Tuesday, February 21, 2006

கலைஞருக்கு சில டிப்ஸ்

கருத்து சொல்கிறேன் என்று டைமிங் சென்சாக காமெடி பேசுவது, தமிழை வைத்து விளையாடுவது ஆகிய சங்க கால ட்ரிக் எல்லாம் இப்போது செல்லுபடியாகாது என்பதை கலைஞர் உணர வேண்டும்.இதையெல்லாம் கிண்டல் செய்து சிரிக்க தமிழன் கற்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டது. முரசொலியை கட்சிக்காரர்கள் கூட வாங்குவதில்லை என்பதை இங்கு இணைத்து பார்க்கவேண்டும்.


கூட்டணி மாறுவது, கொள்கை மாறுவது ஆகிய விஷயங்களுக்கு எல்லாம் மிகவும கஷ்டப்பட்டு விளக்கம், வியாக்கியானம் சொல்லுவதை எல்லாம் விட்டுவிடவேண்டும். ராமதாஸ் பாணி, ஜெயலலிதா பாணி எல்லாம் மிகவும் அட்வான்ஸாக போயிருக்கும் இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என்ற இவர் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?


ராமதாஸ் கூட்டணி மாறும்போது ஏதாவது காரணங்களை சொல்ல கஷ்டபடுகிறாரா என்று கவனியுங்கள்.சீட் அதிகம் கொடுக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்று நேரடியாக கூறுவார்

.ஜெயலலிதா ஒரு ஸ்டேண்டர்ட் வசனத்தை வைத்துள்ளார்.

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை..நிரந்தர பகைவனும் இல்லை"

என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்ப்பார்.ஆனால் கலைஞர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து என்று அளக்க ஆரம்பிக்கும்போது மக்கள் டென்சன் ஆகின்றனர்.

அல்டிமேட்டாக பதவி தான் குறி என்னும்போது ஏன் இந்த பில்ட்அப் என்று மக்கள் நினைப்பதில் நியாயம் உண்டு. அதனால்தான் ஜெயலலிதாவின் அதிரடி பாணியை மக்கள் ரசிக்கிறார்கள்.உண்மையிலேயே கலைஞரிடம் ஏதாவது கொள்கை இருந்து இந்த வீர வசனங்களை பேசினால் மக்கள் கேட்பார்கள். ஆனால் இவர் கோபால்சாமியை வெளியேற்றி ஸ்டாலினையும் தயாநிதியையும் சன்டிவியையும் வளர்க்க போராடும் போராட்டத்தை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்?


ஜெயலலிதா கோபம் வந்தால் மதமாற்ற தடைசட்டம் போடுவார். கரசேவையை சப்போர்ட் செய்வார். இதற்காக சிறுபான்மை மக்கள் கோபித்துகொள்வார்கள். தேர்தல் வந்தால் ஜெயலலிதா சர்ச்சில் சோறு போடுவார். மசூதியில் கூழ் சாப்பிடுவார். அவ்வளவுதான் சிறுபான்மையினரும் மகிழ்ந்துவிடுவார்கள். ஓட்டும் கண்ணை மூடிக்கொண்டு குத்துவார்கள்.இது ஒரு உதாரணம்தான்.இது போலத்தான் மக்கள்.ஜெயலலிதாவும் இதற்கெல்லாம் பெரிய விளக்கம் கொடுப்பதில்லை.மக்களும் எந்த விளக்கமும் கேட்பதில்லை.ஆனால் இதுவே கலைஞரை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது பேசி கெட்ட பெயர் வாங்கி கொள்வார்.


ஜெயலலிதா சென்னை வந்த மகிந்த ராஜுபக்சே வை சந்திக்கவில்லை. ஈழ தமிழர்க்கு ஆதரவு காட்டும்விதமாக என்று நாமே நினைத்து கொள்ள வேண்டியதுதான்.அவர் ஏதும் சொல்லவில்லை.ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கையாவது, தமிழராவது என்பார். மக்களும் ஏதும் கேட்க மாட்டார்கள்.இதுவே கலைஞராக இருந்தால் ஏதாவது அறிக்கை விட்டு சொதப்புவார்.

அறிவுஜீவிகள் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுக்கொண்டு இருந்தால் காரியம் ஆகாது என்பதை அவருக்கு யார் சொல்லுவது?


