Tuesday, April 11, 2006

நானூறு கோடியும் மேதா பட்கரும்

சல்மான்கான் என்ற கிரிமினல் (இவரை பின் வேறு எப்படி சொல்லுவது) கைது செய்து உள்ளே அடைக்கப்பட்டுள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியில் பலரும் இப்போது நிம்மதியாக வீதியில் நடமாடுவதாக தகவல் வந்துள்ளது.


நானும் அடிக்கடி அந்த வீதியில் சுற்றியவன்தான்.எஙகள் வங்கிக்கு அங்கு ஏகப்பட்ட கிளைகள் உள்ளன.(நக்மா எங்க கஸ்டமர்.ஹி.ஹி)

சன் டிவியில் நேற்று ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதாவது சல்மான்கானை கைது செய்ததால் 400 கோடி முடங்கிவிட்டதாம்.பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். இவர் மேல் உள்ள கேஸ்(கள்) ஏறத்தாழ எழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்போது தெரியாதாமா இந்த தயாரிப்பாளர்களுக்கு?அல்லது நம்முடைய நீதி துறை மேல் அவ்வளவு நம்பிக்கையா?

ஆனால் நம்முடைய கவலையெல்லாம் இதே போல் தெல்கி போட்ட தொகை,தாவுது போட்ட தொகைக்கு எல்லாம் பம்பாயி்ல் எல்லாரும் கவலைபட் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பது தான்.

*****************

நேற்று ரோசா வசந்தின் சுட்டியை பின்பற்றி சென்றபோது மேதா பட்கருக்காக ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணாவிரதம் இருக்க அழைப்பு இருந்ததை பார்த்தேன்.இன்று செவ்வாய்கிழமை வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு உருப்படியான காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தேன்.

மாலை ஒரு லெமன் சர்பத் குடித்து என் உண்ணாவிரதத்தை முடிவு செய்தேன்.நன்றி ரோசா வசந்த்.

காலையி்ல் செய்தித்தாளில் பார்த்த பிரான்ஸ் சட்ட வாபஸ் செய்தியும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.நேற்றுவரை நடந்த ஸ்டேட் வங்கி ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற்றதையும் வைத்து பார்க்கும்போது மீடியாக்களின் சில்லறை பிரச்சாரங்களையும் மீறி இன்னும் உலகில் போராட்டங்களுக்கு மதிப்பு இருக்கிறது என்பது புரிகிறது.

4 comments:

Anonymous said...

நண்றிகள் முத்து, இப்பதிவிற்கு.
போராட்டங்கள் வெற்றி பெறுவது
சில்லரை பிரச்சாரங்கள் பொய்களென அடையாளம் காட்டப்படுவது முக்கியம்.

Muthu said...

நன்றி பாலாஜீ- பாரி

சில்லறை பிரச்சாரங்கள் எல்லா தளங்களிலும் உண்டு. இதை எதிர்ப்பது நமது கடமை.எதைக் கண்டும் அஞ்சிடோம்.உண்மையை உலகிற்கு சொல்வோம்.

பரஞ்சோதி said...

பாராட்டுகள் முத்து.

சந்திப்பு said...

முத்து தங்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்! நான் ரோசா வசந்தின் அழைப்பை கவனிக்கவில்லை. எல்லாம் அலுவலக பிசிதான். அடுத்து ஐ.ஐ.டி. - இடஒதுக்கீடு விவாதம் சூடு பறந்து கொண்டிருப்பதால், அதற்கான டேட்டாவை வேறு கலக்ட் செய்ய வேண்டியுள்ளது. பிரான்சு புரட்சிகர மக்கள் போராட்டத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜனநாயக ரீதியாக பெருந்திரள் போராட்டம் எதையும் சாதிக்கும் என்பதற்கு பிரான்சு ஒரு உதாரணம்.