Saturday, April 01, 2006

சாராயத்தை ஊத்து..

கலைஞரின் தேர்தல் அறிக்கையில் கள் சாராயக்கடைகளை திறப்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என்று நினைக்கிறேன்.இதைப்பற்றி பா.ம.க ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.

91 ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் தான் கையெழுத்து போட்ட ஃபைல் கள்ளுக்கடையை ஒழித்ததுதான் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட தற்போதைய முதல்வர் ஒயின் ஷாப்புகளை அரசே ஏற்று நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இப்போது செய்துள்ளார்.91ம் ஆண்டு தாய்மார்களின் கண்ணீரை துடைத்த அம்மா இப்போது அவர்களை கண்ணீர் கடலில் மிதக்க வைத்துள்ளது ஏன்?

அம்மா அப்போது தங்கள் கண்ணீரை துடைத்ததாக புளகாங்கிதமடைந்த தமிழச்சிகள் இப்போது தங்கள் கணவர்கள் ஃபாரின் சரக்கு அடிப்பதை எண்ணி மனமகிழ்ந்து உள்ளனரா? டிவிசீரியலில் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் தமிழச்சிகள் இதை நினைப்பதில்லை.தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் இந்த பெரும்பாலான பெண்களின் புத்தி பின் புத்திதானே?(பெண்களின் எதிரியாம் முத்து உனக்கு உதை உண்டுடா)

வெறும் ஐந்து பத்தோடு போகவேண்டிய சாராய செலவு ஐம்பது நூறு ஆகிக்கொண்டு உள்ளது.எனக்கு சரியான ரேட் தெரியாது.(ஆனால் கிங்ஃபிஷர் பீயர் மங்களூரில் 52 ரூபாயாமே,பெங்களூரில் என்ன ரேட்?).

கலைஞர் செய்தால் அநியாயம்.அம்மா செய்தால் சாதனை என்ற தமிழனின் சுரணை கெட்ட மனப்போக்குதான் இதற்கு காரணம்.கலைஞர் ஒருமுறை சொன்னது போல் தமிழன் சோற்றாலடைத்த பிண்டம்தானோ?

இன்று அதிமுக அரசு அரசாங்கத்தை நடத்துவதே சாராய வருமானத்தில்தான் என்று சட்டசபையிலேயே கூறும் அளவிற்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது.அடுத்ததாக கஞ்சா,அபின் வியாபாரத்தை அரசே ஏற்று நடத்தவேண்டுமென்று கஞ்சா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கலைஞர் சூடு கண்டதினால் இதைப்பற்றி பேசுவதில்லை.பல விஷயங்களில் சூடு கண்டப்பிறகு கலைஞர் அடக்கி வாசிப்பதை நாம் பார்க்கிறோம்.
(உதா) இலங்கை பிரச்சினை,கள் சாராய விவகாரம்

ஆகவே தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வியாபாரத்தை அபிவிருத்தி செய்து அந்த பணத்தில் தாய்மார்களுக்கு கலர் டிவி தரலாம் என்று கலைஞர் முடிவு செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.(அதிலும் மாறன் குடும்பம் கொடி கட்டும் எனலாம்)

ஆனால் கிண்டலைவிட்டு சிறிது சீரியஸாக யோசித்து பார்த்தோம் என்றால் கள், சாராயக்கடைகளை அரசு தடையை நீக்கி ஆரம்பிப்பதே நல்லது.சில காரணங்கள்.நண்பர்களும் ஏதாவது பாயிண்ட் தோன்றினால் எழுதலாம்.

1.குடி பழக்கத்தை ஒழிப்பது என்பது தேவையில்லை.சங்க காலம் முதற்கொண்டே இந்த பழக்கம் உள்ளது.(இது விவாதத்திற்கு உரியது)

2.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாராயகடைகள் உள்ளன.

3.ஏழைகளுக்கு மலிவு விலையில் சரக்கு கிடைக்கும்.

4.பல ஏழைகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

5.பனை,தென்னை மரங்களில் உள்ள சில வியாதிகளையும் இதன்மூலம்
போக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய பொன்மொழி (தேவைபடுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்)
உங்கள் கொள்கைகளை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்தும் நீங்கள் பின்வாங்கினீர்கள் என்றால் உங்கள் கொள்கைகளின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

64 comments:

பட்டணத்து ராசா said...

முத்து, சோசியலிச குடியரசுல சோசியலிசத்துக்கு எதிரா பேசாதிங்க அப்பு :-)

முத்து(தமிழினி) said...

ராசா,

ஏதோ பெரிசா தப்பா பண்ணிட்டமோன்னு பயமா இருக்கு..வெளக்கமா சொல்லுங்க...
பதிவை தூக்கிறலாம்.....:))))))))

நெருப்பு சிவா said...

Muthu sir,

Side by side, let us make the prostitution, drugs, bribe, etc as legal. Both government and personal income will shoot up to the roof.

As long as we get the revenue for all our bureaucratic and personal luxuries, why should we care about other affected by our 'legal' businesses. Let the common people like me get spoilt, who worries anyway!!

Annachi,
murpokku sinthanaivaathiyana neengale ipdi 'brain' fever na la affect ahalaama??

I think I became 'red' hot! kandukkaatheenga saami. Kudi palakkathaal kadumaiyaaha baathikkapatta kudumbathai chernthavanin aathangam ayya

Neruppu

செல்வன் said...

அன்பின் முத்து

பொருளின் விலை குறைந்தால் நுகர்வு அதிகரிக்கும் என்பது பொருளாதார விதி.கள் சாராய கடைகள் திறக்கப்பட்டால் மக்கள் அங்கேயே குடி இருப்பார்கள்.குடல் வெந்து,உடல் நலம் பாதித்தல், குடும்பத்தை மறத்தல், மனைவியியை குழந்தையை புறக்கணித்தல் முதலிய பல சமூக அவலங்கள் நிகழும்.குடியை போல் ஏழை எளிய மக்களுக்கு பகை வேறு ஒன்றும் இல்லை.

குடிப்பழக்கத்தை கட்டுக்குள் வைப்பதே சமூக நலம் பேணும் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.வேலைவாய்ப்பு,தென்னைக்கு வரும் நோய் இவை எல்லாம் கடைசி பட்சம் தான்.

தாய்மார்கள் கண்ணீர் விட அரசு துணைபோகலாமா?

பட்டணத்து ராசா said...

// The establishment of a system of society based upon the common ownership and democratic control of the means and instruments for producing and distributing by and in the interest of the whole community. //

இதுதானேங்க சோசியலிசம். அதுதானே அம்மா செய்யுராங்க :-) :-)

ஸ்ருசல் said...

சூப்பர்... ?????

கிண்டலைவிட்டு சிறிது சீரியஸாக யோசித்து பார்த்தோம் என்றால் விபச்சாரத்தின் மீதான தடையை அரசு நீக்கி, அதனை ஊக்குவிப்பதே நல்லது. சில காரணங்கள்.........

1. இதற்கு தடை தேவையில்லை. சங்க காலம் முதற்கொண்டே இந்த பழக்கம் உள்ளது. (இது விவாதத்திற்கு உட்பட்டது அல்ல)

2. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள், நகரங்கள், தெருக்களில் இந்த செயல் நடைமுறையில் உள்ளன.

3. ஏழைகளுக்கு மலிவு விலையில் கிடைக்கும்.

4. பல ஏழைகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

5. எய்ட்ஸ் போன்ற வியாதிகளையும் இதன்மூலம் போக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நண்பர்களும் ஏதாவது பாயிண்ட் தோன்றினால் எழுதலாம்.......

இது விளையாட்டிற்காக மட்டுமே...

