Thursday, April 20, 2006

புனித பிம்பங்கள் - பி.அ.-2

முதல் பாகம் இங்கே....


எனக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கிய என் சிஷ்யை பொன்ஸ் மற்றும ஆருயிர் நண்பன் கவிஞன் பட்டணத்து ராசா ஆகியோருக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது புனித பிம்பங்கள் டெக்னிக்.இதற்கு மிகவும் பொறுமை வேண்டும்.வலைப்பதிவுகளை கவனித்துகொண்டே இருக்கவேண்டும். எப்படியும் எவனாவது அறிவை வளர்த்துக் கொள்கிறேன், புதிய விஷயம் தெரிந்துக் கொள்கிறேன் பேர்வழி என்று விவாதம் என்று எதையாவது இழுத்து பொதுமாத்து வாங்கிகொண்டு இருப்பான்.அவனை குறிப்பிட்டு

1. இப்படியெல்லாம் எழுதாதீர்கள்.எத்தனை நாள் இருக்கபோகிறோம்?. எல்லோரும் நண்பர்களாக இருப்போம்.( என்னவோ விவாதம் செய்பவர்கள் எல்லாம் பேட்டை ரவுடிகள் மாதிரியும் கையில் அரிவாளோடு திரிபவர்கள் மாதிரியும்)

2. எல்லோரும் நன்றாக படித்தால் நாடு தானாக முன்னேறும்.

3. சாதி ஒழிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாதியை பற்றி எழுதுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லை?

4. எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள்.தானாக நன்மை மலரும்.

5.காந்தியை பாருங்கள். நேருவை பாருங்கள்.வள்ளுவரை பாருங்கள்.

இப்படியெல்லாம் குன்சாவாக எதையாவது எழுதவேண்டும்.இதற்காகவே காத்திருந்தது போல் நண்பர்கள் ஓடிவந்து ஆதரவு தருவார்கள். நீங்கள் யாரை குறிப்பிட்டு எழுதுகிறீர்களோ அவனின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஓடி வருவார்கள். இதை கவனித்து யாரை கண்டிப்பது என்று முடிவு செய்யவும்.

இதில் உள்ள லாபங்கள் பின்வருமாறு

1. விவாதம் செய்பவனை கேப்மாரி என்று நிரூபிக்கும் அதே வேளை நாம் புனித பிம்பமாக ஆட்டோமெடிக்காக ஆகிறோம். Hero + Zero = Hero. simple.

அதாவது நான் படித்த பி.எஸ்.ஜீ கலைக்கல்லூரியில் ஒரு கான்செப்ட் இது. கஷ்டப்பட்டு ஒரு ஃபிகரை தேத்தி லைப்ரரியில் வைத்து கடலை போட்டுக்கொண்டிருப்போம். "மச்சான், காலைல சாப்பாட்டுக்கு கோவிலில் தேங்காய் பொறுக்கணும்னு சொன்னியே..போகலையா", என்பான் ஒரு நண்பன். இதுதான் அந்த டெக்னிக்.அந்த பெண் மனதில் நாம் ஜீரோவாகும் அதே நேரம் நண்பன் ஹீரோ ஆவான்.

சுமாரான ஃபிகர் அட்டு ஃபிகரை தோழியாக வைத்துக்கொண்டு சுத்துவதுகூட ஒரு உதாரணம்தான்.

2. மேற்கண்ட ஐந்து அரிய கருத்துக்களையும் விவாதம் செய்பவன் எதிர்க்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் மற்றவர்கள்.இங்கும் உங்கள் ஹீரோ இமேஜ் கூடும்.இந்த கருத்துக்களை எதிர்த்து எழுதமுடியாது என்பதும் வெளிப்படை. (இந்த கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகவே இருக்கின்றன என்பதும் நடைமுறைதான் சிரமம் என்பதையும் மக்கள் உணர மாட்டார்கள்.)

