Thursday, May 04, 2006

அற்புதங்கள் என் விசிட்டிங் கார்டு-சாயிபாபா

நீயெல்லாம் ஒரு மனுசனா என்று நேரடியாகவோ அல்லது அப்பாவிதனமாக வந்து அனானியாக திட்டுபவர்கள் இல்லாமலோ நட்சத்திர வாரத்தை முடிக்கமுடியுமா?அப்படி முடித்தால் வரலாறு என்னை மன்னிக்குமா?

என்னடா ரொம்ப பீடிகை போடறானே? வம்பிழுக்க போறானோ என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ரொம்ப சரி.கடவுளின் நேரடித்தொண்டர்களைப்பற்றிய பதிவு இது.புட்டபர்த்தி பரட்டை என்று அன்பொழுக நம் பொட்டீக்கடையால் அழைக்கப்பட்ட சத்ய சாயிபாபாவின் அணுக்க தொண்டன் என் நண்பன் ஒருவன். நான் அவனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலாய்ப்பது வழக்கம். இதையும் மீறி நட்பு என்னவோ தொடருகிறதுதான்.

"ஏண்டா இந்தாள் மேட் இன் சுவிஸ் வாட்சை எல்லாம் வானத்தில் இருந்து வரவழைக்கிறான்? கடவுள் கொடுத்த வாட்ச்சில் மேட் பை காட் என்றுதானே இருக்கவேண்டும்" என்பேன் என் நண்பனிடம்.

அதற்கு அவன் கூறிய பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.

www.exbaba.com என்ற தளத்திற்கு எந்த முன்முடிவும் இல்லாமல் செல்லுங்கள். பல சேதிகள் உண்டு ஆதாரங்களுடன்.

***************
எல்லா சாமியார்களையும் சாமியாரிணிகளையும் சகட்டு மேனிக்கு தாக்குவது என்பது என் நோக்கம் அல்ல.(ஜக்கி,ரவிசங்கர் ஆகிய சிலரை மதிக்கிறேன் நான்.வாழும் வழி என்பதாக சில வழிமுறைகளை இவர்கள் வைப்பதாக அறிகிறேன்)

இந்த சாமியார்கள் 100 கோடி இருநூறு கோடி என்று சமூகத்திற்கு உதவுகிறார்கள் என்று பலரும் நினைக்கிறோம்.ஆகவே அவரை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது ஒரு வாதம். இந்த உதவி செய்ய பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

மந்திரத்தில் மாங்காய் விழுந்தால் நாம் ஏன் மாங்கு மாங்கென்று உலகம் பூரா சுத்தி திரவியம் தேடவேண்டும்?

அமிர்தானந்தமயி அம்மாவெல்லாம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பீடத்தை எழுப்பிக்கொண்டு வருகிறார் என்பதெல்லாம் கவனிக்கத்தக்கது. சிந்திக்கத்தக்கது. பம்பாயில் வீடு வீடாக வந்து இலவசமாக வேன் அமர்த்தி கூட்டத்திற்கு கூட்டி செல்கிறோம் என்று கேட்டார்கள்.அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன?

*******************

கார்பரேட் சாமியார்களின் அசிரமத்தில் எப்போதும் சில வெளிநாட்டு ஆசாமிகளும் இருப்பதை காணலாம்.நம் டான்ஸ் புகழ் கல்கி, செக்ஸ் புகழ் பிரேமானந்தா முதற்கொண்டு எல்லா சாமியார் மடததிலும் சில வெளிநாட்டு ஆசாமிகள் இருப்பார்கள்.இதுவும் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்தான். நமக்கு எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. வெள்ளைகாரர்கள் மேல ஒரு கவர்ச்சி.இதை சரியாக புரிந்துகொண்ட இந்த ஆட்கள் அங்கிருந்து சில ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெள்ளைகாரனே கும்பிடறான்னா ஏதாச்சும் இருக்கும் என்று நம் ஆட்களும குவிவார்கள்.

