கருணாநிதி கட்சி தேர்தல் அறிக்கையில் எல்லாருக்கும் கலர் டிவி தருவோம் என்று மயிர்கூச்செறியும் அபத்த வாக்குறுதியை அறிவித்தது பலருக்கும் வயிற்றி்ல் புளியை கரைத்துள்ளது. இதை கண்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை மாற்றி வெளியிட்டுள்ளன.அவை பின்வருமாறு...
அதிமுக
அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண் தரும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு நிறைய டாஸ்மாக கடைகளை திறக்க உங்களின் தங்கத்தலைவி தாயுள்ளத்தோடு ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் வீட்டுக்கு ஒரு டாஸ்மாக கடை என்பது தான் இந்த ஆட்சியின் லட்சியம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும் அமைச்சர் என்ற திட்டத்தை தொடர்ந்து அனைவரும் எம்மெல்லே என்று அரிய திட்டத்தையும் உங்கள் சகோதரி கொண்டு வர எண்ணி உள்ளார்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அடிப்படையில் வர உள்ள இந்த திட்டம் தீய சக்தியாம் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்கும்.
கச்ச தீவு மட்டுமல்ல, இலங்கை தீவையே வாங்கி வர சொல்லி அன்பு தம்பிகள் காளிமுத்து, ஜெயகுமார் ஆகியோரை அனுப்பியுள்ளேன்.
திமுக
கலர் டிவி கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதில் சன் தொலைக்காட்சியும் அதன் கோலங்கள், சிதம்பர ரகசியம் போன்ற முற்போக்கு சீரியல்களை இலவசமாக கேபிள் வாடகை இல்லாமல் பார்க்க ஆவண செய்யப்படும்.
தேர்தல்களில் கூட்டணி மாறுபவர்கள் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்பே மாறிவிட வேண்டும் என்று சட்டதிருத்தம் கொண்டு வருவோம்.
கண்ணகி சிலையை நிறுவுவதோடு இலலாமல் எதிர்காலத்திலும் அதை பெயர்க்க இயலாதவாறு வெளிநாட்டு தொழிற்நுட்பத்தில் கான்கீரிட் அமைப்போம்.
விஜயகாந்த்
ரேசன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவதோடு இல்லாமல் சமைத்தும் தருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக உங்களை ஆண்ட இவர்கள் இதை செய்தார்களா?
அனைத்து ஏழைகுடும்பங்களுக்கும் விஜயகாந்தின் ஏழைசாதி படம் போட்டு காட்டப்படும்.
ஹி ஹி இதெல்லாம் ஒரு கற்பனைதான்.
Saturday, April 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
கருணாநிதி கலர் டீவீன்னு சொல்லி அதுக்குக் காரணம் சொன்னப்பயே எனக்கு வயத்தக் கலக்கி தலையச் சுத்தி மயக்கம் வந்துருச்சு. இப்ப நீங்க சொல்லீருக்குற மாதிரியெல்லாம் நடந்தா....என்ன ஆகுறது!!!!!!!!!!!!!!
:-))))))))
எங்க டீ.வீ படம் காட்டிடுமோனு அச்சப்படறாங்க போல:-)
மக்களை முட்டாளுக்குற உரிமை ஜெயலலிதாவுக்கு மட்டும் சொந்தாமா என்ன? கலைஞருக்கு அந்த உரிமை கிடையாதா:-((((
//ரேசன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவதோடு இல்லாமல் சமைத்தும் தருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//
Very good comment.
"கலர் டிவி கொடுப்பதாக தி.மு.க அறிவித்துள்ளது. அதில் சன் தொலைக்காட்சி மட்டும் தான் தெரியுமாம்.."-னு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது... அதை சில (இடது சாரி) நண்பர்களுக்கு... அனுப்பிவைக்க... கூட்டணியை அது பாதிக்கும்னு வாங்கிட்டாய்ங்க... அதோட அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காலி பண்ணிட்டேன்.
:(
//கருணாநிதி கலர் டீவீன்னு சொல்லி அதுக்குக் காரணம் சொன்னப்பயே எனக்கு வயத்தக் கலக்கி தலையச் சுத்தி மயக்கம் வந்துருச்சு. //
ஹி..ஹி
// மக்களை முட்டாளுக்குற உரிமை ஜெயலலிதாவுக்கு மட்டும் சொந்தாமா என்ன? கலைஞருக்கு அந்த உரிமை கிடையாதா:-(((( //
உண்டு உண்டு உண்டு...... :-)))))))))))))))
நீங்க எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யுங்க வேணாங்கலை; ஆன்
அ எனக்கு ஒரே ஒரு பதில் சொல்லிடுங்க. ஒரு கட்சின்னு அதுக்குன்னு ஒரு think tank கட்டாயம் இருக்கும். அப்படி இருந்தும் இந்த மாதிரி டி.வி. கொடுக்குரோம்னு ஒரு தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறதுன்னா...அது எப்படி? ஆனாலும் இவ்வளவு முட்டாள்தனமா, - மக்கள் இந்த அளவு முட்டாள்தனமா இருப்பாங்கன்னு நினைக்கிற அளவுக்கு, அவங்க think tank இருக்குமா, என்ன? புரியலையே சாமி, இந்த அரசியல்வாதிகளோட அபத்தங்கள்...