முத்து... அது எப்படி ஐயா தினமும் பதிவெழுதுகிறீர்கள்? திறமை தான்... நமக்கெல்லாம் வாரம் ஒன்று எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறது...

பாரதி said...

இனி வரும் எந்த அரசாலும் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த முடியாது.

இங்கு தடை செய்தால் பக்கத்து மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும்.

இப்போது இருக்கும் பெரிய பிரச்சினை
கள்ளச்சாராயம் தான்.

குவார்ட்டர் வாங்குவதற்கு காசு இல்லாத கூலித் தொழிலாளர்கள் கள்ளச் சாராயத்தைத் தேடிச் செல்கின்றனர்.

இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட பரிதாபச் சாவுகள் அதிகம்.

இந்த சாவுகள் நிகழாமல் தடுப்பதற்கு மலிவு விலை மது வழங்குவது பற்றி கழகங்கள் யோசிக்கும் என்றே நினைக்கிறேன். அரசுக்கு இன்னும் வருமானம் பெருகும் தானே?

முத்து(தமிழினி) said...

நன்றி,

சுருக்கமாக அனைவருக்கும்.....

குடிப்பழக்கத்தை எதிர்க்கும் உங்கள் கருத்து போற்றத்தக்கது.இப்போது வீதிக்கு வீதி இருக்கும் அரசாங்கம் நடத்தும் ஒயின்ஷாப் பற்றியும் உங்கள் கருத்து இதுதானே?
அதைத்தான் நான் விமர்சனம் பண்ணியிருக்கிறேன்.

விளக்கமாக பிறகு....

செல்வன் said...

டாஸ்மாக் கடைகள் வேறு, கள் சாராய கடைகள் வேறு.

டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை அதிகரித்தது என்பது சரியல்ல.அரசு மது விற்பனை அதிகரித்தது என்பது தான் சரி.அதற்கு முன் கள்ள மதுவை தனியார் மது கடைகளில் விற்றுக்கொண்டிருந்தனர்.அரசே மது விற்பனையை ஏற்ற பிறகு கள்ள மதுவுக்கு பதில் நல்ல மது விற்பனையாகிறது.

மதுப்பழக்கம் தீங்கானது,ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அதை அரசு துணிந்து செய்தால் நான் ஆதரிப்பேன்.ஆனால் மதுவிலக்கு உலகின் எந்த நாட்டிலும் வெற்றியடைந்ததாக சரித்திரமே இல்லை.அதை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சிக்க வேண்டும்.மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது நீண்டகால குறிக்கோளாக இருத்தல் வேண்டும்.

தனியாருக்கு பதில் அரசு மது விற்பனை செய்வதை நான் நிச்சயம் ஆதரிக்கிறேன்.தனியாருக்கு வரும் காசு அரசுக்கு போகட்டுமே?என்ன தவறு?

முத்து(தமிழினி) said...

Neruppu ,

சார் போட்டு என்னை வயசானவனா ஆக்க வேண்டாம். நீங்க சொல்றது இப்ப அரசாங்கம் நடத்தற ஒயின்ஷாப்பையும் தாக்கி என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

பணக்காரன் பீயர், குவார்ட்டரும் அடிக்கலாம்.அது சுதந்திரம்.ஏழை சாராயம் குடிச்சா குடும்பத்தை மறந்துருவானா? அப்படி இல்லைங்க. அவனும் சக்தியை மீறி குவாட்டர் அடிக்கிறான். பணத்தை இழக்கிறான்.

முற்போக்கு சிந்தனையாளர் என்பதெல்லாம் இல்லைங்க.மனசுக்கு பட்டதை எழுதறோம்.

நீங்க சொன்ன கடைசி வாக்கியம் எனக்கும் பொருந்தும்.
"காட்டை வித்து கள்ளை குடிச்ச ஃபேமிலிதான் எனதும்"

முத்து(தமிழினி) said...

வெளிநாட்டில் யாரும் குடிப்பதில்லையா? காந்தி காலத்து ஒழுக்க மதிப்பீடுகளில் இருந்து தயவு செய்து வெளியே வரவும்...


drinking is different from addiction

முத்து(தமிழினி) said...

செல்வன்,
அப்ப விலை அதிகமா இருக்கு என்று ஏழைகள் ஒயின்ஷாப் போவதில்லை என்கிறீர்களா?
தாய்மார்கள் ஒயின்ஷாப்களினால் கண்ணீர் விடவில்லை என்கிறீர்களா?

முத்து(தமிழினி) said...

ராசா,
நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதை ஒத்துக்கொள்வதில் வெட்கம் இல்லை.

ஆர்.கே.நாராயண் கதை தவிர வேறு ஆங்கிலத்தில் நான் படித்ததில்லை. தமிழ்ப்படுத்தி போடுங்கள்.

செல்வன் said...

செல்வன்,
அப்ப விலை அதிகமா இருக்கு என்று ஏழைகள் ஒயின்ஷாப் போவதில்லை என்கிறீர்களா?
தாய்மார்கள் ஒயின்ஷாப்களினால் கண்ணீர் விடவில்லை என்கிறீர்களா///

குவார்ட்டர் 50 ரூபாய் விலைக்கும் லிட்டர் 25 ரூபாய் விலைக்கும் வித்த்யாசம் இருக்கிறதல்லவா?லிட்டர் 25 ரூபாய் என வைத்தால் தினமும் குவார்டர் அடிப்பவன் அதன் பின் லிட்டர் அடிப்பான்.

மதுவிலக்கு சாத்தியமே இல்லை எனும்போது அதை கட்டுக்குள் வைக்க தான் முயல வேண்டும்.அப்படி செய்ய ஒரு வழி ஓரளவு அதிக விலை வைப்பது.மிகவும் அதிக விலை வைத்தால் கள்ள சாராயம் விற்பனைக்கு வந்து விடும்.மிகவும் குறைந்த விலை வைத்தால் மக்கள் அதிகம் குடிப்பார்கள்.ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது தான் செய்ய வேண்டியது.

முத்து(தமிழினி) said...

ஸ்ருசல்,
நீங்க என்ன நினைத்தாலும் சரி..நீங்க சொன்னது கரெக்ட்தான். (விபச்சாரத்தை பத்திதான் சொல்றேன்).கட்டுபெட்டியான இந்தியாவில்தான் எய்ட்ஸ் அதிகமாம்.

//முத்து... அது எப்படி ஐயா தினமும் பதிவெழுதுகிறீர்கள்? திறமை தான்... நமக்கெல்லாம் வாரம் ஒன்று எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறது...//

எல்லாம் ஆர்வம்...உங்கள் ஆதரவும்தான் காரணம்.எழுத நிறைய இருக்கு..

முத்து(தமிழினி) said...

பாரதி,
ஆதரவுக்கு நன்றி..ஒரு + குத்து போடவும்.

நெருப்பு சிவா said...

Muthu brother (ok va?)

/**

நீங்க சொல்றது இப்ப அரசாங்கம் நடத்தற ஒயின்ஷாப்பையும் தாக்கி என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

*/

100% against anybody supporting 'drinking'

This makes a person as 'not a person' anymore as long as they are drunk

Neruppu

முத்து(தமிழினி) said...

செல்வன்,

மீண்டும் சக்கரம் சுத்தி அங்கேயே வருகிறது...

கள் சாராய கடை வேறு..ஒயின் ஷாப் வேறு என்பது உங்கள் நிலை என்றால் என்னிடம் அதற்கு பதில் இல்லை.

அரசாங்கம் லாபம் சம்பாதிப்பது உங்களுக்கு சந்தோஷம் என்றால் கஞ்சா அபின் விற்பனையையும் தேசியமயமாக்கலாம் என்றுதான் நானும் கூறி இருக்கிறேன்.