********************

வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது. அவர்கள் எல்லாம் அமைதி தேடி இந்தியா வருகிறார்கள் என்பது.இதுவெல்லாம் சுத்த ஹம்பக்.ஓரிரண்டு கேஸை வைத்துக்கொண்டு ஜல்லியடிக்கக்கூடாது.அப்படி எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?காலையில் விஜய் டிவி பாருங்கள்.ஒரு கிழவி லெக்சர் அடிக்க கிறிஸ்தவ மத பிரச்சாரம் அரங்கு நிறைந்து காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளைகாரனுக்கு அவனுக்குரிய ஆன்மிக தேடல் உண்டு.ஏதோ ஒரு பதிவில் ஹரே ராமா இயக்கததினர் கொடுதத பகவத் கீதை புத்தகம் குப்பைத்தொட்டிக்கு போவதை பற்றி எழுதி இருந்தார்கள்.அதுவும் நடக்கிறது.ஆகவே உங்கள் மதத்தின் மேன்மையை நீங்கள் கூறுங்கள். அதற்காக மற்ற எல்லோரும் சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அலைவதாக எழுத வேண்டாம். உண்மையை சொல்லப்போனால் நம் நாடுதான் வெள்ளைக்காரர்கள் கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது.குஷ்பு போன்றவர்கள்தான் அதற்கு வழிகாட்டி.(தப்பா எதுவும் சொல்லலீங்க)

*********************

உங்களுக்கும் கார்பரேட் சாமியார் ஆகவேண்டும் என்று ஆசையா?ஒரு சுலப வழிகாட்டி.

1. ஊருக்கு வெளியே ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வளைத்து போடவும்.

2.உங்கள் ரேஞ்சிற்கு ஏற்றாற்போல் ஒரு இன்சீனியரிங் காலேஜோ அல்லது ஒரு நர்சரி பள்ளிக்கூடமோ தொடங்கவும்.

3.பஜனை நடத்தவேண்டும்.அதை பணம் கொடுத்து ராஜ் டிவியிலோ விஜய் டிவியிலோ ஒளிபரப்பவேண்டும்.இந்த பஜனைக்கு கூட்டத்திற்கு உங்கள் கல்லூரி மாணவ மாணவிகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

4.மாதாஜீ இல்லாமல் ஆசிரமமா? கறாராக தேர்வு செய்து ஒருவரை பிரகடனப்படுத்தவும்.

5.ஏமாளிகள் தரும் பணத்தில் முந்திரிப்பருப்பும், சுண்டக்காய்ச்சிய பாலும் குடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேஜஸ் தானாக ஏறும்.

6.குறி சொல்லுதல் நல்ல டெக்னிக்.ஒரு நாளைக்கு நூறு ஆட்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் என்றால் ஐம்பது பேருக்காவது ஓர்க்அவுட் ஆகும். நீங்கள் தான் காரணம் என்று அந்த முட்டாள் இன்னும் ஐம்பது பேரை கொண்டு வருவான்.

உதாரணம் 1:கம்ப்யூட்டர் படித்த மாணவன் வந்தால் ஒரு வருடத்திற்குள் நீ அமெரிக்கா போவது உறுதி என்று சொல்லவேண்டும்.இது இந்த சூழ்நிலையில் சுலபமாக நடக்க வாய்ப்பு உள்ளது.நமக்கெல்லாம் தெரியும்.

உதாரணம் 2:27,28 வயதில் வருபவர்களுக்கு சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் நடக்கும் என்று கூறவேண்டும்.எப்படியும் (அந்த வயதில் கல்யாணம் செய்யாமல் 50 வயதிலா கல்யாணம் செய்வார்கள்?)

7.வாய்ப்பு இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் நடிகர்களை டிவியில் பேச வைக்கலாம். விசுக்கூட இப்ப ஃப்ரியாமே?

8.வெளிநாடுகளில் இருந்து சில பிச்சைகாரர்களை (அங்கும் பிச்சைகாரர்கள் உண்டு, ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்கள்(?) வரவழைத்து குளிக்க வைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு உங்கள் ஆசிரமததில் தங்க வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

219 comments:

«Oldest   ‹Older   201 – 219 of 219
Muthu said...

poons,

இப்படி குழம்பி ஒரு பின்னூட்டம் விடுவீங்கள்ள..என் கணக்கில் ஒண்ணு சேருமில்லையா...

அதுக்குத்தான்:)

பொன்ஸ்~~Poorna said...

குரு, என்ன நீங்க, என்னைப் போய் இப்படி நினைச்சிட்டீங்க..

பொன்ஸ்~~Poorna said...

எத்தனை வேணும்னு சொல்லுங்க.. இதோ வந்துகிட்டே இருக்கு..

கோவி.கண்ணன் said...

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மாதிரி, ஆயிரம் பின்னூட்டம் பெற்ற முத்துதமிழினி என்று தமிழ்கூறும் நல்லுலகு அழைக்கப்போகிறது. தமிழ் மணம் சூப்பர் ஸ்டாராயிட்டிக!. வாழ்த்துக்கள் முத்து.

