Sunday, April 09, 2006

ரவிசீனிவாசின் பதிவை முன்வைத்து...

உயர்கல்வியில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்ற விஷயத்தை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனக்குரிய இடத்தை இந்திய அரசியலில் கேட்பதற்காக இதை எடுத்துக்கொண்டாலும் இதில் தவறு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.என் "பிற்போக்கு" கருத்துக்களை விரிவாக பார்ப்போம். இதைப்பற்றி பத்ரி,ரவிசீனிவாஸ் ஆகியொர் எழுதியுள்ளனர்.

இடஒதுக்கீட்டின் அவசியம் பற்றி வேண்டிய அளவு பேசியாகிவிட்டது. இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தங்களாலான விஷம பிரச்சாரத்தை முடுக்க ஆரம்பித்தாயிற்று.ஆனால் பலரை பலநாள் ஏமாற்ற முடியாது என்ற பழமொழியை இங்கு நினைத்துக் கொள்வோம்.ஆகவே நாராயணமூர்ததிகள் உயிரை விட்டு கத்தினாலு்ம் இது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சில விஷயங்களை பார்ப்போம்.

கடந்த இரண்டு,மூன்று நாட்களாக என்.டி.டி.வி ஹெட்லைன்ஸ் டுடே ஆகிய சேனல்களில் இதுதான் பேச்சு.வழக்கம்போல் இந்தியா இதனால் நூறு வருடம் பின்னோக்கி போவதாக அறிவுஜீவிகள் புலம்ப ஆரம்பித்தாயிற்று. நான் பார்த்த சேனல்களில் இருந்து சில சுவையான காட்சிகளை இங்கே போடுகிறேன்.

இப்போது இங்கள்ளாம் உலகத்தரமான மாணவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவர்களை சேர்த்தால் தரம் குறைந்துவிடும் என்பது ஒரு பொது குற்றச்சாட்டு. இவர்களை பார்த்து ஒருவர் கேட்டார்.

"ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு இங்கெல்லாம் இடஒதுக்கீடு உள்ளது. தரம் உள்ளது என்பதையும் ஒத்துக்கொள்கிறீர்கள். அப்போது உள்ள தரம் இப்போது பிற்படுத்தப்பட்டோர் வந்தால் மட்டும் எப்படி தரம் குறைந்து விடும் என்கிறீர்கள்?" குரூரமான கேள்விதான். ஆனால் பாயிண்ட் உள்ளது என்று எனக்கு தோன்றியது.


ஆனந்த அதிர்ச்சியாக பி.ஜே.பி தலைவர் ஒருவர் பேசியதை போடுகிறேன். மகராஷ்ட்ராவை சேர்ந்த அவர்

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் பொதுபிரிவில் உள்ள கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் கடைசி தேர்வில் உள்ள வித்தியாசம் என்ன?"

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள முதல் ஆளுக்கும் பொது பிரிவில் உள்ள கடைசி ஆளுக்கும் மதிப்பெண் வித்தியாசம் என்ன?"

இதில் தரம் எங்கே குறைகிறது என்று கூறுங்கள் என்றாரே பார்க்கவேண்டும். அந்த நிகழ்ச்சியை நடத்திய காம்பியர் அழாக்குறையாக ஆகிவிட்டார். பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முற்போக்குவாதிகள் இதையெல்லாம் எதிர்ப்பார்கள் என்பது தெளிவு.இதை சொன்ன அந்த பி.ஜே.பி பிரமுகர் தொடர்ந்து இடஒதுக்கீடு அவசியம்தான்.ஆனால் அது மைனாரிட்டி கல்வி நிறுவனங்களிலும் வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று போட்டார் ஒரு போடு.என் தனிப்பட்ட கருத்தும் அதுதான்.


