நீங்கள் சந்தேகம் என்று கூறிவிட்டதால் மட்டும் எனக்கு தெரிந்த சில விஷயங்களை போட்டுடைக்கிறேன்.இவ்விடமும் அதே பவ்யம்தான் உஷா:))
இந்து என்ற வார்த்தையை பற்றி:நீங்கள் இங்கு கருத்தை விட்டுவிட்டு பெயரை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவதை போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. இந்து என்ற பெயரை மட்டும் சொல்கிறீர்களா அல்லது இந்து மதம் என்றால் என்ன என்பதைப்பற்றி சொல்கிறீர்களா என்பதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது.இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.ஆங்கிலேயனை எல்லாம் நாம் இதில இழுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.
முஸ்லீம்களில் இருந்தும் கிறிஸ்தவர்களில் இருந்தும், மற்ற பல கடவுள்களை வழிபடும் ஆட்களை ஆங்கிலேயர் இந்த பெயரில் பொதுமைப்படுத்தி இருக்கலாம்.ஆனால் இந்த மக்கள் அனைவரும் பின்பற்றுவது உண்மையில் வேதங்களில் சொல்லப்படும் இந்து மதமா என்பதுதான் முக்கியமான கேள்வி.இது மிகவும் அடிப்படையான விஷயம்.
இதை புரிந்துககொள்ளாமல பலபேர் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டிருப்பதாக தெரிகிறது(நெத்தியடி) இதை எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன?இதை முதலில் தெளிவுப்படுத்திவிட்டு மற்ற விஷயங்களை பேசுவதுதான் முறை.நியாயம்.
புண்ணிய யாத்திரை சமாச்சாரத்தையும் நாம் "நடுநிலைமைவியாதியாக" (கொத்ஸ் கவனிக்க)இருந்து கட்டுடைத்து பார்த்தால் நாட்டார் தெய்வங்கள் எனப்படுவதை வணஙகி வாழ்ந்துவரும் இந்த நாட்டின் பெரும்பான்மையான இனத்தின் மக்கள் காசிக்கு சென்றார்களா? அல்லது ராமேஸ்வரத்திற்கு வந்தார்களா? கேள்வி ஆழமானது.
மற்ற கோவில்களை பற்றியும் தெய்வங்களையும் பற்றியும் நீங்கள் சொல்வது எலலாம் வரலாற்றில் தெளிவாக இருக்கிறது.சங்கரர் மீட்டெழுப்பிய இந்துமதத்தை பற்றிய வரலாற்றை படிக்கவும்.
புத்தமதம் ஆரம்பத்தில் எப்படி இருந்தது? அதை யார் எப்படி எதற்காக ஒழித்துகட்டினார்கள் என்பதையும் வரலாற்றில் தெளிவாகவும் தர்க்கபூர்வமாகவும் பலபேர் எழுதிவிட்டனர்.படியுங்கள்.
கல்யாண சடங்குகள் மட்டும் அல்ல.எல்லா சடங்குகளும் அருகில் உள்ள மக்களுடன் சில விஷயங்களில் ஒத்திருக்கும்.இது சாதாரண விஷயம்.மேலும் நீங்கள் சொல்லும் பல சமூக சடங்குகள் எங்கள் சாதியிலும் இன்னும் பல சாதிகளிலும் இல்லை.இப்போது மெதுவாக உள்ளே வருகின்றனவா என்று எனக்கு தெரியவில்லை.
பலமுறை சொன்னதுதான்.பலபேர் கரடியாக கத்தியதுதான்.மீண்டு்ம் கரடியாக மாறி கத்துகிறேன்.இந்து மதம் என்று நீங்கள் முன்னிறுத்துவது ஒன்று. ஆனால் பெரும்பான்மையோர் பின்பற்றி வந்தது வேறு.இதை புரிந்தும் புரியாமல் நீங்கள் பேசினால் இந்த வியாதிக்கு மருந்து இல்லை.
ஒரு பழமொழியை தமிழ்கூறுநல்லுலகத்தின் அனுமதியுடன் மாற்றுகிறேன்.
உண்மை சுடும் என்பது பொய். நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மை மட்டும்தான் சுடும்.