Pot"tea" kadai said...

//இனமான பேராசிரியர்னு ஒரு வார்த்தைக்கே அன்பழகன் சந்தோஷப்பட்டு திமுகவில் இருக்கும்போது

"திராவிட ராஸ்கல்கள் முன்ணேற்ற முண்ணனி "

துணைதலைவரான உங்களுக்கு இருநூறாவது பின்னூட்டத்தை கொடுத்து நான் பெருமையடைகிறென்.//

வலையுலகின் நிரந்தர முதல்வர் "தமிழினி" தான் என்பதை இத்தருணத்தில் வலையுலகிற்கு தெரியப்படுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

இரா.சுகுமாரன் said...

நன்றி முத்து உங்க ஆலோசனைக்கு,

ஒரு வேளை நான் ஆசிரமம் ஆரம்பிச்ச மேலும் ஆலோசனைக்கு உங்கள தொடர்பு கொள்கிறேன்.

கலக்குங்க, கலக்குங்க

தருமி said...

தமிழினி & பொட்டீக்ஸ்,
என்னப்பா ரெண்டு பேரும் எங்கேயோஓஓஓஓஓஓஓ போய்க்கிட்டு இருக்கீங்க...தி.ரா.மு.மு-வில இடம்கிடம் இருக்கா ஒரு ரிட்டையர்டு "பேராசிரியருக்கு"? :-)

Muthu said...

முத்து:ஏம்பா பொட்டீ,அந்த பொதுச்செயலாளர் பதவி காலியாக் கிடக்கே?தருமிக்கு கொடுத்துடலாமா..

பொட்டீ: அண்ணே, பொதுக்குழு கூட்டாம எப்படின்னே?

முத்து: சரி..சரி..நாளைக்கே கூட்டு..தருமி அவர்களே உங்களுக்கு அந்த பதவி கொடுக்க துணை தலைவர் ஒத்துக்கொண்டாயிற்று..

Pot"tea" kadai said...

அடடா... பேராசிரியர் இருப்பதை மறந்துவிட்டு நான் வாய்போன போக்கில் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறேன்.
அய்யா, நீங்கள் தான் முன்னணியின் பொதுச்செயலாளர் என்பதை மறந்து விட்டீர்களா? பொதுச் செயலாளர் என்பது "பேராசிரியருக்கு" மட்டுமே என்பதைத் தாங்கள் அறியாததா? நான் வெறும் உபதலைவர் மட்டுமே!

Anonymous said...

மூஸ் ஐயா,

ராஜீவ் ஸ்ரீனிவாசன், Rediff இல் எழுத இடம்கிடைத்த உணர்ச்சிவசப்பட்ட ஒரு அமெச்சூர் என்பதைத்தவிர உருப்படியாக ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. தேசியம் என்ற போர்வையின்கீழ் நாசூக்காக அடிப்படைவாதத்தைப் பொருத்தி எப்படி எழுதி poor man\'s intellectual ஆவதென்று இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சும்மாக் கிச்சுக் கிச்சு மூட்டாதீங்க சார்.

Muthu said...

//தேசியம் என்ற போர்வையின்கீழ் நாசூக்காக அடிப்படைவாதத்தைப் பொருத்தி எப்படி எழுதி poor man\'s intellectual //

வாவ்..அனானி ..வாக்கியக்கோவை அருமை...நிறைய எழுதவும்...

குமரன் (Kumaran) said...

//உங்க "ஆழமா எழுதத் தெரியாது" பதிவுல ஒரெழுத்துப் பின்னூட்டமெல்லாம் போட்டும் எட்ட முடியாத "நட்சத்திர வாரத்தில் 185 பின்னூட்டங்கள்" ரெக்கார்டை.. ஜஸ்ட் லைக் தட் இந்தப் பதிவு முறியடிச்சிடுச்சு..
//

:)))))

Muthu said...

குமரன்,

பதிவின் தலைப்பை பார்க்கவும்..தெரியாமலா இந்த தலைப்பை வைத்தோம்:))

Anonymous said...

//சாய்பாபாவின் புனித பின்பம் உடைந்து வெகு நாட்களாயிற்று. அவரை சுட ஒருவன் முயன்ற போது ஓடி ஒழிந்த "எல்லாம் வல்லவர்" தானே இவர். //

அப்படியென்றால் யேசுவின் கடைசி நாளிரவு தன் சீடர்களிடம் இன்று ஒரு இரவாவது எனக்காக ப்ரார்த்தனையில் ஈடுபடுங்கள் உறங்காதீர்கள் என்று சொன்னது என்ன வகையில் தைரியம்

குமரன் (Kumaran) said...

