முதல் பாகம் இங்கே கிளிக் செய்யவும்.
சார்,
கெடா வெட்டினால் கைது செய்வார்கள் என்பதை எதற்கு சொன்னேன் என்றால் உங்கள் தனிப்பட்ட இன அடையாளம் இங்கே அழிக்கப்படுகிறது. ஏண்டா கண்ணு ,கெடா வெட்டினா போலீஸ் பிடிக்குமாமேன்னு எங்க தாத்தா கேட்டா அவருக்கு நான் பகவத் கீதை கிளாஸ் எடுத்தா விளக்க முடியும்? அல்லது அவருக்கு அது புரியுமா ?
அவ்வளவு ஏன்?
உங்க "என் பைபிள்" பதிவுக்கு வருவோம் . நான் தான் அநாச்சாரம். ஒரு குப்பனோ சுப்பனோ, கோவிந்தனோ உங்களிடம் வந்து ஐயா,உங்கள் பைபிள் பதிவை நீச மொழியான தமிழில் படித்தேன், எனக்கு பிடித்திருந்தது .நானும் பரிசுத்த ஆவியான ஏசுவை ஏத்துக்கிறேன்னு சொல்றான்னு வைங்க. நீங்களும் அவனை சர்ச்க்கு கூட்டிட்டு போய் பாப்டைஸ் செய்து பிலிப் கோவிந்தன்னு பெயரை மாத்தி விடறீங்க. அடுத்த நாள் காலைல ஜோசப் மதமாற்றம் பண்றார்னு போலீஸ் வந்து உங்க வீட்டு முன்னாடி நிக்குதுன்னு வைங்க.
எப்படி இருக்கும் சார்?
சத்தியமா அன்னைக்கு ஒரு திராவிட ராஸ்கல்தான் உங்களுக்கு உதவியா வருவான். "தேசியவியாதி" (கொத்ஸ் கவனிக்க) வரமாட்டான்.
தெரியாமத்தான் சார் கேட்கிறேன.தமிழ்ப்பற்று இருப்பது அவ்வளவு கேவலமான விஷயமா?
தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்டதாக சொல்கிறார்கள. அதில் அவ்வளவு இலக்கணம் எழுதியுள்ளான் என்றால் மொழி எப்போது தோன்றியிருக்கும் அந்த மொழியோட வாரிசு சார் நம்பள்ளாம். எவ்வோ பெரிய விஷயம். .பெருமைப்படுங்க.இந்தியோட வயசு என்ன?இன்றைய இந்தியாவில் இந்தி இல்லாமல் வாழ்வது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா ?
இந்த தமிழ்மொழிதானே நம்மை சேர்த்தது. அமெரிக்கா ,லண்டன், இத்தாலி, சுவீடன், கிரீஸ் என்றெல்லாம் உலகம் முழுவதும் இருந்து நம்ப பிளாக்கை யார் படிக்கிறார்கள்? தமிழர்கள் தானே. நீங்கள்ளாம் இங்கிலீஷ் பிளாக் வைச்சு வெள்ளைகாரனை படிக்க வைக்கறீங்க.எனக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாது. தமிழ்தான் தெரியும்.
கிறிஸ்தவன்,இஸ்லாமியன் என்றெல்லாம் மதரீதியான பிரிவினை இருந்தாலும் நம்மை முதலில் சேர்ப்பது மொழிதான். எங்கயோ வடஇந்தியாவோ அல்லது வெளிநாடோ போறீங்க.தமிழ் யாராவது பேசகேட்டா உங்களுக்கு என்ன தோணுது?
செத்துப்போன மொழியான சம்ஸ்கிருதத்தை இன்னமும் தேவபாசைன்னு பேசற "தமிழர்களும்" இருக்கற இடம் தான் இது. இவங்களுக்கு சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும தெரியாது.ஆனாலும் இது தேவபாசை என்பார்கள் . தமிழ் காட்டுமிராண்டி பாசை என்று பெரியார் சொன்னாரே என்பார்கள்.அங்கேதான் பெரியார் ஞாபகம் வரும் இவர்களுக்கு.
சரி.விடுங்க.மொழியில் எமோஷன்ஸ் வேண்டாம் . மொழி எப்படி தோன்றியிருக்கும் என்று அறிவியல்பூர்வமாக வருவோம்.அப்படி பார்த்தாலும் சம்ஸ்கிருதம் எப்படி தேவ பாசை ஆச்சு? கடவுள் அந்த மொழியில் பேசினாரா? இதை இந்த இடத்தில் நிறுத்துவோம்.இது மேலும் நீட்டினால் பிரச்சினை ஆகும் .என்னால் ஆகாது சாமி.
இன்று உலகம் முழுவதும் இனம்,மொழி என்று அவனவன் அவனுடைய வேரை தேடறான் சார்.அதில் பெருமையடையறான். ஆனா நாம தாழ்வு மனப்பான்மையில் புழுங்கறோம்.
ஏன் தாழ்வு மனப்பான்மை வந்தது? மொழியை பற்றி இனத்தை பற்றி பேசுதல் கேவலம் என்று கட்டமைக்கிறார்கள். அதாவது உங்கள் மொழியையும் இனத்தையும் பற்றி பேசுவது மட்டுமே இங்கு கேவலமாக கட்டமைக்கப்படுகிறது.அடுத்த மொழியைப்பற்றி அழிக்க முயற்சி செய்பவர்கள்தான் வெட்கப்படவேண்டும் .நாம் ஏன் படவேண்டும் வெட்கம்?ஆனால் நம்மை ஆள்பவர்கள் வேறு மாநிலத்தவர் என்பதில் பெருமை கொள்கிறீர்கள் நீங்கள்?
நீங்க இங்க ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம் சார். உங்கள் பதிவில் நீங்கள் எழுதும் அனுபவங்களை பார்த்து இங்கு பலரும் பிரமிக்கிறோம்.உங்களிடம் பலநேரங்களில் மோதிய ஊர் பெரிய மனுசர்கள், மனநிலை சரியில்லாத வாடிக்கையாளர்கள், மேல்சாதியினர், கீழ்சாதியினர் ஆகியோரை நீங்கள் ஒவ்வொரு முறையும் அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்தே டீல் செய்துள்ளீர்கள்.ஆனால் கருத்து தளத்தில் அதை நீங்கள் எடுப்பதில்லை. உதாரணத்திற்கு சாக்கடை அள்ளுபவர்களை அப்படியே விடுங்கள் என்பதாக ஒருமுறை கூறினீர்கள். நாம் கூடச்சேர்ந்து அள்ளவில்லை என்றாலும் அந்த நிலையை மாற்றவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பதில் ஒரு கருத்தொற்றுமையை கொண்டு வருவதை உங்கள் கருத்து தடுக்கிறதல்லவா?
