Friday, February 10, 2006

தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?

தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான்.

.எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

"முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான்.

"ஏன்? ஒண்ணுதான்" என்றேன்.

"போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்"

"எதுக்கு?"

"ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்"

"ம்"

"அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்"

"எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே"

"சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? "

"ஓ"

"ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்."

"சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு"

"ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்"

"சரி நாலாவது அக்கவுண்ட்"

"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

"அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?"

"குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?"

"..."

"சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"

",,,,,"

"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"

தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்.

42 comments:

ஜோ/Joe said...

//உள்குத்து மேட் ஈஸீ//

ஹா..ஹா

Anonymous said...

சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன்.

அன்புடன்
போலி

Mookku Sundar said...

பரவாயில்லியே. கொஞ்ச காலத்துலயே இவ்ளோ ஞானமா..?? ;-)

முத்து, கொட்டிக் கொட்டியே குளவியான அப்பாவிகள் ஏராளம் இங்கே. அடுத்து நீங்களோ..??

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

:)))

நண்பர்களும் தோழிகளும் ரொம்பத்தான் கூடிப்போயிட்டாங்க..

:shaking head:

-மதி

ஏஜண்ட் NJ said...

//உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்//

:-)))

நாமக்கல் சிபி said...

//"சரி நாலாவது அக்கவுண்ட்"

"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"
//

ஹா ஹா ஹா...!

//உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"
//

சூப்பர். அப்போ அரசியலுக்கு தயாராய்டுவீங்க.

//"உள்குத்து மேட் ஈஸீ"//

எனக்கு கொஞ்ச நாள் இரவல் தர முடியுமா இந்த புத்தகத்தை?

Muthu said...

ஜோ, புத்தகம் தலைப்பு நல்லா இருந்துச்சா? இன்னும் நிறைய புத்தகம் இருக்காம். ஒவ்வொண்ணா வருமாம்.வந்ததுன்னா கண்டிப்பா தருவேன்.
அமெரிக்காவில இருந்து அரபு நாடுகள் வரை எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்தியாவில் மலிவு பதிப்பு கேட்டிருக்கோம்.

Muthu said...

சுந்தர்,
எனக்கா ஞானமா? சுட்டு போட்டாலும் வராது.....
கொட்டு வாங்கி வாங்கி குளவியான ஆட்கள்தானே? கண்டிப்பா
.சில விஷயங்களை கத்துக்கிட்டவங்க கிட்டே போட்டு பார்க்கலாம்.ரொம்ப இன்ட்ஸ்ரெஸ்டிங்கா இருக்கும்.....

dondu(#11168674346665545885) said...

"சரி நாலாவது அக்கவுண்ட்"
"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

ஆனால் அதைப் பெற உண்மை டோண்டுவுக்கு ஆதரவாக பல இடங்களில் பின்னூட்டமிட்டிருக்க வேண்டும், வேறு வகைகளில் ஆதரவு கண்பிச்சிருக்கோணும்.

அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.

இப்போது இங்கு பின்னூட்டமிடுவது உண்மை டோண்டுவே என்பதைக் காட்ட, இதை நான் என்னுடைய போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

இரா.சுகுமாரன் said...

அய்யா! ஐடியா அய்யாசாமி! நீங்க என்னா பண்றீங்கண்ணு எங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி! உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு போல காலையிலேயே இத்தனை கமென்ட்ஸ்.

Muthu said...

அனானி ,
நன்றி..வரங்கொடுத்தவன் தலைல கை வைக்கிறது இதுதானா?

மதி,
என்னங்க பண்றது..நட்பு வட்டம் பெரிதாகிட்டே போகுது.....உங்களுக்கு கோபம் ஒண்ணும் இல்லையே..ஏதாவது தனிமடல் போட்டு சமாதானப்படுத்தலாம்னா அதையும் உடனே பொதுவுல வைக்க சொல்றாங்க......
ஒரே நேரத்தில் ரெண்டு பேருக்கு மடல் போட்டு அவர் பதில் போட்டுட்டார் நீ ஏன் பதில் போடலைன்னு கேக்குறாங்க.(யதார்த்தமாத்தான் கேக்கறாங்க)

முத்துகுமரன் said...