குளோஸ் பண்ணினால் எல்லா கடையையும் குளோஸ் பண்ணுங்க.இல்லாட்டி கள் சாராயத்தை அனுமதிங்க என்பதும் ஒரு வ்யூ.


(இதற்கெல்லாம் அர்த்தம் நான் ஒரு குடிகாரன் என்பதல்ல.எப்போதாவது பியர் குடிப்பதுண்டு)

Karthik Jayanth said...

முத்து ஷார்,

இழ்ப்ப என்னா பிரஷ்சன்னை. வெள்ளிகிழ்மை ராத்த்ரி இப்ப்டி சொஷ்ன்னா எப்டி,

Well joke apart,

குடிபழக்கம் உடம்புக்கு, வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு. இது குடிமகன்களுக்கு தெரிந்தால் சரி

குடிபழக்கம் = addiction (I meant to say this)

செல்வன் said...

கள் சாராய கடை வேறு..ஒயின் ஷாப் வேறு என்பது உங்கள் நிலை என்றால் என்னிடம் அதற்கு பதில் இல்லை.//

நிச்சயம் இரண்டும் வேறுதான் முத்து.கள்சாராய கடை குடிப்பழக்கதை எல்லை தாண்டி ஊக்குவிக்கும்.ஒயின்ஷாப் அதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும்.,

/அரசாங்கம் லாபம் சம்பாதிப்பது உங்களுக்கு சந்தோஷம் என்றால் கஞ்சா அபின் விற்பனையையும் தேசியமயமாக்கலாம் என்றுதான் நானும் கூறி இருக்கிறேன்/

லாபம் வருகிறது என்பதற்காக அரசை மது விற்க சொல்லவில்லை.மதுவை விற்கும் தனியார் கலப்படம்,கள்ள மது விற்பனை முதலியவற்றை செய்கிறார்கள்.அரசு மது விற்றால் அந்த பிரச்சனை வராது.மதுவை தடை செய்தல் லட்சியம்.முடியாது போனால் அரசே மதுவை விற்பது அதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

//குளோஸ் பண்ணினால் எல்லா கடையையும் குளோஸ் பண்ணுங்க.இல்லாட்டி கள் சாராயத்தை அனுமதிங்க என்பதும் ஒரு வ்யூ.//

இரண்டும் extreme முடிவுகள்.இவ்விஷயத்தில் நடுநிலமை தான் தேவை

Voice on Wings said...

மதுவிலக்கு என்ற அணுகுமுறையெல்லாம் இன்று காலாவதியாகி விட்டன. ஒருவர் குடிக்கலாமா வேண்டாமா என்பதை அரசு நிர்ணயிக்கும் நிலை, தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றேயாகும். குறைந்த விலையில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மதுவை (கள்ளோ, சாராயமோ, வேறெதாவதோ) விற்க இயலுமென்றால், அதில் அரசு தலையை நுழைக்க எந்தக் காரணமுமில்லை. குடிப்பதைப் பற்றி அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். இன்னொன்று, அரசு மது விற்பனையிலோ, சாராய விற்பனையிலோ இறங்குவதற்கும் எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் தனியார் துறையிலிருக்க வேண்டியவையே.

செல்வனுக்கு ஒரு கேள்வி,

//பொருளின் விலை குறைந்தால் நுகர்வு அதிகரிக்கும் என்பது பொருளாதார விதி.கள் சாராய கடைகள் திறக்கப்பட்டால் மக்கள் அங்கேயே குடி இருப்பார்கள்.//

நீங்கள் ஐம்பது ரூபாய் (அல்லது $2) செலுத்தி உண்ணும் மதிய உணவு திடீரென்று இருபத்தி ஐந்து ரூபாய்க்கு (அல்லது $1)் கிடைக்கிறதென்றால், அதற்காக இரு முறை உண்பீர்களா? அவ்வாறு செய்வதிலுள்ள உடல்நலப் பிரச்சனைகளை அறிவதால், அப்படிச் செய்வதைத் தவிர்ப்பீர்கள்தானே? எந்த பிரச்சனைக்கும் அறிவும், விழிப்புணர்வும்தான் தீர்வு. அரசு மதுக்கடைகளை ஏற்று நடத்துவதை விட, குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய பிரச்சாரங்கள் / ஆவணப்படங்கள் போன்றவற்றை மேற்கொள்வது் (மக்கள் உரிமையில் தலையிடாமலேயே), மேலும்் பயனளிக்கும்.

மணியன் said...

முத்து, நீங்கள் குடியின் பாதிப்பைப் பற்றி விவாதிக்காமல் ஒயின் ஷாப் இருக்கும்போது சாராயக் கடை கூடாதா என்று சொல்ல வருவது புரிகிறது. ஆனாலும் குடியினால் அழிந்த குடும்பங்களை நினைத்தீர்களானால் அரசியலை தவிர்த்த யாரும் கள்ளரக்கன் மீள்வதை விரும்ப மாட்டார்கள்.
கல்வியறிவும் தனியொருவர் வருமானமும் உயர்ந்த நிலையில் நீங்கள் சொல்லும் பிற காரணங்கள் சரியாகும். ஒயின் ஷாப் செல்வோர் அத்தகையநிலை எய்தியவர்கள் என எண்ணுகிறேன்.

தவிர, மது,புகை காட்சிகளையே தடை செய்த பாமக பங்கு பெறும் கூட்டணி ஆட்சி எப்படி கள்ளுக்கடை தடையை நீக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள் ?

பாரதி said...

செல்வன்,
கள், சாராயம் என்ற வார்த்தைகள் தான் உங்களைச் சிரமப் படுத்துகிறது என்றால் மலிவு விலை மது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

//மதுவை விற்கும் தனியார் கலப்படம்,கள்ள மது விற்பனை முதலியவற்றை செய்கிறார்கள்.//

மலிவு விலை மதுவையும் அரசே வழங்கிக் கள்ளச் சாராயச் சாவுகளிலிருந்து அப்பாவி மக்களைக் காக்கலாமே?

முத்து(தமிழினி) said...

கார்த்திக்,

நன்றி...நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மை...ஆனால் இந்த பதிவில் நான் கூறியுள்ளது வேறு.....

செல்வன் said...

நீங்கள் ஐம்பது ரூபாய் (அல்லது $2) செலுத்தி உண்ணும் மதிய உணவு திடீரென்று இருபத்தி ஐந்து ரூபாய்க்கு (அல்லது $1)் கிடைக்கிறதென்றால், அதற்காக இரு முறை உண்பீர்களா? அவ்வாறு செய்வதிலுள்ள உடல்நலப் பிரச்சனைகளை அறிவதால், அப்படிச் செய்வதைத் தவிர்ப்பீர்கள்தானே? எந்த பிரச்சனைக்கும் அறிவும், விழிப்புணர்வும்தான் தீர்வு. அரசு மதுக்கடைகளை ஏற்று நடத்துவதை விட, குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய பிரச்சாரங்கள் / ஆவணப்படங்கள் போன்றவற்றை மேற்கொள்வது் (மக்கள் உரிமையில் தலையிடாமலேயே), மேலும்் பயனளிக்கும்.////

அன்பின் விங்க்ஸ்,

நீங்கள் சொல்லும் பொறுப்புணர்வு குடிகாரர்களுக்கு கிடையாது.பொறுப்பில்லாதவர்களை காப்பாற்ற வேண்டும் என தான் கள் சாராய கடைகளை மூடுகிரது அரசு.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதில் எந்த பலனும் கிடையாதுஅரசு மது விற்ககூடாது என எந்த சட்டமும் இல்லை.தனியார் பொறுப்புணர்வோடு இல்லாத துறைகளை அரசு ஏற்று நடத்துவதில் தவறில்லை.