சன்டிவியில் தினமும் மக்களுக்கு இவர் ஆயிரம் ,ஐநூறு கொடுப்பது போன்று போட்டோ போட்டு விளம்பரம் செய்யவேண்டும்.கிழவிகளை கட்டிப்பிடித்து எம்.ஜீ.ஆர் கொடுக்கும் போஸ் கிராமத்து ஏழை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள இம்பேக்ட்டை பற்றி அவர் யோசிக்கவேண்டும்.அப்படி எல்லோருக்கும் எம்.ஜீ.ஆர் அள்ளி அள்ளி கொடுத்தாரா அல்லது அப்படித்தான் கொடுக்கமுடியுமா என்றெல்லாம் நம் மக்கள் சிந்திப்பதில்லை.கிழவிகளை கட்டிபிடித்து சினிமாத்தனமாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதா கொடுக்கும் போஸ்கள் ஏற்படுத்தும் இமேஜ் மிகப்பெரிது.ஆயிரம் படித்த நமக்கே ரஜினி பாட்சாவில் முதன்முதலாக ஒரு வில்லனை அடிக்கும்போது சிலிர்க்கிறது. அப்படி இருக்கும்போது கிராம கடைக்கோடியில் இருக்கும் ஒரு படிக்காத அப்பாவி இந்த மாதிரியான சினிமாத்தனமான செய்கையால் எந்தளவு இம்ப்ரஸ் ஆவான் என்பதை கலைஞர் உணரவேண்டும்.


அரசு ஊழியர்களை ஜெயலலிதா படுத்தியதை எல்லோரும் அறிவோம். ஆனால் தேர்தல் சமயத்தில் கொஞ்சம் சலுகைகளை அள்ளி கொடுத்தாலே அவர்கள் திருப்திப்பட்டுகொள்வார்கள். இதுவே கலைஞர் ஆட்சி ஆகட்டும். ஸ்ட்ரைக என்ன? ஆர்ப்பாட்டம் என்ன? தூள் பறக்கும். நண்டு, குஞ்சு எல்லாம் கலைஞரை கேள்வி கேட்கும்.இதுப்பற்றி சுந்தர ராமசாமி அருமையாக எழுதியுள்ளார்.

" கலைஞர் ஆட்சியில் தனித்தமிழ்நாடு தலைவர்கள், தமிழ்வழிகல்வி தலைவர்கள் , அரசு ஊழியர் சங்க தலைவர்கள் எல்லோரும் கலாட்டா செய்தார்கள். கலைஞரும் ஜனநாயக உணர்வோடு அனைவரையும் அரவணைத்து சென்றார்..பிறகு கலைஞர் ஆட்சி போய் எங்கள் புரட்சிதலைவி ஆட்சி மலர்ந்தது.அன்றிரவே தலைவர்கள் தங்கள் புரட்சி குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்ட ஆரம்பித்தனர்.அவர்கள் பேச்சின் மூலம் இரத்த கொதிப்பு ஏறியிருக்கும் குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் தூங்கிவிடுமா என்றுதான் நாம் நினைப்போம்.ஆனால் அவை உடனே தூஙகி தங்கள் இரட்சகர்கள் மீது தாங்கள் கொண்ட பேரன்பை நிரூபித்தன.அதன்பின் அவை இன்றுவரை பாலுக்காக கூட எழுந்திருக்கவில்லை"
இதனுள்ளே அடங்கியிருக்கும் செய்தியினை கலைஞர் உணர வேண்டும்.

இது ஓட்டுப்பெட்டி அரசியலில் தி.மு.க வும் கலைஞரும் எப்படி சர்வைவ் ஆவது என்ற நோக்கத்தை வைத்து மட்டும் எழுதப்பட்டது.இந்த பதிவு சற்று அளவுகடந்து கலைஞரை விமர்சித்திருந்தாலும் ஜனநாயக யுகத்தில் இந்த கருத்துக்களை கலைஞர் சீர்தூக்கி பார்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது.கொள்கை என்று கலைஞர் நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்கள் அவரின் மற்ற சில தவறுகளால் கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.


(தொடரும்)

26 comments:

மாயவரத்தான் said...

Good one

தயா said...

