Friday, February 24, 2006

என்னத்த சொல்லி என்னத்த பண்ண?

மூத்த வலைப்பதிவாளர்கள் எல்லாம் சங்கிலி பதிவில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டு இருக்கும்போது இளையோனான நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? என்னை இதில் சிக்க வைத்தவர் டோண்டு ராகவன்.அவருக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.

Four jobs I have:

1.வங்கி பணியாளர் (ஐந்து வருடங்கள் மால்குடி மாதிரியான டிபிகல கிராமத்தில்)

2.கணிணி பொறியாளர் (மும்பய் மற்றும் மங்களூரில்)

3.எழுத்தாளர் ( இது எதிர்காலத்தில் நடக்கலாம்)

4.அரசியல்வாதி (இதுவும் எதிர்காலத்தில் நடக்கலாம்)


Four movies I would watch over and over again:

1. அவ்வை சண்முகி மாதிரியான காமெடி படங்கள்.

2.அன்பே சிவத்தை பற்றி திரும்பவும் பேசினால் அடி விழலாம்.

3.ஒரு ஆங்கிலப்படம் பெயர் தெரியவில்லை.ஒரு முறை ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன். ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஓடிப்போய் வாழ ஆசைப்படுகிற ஒருவரின் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.படம்னா அது படம்.

4.இதுவும் ஆங்கிலப்படம்தான். BEDAZZLED.காமெடிப்படம்.

Four Songs i would hear again and again

1."தென்றல் வந்த தீண்டும்போது என்ன வண்ணமோ மனசில......"

காதலை இதைவிட அழகாக எந்த பாட்டும் சொன்னதில்லை என்பது என் கருத்து

2."கொக்கர கொக்கரக்கோ கோழி கொக்கரக்கோ......"

மனதை சந்தோஷப்படுத்தும் ஃபாஸ்ட் பீட் பாடல்கள் எனக்கு பிடிக்கும்.அந்த வரிசையில் கில்லியில் இந்த பாடல்.தினமும் காலை ஓருமுறை கேட்டால் உற்சாகம் மனதில் அள்ளும்.

3."தென்பாண்டி சீமையிலே"

இளையராஜா (மனுசனாய்யா அந்த ஆள்) குரலில் இந்த சோக சித்திர பாட்டை கேட்டால் தான் புரியும் அந்த அனுபவம்.

4."ஆசையை காத்தில தூது விட்டு "

இதன் காரணம் நான் சொல்லணுமா என்ன?

Four places I have lived (for years):


1.ஆத்தூர்,சேலம்(பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு முடிய)

2.கோயமுத்தூர்(கல்லூரி படிப்பு (இளங்கலை மற்றும் முதுகலை)

3.மும்பய்(பிரமோஷன் ஆபிஸராக சுமார் இரண்டு வருடம்)

4.மங்களூர்(பிரமோஷன் மேனேஜராக கடந்த ஒரு வருடமாக)

Four TV shows I love to watch:

1.என்.டி.டி.வி அரசியல் சமூக விவாதங்கள்

2.போகோ சேனல்

3.ஜெயா நியூஸ் மற்றும் சன் நியூஸ் ( அரசியல் காமெடி செய்திகளுக்காக)

4.விளையாட்டு போட்டிகள்(குறிப்பாக டென்னிஸ், பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கிரிக்கெட்)

Four places I have been on vacation:

1.திருச்செங்கோடு (பால்ய ஞாபகங்கள்)

2.ஊட்டி, கொடைக்கானல் (கொடைக்கானல் சூப்பரபு)

3.சிம்லா, ஹரித்துவார், ரிஷிகேஷ்

4.அடுத்த வருடம் சிங்கப்பூர் அல்லது மலேசியா

Four of my favourite foods:

1.மீன் வறுவல் , முட்டையை எப்படி சமைத்தாலும்

2.சிக்கன் பிரியாணி

3.பழைய மீன் குழம்பு

4.பஜ்ஜீ அயிட்டங்கள்

பிடிக்காது என்பதே உனக்கு சாப்பாட்டில் கிடையாதா என்று வீட்டில் அடிக்கடி கேட்பார்கள் என்பது உபரி தகவல்.

Four places I'd rather be now:

1.வங்கிக்கு விடுமுறை போட்டுவிட்டு திவ்யா தமிழினியுடன் விளையாடிக்கொண்டு இருந்திருக்கலாம்.

2.வெறுந்தரையில் தலையணை போட்டு அரை மயக்கத்தில் படுத்திருக்கலாம்.

3.சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை படித்துக்கொண்டிருக்கலாம்.