செல்வன்,
கள், சாராயம் என்ற வார்த்தைகள் தான் உங்களைச் சிரமப் படுத்துகிறது என்றால் மலிவு விலை மது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மலிவு விலை மதுவையும் அரசே வழங்கிக் கள்ளச் சாராயச் சாவுகளிலிருந்து அப்பாவி மக்களைக் காக்கலாமே?//

நான் கள்சாராயத்தை மட்டும் எதிர்க்கவில்லை.மலிவு விலை மதுவை தான் எதிர்க்கிறேன்.கள் சாராயத்தை அதிக விலையில் விற்பதில் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.குவார்ட்டர் கள்ளு 50 ரூபாய் என அரசு விற்றால் எனக்கு முழு மகிழ்ச்சியே.வெளிநாட்டு மது விற்பனையாளனுக்கு போகும் காசு தென்னை விவசாயிக்காவது போகட்டுமே

tbr.joseph said...

மத்தவங்கள மாதிரி எனக்கு அடிக்க சீரியஸ் கமெண்ட் ஒன்னும் இல்லைங்கறதுனால இது:

.(ஆனால் கிங்ஃபிஷர் பீயர் மங்களூரில் 52 ரூபாயாமே,பெங்களூரில் என்ன ரேட்?).

உண்மையிலேயே தெரியாதா? என்ன முத்து நீங்க? ஊஹும்..

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,

உங்க கமெண்ட் வந்திருக்குன்னு பார்த்த வுடனே கெதக்னு இருந்தது....எல்லாரும் அடிச்சி ஆடிய பதிவுல நீங்களும் வந்து என்னை திட்டுவீங்களோன்னு நினைச்சேன்..

ஆனா....கவுத்துட்டீங்களே தலை.......இதுக்கு என்னை நீங்க திட்டியே இருக்கலாம்....:))))

முத்து(தமிழினி) said...

விங்ஸ்,

வாஸ்தவமான கருத்துக்கள்..நன்றி....(ஆதரவு நம்பர் 2)


மணியன் சார்,

சரியாக பாயிண்ட்டை பிடித்தீர்கள்...நன்றி...பா.ம.க கள்ளு குடிப்பதை புகை பழக்கம் போல் நினைப்பது இலலை என்று நினைக்கிறேன்.(எனக்கு தெளிவாக தெரியவில்லை என்பது தான் உண்மை).

கஷ்டப்பட்டு மூட்டை தூக்கியோ ரிக்ஷா இழுத்தோ சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி பத்து ரூபாய்க்கு கள் குடிப்பது பரவாயில்லை.நூறு ரூபாய்க்கு குவார்ட்டருக்கு அலைவதை விட.நீங்க என்ன நெனைக்கறீங்க?

காசு இல்லைன்னு தண்ணி அடிக்காம இருப்பானா நம்மாளு?

Voice on Wings said...

செல்வன்,

//நீங்கள் சொல்லும் பொறுப்புணர்வு குடிகாரர்களுக்கு கிடையாது.பொறுப்பில்லாதவர்களை காப்பாற்ற வேண்டும் என தான் கள் சாராய கடைகளை மூடுகிரது//

ஓட்டுப் போட்டு ஆட்சியைக் கையில் ஒப்படைக்கும் வரை் பொறுப்புணர்வுள்ளது, ஆனால், அதற்குப் பின், தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்வதற்கு போதிய பொறுப்புணர்வு கிடையாது, அப்படித்தானே? ஓட்டுரிமை, குடியுரிமை போல் அவரவர் தமக்கு வேண்டியவற்றைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் நம் முன்னால் நின்று கொண்டு டீச்சர் வேலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

//அரசு.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதில் எந்த பலனும் கிடையாது//

பார்க்கப் போனால் (ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில்) தனிநபர் உரிமையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. ஆகவே, அது தனது எல்லைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுமானால், அதற்கு 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைத்' தவிர வேறு வழியில்லை - பலன் இருக்கிறதோ இல்லையோ. நாம் ஜனநாயமல்ல, பாசிச ஆட்சியிலுள்ள நாடுதான் என்கிறீரா, அப்படியென்றால் நான் கூறியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

//அரசு மது விற்ககூடாது என எந்த சட்டமும் இல்லை.தனியார் பொறுப்புணர்வோடு இல்லாத துறைகளை அரசு ஏற்று நடத்துவதில் தவறில்லை.//

சட்டம் கிடையாதுதான். ஆனால் தனியாரால் சிறப்பாகச் செய்யக் கூடிய ஒரு துறையில் அரசு தலையிட்டு, தன் சக்தியை விரயம் செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக, வேறு (கல்வி, மருத்துவ வசதிகளைப் பெருக்குவது போன்ற) ஆக்கப்பூர்வமான வேலைகளை கவனிக்கலாம். தனியார் மோசடிகளை, தரப் பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் மூலமாகத் தவிர்க்கலாம். பல துறைகளில் தனியார்களின் சேவைத் தரம் இவ்வாறுதான் உறுதி செய்யப்படுகிறது.

முத்து, இந்த crosstalkஇற்கு மன்னியுங்கள் :)

முத்து(தமிழினி) said...

voice of wings,

no problem absolutely...go ahead..i too follow

செல்வன் said...

ஓட்டுப் போட்டு ஆட்சியைக் கையில் ஒப்படைக்கும் வரை் பொறுப்புணர்வுள்ளது,ஆனால், அதற்குப் பின், தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்வதற்கு போதிய பொறுப்புணர்வு கிடையாது, அப்படித்தானே? ஓட்டுரிமை, குடியுரிமை போல் அவரவர் தமக்கு வேண்டியவற்றைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் நம் முன்னால் நின்று கொண்டு டீச்சர் வேலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
//

அன்பின் விங்க்ஸ்

அரசாங்கம் சில விஷயங்களில் டீச்சர் வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும்.சுத்தம்,சுகாதாரம்,உடல் நலம் போன்றவை அரசின் பொறுப்புத்தான்.இலவச மருத்துவமனைகளை நடத்துவது அரசு,அதில் சிகிச்சை பெற வரும் குடிகாரர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது அரசு..குடியினால் எழும் சமூக குற்றங்களுக்கு தீர்வு காண வேண்டியிருப்பது அரசு..ஆக நிச்சயம் அரசு இதில் டீச்சர் வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும்.ஓட்டுபோடுபவன் பொறுப்பில்லாமல் ஓட்டுபோட்டாலும் ஓட்டு வாங்குபவன் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

//பார்க்கப் போனால் (ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில்) தனிநபர் உரிமையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. ஆகவே, அது தனது எல்லைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுமானால், அதற்கு 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைத்' தவிர வேறு வழியில்லை - பலன் இருக்கிறதோ இல்லையோ. நாம் ஜனநாயமல்ல, பாசிச ஆட்சியிலுள்ள நாடுதான் என்கிறீரா, அப்படியென்றால் நான் கூறியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.//

எதை தனிநபர் உரிமை என்கிறீர்கள்?மலிவுவிலை மது விற்பதும் மதுக்கடை வைப்பதும் தனிநபர் உரிமை என்கிறீர்களா?எந்த தொழிலையும் தேசியமயமாக்கவும்,வரிவிதிக்கவும் அரசியல் சட்டப்படி அரசுக்கு உரிமை உண்டு.தனிநபர் உரிமை மீறல் இதில் எங்கிருந்து வந்தது?