முரசொலியை யாரும் வாங்கவில்லை என்கிறீர்கள். ஆனால் இந்த கணக்கையும் யோசித்து பாருங்கள்.
http://deedaya.blogspot.com/2005_12_01_deedaya_archive.html

அவன் வசூலிக்கும் பணம் டீ செலவுக்கே சரியாகி விட அவன் எப்படி முரசொலி அச்சடிக்க எவ்வளவு செலவு செய்தீர்கள் என கேள்வி கேட்பான்.

b said...

//கலைஞர் ஆட்சி போய் எங்கள் புரட்சிதலைவி ஆட்சி மலர்ந்தது//

சுந்தர ராமசாமி அவர்கள் சொன்ன மேற்கண்ட வரியைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. (உண்மையில் சொன்னாரா?)

வாழ்த்துக்கள்!

Mookku Sundar said...

//இந்த பதிவு சற்று அளவுகடந்து கலைஞரை விமர்சித்திருந்தாலும் //

நீங்களே சொல்லி விட்டீர்கள். நன்றி. என்னைக்கேட்டால், தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாமல் புதிய/இளையவர்களுக்கு வழிபிட்டு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அல்லது தோற்றால் பெரியார் வழி என்று அவர் சொன்னதுபடி, தோற்று அவர் பெரியார் வழிக்கு வர வேண்டும்.

இந்தத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறுவது ஏகப்பட்ட குழப்பங்களுக்கு அடிகோலும். எனவே கொஞ்ச நாளைக்கு தமிழ்நாடு ஜே.ஜெ என்று இருப்பதே நல்லது. :-)

ஜோ/Joe said...

முத்து,
நல்லா சொல்லிருக்கீங்க.

இன்னொரு பாயிண்ட விட்டுடீங்க ..கலைஞர் கூட்டணி பேரத்தின் போது மட்டும் ஜனநாயகம் ,உரிமை பேசும் கட்சிகள் ,அதே நேரம் ஜெ -யுடன் சேரும் போது மட்டும் ,தன்மான கம்யூனிஸ்டுகள் கூட வாய்பொத்தி கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேயறைந்தது போல் நடந்து கொள்கிறார்களே ,அந்த மர்மம் என்ன என்பது பற்றியும் கலைஞர் ஆராய வேண்டும்.

Gopalan Ramasubbu said...

Nice post Muthu.Cheers

ஜெ. ராம்கி said...

Muthu,

Good one. Keep it up!


//திமுக அணி வெற்றி பெறுவது ஏகப்பட்ட குழப்பங்களுக்கு அடிகோலும். எனவே கொஞ்ச நாளைக்கு தமிழ்நாடு ஜே.ஜெ என்று இருப்பதே நல்லது. :-)

URGENT....Ambulance please! :-)

நன்மனம் said...

Muthu,

Neenga enna solla varinga, Kalingjara (Karunanidhini sonna udanpirapukkal adikka varangappa)ellara madhirium arasiyal mattum panna sollaringala, Kasu kodukama oru nalla cinema pathundu, ketundu irukkom, atha kedukaringale, climax ugika vidama Vaikovum avar paatuku vasanam ezhudindu irukkar, vidunga vidunga ipathaan avanga arambichurukanga, innam 3 matham vedikkai parpom, ipadi advice kuduthu ellaraiyum thiruthidathinga.

Sridhar

krishjapan said...

ithu enna Nyayam. Enga Muthu vin pathivil vanthu neenga eppadi ippadi super point pottu peru vankitu polam, Joe sir, ithu nallave illai

Anonymous said...

'1970இல் இருந்து 2006க்கு மாற வேண்டும்' என்பது சரி. மற்ற கருத்துக்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் சொன்ன விமர்சனமும் கூறிய அறிவுரையும் அரசியலில் பொதுவாக பலருக்கும் பொருந்தும். (உ.ம். - உங்கள் அபிமான விமர்சகர் - சொக்கத்தங்கம் ;->)

முன்னேறிய அரசியல்வாதிக்கும், வியாபாரிக்கும், (அரசியல் வியாபாரிக்கும்) ஒரு சக்தித் தளம் உண்டு. அந்தத்தளதில் நின்று தான் (அந்தத்தளம் ஆட்டம் காணாமல்), வெளியே கயிறு வீச முடியும். தேர்ந்த அ/வி அதை விட்டுவிட்டு பிறரைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளமாட்டான். தி.மு.க. இன்றுவரை தனது வாக்குவங்கியை அப்படியேத்தான் வைத்துள்ளது. இந்த வாக்குகள் 'தமிழை வைத்து விளையடி வந்த ட்ரிக்' மூலம் தான் கிடைத்தது. அதை இழப்பது மடத்தனம். இதை திரு. கருணாநிதி நன்கு அறிவார்.