முத்து,

இருநூறு பின்னூட்டங்கள் என்ன, இந்தப் பதிவு 300, 400+ பின்னூட்டங்களும் வாங்கும்.

நானே ஒரு 50 பின்னூட்டமாவது போடலாம் என்று இருக்கிறேன். இந்த வாரம் நிறைய பின்னூட்டங்கள் வந்து ரொம்ப பிசியாக இருப்பீர்கள். அடுத்த வாரமோ இல்லை அதற்கடுத்த வாரமோ என் பின்னூட்டங்கள் போடுகிறேன். கொஞ்சம் நிதானமாகப் பேசலாம் அப்போது. :-)

வெற்றி said...

முத்து,
சாயிபாபா அவர்கள் ஈழத்தில் அருளிச் செய்த சில அற்புதங்களை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

அற்புதம் - 1
------------
இலங்கையில் வாழும் சிங்கள மக்களிலும் சாயிபாபா பத்தர்கள் உள்ளார்கள். சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்த போது அவரது மாமனார் ரத்வத்தை அவர்களே துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். மாமனும் மருமகளும் , தமிழின அழிப்பு யுத்ததிற்கு ஆயத்தமாகி பெளத்த பிக்குமார்கள் நாள், நேரம் குறித்துக் கொடுக்க , ஜெய சுக்குறு எனும் பெயரில் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கியது. இவ் யுத்தம் தொடங்கு முன், சந்திரிகா அம்மையாரும் மாமனாரும் புட்டபத்தி சென்று, சாயிபாபாவிடம் ஆசி பெறச் சென்றார்கள். சாயிபாபா அவர்களும் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, ஜெயம் உங்களுக்கே என்று ஆசி வழங்கினார்கள். ஈழப் போராட்ட வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்களாக நடந்த தாக்குதல் இது தான். சுமார்
ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த இத் தாக்குதலில் பல நூற்றுக்காணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட பின் சிங்கள அரசு, தாக்குதலை நிறுத்தி பின் வாங்கிக் கொண்டது.

அற்புதம் 2:
----------
இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என
கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சாயிபாபாவிடம் கேட்டுக் கொண்டார். வழமை போல் சாயி அவர்களும் 'வெற்றி உனக்கே , போய் வா' என்று ஆசி கூறி ரணிலை அனுப்பி வைத்தார்கள். தேர்தலில் ரணில் தோற்றார், ராஜபக்ஷ வெற்றிவாகை சூடினார்.
என்னே அற்புதம்.
--------------------------
நான் திருமுருக கிருபானந்த வாரியார் மேல் மதிப்பும், பத்தியும் வைத்திருக்கிறேன். விளம்பரங்கள் ஆடம்பரங்கள் ஏதும் இல்லாமலே பல தமிழ்/சமய தொண்டுகள் புரிந்தவர் வாரியார் சுவாமிகள். ஆனால் சாயிபாபா போன்றவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் என்பது தான் என் எண்ணம். சாயியின் ஆச்சிரமத்தில் என்னென்ன லீலைகள்/திருவிளையாடல்கள் நடக்குதோ! ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இறுதியாக, சாயிபாபாவை விட மறைந்த ரஜனீஷ் சுவாமிகள் சிறந்தவர் என்பதும் என் கருத்து.

Anonymous said...

வெற்றி,
there is a saying: god is always on the side of the bigger battalion!

தருமி said...

தமிழினி, பொட்டீக்ஸ்,
எனக்கு இந்த பதவியெல்லாம் எதுவும் பிடிக்காது.ஆனாலும் நீங்கள் மிகவும் வற்புறுத்துவதாலும்,வேண்டாமென்றால் மனம் கஷ்டப்படுவீர்கள் என்பதாலும் வேறு வழியின்றி பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

எதுக்கும் கொஞ்சம் பொறுங்க...ஏற்கெனவே இன்னொரு கட்சியின் கொ.ப.செ. பதவி ஒண்ணு கைவசம் இருக்கு; அது கொடுத்துட்டு வந்திர்ரேன். அதுக்குள்ள இங்க ஏதும் ஆயிடாதே?!

Anonymous said...

சாமி குத்தமாயிபோச்சுங்க, தெரியாத்தனமா இந்த பக்கம் வந்துட்டேன் :)-

«Oldest ‹Older   201 – 219 of 219   Newer› Newest»