4.மனைவியுடன் வம்பிழுத்து சண்டை போட்டுகொண்டிருக்கலாம்.

Four sites I visit daily

1.தமிழ்மணம்

2.ஜிமெயில்

3.என் வங்கியின் வலைத்தளம்

4.அது மட்டும் ரகசியம்

bloggers I am tagging:

சந்திப்பு செல்வபெருமாள்

சமுதாய நோக்குடன் தொடர்ந்து எழுதி வருகிறார்.பி.ஜே.பியை கண்ணை மூடிக்கொண்டு தாக்குவதை சற்று குறைத்தல் நலம்.

செல்வன்

இவர் அருமையாக எழுதுகிறார். சீரியஸான விஷயங்கள் முதல் காமெடி வரை சூப்பர். இவருடைய வீர பாண்டிய கவுண்டமணி அருமையான கற்பனை.

பூங்குழலி

சிறிய வயதில் கவிதை எல்லாம் எழுதுகிறார். பலருக்கு பல கேள்விகள் சூடாக எழுப்புவதை வழக்கமாக கொண்டவர்.

பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி.

7 comments:

வினையூக்கி said...

Somehow I have become rasikan to your posts. It is interesting.

G.Ragavan said...

ஐய்யா இன்னொரு விக்கெட் அவுட்டு........என்னோட விக்கெட்டும் டவுணுதான் முத்து. வந்து பாருங்க.

அப்புறம் திருச்செங்கோட்டுல ஒரு பழைய முருகன் கோயில் இருக்காமே! தெரியுமா? அதுவும் நவபாஷானச் சிலையாம். ஆனால் பழநி மாதிரி கருப்பா இருக்காதாம். வெள்ளையா இருக்குமாம். தெரியுமா?

முத்து(தமிழினி) said...

செல்வா,

நன்றி...எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் எனைப்போன்ற அல்லது உங்களைப்போன்ற ஆட்களுக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு ஊக்கத்தை தரும் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

நன்றிகள் பல..

அப்புறம் நான் டேக் பண்ண விரும்பும் நான்காவது ஆள் செல்வா ( இப்படி பாராட்டும் ரசிகரை நான் கெளரவப்படுத்தாவி்ட்டால் வருங்காலம் என்னை தூற்றாதா?)

செல்வா, வாங்க உங்களை கவர்ந்த உங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதுங்க....

முத்து(தமிழினி) said...

ராகவன்,

உங்களையும் சாய்ச்சீட்டாங்களா? உங்களையும் சாய்ச்சீட்டாங்களா?
உங்களையும் சாய்ச்சீட்டாங்களா?

நமக்கு பக்தி அயிட்டமெல்லாம் கொஞ்சம் கம்மி. முருகனை பார்த்திருக்கிறேன்.
எங்க உறவினர்கள் அனைவரும் திருச்செங்கோடு மற்றும சுற்றுவட்டாரத்தில் உள்ளனர்.

சந்திப்பு said...

முத்து! தங்களுடைய மினி பையோ கிராபி நன்றாக இருந்தது.

அந்த பேவரைட் ஐட்டத்துல கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு நினைக்கிறேன்....

இன்னொன்னு இப்பவே நீங்க முழு அரசியல்வாதிதான்! அதான் கருத்துப் பிரச்சாரம் செய்றீங்களே.... எதிர்காலத்தில் களவேளை செய்ய வாழ்த்துக்கள்!

சந்திப்பு குறித்த தங்களது நிர்ணயிப்புக்கு நன்றி! தங்களது ஆரோக்கியமான விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

செல்வன், பூங்குழலியை நல்லமுறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். தங்களது திறமைகளை அவர்களும் வளர்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்!

செல்வன் said...

அன்பின் முத்து,
என் பெயரை இட்டதற்கு மிக்க நன்றி.உங்களுக்கு பிடித்தது போல் எழுத முடிந்ததை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்.
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.அருமையாக எழுதிவருகிறீர்கள்.சங்கிலித்தொடர் விளையாட்டு ஆரம்பித்து விட்டீர்களா?நடத்துங்கள்,நடத்துங்கள்.

நேசமுடன்
செல்வன்

பூங்குழலி said...

அன்பு முத்து..

சந்திப்பு மற்றும் செல்வன் ஆகியோரின் படைப்புகளை இதோ நானும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.


உங்களுக்குப் பிடித்த பாடல் நான்கும் எனக்கும் பிடிக்கும்.

எனது எழுத்தையும் கவிதை என்று ஏற்றுக்கொண்டதிற்கு நன்றி.
என்னை பற்றிய சில செய்திகளை இங்கே கொடுத்துள்ளேன்.

அழைத்தமைக்கு நன்றி.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?