Thursday, April 06, 2006

கலைஞரை ஏன் ஆதரிக்கவேண்டி உள்ளது?

முதல் பாகம்


இரண்டாம் பாகம்


ஜெயலலிதா அத்வானி, வாஜ்பாய் ஆகியோர்களைவிட பழுத்த இந்துத்வாவாதி என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். கரசேவையை ஆதரித்தது முதற்கொண்டு அவரின் பல்வேறு நடவடிக்கைகள் அதை காட்டுகின்றன. இத்தனையும் மீறி ஜெயலலிதாவை சிறுபான்மை மக்கள் ஆதரித்தால் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.கருணாநிதி அதுபோல் ஏதாவது கருத்தை வெளியிட்டுள்ளாரா? நடந்துகொண்டுள்ளாரா?

தமிழகத்தில் இன்று இந்துத்வா பல்வேறு "இலக்கியவாதிகள்"(வலையுலக இலக்கியவாதிகளும் இதில் அடக்கம்) உதவியுடன் மீண்டெழுந்து இருக்கும் இன்றைய நிலையில் இதை ஒழிக்க கலைஞரை விட்டால் ஆள் கிடையாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இதைத்தான் திராவிட அரசியல் என்றேன். மற்றும் பார்ப்பனீய எதிர்ப்பு, மொழிப்பற்று, இனப்பற்று,அடையாளம் காத்தல்,சுயமரியாதை ஆகியவையும் திராவிட அரசியலில் உண்டு.

சங்கராச்சாரியரையும் தைரியமாக கைது செய்தார் ஜெயலலிதா என்று கூறுகிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் கைது செய்திருக்க மாட்டார் என்பதும் சிலரின் வாதம். ஆனால் கலைஞர் ஆட்சியாக இருந்திருந்தால் சங்கரராமன் என்ற அப்பாவி செத்தே இருக்கமாட்டான் என்பதுதான் என் வாதம்.

பெரியார் எஃபக்டில் இன்னும் சிலர் திராவிட கட்சிகளின் மீது (குறிப்பாக திமுக மற்றும் கலைஞர் மீது) மீது கடுப்பாக இருக்கிறார்கள்.(ஐந்து வயதில் இருந்து குழந்தைகளுக்கு இந்த கருத்தை ஊட்டி வளர்ப்பார்கள் போல).என்னுடன் ஆபிசில் வேலை செய்யும் மேற்படியார் ஒருவர் கருணாநிதி ஓழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி என்று கூறி என்னை குலைநடுங்க வைத்தார்.அப்போது அவர் கண்ணில் தோன்றிய கொலைவெறியில என் முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது. தங்களுடைய ஆதிக்கம் குறைந்தது இவரால்தான் என்று அரைகுறையாக புரிந்துக்கொண்டு அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கும் சராசரிகள்தான் இங்கு அதிகம்.

நமது நண்பர் சந்திப்பு கூறியதுபோல் சட்டமன்ற ஜனநாயகம் என்று ஒன்று உள்ளது.ராசிபுரத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் தனி ஆளாக நின்றுகொண்டு முரட்டுவாதம் பேசி திரிந்தார்.அவரையும் ஜனநாயக முறைப்படித்தான் கலைஞர் எதிர்கொண்டார். சட்டசபையில் அதிமுக அமைச்சர்கள் நடவடிக்கைகளுக்கும் திமுக அமைச்சர்கள் நடவடிக்கைகளுக்கும் வித்தியாசம் இருந்ததா இல்லையா?

இந்த அழகில பலருக்கும் வாய்ப்பு எம்எல்ஏ பதவி மந்திரி பதவி அதிமுகவில் கொடுப்பதை பற்றி பலர் புளகாங்கிதமடைகிறார்கள்.எல்லா கோமாளிகளும் ஒரு டெர்ம் இருந்து சம்பாதிச்சுக்கலாமாம்.என்ன கூத்து இது?

திமுக சார்பு பதிவாக தெரிகிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் சறுக்கினாலும் எனக்கும் என்னை போன்ற லட்சோப லட்ச திராவிட ராஸ்கல்களுக்கும் வேறு வழி இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது வெறும் தேர்தல் அரசியல் மட்டும் இல்லை.