Sunday, April 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//(கொஞ்ச நாளைக்கு நான் லீவு.//
just for fun:-))
e-kalappai veettula illathathanala, englipish typing.
Sridhar
சிங்கத்தை எழுப்பறாங்களே sridhar..iam posting another also..sorry sridhar i cannot help it...
//ஆனால் இந்த மக்கள் அனைவரும் பின்பற்றுவது உண்மையில் வேதங்களில் சொல்லப்படும் இந்து மதமா என்பதுதான் முக்கியமான கேள்வி.இது மிகவும் அடிப்படையான விஷயம்.//
முத்து, சத்தியமாய் தெரிந்துக்கொள்ளவே இக்கேள்வியை எழுப்பினேன். இந்து என்பது நான் பிறந்த மதம் என்று எனக்கு சொல்லப்பட்டது. அதில் உள்ள குறைகள் மிக தெளிவாய் எனக்கு தெரியும். ஆனால் மதம் என்பதையே தள்ளி வைக்கும் எனக்கு
இதை விடவும் உயர்ந்தது உள்ளது என்பதிலும் நம்பிக்கையில்லை, உலகில் இன்று நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மதமே காரணமாய் உள்ளது என்றும் நினைக்கிறேன்.
இந்த மக்கள் அனைவரும் பின்பற்றுவது உண்மையில் வேதங்களில் சொல்லப்ப்டும் இந்து மதமா என்பதுதான் முக்கியமான கேள்வி. எங்கோ நமக்கு சம்மந்தமில்லாதவர்கள், அவர்கள் மொழியில் உருவாக்கிய வேதம்/ மனு நீதிகள் இன்றும் நம் சமூகத்தில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் அது காரணம் என்றால், அவைகளை ஏன் பிடித்து தொங்க வேண்டும்? ஆக அப்படி தொங்குபவர்களுக்கு ஏதோ லாபம்
உள்ளது என்றுதானே பொருள்?
நாட்டர் தெய்வங்கள் போல உள்ளூர் தெய்வங்கள்/ சிறு தெய்வங்கள் அனைத்து இந்து உட்பிரிவுகளிலும் உண்டு. மூன்று மாதங்கள்
மாட்டு வண்டியில் பயணித்து காசி யாத்திரை செல்வது பணப்படைத்தவர்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது. பல பிரிவினர்களின்
மடங்கள் காசியில் உள்ளது. சடங்குகளில் இருக்கும் ஒற்றுமை என்பது உட்பிரிவில் மட்டுமே.
"உண்மை சுடும், ஆனால் அது உண்மை என்று தெரியும்வரும் குளிர்ச்சியாகவே இருக்கும்"
காமகோடி படிக்காமலேயே இந்து என்பது அவர்கள் குறிப்பிடும் மதத்திற்கு உரிய பெயர் அல்ல என்பதை அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் இந்து மதம் என்று கூறி நிறுவனப்படுத்துதலில் இறங்கி, அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றுவிட்டனர். இந்து என்ற பெயரை (அது அந்நிய நாட்டவரால் வைக்கப்பட்டது என்பதனால் அதை) நீக்கிவிட்டு அல்லது மறந்துவிட்டு வடஇந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வழிபாட்டு ஒற்றுமைகளை ஆராய்ந்தால் இது நன்றாகவே விளங்கும். இந்த ஆய்வில் சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வருகைக்கு முன் உள்ள வழிபாட்டை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவைக்குப்பின் தமிழர்களின் உடை மற்றும் வழிபாட்டு முறைகளில் நிறையவே மாற்றங்கள் நிகழந்துள்ளன.
well said usha...நாம் பல புள்ளிகளில் ஒரே மாதிரியான கருத்துக்களை வைததுள்ளோம்...இதை பாஸிடிவ்வாகவே விவாதிப்போம்...
நான் உங்கள் நோக்கத்தை குற்றம் சொல்லவில்லை.நன்றி..
இன்று பெரும்பான்மையாகவும் பிற்படுத்தப்பட்டும் உள்ள எந்த சாதி மாட்டுவண்டியில் (அதுவும் மூன்றே மாதத்தில் காசிக்கு) சென்றது என்று சொல்லுங்கள்.(ஒரு தகவலுக்காகத்தான் கேட்கிறேன்.எனக்கு தெரியாதததால் தான் கேட்கிறேன்).