அப்படியானால் இந்தியாவின் மேல் மரியாதை உனக்கு இல்லையா என்று தயவு செய்து கேட்காதீர்கள்.எனக்கு என்ன மரியாதை இந்தியா கொடுக்கிறதோ அதே அளவு மரியாதையோ அல்லது அதற்கும் ஒருபடி மேலேயோ நான் எப்போதும் கொடுத்தே வந்திருக்கிறேன். இந்திய தாய் கண்ணீர் விடும் அதே நேரம் தமிழ்த்தாய் கதறுகிறாள். மன்னித்துவிடுங்கள். என்னால் முதலில் தமிழ்த்தாயை தான் பார்க்க்முடிகிறது.
மீண்டும் மீண்டும் சில நண்பர்கள் இந்து மதம் உனக்கு சுதந்திரம் கொடுத்தது என்று கூறி வருகிறார்கள்.இந்தி தெரியாதா ..நீ எல்லாம் இந்தியனா என்று சிலர் கேட்கும் ஆபாச கேள்விக்கு(இந்த கேள்விக்கு நமக்கு குற்ற உணர்ச்சி வந்தால் அய்யோ பாவம் நீங்கள்) இது எந்த விதத்திலும் சளைத்ததல்ல.
அவர்களுக்கு ஒன்று. இந்து மதம் என்று எதை நீங்கள் கூறுகிறீர்கள்? இங்கு முத்துகுமரன், குழலி ஆகியோர் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.(உறுதியாக தெரியவி்ல்லை).அவர்கள் தங்களை இந்து என்கிறார்களா? மீண்டும் போய் தங்கமணி பதிவுகளை படியுங்கள்.
இங்கு பொதுவாக ஆதிக்கம் என்றுதான் கூறிஉள்ளேன். தனிப்பட்ட யாரையும் அல்ல. நேற்று இரவு நண்பர் டோண்டுவுடன் ஒரு மணிநேரம் தொலைபேசியப்போதும் இதையே தான் சொன்னேன். டோண்டுவை என்றுமே நானும் என்னுடைய சக திராவிட ராஸ்கல் ஜோவும் பேரன்புடன்தான் அணுகியுள்ளோம்.ஆகவே அது சம்பந்தமாக யாராவது எழுதினால் ட்ராஷ் செய்வேன் என்பதை பேரன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தான் திராவிட உணர்வுகளின் ஒரு கூறாக நான் முன்வைக்கிறேன்.கருணாநிதி குடும்பத்தை, ராமதாஸ் குடும்பத்தை , திருமாவளவன் குடும்பத்தை தாண்டி இதில் சிந்திக்க வேண்டியது ஏராளம்.இவர்களை எல்லாம் கிண்டல் செய்யும் அறிவாளிகள் இவர்களை கிண்டல் செய்வது போல் கிண்டல் செய்வது இவர்களை இல்லை சார் .நம்முடைய உணர்வுகளை, உரிமைகளை, கருத்துக்களை எல்லாவற்றையும்தான்.
ஆகவே இதில் உள்ள நுண்ணிய அரசியலை பின்நவீனத்துவ நோக்கில் அணுகினீர்கள் என்றால் ( அட..சட். என்னுள் உள்ள அரைகுறை இலக்கியவாதி இப்படி அடிக்கடி எட்டிப்பார்க்கிறான்.மன்னியுங்கள்.)
இதில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல நானும் ஜோவும் எங்கள் உணர்வுகளை உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம். நாங்கள் இளையவர்கள்.ஏதாவது குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள் அய்யா.நன்றி.
(கொஞ்ச நாளைக்கு நான் லீவு. பின்னூட்ட பெட்டி திறந்து கிடக்கும்.என் பதில்களை எதிர்பார்க்கவேண்டாம்.விவாதம் செய்பவர்கள் செய்யலாம்)
Saturday, April 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
ஒரு கிறிஸ்தவன் என்பதாலேயே தான் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள உங்களுக்கு இருக்கும் தயக்கம் ஜோவுக்கு இல்லை .இதற்காக நான் ஜோவை வாழ்த்துகிறேன்.//
இதென்ன அக்கிரமம்? என்னை தமிழன் என்று காட்டிக்கொள்ள விரும்பாதவனா தமிழில் ஒரு ப்ளாக் துவங்கி நேரம் கெட்ட நேரத்தில் மாங்கு மாங்கென்று தினம் ஒரு பதிவு என எழுதிக்கொண்டிருக்கிறேன்? தமிழன் என்ற வட்டத்திற்குள் முடங்கி போகாதீர்கள் என்றுதான் கூறுகிறேன்.
நான் இதுவரை பல மாநிலங்களில் பணியாற்றி இருப்பதால் தமிழை சில வருடங்கள் தொடர்ந்து உபயோகிக்காமல் இருந்து ஒருவேளை என்னுடைய எழுத்தில் உங்களைப் போல ஒரு லாவகம் இல்லாமல் இருக்கலாம். மனதில் தோன்றுவதை எழுத்தாய் வடிக்கிறேன். அது படிப்பதற்கு கவர்ச்சியாக இருக்குமா என்று தெரியவில்லை.
பின்னொன்று. என்னுடைய பைபிள் பதிவைக் கிண்டலடிக்கிறீர்கள். மதமாற்றம் என்பதை கனவிலும் நினையாதவன் நான். மாத்திரமல்ல, என்னுடைய மதம்தான் உயர்ந்தது என்ற கருத்தும் என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை. என்னுடைய மதத்தைப் பற்றி எழுத எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று நினைக்கிறேன். படித்தால் படியுங்கள். படிக்காவிட்டாலும் அதனால் எனக்கொன்றும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை. அது முழுக்க முழுக்க என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் எழுதும் பதிவு.
இன்னும் ஒன்று. தமிழ் என் மூச்சு என்றெல்லாம் கூறிக்கொண்டு பிற மொழியை ஒதுக்கிவிடமாட்டேன். என் பிள்ளைகள் இருவருமே ஹிந்தியை இரண்டாம் பாடமாக எடுத்திருந்தாலும் வீட்டில் வைத்து அவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க கற்றுக்கொடுத்தவன் நான். என்னுடைய வங்கி நண்பர்கள் வீட்டில் மம்மி, டாடி, என்று அழைத்து பெரும்பாலும் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதுபோன்ற நாடகத்தனமும் என் வீட்டில் இருந்ததில்லை. வீட்டிலும், வெளியிலும் தமிழ்தான். ஆனால் மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியானாலும் அதை விரும்பி கற்று பேசவும், எழுதவும் ஆசைப்பட்டவன் நான். என் பிள்ளைகளும் அப்படித்தான்.