3. கூடவே விவாதம் செய்பவனின் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்த டெக்னிக்கை அடிக்கடி உபயோகிக்க கூடாது. காரணங்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

38 comments:

பட்டணத்து ராசா said...

மிக்க நன்றி முத்து, உங்க ஆராய்சியின் ஆரம்பமாக வந்து இருக்கும் கருத்துகளை ஒரு template'க உபயோகப்படத்த அனுமதி கேட்கிறேன்.

ஜோ/Joe said...

முத்து,
இது வரை வந்த உங்கள் பதிவுகளிலே நான் அதிகமாக சிரித்தது இந்த பதிவுக்கு தான் .கலக்கல்!

ஜோ/Joe said...

//என்னவோ விவாதம் செய்பவர்கள் எல்லாம் பேட்டை ரவுடிகள் மாதிரியும் கையில் அரிவாளோடு திரிபவர்கள் மாதிரியும்//
ஹா..ஹா..ஹா

ஸ்ருசல் said...

"எப்படியும் எவனாவது அறிவை வளர்த்துக் கொள்கிறேன், புதிய விஷயம் தெரிந்துக் கொள்கிறேன் பேர்வழி என்று விவாதம் என்று எதையாவது இழுத்து பொதுமாத்து வாங்கிகொண்டு இருப்பான்."

ஐயா சாமி, சிரிச்சு முடியலீங்க.....

ஜோசப் சொன்னது மாதிரி, "எனக்கென்னவோ இதுதான் உங்களுக்கு ரொம்பவும் பொருந்துதுன்னு நினைக்கிறேன்."

அதாவது இந்த மாதிரி நகைச்சுவை பதிவுகள் நல்லா எழுதிறீங்க.. புலிகேசி, பாகம்-1, 2....

ரொம்ப நல்லாயிருக்கு..

ஆனா அப்பப்பா யாரைவது போட்டுத் தாக்கிட்டே இருக்கீங்க....

Muthu said...

//பேர்வழி என்று விவாதம் என்று எதையாவது இழுத்து பொதுமாத்து வாங்கிகொண்டு இருப்பான்."//

ஸ்ருசல் இது இப்போது உங்களுக்கு பொருந்தும்.(இட ஒதுக்கீட்டு பதிவு):))))

//ஆனா அப்பப்பா யாரைவது போட்டுத் தாக்கிட்டே இருக்கீங்க.... //

நானா நெனச்சி பண்றதில்லை.. நீங்களா யாரையாவது நெனச்சிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...நான் எழுதறதில எதாவது தப்புனா சொல்லுங்க தல..

ramachandranusha(உஷா) said...

முத்து, முதல் பின்னுட்டம் எதிர்வினையாய் வந்தால், நம் வழி வழியாய் வந்த தர்ம அடி சித்தாந்தம்
ஒர்க் அவுட் ஆகிவிட நேரும். ஆகையால் வில்லங்கமாய் எழுதி பேரும் புகழும் வாங்க நினைப்பவர்கள்
இதையும் சிந்தனையில் கொள்க என்று நினைவுருத்த விரும்புகிறேன்.
சிஸ்ய பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்பொழுது, நாலா பக்கமும் யோசிக்க வேண்டும் :-))

Muthu said...

கொஞ்சமாக விளக்கமாக போடுங்கள் உஷா..எனக்கு புரியவில்லை

ஸ்ருசல் said...

>>>>ஸ்ருசல் இது இப்போது உங்களுக்கு பொருந்தும்.(இட ஒதுக்கீட்டு பதிவு):))))<<<

அதைப் பற்றிக் கவலை இல்லை. என்ன எழுத நினைத்திருந்தேனோ அதை எழுதியாகி விட்டது. இப்ப மண்டையில் ஒண்ணும் ஓடலை. பிரியா இருக்கு.

ஆனா கைப்புள்ள(வடிவேலு) ரேஞ்சுக்கு போகாதுன்னு நம்பிக்கை இருக்கு. :)

ஜோ/Joe said...