அப்துல் கலாம் ஒரு உருப்படியான யோசனை தெரிவித்தார். இடத்தை அதிகப்படுத்துங்கள். இடஒதுக்கீட்டை அறிவியுங்கள் என்பதுபோல என்று நினைக்கிறேன். "நடுநிலைமைவியாதிகள்"(கொத்ஸ் கவனிக்க) அதையாவது ஒத்துக்கொள்ளவேண்டும். அதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒருவர் கேட்டார்."பலபேர் வெளிநாட்டுக்கு படிக்க போகிறார்கள் என்கிறீர்கள். உங்களிடம் உலகத்தரமான கல்வி இருப்பதாக கூறுகிறீர்கள்.ஏன் இங்கேயே சீட்களை அதிகப்படுத்தி இடஓதுக்கீட்டையும் அளித்து அனைவரும் முன்னேற வழிவகை செய்யக்கூடாது"

இதற்கும் நேர்மையான பதிலை காணோம்.நாங்கள் மட்டும் முன்னேற வேண்டும் என்பதுதான் எண்ணம்.இதை வெளியே சொல்லமுடியுமா?

என்.டி.டி.வியில் இன்னும் சுவாரசியம். காஞ்சி இலையா முதலிய தலித் ஆக்டிவிஸ்ட் முதலியோரை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இலையா பிற்படுத்தப்பட்டோரை ஆதரித்தே பேசினார். தலித்துக்களை பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக திருப்பிவிடும் சமயோசிதம் அவரிடம் பலிக்கவில்லை போலும்.

அவர் என்ன சொன்னாலும் பார்வையாளர் பகுதியில் இருந்து சில முட்டாள்கள் ஆட்சேபித்துக்கொண்டே இருந்தார்கள்.அவர் கூறிவிட்டார்.முழுக்க முழுக்க முன்னேறிய சாதியினரை கொண்டுவந்து இங்கே உட்கார வைத்துள்ளீர்கள். இவர்கள் அப்புறம் என்ன செய்வார்கள் என்றார்.

நிகழ்ச்சி அமைப்பாளர் ஒரு சாகசம் செய்தார்.இங்கே எத்தனை பேர் முன்னேறிய சாதி என்று கேட்க பெரும்பான்மையோர் கைதூக்கினார்கள்.அடுத்த டுவிஸ்ட்டாக இதில் தலித் இடஒதுக்கீட்டை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பவர் எத்தனை பேர் என்றார்.(பாருங்க.எவ்வளவு சாதுரியம்.சகுனிவேலை என்று).

ஆனால் சுயநலமே வாழ்க்கை என்றாகிவிட்ட இந்தியாவின் முன்னேறிய இளைய தலைமுறை எந்த ஒரு இடஒதுக்கீட்டையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்று ஒரே குரலில் கூறிவிட முகத்தில் வழிந்ததை துடைத்துக்கொண்டார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

அதாவது இவர்கள் நம் நாட்டு ஐ.ஐ.டியிலும் அல்லது ஐ.ஐ.எம்மிலும் படித்துவிட்டு நாஸாவிலும் அமெரிக்கன் மல்டிநேஷனல் கம்பெனியிலும் செட்டிலாகவேண்டுமாம்.ஆனால் மூவாயிரம் ஆண்டுகளாக( ஓ.நோ) அடிபட்டவன் முன்னேற கூடாதாம்.நல்லா இருக்குங்க உங்க முற்போக்கு.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு எப்படி பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய ஆட்களுக்கு செல்லாமல் டிசர்விங் மாணவர்களுக்கு அளிப்பது என்பதைப்பற்றி ஒரு பாஸிடிவ்வான கருத்தையோ அல்லது விவாதத்தையோ முன்வைக்காமல் இடஒதுக்கீடே கூடாது என்பது என்ன நியாயம்?

என்னுடைய பழனிச்சாமி பதிவில் தங்கமணி எழுப்பிய கேள்வி முக்கியமானது. இடஒதுக்கீடு பிச்சை என்று நினைக்காதீர்கள்.அது மக்களின் உரிமை.இந்த விஷயத்தை பேசி தீர்க்காமல் மற்றதை பேசவே கூடாது.முடியாது.

32 comments:

Anonymous said...

Well said muthu. If the reservation is successfully implemented, BC/OBC's will get 1333 seats in IIT.

The brahmins (incl the press) are jumping as if the whole world is going to crash. What difference these 1333 students can make??