ஒரு மாருதி காருக் கு Rs 25000. reduced according to this budjet.
Government is going to lose Rs 25000/ per car.
If this is reasonable ,color Tv also reasonable!!!!!
சலுகைகள் பணக்காரற்களுக்கு மட்டுமே
சொந்தமல்ல!!!!!!!
ஊட்டி விடுவதற்கு எந்த கட்சிம் முன்னுக்கு வரவில்லையா? அதையும் செய்வதாக யார் சொல்றாங்களோ... அவர்களுக்குத்தான் என் வாக்கு!
நல்ல கற்பனை வளம் முத்து வாழ்த்துக்கள்!
//ஊட்டி விடுவதற்கு எந்த கட்சிம் முன்னுக்கு வரவில்லையா? அதையும் செய்வதாக யார் சொல்றாங்களோ... அவர்களுக்குத்தான் என் வாக்கு!//
சந்திப்பு,
நச் கமெண்ட்...:)))
ஊட்டி விட்டப்பிறகு மூச்சா பீச்சா யார் போறது???
தேர்தல் அறிக்கை என்றாலே நல்ல சிரிப்பு படம் தான் போங்க. :D இதில கலர் டி.வி கலக்கலா வருது.
ஆன ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிள் பற்றி வசதியா மறந்துட்டோம் பாருங்க. அதுவும் வசதியான வீட்டு பிள்ளைகளுக்கும் சைக்கிள். இது ஜெயலலிதா ______ வீட்டு பணம் இல்லீங்களா? :P இதை நாங்க கேக்க மாட்டோங்க ...
//ஒரு மாருதி காருக் கு Rs 25000. reduced according to this budjet.
Government is going to lose Rs 25000/ per car.
If this is reasonable ,color Tv also reasonable!!!!!
சலுகைகள் பணக்காரற்களுக்கு மட்டுமே
சொந்தமல்ல!!!!!!!//
மாருதி காரின் விலையினை குறைத்தது, இலாபத்தின் ஒரு பகுதியில். அதனால் நட்டம் ஒன்றும் இல்லை. அதனை போலவே, இலவச மிதிவண்டி கொடுத்தது கூட, மாணாக்கர்களுக்கு நன்மை தானே ஒழிய வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. (ஏனுங்கோ...உங பிள்ளைங்களுக்கு சைக்கிள் கிடைக்கலையா? ரொம்ப கோவமாக்கீறிங்கோவ்?)
எனக்கு படம் பார்ப்பதற்கு டீவி வேண்டும். இலவசமாக உணவு வேண்டும். கை செலவுக்கு மாத மாதம் பணம் வேண்டும். மாதததிற்கு ஒரு முறை சுற்றுள்ளா கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் முக்கியமாக இலவசமாக lifetime(incoming & outgoing) மொபைல் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குதான் என் ஒட்டு
கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, சுத்தம், சுற்று சூழல், நீர், காற்று, இருப்பிடம், உணவு, மின்சக்தி, போக்குவரத்து, வீதி பராமரிப்பு இப்படியான அம்சங்கள் பற்றியும் தமிழக தேர்தலைலில் கதைக்ப்படுவதுண்டா? கலர் ரிவி, கேபிள் அனுமதி, கண்ணகி சிலை, தமிழ் பெயர்...எந்த உலகில இருக்கிறீர்கள். ஆனால் ஒன்று. தேர்தல் நடைபெறுகின்றது. பல கட்சிகள் பங்குபற்றுகின்றன. மக்கள் வாக்களிப்பு நடைபெறும். யாருக்கும் உயிர் போகாது. ஒப்பீட்டளவில் முன்னேற்றமே.
முத்து,
கடைசி வரை இது உண்மையான தேர்தல் அறிக்கை என்று நினைத்து படித்தேன், கடைசியில் தான் இது உங்க கற்பனை என்று தெரிந்தது.
அடுத்த தேர்தலுக்கு உங்களை அவர்கள் தேடி வந்தாலும் வரலாம், பயப்பட வேண்டாம், தேர்தல் அறிக்கை தயார் செய்து கொடுக்கத் தான். :)
நல்ல நகைச்சுவை கோமாளிக் கூத்து!
இந்த அவலங்கள் தீர கழகங்களை ஓரம் கட்டுவதே தீர்வு!
செய்யுமா தமிழகம்!?
செய்ய வேண்டும்!