அரசனை நம்பி ...

நன்றி,
குகன்

Muthu said...

நன்றி மாயவரத்தான், ராமசுப்பு


நன்றி தயா

அந்த சுட்டி.எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.சன் டிவியின் பிஸினெஸ் திறமை.இது தொண்டர்கள் பற்றியது.

மூர்த்தி நன்றி,

சு.ரா அப்படித்தான் சொன்னார் .வானகமே.இளவெயிலே.. என்ற புத்தகத்தை பார்க்கவும்.சு.ராவின் நக்கல் உலகறிந்ததுதானே.

Muthu said...

மூக்கு நன்றி,

இளைஞர்களுக்கு வழி? ம்..யார் அந்த இளைஞர் என்பதில்தான் வம்பு.நான் அவர் துரைமுருகனை தலைவராக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.கலக்குவார் துரைமுருகன். சட்டசபையில் அம்மாவுக்கு அவர் கவுண்ட்டர் கொடுக்கும் அழகே தனி.
இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி அமைச்சரவை வரலாம் என்று தோன்றுகிறது.

நன்றி ஜோ,

அதே..அஃதே நான் சொல்ல வந்ததும்..

அண்ணா எடுத்து கொடுக்கிறான்னா...
(அவ்வை சண்முகி ஸ்டைலில் படிக்கவும்)

அம்மாவை பார்க்கிறதே அரிது என்று இருப்பதால் அமைதியாக வருவார்கள்.அய்யாவைத்தான் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம்.மறுநாளே கடுமையாக தாக்கி அறிக்கையும் விடலாமே.

நன்றி ராம்கி,

ஆம்புலன்ஸ் ஏன், யாருக்கு, எதற்கு?

நன்றி sridhar,

ஆனா ஒண்ணு.....கலைஞர் இதை படிச்சி திருந்திட்டார்னு வைங்க..தமிழகத்திலே பல பேர் பைத்தியம் புடிச்சி திரிவாங்க என்பது உறுதி.....


நன்றி கிருஷ்ணா,

சத்தமா சொல்லுங்க..இந்த ஜோவுக்கு இதே வேலையா போச்சு..:)))))

பின்னூட்டம் நச்சுன்னு கொடுத்தே பேர்(?) வாங்கறான்யா மனுசன்.:)))

Muthu said...

குகன்,

என் அபிமான விமர்சகரா? சொக்க தங்கமா? யார் அது? :))

நீங்கள் சொன்ன அந்த தளம் சிறிது சிறிதாக பெயர்க்கப்பட்டுவிட்டது.
திராவிட கட்சிகள் பல இருந்தாலும் திராவிட கருத்தாக்கத்தை எதிர்ப்பவர்கள் கலைஞரைத்தான் இப்போது குறி வைக்கிறார்கள்.காரணம் வெளிப்படை.நல்ல கொள்கைகள் கூட கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்திற்குத்தான் அசிங்கம்.

இப்போது இருக்கும் தி.மு.க தொண்டன் தன் தமிழை ரசித்துத்தான் கட்சியில் இருக்கிறான் என்று நினைத்தால் கலைஞர் எதிரிகளின் வலையில் இன்னும
விழுகிறார் என்று அர்த்தம்.

சந்திப்பு said...

முத்து! நல்ல காமெடி... இருப்பினும் கலைஞருக்கு நீங்கள் கொடுத்த டிப்° உதவுமா என்றுத் தெரியவில்லை. தங்கள் கருத்து சாதாரண மக்கள் பலியிடப்படும் ஆடுகளைப்போல் நம்பி விடுவார்கள் என்பது போல் உள்ளது. ஜெயலலிதாவின் மாயாஜால வித்தைகளுக்கு எல்லாம் செம அடி விழப்போவது நிச்சயம். மக்கள் எப்போதும் புத்திசாலிகள். அவர்கள் வெறும் சலுகைகளை மட்டும் பார்த்து ஏமாறுபவர்கள் அல்ல.

