Monday, April 03, 2006

கலைஞருக்கு சில டிப்ஸ் - பாகம் 2

நம்முடைய கலைஞருக்கு சில டிப்ஸ் முதலாம் பாகத்தில் பொதுவாக அரசியல் சூழ்நிலைகளில் கலைஞர் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தோம். இப்பொது தேர்தல் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தேர்தல் வியூகத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட கலைஞர் திராவிட அரசியலையும் சில ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி பிடிப்பார் என்ற எண்ணத்திலேயே கலைஞருக்கு இந்த விதமாக டிப்ஸ்களை நாம் கொடுக்க வேண்டி உள்ளது.மற்றபடி கலைஞர் வென்றால் எங்கள் வீட்டுக்கு கலர் டிவி வர போவதில்லை.ஏற்கனவே எங்கள் வீட்டில் கலர் டிவி உள்ளது.மேலும் தி.மு.க கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி வர வாய்ப்பு உள்ளது. அதையும் ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.

இப்போது கலைஞருக்கு வீக்னெஸ் பாயிண்ட் ஒன்றே ஒன்றுதான்.அது நமது வலைபதிவுலகில் பலரும் அலசியுள்ளபடி சன் டிவியும் மாறன் குடும்பமும் தான்.இதை எப்படி தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவது என்று இப்போது பார்ப்போம்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறனை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட வேண்டும்.காரணங்கள் ஆயிரம் கூறிக்கொள்ளலாம். வைகோவை சன் டிவி காட்டாததை தயாநிதி மாறனும் கலைஞரும் தட்டி கேட்டதாகவும் அதனால் கலாநிதி மாறன் கோபமடைந்ததாகவும் கூறி விடலாம். ஏற்கனவே விஜயகாந்திடம் சன் டிவி தன் சொல்பேச்சு கேட்பதிலலை என்று கலைஞர் அங்கலாய்த்ததை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

தயாநிதி மாறன் எப்போதும் அணியும் சூட் கோட்டை விட்டுவிட்டு சாதாரண சட்டை, அழுக்கேறிய பழுப்பு வேட்டி அணிந்து வந்தால் சினிமாவை நேர் வாழ்க்கையில் எப்போதும் பார்க்க விரும்பும் தங்க தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். கலைஞர் நீதி கேட்க சென்றபோது கலாநிதி மாறன் கலைஞரை பிடித்து தள்ளிவிட்டதாக கூறினால் இன்னும் நல்ல எஃபக்ட் இருக்கும்.


தேவை ஏற்பட்டால் டிப்ஸ்கள் தொடரும்.

18 comments:

Anonymous said...

நல்ல ஆலோசனை,

அனைவரும் இந்த தகவலை தந்திமுலம் கலைஞருக்கு சொல்லிவிடலாம்.

பட்டணத்து ராசா said...

//கலைஞர் திராவிட அரசியலையும் சில ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி பிடிப்பார் //

எப்படின்னு கொஞ்ம் விரிவா எழுதுங்க முத்து

Muthu said...

PATTANATHU RASA,

PLS READ FIRST PART OF TIPS TO KALAIGNAR...YOU WILL GET FEW ANSWERS

சந்திப்பு said...

இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட கலைஞர் திராவிட அரசியலையும் சில ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி பிடிப்பார் என்ற எண்ணத்திலேயே கலைஞருக்கு இந்த விதமாக டிப்ஸ்களை நாம் கொடுக்க வேண்டி உள்ளது.

அப்படியா! ((((((.....

திராவிட அரசியலா? அப்படின்னா....

முத்து குழப்பத்துல இருக்கேன் சற்று விளக்குங்கள்...

Muthu said...

சந்திப்பு,

தோழர்களுக்கு திராவிட கொள்கைகளை உள்வாங்கி கொள்வதில் சில பிரச்சினைகள் உள்ளன். (தோழர்களின் சில கொள்கைகளை திராவிட தலைவர்கள் ஹைஜாக் செய்துவிட்டதும் இதற்கு காரணம்).தோழர்களுக்கு சூழ்நிலையை பொறுத்து சில எம்எல்ஏ மற்றும எம்பி சீட் போதும்.மற்றவைப்பற்றி பெரிதாக கவலைப்படுவது இல்லை என்றே நினைக்கிறேன்.

ஜனநாயக உணர்வு, ஆர்ய ஆதிக்கம் முயற்சி ஆகியவற்றில் கலைஞர் அம்மாவை விட பரவாயில்லை. முதல் பாகத்தையும் படிக்கவும்.

