Monday, February 20, 2006

திராவிடனா ராகுல் திராவிட்?

ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் முழுக்க முழுக்க கர்நாடகாவை சேர்ந்த சில சாதனையாளர்களைப்பற்றி எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கொண்டு தமிழ் தொண்டாற்றி(?) வரும் நான், பெங்களூர்ல் இருந்து தமிழ் தொண்டாற்றி வரும் கோ.ராகவன், இளவஞ்சி ஆகியோருடன் சேர்ந்து சில கன்னடர்களை பற்றி எழுதலாம் என்று உள்ளேன்.பின்னால் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராய் ஆகியோரை பற்றியும் பதிவுகள் வரும்.

முதலில் நமது கிரிக்கெட் அணியின் கேப்டன் திராவிட் பற்றி எழுதி நான் ஆரம்பித்து வைக்கலாம் என்று உள்ளேன்.நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்லிப்பில் ஒரு அருமையான டைவிங் கேட்ச் செய்ததை நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். இந்த கேட்ச் பாகிஸ்தானுக்கும் ஆஸ்ரேலியாவுக்கும் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் மார்க் வாஹ் ஸ்லிப்பில் பிடித்த மிகச்சிறந்த கேட்சிற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல.

முப்பத்தி மூன்று வயதான ராகுல் திராவிட் கேப்டன் ஆனது இதுவே லேட் என்கிறார்கள். எப்போது கங்குலி பிட்னெஸ் இழந்து ஜீம்பாப்வே, கென்யா ஆகிய அணிகளை டார்கெட் செய்து சதம் அடிக்க தொடங்கினாரோ அன்றே அவரை அணியில் இருந்து தூக்கியிருக்கவேண்டும்.ராகுல் கேப்டன் ஆகியிருக்க வேண்டும்.அது நடக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் கங்கூலிக்கு அணியில் இடம் கொடுப்பதற்காகவே விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல் திராவிட். அதில் அவருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்தும் அந்த பொறுப்பை திறம்பட நிறைவேற்றினார்.

கங்கூலி பிரச்சினையால் ஓபனிங் பேட்ஸ்மெனாக களம் இறங்கவும் நேர்ந்தது ராகுல் திராவிட்டுக்கு இந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது. அதையும் ஓரளவு நன்றாகவே செய்தார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள்கூட பாராட்டும் அளவிற்கு பர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக திகழும் ராகுல் நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராம்.பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ராகுல் பேசும் பக்குவமான பேச்சு இந்திய கிரிக்கெட் ஒரு புத்திசாலியின் பொறுப்பில் இப்போது உள்ளது என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.

சேப்பல் உடன் சேர்ந்துக்கொண்டு ஓட முடியாதவர் ( வி.வி.எஸ்.லட்சமண்), ஓட பிடிக்காதவர் (சவுரவ் கங்கூலி), பந்தை ஃபீல்டிங் செய்து எறிய முடியாதவர் ( கும்ளே) ஆகிய ஆட்களை தூக்கி எறிந்துவிட்டு அணியில் இளமை துள்ளும் பையன்களை போட்டு அழகாக வழிநடத்தி செல்கிறார்.

திராவிட்டுக்கு கோபம் கூட வரும் என்பது சில சமயம் ப்ரூவ் ஆகி உள்ளது. ஒரு முறை டெனால்டு செய்த கலாட்டாவில் டென்சனான திராவிட் வாயால் மட்டுமில்லாமல் பேட்டாலும் பேசினார்.(சிக்ஸர் அடித்துத்தான்).

டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டுக்கொண்டிருந்தபோது தடாலடியாக டிக்ளேர் செய்தது, கங்கூலி சமாச்சாரத்தைப்பற்றி கேட்கும் பத்திரிக்கையாளர்களை சமாளிப்பது போன்ற செய்கைகளின் மூலம் தேவைப்படும் நேரம் அவசியமான கடுமையும் கூடவே ராஜதந்திரமும் காட்டமுடியும் என்று நிரூபித்துள்ளார் ராகுல்.