என்ன உஷா அக்கா சொல்லுறது புரியல்லியா ?வலைப்பதிவர்கள் எல்லாம் தமிழக வாக்காளர்கள் மாதிரி ஆட்டு மந்தை கூட்டம் தான் .முதல் பின்னூட்டம் "அருமையான பதிவு" அப்படீண்ணு வந்ததுண்ணா பொத்திட்டு போயிருவாங்க .அதே நேரம் தர்ம அடி விழுந்திருந்தா அவங்க பங்குக்கு நாலு போட்டுட்டு போவாங்க .அதுனால பதிவு போட்டவுடன பாராட்டி பின்னூட்டம் போடுற மாதிரி கொஞ்சம் சிஷ்ய புள்ளைங்கள செட் பண்ணிக்கணும்-ன்னு சொல்லுறாங்க ..சரி தானே?

Muthu said...

joe,

புரிஞ்சிருச்சு....சரிதான்.

Muthu said...

//முதல் பின்னூட்டம் "அருமையான பதிவு" அப்படீண்ணு வந்ததுண்ணா பொத்திட்டு போயிருவாங்க .அதே நேரம் தர்ம அடி விழுந்திருந்தா அவங்க பங்குக்கு நாலு போட்டுட்டு போவாங்க .//

கலக்கல்

ramachandranusha(உஷா) said...

"கப்" என்று பிடித்துக் கொண்ட ஜோ வாழ்க வாழ்க. ஆனா, அதிலும் சில பிரிச்சினங்க இருக்கு, இன்னாத்தான், சிஸ்ய பிள்ளிங்கள தயார் செஞ்சி வெச்சாலும், விளுர அடிங்கள பாத்து இன்னாத்துக்கு வம்புன்னு ஜ்கா வாங்கிட்டு, அப்பால சைலண்டா, ஊர்ல இல்லபா, சுண்டு வெரலு சுலுக்கிக்குச்சுன்னு ஒரு மெயிலு தட்டினா ஆச்சு :-)

Muthu said...

//சுண்டு

வெரலு

சுலுக்கிக்குச்சுன்னு //


கவிதை..கவிதை...

ஜோ/Joe said...

//கவிதை..கவிதை... //
பாட்டாவே படிச்சுட்டீங்களா!

துளசி கோபால் said...

ஆஆஆஆஆஆ......... உஷா.

இன்னொரு ப்லொக் பதிவு செஞ்சுக்கிட்டு, நம்ம பதிவு போட்டவுடனே தமக்குத்தாமாய் நியதிப்படி அங்கெ வந்து 'பதிவு அருமை'ன்னு பின்னூட்டிறணும். அவ்ளொதானே. இதோ ஆச்சு.

அருமையான பதிவு.

ramachandranusha(உஷா) said...

கவிதையா? தெய்வமே! மூன்று வரிகளில் எழுதப்படுவது ஹைக்கூ என்று அறிக!

சிஸ்ய பிள்ளைகளுக்கு, அடுத்த லெசன் - நல்ல சமாளிப்பு "பிளாக்கர் சொதப்புகிறது. எல்லாம் படிக்க முடிகிறது. ஆனால் கமெண்ட் போக மறுக்கிறது" என்ற சால்ஜாப்பே மிகவும் கைக் கொடுக்கும். ஊரில் இல்லை என்று சொன்னால், நீங்க படித்த இடத்திலே ஐ.பி அட்ரஸ் கண்டுப்பிடிச்சாங்கன்னா என்னாகும்? மறுப்பே சொல்ல முடியாமல், தவிக்க நேரிடும். ஆக, பிரச்சனை வந்தால், பிளாக்கர் மீது பழியைப் போட்டு விடவும்.

Muthu said...

//"பிளாக்கர் சொதப்புகிறது. எல்லாம் படிக்க முடிகிறது. ஆனால் கமெண்ட் போக மறுக்கிறது" //

தூள் ..கலக்கல்...