Why cant they agree to this change??. What is the big deal??

What happend to the earlier graduates from IIT? As far as I know all of them are interested in overseas job and ran away from India.

அருண்மொழி said...

Muthu,

I think the problem is with the BC/SC & ST.

When the 3% brahmins are making such a noise, what happend to the rest of the folks who will be benefitted by this reservation.

The current generation youth thinks that everything is for granted. They never realize how much their elders suffered and fought to get to the current status.

The BC's must get into the streets and show massive support to the reservation. I hope they realize and do it.

Dharumi said...

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு எப்படி பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய ஆட்களுக்கு செல்லாமல் டிசர்விங் மாணவர்களுக்கு அளிப்பது என்பதைப்பற்றி...// பிடித்த கருத்து. வழி பிறக்குமா?

Pot"tea" kadai said...

அவசியமான பதிவு!

மேலும் ரவிசிரீனிவாஸின் பதிவிற்கு இணைப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

கீதா சாம்பசிவம் said...

படித்து முன்னேறும் எந்த ஜாதிக்காரரையும் எந்த பிராமணராலும் அதுவும் open competition-ல் வரும் மிகச் சொற்பமான பிராமணர்களால் என்ன செய்யமுடியும்? அவர்கள் கவலை அவர்களுக்கு. ஆகவே நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது மற்ற முன்னேறிய சமூகத்தைதான். என் வீட்டில் வீட்டு வேலைக்கு உதவும் பெண்ணின் மகள் வயதுக்கு வந்து விட்டாள். உடனே அவள் மகள் படிப்பை நிறுத்தி விட்டாள். நான் இன்னும் பலர் எத்தனையோ சொல்லிக்கூட. அவள் சொல்வது எழுதப் படிக்கத் தெரியுமே, காலத்துக்கும் அது போதும். இப்ப இருந்து வேலை பழகினால் நாலு காசு சேர்த்து வைத்துக் கல்யாணம், காட்சி செய்ய வசதியாக இருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள். ஆண்கள் கூட வாரம் 500 லிருந்து சம்பாதிக்கிறோம் என்று படிப்பை நிறுத்துகிறார்கள். இவர்களை யார் கட்டாயப்படுத்தினது?

முத்து(தமிழினி) said...

இன்னும் ஒரு தலித் ஆக்டிவிஸ்ட் என்.டி.டி.வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசியதையும் பார்க்கமுடிந்தது.
தகவலுக்காக

முத்து(தமிழினி) said...

geetha sambasivam karuthukum ungal kadamai unarvirkum nanri

முத்து(தமிழினி) said...

http://ravisrinivas.blogspot.com/2006/04/blog-post.html


the above is Mr.ravi srinivas post

Anonymous said...

You should read the article by B.P.Mehta in Indian Express.To allot 27% just on the basis of caste is a mockery of the principle of equality.The
govt. cannot treat some citizens
as second class citizens on the basis of caste.Do you know that none of the dravidian parties are in favor of excluding the creamy layer in OBCS from reservation.
They want reservation for gransons of Karunanidhi and Ramadoss so that they can corner all benefits.
Children of Dayanidhi and Kalanidhi Maran will get seats
under OBC quota.

முத்து(தமிழினி) said...

dear anony,

i agree with you..there should be some creamy layer concept...

thanks and cheers

muthu

Prasanna said...

Hi Muthu

Looks like you were slightly suprised BJP' reaction to this proposal

For your kind information,BJP is one of the few very Parties(non-dravidian) that has consciously engaged in social engineering.Many powerful leaders of BJP who occupied Chief Minister/deputy Posts are from the OBC groups-Kalyan Singh,Uma Bharthi,Narender Modi,Yediyuraapa,Sushi Modi
This might be a suprise-Mr Advani himself comes from a Sindhi sub caste which is a OBC group

Its only the communsit dominated Media like the The Hindu(N.Ram is a card carrying communsit member),NDTV(owned by Prannoy Roy who is the brother-in-law of Prakash Karat CPM general sec) who are bitterly waging a campaign against this proposal

If one goes by the the letters from The Hindu Readers,it seems everyone is against this proposal-which is quite untrue