இவர்களில் எந்தந்த பிரிவினரின் மடம் காசியில் உண்டு.(இதுவும் என் அறியாமையை நீக்கும்)
மற்றபடி சாதியை பற்றி பேசவேண்டாம் என்று தடை போட்டுவிட்டீர்கள்.ஆகவே நான் பேசவில்லை.ஆனால் அதை பேசாமல் இதை எப்படி பேசுவது என்றும் எனக்கு புரியவில்லை.
Ayya/Amma....
Ethani ramasamy vanthalum, ethanai karunanithi thirudan enru thittinalum...Ethanai bloggers vendum endru pozhu pogamal ezhunalam inru kovilkalil kootam athikarithu irukkirethe..... Ithuthan Hinduism... Tamilan enpathu mozhin adaiyalam... Dravidan enral tamilan mattumalla... Neengal dravidan-tamilan endra kurukia vattathukkul kuthirai ootukireerkal...
Hindu mathathudan thamizh - i pottruvom.... Naikal irunthal koraikkathan seyyum....
முதலில் ஒன்றைத் தெளிவாகப் புடிந்து கொள்ளுங்கள். இந்து என்ற ஒரு மதமோ நம்பிக்கையோ வேதத்தின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடவில்லை. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் ஒரு தர்மம் இத்தனை விவாதத்துக்கு உள்ளாவது ஒன்றே போதும் அதில் எத்தனை சுதந்திரம் உள்ளது என்று. நான் பத்ரிநாத் வரைப் பிரயாணம் செய்து உள்ளேன். நகரத்தார் சமூகத்தினரால் கட்டப் பட்ட மிகப் பழமை வாய்ந்த பல சத்திரங்களைக் கண்டிருக்கிறேன். அதேபோல இங்கும் குஜராத்தியருக்கான, ராஜஸ்தானியருக்கான பல சத்திரங்கள் ராமேஸ்வரத்திலும் இன்னும் பல யாத்திரை ஸ்தானங்களிலும் உண்டு. எல்லாக் காலத்திலும் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இந்தக் காலத்திலும் கூட எத்தனை பேர் வெளி நாட்டில் குடியுரிமை பெற்று வசிக்கிறார்கள்.அவர்கள் எல்லாரும் இந்தியர் என்ற பெயரில் தான் அழைக்கப் படுவார்கள். ஆதலால் இந்திய மக்களால் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு தர்மம் இந்து மதம் என்று வெளிநாட்டாரால் அழைக்கப் பட்டு அறியப் படுகிறது. இதை நீங்கள் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
முத்து காசியில் வைசியர்களுக்கான மடம் உட்பட பார்த்ததாய் ஞாபகம். அப்பொழுது எல்லாம் பதிவு எழுதுவேன் என்று தெரியாததால் சரியாய் நினைவுக் கொள்ள முடியவில்லை :-) ஞானவெட்டியான் ஐயா , குமரன் போன்றவர்கள் சொல்ல வேண்டும். மற்றப்படி கேள்வி அதேதான்.
திரு.வெங்காயம், காமகோடி படிக்காத.. என்று சொல்லும்பொழுது .என்னை குற்றம் சாட்டுகிறார் என்று தோன்றுகிறது. ஐயா என் பதிவில் நட்சத்திர குத்து கிடையாது. என்னுடைய பதிவு சிறந்த பதிவு என்ற பெருமை எல்லாம் படும் விருப்பமில்லை. ஆக வெற்றி என்று எதை சொல்லுகிறீர்கள்? என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன். ஆக்கப்பூர்வமாய் பதிலளித்தால் மகிழ்வேன். இல்லை என்றால் ஹீம்! அதுவும் பழகிவிட்டது. நன்றி
I belong to Nattukkottai Chettiar (Nagarathar) caste. We have a chathiram (Madam) in Kasi and several north indian cities. Just to clarify your question with Usha
தெய்வா,
தகவலுக்கு மிக்க நன்றி....
