Monday, April 10, 2006

சம்மரை சகித்துக்கொள்ளுங்கள்

நான் ஒரு புதிய பதிவு போட வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி கூறி தொடங்குகிறேன்.(நன்மனம் என்னை மன்னிச்சிருப்பா)

"வந்தனம்.வந்தனம்.வந்த சனம் குந்தணும்."
"என் கதையை படிச்சி பாருங்கோ மனசு மகிழ
பின்னூட்டம் கொடுத்து பாருங்க"

(சினிமா பாட்டு மெட்டில் படிக்கவும்)

சரி.விஷயத்துக்கு வருவோம்.

ஐயா, நான் பெரிய சிந்தனையாளன் கிடையாது.எனக்கு வாசிப்பும் கம்மிதான். ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். கடந்த ஆறு மாதமாகத்தான் தமிழ் இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறேன். வீட்டில் ஆள் இல்லை.சம்மர் வெகேஷனுக்கு ஊருக்கு அனுப்பியுள்ளேன்.எனக்கு எந்த பிராஜக்ட்டும் இல்லை என்றால் ஃப்ரியாக இருந்தேன் என்றால் தினமும் இரண்டு பதிவுக்கூட போடுவேன்.இதற்கு உங்கள் அனுமதி தேவையா எனக்கு?என்னுடைய இந்த வார பதிவுகளை பலவும் ரியாக்சன் தான்.இதில் என்ன உங்களுக்கு கஷ்டம்? வருத்தம்?

என்னுடைய பதிவுகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரியும்.அது என்னவென்றால் புதிய அரிய கருத்துக்களை என்று நான் எதுவும் சொல்வதில்லை. என்னுடைய முறையில் இன்டர்பிரெட் பண்ணுவது மட்டுமே என் வேலை.

ஆனால் எனக்கு ஒரு புதிய வேஷம் போடும் பணி இங்கு நடக்கிறது. நண்பர்களையும் எனக்கு எதிராக திருப்பிவிடும் திரித்தல் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அங்கங்கே பார்க்கிறேன்.சாதி மதம் எப்போதுமே டென்சன்தான்.ஆனால் யாரையும் நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுமைப்படுத்தியோ திட்டியதில்லை. வரலாறு அப்படி இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடலில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அங்கு வருகிறேன்.சடாரென்று கீழே விழுந்து கையை, காலை உதைத்துக்கொண்டு அய்யோ, என்னை அடிக்கிறான், உதைக்கிறான் என்று அலறினேன் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருக்கிறது எனக்கு உங்களின் அணுகுமுறை.இதை முதலில் பார்க்கும் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?இதையெல்லாம் மீறி நான் இங்கு பல நண்பர்களை பெற்றிருந்தாலும் இந்த திரி்த்தல்களினால் நண்பர்களை இழந்துவிடுவேனோ என்ற பயமும் இருக்கிறது.அந்த பயத்தில் போட்டதுதான் இந்த பதிவு.

சரி.இதற்கு தீர்வு என்ன? அதையும் பார்ப்போம். உங்களுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் நீங்கள் வைத்துள்ளீர்களே அந்த டெம்பிளேட் டாகுமெண்ட். அதை டெலிட் செய்யவும்.

"ஒரு சாராரை இரக்கமில்லாமல் தாக்குகிறார்கள்"

"முஸ்லீம்களை பார், கிறிஸ்துவர்களை பார்"

"இந்து மதத்தில் தான் உனக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்துள்ளோம்"

"வீட்டை திருத்திவிட்டு வீதிக்கு வா"

(நம்முடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் பொண்டாட்டி ஒத்துக்கணும்னா இங்க எவனுக்கும் பொண்டாட்டி இருக்கமாட்டாங்க- இது என் கருத்து)

இதுபோன்ற வாக்கியங்களை அடக்கிய அந்த டாகுமெண்ட்டை டெலிட் செய்துவிட்டு குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்து இந்த டெம்பிளெட்டை காப்பி செய்து பின்னூட்டம் இடும் பழக்கத்தை நிறுத்தவும.இது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.பின்னர் பழகி விடும்.

இல்லையென்றால் உங்கள் பதிவில் ஏதாவது எழுதுங்கள்.யாரும் படிக்கக்கூடாது என்று இருக்கிறதா என்ன? துக்ளக் கூட நல்ல விற்பனையாகிறது என்பதை கவனியுங்கள்.

ஏன் எனக்கு சிம்ரனை இன்னும் பிடிக்கும்,சங்கிலி பதிவில் என்னையெல்லாம் கூப்பிட்டார்களே என்று இருக்கும் பதிவுகளை படிக்கலாம்.ஞானவெட்டியான் எழுதும் பக்தி ரசம் கமழும் பதிவுகளை படியுங்கள். திருப்புகழுக்கு முன் திருமந்திரம் வந்ததா என்ற உருப்படியான விவாதங்களில் கலந்துகொள்ளுங்கள்.