Ram incessantly editorializes and speaks on friendly forums about the so-called upper caste bias of BJP /need for social diversity in employment policies.But lets examine the social composition of its employees .Editors/Sub-Editors /Reporters/Staff of this newspaper is completely dominated by Triplicane / Mylapore Brahmins (I have nothing against this but the hypocrite Ram should set his own house in order)

Incidentally communist institutions in India are dominated by Upper Caste and Brahmins(Mukherjee/Banerjee/Chaterjee/Bhattacharya/Karat/Yechury)But their hardcore ideologues ,masquerading as media columnists cry hoarse that BJP and its allied organization are dominated by upper castes (I disagree with many of their regressive politics but to the give the devil its due its a indisputable fact that BJP one of the few political parties that consciously did “Social Engineering” to give representation to all caste groups)

On the reservation,my personal view point ,its is positive step(though Arjun Singh IS A CYNICAL MANIPULATOR with fundamentally no concern other than votes).but creamy layers criterion should definitely be included

முத்து(தமிழினி) said...

PRASANNA,

thanks for this ..

to be frank iam getting few comments like yours which is worth to think it over..

but whether obc's are given due respects in BJP?


regarding communists your arguments are true and needs to be given some thought..

some work..detailed response later..can you give your email in separate mail?

cheers
muthu

நன்மனம் said...

//ஆனால் சுயநலமே வாழ்க்கை என்றாகிவிட்ட இந்தியாவின் முன்னேறிய இளைய தலைமுறை\\

இந்த வரிகளை விவாததிற்கு எடுத்து கொண்டால், அடுத்த தலைமுறை பயணடையும். இது விவாதத்திற்கு வர எவ்வளவு நாள் ஆகிறது என்று பாற்போம்.

ஸ்ரீதர்

Anonymous said...

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் பொதுபிரிவில் உள்ள கடைசி ஆளின் மதிப்பெண்ணுக்கும் கடைசி தேர்வில் உள்ள வித்தியாசம் என்ன?"

"பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள முதல் ஆளுக்கும் பொது பிரிவில் உள்ள கடைசி ஆளுக்கும் மதிப்பெண் வித்தியாசம் என்ன?"

In Tamil Nadu the difference between cut off marks for open
competition and for BCs in Engg and medical entrance is
insignificant.In other words BCs
are performing as good as, perhaps
better than the so called forward castes. So why they deserve a separate reservation. The so called
BCs are dominating in every field.So to call them as BCs is a misnomer.Nadars, Gounders and Thevars are dominant in business and agriculture in Tamil Nadu.
But someone who has benefitted from
Mandal and other forms of reservation will never accept the fact that at least in Tamil Nadu the backward castes no longer need reservation. You have a vested
interest in perpetuating reservation.It is no wonder that you support this also.Why dont you demand a quota for OBCs in
Indian cricket team and hockey team.You can also demand at 27% of the actors and actresses in each film should be from OBCs.

முத்து(தமிழினி) said...

//Indian cricket team and hockey team.You can also demand at 27% of the actors and actresses in each film should be from OBCs//

இது அவ்வளவு புத்திசாலித்தனமான வாதமாக படவில்லை. போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்க நாட்டுக்காக விளையாடுவது வேறு என்று என் சிறுமூளை கூறுகிறது.

நாசாவில் வேலைக்கு போகத்தான் நானும் கேட்கிறேன் என்று நீங்கள் சொன்னால் hats off to you boss

முத்து(தமிழினி) said...

//In other words BCs
are performing as good as, perhaps
better than the so called forward castes//

if it is so then give some positive suggestions to remove this category from benefits..dont fire house to kill rats (iam poor in englipish)

தயா said...

தரம் இருக்காது என்றால் அவர்களின் தரத்தை எங்கே மேம்படுத்துவது?

வசதியில்லாமல் படிப்பை பள்ளிஅளவிலேயே நிறுத்தி விடுபவர்கள் தான் அதிகம்.
இட ஒதுக்கீட்டை கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதை விட பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி தரத்ததை மேம்படச் செய்து கல்லூரிகளுக்கு செல்வதற்கான வசதிகளை செய்தால் உருப்படியாக இருக்கும்.

