தமிழ் வலைப்பதிவுகள் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.வலைப்பதிவுகளில் புகழ்பெற்று முதலமைச்சர் ஆகும் ஆசையைக்கூட சிலர் ரகசியமாக வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு உதவுவதே இந்த பதிவின் நோக்கம்.
பரவலாக உங்கள் பதிவுகள் படிக்கப்படுவது, பின்னூட்டங்கள் நிறைய பெறுவது, நிறைய பேரால் உங்கள் கருத்துக்கள் போற்றப்படுவது என்று பலவகையான ஆசைகள் உங்களுக்கு இருக்கக்கூடும்.அவர்களுக்கு சில தகவல்கள்.
சரக்கு இல்லாமல் அல்லது விஷயம் இல்லாமல் விடுதலைபுலி பிரபாகரனுக்கு நாற்பது கேள்விகள், திருமாவளவன் மனிதனா,இந்து மதம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா, போலி டோண்டுவை சுரண்டிப்பார்ப்போம் போன்ற தலைப்புகளை தேர்வு செய்ய வேண்டாம். பல அறிவுஜீவிக்கள் முதற்கொண்டு குட்டி திராவிட ராஸ்கல்கள் வரை பலரும் வந்து பின்னிவிடுவார்கள் பின்னி. இவ்வகை பதிவுகளில் சரக்கு இருந்தால் பின்னூட்டங்களை வளர்க்கலாம். இல்லாவிட்டால் வம்புதான்.
விவாதங்கள் செய்வதும் சுலபம்.பல உரல்கள் (URL) கைவசம் இருப்பது நன்மை பயக்கும். உரல்கள் அளிப்பதும் இல்லாமல் சில இஸம்கள் கைவசம் இருக்கவேண்டும். நீங்கள் என் கருத்தை எதிர்த்தால் நீங்கள் அண்டகாகஸம் என்ற அரிய அறிவியல் கருத்தை எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று அடித்துவிடவேண்டும்.உங்கள் ஒன்றுவிட்ட தாத்தாவும், தூரத்து மாமாவும் உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என்று முழங்கவேண்டும்.
வம்பு விவாதங்கள் வேண்டாம் என்பதற்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றியும் அன்பே உருவான கல்கி பகவான் பற்றிய பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டங்கள் வரும் என்று கூகிள் நோட்டிஃபையரை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கவேண்டாம்.இதுவும் வேலைக்கு உதவாது. தப்பிதவறி யாராவது பதிவு பக்கம் வந்தாலும் பதிவுக்கு நன்றி என்று எழுதிவிட்டு அடுத்தமுறை உங்கள் பதிவை பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடக்கூடிய அபாயம் உள்ளது.
(தொடரும்)
Wednesday, April 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
எனக்கு ஏனோ இந்தப் பதிவு ஞாபகத்துக்கு வருகிறது! பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2005/12/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
யதார்த்தம்... (நன்றி).......:-))))
ஸ்ரீதர்
//தப்பிதவறி யாராவது பதிவு பக்கம் வந்தாலும் பதிவுக்கு நன்றி என்று எழுதிவிட்டு அடுத்தமுறை உங்கள் பதிவை பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடக்கூடிய அபாயம் உள்ளது.//
கிளைமாக்ஸ் சூப்பர்மா!
:-)))))))))))
முதலமைச்சர்....(!)
அடடா....இவ்வளவு வெளிப்படையாத் தெரியுதா?
>>>
வம்பு விவாதங்கள் வேண்டாம் என்பதற்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றியும் அன்பே உருவான கல்கி பகவான் பற்றிய பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டங்கள் வரும் என்று கூகிள் நோட்டிஃபையரை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கவேண்டாம்>>>
அட்டகாசம். எப்படி சாமி இப்படி எல்லாம் எழுதிறீங்க? :)))
சூப்பருங்க முத்து.. முதலமைச்சர் ஆகுறத்துக்கு முழுத் தகுதியும் உங்களுக்குத் தான் இருக்கு.. எந்த கட்சி, என்ன சின்னம்னு சொல்லுங்க, கண்டிப்பா என் வோட்டு உங்களுக்குத்தான்.. அதுக்கு முன்னாடி இந்த தொடர மட்டும் முடிச்சுடுங்க..
//வலைப்பதிவுகளில் புகழ்பெற்று முதலமைச்சர் ஆகும் ஆசையைக்கூட சிலர் ரகசியமாக வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. //
எம் எல் ஏ கனவு இருக்கக் கூடாதா?
மேலும் "ஜோ" கூறியதை வயிமொயிகிறேன். ;-)
நன்றி முத்து, எனக்கு முக்கியமான தேவை உங்க டிப்ஸ்,உங்களோட இதன் தொடர் பதிவுகள மிக ஆவலா எதிர்பார்கிறேன். எப்படியாவது உங்க அறிவுரைய பின்பற்றி.. ஒரு வாரிய தலைவர் போதுங்க.