நாள் முழுதும் கிரிக்கெட் பார்த்து இந்தியா தோற்றுவிட்டால் நெஞ்சில் அறையும் சோகம், வெறுமை ஒரு மணிநேரத்திற்கு மேல் இருக்காது. அதுவே தான் நாளை திமுக தோற்றாலும் எனக்கு இருக்கும்.ஆனால் அதற்காக யார் ஜெயிக்கவேண்டும் என்ற தன் ஆசையை மனதில் மறைத்துக்கொண்டு வாழ்ந்து, தான் ஆசைப்பட்டது நடந்தால் மட்டுமே உடனே வெளியே வந்து அட்டை கத்தியை வீசி போர் புரிவது எனக்கு பிடித்தமான விளையாட்டு அல்ல.

கொள்கை, வெங்காயம் எல்லாவற்றையும் கலைஞருக்கு மட்டும் போட்டுபார்த்து மற்றவர்களுக்கு பெனிபிட் ஆஃப் டவுட்டை கொடுத்து கள்ள சந்தோஷம் அடைபவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.வாழ்க நடுநிலைமை.

இரண்டு மட்டைகளும் ஊறும்/ஊறிய குட்டைகள் வேறு வேறு என்பதை ஓரளவு எடுத்துக்கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.இந்த தொடர் சில பொது விஷயங்களை வைத்து இரு பெரும் திராவிட கட்சி தலைவர்களை ஒப்பி்ட்டு எழுதப்பட்டது.மாற்று கருத்துக்களும் இருக்கலாம். இருக்கவேண்டும்.

36 comments:

இலவசக்கொத்தனார் said...

//கருணாநிதி அதுபோல் ஏதாவது கருத்தை வெளியிட்டுள்ளாரா? நடந்துகொண்டுள்ளாரா?//

இல்லைங்க. கோயிலுக்குப் போகக்கூடாது எனச் சொன்னவர் ரம்ஜான் நோன்புக் கஞ்சி குடிக்க மட்டும் தவறியதே இல்லைங்க.

//மற்றும் பார்ப்பனீய எதிர்ப்பு, மொழிப்பற்று, இனப்பற்று,அடையாளம் காத்தல்,சுயமரியாதை ஆகியவையும் திராவிட அரசியலில் உண்டு.//

சரியாச் சொன்னீங்க. நல்லவேளை, பகுத்தறிவுன்னு சேத்துக்கலை. அதைச் சேர்த்திருந்தாதான் உங்க நடுநிலமை பற்றி சந்தேகப்பட்டிருப்பேன்.

SK said...

திராவிட அரசியல் என்பதே தமிழகத்தில், தமிழர்களை ஏமாற்றும் வேலை என்பது என் கருத்து.

நான் யார், என்ன சாதி போன்ற வழக்கமான கேள்விகலைத் தள்ளி வைத்து விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்தால், நான் சொல்வதில் உள்ள நியாயம் விளங்கும்.

30 வருடங்களாக அரசோச்சியும், நலிந்டக்வர், தாழ்ந்தவர் நிலை இன்னும் அப்படியேதான் உள்ளது.

ஒட்டு வங்கிகளாகக் கருதப்படும் இவர்களின் முன்னேற்றம் தங்களுக்கு கெடுதல் என்ற ஒரே காரணம் தவிர இவர்கள் நிலை உயராததற்கு வேறு யாது காரணம்?

'சங்கரராமன்' செத்தே இருக்கமாடான் என்பதெல்லாம் மூட நம்பிக்கை இல்லையா?

இரு கழகங்களாலும் தமிழத்திற்கு ஒரு நன்மையும் கிடையாது.

எந்த ஒரு உட்கருதும் இல்லாமல் துணிவுடன் சொல்வேன்:

இவர்கள் இருவரும் தோற்கடிக்கப்படும் நாளே நன்னாள்!

Krishna said...

இன்னும் கூட பலமாய் எழுதியிருக்கலாமோ? மீண்டும் ஒரு முறை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் ஜெ கண்டிப்பாய், இந்த தமிழ் .....களுக்கு என்னை விட்டால் ஆள் கிடையாது என்று நினைத்து, பாசிசத்தை இன்னும் கூட்டுவார். புலிகளும் சிறுத்தைகளும் ஆப்பசைத்த குரங்காய் தவிப்பர். தமிழன் இன்னும் மட்டமாய்ப் போவான்.

தமிழன், மனிதன் உயிர் மூலத்தை அடித்துக் கொண்டிருப்பவர்கள் இடுப்பிலும், அடிவயிறிலும் அடிப்பது தவறில்லை. அதையும் கண்டிப்பாய் எழுதவும்.

முத்து(தமிழினி) said...

நன்றி கொத்தனார் அவர்களே...

பகுத்தறிவு என்பதையும் திராவிட அரசியலில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள் நன்பர்களே..