இதை செய்தால் மேற்படிப்குளுக்கு போட்டியிடுபவர்களின் திறன் ஒரே நிலையில் இருக்கும். அவர்கள் படிப்புச் செலவை கூட ஏற்றுக்கொள்ளலாம்.

உண்மையிலேயே படிக்கும் ஆசை உள்ளவர்களும் திறமையானவர்களும் இட ஒதுக்கீட்டில நுழைவது தான் நல்லது. ஆனால் நடப்பது என்ன? வசதியான வீட்டு பிள்ளைகள் இட ஒதுக்கீட்டு முறையால் ஒரு பெருமைக்காக மருத்துவ தொழிநுட்ப கல்லூரிகளில் நுழைந்து விடுகிறார்கள். இவர்களிடம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொள்வது?

இங்கே நடப்பது ஓட்டுக்காக் தான். அதனால் தான் நோய் நாடாமல் நோயின் அறிகுறைகளை சரிப்படுத்தத்துகிறேன் என வித்தை காட்டுகிறார்கள்.

முத்து(தமிழினி) said...

improve the standard of education in primary level is a good alternative..

but you are not posting enough teachers first...

proper control over teachers is also not there...

identifying deserving people is a primary task...i agree daya with most of your concerns

தயா said...

//but you are not posting enough teachers first...

proper control over teachers is also not there...//

ஐயா கேட்டீங்களே ஒரு கேள்வி. அதை பதிவாப் போடுங்க.

இந்த தொலைகாட்சிகளும் பரபரப்புக்காக விவாதாங்களை ஆரோக்கியமில்லாமல் திசை திருப்பிவிடுகின்றன. உருப்படியான யோசனைகளை சொல்லி அடிப்படை மாற்றங்களை உண்டாக்குவது தான் நல்லதாக இருக்கும்.

முத்து(தமிழினி) said...

geetha sambasivam,

நன்றிகள் பல.


தயா,

அதைப்பற்றியும் எழுதலாம்.நன்றி தயா.இது ஒரு உருப்படியான விவாதமாக இருக்கும் என்று நம்புவோம்.

Anonymous said...

//ஆண்கள் கூட வாரம் 500 லிருந்து சம்பாதிக்கிறோம் என்று படிப்பை நிறுத்துகிறார்கள். இவர்களை யார் கட்டாயப்படுத்தினது?//

naanga enna bil gates paarambaraya 500 matum pothum enbatharku

amma athavathu(oru vaarathuku 100) keedacha pothum sollurom

en ethir veetu kathaiyai keelungal...

ivar oru punchar kaadai nadathuhirar(ivvarudaya appa oru freedom fighter appaidnu sonnar...anal avarum puncher specialist) 20 varudangal puncher ootyinar thanudaya kudumpathukaha

avarudaya heartla oru holes athuku puncher poda ivarukitta paanam illai irranthu poonar

11 std paadikum ivarathu paayan puncher poda vanthutan avanathu kudumpathukaha (oru naal varumanam 25/-)

ivvanudaiya sahotharen 6 std padithu varuhiran(ivvanai eppadiyavathu oru resan kaadielavathu vella seya vaikkanum enbathu thaan ivanudaya amma vin kaanavu ..iit,anna university illanga samy...

naatai kaatikoduthavanuku parlimentil seelai avvanathu kootathargal thalaivargal, avvargalathu pillaigaluku americavil paadipu...

etho onu rendu idaothikitil naala irruku, innum innum konja pannalam endru intha arasangam try pannuthu

athulaa enn? thaye mannu allipoduringa

gandhi ayave pootu thalunavanga inthaa natulla periya periya paathavyil irrukum poluthu

naanga enn samy innum onan,panni,naari poodikanum?????

-swamy red bull

Dharumi said...