ஜோ/Joe said...

//திராவிட அரசியலா? அப்படின்னா....//
திராவிட அரசியலில் யார் பரவாயில்லை என்பதை திராவிட-எதிர்ப்பு அரசியல் சார்புடையவர்கள் யார் மேல் அதிகம் வன்மம் கொண்டுள்ளார்கள் என்பதிலிருந்து அறியலாம் .ஜெயேந்திரரை ஆதரிக்கும் பலரும் கூட ஜெயேந்திரரை ஜெயிலில் போட்ட பிறகும் கூட ஜெயலலிதாவின் மீது கரிசனம் காட்டுவதிலும் ,அதற்கும் கலைஞரை கரித்துக் கொட்டுவதிலிருந்தும் இதை புரிந்து கொள்ளலாம் ..புரியாத மாதிரி நடிப்பவர்கள் ..ஐயகோ..உங்கள் அப்பாவித் தனத்தையெல்லாம் நாங்கள் நம்பும் காலம் மலையேறிவிட்டது சாமிகளா.

சந்திப்பு said...

தோழர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து சில எம்.எல்.ஏ. மற்றும் சில எம்.பி. சீட்டுக்கள் போதும். ஆம்! மிகச் சரியா குறிப்பிட்டுள்ளீர்கள் முத்து.

தோழர்களுக்கு எப்போதும் நிகழ்கால அரசியல் சூழலும், எந்த எதிரியை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுகிறார்களோ, அவரை வீழ்த்தினால் போதும். அதனால்தான் திராவிட கொழுந்து கருணாநிதி (பார்ப்பனர், பார்ப்பனீம், ஆரிய ஆதிக்க முயற்சி, அண்ணாவின் ஆரிய மாயை) இவற்றையெல்லாம் உள்வாங்கி - திராவிடத்தை உயர்த்திப் பிடிப்பவர் பா.ஜ.க.வோடு (சாரி! முழு பார்ப்பனீயத்தோடு) கட்டி, ஆரத் தழுவியபோது, பா.ஜ.க.வையும், அவர்களை வலுப்படுத்துபவர்களை வீழ்த்த வேண்டும் என்று 2001 தேர்தலில் ஜெயலலிதாவோடு தொகுதி உடன்பாடு கண்டு, நீங்கள் வெறுக்கும் பார்ப்பனித்தின் கால்களை ஒடித்தனர். அப்போதைய அரசியல் சூழலில் தோழர்களுக்கு 8 சீட்டா, 13 சீட்டா என்பதை விட மக்கள் நலன், தேச நலன், அரசியல் நலன் முக்கியமாக பட்டது.
இப்போதும் அப்படித்தான் ஜெயலலிதாவை வீழ்த்தவேண்டும் என்பதற்காக தோழர்கள் மிக குறைந்த சீட்டுக்களை ஏற்றுக் கொண்டு அரசியல் உறுதியோடு நிற்கின்றனர். திராவிட மறுமலர்ச்சி, அண்ணாவின் அரசியல் வாரிசு என்றெல்லாம் பீற்றிக் கொண்ட திராவிட தலைவர் வைகோவைப்போல் ஒரு சீட்டுக்காக ஓடி அம்மாவின் மடியில் தவழ்ந்து கிடக்கவில்லை. (இதை திராவிட இயக்கத்தின் பரிணாமம் என்று கொள்ளலாமா? முத்து)

ஜனநாயக உணர்வு என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள்? கருணாநிதி ஆட்சிக்காலத்திலும், அம்மா ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டுதான் வந்தது. தொழிற்சங்க ஜனநாயக போராட்டத்தை ஒடுக்குவதில் இரண்டு பேரும் ஒரே நிலையில்தான் இருக்கின்றனர். அம்மாவுக்கு அரசு ஊழியர் என்றால், அய்யாவுக்கு நெல்லை தாமிரபரணி. ஜனநாயகம் என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள்!

தங்களது முதல் பாகத்தையும் படித்து என்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளேன் என்பதையும் சுட்ட விழைகிறேன்.

சந்திப்பு said...