//சட்டம் கிடையாதுதான். ஆனால் தனியாரால் சிறப்பாகச் செய்யக் கூடிய ஒரு துறையில் அரசு தலையிட்டு, தன் சக்தியை விரயம் செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக, வேறு (கல்வி, மருத்துவ வசதிகளைப் பெருக்குவது போன்ற) ஆக்கப்பூர்வமான வேலைகளை கவனிக்கலாம். தனியார் மோசடிகளை, தரப் பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் மூலமாகத் தவிர்க்கலாம். பல துறைகளில் தனியார்களின் சேவைத் தரம் இவ்வாறுதான் உறுதி செய்யப்படுகிறது. //

தனியார் மதுக்கடைகள் கலப்படம் செய்ததும்,கள்ள மது விற்றதும் ஊருக்கே தெரியும்.அரசியல் செல்வாக்கு,ஆளுங்கட்சிகாரனே கடை நடத்துவது போன்றவற்றால் அரசால் பெரிதாக ஏதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.அதனால் தான் மதுக்கடைகள் தேசியமயமாக்கப்பட்டன


//கஷ்டப்பட்டு மூட்டை தூக்கியோ ரிக்ஷா இழுத்தோ சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி பத்து ரூபாய்க்கு கள் குடிப்பது பரவாயில்லை.நூறு ரூபாய்க்கு குவார்ட்டருக்கு அலைவதை விட.நீங்க என்ன நெனைக்கறீங்க?//

அன்பின் முத்து

கள் விலை 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவன் 10 ருபாய்க்கு அடிக்க மாட்டான்.100 ரூபாய்க்கு 10 லிட்டர் கள் குடிப்பான்.குவார்ட்டர் 50 ரூபாய் என்றால் அரை லிட்டர் மதுவோடு நிறுத்திவிடுவான்

//காசு இல்லைன்னு தண்ணி அடிக்காம இருப்பானா நம்மாளு?//

அடிக்காம இருக்க மாட்டான்.ஆனா கம்மியா அடிப்பான்

குறும்பன் said...

முத்து நீங்கள் திருச்செங்கோட்டுக்காரர் என்று நினைக்கிறேன், "King Fisher" ஏத்திக்கிட்டு, King Fisher சாப்பிடாத ஆளுனா புளிச்ச மோரை கொஞ்சம் குடிச்சுட்டு (King Fisher குடிக்கிறதுக்கு புளிச்ச மோரே தேவலை என்று சொல்லாதிங்க) திருச்செங்கோட்டு தொகுதியை பற்றி கொஞ்சம் அலசரது.
வட, தென் மாவட்டங்களை வலை மக்கள் நன்றாக அலசுகிறார்கள், நடு, மேற்கு மாவட்டத்திற்கு ஆளையே காணோமே.

குறும்பன் said...

குடிப்பழக்கத்தை ஒழிக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்தலாம். அரசாங்கமே மதுக்கடை நடத்துறது தப்போ தப்பு, ஆனா முறைபடுத்தலாம் 10 - 10 மட்டுமே திறந்திருக்கலாம் அது மாதிரி.
இருக்கிற வேலையையே ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறாங்க இதுல இது வேற, ஆங்! கட்டிங்ஸ் வாங்குவாங்களே தவிர கட்டிங்ஸ ஒழுங்கா குடுக்கமாட்டாங்ப்பா. :-))
எல்லா தொழிலிலும் தப்பு பண்றவங்க இருப்பாங்க அதை முறை படுத்தி கண்காணிக்க தான் அரசு.
ஒரு தொழிலில் தவறு நடக்கிறது என்பதற்காக அரசே அத்தொழிலை நடத்துவது என்றால் எல்லா தொழிலையும் அரசே நடத்தவேண்டும்.

Voice on Wings said...

செல்வன்,

"அரசு டீச்சர் வேலை பார்க்கலாம்" என்று நீங்கள் கூறுவதிலிருந்தே, நீங்களும் நானும் வெவ்வேறு சிந்தனைத் தளங்களிலிருந்து வருகிறோமென்று புரிகிறது. ஒரு மதமாற்றம் போல், நம் ஒருவருக்காவது மனமாற்றம் ஏற்பட்டால்தான் இவ்விவாதம் முடிவடைய வாய்ப்பிருக்கிறது, அதாவது நாமே நிறுத்திக் கொள்ளா விட்டால். இணையத்து விவாதங்களால் மனமாற்றங்களெல்லாம் சாத்தியமா என்பதில் எனக்கு ஐயமாகத்தான் உள்ளது. ஆகவே, உங்கள் மனதை மாற்ற முயற்சிக்கப் போவதில்லை. உங்கள் தர்க்கத்தை மட்டும் எதிர்கொள்ள முயற்சிக்கிறேன்.

மக்களின் குடிப்பழக்கத்தால் அரசுக்கு மருத்துவச் செலவு அதிகமாவதால், அரசுக்கு குடிப்பழக்கத்தைத் தடை செய்யும் உரிமையுள்ளது என்பது உங்கள் வாதமாக இருக்கிறது. உங்கள் தகவலுக்காக: புகைப்பிடிப்பதால் புற்று நோய் அதிகரிக்கிறதாம். புகையிலை சார்ந்த பொருட்களையும் தடை செய்து விடலாமா? கொழுப்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களால் இருதய நோய் பெருகுகிறதாம். எண்ணை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களையும் தடை செய்வோம். அளவுக்கு மீறினால் அமுதமும்(அரிசி) நஞ்சாம். அரிசி சாகுபடிக்கே தடையுத்தரவு போடுவோம். அபத்தமாக இருக்கிறதல்லாவா, கேட்பதற்கே? ஒரு நோயாளி மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவில்லையென்றால், பிற்பாடு அவர் பெற்றுக் கொள்ளும் மருத்துவச் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்ற வகையில் விதிகளை மாற்றுவது, நீங்கள் கூறும் டீச்சர் வேலையை விட சிறந்ததாகப் படுகிறது.

நான் தனிநபர் உரிமை என்று குறிப்பிடுவது ஒருவர் தனக்குத் தேவையான ஒன்றை வாங்கும் உரிமை, மற்றும் தான் உற்பத்தி செய்த சரக்கை (இதை பொதுப் பொருளில் குறிப்பிடுகிறேன்) விற்கும் உரிமை, இரண்டையும்தான்.

அரசுமயமாக்கப்பட்ட நியாய விலைக் கடைகளிலும் (ration shops) மோசடி நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மோசடி நடக்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியுமா? இன்று நடக்கவில்லையென்றாலும், நாளை நடக்கலாம். மோசடிகளை கண்காணிப்பு, அதிரடிப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளால்தான் ஓழிக்க முடியும். பெட்ரோல் / டீசல் போன்றவற்றை தனியார்தான் விநியோகிக்கிறார்கள். மது விற்க முடியாதா அவர்களால்?

செல்வன் said...

அன்பின் விங்க்ஸ்,

பல்வேறு சிந்தனைத்தளங்களில் இருப்போர் விவாதிக்கத்தான் இணையம்.இதில் மனமாற்றம் என்பது நீங்கள் சொன்னதுபோல் அவ்வளவு எளிதில் சாத்தியமானதல்ல.அதற்காக நான் எழுதவுமில்லை.நான் எழுதுவதும் விவாதிப்பதும் என் ஆத்ம திருப்திக்கு தானே அன்றி வேறெதற்கும் இல்லை.

அரசு டீச்சர் வேலை பார்ப்பது உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.எந்த விஷயத்தில் அரசு டீச்சர் வேலை பார்க்கலாம் என்பது மாறுபடுமே அன்றி அரசு டீச்சர் வேலை பார்ப்பது மாறுபடாது.சரி இப்போது உங்கள் வாதத்துக்கு வருகிறேன்.