நன்றி டோணடு,
கருத்து அதேதான். ஆனால் நிலைமை வேற இல்லையா?
நன்றி சிரிதர், ஜோ, பொன்ஸ், பொட்டீக்கடை,துளசி,ஸ்ருசல்,பட்டணத்து ராசா
இன்னாமோ, இந்த அரிச்சுவடிக்கூட தெரியாமையா எணையத்துல எய்த வந்தோம்??
"ராமகிருஷ்ண பரமஹம்சர் கடைப்பிடித்த வர்ணாஸ்ரம கொள்கைகள்"
"கல்கி பகவானின் தில்லாலக்கடி" என்று எய்தினா பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போவாதா?
உஷா,
வரம் கொடுத்தவன் தலையிலேயே..
என்பது இதுதானா?
ஆனா ட்விஸ்ட் சூப்பர்....கல்கியின் தில்லாலங்கிடி ஓ.கே..ஆனால் பரமஹம்சர் நல்ல ஆள் என்றே நினைக்கிறேன்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மடத்தில் பல சாதி சிஷ்யர்கள் இருந்தாலும், மேற்குல, செல்வ வசதி படைத்த நரேந்திரன் என்ற விவேகானந்தரை ஏன் தேர்ந்தெடுத்தார்? இதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்- என்று அடித்துவிட தெரியாதா என்ன? நேத்து வந்து பொன்ஸ்க்கு கூட தெரியும்:-)))
எனக்கே இப்பத்தான் தோணுது..ஏங்க அப்படி பண்ணிணார்? :))))
உங்களோட பின்னூட்ட அரசியலில் இருந்து பரமஹம்சரையும், விவேகானத்தரையும் விட்டுடுங்களேன் ப்ளீஸ்.
நான் மூன்று வருடம் ராமகிருஷ்ணா மிஷனில் படித்தவன். ஆனாலும் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று நினைக்கிறேன்.
முத்து(தமிழினி)
\\ராமகிருஷ்ண பரமஹம்சர்...
சார் உங்களின் இந்த பதிவுக்கு மேற்கோள் காட்ட இவர்தான் கிடைத்தாரா ? சிறிது வருத்தமே :-(
உஷா மேடம்
\\ராமகிருஷ்ண பரமஹம்சர் மடத்தில் பல சாதி சிஷ்யர்கள் இருந்தாலும், மேற்குல, செல்வ வசதி படைத்த நரேந்திரன் என்ற விவேகானந்தரை ஏன் தேர்ந்தெடுத்தார்?
உயர்ந்த சிந்தனை :-( . வேறு என்ன சொல்ல.
உங்களோட கமென்ட் அரசியலில் இருந்து பரமஹம்சரையும், விவேகானத்தரையும் விட்டுடுங்களேன் ப்ளீஸ்.
ok..விட்டுட்டோம்..இது தமாசுதான்...புரியலையா?:)))
இவர் பேர்ல கட்சி ஆரம்பிக்கலாம் போல
அண்ணாச்சி நான் பதினெட்டு வருஷம் படிச்சேன்,
என்னைப் பொறுத்தவரை எத்தனை வருஷம் எங்கப் படிச்சோங்கிறது ஒரு விஷயமே கிடையாது.
பதிவுக்கு நன்றி!
:)))) சும்மா தமாசுங்க!!
மோகன் தாஸ்,கார்த்திக் உண்மையில் விளையாட்டிற்குதான் எழுதினேன். ஆனால் பொது வாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ராகுல சாங்கிருதயான், விவேகானந்தரை விமர்சித்ததைக் கிடைத்தால் படித்துப்பாருங்கள்.
முற்றும் :-))
யாரும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில்,
......விமரிசனம் செய்ய அருகதை உள்ளவனா நான்?...என் தகுதி என்ன?.... எனும் கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டால்,
சில பல விடைகள் கிடைக்கலாம்.!!!!
வருங்கால முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
<----அடுத்தமுறை உங்கள் பதிவை பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடக்கூடிய அபாயம் உள்ளது.-->
ஹா ஹா ஹா! அற்புதம் போங்கள்
மோகன்,
புரியாதது போல் நீங்கள் பேசிக்கொண்டே சென்றால் நான் என்ன செய்யமுடியும்?
எஸ.கே,
கடுமையாக எழுதினேன்.அப்புறம் மாற்றிவிட்டேன்.தகுதியோடு தான் விமர்சனம் என்றால் நீங்களெல்லாம் இங்கு எழுத முடியுமா?
விடுங்க.வாழுங்க.வாழ விடுங்க.
என்ன பயமுறுத்துகிறீர்களா?
எல்லாவற்றுக்கும் உங்களையே சாட்டிக்கொள்ளும் இந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து சீக்கிரம் விடுபடப் பாருங்கள்!
நன்றாக எழுதுகிறீர்கள்! உங்கள் திறமைக்கு இது முட்டுக்கட்டையாக அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
விடை பெறுகிறேன்!
