Wednesday, April 05, 2006

ஒரே குட்டையி்ல் ஊறிய மட்டைகளா? - 1

கலைஞருக்கு நாம் கொடுத்த டிப்ஸ்களை பார்த்த நண்பர் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிகுந்த வாக்கியமான "இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்பதை எடுத்து காட்டியுள்ளார்.அப்படி என்றால் அந்த குட்டை எது என்பதை அலசுவதே இன்றைய சிறப்பு பார்வை.

இரண்டு கழகங்களுக்கும் நோக்கம்(சுருட்டுவதை சொல்லலீங்க),கொள்கை எல்லாம் ஒன்றுதான் என்று மாலனும் கூறியுள்ளார்.ஆனால் இரு கழகங்களுக்கும் உள்ள சில வித்தியாசங்களை இங்கு எடுத்துகாட்ட முயல்வதே இந்த தொடர் பதிவின் நோக்கம்.

புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவரின் கடந்த 91 -96 ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த 91 -96 ஆட்சியில் தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்த பக்திமான் ரஜினிக்கும் ஆட்சியின் அவலங்கள் தெரியும் அளவிற்கு அடக்குமுறை கொடிகட்டி பறந்தது.ஊழல் முதலிய விஷயங்களில் அதிமுகவினர் ஏறக்குறைய கின்னஸ் சாதனையை படைத்தனர்.சூடு கண்ட காரணத்தால் இந்த முறை அந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லை.அல்லது குறைந்தபட்சம் வெளியே தெரியவில்லை.இன்று புரட்சிதலைவி திருந்தி விட்டார். குணக்குன்றாகி விட்டார் என்று அவருக்கு சர்டிபிகேட் தருபவர்கள் கலைஞரை விமர்சனம் செய்யும்போது மட்டும் 67 ஆண்டு,அரிசி, சர்க்காரியா என்றெல்லாம் ஆரம்பிக்கும்போது அவர்களின் நடுநிலைமை சந்தி சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது.


பயங்கரவாதத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார் என்பதும் கலைஞர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து களத்தில் இறங்கி போராடுகிறார் என்பதும் இட்டு கட்டிய விமர்சனங்கள் என்பது தெள்ளந்தெளிவு.இதற்கும் பயந்து கலைஞர் இலங்கை பிரச்சினையில் வைகோ அளவிற்கு கூட பேசாமல் அடங்கிவிட்டார்.இது கலைஞரை பொறுத்தவரை ஒரு சறுக்கல் என்றாலும் அவரை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதுதான் அவரின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று புரிகிறது.இன்று வைகோ ஜெயலலிதாவின் அணியிலும் காங்கிரஸ் திமுக அணியிலும் இருக்கும்போது இந்த "பயங்கரவாதம்" என்ற வாதத்தை "சோ" தவிர யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.(இலங்கை பிரச்சினையில் என் கருத்துக்கள் சிலவற்றை பொடா பயம் காரணமாக எழுதவில்லை)


ஊழல்கள்,திராவிட அரசியல், ஜனநாயக உணர்வு,வாரிசு அரசியல், சன்டிவி,மாறன் குடும்பம்,சசிகலா குடும்பம், சங்கராச்சாரி முதலான விஷயங்களை வரும் பாகங்களில் அலசுவோம்

(தொடரும்)

3 comments:

Pot"tea" kadai said...

//இன்று புரட்சிதலைவி திருந்தி விட்டார். குணக்குன்றாகி விட்டார் என்று அவருக்கு சர்டிபிகேட் தருபவர்கள் கலைஞரை விமர்சனம் செய்யும்போது மட்டும் 67 ஆண்டு,அரிசி, சர்க்காரியா என்றெல்லாம் ஆரம்பிக்கும்போது அவர்களின் நடுநிலைமை சந்தி சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது.//

ஒன்னு + ஆ இருக்கனும் இல்ல - ஆ இருக்கனும், ரென்டும் இல்லன்னா சந்தி சிரிக்காம வேற எப்பிடி இருக்கும்!

வெரும் அலசல் மட்டுமா...இல்ல அலசிக் காயப் போடுவீங்களா!

:-)

தயா said...

ஜெவை புகழ்கிறீர்களே, கலைஞரை எப்படி திட்டலாம் என்பதும் போலி நடுநிலைவாதம் தான்.

1) நெசவாளர் பிரச்சினையில் திமுக என்ன நிலை எடுத்தது. கஞ்சி தொட்டி திறக்கிறேன் என்று அவர்களை கேவலப்படுத்தியது. ஒரு நல்ல அக்கறையுள்ள தலைவன் அதை செய்யமாட்டார். அதற்கு பதிலாக தன் தொண்டர்களை அந்த ஆடைகளை வாங்க செய்திருந்தால் அரசுக்கு வருமானம் வந்திருக்கும் அவர்களுடைய தொழிலுக்கும் ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும்.

ஜெ அந்த துணிகளை தனது மாநாடு மற்றும் இடங்களில் ஸ்டால் ஏற்பாடு செய்து விக்கச் செய்தார். கைத்துறி துணிகளை இன்றைய தேவைக்கு ஏற்ப சில மாறுதல்களை கூறினார். 40 ரூபாய் அப்பொழுது விற்றது அப்படித் தான். இதை மக்களிடம் கொண்டு செல்லாமல் திமுகவிற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் சில அதிமுகவினர் ஏற்பாடு செய்த பிரியாணி கூட்டங்களை தடுக்காமல் மெளனமாக இருந்துவிட்டார்.

நீங்கள் சொல்வது போல அதிமுகவினருக்கு வியாபாரத் திறமை குறைவு தான்.

2) வெள்ள நிவாரணப் பணியின் போது என்ன செய்தார்கள்? தேவைக்கு அதிகமான பீதியையும் வதந்தியையும் பரப்பினார்கள். விளைவு: 42 பேர் இறந்தனர். இங்கே கலைஞரின் அக்கறை வெளிப்படவில்லை.

3)இன்றைக்கும் ஜெ ஒரு பாப்பாத்தி அதனால் தான் தாழ்ந்த ஜாதியினருக்கு ஆதரவளிக்கவில்லை என விரோதம் வளர்க்கிறார். (ஜெ ஒரு மந்திரியின் பதவி பற்றி குறை சொன்ன போது என நினைக்கிறேன்.) நடுநிலைக்காரர்கள் அவை எப்போது சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இருவரும் ஓரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்றால் அதில் யார் இன்னும் ஊறாமல் இருக்கிறார்கள் என விவாதம் நடத்துவது வீண் வேலை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை.

Muthu said...

தயா,

கருத்துக்கு நன்றி...இது நடுநிலைவாதம் அல்ல...நான் நடுநிலை என்று பொய்யாக சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.என் கொள்கை சார்ந்தே கருத்துக்களை வைக்கிறேன்.

நெசவாளர் பிரச்சினையில் நீங்கள் கூறும் தீர்வு ரஜினி படத்தை பார்ப்பது போல் உள்ளது.:))))இதை அதிமுக சொன்னதில் வியப்பில்லை.

வெள்ள நிவாரண பீதி என்பதெல்லாம் உடான்ஸ் தயா அவர்களே..இதிலெல்லாம் கொஞ்சம் யோசித்தாலே உண்மை புரியும்...

ஜெயலலிதாவின் இந்துத்வா போக்குப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?