(கொத்தனார் நான்தான் நடுநிலைமைவியாதி இல்லை என்று சொல்லிவிட்டேனே)

ஜோ / Joe said...

//கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் சறுக்கினாலும் எனக்கும் என்னை போன்ற லட்சோப லட்ச திராவிட ராஸ்கல்களுக்கும் வேறு வழி இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//
நானும் இது போல ஒரு ராஸ்கல் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

விடாதுகறுப்பு said...

முத்து,

பதிவு நன்றாக உள்ளது. நன்கு அலசி இருக்கிறீர்கள்.

ஜோ / Joe said...

//இவர்கள் இருவரும் தோற்கடிக்கப்படும் நாளே நன்னாள்!//

ஆமாமா! விசயகாந்த் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்த தேவாதி தேவர்கள்..90% பேர் இதே தி.மு.க ,அ.தி.மு.க வில் இருந்தவர்கள் ..மீதி பேர் அவர் மாமன் ,மச்சான் .அப்புறம் இவரு படிச்சு பெரிய விஞ்ஞானி ஆக இருந்தத இந்தி எதிர்ப்பு மூலமா கெடுத்துட்டாங்களாம் .அவருக்கு மண்டையில மசாலா இல்லைண்ணா யாரு பொறுப்பு .அப்துல் கலாமுல்லாம் இந்தி படிச்சா வந்தாரு?

நெருப்பு சிவா said...

// //கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் சறுக்கினாலும் எனக்கும் என்னை போன்ற லட்சோப லட்ச திராவிட ராஸ்கல்களுக்கும் வேறு வழி இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//
நானும் இது போல ஒரு ராஸ்கல் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
//


'Rascal'hal kootam athiham aahinaalum,

'Rascal'halukku mattum aatharavu endraalum,

naan Rascal alla..
Dravidan..., Dravidan mattume
Endru koora vizhaihiren.

NERUPPU

மு.கார்த்திகேயன் said...

I am also a dravida Rascal...

Dharumi said...

ஏற்கெனவே பலமுறை சொல்லியாச்சி...மீண்டும் சொல்ல வேண்டியிருக்கு: "எனக்கு இந்த ஜோ சொல்றதை வழிமொழியிரதே பொழப்பா போச்சு".
அதோட -"கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் சறுக்கினாலும்..." இந்த வாதம்/ஸ்டேட்மெண்ட்டில் எனக்கு உடன்பாடில்லை. இந்திராவையும், ராஜீவையும், சோனியாவையும், பிரியங்காவையும், ராகுலையும் (பிரியங்க பிள்ளை பேரு தெரியாது; அதையும் சேர்த்துக்குங்க) ஏத்துக்குவீங்க..ஸ்டாலின் என்றால் அப்படி என்ன கசப்பு உங்களுக்கெல்லாம். வேண்டுமென்றேதான் நம்ம ஊரு கேசுகளை விட்டுட்டு நெஹ்ரு குடும்பம் மட்டும் கோடி காண்பிச்சேன்.

Prasanna said...

Hi Muthu

Sorry for typin in English.Unarvugal tamizhil

At the outset,i must say that your blog is excellent though with distinct political bias(nothing wrong in that)

I have feeling that Jayallaitha/Vaiko combination is definitely making effective issue out of the DMK "dynastic" politics

i think Stalin is not the issue as Tamil electorate have got used to him.And definitely Stalin is a seasoned politican .During his stewardship as Chennai Mayor he acquitted himself fairly well.He also comes across as polite and decent politican .He hasnt inherited the ascerbic/acid tongue of his father.Like in one of your earlier post you said Karuna unnecessarily tries to intellucalise event blatant political opportunism

I think the resentment against dynastic politics has resurfaced because of the upstart politican -Dayanidhi Maran

Dayanidhi Maran is proving to be a major embarassment for DMK - unworthy successor to the late Murasoli Maran who did have the respect of the Delhi establishment with his legendary political shrewdness and pragmatic approach to realpolitick .

