Thursday, April 13, 2006

சரத்குமார் ஒரு புதிர்

சரத்குமார் தி.மு.க வில் இருந்து விலகியிருக்கிறார். தேர்தல் சமயங்களில் இதுபோன்ற பல காமெடி காட்சிகள் நடப்பது சகஜம் என்றாலும் எம்.பி பதவி வரை வழங்கப்பட்டு திமுகவில் ஓரளவு மரியாதையுடனே வைக்கப்பட்டுள்ள இருந்த சரத்குமார் விலகல் சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சரத்குமார் என்றுமே தன் அரசியல் நோக்கங்களை மறைத்ததில்லை. தொண்ணூறுகளில் புரட்சித்தலைவி கலந்துகொண்ட ஒரு விழாவில் இரட்டை இலை போட்ட சட்டையை அணிந்துக் கொண்டு சரத்குமார் கலந்துகொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சமயம் ஜெயலலிதா மேல் பரவலாக தமிழகத்தில் அதிருப்தி இருந்த காலம். பின்னர் நாட்டாமை படத்தை தன்னிச்சையாக ஜெயாடிவியில் போட்டார்கள் என்ற காரணத்தால் பிரச்சினை ஆரம்பித்ததாக சொல்லப்பட்டு சரத்குமார் அதிமுகவுடன்
மனஸ்தாபம் கொண்டு திமுகவில் தஞ்சம் புகுந்தார்.

கொள்கை, வெங்காயம் என்பதெல்லாம் அவர் அதிகம் பேசியவரல்ல. தான் அரசியலில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். எம்.பி பதவி கிடைத்த சரத் திமுகவில் மத்திய மந்திரி பதவி எதிர்பார்த்ததாக தெரிகிறது. தயாநிதி மாறனை விட தான் எந்த விதத்தில் தாழ்ந்தவன் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். இது நியாயமான வருத்தம்தான்.(இருவரையும் விட தகுதியான மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நமது எண்ணம்).

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் பின்னே ஒரு பெரிய சமுதாயமே (நாடார்கள்) இருப்பதாக அவர் சொல்லி வந்திருக்கிறார்.இதுவெல்லாம் அவர் அரசியலில் ஒரு உயர்வான இடத்தை பிடிக்க அடிபோட்டு வந்திருப்பதை த்தான உணர்த்துகிறது.இன்று விஜயகாந்த வெற்றியோ தோல்வியோ ஒரு உறுதியான முடிவெடுத்து அரசியலில் குதித்திருப்பது இவரை ரொம்பவே தொந்தரவு படுத்தியிருக்கலாம்.

அவருக்கு உள்ள கடன் தொல்லை என்பதெல்லாம் அவருடைய பர்சனல் விசயம்.அதையெல்லாம் கட்சியின் மீது போட்டு பார்ப்பது அறிவார்ந்த நாணயம் அல்ல. சரத்குமாரின் பலவீனம் என்னவென்றால் தன்னுடைய பலத்தை சற்றே அதிகமாக கணக்கு போட்டு வைத்திருப்பது என்று எனக்கு தோன்றுகிறது.

ரசிகர் மன்றத்தை வைத்து நோட்டீஸ் ஒட்டி மட்டும் ஒருவர் வளர்ந்துவிட முடியாது. ரஜினி ரசிகர்கள் ஒட்டாத நோட்டீஸா?ஆனால் தைரியம் விஜயகாந்திற்கு மட்டும்தான் வந்தது.ராஜேந்தர் திமுகவில் ஒரு தனிப்பெரும் சக்தியாக வளர முயற்சித்தார்.இன்று அவர் இருந்த இடத்தில் புல் முளைத்து விட்டது. ஒரு காமெடியனாக ஆகிவிட்டார்.

சாதி பின்னணியும் ரசிகர் மன்ற பலமும் சரத்துக்கு உதவுமா? சரத் என்ன செய்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

17 comments:

ராம்கி said...

ஜாதி பற்றுள்ள சரத்தும் கார்த்திக்கும் தேர்தல்ல தோற்க்கலாம்.. அரசியலில் தோற்றுவிடமாட்டர்கள்!

பட்டணத்து ராசா said...

முத்து,

தன்னைப் பற்றி பதிவு எழுதியிருப்பது தெரிஞ்சா போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார் :-)

படிக்கிறதுக்கு நிறைய பதிவு எழுதியிருகிங்க :-)

முத்து(தமிழினி) said...