உங்கள் நகரத்தார் தமிழ்நாட்டில் எத்தனை பேர்? (ஒரு கோடி என்று எல்லார் போலவும் சொல்லிவிடாதீர்கள்.இங்கு பலர் ஹார்ட் பேஷண்ட்ஸ்)
நீங்கள் பின்தங்கிய வகுப்பா ? (எனக்கு தெரியாமல் தான் கேட்கிறென்)
உஷா,
சொல்லுங்கள்..இன்னும் நிறைய இருப்பார்கள்...வைசியர், நகரத்தார் ரெண்டு தான் எனக்கு கிடைத்துள்ளது.இன்னும் இவர்கள் எத்தனை பேர் நாட்டில் இருக்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்...
வெங்காயத்தின் பதிலுக்கு ஓவர்ரியாக்சன் கொடுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கீதா சாம்பசிவம் என்ன சொல்லுகிறார் என்றெ இந்த மரமண்டைக்கு புரியவில்லை. மன்னித்துகொள்ளுங்கள் கீதா சாம்பசிவம்.
அனானியின் அறிவுபூர்வமான அனானி கருத்துக்கு நன்றி
பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளிலேயே கூட, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் இட ஒதுக்கீட்டு க்யூவில் நின்றால் அது பிச்சைதான். சாதாரண பிச்சை அல்ல. வேஷம் போட்டுத்திருடும் நீசப்பிச்சை.
பிரபலமான காசிமடம் (திருப்பணந்தாள் ஆதினம்) வேளாளருக்குச் சொந்தமானது. முத்துக்குமாரசாமித் தம்பிரானைச் சந்தித்து என்னென்ன சாதியினர் அங்கே போய்வந்திருக்கிறார்கள் என்று விவரம் கேளுங்கள். பெருந்தலைவர் கக்கன் தன் மகனுக்கு காசிவிசுவநாதன் (இவர் சென்னை நகர உதவி கமிசனர்) என்று காசிக்குப் போய் வந்தபின்தான் பெயர் வைத்தார். சந்தேகம் இருந்தால் அவரையே தொடர்பு கொண்டு கேளுங்கள்.
Muthu,
The number of particular caste is irrelevant to the question you have asked with Usha. Nagarathar's are very few in TamilNadu. Especially we are not a vote bank for any party or election. So you can guess how much it will be. I just supported Usha's answer that Hindus as a whole have same beliefs and customs all over india. Have you ever questioned Muslims pilgrimage to go to Mecca and Medhina from any part of the world? Always Hindu as a religion is abused by everybody because of the tolerance by Hindus
தெய்வா,
கோபம வந்து பிரயோஜனமில்லை..நான் சொன்னது எப்படி எல்லா மக்களும் ஒரு நல்ல காலை பொழுதில் இந்து ஆனார்கள் என்பது பற்றித்தான்.
பறையன்,சக்கிலி,பள்ளன்,தேவன்,கவுண்டன்,வன்னியன் எல்லாம் காசிக்கு போகவில்லையே..அதை பற்றி யோசியுங்கள்..
முஸ்லீம்களை பற்றி உங்கள் பதிவில் தாளியுங்கள்..யார் வேண்டாம் என்றார்கள்?
kakkan's son kasi viswanthan or kakkan himself went to kasi on 5th century bc or 1950's
sorry anony
If you think you have the right to criticize the hindus, why don't you criticize other religions publicly? Have you ever gone to Kasi to validate your theory that BC/SC communities never went to Kasi? Can you please kindly answer these questions.
காசிக்கு போவது என்பது அனைத்து இந்துக்களும் செய்வதல்ல.இந்துக்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது என்னவென்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை.
மற்ற மதங்களை விட வித்தியாசமாக ஒரு மதம்.தான் வழிபடும் கடவுளை போலவே எல்லையற்ற ஒரு மதம்.கடவுளை எந்த வரயறைக்குள்ளும் அடக்க முடியாததுபோல் இந்த மதத்தையும் எந்த வரயறைக்குள்ளும் அடைக்க முடியாது.
சட்டப்படி ஜனத்தொகை கணக்கெடுப்பு ரெகார்டில் உங்கள் மதம் இந்து என இருந்தால் நீங்கள் இந்து.அவ்வளவுதான்.மற்றபடி இந்து என்றால் யார் என்பதற்கு எந்த விரிவுரையும் கிடையாது.தமிழன் என்றால் யார்,தமிழ்கலாச்சாரம் என்றால் என்ன என்பதற்கும் எந்த விரிவுரையும் கிடையாது.அதனால் தமிழன் என ஒரு இனம் இல்லையென்று ஆகிவிடுமா?அதுபோல் தான் இந்துவும்.