Daya comes across to me as petty operator of the crony capitalist variety who neither has the political vision of his father or business acumen of his
elder brother


Even within the DMK,Dayanidhi is increasingly being perceived as upstart politican who never toiled but purely made it to the cabinent because his grand father decided
to gift a ministerial portfolio to this novice

Neither he is articulate in English or Tamil.I was shocked and dismayed at his pathetic communication skills in Tamil (especially for someone from a Dravidian Party)

i think he is doing nothing more than providing english translation services for his grandad during Delhi Visits ,protecting the commercial interests of his
brother by sabotaging the business forays planned by their rival magazine houses and scoring cheap political points in the telecom ministry functions usually graced
by his grannydad(in what capacity-no one knows)

And DMK has made a huge blunder in announcing the "Free TV" .
Its going to be attacked by the Jaya/Vaiko on this -by linking the freebie with the already brewing resentment among Tamil Masses on the crores of money amassed
by the Sun Tv Business Empire

Strategically it will be good for Mu Ka to distance himself from Maran and co

Also commercially it dosent make any sense for Kalanidhi Maran to be viewed as political mouhpiece as he has business vision for Sun Tv beyond that

Otherwise it might be downhill for the DMK alliance this election

Prasanna said...

i Muthu

Sorry for typing in English.Unarvugal Tamzhil

At the outset,let me tell you that your blog is excellent though a distinct political bias quite evident(nothing wrong with that)

I have a feeling that Jaya-Vaiko combination is successfully making a issue out of the DMK Dynastic politics

I think the issue is not Stalin.The Tamil Electorate are used to him already.In my personal assessment Stalin comes across as a polite and mature individual.His stewardhip of Chennai during his stint as Mayor was quite good.And he has not inherited the acrebic/acid tongue of his dad(As you had so clearly observed in one of your earlier posting,Karunanidhi
unnecessarily intellucallises even blatant political opportunism and hence gives scope for scrunity and examiantion)

The resentment against dynastic politics of DMK has resurfaced because of the overbering attitude
and arrogance of Dayanidhi Maran


Dayanidhi Maran is proving to be a major embarassment for DMK - unworthy successor
to the late Maran who did have the respect of the Delhi establishment with his
legendary political shrewdness and pragmatic approach to realpolitick .

Daya comes across to me as petty operator of the crony capitalist variety
who neither has the political vision of his father or business acumen of his
elder brother


Even within the DMK,Dayanidhi is increasingly being perceived as upstart politican
who never toiled but purely made it to the cabinent because his grand father decided
to gift a ministerial portfolio to this novice

Neither he is articulate in English or Tamil.I was shocked and dismayed at
his pathetic communication skills in Tamil (especially for someone from a Dravidian Party)

i think he is doing nothing more than providing english translation services
for his grandad during Delhi Visits ,protecting the commercial interests of his
brother by sabotaging the business forays planned by their rival magazine houses
and scoring cheap political points in the telecom ministry functions usually graced
by his grannydad(in what capacity-no one knows)

And DMK has made a huge blunder in announcing the "Free TV" .
Its going to be attacked by the Jaya/Vaiko on this -by linking the freebie
with the already brewing resentment among Tamil Masses on the crores of money amassed
by the Sun Tv Business Empire

Strategically it will be good for Mu Ka to distance himself from Maran and co

Also commercially it dosent make any sense for Maran to be viewed as political mouhpiece as he has business vision for Sun Tv beyond that

Otherwise it might be downhill for the DMK alliance

சந்திப்பு said...

கருணாநிதி அதுபோல் ஏதாவது கருத்தை வெளியிட்டுள்ளாரா? நடந்துகொண்டுள்ளாரா?

-----------------------------------
என்.டி.ஏ. ஆட்சியில் அதாவது, பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் திமுக முக்கிய பாட்னர் என்பதை தாங்களும் அறிவீர்!
இந்த ஆட்சிக்காலத்தில்தான் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் நரவேட்டையாடப்பட்டனர் சங்பரிவாரத்தால், அப்போது குஜராத்தில் நடப்பதை - காந்தியின் மூன்று குரங்கு பொம்மை-- போன்று இருந்து விட்டார் கருணாநிதி!
மதவாத எதிர்ப்பு என்ற பெரியாரின் வழியில் வந்தவருக்கு குஜராத் படுகொலைகள் கண்ணுக்கும் தெரியவில்லை! அப்போதெல்லாம் சிறுபான்மை மக்களின் ஓலங்களும் காதில் விழவில்லை. அந்த நேரத்தில் அண்ணாவின் ஆரிய மாயையையெல்லாம் ஒலிப்பதற்கு பேச்சும் வரவில்லை! இதுதான் கருணாநிதி.
மொத்தத்தில் திராவிட இயக்கங்களுக்கு (தி.க.வை மட்டும் இங்கே தவிர்க்கலாம்) அதிகாரம் - பதவி இவைகள்தான் சுகமே தவிர மதவாத எதிர்ப்பு என்ற பெரியாரின் கொள்கைகளோ, அண்ணாவின் முழக்கங்களோ நடைமுறையில் செத்த பிணமாகி விடும்.
இந்த நேரத்தில் எனக்குத் தோன்றுவது வழக்கம் போல : கருணாநிதி கூறும் கொள்கை வேட்டி - கோவணம் மேல் துண்டு டயலாக்தான்.
இப்போதும் கூறுகிறேன் இரண்டும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகளே!
-----------------------------------

வரவனையான் said...