ராம்கி,

"அரசியலில் தோற்பது" இதன் உள்ளர்த்தம் எனக்கு தெளிவாக விளங்கவில்லை.அல்டிமேட் நோக்கத்தை வைத்தே என்னால் அளக்க முடிகிறது.(சரத்குமாரை வைத்து மட்டுமே)

முத்து(தமிழினி) said...

ராசா,

//படிக்கிறதுக்கு நிறைய பதிவு எழுதியிருகிங்க :-) //

அந்த கொடுமையை ஏன்யா கேட்கறீங்க? "துன்பியல் சம்பவம்"

இதன் பின்விளைவுகள் மற்றவர்கள் பதிவுகளிலும் உண்டு.

koothaadi said...

இப்பத் தான் சரத் பற்றி ஒரு பதிவைப் போட்டு ட்டு ( ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதிருக்கேம்பா ) தமிழ்மணம் வந்தா நீங்களும் அதே மாதிரி ஒரு பதிவு போட்டு இருக்கிறீர்கள் .

நல்லப் பதிவுங்க. அவரின் பலம் பற்றிய உங்கள் கணிப்ப அருமை கிட்டத்தட்ட உங்கள் எண்ணம் தான் எனக்கும்

D The Dreamer said...

//வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் பின்னே ஒரு பெரிய சமுதாயமே (நாடார்கள்) இருப்பதாக அவர் சொல்லி வந்திருக்கிறார்//

நாடார் சமூகம் இவரை தாங்கிபிடிப்பதாக எனக்கு தெரியவில்லை. (உனக்கெப்படி தெரியுமென கேட்காதீர்கள், நன்றி)

Haranprasanna said...

சரத்குமார் போன்றவர்கள் அதிருப்தி அடையும்போது கருணாநிதி அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்கவேண்டும். ஏற்கனவே ஒரு குடும்பத்தின் கட்சியாக தி.மு.க. விமர்சிக்கப்படும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தி.மு.க. தலைமை எச்சரிக்கையுடன் இருந்திருக்கவேண்டும். குறிப்பாகச் சரத்குமார் 1996 தேர்தலில் ஆற்றிய தேர்தல் பணி அதிசயக்கத்தக்கது. அந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எந்தத் தலைவரையும் விட அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு அதிகமாகப் பேசியவர் சரத்குமார். அவரது சமூக ஓட்டுக்களை இழக்கும்வண்ணம் அவரது வெளியேறல் அமைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இப்பிரச்சினையைப் பேசிக்கட்டித் தீர்த்திருக்கலாம். சரத்குமார் எல்லாக் கட்சிகளுக்கும் நெருக்கமாக இருந்துவிட்டார்! ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சூழல் இருந்தபோது, ரஜினி தலைவர்; நான் தொண்டன் என்று பேட்டி கொடுத்தார் சரத்குமார். அதனால் கொள்கை போன்ற குழப்பங்கள் சரத்குமாருக்கு இருக்கவில்லை. தி.மு.க. சரத்குமாரைத் தக்கவைத்திருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ராஜேந்திரையும் சரத்குமாரையும் ஒப்பிடுவது சரியானதல்ல. சரத்குமாருக்கு ஒரு குறிப்பிட்ட சாதி ரீதியான வாக்குப் பலம் இருக்கிறது. தென்மாவட்டங்களில் நிறையவே இருக்கிறது. அவர் நாடாளுமன்றத்தில் தோற்றது, தூத்துக்குடி பெரியசாமி தனது மகள் கீதா ஜீவனுக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சரத்குமாருக்கு எதிராக வேலை செய்ததே காரணம். அதுவும் 7000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றார் சரத்குமார். சரத்குமாரின் விலகல் தென்மாவட்டங்களில் தி.மு.க.விற்குச் சரிவை உண்டாக்கும்.

முத்து(தமிழினி) said...

நண்பரே கூத்தாடி,

உங்கள் கட்டுரையையும் இப்போதுதான் படித்தேன். நன்றாக எழுதி உள்ளீர்கள்.என் கட்டுரையை விட உங்கள் கட்டுரை விளக்கமாக அமைந்துள்ளது.தலைப்பு மிஸ்லீடிங்காக இருந்தாலும் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது நண்பரே.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முத்து(தமிழினி) said...