உங்கள் தமிழ்பற்றை நான் கேள்விக்குட்படுத்தவில்லை..மொழியை போற்றினால் எப்படி சார் கிணற்று தவளை ஆவோம்?
உங்கள் பைபிள் பதிவை நான் கிண்டல் பண்ணினேனா? இது அபாண்ட குற்றச்சாட்டு.அப்படி யாராவது நினைத்தால் என் மனப்பூர்வமான மன்னிப்பை வேண்டுகிறேன். அது ஒரு விஷயத்தை விளக்க நான் எழுதிய வாசகம் தான்.
நீங்கள் மதமாற்றம் பற்றி குறிப்பிட்டதால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த சட்டத்தின் பெயரே கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் தான். உங்கள் உதாரணப்படியே ஜோஸப், கோவிந்தனின் விருப்பமில்லாமல் சலுகைகள் பணம் தருவதாக ஆசை காட்டி பிலிப் கோவிந்த் ஆக்கினால் கைது செய்ய வேண்டியது தான்.
அந்த சட்டத்தை புரிந்துகொள்ளாத மாதிரி இருப்பவர்களை பற்றி என்ன சொல்வது?
இலவச டிவிக்கு ஓட்டே போடுவார்கள் என நம்பும் தலைவர்களும் தொண்டர்களும் இருக்கும் போது பொருளாதார வசதியிலும் சமூகத்தில் தாழ் நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பவர்களும் தங்கள் உயர்வு குறித்தாவது மதம் மாற மாட்டார்களா என்ன? மதமாற்ற சட்டங்களோடு அவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளில் இறங்காமல் (அல்லது இறங்கவிடாமல்) அரசியலாக்குவது அவர்களின் நலனுக்காக தான். மக்களுக்காக அல்ல.
நீங்களே நான் சொல்லும் இந்த கருத்தை ஓத்துக்கொள்வீர்கள்.
இந்துக்களுக்கு மட்டும்
தான் மதரீதியான கடமை என்று
ஒன்றில்லை. ஒவ்வொரு
வகுப்பினருக்கும் ஒரு கடவுள்.
கட்டடம் கட்டும் போது மண்ணும்
அவன் உபயோகப்படுத்தும்
கரண்டிகள் தான் கடவுள்.
மீனவனுக்கு தான் மீன்
பிடிக்கப்போகும் கடல் தான் அன்னை.
விவசாயிக்கு பூமி செழிக்க
சூரியனும் மழை என்ற
மாரி(யம்மன்)யும் தான் தெய்வம்.
கிராமங்களுக்கு ஊர் எல்லையை காவல்
காப்பவனும் தெய்வம்.
இந்தியாவில் இருந்ததால் இவர்கள்
எல்லோரும் இந்துக்கள் தான்.
ஆனால் சுனாமி தாக்கிய பின்
கடலோர மீனவர்களில்
பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்
என செய்தி வந்ததே! இந்த
செய்தியில் உள்ள உண்மையை
படிக்க ஏன்? எப்படி என கேள்வி
கேட்கும் சிந்தனை இருந்தால்
போதும். எப்படி, எப்போது
கடலன்னை மதம் மாறினாள்?
ஆனால் வழக்கம் போல நமது
திராவிடர் கழகங்கள் நடத்திய
பகுத்தறிவு பாடம் அவற்றை ஏற்க மறுக்கிறது.
அடுத்தது: உயிர்பலி பற்றியது. அது நம் தாத்தா கால பழக்கமென்றாலும் அதுவும் ஒரு சடங்கு தானே. கடவுளுக்கு நேர்த்திக்கடன் தானே.
அதை எப்படி தடுக்கலாம் என்று கேள்வி கேட்டால் நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள்? நீங்கள் மூட நம்பிக்கை என சாடும் சடங்குகளைத் தானே!
கடா வெட்டி நாம் தானே சாப்பிட்டுபோகிறோம். அதனால் தான் குங்குமம் வைப்பது முட்டாள் தனமாக படும்போது இது கலாச்சாரம் ஆகி விடுகிறது.
கால மாற்றங்களுக்கு ஏற்ப பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்கிறோம்.
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லையென்றாலும் கலாச்சாரம் என்ற பெயரில் சமீபத்தில் நடந்த சில விஷயங்களையும் பதிய வேண்டியிருக்கிறது.
தங்கர் பச்சான் குஷ்பு விவகாரத்தில் ஆனந்த விகடனுக்கு பேட்டி கொடுக்கிறார். தான் எப்படிப்பட்ட காவியத்தை படத்தை படைத்திருக்கிறேன் என்று. அதில் ஒன்று "தென்றல்" என்ற படம். ஒரு எழுத்தாளனிடம் தன் கற்பை தொலைத்து மகனும் பெற்று கடைசி வரை அவன் தாலிக்கா ஏங்கும் நாயகியை பற்றியது.
மனமில்லாவிட்டாலும் "அட பைத்தியக்காரா" என வைகோ பேசியதை உபயோகிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவும் அதைத் தானே சொன்னார். கலாச்சாரம் என்றால் தென்றலின் நாயகி அவனோடு சேர்ந்தே இருக்கக்கூடாது. அதோடு பாதுகாப்பான உறவு வைத்திருந்தால் அட போடா என விட்டுவிட்டு போயிருந்திருக்கலாம். ஆனால் அதை தமிழகத்தையே அவமானப்படுத்திவிட்டதாக என்ன ஆர்ப்பாட்டம் நடந்தது.
(வம்பை விலை கொடுத்து வாங்குகிறேனோ? )
நமக்கு சர்ச்சைகள் இல்லாமல் சிக்கலாக்கமல் ஒரு தீர்வு காண முடியவில்லை. இதில் அரசியல்வாதிகள் வேறு உணர்ச்சிகளை தூண்டி குளிர் காய்கிறார்கள். நாமும் நம் பங்குக்கு... அட போங்க சார்...
தயா, கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிங்க, அதோட சூடு பயங்கரமா இருக்கும். பொருத்திருந்து பார்போம். ஸ்ரீதர்
இங்கே பார்க்கவும்
http://www.vedhagamam.blogspot.com/2006/03/blog-post_16.html
இப்போதெல்லாம் 'நான் கடவுளை நம்பாதவன்' என்று கூறிக்கொள்வது ஒருவித Fashion ஆகிவிட்டது..
கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று ஒரு அரசியல் தலைவர் ஒரு காலத்தில் கூறிக்கொண்டிருந்தார். அவரை சீர்திருத்தவாதி என்றார்கள். அவரைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை..