சரியான கருத்து தருமி ! டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், வக்கீல் மகன் வக்கீல் ஆகலாம் இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம் , இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் ஸ்டாலின் மட்டும் வரக்கூடாது என்பது சொல்லுபவர்களின் நடுநிலை சந்தேகத்திற்கு உரியது. வைகோ வைக்காட்டிலும் முதலில் மக்களைசந்தித்தது , மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டது என ஆயிரம் தகுதிகள் ஸ்டாலினிடம் உண்டு.

சாணக்கியன் said...

தருமி, வாரிசு அரசியல் பேசுபவர்கள் ப்ரியங்காவையும் , ராகுலையும் ஏற்றுக்கொண்டதாக சொல்ல முடியாது. இதோ, வாரிசு அரசியலை எதிர்க்கும் நான் சொல்கிறேன், ராகுலும் பிரியங்காவும் வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறேன். சோனியாவுக்கும் அதேதான். இந்தியா, நேரு குடும்பத்தின் சொத்து அல்ல என்று உங்கள் கருணாநிதியிடம் சொல்லுங்கள். அடஹி மற்ற அரசியல் செய்ய சொல்லுங்கள்...

சாணக்கியன் said...

முத்து, சன்டீவி நேர்மையான் செய்திகளை ஒளிபரப்பவில்லை என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி...

வெங்காயம் said...

முத்து நல்ல அலசல். ரொம்ப நன்றிங்க.

சுதர்சன் said...

//ஐந்து வயதில் இருந்து குழந்தைகளுக்கு இந்த கருத்தை ஊட்டி வளர்ப்பார்கள் போல//

;-)

Anonymous said...

Hi Muthu

Karuna and Jaya- Both of them are mediocre individuals but their sycophantic followers have elevated them to the pedestal of greatness.Atleast discerning observers like us should not get in to the mode of relative comparison-who is better than whom


To describe Jayalalitha as strong votary of Hindutva or to glorify Karunanidi as torch-bearer of Dravidian Sub-Nationalism is doing gross injustice to the
lofty ideals of both the movements

One might strongly agree or disagree with the ideologies of these movements but dispassionate understanding of these movements will underscore the point that both were historical necessities though now totally irrelevant.

Dravidian Movement was required for ending the Brahiminical Strangehold on the society and fighting imposition of Hindi (The credit for IT/BPO revolution in India is rightfully Anna’s. Otherwise these bigots might have imposed Hindi and deprived us of English Education)

Political Hinduvta was required to arouse the conscious of Indian Nationalism towards the objective of establishing India as strong nation and fight blatant minortyism ( even judicial ruling being overturned to win votes)

The Brahmins are rendered totally irrelevant in the political landscape of Tamil Nadu.They might be 4-5% .They are not electorally organized as vote bank or have the street power .And Hindi imposition is not virtually impossible .

Similarily Hinduvta will no longer yield any electoral dividends for BJP.Its a waste of time in taking out Yatras now

Jayalalitha has no ideology than pursuit of power .Same is the case with Karunaidhi who continues to flog the dead horse called the anti-brahiminsim


Karunanidhi is an average Tamil script writer who manipulated and schemed his way to the wrest control of DMK leadership.He is pseudo-intellucall with limited literary abilities,blinded by his love for his family and revels in sycophanctic adulation of his followers .He has no political vision /ideologically bankrupt –blatant opportunist who can go to bed with Congress and BJP .To give the devil is due atleast he is has some pretension of being a democract

Jaya –her convent English is mistaken as being articulate.She is arrogant, unscrupulous politician with no political finesse. Her coterie loots the state.She usually keeps company with dubious characters like Sashikala,Kanchi Acharya etc

Sooner Tamil Nadu consigns these two politicians to the dustbins of history ,its better for the progress of the state

முத்து(தமிழினி) said...

english anony,

i like your comments..there are some points ..thanks

terror said...

கருணாநிதி அவர்கள் ஸ்டாலினை வைத்துத்தான் அவர் "வாரிசு அரசியல் வளர்ப்பதாக நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்விவகாரத்தில், அவரது மிகப்பெரிய செயலே - தயாநிதிமாறனை முன்னிறுத்தியதுதான்.

