Wednesday, April 05, 2006

கலைஞர் ஜனநாயகவாதியா?

முதல் பாகம் இங்கே...http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html

ஜெயலலிதாவின் ஜனநாயக உணர்வை விட கலைஞரின் ஜனநாயக உணர்வு போற்றப்படத்தக்கது. நான் ஏற்கனவே கூறியுள்ளபடி ஒரு ஜனநாயக சமூகத்தில் அடக்கக்கூடாத செயல்கள் பேச்சுரிமை.எழுத்துரிமை. கலைஞரின் ஆட்சியில் தனித்தமிழ் இயக்கங்கள்,தமிழ்வழிகல்வி இயக்கங்கள், தீண்டாமை குறித்த பிரச்சினைகள்,கோயில்களில் பூசை செய்யும் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் வரும்.அரசு ஊழியர்கள் போன்றோர் பல கோரிக்கைகளை வைப்பார்கள். பேச்சுவார்த்தைகள்,வாதபிரதிவாதங்கள் நடைபெறும். இதன்மூலமாகவே கருத்தொற்றுமையை கொண்டுவரமுடியும். அது தான் நியாயமும் கூட.அதைத்தான் கலைஞர் செய்வார்.


ஆனால் புரட்சித்தலைவி அப்படி செய்வதில்லை.அவருடன் பேச்சுவார்த்தை என்று யாராவது எதையாவது நடத்தமுடியுமா? கடைசியாக கார்த்திக் ஏதோ அனுபவ பட்டிருக்கிறார்.ஆனால் வெளியில் சொல்ல தயக்கப்படுகிறார். ஜெயலலிதா எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏதாவது சட்டத்தை கொண்டுவருவார்.பின் அதை அவரே திரும்ப பெறுவார்.இது ஜனநாயக பண்பா? இதுபோல் கலைஞர் எதையாவது செய்ததாக யாராவது சொல்லமுடியுமா? கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலைஞரிடம் துள்ளிவிட்டு அம்மாவிடம் அடங்கிசெல்லும் தோழர்களுக்கு இது தெரியாதா?

கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்.

தற்போதைய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அதிரடி சட்டம் மூலம் அடக்கியதை பலரும் பாராட்டுவதை பார்க்கும்போது மக்கள் எல்லாம் மாக்கள் ஆகிவிட்டதை போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

ஸ்ட்ரைக் விஷயத்தில் மக்களின் எண்ணம் என்ன?கடமையை சரியாக செய்யாத அரசு ஊழியர்களுக்கு ஸ்ட்ரைக செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதானே? சம்பள உயர்வு கேட்பதையும் சலுகைகள் கேட்பதையும் கேள்வி கேட்பது நியாயமல்ல.எப்போதுமே தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகவும்,அதிகம் உழைப்பவர்களாகவும் நினைக்கும் சராசரி மனதின் எண்ணமே அது.கிம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இந்த கேள்விகள் பொருந்தலாம்.ஆனால் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைக்கும் ஊழியர்களுக்கு,வேறு மேல் வருமானத்தை எதிர்பார்க்காத ஊழியர்களின் கதி என்ன? லஞ்சம், ஊழல் ஆகியவை நடைபெறும் ஓட்டைகளை அடைப்பதுதான் ஒரு நியாயமான அரசாங்கததின் நடைமுறையாக இருக்கவேண்டுமே ஒழிய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது அல்ல.இது எங்கே சென்று முடியும் என்றால் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடும் பொதுமக்கள் மீதுகூட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துவதில் முடியும்.


வாரிசு அரசியல் விஷயத்திலும் கலைஞருக்கு மாறன் குடும்பம் என்றால் ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம்.சசிகலா குடும்பத்திற்கு புத்திசாலிதனமாக வியாபாரம் செய்யதெரியாவிட்டால் அதற்கு கலாநிதி மாறன் பொறுப்பாக மாட்டார்.வியாபாரம் செய்ய அரசியல் அதிகாரம் ஒரளவிற்குத்தான் உதவி செய்யும்.மற்றபடி நம்முடைய உழைப்பு, புத்திசாலிததனம் ஆகியவையும் வேண்டும். ஒன்றுமில்லாததை வெறும் அரசியல் அதிகாரம் சார்ந்து விற்றுவிட முடியாது.ஆளுங்கட்சியாக மொத்தம் பத்து வருடம் இருந்த அதிமுகவால் ஏன் ஜெயாடிவியை பெரிதாக வளர்க்கமுடியவில்லை?