//மக்களின் குடிப்பழக்கத்தால் அரசுக்கு மருத்துவச் செலவு அதிகமாவதால், அரசுக்கு குடிப்பழக்கத்தைத் தடை செய்யும் உரிமையுள்ளது என்பது உங்கள் வாதமாக இருக்கிறது.//

நான் மதுவை தடை செய்ய சொல்லவே இல்லை.மலிவுவிலை மதுவை மட்டுமே தடை செய்ய சொன்னேன்.மது நுகர்வை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று சொன்னேனே ஒழிய தடை செய்ய வேண்டும் என சொல்லவே இல்லை.மது விலக்கு என்பது லட்சியமாக இருத்தல் வேண்டும்.ஆனால் அது சாத்தியமில்லை என தெளிவாக சொல்லி அதனால் மது நுகர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன்.மதுவிலக்கு வர வேண்டியது மனமாற்றத்தின் மூலமே அன்றி சட்டம் மூலம் அல்ல.

//புகைப்பிடிப்பதால் புற்று நோய் அதிகரிக்கிறதாம். புகையிலை சார்ந்த பொருட்களையும் தடை செய்து விடலாமா? //

மதுவை போலவே அதன் உபயோகிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும்.வரிவிதிப்பின் மூலம் அரசு செய்துகொண்டிருப்பது அதைத்தான்.வருடா வருடம் பட்ஜெட்டில் புகையிலைப்பொருட்களுக்கு வரியை ஏற்றிக்கொண்டு தானே இருக்கிறார்கள்?

//கொழுப்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களால் இருதய நோய் பெருகுகிறதாம். எண்ணை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களையும் தடை செய்வோம்//

இது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவில் அமுலுக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது.கொலெஸ்ட்ரால்,டிரான்ஸ் fat என்பதை இப்போது அங்கே அனைத்து உணவுப்பண்டங்களிலும் அச்சிடுகிறார்கள்.டயட்கோக் fatfree food என அங்கு மக்கள் கொழுப்பு சத்து இல்லாத உணவு வகைகளுக்கு மாறுகிறார்கள்.தனியாரும் அரசும் சேர்ந்து (சட்டம் மூலம் இன்றி) டீச்சர் வேலை பார்த்து தான் மக்களுக்கு இவ்வகை உணவுவகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

கொழுப்பு உணவுகளுக்கும் மதுவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.உடலுக்கு கொழுப்பு கட்டாயம் தேவை.ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவில் கிடைக்கும் எரி சக்தியில் 10% கொழுப்பு மூலம் கிடைக்க வேண்டும் என அறிவியல் சொல்கிறது.

மேலும் நான் மதுவை தடை செய்ய சொல்லவில்லை என்பதால் இந்த ஒப்பீடுகள் பலனற்று போகின்றன.நீங்கள் சொன்னீர்கள் என்பதால் தான் இந்த ஒப்பீடுகளுக்கு விளக்கமளித்தேன்.

//நான் தனிநபர் உரிமை என்று குறிப்பிடுவது ஒருவர் தனக்குத் தேவையான ஒன்றை வாங்கும் உரிமை, மற்றும் தான் உற்பத்தி செய்த சரக்கை (இதை பொதுப் பொருளில் குறிப்பிடுகிறேன்) விற்கும் உரிமை, இரண்டையும்தான்.//

ஒருவர் தனக்கு தேவையான ஒன்றை வாங்கும் உரிமை என்பது அரசு விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு தானே இருக்க முடியும்?உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் இறக்குமதி செய்யப்பட்ட கார் வாங்க வேண்டுமென்றால் அரசு அதற்கு விதிக்கும் 200% வரியை கட்டிவிட்டு,அரசு அனுமதி பெற்ற டீலர்கள் மூலம் தானே வாங்க முடியும்?ஆக பொருளை வாங்க உரிமை உண்டு என்றாலும் அந்த பொருளின் விலையை,அதை விற்போரை கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் அரசுக்கு உரிமை உண்டு தானே?

மது விஷயத்திலும் நடப்பது இதுதான்.மதுவுக்கு அதிக வரிவிதித்து அதன் விலையை அரசு முறைப்படுத்துகிறது.அதை விற்கும் உரிமையை தனியாருக்கு தராமல் அரசே தன் வசம் வைத்துள்ளது.இதில் தனிநபர் உரிமை மீறல் எந்த இடத்திலும் வரவில்லை.

///அரசுமயமாக்கப்பட்ட நியாய விலைக் கடைகளிலும் (ரடிஒன் ஷொப்ச்) மோசடி நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மோசடி நடக்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியுமா? இன்று நடக்கவில்லையென்றாலும், நாளை நடக்கலாம். மோசடிகளை கண்காணிப்பு, அதிரடிப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளால்தான் ஓழிக்க முடியும். பெட்ரோல் / டீசல் போன்றவற்றை தனியார்தான் விநியோகிக்கிறார்கள். மது விற்க முடியாதா அவர்களால்?///

பெட்ரோலை கலப்படமில்லாமல் விற்கும் தனியார், மதுவில் ஏன் கலப்படம் செய்தனர்?கள்ள மது ஏன் விற்றனர்?அவர்கள் அப்படி செய்ததால் தானே அரசு அதை எடுத்துக்கொண்டது?

தனியார் தாரளமாக ரேஷன் கடைகளை திறந்து அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் கோதுமை 2 ருபாய்க்கும் விற்கலாம்.அரசு வேண்டாம் என்றா சொல்லப்போகிறது?

ரேஷன் கடைகளில் கலப்படம் நடப்பது உண்மைதான்.ஆனால் டாஸ்மாக் கடைகளில் அவ்வாறு நடப்பதில்லை.இதுவரை அப்படி பெரிய அளவில் புகார் வரவில்லை.

இனிமேல் வராதா என்று கேட்டால் எனக்கு மட்டுமல்ல யாருக்கும் பதில் தெரியாது.வந்தால் நிலையை மாற்றிக்கொள்ளலாம்.புகார் வராதவரை இந்நிலையே தொடரலாம் என நினைக்கிறேன்

முத்து(தமிழினி) said...

குறும்பன்,

நான் திருச்செங்கோட்டுக்காரன்தான்.ஆனால் அங்கு அதிகம் வாழ்ந்ததில்லை.அரசியல் தொகுதி நிலவரம் எல்லாம் அலச தெரியாது.

நான் வளர்ந்தது சேலம் ஆத்தூர்.அங்கு இந்த முறை காங்கிரஸ் போட்டியிடுகிறது. தி.மு.க , பா.ம.க கூட்டணி இருப்பதால் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். போட்டி கடுமையாக இருக்கும்.

முத்து(தமிழினி) said...

செல்வன்,

நீங்கள சொல்லும் அமெரிக்காவில் அரசாங்கம் குடிபழக்க விஷயத்தில் என்ன கொள்கை வைத்துள்ளது?

விலை கம்மி என்றால் அதிகம் தண்ணி அடிப்பார்கள் என்ற லாஜீக எனக்கு புரியவில்லை.அப்படியா? அப்ப கெப்பாசிட்டி என்பது என்ன?

முத்து(தமிழினி) said...

விங்ஸ் மற்றும் செல்வன்,

நீங்கள இருவரும் அரசு மற்றும் தனியார் துறை பற்றி பேசுகிறீர்கள்.நான் சொல்லுவது
கள், சாராயம் என்று மலிவு விலை மதுவை அரசு அனுமதிப்பதை பற்றித்தான்.

நெருப்பு சிவா said...

Muthu,

In US, state governments have more powers than Federal government in many issues.
Also, laws vary across the country to reflect the local values.