ஸடாலினுக்காவது படிப்படியாக உயர்ந்த வரலாறு இருக்கிறது.

த.மா வை அவர் பேர் அறிவிக்கிறதுக்கு முன்னாடி யாருன்னே இங்க நிறைய பேருக்குத் தெரியாது.

ஆனாலும் இன்று அவர் மிகப்பெரிய செல்வாக்கு வாய்ந்த நபர் திமுகவில்.

இதற்குதான் கலைஞரை நடுநிலையாள்ர்கள் விமர்சிப்பார்களே ஒழிய, ஸ்டாலினை வைத்து அல்ல.

செல்வகுமார்

Prasanna said...

Hi Muthu
I am the "English Anony"

I had to do the second posting as Anon beause of technical difficulties in establishing blog identity

Thanks for the nice words.

I am of the view its futile for person with sharp intellect like you expending so much effort and energy in making labored and mostly unconvincing defence of Karuna .Both the old man and the lady are unworthy

True alternative in Tamil Nadu will be a ideology that find middle ground by reconciling the the powerful elements of Dravidian Movement with the emerging Indian Pan Nationalism

Tamil Nadu has the real potential to lead India 's specactular progress in the next century provided the right leadership emerges-leadership that is socially progressive,truly secular ,meritrocracy driven (no more Marans,Anbumani's and Vasan's)and economically liberal.And importantly devoid of any celluloid connection

Imgaine the plight of the state if someone like Vijay will float a political party tommorow and in the name of the democracy we need to tolerate this.The scum of a actor has political aspiration reportedely.How do these assh..les even get a feeling that they can join poliitcs

Talented Workforce,good academic pool,tolerant and stable society,good work ethics.State has everything going for it to suceed in the globalised era .

I am just hoping that in the next two elecions that this will happen

Pot"tea" kadai said...

//'சங்கரராமன்' செத்தே இருக்கமாடான் என்பதெல்லாம் மூட நம்பிக்கை இல்லையா?//

அய்யா எஸ்கே, இது மூட நம்பிக்கை அல்ல...முக ஆட்சியில் இருந்திருந்தால் இந்தக் கொலையே நடந்திருக்காது. காரணம், சங்கர மடத்துக்காரன்களுக்கு பய உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், ஜெயா நம்முடைய பக்தையாச்சே...நாம என்ன தான் ஆட்டம் போட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற உணர்வே கொலை செய்யும் அளவிற்கு வந்தது. மேலும் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டது மு க வெளிப்படையாக ஜெயா அரசின் மெத்தனப் போக்கை கண்டித்ததனாலேயே!
தற்போது விற்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவமனையை முன்னரே மன்னார்குடி குடும்பத்தினருக்கு விற்றிருந்தால் இந்த கைது சம்பவம் கூட நடந்திருக்காது...

Sivabalan said...

I second the views of Mr.Prasanna

// Stalin is a seasoned politican .During his stewardship as Chennai Mayor he acquitted himself fairly well //

To match Bangalore and Hyderabad, we desperately need good governance.

பாலசந்தர் கணேசன். said...

முத்துவின் கருத்தினை நானும் ஆதரிக்கிறேன்.

ஜெயலலிதா அடிப்படையில் மாறவே இல்லை. அவர் கையில் அதிகாரம் மீண்டும் கொடுக்க பட்டால் அவர் நாட்டில் மீண்டும் 1996ஐ கொண்டு வருவார். எனவே தி.மு.க விற்கு ஒட்டு போடுவது நல்லது என சொல்ல முடியாவிட்டாலும், அ.தி.மு.கவிற்கு ஒட்டு போடுவதை விட நல்லது என்று நிச்சயமாக சொல்ல முடியும். உண்மையில் இரண்டு கட்சிகளுக்கும் இரண்டு முறை தொடர் வாய்ப்பு கொடுப்பது அநியாயம். எனவே போடுங்கள் ஒட்டை தி.மு.க கூட்டணிக்கே. இது பிரசாரம் அல்ல. ஒரு நேர்மையான கருத்து.

ஷாஜி said...

நல்ல பதிவு முத்து ஐயா.. இது தொடர்பான இன்னும் சில தொலை நோக்கு பார்வைகளை நேரமிருந்தால்
இங்கு போய் பாருங்கள்
http://nayanam.blogspot.com/

இது விளம்பரம் அல்ல.. ஏன் எனில் இது என்னுடைய வலைப்பூ அல்ல..
உங்கள் கட்டுரை தொடர்புடையது என்பதால் தந்திருக்கிறேன்

நெருப்பு சிவா said...