ஜோ! கர்நாடகம் நமக்கு தண்ணி காட்டும்போது, கருணாநிதி என்ன கூறுவார் தெரியுமா? கருநாடக வெறியர்கள் என்று கூறுவார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மலையாளிகளுக்கு எதிராப பேசுவார். இதுவெல்லாம் வரலாறு! வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. இதையெல்லாம் நான் கற்பனையில் பேசவில்லை நடந்ததை சுட்டிக்காட்டுகிறேன். அதற்காக எனக்கு ஜெயலலிதா மீதோ, இதர திராவிட இயக்கங்கள் மீதோ கரிசனம் என்று நினைத்து விடாதீர்கள். இங்கே திராவிடம் என்பது ஒரு சொல். அவ்வளவுத்தான். அதற்குமேல் வியாக்கியானம் நடைமுறைக்கு ஒத்துவராத வரலாற்றுப் போக்குகள்.

ஜோ எங்கள் அப்பாவித்தனத்தை நீங்கள் நம்பவே வேண்டாம். ஆனால் திராவிடம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டுள்ள உங்கள் அப்பாவித்தனத்தை நினைக்கும் போதுதான், உண்மையிலேயே கண்ணீர் வருகிறது.

Muthu said...

சந்திப்பு,
தோழர்கள் சமரசம் செய்தால் அது வரலாற்று முடிவு என்றும் மற்றவர்கள் சமரசம் செய்தால் வரலாற்று பிறழ்வு என்றும் முத்திரை குத்துவதை என்று விடுவீர்கள்?

நிகழ்கால அரசியல் எதிரி என்ற கருத்து எல்லாம் (ஜல்லியடிப்பு) எல்லாருக்கும் உண்டு என்பதை ஏன் புரிந்துகொள்ளவில்லை?(பா.ஜ.க வோடு சேர்ந்ததை எல்லாம் இதோடுதான் பொருத்தி பார்க்க வேண்டும்)


வரலாற்றில் பி.ஜே.பியுடன் தொகுதி உடன்பாடு தோழர்கள் வைத்த காலம் உள்ளதாக எனக்கு நினைவு.


மிககுறைந்த சீட்டை ஒத்துக்கொண்டு என்பதெல்லாம் சும்மா.காலத்தின் கட்டாயம்.தங்களின் பலம் தெரியும் அவர்களுக்கு. தி,மு.க ஏன் 130 தொகுதி மட்டும் போட்டியிடுகிறது.அதுவும் காலத்தின் கட்டாயம்தான்.


வைகோ வை தூக்கி சுமக்க வேண்டியது என் வேலை இல்லை சந்திப்பு.


இரண்டில் யார் பரவாயில்லை என்ற அடிப்படையில் தான் இந்த கருத்துக்கள் வருகின்றன்.perfect gentleman என்று யாரும் இல்லை அய்யா.


திராவிடம் என்பது உங்களுக்கு ஒரு சொல்தான் தமிழ்நாட்டில்.ஆனால் வரலாற்றை திருத்தி எழுதுபவர்களை கண்டிக்கும இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் அதே கருத்தா என்று கேட்டு சொல்லுங்கள்.

ஜோ/Joe said...

//உண்மையிலேயே கண்ணீர் வருகிறது.//
எனக்காக கண்ணீர் வடிக்கும் உங்கள் பாசத்துக்கு நன்றி!

சந்திப்பு said...

(வரலாற்றில் பி.ஜே.பியுடன் தொகுதி உடன்பாடு தோழர்கள் வைத்த காலம் உள்ளதாக எனக்கு நினைவு)

----------------------------------
எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடோ, ஜனசங்கத்தோடோ கூட்டோ, தொகுதி உடன்பாடோ வைத்துக் கொண்டதில்லை. தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவும். சங்பரிவார பாசிசம் வேறறுக்கவேண்டிய ஒன்று.
----------------------------------

(இரண்டில் யார் பரவாயில்லை என்ற அடிப்படையில் தான் இந்த கருத்துக்கள் வருகின்றன்.perfect gentleman என்று யாரும் இல்லை அய்யா.)

----------------------------------
இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
----------------------------------

(திராவிடம் என்பது உங்களுக்கு ஒரு சொல்தான் தமிழ்நாட்டில்.ஆனால் வரலாற்றை திருத்தி எழுதுபவர்களை கண்டிக்கும இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் அதே கருத்தா என்று கேட்டு சொல்லுங்கள்.)

----------------------------------
திராவிடமும், ஆரியமும் கற்பனையானதே! இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
----------------------------------

Muthu said...