கலைஞரின் ஆட்சியில் பல அடிப்படை கட்டமைப்பு வேலைகள் நடந்துகொண்டே இருக்கும். ரோடு போடுதல், தூர் வாருதல், குடிதண்ணீர் வசதி செய்தல், பாலம் கட்டுதல் என்று எப்போதும் வேலை நடக்கும்.அதே போல் அரசுத்துறையில் பணியிடங்களையும் நிரப்பிக்கொண்டே இருப்பார்.மக்கள் நலத்திட்ட பணிகள் நடந்துகொண்டே இருக்கும்.உள்ளாட்சி மன்றங்கள் ஆக்டிவ்வாக இருப்பது கலைஞர் ஆட்சியில்தான்.ஆனால் ஜெயலலிதாவோ ஏன் எம்.ஜீ.ஆரோ கூட இது போல் மக்கள் நல திட்டங்களையோ அடிப்படை கட்டமைப்புகளையோ செய்ததாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்களை சொல்லலாம்.ஆனால் திமுக வுடன் ஒப்பீடு செய்யவே முடியாது என்பதுதான் உண்மை.

திமுகவில் சொந்த சரக்கு உள்ள ஆட்கள் இருப்பதையும் அதிமுகவில் அனைவரும் பூம் பூம் மாடுகள் என்பதையும் இங்கே சேர்த்து பார்க்கவேண்டும்.

33 comments:

ஜெ. ராம்கி said...

//ஜெயலலிதாவோ ஏன் எம்.ஜீ.ஆரோ கூட இது போல் மக்கள் நல திட்டங்களையோ அடிப்படை கட்டமைப்புகளையோ செய்ததாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷயங்களை சொல்லலாம்.ஆனால் திமுக வுடன் ஒப்பீடு செய்யவே முடியாது என்பதுதான் உண்மை.//


வழி மொழிகிறேன் தல!

Gurusamy Thangavel said...

முத்து அருமையாகச் சொன்னீர்கள். நூற்றுக்கு நூறு இதே கருத்தைத்தான் நானும் கடந்த 10 நாட்களாக என்னுடைய வலைப்பதிவில் எழுத வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். நன்றி முத்து (தமிழினி)

Muthu said...

நன்றி ராம்கி,

i have taken a leaf out of your book...i suppose


நன்றி தங்கவேல்,

இந்த மாதிரி விஷயங்களை மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டி இருக்கிறது.நன்றி.
இன்னொரு பகுதி உள்ளது.அது இன்னும் பரபரப்பாக இருக்கும.இன்று மாலை மூன்று மணிக்கு வெளியிடுகிறேன்.

Pot"tea" kadai said...

நச் பதிவு!
//ஆளுங்கட்சியாக மொத்தம் பத்து வருடம் இருந்த அதிமுகவால் ஏன் ஜெயாடிவியை பெரிதாக வளர்க்கமுடியவில்லை?//

சுயமாக சிந்திக்கத் தெரியாததும், தலையாட்டிகள் மட்டுமே இருப்பதாலும்...நடுவில் ரபி பெர்னாட் என்று ஒருவர் வந்தார், அவரை கூட சுயமாக சிந்திக்க இயலாமல் செய்துவிட்டது ஜெயா(டிவி)

siva gnanamji(#18100882083107547329) said...

ho ho
rabi bernard kku sudhandhiram koduthiruntha JAYA TV yum innoru
NILA TV aagiyirukkum

நியோ / neo said...

நான் சொல்ல விரும்பியதயெல்லாம் நீங்கள் எழுதி விட்டீர்கள்! வாழ்க :)

ஜோ/Joe said...

முத்து,
100% ஒத்துப்போகிறேன் .நடுநிலை என்ற பெயரில் கலைஞரோடு ஜெ-வை ஒரே தட்டில் வைப்பவர்களுக்கும் ,ஆணவம் ,திமிர் இவற்றையெல்லாம் திறமை என்று புகழ்பவர்களுக்கும் கொஞ்சமாவது புரியட்டும்.

