நமது வலைப்பதிவுகளுக்கும் தமிழ் எளக்கிய உலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இந்த மாத உயிர்மை இதழில் நம்முடைய இனிய நண்பர் ரஜினி ராம்கி எழுதிய ஒரு பதிவு முழுமையாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. நண்பருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு முழுமையாக கட்டுரையின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கே சோறு போடும் சிறு பத்திரிக்கை வட்டத்தில் அழுத்தமாக கால் பதித்துள்ள நமது ராம்கி இனிமேல் எப்படி நடந்து(?) கொள்ள வேண்டும் என்ற எளிய ஆலோசனைகள்.
1. இலக்கியவாதி ஆனப்பின் அதிக கருத்துக்கள். சக வலைப்பதிவர்கள் எல்லாம் உங்கள் கருத்து என்ன என்று கெஞ்சி கேட்டால் சில வார்த்தைகள் பீடிகையுடன் சொல்லலாம்.
2. கருத்து சொல்கிறேன் என்று சொல்லக்கூடாது.கருத்துக்களை பதிவு செய்கிறேன் என்று போடவேண்டும்.
3. பின்நவீனத்துவம், விளிம்புநிலை, இந்திய மரபு, மேற்கத்திய மரபு, எக்ஸிஸ்டென்ஷியலிசம் போன்ற வார்த்தைகளை நிறைய உபயோகப்படுத்தவேண்டும்.
4. பல பிரஞ்சு, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் பெயர்களை தெரிந்துக்கொண்டு அவ்வப்போது உபயோகப்படுத்துதல் நலம்.
5.ஹேர்ஸ்டைலை அவ்வபோது மாற்றிக்கொள்ளவும்.பல கூட்டங்களுக்கும் போகிறீர்கள்.வருகிறீர்கள். ஒரு பாதுகாப்புக்குத்தான்.எதுக்கு வம்பு? துப்பட்டாவால் யாராவது அடித்தால்?
just for fun
Friday, February 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அட கடவுளே, செத்தேன் நான்! இன்னொரு குத்து?!
மொத குத்து -
http://goinchami.blogspot.com/2006/02/blog-post.html#comments
உயிரை உருக்கி மெய்யை எழுதும் இலக்கியவாதி ராம்கி அண்ணன் வால்க :-)
இலக்கியவாதி அல்ல....எளக்கிய வியாதி!
நான் ப்ரமோஷன்ன உடனே வேற என்னென்னவோ நினைச்சிட்டேன் (Election time வேறாயா....)
தலைவர் கட்சி ஆரம்பிச்சு, கொ.ப.செ பதவி கொடுத்துட்டாரோன்னு......
அம்மாகூட ஒரே மேடையில பேசவைக்க பேச்சு நடக்குதாம்ல.....(மேடையில ரெண்டு சேர போடச்சொலுங்கப்பா..... அம்மா பின்னால நிக்கவிட்றாம)
தானைத்தலைவர் அஞ்சா நெஞ்சன், அண்ணன் ராம்கி வாழ்க..........(ரெம்ப திமுக வசம் அடிக்கிதோ)
ரொம்ப நாளா Blog ல வேற காணோம்?
Post a Comment