// மதவாத எதிர்ப்பு என்ற பெரியாரின் வழியில் வந்தவருக்கு குஜராத் படுகொலைகள் கண்ணுக்கும் தெரியவில்லை! அப்போதெல்லாம் சிறுபான்மை மக்களின் ஓலங்களும் காதில் விழவில்லை. அந்த நேரத்தில் அண்ணாவின் ஆரிய மாயையையெல்லாம் ஒலிப்பதற்கு பேச்சும் வரவில்லை! இதுதான் கருணாநிதி //

'Santhippu',
eppdi naan solla ninaippathai ellam neengale sollireenga?

Ore kuttaiyil ooriya mattaihal - ithai vida vera enna vilakkam vendum?

NERUPPU

ஜெயக்குமார் said...

1100 கோடி அரசு பணத்தில் இலவச கலர் டிவி கொடுத்து மாதம் 200 கோடியை தன் குடும்ப டிவிக்கு வருமானமாக பெற்றுதரும் சுயநலவாதியை ஓரம்கட்ட சரியான ஆள் வைகோ தான்.

முத்து(தமிழினி) said...

1)கலைஞர் மக்களின் வரிப்பணத்தில் வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை.

2)கலைஞர் வீட்டில் ஆயிரம் ஜோடி செருப்பு இல்லை.

3)கலைஞர் வீட்டில் கிலோக் கணக்காக நகைகள் இல்லை.

4)பாலுஜூவல்லர்ஸ் ஐயப்பனிடம் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு சும்மா போட்டுப் பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்லி கடனாக வாங்கிச் சென்ற ஒருகிலோ திரும்பத் தரப்படவில்லை. அதனால் ஐயப்பன் மாரடைப்பு வந்து செத்தார். கலைஞர் அவ்வாறு செய்யவில்லை.

5)காஞ்சி குரூப்பால் மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரச்சொன்னபோது கொண்டு வந்து பின் கலைஞர் ஒருபோதும் பின்வாங்கியது இல்லை.

6)தனது கொள்ளைப் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளாத காரணத்தால் காஞ்சியை கலைஞர் ஒருபோதும் பிடித்து ஜெயிலில் போட்டதில்லை.

எனவே இந்த தேர்தலில் கண்டிப்பாக எனது ஓட்டு திமுகவுக்குதான்!

நீக்கங்கள் உண்டு.

தயா said...

எது இந்துத்தவா என்று
விளக்கிவிட்டால் பரவாயில்லை. அதோடு எது ஜனநாயகம் என்பதை பற்றியும் சொல்லிவிடுங்கள்.

இன்றைய தமிழகத்திற்கு இந்துத்வாவால் என்ன இடையூறு
வந்துவிட்டது?
கருணாநிதி என்றைக்கு இறையாண்மையின் பாதுகாவலானார்? ஜெ என்ன அநீதி இழைத்தார்?
இந்துக்களால் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்றால் கருணாநிதி இந்து இல்லையா? நீங்கள் இந்து இல்லையா?

திமுகவும் அதிமுகவும் பாஜவுடன் கூட்டு வைப்பதற்கு முன் முஸ்லீம் லீக்
கட்சிகளுடன் உடன்பாடு
கொள்ளவில்லையா?

அது என்ன செக்யூலரிஸமா?

இவர்கள் என்ன இந்துத்தவாவிற்காகவா பாஜகவுடன் கூட்டு சேர்ந்தார்கள்? தங்களை காப்பாற்றிக்கொள்ள தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டி அங்கே இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அதுவே சுமையாகிவிட்ட பிறகு பாஜக தீண்டதகாத கட்சியாகவும் முஸ்லீம் லீக செக்யூலராகவும் ஆகிவிட்டது.

அன்றைய மன்னர்கள் இஸ்லாமியர்களுக்கும்
இந்துக்களுக்கும் இணக்கம் ஏற்படுத்த
முயற்சி செய்தார்கள். ஆலய
சடங்குகளில் இரு மதத்தினரும்
பங்கேற்குமாறு செய்தார்கள்.
ஒருவருக்கொருவர் திருவிழா
தொடங்குமுன் முறை செய்ய
வேண்டுமென்று ஏற்பாடு
செய்தார்கள். அதனால் தான் தலுக்க
நாச்சியார் என கோயில்களில் தனி சன்னதியே இருக்கிறது.
ஒரு நல்ல தலைவர் இது போன்ற
முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாறாக சலுகைகள் ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு என சொல்லி ஓட்டு வேட்டையாட மட்டும் பயன்படுத்துவது அல்ல. அதோடு நின்றாரா! கள்ள காதல் என்றார் அவர்கள் என்ன செய்கிறார்கள் என உளவறிய போனோம் என்றார்.இதில் கலைஞர் சிறுபான்மையினரின் காவலராகி விட்டாராம்.