Darren said...

//கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்///


உண்மை

Darren said...

//கட்சியினரை அடக்கி வைத்துள்ளார் என்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். கேள்வி கேட்க யாரும் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்///


உண்மை

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,

நான் ஜெவை நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய மெண்டர் எம்ஜிஆரை சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றியும் முன்பே என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

அதே போல கலைஞரையும் அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சந்தித்ததைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். கலைஞருடைய கோபாலபுரம் வீட்டிற்கும் சென்றிருக்கிறேன்.

அந்த காலத்திலேயே அதாவது அவர் முதலமைச்சராக இருந்த சமயத்திலேயே அவருடைய எளிமையையும் சகிப்புத்தன்மையையும் நேரில் பார்த்து வியந்து நின்றவன் நான்.

அவருடைய மகன் ஸ்டாலினும் அத்தகைய குணம் அமைந்தவர்தான். ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நாம் கண்ட ஸ்டாலின் அல்ல இப்போது இருப்பவர்.

திமுக வில் அறிவுபூர்வமாக சிந்திக்கக்கூடியவர்களை அவர்களுடைய போக்கிலேயே விட்டவர் கலைஞர். ஸ்டாலினுக்கும் அத்தகைய சகிப்புத்தன்மை வந்துவிட்டால் போதும். நமக்கு ஒரு நல்ல முதல்வர் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் என்ன சொல்லி என்ன பயன்? மக்களுக்கு புரிய வேண்டுமே..

இன்று V.K.வை ஆதரிக்கச் சொல்லி உங்களுக்கு ஒரு மெய்ல் வந்திருக்குமே.. வந்ததா?

krishjapan said...

மிகச் சரியாக சொன்னீர்கள். எல்லா போலி நடுநிலைமைவாதிகளுக்கும் இது தெரியும். ஆனாலும், ஒத்துக்கொள்ள மனம் வராது.

பேட்டியே கொடுக்காத ஒரு தலைவர், இன்று தேர்தல் என்றவுடன் பேட்டி தருகிறார். அவரிடம் கேட்கும் கேள்விகளைப் பாருங்கள். எங்கெ அவர் கோபித்துக் கொண்டுவிடுவாரோ என்று பயந்தே கேள்விகள் வரும். ஆனால், முகவை எப்பொழுது வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். அவருக்கே உரிய சாதுர்யத்தோடு பதில் தருவார். தன் செயல்களை நியாயப்படுத்த முடிபவனாலேயே, கேள்விகளை எதிர் கொள்ள முடியும்.

அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Muthu said...

ஜோசப் சார்,

மிகவும் நன்றி.. உங்களை போன்ற பெரியவர்கள் கலைஞரை ஆதரிப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. கருத்து சுதந்திரம் , சுதந்திர சமுதாயம் என்றால் என்ன என்று தெரியாவதவர்களைப்பற்றி என்ன சொல்ல?

சந்திப்பு said...

தேர்தல் நேரத்தில் இப்படியொரு பதிவை போட்டு அசத்திட்டிங்க. இதுல மிக முக்கியமானது : சட்டமன்ற ஜனநாயகம். அப்படின்னு சொன்னா இது ஜெயலலிதாவின் அகராதியில் தான் மட்டுமே பேசுவது என்று அர்த்தம். அத்துடன் பேசும் நேரத்தில் எதிர் கட்சியினர் யாரும் உள்ளே இருக்கக்கூடாது. இப்படியே இருந்தாலும் 110. எனவே இந்த தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்போவது 111.

rajkumar said...

முத்து,

உங்கள் பதிவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருக்கிறது. ஆனால் இதே ரீதியில் மக்களிடம் பிரச்சாரம் செய்ய திமுக கூட்டணியில் ஆளில்லை என்பதுதான் வருத்தம்.

பாக்யராஜ் எந்த அளவு உத்வுவார்?

அன்புடன்

ராஜ்குமார்

Muthu said...