மேலும் கலைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சாதாரண மக்களுக்காக என்ன செய்தார்? எதற்காக குரல் கொடுத்தார்? என்பதையும் மக்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணம், மின்கட்டணம் என்று சரமாரியாக உயர்த்தும் போது கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா?

ஓட்டு போட்ட மக்களுக்கு இது சந்தோஷம் என்றால் எனக்கும் இது சந்தோஷம் என்று கூறினார். இது ஒரு தோல்வி கண்டவரின் குருர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறதே தவிர, ஒரு பக்குவமான - முதிர்ந்த அரசியல் தன்மையை வெளிப்படுத்த வில்லை.

எனவே, கருணாநிதி என்ன பில்டப் செய்தாலும் கூட அவரும் கொஞ்சம் அடிவாங்கத்தான் செய்வார். அதுதான் தற்போதைய சூழலாக தெரிகிறது.

பல சலுகைகளை கொடுத்த சந்திரபாபு நாயுடு எங்கே என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கதி ஜெவுக்கும் வரும்.

Muthu said...

சந்திப்பு,

மக்கள் எப்போதும் புத்திசாலிகள் என்பது சரியான ஸ்டேட்மெண்ட்டாக எனக்கு தெரியவில்லை...மக்கள் பலமுறை பலியிடப்படும் ஆடுகள் போல் பலமுறை நடந்துக்கொண்டு உள்ளனர்.

கடந்த முறை நல்லாட்சி என்று சொல்லலாம்.கலைஞர் கொடுத்தார்.மக்கள் என்ன கொடுத்தார்கள்.ஆப்புதானே.....பணபுழக்கம் என்ற ஒரு முட்டாள்தனமான வாதத்தை நம்பி ஓட்டு போட்டார்கள்.அதனால் கடுப்பாகி கலைஞர் பேசி விட்டார். கோப தாபம் உள்ள எல்லோரும் சொல்லுவது தான் இதெல்லாம்.

//ஜெயலலிதாவின் மாயாஜால வித்தைகளுக்கு எல்லாம் செம அடி விழப்போவது நிச்சயம். //

//எனவே, கருணாநிதி என்ன பில்டப் செய்தாலும் கூட அவரும் கொஞ்சம் அடிவாங்கத்தான் செய்வார். //

அப்ப யாரு தான் ஜெயிப்பாங்கன்னு சொல்றீங்க?


இப்போது கருணாநிதியா ஜெயலலிதாவா என்பதிலும் நீங்கள தெளிவாக இல்லாதது போல் தெரிகிறது......

மணியன் said...

நன்றாகத்தான் அலசியிருக்கிறீர்கள். சந்திப்பு (சொல்வது )போல மக்கள் ஏமாந்தவர்கள் இல்லை, குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். இருவருமே சரியில்லை, அதனால் அப்போதைய நிலமைப்படி (பணமோ பாசமோ) யாராவது ஒருவருக்குப் போடுகிறார்கள். உண்மையிலேயே ஒரு நல்ல இயக்கத்திற்கும் தலைமைக்கும் ஏங்குகிறார்கள்.
அவர் வருவாரா ?

dondu(#11168674346665545885) said...

"இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என்ற இவர் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?"
"ஆனால் கலைஞர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து என்று அளக்க ஆரம்பிக்கும்போது மக்கள் டென்சன் ஆகின்றனர்."

அதாவது, சமீபத்தில் 1975-ல் சோ நெருக்கடி நிலை காலத்தில் என்ன செய்தார் என்று ஒரு பெருசு கூற ஆரம்பிக்க நீங்கள் டென்ஷன் ஆனதுபோல என்று வைத்து கொள்ளலாம் அல்லவா. அந்த பெருசு இதைப் பார்த்தாவது புரிந்து கொள்வார் என்று நம்பிக்கை உண்டா? எதற்கும் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்ளவும்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விடுகிறேனே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

முத்து,

This is what I've been trying to tell you.

Somebody gave similar tips to Coca-Cola chariman.

Coke (or as we now call it, "Coca-Cola Classic") was losing market share in the 1980s. "The Pepsi Generation" marketing campaign was a huge success. To make matters worse, Coke was outspending Pepsi by $100 million in advertising. And in blind taste tests, Pepsi was pulverizing Coke. In short, times were tough.

Coke came out with a new formula that was sweeter, flavored more like Pepsi, and even beat Pepsi in taste tests. But die-hard Coke drinkers were irate. It was down right un-American to change Coke. Tampering with Coke was like destroying the flag.