கலைஞருக்கு நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் ரொம்பவே தேவை.

தயா said...

இந்த புடவை கணக்கையும் செருப்பு கணக்கும் ஏற்கனவே ஓவர் டோஸாகி விட்டது. அதனால் அதை திரும்ப சொல்லாதீர்கள்.

ஜெ மட்டுமல்ல கொஞ்சம் பணவசதி உள்ள பெண்களும் ஆர்வம் உள்ளவர்களும் இதுக்கு மேலேயும் வைத்திருக்கிறார்கள். இந்த வீக்னஸ் இல்லாத பெண்கள் குறைவு. கடந்த சட்டமன்ற தேர்தலில் குமுதம் Exclusive வெளியிட்ட படத்தை போஸ்டர் அடித்து ஓட்டியும் இது எடுபடவில்லை.

கொஞ்சம் சந்தேகம் இருந்தால் சன் டிவி தொகுப்பாளினிகளும் செய்தி வாசிப்பாளர்களும் பத்திரிகைகளில் கொடுக்கும் பேட்டியை படியுங்கள்.

buginsoup said...

Enakku..Aanathavikatan Attaipadam thaan ninaivirkku varukirathu!

ஜெயக்குமார் said...

ஜெயலலிதா வெளிப்படையாக கொள்ளை அடித்தார் என்பதற்காக, கருணாநிதி மறைமுகமாக பக்காவாக திட்டமிட்டு அடிக்கும் கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா என்ன?. வெளிப்படையாக கொள்ளை அடித்தாளாவது எவ்வளவு அடித்தார்கள் என்பது தெரியும், கருணாநிதி போல விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிப்பவர்களிடம் எவ்வளவு அடித்தார்கள் என்று எப்படி கணக்கு பார்க்க முடியும். கருணாநிதி குடும்பத்தின் சொத்தை வைத்து நம் இந்தியக்கடனையே அடைக்கலாம் என்றுகூட சொல்லுகிறார்கள். அவருக்காக பரிந்த்து பெசும் உங்களுக்காக வருத்தப்படுவதைத்தவிர எனக்கு வேறுவழியில்லை.

Anonymous said...

Soory,I can only present in English. M.K meendum vanthal meendum oru saree stipping assembly varathu endru enna nichayam? Ithu Janayaga murai endral veru entha nattil ithu poandra oru sambavam nadaipetrathu? Ithu oru Makudam allava namathu sattamandrathukku?Oriru natkal mubu kooda railway workers union members meeting poathu "Thamizhan "THAVALAI-(FROG)" pondravan' endru tholvi bayathai kattiyirukkirar. Ithu oru muthuperum thalaivar sollum paarliamentary varthaikala?-thangam

Pot"tea" kadai said...

ஜெயக்குமார்,
மு க விஞ்ஞான ரீதியாகக் கொள்ளையடித்தார் என்று சர்க்காரியா கமிஷன் கூறியது என்பதானால் இன்னமும் அதே பஞ்சாங்கத்தை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

விஞ்ஞான ரீதி என்று சொல்லத் தெரிந்த உங்களுக்கு அதை எப்படி செய்தார் என்று ஏன் சொல்லத்தெரியவில்லை? ஆனால் ஜெயா செய்த ஊழல்கள் உலகுக்கே வெளிச்சம்!

போன எலெக்ஷன்ல கூட பேசிக்கினாங்கோ ஜெ - சசி சொத்து அல்லாத்துயும் வளைக்க சொல்ல இந்தியா கடன் மட்டுமில்லீங்னா, ஆப்பிரிக்கா கண்டத்துக்கே நெவாரனம் குடுக்கலாம்னு...

//அவருக்காக பரிந்த்து பெசும் உங்களுக்காக வருத்தப்படுவதைத்தவிர எனக்கு வேறுவழியில்லை//

நீங்கள்ளாம் வருத்தப்பட்ற அளுவுக்கு "தமிழினி" நெலம மோசமாயிடலீங்கனா

முத்து(தமிழினி) said...

thangam,

do u think this sari stripping happened really? iam sorry for you

you are free to vote to anybody..mine was just a comparision based on some qualities

தமிழ்வெளியை பார்த்தீங்களா?