பொட்டீக்கடை,
நன்றி...ரபி பெர்னார்ட் பாவமய்யா....நிலா அங்க இங்க என்று போய் இன்று சிரிக்க நெனைச்சாலும் சிரிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.
புலி புல்லை தின்கிறது.

சிவஞானம்ஜீ
இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

நன்றி தரண், நியோ மற்றும் ஜோ,

Muthu said...

சிவம்,
நான் சில பொதுவான கருத்துக்களை எடுத்து எழுதியுள்ளேன். மதுரையில் உள்ள சிறுவியாபாரிகள் பிரச்சினையையும் தீர்க்க வேண்டியது அவசியம்தான்.

சரிதான் கிருஷ்ணா,
நம் மக்களுக்கு பில்ட் அப் தேவைப்படுகிறது. சிரிச்சு பேசுனா கேவலமா நினைப்பான். வெத்து ப்லிம் காமிச்சா பயப்படுவான்.

Muthu said...

சரியாக சொன்னீர்கள் சந்திப்பு

ராஜ்குமார்,
நான் பிரச்சாரம் செய்யறேன். எம்எல்ஏ சீட்டு கிடைக்குமா? :)))
சீரியஸாக சொல்லப்போனால் இது ஒரு ஒப்பீடுதான். கலைஞர் சறுக்கிய இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சாணக்கியன் said...

ஜெயா டீவி வளர்க்கப்படாததற்கு காரணம் அதன் வருமானம் 'ஜெ'க்கு முக்கியமல்ல. சன் டீவியின் போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக செயல்பட அவருக்கும் ஓர் டீவி தேவைப்படுகிறது. ஆனால் சன் டீவிக்கு ஆட்சி, வருமானம் இரண்டும் வேண்டும் என்பதோடு, ஒன்றின் மூலம் மற்றொன்றைப் பெருவதிலும் ஆர்வம்.

ஒருநாள் சன்டீவியின் செய்தி பார்க்கிறேன். "ஒருவாரம் முன்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொலைபேசித்துறையின் அலுவலகம் விரைவாக சீரமைக்கப்பட்டு செயல்படத்துவங்கியது". ஏதேது, அரசைப் பாராட்டிக்கூட செய்தி வருகிறதா சன்டீவியில் என்று வியந்தேன். சற்று நேரத்திற்குப் பிறகுதான் அது மத்திய அரசின் துறை என்று புரிந்தது.

சுனாமியின் போது தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறார்கள். நன்கு செயல்பட்ட அரசு அலுவலர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து பயிற்சி கொடுக்கச்சொல்கிறார்கள். ஆனால், மு.க.வுக்கும் சன்டீவிக்கும் மட்டும் அது காதில் விழாது.

'வைகோ'வை இரண்டு வருடம் சன்டீவியில் காட்டாமல் மழுங்கடித்தார்களே அதுதானய்யா ஜனநாயகத்தின் உச்சம். வாழ்க உங்கள் ஜனநாயகம்.

குறிப்பு: 'ஜெ' யின் ஜெயாடிவியின் போக்கு சரி என்று நான் சொல்லவில்லை. சன்டீவியின், கருணாநிதியின் போக்கு எல்லாமே ஜனநாயக முறைக்கு உட்பட்டதன்று என்றுதான் சொல்ல விழைகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

//சர்வாதிகாரமாக நடப்பதை எல்லாம் நாம் புகழும் அளவிற்கு வந்துவிட்டது ஒரு சமூக சீர்கேடுதான்//

நூறு சதவீதம் ஒப்புக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், ஜெயலலிதாவுடன் ஒப்புனோக்கும் போது மட்டுமே சீரிய ஜனநாயகவாதியாகத் தோற்றமளிக்கும் கலைஞரைப் புகழ்வதும் அப்படியே என்பது என் கருத்து.

அதேபோல், உள்கட்டமைப்புக்களை திமுகதான் கவனித்தது, அதிமுக தொட்டது கூட இல்லை என்று நீங்கள் கூறுவது ஸ்வீப்பிங்காகத்தான் தெரிகிறது - குறைந்த பட்சம் எனக்கு.

தி மு க வில் சொந்த சரக்கு உள்ள ஆட்கள் இருக்கிறார்கள், - ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்க்ள் சரக்கைக் காண்பிக்க எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது?