மாருதி காரின் விலையினை குறைத்தது, இலாபத்தின் ஒரு பகுதியில். அதனால் நட்டம் ஒன்றும் இல்லை. அதனை போலவே, இலவச மிதிவண்டி கொடுத்தது கூட, மாணாக்கர்களுக்கு நன்மை தானே ஒழிய வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. (ஏனுங்கோ...உங பிள்ளைங்களுக்கு சைக்கிள் கிடைக்கலையா? ரொம்ப கோவமாக்கீறிங்கோவ்?) //////
ஏனுங்க NAGARAJAN என்கிட்ட கார் இருக்குதுங்கோ ... இதை படிங்க..---->
திரு (Thiru) said...
தேர்தல் அறிக்கை என்றாலே நல்ல சிரிப்பு படம் தான் போங்க. :D இதில கலர் டி.வி கலக்கலா வருது.
ஆன ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிள் பற்றி வசதியா மறந்துட்டோம் பாருங்க. அதுவும் வசதியான வீட்டு பிள்ளைகளுக்கும் சைக்கிள். இது ஜெயலலிதா ______ வீட்டு பணம் இல்லீங்களா? :P இதை நாங்க கேக்க மாட்டோங்க ...
Saturday, April 08, 2006 4:10:08 PM
Nagarajan said
///மாருதி காரின் விலையினை குறைத்தது, இலாபத்தின் ஒரு பகுதியில். அதனால் நட்டம் ஒன்றும் இல்லை. அதனை போலவே, இலவச மிதிவண்டி கொடுத்தது கூட, மாணாக்கர்களுக்கு நன்மை தானே ஒழிய வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. (ஏனுங்கோ...உங பிள்ளைங்களுக்கு சைக்கிள் கிடைக்கலையா? ரொம்ப கோவமாக்கீறிங்கோவ்?) //////
Dharan said
ஏனுங்க NAGARAJAN என்கிட்ட கார் இருக்குதுங்கோ ... இதை படிங்க..---->
/// திரு (Thiru) said...
தேர்தல் அறிக்கை என்றாலே நல்ல சிரிப்பு படம் தான் போங்க. :D இதில கலர் டி.வி கலக்கலா வருது.
ஆன ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிள் பற்றி வசதியா மறந்துட்டோம் பாருங்க. அதுவும் வசதியான வீட்டு பிள்ளைகளுக்கும் சைக்கிள். இது ஜெயலலிதா ______ வீட்டு பணம் இல்லீங்களா? :P இதை நாங்க கேக்க மாட்டோங்க ...
Saturday, April 08, 2006 4:10:08 PM ////
DMK is better than ADMK...
Excellent
இது நகைச்சுவைப் பதிவு என்றாலும் - தமிழகத் தேர்தல் 2006 பதிவு ஒன்றில் நான் இட்ட பதில் ஒன்றை இங்கே இடுகிறேன் :
" பெரிய பெரிய கம்பெனிகள், தொழில் துறை திமிங்கிலங்கள், பங்கு வர்த்தகத்துறை முதலைகள் - எல்லாம் வங்கிக் கடன் வாங்கி பிறகு ஏப்பம் விட்டுவிட்டு - 'கவனிக்க வேண்டியவர்களை' கவனித்துவிட்டால் Bad Debt, irrecoverable debt என்று 'ஜல்லியடித்துவிட்டு' வருடா வருடம் கோட்டு, டை போட்ட Board of Directors - Board meeting-இல் 25,000 கோடி, 30,000 கோடி என எளிதாக 'பணக்காரர்களுக்கு' அளிக்கும் கடனைத் தள்ளுபடி செய்வார்கள்.
ஆனால், ஏழைக்கு குறைந்த விலையில் அரிசி, இரண்டு ஏக்கர் தரிசு நிலம் என்றால் மட்டும் - இலட்சம் கேள்விகள் கேட்பார்கள்!"
- என்று கம்யூனிஸ்ட்டுகள் 'போட்டுத் தாக்குகிற' தாக்கில், < இது போன்ற கிண்டல்கள் > "கோயிந்தா கோயிந்தா" ஆகிடும்!
"The more time i spend at the Wall Street - the more i realise that Karl Marx was right" - என்று யாரோ ஒரு Wall street financial guru - கொஞ்சம் நாளைக்கு முன்னால அளப்பற பண்ணிட்டாருன்னு வேற அருவாளப் போடுறாங்க தோழருங்க! ;)
வீட்டில் சமைத்தால் மட்டும் போதுமா? மற்றா வேலைகளை யார்
பார்ப்பது. அப்படியே அரசாங்கமே வந்து துணிமணிகளை துவைத்து,
வீட்டையும் சுத்தம் பண்ணிவிட்டால் எல்லோரும் நிம்மதியா சீரியல்
பாக்க போகலாம்.
anonymous அவர்களே,
உங்களுக்கு ஐபாட் வேண்டாமா?
Post a Comment