இல்லை,நான் எல்லா பதிவுகளையும் படிப்பேன் என்றால் முதலில் பதிவின் தலைப்பை படிக்கவேண்டும்.பிறகு முழுப்பதிவையும் படியுங்கள்.பின்னர் காமெண்ட் என்ற பகுதியை தட்டினீர்கள் என்றால் நண்பர்கள் அங்கு அளித்த பின்னூட்டங்கள் வரும்.ஓரளவு எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பதை படியுங்கள்.பிறகு விவாதபூர்வமாகவும் லாஜீக்கலாகவும் அதை அலசி ஏதாவது உருப்படியாக எழுதவும்.உங்கள் டெஸ்க்டாம்ட் டெம்பிளேட்டை அழித்துவிட்டால் உங்களுக்கு சிந்திக்க சிறிது அவகாசம் கிடைக்கும்.

வாலி படத்தில் சிம்ரனை அஜீத் டாக்டர் மாத்ருபூதத்திடம் கூட்டிசெல்வார். நீங்கள் எல்லாம் போலி டோண்டுவை மனநோய் மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லவேண்டும் என்று கூறும்போதெல்லாம் எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.(உடனே நான்தான் போலி டோண்டு என்று எழுதினாலும் எழுதுவார்கள்)

கருத்துக்களில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நான் எப்படி பழகுவேன் என்பதை நிஜடோண்டுவிடம் கேளுங்கள்.அதை விட்டுவிட்டு அங்கங்கே சென்று பதிவுக்கு சம்பந்தமில்லாமல் என்னை கேரக்டர் அசாசினேஷன் செய்வதை விடுங்கள்.உங்களுக்கு கோடி புண்ணியம்.

நான் அப்பாவி.(அப்பாவிகளுக்கு மட்டும்)

என்னுடைய வருத்தத்தை புரிந்துகொள்ளும் நண்பர்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

16 comments:

முத்துகுமரன் said...

முத்து,

நண்பர்களை எதிராக திருப்பும் உத்தி பல காலமாக கடைப்பிடிக்கும் ஒன்றுதான். குரலை உயர்த்தினாலே உடனே ஒரு வண்ணத்தை அடித்துவிட துடிக்கிறர்கள் என்னய்யா செய்ய:-(((

மனைவியின் சுயசிந்தனைகளுக்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதே ஒருவனின் இயலாமையாக சித்தரிக்க முனைவது ஆணாதிக்க அருவருப்பின் உச்சம். அவர்கள்தான் பேசுகிறார்கள் சந்தணமனம் கமழ சமத்துவத்தையும்! சமதர்மத்தையும்!!

நிறைய எழுதலாம். சோம்பலாக இருக்கிறது

தனிமடல் போடுகிறேன்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வணக்கம் முத்து...
இது மாதிரி ஏடாகூடம ஆகிடக்கூடாதுன்னு தான் நான் அடக்கி வாசித்து வருகிறேன்.
இன்றோடு மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன்.
இனி எல்லாவற்றுக்குமாய் பதிவு போடுவது மட்டும் தான் என் வேலை. என முடிவு பண்ணியாச்சு தல.. வாங்க.. கைகோர்ப்போம்...

நன்மனம் said...

//நான் அப்பாவி.(அப்பாவிகளுக்கு மட்டும்)//

ஆகா, நமக்கு நண்பர் இருக்காருபா.

//...ஃப்ரியாக இருந்தேன் என்றால் தினமும் இரண்டு பதிவுக்கூட போடுவேன்.இதற்கு உங்கள் அனுமதி தேவையா எனக்கு?\\

நான் இல்லன்னு னனைக்கிறேன்.

//என்னுடைய வருத்தத்தை புரிந்துகொள்ளும் நண்பர்கள் ஆதரவை வேண்டுகிறேன்\\

கண்டிப்பாக ஆதரவு உண்டு.

ஸ்ரீதர்

ஜோ / Joe said...

//நான் அப்பாவி.(அப்பாவிகளுக்கு மட்டும்)//

ஐயா! நானும் ஒரு அப்பாவி தானுங்கய்யா! நம்புங்கய்யா!!ஹி..ஹி

முத்துகுமரன் said...

சம்மரை சகித்து கொள்வார்கள். சமர் என்பதால்தான் குதிக்கிறார்கள் முத்து;-))

Anonymous said...

முத்து, சும்மாவா சொன்னாங்க "நெனப்பு பொழப்ப கெடுங்க்குதுன்னு :-)

// இன்றோடு மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன்//

பாலபாரதிக்கு, "கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா என்ற பாடலை டெடிகேட் செய்கிறேன் :-))))))))))))

gulf-tamilan said...