There are quite a number of counties which are declared 'dry'. You can't buy alcoholic beverages or can buy them only with difficulty in some areas. television beer commercials will not show people actually drinking beer.

On national level, you can't buy alcoh. if you are less than 18 years of age (remember the news that dinamalar printed with photo of group of +2 guys 'drinking' public in Tiruppur?. In US, GW Bush's under 18 - daughter was pusnished for buying alcohol). And, even if you are a 'kudimahan' you can't make scenes anywhere. If you make scenes that distrubs your neighbours, chances are that cops will knock your doors within minutes.

I donot think that the contexts are same to compare US and India in alcoholic issue.

முத்து(தமிழினி) said...

வா,

இங்கேயும் டிவியில் பீர் குடிப்பது போல் விளம்பரம் காட்டப்படுவதில்லை.

இங்கேயும் சிறுவர்கள் குடிக்கக்கூடாது.

இங்கேயும் தண்ணி அடிச்சுட்டு வீதியில் கலாட்டா செய்ய உங்களுக்கு உரிமை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

செல்வன் said...

/நீங்கள சொல்லும் அமெரிக்காவில் அரசாங்கம் குடிபழக்க விஷயத்தில் என்ன கொள்கை வைத்துள்ளது?

/

அன்பின் முத்து,

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மதுபான விலை கிட்டத்தட்ட ஒன்றுதான்.ஆனால் இங்கு வருமானம் அதிகம்.இங்கிருக்கும் மதுகொள்கை இந்தியாவுக்கு பொருந்தாது.பணக்காரனுக்கு என்ன வியாதி வந்தாலும் செலவு செய்து வைத்தியம் செய்துகொள்வான்.அவன் செத்தாலும் அவன் குடும்பம் தெருவுக்கு வராது.ஏழைகளுக்கு அப்படியா?

இங்கு மருத்துவம் உலகதரத்தில் உள்ளது.மருத்துவ செலவுகளை இன்சூரன்ஸ் கவனித்துக்கொள்ளும்.மக்களிடம் விழிப்புணர்வும் அதிகம்.இந்தியாவில் அந்த வசதிகள் வரும்வரை குடிப்பழக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் சரி.

/விலை கம்மி என்றால் அதிகம் தண்ணி அடிப்பார்கள் என்ற லாஜீக எனக்கு புரியவில்லை.அப்படியா? அப்ப கெப்பாசிட்டி என்பது என்ன?/

விலை குறைந்தால் நுகர்வு அதிகரிக்கும் என்பது law of demand என்ற பொருளாதார கோட்பாடாகும்.கெபாசிடி என்பது அதிக பட்ச நுகர்வு .குடிகாரன் பாஷையில் சொன்னால் பிளாட் ஆகும் அளவு குடிப்பதுதான் தான் கெபாசிடி.

ஸில்வியா said...

I donot know why we should consider America as role model for this issue. In fact, once I saw statistics in Time magazine that did show the increasing number of crimes stimulated by the 'alcohol effect'.

Also, the rape ratio is slightly more than normal here + significant number of rape attempts were made by drunkards and drug addicts.


Sylvia

முத்து(தமிழினி) said...

செல்வன்,

அடிக்ட் அக உள்ளவர்கள் பிளாட் ஆகும்வரை எப்படியும அடிப்பார்கள்....

அளவோடு இருப்பவர்கள் எப்போதும் அளவோடுதான் குடிப்பார்கள் என்பது என் புரிதல்.

முத்து(தமிழினி) said...

கள் , சாராயம் குடிக்கிற எல்லோரும் ஈரல் வெந்து சாவதுபோல் கூறுகிறீர்கள். நீங்கள்
அடிக்ட்களையும் சாதாரண குடிபழக்கம் உள்ளவர்களையும் ஒரே கல்லில் வைத்து எடை போடுவது போல் எனக்கு தோன்றுகிறது.

செல்வன் said...

அடிக்ட் அக உள்ளவர்கள் பிளாட் ஆகும்வரை எப்படியும அடிப்பார்கள்....அளவோடு இருப்பவர்கள் எப்போதும் அளவோடுதான் குடிப்பார்கள் என்பது என் புரிதல்.//

எடுத்த எடுப்பில் யாரும் அடிக்ட் ஆவதில்லை.இன்று அளவோடு குடிப்பவன் நாளை அளவுதாண்டி குடிப்பான்,அடிக்ட் ஆவான்

முத்து(தமிழினி) said...

sylvia,

//Also, the rape ratio is slightly more than normal here//

what is the normal rape rate? :))))

i just compare becos somebody has compared america here for one or other issue

முத்து(தமிழினி) said...

அன்பின் செல்வன்,

அது அவனுக்கு அமையும் பொண்டாட்டியை பொறுத்தது என்கிறீர்களா? :))))))))

ஸில்வியா said...

// what is the normal rape rate? //


I Apologize. I should have clarified. Approx. there are more than one rape attempt every 2 minutes in USA. For me who has a background of India, that seemed more than what I heard on India.

Also, sirikka vendiya issue illai ithu endru ninaikiren.

sylvia

முத்து(தமிழினி) said...

சில்வியா,

முன்னேறிய அமெரிக்க நாகரீகத்தை பற்றிய என் கருத்துக்கு ஆதரவாகத்தான் உங்கள் கருத்து உள்ளது.

நார்மல் ரேப் ரேட் என்று ஒன்று உள்ளதா என்பதுதான் என் சிரிப்புக்கு காரணம்.மற்றபடி தவறான எண்ணமோ நோக்கமோ இல்லை. நீங்கள் இந்திய ரேப் ரேட்டுடன் கம்பேர் பண்ணியிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

முத்து(தமிழினி) said...

sylvia's views contradicts with selvan's views atleast in america

விடாதுகறுப்பு said...

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் முத்து.

sivagnanamji(#16342789) said...

"i am an addict to prohibition..."ANNA
Once ANNA & EVK SAMPATH were travelling by car from madras to delhi. while the car was passing thro' various states they have seen toddy pots on the top of pylmara & coconut trees.having witnessed it, sampath started to argue in favur of scrapping of prohibition policy.he gave varios evidences to prove that it was a failure even in west...from health point of view...and from from employment , revenue, administratin etc points of view. anna said that the problem should be approached from emotional point of view..in west people used to drink but they are not addicts...namma nattile padikkath theriyadhavan mattumille...kudikkath theriyadhavanum adigam....
what muka has done cannot be undone even by himself

aathirai said...

http://www.newvision.co.ug/D/9/34/454513

Glass of wine a day keeps doctor away.

ஆகையால் கருணாநிதி மக்களுக்கு ஒயின் விற்று அந்த காசில் கலர் டிவி
கொடுக்கலாம். ஒயின் காந்த்ராக்டை மாறன் ப்ரதர்ஸுக்கு கொடுக்கலாம்.

கலர் டிவியால் பொது அறிவும், ஒயினால் மக்களின் சுகாதாரமும் முன்னேற்றாமடையும்.
மாறன் ப்ரதர்ஸ்க்கும் பணம் கொட்டும்.

ஒரேகல்லில் மூணு மாங்கா.

arunagiri said...

JJ அரசுடைமை செய்தது கள்ளுக்கடை வருமானத்தை DMK-யின் ஆதிக்கதில் இருந்து விடுவித்து, தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர. மற்றபடி அரசின் கீழ் இருந்தாலும் தனியார் கீழ் இருந்தாலும் தத்தம் கட்சிக்காரர்கள் பயனடய வேண்டும் என்ற "தொண்டுள்ளத்தில்" இரு கழகங்களுமே ஒரு நோக்குப்பார்வை கொண்டவைதான். மற்றபடி அரசு பால் வியாபாரம், கள்ளு வியாபாரம் போன்றவைகளைச் செய்யாமல், இவற்றை regulate செய்யும் வேலையை மட்டும் செய்வது அன்றாட வாழ்வில் காணும் corruption ஒழிய ஒரு நல்ல வழி.