உங்களின் அலசல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகக்கூடியவையாகவே இருக்கும்- ஆனால் இது, ஒரு கலைஞரின் ரசிகன் மனோபாவத்தைப் பிரதிபலிப்பதாகவே கருதுகிறேன்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நான் கருதவில்லை, திமுக பரவாயில்லை என்றே கருதினாலும், ரசிகனாக மாற முடியவில்லை மன்னிக்கவும்.

எதற்காக போல்டும் அண்டர்லைனும் என்று புரிந்ததா?

வெங்காயம் said...

முத்து அருமையாக எழுதியுள்ளீர்கள்.

நேற்று வந்த ஜெயாவையும் இன்று வந்துள்ள விசயகாந்தையும் மகாத்மாக்களாகவும் சித்தரிக்கும் இவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் எதிர்க்க திராவிட எதிர்ப்பன்றி வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இது குறித்து மயிலாடுதுறை சிவாவின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே மீண்டும்....

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியில் இருக்கும் ஸ்டாலின் அடுத்தக் கட்ட தலைவராக ஆக எந்தத் தகுதியும் இல்லையாம். ஆனால் அரசியலுக்கு வந்து 25 மாதங்கள் கூட ஆகாத விஜயகாந்த் தலைவர் (முதல்வர்) ஆகலாமாம். முதலில் பின்னூட்டமிட்டுச் சென்ற எஸ்.கே. என்ற பார்ப்பனர் கூட இதையே கூறுகிறார்.

திராவிட இயக்கங்கள் அழிய வேண்டும் என்ற பார்ப்பணர்களின் ஆசை மற்றும் திட்டமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். ஏற்கனவே அ.தி.மு.க. என்ற திராவிட இயக்கத்தை ஜெயலிலதா என்ற பார்ப்பணர் மூலம் கைப்பற்றிவிட்டனர். அடுத்து தி.மு.க.வில் அவாள்களால் நுழைந்து கைப்பற்ற முடியவில்லை. எனவே கலைஞருக்குப் பிறகு தி.மு.க. இருக்கக்கூடாது என்பதே இவர்களின் நோக்கம். எஸ்.கே. மட்டுமின்றி ஒட்டுமொத்த பார்ப்பணர்களின் திட்டமும் இதுவே. இதற்காக இவர்கள் ரஜினியை கொம்பு சீவ முயன்று தோற்றுவிட்டனர். ஆனால் வராது வந்த மாமணியாய் இப்பொழுது இவர்களுக்கு விஜய்காந்த் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் கட்சி நிதி நிலைமை கூட சரி இல்லாத நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவருடன் கூட்டு சேர அவாள்களின் பா.ஜ.க. முயன்றது. பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்தால் நிதி நிலைமை மட்டுமல்ல கட்சியே திவாலாகிவிடும் என்று உணர்ந்த விஜி, அதற்கு மறுத்துவிட்டது நாம் அறிந்ததே. ஆனால் எங்களுடன் கூட்டணி இல்லையென்றாலும் பரவாயில்லை; தனித்து நில்லுங்கள்; நிதி பிரச்சனையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று அவாள்களின் தரப்பில் கூறப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையாக இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

இவர்கள் என்ன செய்தாலும் பார்ப்பணீய அடக்குமுறையை மீண்டும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது; ஏனெனில் இது பெரியார் பிறந்த மண்.

குடும்ப அரசியல் குறித்து நயனன் அவர்களும் மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதனையும் பார்வையிடவும்.

குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்!

Anonymous said...

Dear Mr.Muthu("Thamizhini")
"Kalaignar is a democrat" .
No questions asked.During 96-01, the assembly proceedings were cordial and opposition parties were given reasonable opportunity to express their views and/or raise issues.Mr.Palanivel Rajan, the then speaker was a true gentleman.(Though we can not say the same about assembly proceedings between 89 and 91)

Performance /Governance/Development: I beg to differ from you.
Road transport sector was at its best during MGR rule, be it number of buses, new routes, condition of buses etc.In fact Tamilnadu was in a preeminent position in providing bus service and was a role model for many other states.As a person who had stayed away from Tamilnadu for about 6 years and have been travelling within Tamilnadu and also various parts of India, in the past 25 years, I have personally experienced this.(Right now, Karnataka , followed by Andhra State Transport corporations are the best, in my opinion.)
The down slide in this sector started during Jayalalitha's rule in 91-96 and sadly kalaignar did not do much to improve the situation in his tenure (96-01)

Telegu Ganga(Krishna water project) initiated by MGR and New Veeranam scheme implemented by Jaya are the only schemes which helped Chennai citizens to survive in the past few years to a great extent.