இன்று அல்லது சமீப காலமாக, கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுடைய வாதத் திறமை அதைப் படிப்பவர்களையும் அந்நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..
சரி.. என்னுடைய பார்வையில் மதம் என்றால் என்ன கடவுள் நம்பிக்கை என்ன என்பதை மட்டும் பார்ப்போம்..
கடவுள் நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அந்தரங்க உணர்வு.. அது என்னுடைய தனிப்பட்ட உணர்வும் கூட..
அதை யாருக்கும் நியாயப்படுத்த தேவையில்லை. அதை யாரும் கொச்சைப்படுத்தவோ அல்லது எள்ளி நகையாடவோ நான் உரிமையளிக்கவில்லை..
இறை நம்பிக்கை எனக்கு ஒரு சந்தோஷத்தை, என் வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளிக்கிறது என்று நினைக்கிறேன், நம்புகிறேன். அதுமட்டும் போதும் எனக்கு.
ஆனால் மதம் என்பது முற்றிலும் வேறானது..
எந்த ஒரு மதமானாலும் அதற்கு சில சட்டத்திட்டங்கள், வரைமுறைகள் எல்லாம் உண்டு. அம்மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பர்வகளுக்கு மட்டுமே அச்சட்டங்களின் அர்த்தமும், நியாயமும் புரியும். அவற்றை மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி ஒழுக தயாராக இருப்பார்கள்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவருமே மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை..
ஆனால் மதத்தை நம்புகிறவர்கள், அல்லது நான் இந்த மதத்தைச் சார்ந்தவன்தான் என்பவர்கள் கடவுள் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை என்று சொல்லும்போது....
இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்.
கடவுள் இல்லை. மதங்கள் ஒரு மூட நம்பிக்கை என்று அடித்துக் கூறும் ஒரு கட்சித் தலைவர் எப்போதும் தோளில் அணிந்திருக்கும் மஞ்சள் துண்டுக்கு என்ன பொருள் என்று கேட்டாராம் ஒரு பத்திரிகை நிரூபர்.
அதுபோல் இருக்கிறது இந்த அறிவுஜீவிகளின் வாதமும்.
காந்திஜி அவர்கள் ஒருமுறை கூறினார். நான் கிறிஸ்துவத்தை நேசிக்கிறேன். அதற்கு நான் கிறிஸ்துவர்களை நேசிக்கிறேன் என்று பொருள் அல்ல என்று. கிறிஸ்துவம் மட்டுமல்ல அவர் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
ஆம், கடவுளை நம்புகிறேன்.. ஆனால் கடவுளை முன் வைத்து மதவாதிகள் செய்யும் அக்கிரமத்தை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுங்கள். என்னைப் போன்றவர்கள் நம்பத் தயாராய் இருக்கிறோம்..
ஆனால் நான் கிறிஸ்துவன், நான் இந்து, நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், ஆனால் கடவுளை நம்பவில்லை என்று கூறாதீர்கள்..
அது ஒரு hypocrite ன் வாதமாகத்தான் கருதப்படும்..
//இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்//
இதனுடைய அர்த்தம் என்ன?
//ஒரு கிறிஸ்தவன் என்பதாலேயே தான் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ள உங்களுக்கு இருக்கும் தயக்கம் ஜோவுக்கு இல்லை //
முத்து,
ஜோசப் சாருக்கும் அத்தகைய தயக்கம் இருப்பதாகவோ,அதற்கு அவர் கிறிஸ்தவராக இருப்பது காரணமென்றோ நான் நினைக்கவில்லை .
//இந்தியாவில் இருந்ததால் இவர்கள்
எல்லோரும் இந்துக்கள் தான்.
ஆனால் சுனாமி தாக்கிய பின்
கடலோர மீனவர்களில்
பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்
என செய்தி வந்ததே! இந்த
செய்தியில் உள்ள உண்மையை
படிக்க ஏன்? எப்படி என கேள்வி
கேட்கும் சிந்தனை இருந்தால்
போதும்.//
தயா அண்ணே,
என்னய்யா சொல்ல வர்றீங்க ?சுனாமியால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 100% கிறிஸ்தவர்கள் தான் ?இப்போ உமக்கு என்ன சந்தேகம்?
//உங்கள் பைபிள் பதிவை நான் கிண்டல் பண்ணினேனா? இது அபாண்ட குற்றச்சாட்டு.அப்படி யாராவது நினைத்தால் என் மனப்பூர்வமான மன்னிப்பை வேண்டுகிறேன்//.
மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தமிழினி.
உலகத்தை படைத்தவர்களுக்கே அது தட்டையா உருண்டையா? என்று தெரியவில்லை. அதனால் உலகம் உருண்டையானது என்று முதல் முதலில் சொன்ன கலிலியோவை மதத்திற்கு புறம்பாக பேசுகிறார் என்று சொல்லி சிறையிலடைக்கப்பட்டார், பின்னர் தண்டிக்கவும் பட்டார். இப்போது உலகம் உருண்டையானது என்று இப்போது பேசுகிறார்கள், இதையெல்லாம் கேலி செய்யமாட்டார்களா என்ன?
இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்//
நீங்கள் எப்படி கற்பித்துக்கொண்டீர்களோ தெரியவில்லை ஆனால் நான் மனதில் நினைத்தது இதுதான்.
ஆனால் நான் கிறிஸ்துவன், நான் இந்து, நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், ஆனால் கடவுளை நம்பவில்லை என்று கூறாதீர்கள்..//
இனியும் இந்த வாதத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்.
but my community certificate says that iam a hindu...
"நேற்று இரவு நண்பர் டோண்டுவுடன் ஒரு மணிநேரம் தொலைபேசியப்போதும்..."
அசாத்திய பொருமை, இருவருக்கும்.
:-))
ஸ்ரீதர்
sridhar,
வேற வேலை இல்லாத வெட்டி பசங்கள்னு ஓப்பனா சொல்லுங்க...
முத்து(தமிழினி)
"வேற வேலை இல்லாத வெட்டி பசங்கள்னு ஓப்பனா சொல்லுங்க... "
இன்னொறு பதிவு மட்றும் இடுகைகள் தயாராக நான் காரணம் ஆக விரும்பவில்லை.
:-))
ஸ்ரீதர்
sridhar
//இன்னொறு பதிவு மட்றும் இடுகைகள் தயாராக நான் காரணம் ஆக விரும்பவில்லை.//
:)) தேவுடா தேவுடா..இந்த பக்கம் சூடுடா..