என்ன முத்து ரெம்ப ஓய்வா இருக்கீங்க போல இருக்கு:-)))))

ramachandranusha(உஷா) said...

முத்து கடைசி பதில் என்னைக்குறித்து என்று நினைத்துக் கொண்டு இந்த பதில்.
இரண்டு பெயர்களை உதாரணத்திற்கு மட்டுமே சொன்னேன். ஒருவர் என்னிடம் பொதுவில் கேள்விக் கேட்டார். விளக்கத்தை
அவருக்கு அனுப்பிவிட்டு, அதே விளக்கத்தை இன்னொருவருக்கும் அனுப்புவதுதான் சரி என்று தோன்றியது. பொதுவில் யாராவது ஒருவர், தனிமடல் விஷயத்தை சொன்னால், இன்னொருவருக்கு தவறாய் புரிந்துக் கொள்ள நேரலாம். மிக யோசித்தே, ஒருவரிடம் பதில் வந்துவிட்டது, உங்களுக்கு மடல் கிடைத்ததா என்றுக் கேட்டேன். எந்த செட்டுலையும் சேரும் விருப்பமில்லை என்பதே உண்மையான காரணம். யார் என்ன? என்ன சொல்கிறார்கள் என்ற குழப்பமே!
( கொஞ்சம் இருங்க, தேவையா உனக்கு என்று கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன் :-)))

மற்றப்படி, உங்க பதிவுல எங்காவது நான் வருகிறேனா :-))))

Muthu said...

சிபி,

இப்ப அந்த புக் ரொம்ப டிமாண்ட்..அமெண்ட் அதிகம் ஆகும் பரவாயில்லையா...இல்லாட்டி சொல்லுங்க..சில பதிவுகள் சுட்டி தருகிறேன்.படித்து அப்டேட் ஆகுங்க...

டோண்டு அவர்களே,
உண்மை..
உங்களுடைய பின்னூட்ட பதிவை நீங்க இன்னும் எடுக்கலியா?

Muthu said...

மிஸ்டர் ஞான்ஸ்
புரியுது...புரியுது...அதான் அந்த புக்கல்லாம் வாங்கிட்டு வந்துட்டம்ல...அதான் இஃபக்ட்....

ராஜசுகு,
இது அது அல்ல....தமாசுய்யா தமாசு....

ஜென்ராம் said...

//சூப்பர்,எல்லா கருத்துக்களையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன்.//

:-))

ilavanji said...

போட்டேன் ஒரு + :)

பினாத்தல் சுரேஷ் said...

டேய் பினாத்தல்.. நாலு பேரைக் கிண்டலடிச்சுட்டு நீ மட்டும் தப்பிக்கலாமுன்னு பாத்தியா..

வச்சாரு பார் முத்து சார் ஆப்பு!

denx (thanks) muthu.

Muthu said...

இளவஞ்சி
+ குத்துக்கு நன்றி....(அமைதியா உட்கார்ந்து மூச்சு வாங்கிறீங்களாக்கும்)

பினாத்தல்,
நீங்க இங்க எதுல வந்தீங்க?" :))
எனக்கும் நாளைக்கு இதுதான் கதி அப்பு....வருத்தபடாதீரும்....:))))))))))))))).
அது யாரு முத்து சார்?சும்மா பேரை சொல்லுங்கய்யா....

நிலா said...

:-)))

Muthu said...

ராம்கி,
அப்படி போடுங்க ராம்கி..எந்த கருத்தை ஏற்கவில்லை என்று சொல்லுங்கள்.விளக்கம் அளிக்கிறேன். :))))))
மீட்டிங்காமே...நடத்துங்க மாமே..நடத்துங்க...

முத்துகுமரன்,
வம்பிழுக்காதீங்கய்யா...

Geetha Sambasivam said...

eppidi ippadiyellam yosikareenga?sirithu sirithu vayiru valikkuthu.

மதுமிதா said...

///தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்///
அந்தப் புத்தகத்தில் சண்டைக்கோழியில் எஸ்.ரா 'தமிழ்மணம் காசி'யை தாதாவா சித்தரித்து வசனத்தில் போட்டுத்தாக்கியிருக்கிறார்-னு எங்கயாவது இருந்து தொலைக்கப்போகுது .
பாத்து பாத்து.

Muthu said...