Janatha Dal fought elections in 1989, alongside BJP and the Communist parties...இதுபோதுமா..இன்னும் வேணுமா...வி.பி.சிங் ஆட்சி வந்தது எப்படிங்க?

iam searching for more details

//இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.//

இந்த கருத்தை யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.அல்லது குறைந்தபட்சம் நான் ஒத்துக்கொள்ளவில்லை.

//திராவிடமும், ஆரியமும் கற்பனையானதே! இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.//

இடது சாரி வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி என்ன கூறுகிறார்கள் என்று சுருக்கமாகவோ அல்லது விளக்கமாக உங்கள் பதிவிலோ எழுதும்படி வேண்டுகிறேன்.

தருமி said...

"ஜெயேந்திரரை ஆதரிக்கும் பலரும் கூட ஜெயேந்திரரை ஜெயிலில் போட்ட பிறகும் கூட ஜெயலலிதாவின் மீது கரிசனம் காட்டுவதிலும்..."// இது எப்படி, ஏன் ஜோ?

சந்திப்பு said...

(Janatha Dal fought elections in 1989, alongside BJP and the Communist parties...இதுபோதுமா..இன்னும் வேணுமா...வி.பி.சிங் ஆட்சி வந்தது எப்படிங்க?)

-----------------------------------
முத்து 1989ல் அமைந்த வி.பி. சிங் அரசை இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரித்தார்கள். அதே அரசை பா.ஜ.க.வும் ஆதரித்தது. அவ்வளவுத்தான். மற்றபடி பா.ஜ.க.வோடு எந்தவிதமான பேச்சுவார்த்தையோ, அல்லது கூட்டு மந்திரி சபையிலோ இடதுசாரிகள் இடம் பெறவில்லை. அதனால்தான் வி.பி. சிங் மண்டல் கமிஷனை கொண்டு வந்தபோது பா.ஜ.க. காலை வாரிவிட்டு - கவிழ்த்து விட்டது.

இதை இன்னும் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆதாயம் தரும் பதவி குறித்து தற்போதைய யூ.பி.ஏ. அரசு மத்தியில் சட்டம் கொண்டு வரப்போகிறது. இதை இடதுசாரிகளும் ஆதரிக்கின்றனர். பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அதற்காக இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து விட்டார்கள் என்று அர்த்தமாகி விடுமா?

கூட்டு அல்லது தொகுதி உடன்பாடு என்றால் இரண்டு கட்சிகளும் சம்மதித்து கையொழுத்துப் போடும் ஒரு ஒப்பந்தம். இந்த அடிப்படையில் நிரந்தர அரசியல் எதிரியான பா.ஜ.க.வோடு இடதுசாரிகளுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை.
-----------------------------------

Muthu said...

89 தேர்தலில் போட்டியிடும்போது தொகுதி உடன்பாடு கூட எந்த மாநிலத்திலும் இல்லை என்கிறீர்களா? அப்படியானால் சரிதான்.

கருப்பு said...

ஐடியா ஐய்யாச்சாமி முத்து,

தங்கள் யோசனைகள் நன்று. எல்லா கட்சிகளுக்கும் விரிவு படுத்தவும்.

கருப்பு said...

ஐடியா ஐய்யாச்சாமி முத்து,

தங்கள் யோசனைகள் நன்று. எல்லா கட்சிகளுக்கும் விரிவு படுத்தவும்.

முத்துகுமரன் said...

//இங்கே திராவிடம் என்பது ஒரு சொல். அவ்வளவுத்தான். அதற்குமேல் வியாக்கியானம் நடைமுறைக்கு ஒத்துவராத வரலாற்றுப் போக்குகள்.//

பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் இப்படி சொல்லுவதுதான் வியப்பாக இருக்கிறது.

திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல.அது அடிமைத்தனத்திற்கு எதிராக முளைத்த விதை. சமதர்மத்தை வலியுறுத்த எடுக்கப்பட்ட ஆயுதம்.

பாட்டளி வர்க்கப்போராட்டதின் இந்தியாச் சூழலின் காரணிகளை புரிந்தவர்கள் இப்படி பேசமாட்டார்கள்
அடக்குமுறைக்காக எதிர்த்து குரல் கொடுப்பதை சித்தாந்தமாக கொண்டவர்கள் இந்த விசயத்தில் மிகச்சாதுர்யமாக நகர்ந்து கொள்கிறார்கள் பல வியாக்கணங்கள் சொல்லிக்கொண்டு.

எல்லாம் நேரம்... என்ன செய்வது... தோழமை முரண்களோடுதான் பயணிக்க வேண்டி இருக்கிறது.