வணக்கம்!
ஓ! பல பேர் எழுதறதே பின்னூட்டம் வாங்கத் தானா? கருத்து சொல்ல இல்லையா?
//என்ன பயமுறுத்துகிறீர்களா?
எல்லாவற்றுக்கும் உங்களையே சாட்டிக்கொள்ளும் இந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து சீக்கிரம் விடுபடப் பாருங்கள்!நன்றாக எழுதுகிறீர்கள்! உங்கள் திறமைக்கு இது முட்டுக்கட்டையாக அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!விடை பெறுகிறேன்!
வணக்கம்!//
thanks S.K.
எஸ்.கே,
இதில என்ன மிரட்டல வேண்டி கிடக்கு? உங்க பின்னூட்டத்திற்கு பதில் அவ்வளவுதான்.
விவேகானந்தர் விமர்சனத்துக்கு அப்பாட்பட்டவரா எனக்கு தெரியல, அவரோட சாதி அமைப்புக்கான விளக்கமும் அதரவும் கண்டிப்பாக விமர்சனத்துக்கு உட்பட வேண்டியவை.
//குட்டி திராவிட ராஸ்கல்கள் வரை பலரும் வந்து பின்னிவிடுவார்கள் பின்னி//
முத்து, நிங்களும் வெறும் காத்துல கத்தி வீசரமாதிரி தெரியுது -))
இளவஞ்சி, நெருப்பு சிவா, floraipuyal ஆகியோருக்கு நன்றி
பட்டணத்து ராசா,
அது எப்படி காத்தில் கத்தி வீசுறது ஆகும்?
//பிரபாகரனுக்கு நாற்பது கேள்விகள், திருமாவளவன் மனிதனா,இந்து மதம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா, போலி டோண்டுவை சுரண்டிப்பார்ப்போம்//
இந்த தலைப்புகளில் வந்த பல பதிவுகள் சீண்டபடவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
அறிமுகமின்மை, எழுத்து சுவாரசியம், சரக்கு இதெல்லாம் சில ஃபேக்டர்ஸ்..
(அதான் சொல்லியிருக்கோமில்ல)
முத்து, நிங்களும் வெறும் காத்துல கத்தி வீசரமாதிரி தெரியுது -))
எனக்கென்னவோ இதுதான் உங்களுக்கு ரொம்பவும் பொருந்துதுன்னு நினைக்கிறேன்.
தப்பா நினைச்சிக்காதீங்க..
உங்களுக்கு வர்ற பின்னூட்டங்கள் உங்களை மிகச்சிறந்த எழுத்தாளராக்கிவிடாதுங்க..
சர்ச்சைக்குரிய எழுத்துக்களையே விரும்பி வாசிக்கும் ஆட்கள் இருக்கும்வரை உங்கள் காட்டில் மழைதான்..
வாழ்த்துக்கள்..
மேதா பட்கரைப் பற்றி எழுதினீர்களே அந்த பதிவிற்கு எத்தனைப் பின்னூட்டங்கள் வந்தன?
முத்தான பதிவுகளை இட்டு முதலமைச்சராகுங்கள்..
வாழ்த்துவதில் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்..
ஜோசப் சார்,
நன்றி...
சர்ச்சைக்குரிய விஷயங்களை மட்டும் சரக்கு இல்லாமல் நான் எழுதுவதாக நீங்கள் கூறுவதாக நான் கொள்ளலாமா?
தப்பா நெனைக்கறது எல்லாம் இல்லை சார். உங்களுக்கு உரிமை உள்ளது.
வலைப்பதிவுகளில் புகழ்பெற்று முதலமைச்சர் ஆகும் ஆசையைக்கூட சிலர் ரகசியமாக வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்து யாருங்க அந்த அர்ஷ்டசாலி! என் ஓட்டு நிச்சயம் அவருக்குத்தான்...
இன்று இந்த பதிவை தட்டி எழுப்ப முயற்சிக்கிறென்
//இன்று இந்த பதிவை தட்டி எழுப்ப முயற்சிக்கிறென்//
இன்னாத்துக்கு...
//இன்று இந்த பதிவை தட்டி எழுப்ப முயற்சிக்கிறென் //
என்ன எழுந்தாச்சா?
ஏதோ என்னல முடிஞ்சது:-)
//இன்று இந்த பதிவை தட்டி எழுப்ப முயற்சிக்கிறென் //
இது ஏதோ புது மாதிரி கயமைத்தனமா இருக்கே.. இதுவும் ஒரு விதமான (பதிவு சம்பந்தப்பட்ட) டெக்னிக்கா?
- ஒரு அப்பாவி.
அண்ணன் சுஜாதா ஏதோ சொன்னாராமே...அதுக்குத்தான்
Well done Muthu(Thamizini).
//வலைப்பதிவுகளில் புகழ்பெற்று முதலமைச்சர் ஆகும் ஆசையைக்கூட சிலர் ரகசியமாக வளர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.//
:))
Post a Comment