போக மறுக்கற கமெண்ட்டை பிடிச்சு தள்ளி விடுங்க..

( ஆமா..மூன்று வரி இருந்தால் அது கவிதை இல்லையா..நல்லவேளை..
நான் ஆசிப் மீரான் கட்சியாக்கும்)

ஏஜண்ட் NJ said...

//மூன்று வரிகளில் எழுதப்படுவது ஹைக்கூ என்று அறிக!// - said USHA.

அறிந்து கொண்டோம்! புரிந்து கொண்டோம்!! தெரிந்து கொண்டோம்!!!

அணில் முதுகில்
ராமர் தடவியதால்
வந்ததொரு ஹைக்கூ

அப்படியென்றால்
வரிக்குதிரை உடம்பில்
எத்தனை ஹைக்கூ?

:-))

ramachandranusha(உஷா) said...

தலே, தெரிந்துக் கொண்டோம் இல்லை தெளிந்துக் கொண்டோம்.

மூன்றுவரிக்கு மேற்பட்டவை அனைத்துமே கவிதை என்ற கட்டுமானத்தில் வரும். அது நூற்றம்பது வரியானாலும், ஓரே விதி- படிக்கட்டுகளாய் வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று வரிகள் என்றால் அய்க்கூ, இரண்டு வரிகள் என்றால் அதற்கு பெயர் சுணுக்கு.
ஒற்றை வரியில் கவிதை படைக்க முடியாதா என்றுக் கேட்டு விடாதீர்கள். கவிதை என்பது பார்க்கும் பார்வையைப் பொறுத்து! உதாரணமாய் காதலி, மூக்கு சிந்துவதுக்கூட காதலனுக்கு கவிதையாய் தெரியும்
( அதே மூக்கூ சிந்தல் கல்யாணத்துக்கு பிறகு கொடுங்கவிதையாய் மாறலாம்) ஆக, எது கவிதை என்பதற்கு இலக்கணம் எதுவும் இல்லை. கவிமனம் கொண்டவர்களுக்கு அனைத்துமே கவிதைதான்.

பி.கு ஞான்ஸ், எங்கே ஆளையே காணோம்?

Unknown said...

என் இனிய நண்பன் நிலாரசிகன் எழுதிய ஒரு வரி கவிதை இதோ

எனக்கு பிடித்த கவிதை

அவள் பெயர்

Anonymous said...

Please visit this

http://www.aaraamthinai.com/arasiyal/
states/2006/apr21state.asp

Till today i was not aware of this...

Priya said...

Wonderful.. I just love your blog. You write so well and hats off to yu.
Sorry, I do not have tamil fonts and forgive me for posting in english.

Keep up the good work!!

Machi said...

இப்ப புரியுது இட்லி வடை 2 மாசம் அலுவலக வேலையா வெளியில் போறேன் அதனால் இட்லி வடை கொஞ்ச காலத்துக்கு கிடையாதுன்னார், ஆனா அப்புறம் தான் இட்லி வடை சூடா ஒரு நாளைக்கு 2 பதிவு போட்டார். :-))
நீங்க கூட அலுவலக வேலை அதிகம் என்பதால் தமிழ்மணம் பக்கம் வர இயலாது அதனால் பின்னூட்டத்திற்கு உடனடியாக பதில் கூற இயலாது என்றீர்கள், ஆனா உடனே தான் பதில் குடுத்தீர்கள்.
இப்ப புரியது ஐயா புரியது :-))

Muthu said...

bala,selvan,priya and kurumban..
thanks

பினாத்தல் சுரேஷ் said...

இன்னொரு டெம்பிளேட் (காபிரைட் பினாத்தல்):

படிக்க முடிந்தாலும், பின்னூட்டம் இட முடியாத நிலையில் உள்ளதால், உங்கள் பதிவு அருமை என்று மட்டுமே சொல்லி விடை பெறுகிறேன்.

