.From what you know He is a Doctor with a capital "D" keep it going that way.
with best
CT

Muthu said...

அன்பின் "தேடியவன்"

நான் எழுதி நீக்கிய மூன்று பதிவுகளையும் இங்கு அனுப்பிவைக்கவும்.உங்கள் சேவையை மெச்சினோம்.

ரவி said...

//மதிமுகவை அமிலத்துல கரைச்சு, கூவத்துல ஊத்தணும்.//

அப்படி என்ன வெறுப்பு...உங்க சோத்துல மண் அள்ளி போட்டுவிட்டாரா என்ன நன்பரே...

Sivabalan said...

// சிவபாலன்,
நீங்கள் சொல்வதிலும் அர்ததம் உள்ளது. நியோவும் இதை சொல்கிறார்.ஆனால் புனித பிம்பங்கள் அதிகரிப்பது திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும்.//


முத்து,

அது புனித பிம்பங்கள் அல்ல, மாய பிம்பங்கள், அடித்து நொருக்கப்படும்!!