(அதான் சில நாள் லீவு என்றேனே)
கடவுள் பக்தியுள்ளவர்கள் அனைவரும் ஒரு வகையில் நாத்திகர்களே!
ஏனெனில், இந்துக்கள் கிருத்துவக் கடவுளை ஏற்றுக்கொள்வதில்லை, கிருத்துவர்கள் இந்துக்களின் முப்பத்தி முக்கோடி தேவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. பொதுவாக மதங்கள் பிறமதக் கடவுள்களை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஒருவருக்கு ஒருவர் பிறமதக் கடவுள்களை ஏற்க மறுப்பதன் மூலம் இவர்கள் மதவாத நாத்திகர்கள்.
கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரையே கடவுளாக்கியவர்கள் இவர்கள். மதம் என்பது வேறொன்றுமில்லை அது வியாபாரம்.
இங்கே பாருங்கள் மத வியாபாரத்தை.
இந்து மதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டது முஸ்லீம் மதம். இந்து கிழக்கப்பார்த்து கும்பிட்டா முஸ்லீம் மேற்கப்பார்த்து கும்பிடுராங்க, இந்து மாமாப் பொண்ணக்கட்டினா, முஸ்லீம் சித்தப்பா பொண்ண கட்டராங்க, இந்து மீசைய வச்சிகிட்டு தாடிய எடுத்தா, முஸ்லீம் தாடிய வச்சிக்கிட்டு மீசைய வச்சிக்கிறாங்க, இடமிருந்து வலமா எழுதினா அவங்க வலமிருந்து இடமா கடைசி பக்கத்திலிருந்து முதன் பக்கத்துக்கு வராங்க இப்படி நிறைய விளக்கங்கள் தரலாம்.
இதுதான் போட்டி மத வியாபாரம்
//இந்து கிழக்கப்பார்த்து கும்பிட்டா முஸ்லீம் மேற்கப்பார்த்து கும்பிடுராங்க//
சுகுமாரன்,
அட..அட..புல்லரிக்க வைக்குறீங்க ..முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் மெக்கா இருக்கும் திசையைப்பார்த்து கும்பிடுகிறார்கள் ..மெக்காவுக்கு மேற்கே இருக்கும் முஸ்லிம் கிழக்கே பார்த்து தான் கும்பிடுகிறான் .அதனால் அவன் இந்துவா?
முத்து,
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு... அதன் வடிவங்களில் முன்பு கவனம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அது ஒரு உணர்வு. ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் மோசடிகள் என் விருப்பம் இன்றியே என் வாழ்வில் இந்த சமுகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது. அதை கேள்விக்குள்ளாக்குவது அடுத்த நிலைக்கு நகர உதவும்.
என்னை பொறுத்தவரை மொழி முதலில் அதற்கு பிறகுதான் கடவுள்.. என் மொழி உனக்கு புரியாது என்றால் நீயே எனக்கு தேவையில்லை. சிந்தனை திறன் வந்த பிறகுதான் கடவுள் சம்பந்தமான நம்பிக்கைகள் வருகின்றன. அதற்கு முன்பே நம்மோடிருப்பது மொழி.
அதே போல தமிழைப் பற்றி பேசும் போதும் மட்டும் நான் முதலில் மனிதர்கள், பிறகு தமிழர்கள் என்று வியாக்கனங்கள் வரும்... இருக்கிறவன் எல்லாம் என்ன மிருகமா?
தமிழ்நாட்டில் மட்டும்தான் தாயை, தாய்மொழியை பேசுறவன் தீவிரவாதி.
ஜெய்கிந்த்!ஜெய்கிந்த்!!
அய்யா ஜோ
உலகம் உருண்டதானே,
அப்படியே கிழக்கப்பார்த்து கும்பிட்டாலும் ஒன்னுதானே, எங்கிருந்து மேற்குபக்கத்தில் மெக்கா இருக்கு கொஞசம் சொல்லுங்களேன்.
இந்துக்கள் எங்கிருந்தாலும் கிழக்குப்பார்த்துத்தான் வணங்குராங்க.
ஜோ மற்றும் சுகு,
யாராவது ஒருத்தர் விடுங்க..பதிவின் அடிப்படை கருத்து மாறிவிட போகிறது
முத்து உங்களுக்கு பொறுமை அதிகம்தான்.
நீங்க சொல்லியிருந்த சத்தியராஜ் வசனம் நிதர்சனமானது. நன்பர் அதை நிச்சயம் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன்.
செல்வன் ஒரு பதிவில் எழுதியிருந்தது போல் சுந்திரம், மனிதயேம், ஜனநாயகம்... இவைகளெல்லாம் கடவுளாகட்டும் என்று கூறியிருந்தார். அது மிகச் சரியானது.
இந்த ரேஞ்சுக்கு உயர வேண்டிய மனிதர்கள், எங்கே கற்காலத்திற்கு திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதற்கு கடவுள் பக்தர்கள் தங்களை சமூகத்தோடு இணைத்துக் கொள்ளாததுதான் என நினைக்கிறேன். அவர்களது வட்டம் மிக குறுகி வீடு + வேலை + கோவில் என சுருங்கி விடுவதால் ஒருவித குறுகிய மானோ நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களையெல்லாம் அவர்கள்தான் மன்னிக்க வேண்டும்.
நன்றி ஜோ அண்ணே, தமிழினி அண்ணன் வருத்தப்படுறாங்க
"நேற்று இரவு நண்பர் டோண்டுவுடன் ஒரு மணிநேரம் தொலைபேசியப்போதும் இதையே தான் சொன்னேன். டோண்டுவை என்றுமே நானும் என்னுடைய சக திராவிட ராஸ்கல் ஜோவும் பேரன்புடன்தான் அணுகியுள்ளோம்.ஆகவே அது சம்பந்தமாக யாராவது எழுதினால் ட்ராஷ் செய்வேன் என்பதை பேரன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்."
மிக்க நன்றி முத்து அவர்களே. ஒரு மணி நேரம் பேசினோம் என்பதே எனக்கு அப்புறம்தான் தெரிந்தது. என் வீட்டம்மாகூட கிண்டலடித்தார். பேசும் சுவாரசியத்தில் நேரம் எண்ணத்தில் வரவேயில்லை.
மற்றப்படி குமுதம் ரிப்போர்டர் கிடைத்ததா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்து,
விட்டுடுறேன். கீழேயிருக்குறது உங்களுக்காவது புரிஞ்சா சரி..ஹி.ஹி
//அப்படியே கிழக்கப்பார்த்து கும்பிட்டாலும் ஒன்னுதானே, எங்கிருந்து மேற்குபக்கத்தில் மெக்கா இருக்கு கொஞசம் சொல்லுங்களேன்.