பிரசன்னா,

திமுக சமாதானப்படுத்த கூடிய அளவிற்கு சரத்தின் கோரிக்கைகள் இல்லை என்று நினைக்கிறேன்.

சரத் பலம் என்று பார்க்கும்போது அது நிரூபிக்கப்படாதது மட்டும் அல்ல அவர் நினைக்கும் அளவிற்கு அவருக்கு பலம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.(நீங்கள் சொன்ன கீதா ஜீவன் சமாச்சாரம்)

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க சரத் முயற்சிக்கிறார்.அது அவருக்கு இருப்பதாக அவர் நினைக்கும் செல்வாக்கை பொறுத்து நிச்சியக்கப்படும்.

முத்து(தமிழினி) said...

நாடார்களில் அதிமுகவிற்கு இருக்கும் செல்வாக்கு, நாடார்களில் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கு, நாடார்களில் சரத்திற்கு முன்பு திமுகவிற்கு இருந்த செல்வாக்கு எல்லாவற்றையும் இங்கே கணக்கில் எடுக்கவேண்டும்.

விசிலடிச்சான் குஞ்சுகள் ஓட்டு கதைக்கு உதவாது. நாடார்கள் திமுகவில் இருப்பதற்கு காரணமே சரத்தான் என்பது தவறு என்று எனக்கு படுகிறது.

பட்டணத்து ராசா said...

SR நிறுவனம் அவர்களோட வங்கிய(மெர்கன்டையள் நினைக்குறேன்) கையக படுத்த சார்பா இருந்த விடயத்தில்,சரத்துக்கும் நாடார் சங்கத்துக்கும் பூசல்தான்.

வினையூக்கி said...

முத்து(தமிழினி),,
விரைவில் சரத்குமார் விஜயகாந்துடன் கைக்கோர்க்கலாம்.

செந்தழல் ரவி said...

நாடார்களின் ஆதரவோடு ஒரு கட்சி ஆரம்பித்தால் ஓட்டுகளை அள்ளிவிடலாம். சரத் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும். கரிக்கோல் ராஜ் / மெர்க்கண்டைல் வங்கி சிவா போன்ற நாடார் பிரமுகர்களின் ஆதரவு ( பெட்டி ) முக்கியம்..

முத்து(தமிழினி) said...

இது ராதிகாவிற்கு பிரச்சினையாக முடியலாம்.

சரத்குமாரும் ரிஸ்க் எடுத்துள்ளார்.அதிமுக வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு.

அதிமுக வென்றால் பிரச்சினை இல்லை.இல்லையென்றால் ராடன் நிறுவனத்திற்கே பிரச்சினைதான்.ராடன் ஷேர்ஸ் என்னாச்சு?

பிரதீப் said...

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் திராவிடக் கட்சிகள் சாதித்துவத் தலைவர்களைக் கொஞ்சிச் சமாதானப் படுத்த வேண்டும்? சரத் போனால் போகட்டுமே..

தயாநிதி போல் தனக்கும் தகுதி உண்டென்றால் தேர்தலில் நிற்க சீட் கேட்டிருக்க வேண்டியதுதானே? மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்க வேண்டியதுதானே... தேர்தலில் நிற்காமலேயே ராஜ்யசபா எம்பி, அடுத்து மத்திய அமைச்சர் பதவி என்றிருக்க இவர் தந்தையோ தாத்தாவோ என்ன கட்சியா நடத்துகிறார்?

என்னமோ தனிப்பட்ட காரணங்கள் இருக்குமென்றுதான் தோன்றுகிறது.

சன் டிவியால் ராதிகா அடைந்த லாபங்கள் கொஞ்சமா என்ன? ஒரு கட்டத்தில் அத்தனை பிரைம் டைம் ஸ்லாட்டுகளையும் தாரை வார்த்ததால் மின் பிம்பங்கள் மற்ற டிவிக்களைத் தேடியது.

ஆகமொத்தம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது நல்லதுதான். இனிமேலும் ராதிகா தன் தியாகங்களைச் செல்வி வழியாகப் புகுத்தினால் கலாநிதிக்கு ஆப்பு...

Bharaniru_balraj said...

சரத் போன்ற இலைகள் உதிர்ந்தற்காக தி மு க எனும் மரம் வருத்தப்படவேண்டியது இல்லை.

சரத் புதிர் அல்ல "பதர்"

KVR said...

சரத்தின் முடிவு அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?