இந்து என்றால் யார்,தமிழன் என்றால் யார் என்று சொல்ல முடியாமல் இருப்பது அந்த மதத்தின் குற்றமோ அல்லது இனத்தின் குற்றமோ அல்ல.மொழியின் குற்றம்.
ஒரே நாளில் இந்தியா முழுவதும் எப்படி இந்து ஆனது என்று கேட்டால் அப்படி ஆகவில்லை.
ஒரே நாளில் இந்து ஆயிருக்க முடியாது.ஆதி மனிதன் குரங்காக,காட்டுமிராண்டியாக இருந்தபோது அவனுக்கு மதம் இல்லை.அதன்பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மதங்கள் வளர்ந்தன.பல்வேறு மதங்கள் கலந்தன.எதோ ஒரு காலகட்டத்தில் இந்து மதம் மெதுவாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.அதற்கென ஸ்தாபகர்களோ,குறிப்பிட்ட வேதநூலோ கிடையாது.ஒரு மதத்துக்கு அப்படி இருந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.வரலாற்றுக்காலத்துக்கு முந்தையது என்பதால் அந்த மதத்தின் முழு வரலாறு நமக்கு தெரியவில்லை.
http://piditthathu.blogspot.com/2006/02/blog-post.html#
முத்து இதோ இளம் படைப்பாளிகளின் ஹைக்கூ நூலில் இருந்து நான் கொடுத்த சில கவிதைகள் இவ்விவாதத்திற்கு உதவலாம். அப்படியே அதில் விடுபட்டுப்போன இரு கவிதை இங்கே...
// நீ இந்து
நானுமா இந்து
அப்ப..வா! முனியப்பன் கோவிலுக்கு!//
//பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளிலேயே கூட, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் இட ஒதுக்கீட்டு க்யூவில் நின்றால் அது பிச்சைதான். சாதாரண பிச்சை அல்ல. வேஷம் போட்டுத்திருடும் நீசப்பிச்சை.//
அனானி,
நீச பிச்சை(?)...(ஓ.நோ)...நாங்க ஏற்கனவே நீச பாசை பேசறவங்க தானெ...
ஏன் இதை மட்டுறுத்தல் பண்ணவில்லை என்பதற்கு காரணம் ஆப்வியஸ்
தெய்வா,
திரிக்கவேண்டாம்..மே மாதம் முதல் வாரத்தில் உங்கள் மனம் மகிழும்வண்ணம் எழுதுவேன்...
மற்றபடி கடவுளை மறுத்து நான் எழுதியது எல்லா மதத்திற்கும் சேர்த்துதான் மேடம்..
யார் இப்போது காசிக்கு போகிறார்கள் என்று கேட்டு மீண்டும் திரிக்கவேண்டாம்...யார் காலம் காலமாக காசிக்கு போய்கொண்டுஇருந்தார்கள் என்பதுதான் இங்கு பேச்சு.புரியவில்லை என்றால் அமைதியாகவாவது இருக்கவும்.
பாலபாரதி,
கவிதை நன்றாக உள்ளது.நன்றி.
உஷா,
பழமொழியை நீங்கள் திருப்பி போட்டிருந்ததை நான் ரசித்தேன்.
ஆனால் அர்த்தம் மாறவில்லை என்பதை கவனித்தீர்களா?