//
தலைவரே ஜோ,
விடுங்க..பார்த்துக்குவோம்..என்ன இப்ப?
டோண்டு,
ஒரு மணிநேரம் பரவாயில்லை.மங்களூரில் ஒன்பது மணிக்கு ஓட்டலை எல்லாம் சாத்தி நல்லவேளை ஒரு கையெந்தி பவன்ல ஊட்டாயித்து..
இப்போ ட்யூட்டி முடிந்தவுடன் சென்றுதான் ரிப்போர்ட்டர் வாங்கவேண்டும்..ஒருவேளை வரவில்லையெனில் இட்லி வடைதான் கதி.
அனானி,
ஜோசப் சார் விஜயகாந்தை ஆதரித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. நான் சொல்ல வந்தது அவரின் திராவிட கொள்கை பற்றிய கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியே....
தயா,
கட்டாய மதமாற்றமும் விருப்ப மதமாற்றத்திற்கும் வித்தியாசம் என்ன? தெளிவாக விளக்கவும்.
(என் உதாரணத்தில் கோவிந்தனே வந்து ஜோசப்பிடம் கேட்கிறான் என்பதையும் கவனிக்க)
இலவச சைக்கிளுக்கு ஓட்டு, யாரோ கொண்டு வந்த மகளிர் சுயஉதவி திட்டத்திற்கு ஓட்டு,அடுத்தவனை அடிச்சதுக்கு ஓட்டு என்றெல்லாம் ஓட்டு ஒருவர் வாங்குவார்...
இன்னொருவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு லாலி பாப் சாப்பிடுவாரா?
இதற்கு காரணம் என்ன என்று யோசிக்கவும்...மனமிருந்தால் முடியும்..
சுனாமி, கடலன்னை என்றெல்லாம் நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை ..சற்று விளக்கமுடியுமா?
பொதுமக்கள் கடா வெட்டுவதும் கலைஞர் அவர் கட்சிகாரனை குங்குமம் கிண்டல் செய்ததும் ஒன்றா?
குஸ்பு மேட்டரை பற்றி தனியாக பேசலாம்.விளக்கமாக ஒரு பதிவு போடவும்.நான் இதைப்பற்றி ஏற்கனவெ எழுதி உள்ளென்.
http://tbrjoe.blogspot.com/2006/04/vote-for-vijayakanth-should-we.html
Joe அண்ணே,
எனக்கு சந்தேகம் அதில் இல்லை. கடலன்னையை கும்பிட்டவர்களும் இந்துக்கள் என்றால் இவர்கள் எல்லாம் என்றைக்கு/எப்படி கிறிஸ்துவர்கள் ஆனார்கள் என்று தான்!
இவர்கள் யாரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் இல்லையே?
அந்த மாற்றம் எப்படி நிகழந்தது?
//அதே போல தமிழைப் பற்றி பேசும் போதும் மட்டும் நான் முதலில் மனிதர்கள், பிறகு தமிழர்கள் என்று வியாக்கனங்கள் வரும்... இருக்கிறவன் எல்லாம் என்ன மிருகமா?
//
முத்துகுமரன்..எனக்கும் வலிக்கிறது.
//உங்கள் உதாரணப்படியே ஜோஸப், கோவிந்தனின் விருப்பமில்லாமல் சலுகைகள் பணம் தருவதாக ஆசை காட்டி பிலிப் கோவிந்த் ஆக்கினால் கைது செய்ய வேண்டியது தான்.//
நான் தான் என் பதிலில் சொன்னேனே! கோவிந்தனை ஆசை காட்டி சலுகைகள் கொடுப்பதாக வலை விரித்து மதம் மாற தூண்டினால் அதற்கு பெயர் என்னங்க? இதில் ஒரு சாதகம் என்னவென்றால் நாம் அவன் மனம் மாறி தானே சேர்ந்தான் என வாதம் செய்யலாம்.
குஷ்பு விவகாரம் தனியாகவே பேசலாம்.
இலவசங்களுக்கு இலவசம் தர்க்கம் சரி தான். ஆனால் மக்களுக்கு இதனால் நன்மை என்ன? அவர்கள் எவ்வாறு மேம்பாடு அடைவார்கள் என்று சொன்னால் நன்றாய் இருக்கும்.
தயா,
ஃபைனர் பாயிண்ட்ஸ் என்று உள்ளது. ஆசை காட்டுதல் கட்டாய மதமாற்றமா? (to be frank i hate conversions.but see daya there are practical difficulties to identity this forcible conversions)
take the case of pota..it has come for good cause...but misused by politicians..(ask your latest sensation vaiko)....
likewsie if govindan himself converts as a christian with joseph's help which point you will rise as forcible?
மோட்சம் கிடைக்கும் என்று சொல்லுவது கூட ஆசை காட்டுதல்தான்.எதை சொல்லுவீங்க சார் ?
நான் கலைஞரையும் ஜெயலலிதாவையும் கம்பேர்தான் செய்தேன். நீங்கள் ஒரு சொக்கதங்கம்தான் உங்களை ஆளவேண்டும் என்று நினைத்தால் எனக்கு ஓட்டு போடுங்க..:)))
நான் எதிர்பார்த்த மாதிரியே வாதம் செய்கிறீர்கள் //ஆசை காட்டுவது கட்டாய மாற்றமா?//
நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு போனீர்கள் என்றால் பராவாயில்லை. ஆனால் மூளைச்சலவை செய்வது...
உங்களுக்கு நேரடி அனுபவம் இல்லையா என்று புரியவில்லை.
சமீபத்தில் பெங்களுரில் ஒருவர் (John finn?) ஏற்பாடு செய்த கூட்டத்தை பற்றி சர்ச்சை ஏற்பட்டது. அந்த கூட்டமும் நடந்தது. பின்னர் அதே நபர் அமெரிக்க தொலைகாட்சியில் தோன்றி இந்தியாவில் முன்று லட்சம் இந்துக்கள் என் கூட்டத்திற்கு ஆவலாக வந்தார்கள் தேவனை ஏற்றார்கள் என கடை விரிக்கிறார்.
என்னங்க "your" sensationன்னு சொல்லிட்டீங்க? தமிழகத்தின் sensationdன்னு சொல்லுங்க. உங்களுக்கு பிடிக்குதோ இல்லியோ அவர் பேசுவது பெட்டி அரசியலானாலும் உண்மையல்லவா?
சொக்கத்தங்கம் நம்மை ஆள "ஆசை" தான். ஒரு ஆள் கிடைத்தால் "கட்டாயமாக" ஓட்டுப்போடலாம்.
imm...so vaiko is tamilian's latest sensation..