கவுஜையப்பத்தியெல்லாம் பேசறாங்கப்பா! கவுஜைக்கு ஒரே டெப்னசன்:

கவுஜர் எழுதறது, சிந்திக்கிறது, குறட்டை வுடறது எல்லாம் கவுஜ. மத்ததெல்லாம் கலீஜ! அம்புட்டுதேன் ம்மேட்டடு!

ஜெ. ராம்கி said...

அரசியல் கலப்பில்லத, இதே மாதிரியான ஒரு பதிவு இட்லி வடைக்குள் இருக்கும். அதையும் கொஞ்சம் refer பண்ணிக்கோங்க!

பொன்ஸ்~~Poorna said...

பிளாக்கர் சொதப்புகிறது. எல்லாம் படிக்க முடிகிறது. ஆனால் கமெண்ட் போக மறுக்கிறது :) :)

Anonymous said...

//இப்படியெல்லாம் எழுதாதீர்கள்.எத்தனை நாள் இருக்கபோகிறோம்?. எல்லோரும் நண்பர்களாக இருப்போம்//

ஆஹா., முத்து கலக்கியிருக்கிங்க., கடைசில நல்லா இருங்கன்னு வாழ்த்தனும், எதுக்கெடுத்தாலும் வக்கனையா பழமொழி சொல்லிட்டு., தனியா மெயிலுப் போட்டு எனக்கு தமிழு தாய் மொழி இல்ல., ஷ்பானிஸ்தான் தாய்மொழின்னு நீலிக் கண்ணீர் வடிக்கணும். 'ஜோ' கலக்ஸ்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்ல நகைச்சுவைப் பதிவு[எதையும் எழுதத் தெரியலேன்னா, நான் இப்படி எழுதிக்கிறது -)] பதிவ படிச்சதுக்கு ஒரு acknowledgement -)-)

தருமி said...

என்னா கற்பனை வளம'ப்பா! (எதையும் எழுதத் தெரியலேன்னா, நான் இப்படி எழுதிக்கிறது -)] பதிவ படிச்சதுக்கு ஒரு acknowledgement -)
சிவாவின் மூலத்திற்கு (!) நன்றி. I mean... நான் என்ன சொல்ல வந்தேன்னா....சரி, விடுங்க.

:)

ரவி said...

///"மச்சான், காலைல சாப்பாட்டுக்கு கோவிலில் தேங்காய் பொறுக்கணும்னு சொன்னியே..போகலையா", ///

ரசித்து சிரித்தேன்...

நாமக்கல் சிபி said...

இரண்டு பாகங்களையும் இன்றுதான் படித்தேன்!

நல்ல நகைச் சுவைதான்.

:))

Muthu said...

தூங்கிட்டிருந்த சிங்கத்தை எழுப்பி மூணு காமெண்ட் வாங்க வைத்த அருமை அண்ணன் வாழ்க

நன்றி தருமி,சிபி,ரவி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்தப் பதிவு இன்றுதான் என் கண்ணுக்கு பட்டது. இது எழுதும் பொழுது நான் தமிழ் மணத்திலேயே இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். இருந்தாலும் படிக்கும் பொழுது குத்துகிறது இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

Muthu said...

kumaran,

உங்களுக்கு மட்டுமா குத்துச்சு? :))

Sivabalan said...

முத்து,

// 1. விவாதம் செய்பவனை கேப்மாரி என்று நிரூபிக்கும் அதே வேளை நாம் புனித பிம்பமாக ஆட்டோமெடிக்காக ஆகிறோம். Hero + Zero = Hero. simple. //

இது அருமை... உண்மை...

கலக்கிடீங்க...

மனதின் ஓசை said...

எப்படி முத்து இப்படியெல்லாம்?.. கலக்கறீங்க போங்க.. :-)

Muthu said...

மனதின் ஓசை,

கககபோ...:))