மதுமிதா,

அதையும் பார்த்தேன்..அகஸ்மாத்தா இன்னைக்குத்தான்..அவங்கவங்க அவங்கவங்க ரோலை கரெக்டா செய்யறாங்க என்று மட்டும் இப்போது சொல்லி வைக்கிறேன்......

உள்குத்து மேட் ஈஸி புத்தகத்தை நீங்கள் முதலிலேயே படிச்சீங்கன்னு தெரியும்..உபயோகப்படுத்தறீங்களா என்கி்ட்டே :)))))

Muthu said...

nanban,

do u want the dealership?:))))
simply i want to put that it is available universally that is all

Vaa.Manikandan said...

vaangga vaangga!

Anonymous said...

//"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"//

:-)))))) எல்லாருக்கும் புரிஞ்சிக்கிச்சா?!

//தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம்.//

நல்ல கமெண்ட் ஒண்ணு நினைவுக்கு வருது சொன்னா., வெவகாரமாயிருமப்போவ்.... ஏற்கனவே நான் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பயந்து போயி இருக்கனா?. ஹா.!..ஹா.!!... அதனால வெளியே சொல்லல. நன்றி. நல்ல பதிவு., உண்மையாக!!.

Muthu said...

முத்து,
கலக்கிட்டீங்க. அது.. சரி.. இப்ப எனக்கு மட்டும் சொல்லுங்க. இந்தப் பதிவைப் பதியறதுக்கு முன்னாடியே ரெண்டு பேருல அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்கதானே .. ? :-))).

Muthu said...

////அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.////

////அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி./////

டோண்டு அவர்களே,
நீங்கள் சொன்னதில் ஒரு சின்னத் திருத்தம். "..சிலருக்கும்.." என்பதை எடுத்துவிட்டு உங்களுக்குப் பின்னூட்டமிடும் அனைவருக்கும் எனபதுகூட சரிதான். உங்கள் பெயர், காசி பெயர், மற்றும் பல அனானிமஸாகவும் வரும். எல்லாம் சொந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். :-)).

Karthik Jayanth said...

முத்து,

//நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை //

"உள்குத்து பார் டம்மிஸ்", "உள்குத்து கம்ப்லீட் ரெபரென்ஸ்", "Blog - 101 கன்ட்ரவர்ஸி டாபீக்ஸ் " இன்னும் கொஞ்ச நாள்ல வருமா ?

முத்துகுமரன் said...

//அப்டிப்போடு... said...
//"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"//

:-)))))) எல்லாருக்கும் புரிஞ்சிக்கிச்சா?!//

எனக்கு இப்பதான் புரியுது:-)))

முத்து இதை நான் முதலில் கவனிக்க வில்லை.

என் கண்ணை திறந்த அப்படிபோடுவுக்கு நன்றி

Muthu said...

கோபிகாரரே,
மூன்றாவது அணியில் ஒரு துண்டு போடுங்க....இதோ வந்துட்டேன்..

அப்படிபோடு
ரொம்ப பயந்து போயிருக்கீங்கன்னு நெனக்கிறேன்..எனக்கும் முதல்ல
ரெண்டு நாள் தூக்கமே இல்லை..கெட்ட கெட்ட கனவு...இப்போ சாதாரணமாயிடுச்சு...

Muthu said...

ஜெர்மன் முத்து,
//இந்தப் பதிவைப் பதியறதுக்கு முன்னாடியே ரெண்டு பேருல அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்கதானே ..//
இருக்கு...இருக்கு....ரகசியத்தை ஓபனாக போட்டு உடைக்காதீரும்..:)))))

நீங்க சொன்ன மாதிரி மிரட்டல் மெயில் எனக்கும் வந்தது என்று சொன்னால் பலபேர் நம்ப போறதில்லை......
கேட்டுகொண்டால் அனுப்பி வைக்கிறேன்.......

கார்த்திக்,
ஹி..ஹி...கிடைச்சா அனுப்புங்க..நாங்கெள்ளாம் மானத்தோட சர்வைவ் ஆகனும்ல....

Muthu said...

இரண்டு காமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்பட்டுள்ளன..ஒன்று போலி டோண்டுவினுடையது...இன்னொரு காமெண்ட்டும் நான் பிரசுரிக்க தயங்கும் வார்த்தைகள் உள்ளதால்...நன்றி...கருத்துக்கு நன்றி..