Still, New Coke tasted good, so why not give the consumer a choice -- New Coke or Classic Coke? That way everyone's happy, right? Er, not quite.

The bottlers put the kibosh on that idea. Offering both products would add to their equipment costs. Additionally, New Coke would take some sales from Classic, which could make Pepsi the number one cola. So, adios to the "new taste of Coke."

http://ask.yahoo.com/20060221.html


// என் அபிமான விமர்சகரா? சொக்க தங்கமா? யார் அது? :))

வந்துட்டாரு! வந்துட்டாரு!! எங்கடா காணோமேன்னு பார்த்தேன். ;^)

- குகன்

Muthu said...

மணியன்,

//அதனால் அப்போதைய நிலமைப்படி (பணமோ பாசமோ) யாராவது ஒருவருக்குப் போடுகிறார்கள்.அப்படி எல்லாம் எதுவும் இல்லை.//

இது கிண்டல்தானே :))))

//உண்மையிலேயே ஒரு நல்ல இயக்கத்திற்கும் தலைமைக்கும் ஏங்குகிறார்கள். //

அது தான் விஜயகாந்த் வந்துவிட்டாரே..

உண்மையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் நினைக்கும் மாற்றம் நடப்பது கஷ்டம் .மக்கள் மனதே கெட்டு கிடக்கிறது.

நான் முதலமைச்சர் ஆனால்தான் எல்லாம் சரியாகநடக்கும்:)))

டோண்டு,

//அதாவது, சமீபத்தில் 1975-ல் சோ நெருக்கடி நிலை காலத்தில் என்ன செய்தார் என்று ஒரு பெருசு கூற ஆரம்பிக்க நீங்கள் டென்ஷன் ஆனதுபோல என்று வைத்து கொள்ளலாம் அல்லவா//

அதே..அதே ...ஆனால் பெரிசுகளை சொல்லி திருத்த முடியுமா?

குகன்,
நீங்கள் கூறிய கருத்து புரிகிறது.அந்த பாணியில் யோசித்தால் மிகவும் சுவாரசியமாக உள்ளது. அது தனிபதிவாக போடவேண்டியது. சீக்கரமே போடுகிறேன்.

Muthu said...

//வந்துட்டாரு! வந்துட்டாரு!! எங்கடா காணோமேன்னு பார்த்தேன்//

i think you have read the mutakulla ganesan post

தருமி said...

"தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி அமைச்சரவை வரலாம் என்று தோன்றுகிறது." //-எந்த திராவிடக் கட்சி பெரும்பான்மை பற்றிச் சொல்லுகிறீர்கள்? ஜெ. தனி மெஜாரிட்டியோடு வரலாம்னு நான் பயந்துகிட்டுல்ல இருக்கேன்.

Muthu said...

சாம்,

திடமா இருங்க...எது வேண்டுமானாலும் நடக்கும்..ராம்தாஸ் வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்..பார்ப்போம்.

Anonymous said...

வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்" இரண்டாமவருக்குத்தான் அந்த நிலை வர அதிக வாய்ப்புன்னு நினைக்கிறேன். இதில இந்த டி.வி. கொடுக்கிறேன்னு சொன்னது சான்ஸை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்" இரண்டாமவருக்குத்தான் அந்த நிலை வர அதிக வாய்ப்புன்னு நினைக்கிறேன். இதில இந்த டி.வி. கொடுக்கிறேன்னு சொன்னது சான்ஸை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

//அவர் துரைமுருகனை தலைவராக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.கலக்குவார் துரைமுருகன். //

துரைமுருகன் மேல என்னய்யா கோவம் உங்களுக்கு?

Muthu said...

அவ்வளவு அபாண்டமான கேவலமாக குற்றச்சாட்டிற்கும் பிறகும் அம்மாவின் முன் அமர்ந்து அம்மாவும் பாராட்டும்படி சிரித்த முகத்தோடு (ஃபுல் மேக்கப்போடும்) கவுண்டர் கொடுப்பாரே..புத்திசாலியும் கூட

//துரைமுருகன் மேல என்னய்யா கோவம் உங்களுக்கு?//
என்னய்யா என்ற வார்த்தையை உனக்கு என்ற வார்த்தையால் தான் நிறைவு செய்யவெண்டும் அனானி