//இந்து மதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டது முஸ்லீம் மதம்.//
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு. :-) வயிறு குலுங்க சிரிக்க வைத்ததற்கு நன்றி.
//இந்து மாமாப் பொண்ணக்கட்டினா, முஸ்லீம் சித்தப்பா பொண்ண கட்டராங்க//
கொஞ்சம் திருத்திக்குங்க, - இந்து அக்காப் போண்ண, மாமா பொண்ண கட்டிக்கினா, முஸ்லிம் மாமா பொண்ண, சித்தப்பா பொண்ண கட்டறாங்க.
//இந்து மீசைய வச்சிகிட்டு தாடிய எடுத்தா, முஸ்லீம் தாடிய வச்சிக்கிட்டு மீசைய வச்சிக்கிறாங்க//
இங்கயும் கொஞ்சம் மாற்றம், - இந்து மீசய வச்சிக்கிட்டு தாடிய வச்சிக்கிட்டா(தாடி வச்சவன் இந்து இல்லன்னா - சீக்கியர்கள், சாதுக்கள், (உண்மையான)சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் இந்துக்கள் இல்லையா சகோதரரே?), முஸ்லிம்கள் தாடிய வச்சிக்கிட்டு மீசையை வச்சிக்கிறாங்க.
//இடமிருந்து வலமா எழுதினா அவங்க வலமிருந்து இடமா கடைசி பக்கத்திலிருந்து முதன் பக்கத்துக்கு வராங்க//
இதுக்கு நா என்னத்தச் சொல்ல? அரபு, உருது அல்லாத மற்ற ஏதாவது ஒரு மொழி மட்டும் தெரியற முஸ்லிம் எப்படிய்யா எழுதறான்? இந்து, முஸ்லிம் பிரச்சனையை சூடு ஆறாமலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் கூடவா? ம் என்னவோ செய்ங்க. நாங்க அழுவறத அழுதுக்கிட்டே இருக்கோம்.
//இந்து கிழக்கப்பார்த்து கும்பிட்டா முஸ்லீம் மேற்கப்பார்த்து கும்பிடுராங்க//
இதற்கு சகோதரர் ஜோ அவர்கள் ஒரு வார்த்தையில் அழகாக விளக்கமளித்து உள்ளார். "திராவிட ராஸ்கல்"களான எங்களின் நிலை நிற்பினைக் குறித்து விவாதிக்கும் இப்பதிவுக்கு தேவையில்லாத இவ்விஷயத்தினை இழுத்துக் கொண்டு திசை திருப்ப விரும்பாததால் இதனை நான் நீட்ட விரும்பவில்லை. சகோதரர் இரா.சுகுமாரன் அவர்கள் இந்து, முஸ்லிம் ஐக்கியத்தை விரும்பாத சங்க் பரிவாரத்தின் கட்டுக்கதைகளை நம்பி உண்மையிலேயே விஷயம் அறியாமல் இதனை எழுதியிருக்கிறீர்கள் எனில் என் பதிவுக்கு வாருங்கள். இவற்றைக் குறித்து விரிவாக அலசி ஆராய்வோம். நீங்கள் நம்பியிருப்பது போல் இந்து மதத்திற்கு எதிராகத் தான் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது என்பது தெளியுமானால் அதனை தூக்கி வீச நான் தயாராக இருக்கிறேன்.
//யாராவது ஒருத்தர் விடுங்க..பதிவின் அடிப்படை கருத்து மாறிவிட போகிறது//
நன்றி சகோதரர் தமிழினி அவர்களே! இஸ்லாத்தின் மீது காறித்துப்ப இது போன்ற தருணங்கள் வாய்க்கும் போது அதனை சூப்பராக பயன்படுத்தி தங்களுடைய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுபவர்களுக்கு மத்தியில் தகுந்த தருணத்தில் தலையிட்டு உங்கள் நேர்மையை காட்டி பதிவின் நோக்கமும் மாறிப் போகாமல் கவனித்துள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
//:)) தேவுடா தேவுடா..இந்த பக்கம் சூடுடா..
(அதான் சில நாள் லீவு என்றேனே)//
//நீங்கள் ஒரு சொக்கதங்கம்தான் உங்களை ஆளவேண்டும் என்று நினைத்தால் எனக்கு ஓட்டு போடுங்க..:))//
சீரியசான விஷயங்களைக் குறித்து விவாதிக்கும் பொழுது கூட நல்ல நகைச்சுவையுடன் உங்கள் கருத்தை பிறர் மனம் நோகாதபடி வைக்கிறீர்கள். உங்களிடம் நான் கற்றுக் கொள்ள சில நல்ல விஷயங்கள் இருக்கிறது. உங்கள் எழுத்துக்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கிறது சகோதரரே. "கடவுளே என்னை மட்டும் காப்பாத்துப்பா!" இவ்வாசகம் இன்னும் நான் மறக்கவில்லை. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அன்புடன்
இறை நேசன்
"John finn"
I think you're talking about Benny Hinn. Interestingly he is hated by many fundementalist christians in US.
The problem with many of our bloggers is that everyone tries to defend his or her religion only by putting the other religions negatively.
ஜோசப் அவர்கள் நாத்திகவாதிகளை "கேவலமாக" விமர்சித்தார் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கி "கடுமையாக" விமர்சித்தார் என்று கட்டுரையில் திருத்தி உள்ளேன்.
கிறிஸ்துவன் என்பதால் தமிழ் அடையாளத்தை மறுக்கிறீர்கள் என்ற என் குற்றச்சாட்டும் தவறு என்று அவர் கூறிய விளக்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதை வாபஸ் பெறுகிறேன்.
மற்றபடி திராவிட கருத்தாக்கம் பற்றி நான் கூறியவை அனைத்தும் சரிதான் என்று நினைக்கிறேன்.
நன்றி.
பிறந்த குழந்தைக்கு-- அது எந்த மண்ணில் பிறந்திருந்தாலும் சரி-- மொழி கிடையாது.
எனவே, அது முதலில் மனிதன், பிறகு தமிழ்ப்பால் ஊட்டப்பட்டு, தமிழனாகிறது.
யாரோ சொன்னது போல, இந்தியத்தாய் கதறுவதைப் பார்த்து, தமிழ்த்தாய் பதறுவதைப் பார்த்து, அது இந்தியன் என உணர்கிறது.
யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்புலவனின் கர்ஜனையைக் கேட்டு, அது 'மானுடன்' ஆகிறது.
இதில் வலிக்க என்ன இருக்கிறது?
இருக்கிறவனை மிருகம் என்று எப்போது, யார், கூறியது?
திராவிட மாயையால் ஏற்பட்ட பக்க விளைவுகளோ?