பூங்குழலி said...

this comment is from my 5th a/c baby.....

:))

poonguzhali

ilavanji said...

//....(அமைதியா உட்கார்ந்து மூச்சு வாங்கிறீங்களாக்கும்)// கருத்தை சொன்னதுக்கப்பறம் எனக்கு அங்கென்ன வேலை? ஹிஹி... விட்டு விடுதலையாகிட்டேன்! :)

//அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.//

டோண்டு சார்! ஒரு உண்மை தெரியுமா?! எங்களையெல்லாம் உங்கபதிவுல படிக்க/பின்னூட்டமிடக்கூடாதுன்னு சொல்லிட்டு உங்க பதிவை விழுந்து விழுந்து படிக்கறது போலிதான்! உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்டா எங்களுக்கு ஒரு செந்தமிழ் கடுதாசி கேரண்ட்டி! :)

நண்பன் said...

// nanban,

do u want the dealership?:))))
simply i want to put that it is available universally that is all //

முத்து,

வியாபாரம் ஆவுதா ஆவலையான்ன கவலை இல்லாட்டி நம்மட்ட கொடுங்க.

அப்புறம் ஏன் ஒரு புத்தகம் கூட விக்கலன்னு போன் போட்டெல்லாம் கேக்கக்கூடாது, சரியா?

நாமக்கல் சிபி said...

//பிறகு பிண்ணுட்டம் புரியவிலை //

எனக்கு இன்னும் இதே நிலைதான். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.

Muthu said...

பூங்குழலி,
5வது அக்கவுண்டா அப்ப மத்த அக்கவுண்டெல்லாம் எங்க?
(ரொம்ப நாளா ஆளை காணோமே)

இளவஞ்சி,
போலி டோண்டு ஒரிஜினல் டோண்டுவை படிக்கிறானோ இல்லையோ..இந்த மூவ்மெண்ட் எல்லா பக்கமும் இருக்கு.
(விளக்கம் வேண்டுவொர் தனிமடல் அனுப்புக)


நண்பன்,
புக் அங்க பிளாக்கில் அவுட் ஆயிடுச்சா? என்ன போங்க...வேற சில புத்தகம் அனுப்பறேன்..படியுங்க..

Muthu said...

சிவனடியார்,

என் பதிவ படிச்சதும் உங்களுக்கு புரிஞ்சதாக்கும்..என்னய்யா இது அநியாயம்?

கடைசி செய்தி: உள்குத்து மேட் ஈஸி தமிழ் பதிப்பு வந்தாயிற்று...

நாமக்கல் சிபி,
புரியலையா? அப்ப உங்ககிட்ட இருந்து சில உள்குத்து பதிவுகளை சீக்கிரமாவே எதிர்ப்பார்க்கலாம்.

நாமக்கல் சிபி said...

//அப்ப உங்ககிட்ட இருந்து சில உள்குத்து பதிவுகளை சீக்கிரமாவே எதிர்ப்பார்க்கலாம்.//

உள் குத்துப் பதிவுகளா? அப்படி என்றால்? :(

ஒண்ணுமே புரியலே உலகத்துலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

Muthu said...

///நீங்க சொன்ன மாதிரி மிரட்டல் மெயில் எனக்கும் வந்தது என்று சொன்னால் பலபேர் நம்ப போறதில்லை......
கேட்டுகொண்டால் அனுப்பி வைக்கிறேன்.......////

முத்து,
அந்த மாதிரி மெயில் உங்களுக்கு இதுவரை வரவில்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால்தான் நான் நம்பியிருக்கமாட்டேன், ஆச்சரியப்பட்டிருப்பேன். தொடர்ந்து அதுமாதிரி வந்து கொண்டேதான் இருக்கும். படிக்க அவசியமே இல்லாத பின்னூட்டங்கள் அவை. பார்த்தவுடனே அப்படியே குப்பைக்குப் போய்விடும். ஒரு தடவைகூட அவற்றைப் படித்ததே இல்லை. அனுப்புபவரின் மனநோயை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. விரைவில் அவர் குணமாகட்டும் என்ற இரக்கம்தான் மிஞ்சுகிறது.