Friday, March 31, 2006

இந்த சல்மா அந்த சல்மாவா?

தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் மருங்காபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ரொக்கையா மாலிக் எனப்படும் சல்மா.இது இலக்கிய எழுத்தாளர் சல்மாவா இல்லை வேறு சல்மாவா?அவர் தான் இவர் என்னும் பட்சத்தில் இது வரவேற்கத்தக்கது.

ஏற்கனவே எழுத்தாளர் சல்மா பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிற்கும் வி.சி வேட்பாளர் எழுத்தாளரை ரவிகுமாரை தொடர்ந்து இன்னொரு இலக்கியவாதி சட்டசபைக்கு போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடுவதும் சமூக நிகழ்வுகளில் பங்களிப்பதும் (இலக்கிய சண்டைகள் தவிர)ஒரு பாஸிடிவ் டெவலப்மெண்ட் என்று நினைக்கிறேன்.இது தொடருமா?

13 comments:

டிசே தமிழன் said...

//இலக்கிய எழுத்தாளர் சல்மாவா இல்லை வேறு சல்மாவா?//
முத்து, எனக்கும் திமுக வேட்பாளார் பட்டியல் பார்த்தபோது இதே சந்தேகம் வந்தது. ஏற்கனவே ஒரு நேர்காணலில் சல்மா திமுகவில் இணைந்திருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன். எழுத்தாளர் சல்மாதான் இதே சல்மா என்றால் நல்லவிடயமே!

முத்து(தமிழினி) said...

டிசே,


பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திமுக வாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும் ஏன் அதிமுகவாக இருந்தாலுமே எழுத்தாளர்களும் சமுதாய சிந்தனையாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கோ பாராளுமன்றத்திற்கோ போகும் நிகழ்வு கண்டிப்பாக நல்ல விஷயமே....

sivagnanamji(#16342789) said...

ilakkiyavadhi SALMA vedhan. santhegam vendam
vetri pera vazhthuvom

அழகப்பன் said...

அவர்தான் இவர். அவரின் படம் இங்கே...

கொசுறு: சல்மா கனிமொழியின் தோழி என்றும் தகவல்கள் உள்ளன.

அழகப்பன் said...

அவர்தான் இவர். அவரின் படம் இங்கே...

கொசுறு: சல்மா கனிமொழியின் தோழி என்றும் தகவல்கள் உள்ளன.

முத்து(தமிழினி) said...

நன்றி சிவஞானம் மற்றும் அழகப்பன்

கனிமொழியின் தோழி என்பதால் மட்டும் சீ்ட் என்கிறீர்களா? இருந்தாலும் தவறில்லை என்பேன் நான்.

தகுதியுடையவர்களும் சிபாரிசில் வரும் நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டு பலகாலம் ஆகிறது.

முத்துகுமரன் said...

முத்து,

நேற்றே என் பதிவில் எழுத்துலகின் சார்பில் போட்டியிடுபவர்களுக்காக வாக்கு கேட்டிருந்தேனே கவனிக்கவில்லையா:-)))

சல்மாவுக்கும், ரவிக்குமாருக்கும் வாழ்த்துகள்

முத்து(தமிழினி) said...

ஒரு போட்டோ இருந்தது..பார்த்தேன்...ஒரு + குத்து போட்டுட்டு போயிட்டேன்..மத்தபடி என் சிறுமூளைக்கு அது புரியலையேன்னா....

தமியன் said...

மக்களுக்கான விஷயங்களை எழுதுபவர்கள் மக்கள் மன்றம் போனால்.. மகிழ்ச்சி... ஆனால்... இவர்கள்....

நவீனத்துக்கான தரகுகள்...
அதிலும்... ரவிக்குமார் போன்றவர்கள் வெற்றி பெறக்கூடாது. பெரியாரை பற்ரிய அவதூறுகளை பரப்பியவர். (விமர்சனம் என்பது வேறு... பெரியாரை முழுவதும் புரிந்து கொள்ளாத இளைய சமூகத்தினரிடம் அவரைப்பற்றி திரித்து சொல்வது என்பது வேறு)

முத்து(தமிழினி) said...

thamiyan,

i request you to write a detailed post regarding this

தமியன் said...

நிச்சயம் செய்வேன் நண்பரே...
எனக்கான பணிச்சுழலில் அது முடியாமல் போகிறது.
பதிவுகள் போட்டே... நாட்கள் பலவாயிற்று...

abdullah said...

SATTASABAI AERKANAVE SANDAI SABAIYAKAVE ULLATHU IALKKIYAVATHIKAL ANGU POVATHAL INUUM SUVAARASIYANGALAI ETHIRP PAARKKALAM.....

A.Prabhakaran said...

Ravikumar pulugu moottaikalai sattasabai kurippukalil pathiya vaazhththukkal

தமிழ்வெளியை பார்த்தீங்களா?