Such infrastructure and development works done by ADMK can not be brushed away as mean achievements, as you may wish to .

Kalaignar , during his first stint upto 76, converted lakes in to housing plots (TNHB and Slum Clearance Board tenements) and this deprived Chennai of its several water bodies.It is having a devastating effect on the ecology and especially water front , even now.

Lot of development works took place druing 96-01 rule of Kalignar and probably this was the best stint of Kalaignar, compared to the previous two, in terms of performance /development, in my opinoin.

aathirai said...

"ஆளுங்கட்சியாக மொத்தம் பத்து வருடம் இருந்த அதிமுகவால் ஏன் ஜெயாடிவியை பெரிதாக வளர்க்கமுடியவில்லை?"

"
ஜெயா டீவி வளர்க்கப்படாததற்கு காரணம் அதன் வருமானம் 'ஜெ'க்கு முக்கியமல்ல. "


சரியான கேள்வி. ஜெயா டிவியும் அடியாட்களை விட்டு கேபிள் ஆபரேட்டர்களை
மிரட்டிய கட்சிதான். சன் டிவி ஆட்களை விட்டு மிரட்டாவிட்டாலும் வேறு
வகைகளில் ஆபரேட்டர்களுக்கு ப்ரெஷர் கொடுத்தது. சுதாகரன் திருமணத்திற்கு
கேபிள் ஆபரேட்டர்கள் விளம்பரம் எல்லாம் கொடுத்து செலவு செய்தார்கள்.

அப்படியும் ஜெயாடிவி வளரவில்லை. சன் டிவியின் மீதுள்ள பொறாமையே பெரும்பாலும்
பத்திரிகைகளில் காழ்ப்புணர்வாக வருகிறது.

எந்த பத்திரிகையாவது மிடாஸ் நிறுவனத்தைப் பற்றி எழுதுகிறதா?

ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் செய்யக்கூடியவர்தான். என்
வாழ்நாளில் சென்னையில் குடிநீர் பிரச்சினை தீரும் என்று நினைக்கவில்லை.
இப்பொழுது தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
அவருடைய தேர்தல் அறிக்கையிலும் தண்ணீர் பிரச்சினைக்கு நிறைய கவரேஜ் இருந்தது.
நான் சென்னை வந்தபோது அரசு மருத்துவமனை
ஜொலித்துக்கொண்டிருந்தது. இரண்டு வருடம் வெளிநாட்டிலிருந்துவிட்டு வரும்போது
மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன.

ஒரே பிரச்சினை, ஜெயா எப்பொழுது என்ன செய்வார் என்று யாராலும் (அவராலும்) கூட
சொல்ல முடியாது.

Muthu said...

சாணக்யன்,
ஜெயா டிவி வளர்க்கபடாததற்கு காரணம் அருமை.நான் எதுவும் சொல்வதற்கில்லை
சன் டிவி ஒரு தனியார் நிறுவனம்.அரசு நிறுவனம் அல்ல.

பெனாத்தல்,
இது ஒரு ஒப்புநோக்கும் பதிவு என்று முதலிலேயே கூறிவிட்டேனே..
உள்கட்டமைப்பு விஷயங்களில் உங்களிடம் ஏதாவது புள்ளிவிவரம் இருந்தால் கொடுங்களேன்.
பல முறை திமுக வினரின் சொந்த சரக்கை(?) நான் பார்த்துள்ளென்.
நானும் திமுக ரசிகன் இல்லை. பரவாயில்லை என்றே கூறுகிறேன்.நான் ரசிகனாக எனக்கு மட்டுமே இருப்பேன்.நிபந்தனையற்று யாரையும் ரசிக்கமுடியாது என்றே எனக்கும் தோன்றுகிறது.