மா சிவகுமார் said...

முத்து,

நல்ல விவாதம். எல்லாக் கோணங்களிலும் அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றை மட்டும் சேர்க்க விரும்புகிறேன்.

இன்றைக்கு மூலைக்கு மூலை இருக்கும் ஒயின் கடைகளில் ஒன்றின் பக்கத்தில் போய் ஒரு அரை மணி நேரம் (மாலையில்) நின்று பாருங்கள். எப்படிப்பட்டவர்கள் வந்து குடிக்கிறார்கள், அவர்கள் எல்லாம் அளவோடு குடிப்பவர்களா, அவர்களது உடல் நிலை என்ன என்பதை கவனியுங்கள்.

தெருவில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் மனிதர்களில் ஒருவரை தொட்டுத் தூக்கிப் பாருங்கள். அந்தப் பரிதாபத்தின் பின்னாலும் ஒரு மனித முகம் இருக்கிறது, அது சில குழந்தைகளுக்குத் தந்தை, ஒரு பெண்ணுக்குக் கணவன், ஒரு காலத்தில் ஒரு தாய்க்கு மகன் என்று புரிந்து பாருங்கள்.

கடையில் வந்து குடிப்பவர்களில் எத்தனை பேர் அளவோடு குடித்து மதிப்போடு வாழ முடிபவர்கள் என்று எண்ணிப் பாருங்கள். பொருளாதாரம், அரசுக்கு வருமானம், பிற மாநிலங்களில் கிடைக்கிறது என்ற வாதங்களை எல்லாம் அந்தப் பரிதாபங்களைப் பார்த்த பிறகு பேசலாம்.

என்னைப் பொறுத்த வரை, இப்படிக் கிடைக்கும் பணத்தைப் பற்றி ஜெயலலிதா சட்டசபையில் பீற்றிக் கொண்டதும், இதைக் கொண்டு கருணாநிதி தொலைக்காட்சி கொடுப்பதும் கீழ்த்தரமான தலைமை. இப்படி அரசியல் நடத்தி ஆட்சி செய்வதை விட அவர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்.

அன்புடன் கொஞ்சம் கோபத்துடன்,

மா சிவகுமார்

செந்தழல் ரவி said...

ஆஜர்...

பெங்களூரில் 60 ரூவா ஆக்கிட்டானுங்க..

மகேந்திரன்.பெ said...

இத் திட்டத்துக்கு குவாட்டர் கோவிந்தன் தன் முழு ஆதரவை தெரிவிக்கிறார். அத்துடன் ஒரு மரத்துக் கள்குடித்தால் உடலுக்கு நல்லது என்ற தனது புதிய மனதை மயக்கும் புதிய தகவலை சொல்லிக்கொள்கிறார்

தம்பி said...

கள் , சாரயத்தை அறிமுகப்படுத்தலாம் தவறில்ல, ஆனால் அதை முறைப்படுத்தணும் இல்லனா மூலைக்கு மூலை சாராயம் காய்ச்சுவாங்க. எது போலி எது அரசு சரக்குன்னு தெரியாம கண்டதை குடிச்சி கண்ணு போவும் பின்னாலயே உயிரும் போகும்.

நான் படிச்ச ஊர் பக்கத்தில ஒரு கிராமம் இருக்கு அங்க இருக்கறவங்க வீட்ல விசேஷம்னு ஏதாவது நடந்துதுன்னா சாப்பாடு செய்ற இடத்திக்கு பக்கத்தில இன்னோரு பள்ளத்தை தோண்டி அங்க ஒரு சட்டிய வச்சி சூடா சாராயம் காய்ச்சி குடிப்பாங்க சில சமயம் கோளாறு ஆகாது. சில சமயம் கோக்குமாக்கா ஏதாவது ஆகிடும்.

ரவி,

//பெங்களூரில் 60 ரூவா ஆக்கிட்டானுங்க.. //

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க ஊர்லதாம்பா சரக்கு ரேட் கம்மின்னு நினைச்சேன்.

Sivabalan said...

முத்து

இது ஜாலிக்கு...

//கிங்ஃபிஷர் பீயர் மங்களூரில் 52 ரூபாயாமே //

இதன் விலை மட்டும் தெரிந்ததன் மர்மம்?..


சீரியஸாக...

குறுகிய கால நிதி வரவுக்கு சாராயக்கடைக்கள் கை கொடுக்கலாம்..ஆனால் அதன் மூலம் அந்த குடும்பத்திற்கும் நாட்டுக்கும் ஏற்படும் நீன்ட கால நிதி இழப்பு மிக அதிகம்.. இதற்கு என்னிடம் Data இல்லை..

ஆனால் செல்வன் சொல்லுவது போல் இந்த பழக்கத்தை சமுதாயதில் குறைக்கவே அரசு பாடுபடவேண்டும்..

நிதி ஆதாரங்களுக்கு பல வழிகள் உள்ளன...

ஜோ / Joe said...

முத்து,
சும்மா ஒரு சுவாரஸ்ய தகவல் ...

முன்பு தமிழகத்தில் மதுவிலக்கு அமுலிலும் ,கேரளாவில் கள்ளுக்கடைகள் மூலைக்கு மூலை இருந்த காலத்தில் எங்கள் குமரி மாவட்டத்தின் எல்லையான களியக்காவிளையில் ஊரின் நடுவில் இருக்கும் எல்லை பலகைக்கு அந்த பக்கத்தில் நின்று கள்ளு குடித்து விட்டு நம்மூர் காரர்கள் இந்த பக்கம் நிற்கும் நம்மூர் போலீஸைப்பார்த்து கிண்டல் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மனதின் ஓசை said...

சாராயத்தை ஒழிப்பது முடியாத காரியம் என இருக்கும் பொழுது அதன விளைவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அதனை செய்ய வேண்டும்.. விஷச்சாரயம் அழிக்கப்பட வெண்டும் முதலில்.. குடி பழக்கத்தால் எற்படும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.
அரசு அதனை எடுத்து நடத்துவது சரியானதுதான்.. நிதி ஆதரத்துக்காக என்பது காரணம் அல்ல.. இப்படி செய்வதினால் கூடுதல் நிதி வந்தால் நல்லதுதானே..

மற்றபடி மலிவு விலையில் கொடுப்பது சரி என்றே தோன்றுகிறது.

//நான் வளர்ந்தது சேலம் ஆத்தூர்.//
நம்ம ஊரா? எனக்கு சின்னசேலம் :-)

G.Ragavan said...

குடி குடியைக் குடிக்கும். சரிதான். எல்லாரும் குடிக்கிறதத் தடுக்க முடியாது. எதையுமே தடையுத்தரவு போட்டுத் தடுக்குறது நல்ல விளைவைத் தராது. மாறாக அதை உணர வைக்க ஏதாவது செய்ய வேண்டும். அது குழந்தைகளிடமிருந்து வர வேண்டும். அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.

கள்ளுக்கடை யாவினும் புண்ணியம் செய்தல்
ஆங்கோர் குழந்தைக்கு நல்லறிவு அளித்தல்

முத்து(தமிழினி) said...

//நம்ம ஊரா? எனக்கு சின்னசேலம் :-)//

அட...ரொம்ப நெருங்கீட்டிங்க.. மெயில் அனுப்புங்க சார்...

தம்பி said...

//நம்ம ஊரா? எனக்கு சின்னசேலம் :-)//


எனக்கு கச்சிராபாளையங்கோவ்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?