கண்டிப்பாக ஆதரவு உண்டு. continue!!

tbr.joseph said...

ஏங்க முத்து,

உங்க பதிவுல நீங்க சொல்றதும் புரியல.. அதுல வந்துருக்கற பின்னூட்டங்கள்ல இருக்கறது புரியல. கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன். மறுபடியும் ஒரு வாக்குவாதம் பண்ணலாம். டென்ஷனாவது குறையும்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

// Anonymous said...

முத்து, சும்மாவா சொன்னாங்க "நெனப்பு பொழப்ப கெடுங்க்குதுன்னு :-)
பாலபாரதிக்கு, "கைய வெச்சிக்கிட்டு சும்மா இருடா என்ற பாடலை டெடிகேட் செய்கிறேன் :-)))))))))))//
பெயரில்லா.. யானை(எத்தனை காலத்துக்கு பூச்சின்றது?) அனுப்பிய பாடல் இன்னும் வந்து சேரலிங்கோ... :)))))))))))))))))))))))))))) (இது தான் பெரிய இளிப்பு..)

Dharumi said...

நம் தமிழ்ப் பதிவர்கள் நடுவில் இதெல்லாம் 'சகஜம'ப்பா...

முத்து(தமிழினி) said...

பின்னூட்டங்களிலும் தனிமெயில் அனுப்பியும் ஆறுதல் அளித்த நண்பர்களுக்கு நன்றி

SK said...

தங்களது வாதங்களில் எனக்கு உடன்பாடில்லாத சில கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து வைத்தது தவிர, தனிப்பட்ட முறையில் எந்தவொரு அவமதிப்பும் செய்ய வில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
எவ்வகையிலாவது தங்களின் மன உளைச்சலுக்கு நான் காரணமாயிருப்பின், அதற்காக வருந்துகிறேன்.
நான் ஒன்றும் 'டெம்ப்லெட்' எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.! :-)

பலமுறை காயப்பட்டதின் விளைவே, இந்த 'முத்திரை' குத்துபவர்களை நோக்கி எய்த தற்காப்பு அம்பு!
அது உங்களை வலிக்கச் செய்தது என்பது வியப்பே!
மேன்மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

பி.கு.1: இதைத் தனிமடலாக எழுதாமல், படிவிலேயே எழுதுகிறேன்.
பி.கு.2: இதனாலெல்லாம் ஒருவர் திருப்பி விடப்பட்டார் என்றால், அவர் நன்பரே அல்ல! அது நட்பின் இலக்கணமும் அல்ல!

முத்து(தமிழினி) said...

சரி,விடுங்க..எஸ்.கே

நேரடியாக எழுதி விளக்கமளித்ததற்கு நன்றி.

இதுவெல்லாம் தமிழ் பிளாக்கில் ஜகஜம் என்று தருமி கூறியது புரிகிறது.
பு ஒரு சைடு எஃபக்ட்டாக ஒரு கவிதை(?) எழுதி உள்ளேன்.தமிழன்னைக்கு என்னவெல்லாம் சோதனை காத்திருக்கிறது பாருங்கள்.

(உணர்ச்சி வசப்பட்டால்தான் கவிதை வரும் என்பது உண்மைதான் போலும்)

எஸ்.கே,நட்பை பற்றிய உங்கள் காமெண்ட்டுக்கு மட்டும். மனித உறவுகளை அவ்வளவு கறாராக மதிப்பிட முடியுமா என்ன? கருத்துக்களை மீறி நான் நண்பர்களாக நினைக்கும் சிலர் என்னை நண்பர்களாக நினைக்கவில்லை என்றால் எனக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும்.

Anonymous said...

என்ன முத்து,

சாரு நிவேதிதா மாதிரி நெலம ஆயிடிச்சு?
மனச தளர உடாம பதிவுகள போட்டுத் தாக்குகுங்க.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனானி என்ற அனானிமஸ் (சீனியர் ஞாபகம் இருக்கா? ) ;-}

முத்து(தமிழினி) said...

தலைவா,

அரசியல்ல இத்தெல்லாம் ஜகஜம் என்று பலரும் சொல்லிட்டாங்க..பாத்துக்கவோம்...நீங்க யாருண்னு மட்டும் சொல்லுங்க..

எனக்கு நாத்திரியெல்லாம் தூக்கமே வறதில்லை:)))

நன்றி புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு

வெங்காயம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் முத்து.

அவங்க கிடக்கிறார்கள் விடுங்கள்.

அவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினால் நல்லவர்கள் என்பார்கள். ஆட்டாவிட்டால் கெட்டவர்கள்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?