இதை வைத்து ஒரு கவிதை எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.
selvan,
i agree with your views..
friends,
some the comments are moderated becos i feel those are not fit to be published
நீங்கள் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு இருப்பதால் நான் சொல்வது புரியவில்லை என்று கூறுகிறீர்கள். உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நான் சொன்ன அதே விஷயத்தை தெய்வாவும், செல்வனும் சொல்கிறார்கள். வாக்கியம் தான் மாறுபடுகிறது. ஆனால் இது மாதிரி எத்தனை பேர் சொன்னாலும் இந்து மதம் என்று நீங்கள் குறிப்பிடுவது அழியாது. எல்லாருக்கும் அவர் அவர் கிராமக் கோவிலின் காவல் தெய்வம் தான் குல தெய்வம். நீங்கள் குறிப்பிடும் கறுப்பு, பட்டாள அம்மன், முனியாண்டி, சுடலை மாடன் போன்றவர்களுக்குத்தான் எங்கள் வீட்டில் முதல் மரியாதை செய்கிறோம். கல்யாணம், குழந்தை பிறப்பு போன்றவற்றில் முதலில் குல தெய்வ வழிபாடுதான் இடம் பெறுகிறது. அதற்குப் பிறகு தான் நீங்கள் குறிப்பிடும் ஆரியக் கடவுள்கள் வருவார்கள். எனக்குத் தெரிந்து இன்று வரை எந்த ஆரியக் கடவுளும் அதற்காக சண்டை போடவில்லை. பேதம் பார்ப்பது நாம்தான்.
THANKS GEETHA SAMBASIVAM..
I AGREE WITH YOU TOO
உங்கள் மனம் எதனாலோ மிக மோசமாகக் காயப்பாட்டுப் போயிருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன். சரியோ தவறோ தெரியாது. ஆனால் அது உண்மை என்றால் அதற்கு எந்த விதத்திலும் நான் காரணம் என்றால் மன்னிக்கவும். உங்கள் மனக்காயம் ஆற எல்லாம் வல்ல அந்த இறைவனை உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.இனிமேல் வார்த்தைகளில் நிதானமாக இருக்கவும் முயற்சி செய்கிறேன்.
கீதா,
நீங்களும் காரணம் இல்லை என்று நான் எப்படி சொல்லுவேன்?
ஆனால் நான் புண்படவில்லை. பயப்படுகிறேன் என்றுதான் கூறிஉள்ளேன்.
எனக்காக ஆண்டவனை வேறு வேண்டுகிறேன் என்கிறீர்கள்.சிவ சிவா
ஏன் முத்து, உங்களுக்கு நடுநிலைமைவியாதி இல்லையா?
உங்கள் இன்னொரு பதிவில் நான் பின்னூட்டமாக இந்திய கடலோர மீனவர்கள் கடலையே தெய்வமாக கும்பிட்டவர்கள் எப்போது எப்படி கிறிஸ்தவர்கள் ஆனால் என கேட்டபோது புரியவில்லை என்றீர்கள்! இத்தனைக்கும் படையெடுப்பகளுக்கு/காலனி ஆதிக்கத்திற்கு பின்னர் தான் கிறிஸ்தவமும் இந்தியாவிற்குள் உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.
ஆனால் காலா காலமாக இங்கேயே வசித்தவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வணங்கியவர்கள் ஒரு அடையாளத்துக்காக இந்துக்கள் என அறியபட்டதை ஏன், எப்படி ஒரு நாளில், என மறுகேள்வி எழுப்புகிறீர்கள்!
வசித்திரம் தான்.
அன்பின் தயா,
நீங்கள் தெரிந்து கேட்கிறீர்களா? தெரியாமல் கேட்கிறீர்களா என்று எனக்கு புரியவில்லை.எனக்கும் உங்கள் வாதம் விசித்திரமாகத்தான் உள்ளது.
அடையாளத்துக்காக இந்து என்று வழங்கப்பட்டதை நான் எங்கே மறுத்தேன்? கச்சை கட்டுவதற்கு முன் சரியாக படிக்கவும்.
(அதாவது அண்ணே, இந்து மதம் என்றால் வேதங்களை அடிப்படையாக கொண்ட வைதீக மதம் என்பதைத்தான் நான் மறுத்தேன்.போதுமா)
கடற்கரையோர மதமாற்ற பிரச்சினை அந்த பதிவிற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமில்லாதது என்பதும் ஒரு காரணம்.
(பி.கு)
நான் நடுநிலைமைவியாதி இல்லை
//நான் சொன்னது எப்படி எல்லா மக்களும் ஒரு நல்ல காலை பொழுதில் இந்து ஆனார்கள் என்பது பற்றித்தான்.//
இது உஙகள் கேள்வி தானே!