Muthu said...

ஆனியன்,

விஜயகாந்தையும் ஸ்டாலினையும் நீங்கள் ஒப்பு நோக்கியது நல்ல பாயிண்ட். (எனக்கு விஜயகாந்த அரசியலுக்கு வந்தது பிடிக்கிறது.ஆனால் அவர் அரசியல் நடத்தும் முறை பிடிக்கவில்லை)

மற்ற உங்கள் கருத்துக்களும் உண்மை என்றே தோன்றுகிறது.

Muthu said...

Thanks for comments Mr.Subramaniam

i already agreed that we can quote some stray incidents here and there for admk's administration and developmental issues..iam looking in totality...

Muthu said...

athirai,
நன்றி...மிடாஸ் பத்தி எழுத முடியாது..சன் டிவியை பத்தித்தான் எழுதுவோம்...என்ன பண்ணுவீங்க நீங்க?

Anonymous said...

//பத்து வருடம் இருந்த அதிமுகவால் ஏன் ஜெயாடிவியை பெரிதாக வளர்க்க முடியவில்லை?//

ஏன் வளரல! பொய் சொல்ரதுல நம்பர் ஒன் தொலைக்காட்சி ஜெயாடிவி தான்.

//தற்போதைய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அதிரடி சட்டம் மூலம் அடக்கியதை பலரும் பாராட்டுவதை பார்க்கும்போது மக்கள் எல்லாம் மாக்கள் ஆகிவிட்டதை போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.//

அரசு ஊழியர்கள் லஞ்சம் போன்றவையே மக்கள் எதிர்க்க காரணம் என்று நினைக்கிறேன்.

சாணக்கியன் said...

முத்து, நான் ஜெயாடீவி பற்றி சொல்லியுள்ளதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளீர்கள். சன்டீவியின் , மு.க.வின் ஜனநாயக செயல்பாடு குறித்து எளிதியுள்ளமைக்கு பதில் சொல்லவில்லை. அவற்றை ஒப்புக்கொள்கிறீர் தானே?

சன்டீவி தனியார் நிறுவனம்தான். ஆனால் அது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து ஆளுங்கட்சியாகவோ எதிர்கட்சியாகவோதான் செயல்படுகிறது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். சன்டீவியின் செயல்பாடுகளுக்கும் தி.மு.க.விற்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நேற்று பிறந்த பிள்ளை கூட சிரிக்கும்...

Muthu said...

அய்யா,

அது அவங்க இஷ்டம் அய்யா. அவங்க பத்திரிக்கையில் அவங்க விருப்பம் எதுவோ அதத்தான் எழுதுவாங்க...காட்டுவாங்க..சன்டிவியை தவிர உலகத்தில் உங்களுக்கு வேற டிவியே இல்லையா....உங்களை கேட்டுகிட்டா எழுதுவாங்க...அத மட்டும் வெச்சு குற்றம் சொல்லமுடியாது என்பதுதான் நான் சொல்றது...

நீங்கள் சொல்றபடி பார்த்தா துக்ளக், தினமலர்னு ஒன் பாயிண்ட் அஜெண்டாவோட சுத்தறவங்கள்ளாம் யாரு?

Muthu said...

why looking for democracy in private company my dear chanakyan?

சாணக்கியன் said...

முத்து, சன்டீவி நேர்மையான் செய்திகளை ஒளிபரப்பவில்லை என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி...

Muthu said...

சாண்க்யன்,

நான் என்றுமே சன் டிவி நடுநிலை தவறாத நாயகர்கள் என்று சொன்னது கிடையாது. உங்கள் வாதத்திறமையை யாம் மெச்சினோம். நீரே வென்றீர் என்று நான் ஒத்துக்கொள்கிறேன்.போதுமா?

ஜெயக்குமார் said...

1100 கோடி அரசு பணத்தில் இலவச கலர் டிவி கொடுத்து மாதம் 200 கோடியை தன் குடும்ப டிவிக்கு வருமானமாக பெற்றுதரும் சுயநலவாதியை ஓரம்கட்ட சரியான ஆள் வைகோ தான். கருணநிதி ஜனநாயகவாதி அல்ல பணநாயகவாதி.