IIT, IIM முடிச்சிட்டு எங்கேயோ இருந்து இந்த விஷயத்தைப் பற்றி எழுதுபவர்களின் பதிவுகளை வாசிப்பதைத் தவிர்த்து விட்டு, இந்தியாவில் இருந்துகொண்டு எழுதும் பதிவர்களின் பதிவுகளை மட்டும் வாசிக்கலாமென முடிவெடுத்துள்ளேன்.

முத்து(தமிழினி) said...

மதுரை நக்கல் உங்களுக்கு தெரியாதுன்னு ஜோசப் சார்கிட்டே கதை விட்டுட்டு இருக்கீங்க..


என்ன சார் நியாயம்?

முத்து(தமிழினி) said...

இன்று என்.டி.டி.வியில் மேலும் சில மாணவர்களை பேட்டி கண்டதை பார்க்கமுடிந்தது. தலித் பிரிவினை சேர்ந்தவர்கள் இவர்கள்.இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் ஆனால் பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு கொடுக்க தேவையில்லை என்பதாக சிலரும் ஒருவர் துணைகருத்தாக அடிப்படை கல்வியில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

ஆனால் தொகுத்துக்கூறிய சாம் டேனியல் இந்த மாணவர்கள் மீன் பிடிக்க வலைதான் கேட்கிறார்கள்.மீன் கேட்கவில்லை என்பதுபோல் ஒரு மேதாவி கருத்தை (வழக்கம்போல் திரித்து) கூறி நிறைவு செய்தார்.ஃபிக் ஃபைட் நிகழ்ச்சி மறுஒளிப்பு இன்று இருந்தது.ஒரே தமாஷ்தான்.


மெரிட் என்ற போர்வையில் இவர்கள் 90 சதவீதம் இந்தியாவை அபகரித்துவிட்டனர்.ஆனால் மக்கள் தொகையில் இவர்கள் 10 சதவீதம்தான் என்று புலம்பினார் ஒரு மாணவர்.

காஞ்சி இலையா மண்டல் கமிஷன் 90 ல் வந்ததே லேட் என்றார்.(நான் சொன்னதுதான் என்பதில் எனக்கு அல்ப சந்தோஷம்).இல்லை என்றால் இதை வீதியில் வைத்து போராடி தீர்க்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.(கொஞ்சம் கடுமையாகவே கூறிவிட்டார் என்று நினைக்கிறேன்)

பொதுவாக இந்த ஆங்கில செய்தி சேனல்கள் தங்களுடைய டார்கெட் குரூப் ஆடியன்ஸை திருப்தி செய்ய விரும்புகின்றன என்று நினைக்கிறேன்.

சரப்ஜீத் சிங் விவகாரம் போலவோ ஜெசிகா லால் விவகாரம் போலவோ இதில் ஒரு கருத்தை ஏற்படுத்த அவர்கள் முயன்றால் அது மூடத்தனம்.நேர்மை இல்லாத நோக்கம் வெற்றியடைவது கடினம்.ஆல் தி பெஸ்ட்.

Muse (# 5279076) said...

>>என்.டி.டி.வியில் இன்னும் சுவாரசியம். காஞ்சி இலையா முதலிய தலித் ஆக்டிவிஸ்ட் முதலியோரை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இலையா பிற்படுத்தப்பட்டோரை ஆதரித்தே பேசினார். தலித்துக்களை பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக திருப்பிவிடும் சமயோசிதம் அவரிடம் பலிக்கவில்லை போலும்.>>

Dear Thamizhini,

I too happened to watch the discussion intently. In my observation it looks that Mr. Kancha Illaiah was against giving reservations to the BC and OBC. He was telling that all the Dvijas (the two-born) have been exploiting the scheduled caste and scheduled tribes and this reservation is one of their tricks to exploit the scheduled caste/tribes.

There is also another dalit activist saying that the reservation should be given only to MBC.

Mr. Kancha Illaiah have been more violent and senseless in the discussion, shouting only violence will bring justice. He even called the audience out for a physical fight with schedule castes to decide who is right. A real Indian inteligentia.

What makes me wonder is how could you perceive something completely apposite to it? Or is it just the result of your interpretation on the belief that there is nobody watching such debates, or an urgent impulse to mingle in the stream of Indian inteligentia, which either support the rude and destructive leftists or clueless and whimsical hindu religious fanatics ignorant about hinduism?