பதிவுகள் சம்பந்தமில்லாதவை தான். ஆனால் உங்கள் கேள்வியால் தான் நான் அதை சொல்ல வேண்டியிருந்தது.
எனக்கு தோன்றுவது இது:
வேதங்களை நம்பியவர்கள் பின்னர் பிற நாட்டினர் ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரளவாவது இதை இந்திய மயமாக்கியிருக்கலாம். இது பின்னர் வழக்கம் போல அரசியல் கையில் சிக்கியிருக்கலாம்.
//நான் சொன்னது எப்படி எல்லா மக்களும் ஒரு நல்ல காலை பொழுதில் இந்து ஆனார்கள் என்பது பற்றித்தான்.//
இந்த விஷயத்தில் நான் சொன்னது உங்களுக்கு வேறு மாதிரி அர்த்தம் ஆகிஉள்ளது.ஐயாம் ஹெல்ப்லஸ்.அதாவது உங்களால் நான் அர்த்தப்படுத்தியதை உள்வாங்க முடியவில்லை என்கிறீர்கள்.
இதற்கு காரணம் உங்களுக்கு இருக்கும் முன்முடிவுகள்.
//வேதங்களை நம்பியவர்கள் பின்னர் பிற நாட்டினர் ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரளவாவது இதை இந்திய மயமாக்கியிருக்கலாம்//
இது சூப்பர்..பிறகு உங்களுக்கு தோன்றியது வரலாறு இல்லை.நடைமுறைகள் மற்றும் ஆதாரங்களை நாம் பார்க்கவேண்டி உள்ளது.
முத்து தயவுசெய்து இதனை அனுமதியுங்கள்
----------
சுவனப்பிரியனுக்கு ஒரு அழைப்பு
விவாதம் செய்ய என் பதிவுக்கு வாருங்கள்.
வாருங்கள் விவாதிப்போம். நீங்கள் எழுதிய பதிவில் என் பெயரை இழுத்திருப்பதாலேயே இந்த அழைப்பு
------
ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it..
இந்த காவல் தெய்வம் , அரசியல் பற்றி பதிவு போட ரொம்ப நாளாக
நேரம் தேடிகொண்டிருக்கிறேன்.
இந்து தர்மத்தை பின்பற்றும் அனைவரும் பூணூல் அணிகிறார்களா?
காசிக்கு போகும் நகரத்தார் அணிகிறார்களா என்ற கேள்வியை
மட்டும் இப்போதைக்கு கேட்க வேண்டியிருக்கிறது.
ஆதிரை,
இதையேத்தான் நானும் கேட்டேன்.கெட்டேன். ராகவன் இதையேத்தான் எழுதியுள்ளார்.உஷா போன்றவர்கள் இதை சரியான ஆங்கிளில் எடுத்துக்கொள்வார்கள்.மற்றவர்கள் என்றோ வாங்கிய அடியை மனதில் கொண்டு மற்ற பதிவுகளில் போய் உங்களைப்பற்றி பெயர் சொல்லாமல் எழுதுவார்கள்.
இதற்கெல்லாம் தயார் என்றால் இதைப்பற்றி ஒரு விளக்கமான பதிவு எழுதுங்களேன்.
முத்து, ஆதிரை,
யார் காசிக்குப் போனவர்களைக் குறிக்க "பண வசதி உடையவர்கள்" என்ற வரியில் சொல்லி
விட்டேன். இவர்களில் பூணூல் அணிபவர்களும் உண்டு. அணியாதவர்களும் உண்டு. மற்றவர்களுக்கு காசி உட்பட எங்கும் மடமோ, சத்திரமோ இல்லை. காரணம் அவர்களை சக மனித பிறவியாகவே
நாம் ( இங்கு பன்மை போடலாமா) மதிக்கவில்லை. அன்றாட பாடு தலை மேல் இருக்கும்பொழுது காசியாவது, சிதம்பரமாவது?
மீண்டும் பணவசதி உள்ளவர்கள் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.
பூணூல் மட்டுமே லாஜீக் என்று நானும் உளற விரும்பவில்லை. அவர்களுடைய வேர் ( ஆரிஜின்) எங்கே என்பதில் உள்ளது விஷயம்.
பன்மை போடுவதை ஓரளவு ஒத்துக்கொள்ளலாம்.