நண்பர் இறைநேசன் எழுதியதற்கு ஆரோக்கியம் பின்னூட்டம் இட்டுள்ளார்.இது விவாதம் வேறு வழியில் செல்வதற்கு வழிசெய்வதாகும்.ஆகவே அதை மட்டுறுத்தியுள்ளென்.
இறைநேசனுக்கு,
புதுவை சுகுமாரன் எல்லா மதத்திற்குமான விமர்சனமாகத்தான் அந்த கருத்துக்களை கூறினார்.நீங்கள் இதை பெரிதாக எடுத்திருக்க தேவையில்லை.
(சில வரிகளை நீக்கி கொள்ளட்டுமா?)
எனக்கும் இஸ்லாம் மேல் சில விமர்சனங்கள் உண்டு.வேறு சூழ்நிலையில் வேறு பதிவில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.
மற்ற நண்பர்களுக்கு,
இது சம்பந்தமாக மீண்டும் எழுதாதீர்கள்.ப்ளீஸ்.
//புதுவை சுகுமாரன் எல்லா மதத்திற்குமான விமர்சனமாகத்தான் அந்த கருத்துக்களை கூறினார்.நீங்கள் இதை பெரிதாக எடுத்திருக்க தேவையில்லை.//
சகோதரரே! நான் அதை பெரிதாக எடுக்கவில்லை. சகோதரர் சுகுமாரன் அவர்கள் யாரோ கூறியதை வைத்து தெரியாமல் கூறுவதாகத் தான் அதனை எடுத்துக் கொண்டேன். இஸ்லாத்தினைக் குறித்து இடையில் வந்ததால் தான் ஒரு சிறு விளக்கமாக பின்னூட்டம் இட்டேன். அது உங்களை வருத்தப் படுத்தியது எனில் நான் உண்மையாக வருந்துகிறேன்.
//நண்பர் இறைநேசன் எழுதியதற்கு ஆரோக்கியம் பின்னூட்டம் இட்டுள்ளார்.இது விவாதம் வேறு வழியில் செல்வதற்கு வழிசெய்வதாகும்.ஆகவே அதை மட்டுறுத்தியுள்ளென்.//
மீண்டும் உங்களுக்கு நன்றுகள். நடுநிலை தவறாத உங்கள் செயல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சகோதரர் ஆரோக்கியம் நான் இட்ட பின்னூட்டத்தில் ஏதாவது தவறை கண்டிருப்பார் எனில் தாராளமாக என் பதிவிற்கு வரலாம். தவறு எனில் என் கருத்தை திருத்திக் கொள்கிறேன்.
//எனக்கும் இஸ்லாம் மேல் சில விமர்சனங்கள் உண்டு.வேறு சூழ்நிலையில் வேறு பதிவில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.//
கண்டிப்பாக! அது தான் சரியான முறையும் கூட. உங்களின் விமர்சனங்களைக் குறித்து கண்டிப்பாக நாம் விவாதிக்கலாம் சகோதரரே!
//(சில வரிகளை நீக்கி கொள்ளட்டுமா?)//
சகோதரரே! உங்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு எழுதவில்லை. என் பின்னூட்டத்தில் இப்பதிவில் வைக்கப் பட்ட கருத்துக்களுக்கு மாற்றமாக ஏதாவது இருப்பின் அதனை மட்டுறுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. என் பின்னூட்டமே தேவையில்லை என நீங்கள் கருதினால் தாராளமாக அதனை எடுத்து விடுங்கள். சகோதரர் சுகுமாரன் அவர்கள் இஸ்லாத்தினைக் குறித்து இல்லாததை எழுதியது என்னை வருத்தமடைய செய்ததால் தான் ஒரு விளக்கமாக பின்னூட்டம் இட்டேன். நான் கருத்து கூறிய முறை சில வேளை சரியில்லாமல் இருக்கலாம். அது என் சிந்தனை தவறல்ல. யாரையும் மன வேதனைப் படுத்த வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு எழுதவில்லை. நான் எழுதிய முறை சரியில்லை என நீங்கள் கருதினால் தாராளமாக நீங்கள் விரும்பியதை நீக்கிக் கொள்ளுங்கள்.
அன்புடன்
இறை நேசன்.
இந்தக் கடவுள் மறுப்பு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இது ஓன்றும் புதியது அல்ல. பெரியார் முதலில் கண்டு பிடிக்கவும் இல்லை.நான் பெரியாரைப் படித்தது இல்லை. ஆனால் என் சின்ன வயதில் நாங்கள் ஏதாவது பூச்சி கடி என்றாலோ அல்லது வேறு காரணங்களினால் சாப்பாடு சரியில்லை என்றாலோ நாங்கள் போவது அப்போது "உருளைக்கிழ்ங்கு சாயபு" என்று அழைக்கப் பட்ட ஒரு முஸல்மானிடம் தான். மதுரை மார்க்கெட்டில் அவர் கடையில் எப்போதும் தாய்மார்கள் கூட்டம் இருக்கும். கையில் குழந்தையுடன். மேலும் நான் ராஜஸ்தானில் இருந்த சமயமும், குஜராத்தில் லிருந்த சமயமும் அங்கிருந்த அஜ்மேர் தர்காவிற்கும், (குஜராத்) ஹாஜ்பீர் தர்காவிற்கும் சென்று chaddar போட்டு விட்டு வந்திருக்கிறோம். ஆகவே இறை நம்பிக்கை என்பது அவர் அவர் மனதும் வாழ்க்கைச் சூழ்நிலையையும் பொறுத்து உள்ளது. வேளாங்கண்ணி கோவிலுக்கும் கூடப் போய் பிரார்த்தனை நிறைவேற்றி உள்ளோம்.இதில் எங்களுக்குச் சொல்வதில் எந்த விதமான தடையும் இல்லை. தற்சமயம் 82 வயது ஆகும் என் மாமியார் கூட அங்கெல்லாம் வந்துள்ளார்கள்.
nanri geetha sambasivam...
கீதா சாம்பசிவம்,
" நாங்கள் போவது அப்போது "உருளைக்கிழ்ங்கு சாயபு" என்று அழைக்கப் பட்ட ஒரு முஸல்மானிடம் தான். மதுரை மார்க்கெட்டில் ..."
- அடடே! நம்ம தெற்குவாசல் மார்க்கெட்டுல நம்ம உ.கி.பாய் அப்டின்னு சொல்லுங்க...என்னங்க ரொம்ப பக்கத்தில இருந்திருக்கீங்க..மார்க்கெட்டுக்கு கிழக்குப் பக்கம் உள்ள போஸ்ட் ஆஃபீஸ் தெரியுங்களா?
Post a Comment