I also wonder how come you missed the points put by other speakers, which are not answered properly.

Did you watch the "We the People" on the next sunday on the same channel where BC and OBC people shouted and walked out of the debate?

முத்து(தமிழினி) said...

sorry muse,

your observation is one sided..pls watch..illaih said that reservtion is late..it should have come much earlier....

if 100 fools are booing a old man violently in a discussion there is every chance one get frustrated

முத்து(தமிழினி) said...

//There is also another dalit activist saying that the reservation should be given only to MBC.//
this is have given in my one of my comments

முத்து(தமிழினி) said...

You can put some views which were
not answered properly there...

if entire media is ruled by so called forward castes such things are bound to happen..

pls put your unanswered questions..we will try here..

முத்து(தமிழினி) said...

other issues i have comprehensively covered in my article..thank you

சந்திப்பு said...

முத்து என்.டி. டி.வி. விவாதம் குறித்து நன்பர் மைக்கேல் கூறினார். அதை இப்போது நேரடியாக பார்த்ததுபோல் இருந்தது உங்கள் பதிவு. நல்ல சமயத்தில் பல விஷயங்களை அலசியுள்ளீர்கள். என்.டி. டி.வி. பார்வையாளர்கள் முன்னேறிய வகுப்பினர் பெரும்பான்மையாக இருந்ததில் இருந்தே, மீடியாவில் இவர்களது ஆதிக்கம் எப்படியெல்லாம் நீளுகிறது என்று பார்க்க வேண்டும். இந்த இடஒதுக்கீடு விஷயத்தை இன்னும் கூட நீட்டித்து அனைத்து தனியார்துறைகளிலும் கொண்டு வந்தால்தான் இவர்களின் தனித்திறமை என்ற அளப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இராமநாதன் said...

தரம் குறைந்துவிடும் என்றெல்லாம் கதைவிடுவது அநியாயம். என்னதான் குறைந்த மதிப்பெண் வாங்கிச் சேர்ந்தாலும் இறுதித்தேர்வு எழுதி பாஸ் செய்துதானே அவர்களும் பட்டம் பெற வேண்டும?. இல்லை இறுதித்தேர்வில் தனியாக ரிஸர்வேஷனில் வந்தவர்களுக்கு மட்டும் புத்தகத்தை கையில் கொடுத்து எப்படியாவது பாஸ் பண்ணிடுப்பா என்று சொல்கிறார்களா? இறுதித்தேர்வை முடிக்கவில்லையென்றால் பட்டம் இல்லை. இதில் தரம் எங்கே குறைகிறது?

ஆனால், creamy layer (இது மாறன் கோஷ்டி மட்டுமில்லை, பட்டதாரி பெற்றோர்கள் உள்ள மாணவர்களையும் சேர்க்க வேண்டும்) இதை exploit செய்வதை தடுக்க வழி என்ன என்றுதான் புரியவில்லை. ஜெ கொடுத்த H-முத்திரை ரேஷன் கார்ட் ஸ்டைலில் எதுவும் செயல்படுத்த முடியுமா?

இன்னொரு விஷயம், ரிஸர்வேஷனில் படித்தால் மட்டும் அவர்கள் நாட்டுப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்றும், முன்னேறிய சமுதாயத்தினர் நன்றியில்லாமல் நாசாவுக்கு ஓடுகின்றார்கள் என்பது நல்ல காமெடி. சான்ஸ் கிடைத்தால் ஓடுபவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள்.

-/சுடலை மாடன்/- said...

I just posted the following in Santhippu's blog:

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வது அந்நிறுவனங்களின் சுதந்திரமான இயங்கலுக்குத் தடையாக இருக்குமா இல்லையா என்று விவாதிப்பது வேறு. ஆனால் இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களில் எல்லாமே உயர்வாக இருக்கின்றன, அவை புனிதமானவை, விமர்சிக்கக் கூட யாருக்கும் உரிமையில்லை, விமர்சிப்பவர்கள் எல்லோரும் பிராமணர் வெறுப்பாளர் என்று திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசி வருவது வேறு. முன்னது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்தை விவாதித்து ஒரு முடிவுக்கு வர இயலும். பின்னது வெறும் சாதிய அரசியலின் வெளிப்பாடு, எந்தப் பயனுமில்லை. வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும், மூளையைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கூச்சல் இடும் சில வெண்ணைகளையும் விட விஞ்சி நிற்கும் இரவி ஸ்ரீநிவாஸ் உண்மையிலேயே ஒரு இடதுசாரிதானா என்று கேள்வி எழுகிறது.

நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன். இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான். மேலும் மற்ற கல்வி நிலையங்களைப் போன்று அரசியல்வாதிகள், காவல் துறை, பத்திரிகைகள் நேரடியாக தலையீடு செய்ய முடியாது, அதில் பெரும் நன்மை உண்டு என்றாலும், ஐஐடி-யின் புனிதப் பெயர் கெட்டு விடக் கூடாது என்று மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மேலும் பாதிக்கப் பட்டவர்கள் இந்தப் புனிதப் பெயரை மீறி எதுவும் செய்ய நினைத்தால் அவர்களின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு தங்களை இன்னும் தர்மசங்கடங்களுக்குள் ஆளாக விரும்புவதில்லை.

சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையும், பாகுபாடும் மற்ற கல்வி நிலையங்களைப் போலவே ஐ.ஐ.டி.யிலும் உண்டு. மற்ற பல்கலைக்கழகங்களில் பிராமணரல்லாத மேல்/நடுச் சாதியினர் ஆதிக்கம் போலவே, ஐ.ஐ.டியில் பிராமணர்களின் ஆதிக்கம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தெலுங்குப் பிராமணர், தமிழ்ப் பிராமணர் மற்றூம் கன்னடப் பிராமணர் என்று அவர்களுக்குள்ளும் தங்கள் குழு மனப் பான்மையையும், ஆதிக்கத்தையும் காண்பிப்பதுண்டு. சென்னை ஐ.ஐ.டி.யின் எதிரே இருக்கும் CLRI-யில் தமிழ் அய்யர் - தமிழ் அய்யங்கார் என்றும் கூடப் பதவிப் போட்டிகளில் வெளிப்படையாக நடந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன்.

பிராமணர் இல்லாத சாதியினர் திறமையிருந்தும் புறக்கணிக்கப் பட்டதற்கு, இழிவாக நடத்தப் பட்டதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி வெளிப்படையாக எதிர்த்துப் போராடி வருகிறார். அவர்கள் அல்லாமல், வேதியியல் பேராசிரியர்கள் பி.டி. மனோகரன், இயந்திரவியல் பேராசிரியர் வேலுசாமி போன்றவர்கள் எப்படியெல்லாம் நடத்தப் பட்டார்கள் என்று அவர்களது துறையில் உள்ள மாணவர்களையும், ஊழியர்களையும் கேட்டால் தெரியும். மேலும் பெரும்பாலான துறைகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதிலெல்லாம் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களுக்குச் சால்ராப் போடுபவர்களையும் போட்டு நிரப்பி வந்துள்ளனர். இதில் பிராமணர்களில் தகுதியான பலர் கூட நிராகரிக்கப் பட்டுள்ளனர். இதையெல்லாம் நான் சொல்லுவதன் காரணம், பிராமணர்கள் மேல் மட்டுமேயான காழ்ப்புணர்ச்சியால் அல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெரும்பாலோர் திறமைக்கு முக்கியம் தராமல், சட்டத்துக்குப் புறம்பாகக் கூட தகுதியில்லாதவர்களை பதவிகளில் நிரப்புகின்றனர். அதற்கு சாதிய மேலாதிக்கக் குணமும் ஒரு காரணம்.

எனவே இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டினால் ஐ.ஐ.டிக்களின் தரம் குறைந்து விடும் என மீண்டும், மீண்டும் ஒப்பாரி வைப்பது அவருடைய குறுகிய சாதியடிப்படையிலான வெளிப்பாடுதான்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

தமிழ்வெளியை பார்த்தீங்களா?