ஒரே நாளில் ஆதிசங்கரரோ, அல்லது அடக்கியாளவந்த ஆங்கிலேயரோ உருவாக்கவில்லை. அப்படி விடுவதும் இயலாத ஒன்று.
எல்லா நவீன மதங்களை எடுத்துக்கொண்டாலும், paganism ஒரு undercurrent-ஆக ஓடிக்கொண்டுதானிருக்கும். பின்னாளில் மதங்கள் complex ஆக ஆகியபின்னும் பேகனிஸத்தின் வெளிப்பாடாக சில சடங்குகள் சம்பிரதாயங்கள் மிஞ்சியிருக்கும். மிக எளிய உதாரணம்: circumcision. இது யூதர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாயச் சடங்காக வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுளுக்கும் ஆபிரஹாமுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்று நினைக்கிறேன். அதை பேகனிஸம் ஆக பார்க்க நமக்கு முடியவில்லை. நவீன மதங்களின் ஒரு வழக்கமாக ஏற்றுக்கொள்கிறோம். நவீன யூதர்களும் முஸ்லீம்களும் அது நாங்களில்லை என்று சொல்வதில்லை. ஏனென்றால் அப்படி பேகனிஸம் (பேகனிஸம் இல்லையென்றும் வேறு definition கொடுத்து மறுத்தாலும் :)) ) எங்கே முடிகிறது, நவீன மதம் எங்கே தொடங்குகிறது என்கிற வரைமுறை தெளிவாக இல்லாததால் இருக்கலாம். இதை பற்றி நாமும் அலட்டிக்கொள்வதில்லை. ஜெர்மானிய, ஸ்காண்டினேவிய, கெல்டிக் பேகனிஸம் வரலாற்று பிரசித்தி பெற்றது. அம்மாதிரி சடங்குகள் எப்படி நவீன கிறிஸ்துவ மதத்திலும் மற்ற மதங்களிலும் பரவியிருக்கிறது என்பதை அறிய எல்லாம் வல்ல கூகிளாண்டவர் துணைபுரியப் பிரார்த்திக்கிறேன்.
வெளிநாட்டில் நடந்திருக்கலாம். ஆனால அதேபோல் நம்நாட்டிலும் பலநூறு ஆண்டுகளாக இந்துமதமும் முதிர்ச்சியடைந்திருக்கலாம் என்பதை மட்டும் ஏனோ நம்ப கடினமாக இருக்கிறது, இல்லை? கிடாவெட்டி கொற்றவையைக் கும்பிட்ட சாமானியன் அத்வைதம் மற்றும் இன்னபிற (...fill up the blanks) அறிவுள்ளவற்றைப் பேசுவானா என்று நமக்கே சந்தேகம். நம்முன்னோரின் அறிவுத்திறன் மேல் அவ்வளவு நம்பிக்கை. கிடாவெட்டுபவன் இன்றும் இருக்கிறானே என்றால் அது பேகனிஸத்தின் வெளிப்பாடு. அத்வைதம் போன்றவை பின்னாளில் வளர்ந்த philosophical developments. இவையிரண்டும் mutually exclusive என்று கங்கணம் கட்டிக்கொண்டு விவாதித்தால் பயனென்ன? எல்லா மதங்களிலும் இதுதானே நடந்துள்ளது?
இப்படியெல்லாம் பேசினால் நான் தமிழனா? வரலாறுதான் தெரியுமா? என்று கேள்விகள் வருமென்பதால், கிடாவெட்டியது இந்துமதம் இல்லை. அதுவேறு தனித்திராவிட மதம். இப்போதிருப்பது வந்தவர்கள் (ஆரியர்கள் :), இரானியர் :)), ஆங்கிலேயர்:))) ) கொடுத்த அடையாளம்/பெயர்/இனம் என்று தோனி ஸ்டைலில் சூப்பர் சிக்ஸ் அடித்துவிட்டு அவுட் ஆகிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
சுகுமார்,
இதுதான் அது.அதுதான் இது என்பதல்ல பேசுபொருள். இரண்டும் உண்டு என்பதுதான் இங்கு பேசுபொருள்.கருத்துக்கு நன்றி.
Post a Comment