சமீபத்தில் அழகான ஆண்குழந்தைக்கு தந்தையான ராகுல் அடுத்த உலககோப்பை வரை அணியின் தலைவராக இருப்பார் என்று தெரிகிறது.ஃபார்ம் போய்விட்டால் கங்கூலி போல் அடம் பிடிக்காமல் வெளியே சென்றுவிடும் பக்குவம் உள்ளவர் என்று நம்பலாம்.

இப்படிப்பட்ட ராகுல் திராவிட் நமது தமிழகத்தை சேர்ந்தவர் என்பது சிறப்புசெய்தி. இவரது முன்னோர்கள் நமது கும்பகோணத்தை சேர்ந்த அய்யர் குடும்பம் என்று அவரே கூறியதாக விகடனில் படித்துள்ளேன்.

நண்பர்கள் கோ.ராகவன் அல்லது இளவஞ்சி யாராவது இன்போசிஸ் நாராயணமூர்த்தியை பற்றி எழுத வேண்டுகிறேன். அவரின் சாதனைகள், அவரின் சமூக சிந்தனைகள், சேவைகள், சுதா மூர்த்தியின் பங்களிப்பு அகியவை பற்றி எழுதலாம். ஒரு தமிழன் ஏன் இன்போசிஸ் மாதிரியான நிறுவனத்தை நிறுவ முடியவில்லை என்பதை பற்றியும் ஆராயலாம்.

19 comments:

ராம்கி said...

Atlast....started! Keep it up! :-)

துபாய்வாசி said...

நல்ல பதிவு. என் பதிவையும் கொஞ்சம் பாருங்கள் (இதை ஒட்டியே எழுதியிருக்கிறேன்).

நன்றி

சந்திப்பு said...

ரன் மீது மட்டும் கண் வைத்திருக்கும் நம் மக்களுக்கு திராவிடின் வெகு சிறப்பான பேட்டிங் தரத்தை புரிந்து அறிந்து கொள்வதில் ஏதோ சிக்கல் உள்ளதாகத் தெரிகிறது.
திராவிடின் பேட்டிங் °டைல், °டிரோக், டைமிங், எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற தன்மை இவையெல்லாம் நிச்சயம் ஒரு பக்குவமான மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே செய்யமுடியும். அந்த வகையில் திராவிட் என்றைக்குமே பெருமைக்குரியவர். திராவிட் தமிழனா, திராவிடனா, கர்நாடகனா என்பதை விட அவர் இந்தியன் என்பதில்தான் பெருமை உள்ளது.
இந்திய இளைஞர்களின் அடையாளமாக திராவிட்கள் மலர வேண்டும். அடையாளம் இனமாகவோ, மதமாகவோ, ஜாதியாகவோ மாறக்கூடாது!

G.Ragavan said...

திராவிட் பற்றி நல்ல அறிமுகம். பெங்களூரில் இந்திரா நகர் பகுதியில் வசிக்கிறார் திராவிட். சிறந்த ஆட்டக்காரர். இன்னும் முன்னுக்கு வர வாழ்த்துவோம்.

முத்து...இப்படி திடீருன்னு பொறுப்பு குடுத்துட்டீங்க....இப்ப கொஞ்சம் டைட்டு....இளவஞ்சி எழுதலாமே...(பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது எவ்வளவு சொகம்)

முத்து(தமிழினி) said...

ராம்கி,

நன்றி. மனதில் வைத்துள்ளேன். இனி குறைந்தது மாதம் இரண்டு பதிவாவது கர்நாடகாவை பற்றி இருக்கும்.


கரெக்ட் துபாய்வாசி...சரியாக சொன்னீர்கள்.

உங்கள் பதிவை பார்த்தேன். அடக்கத்தோடு கூடிய நிதானம்,கடின உழைப்பு, புத்திசாலித்தனம் இவ்வளவும் கூடியவர்.அணியின் வெற்றிக்கு கூட்டுமுயற்சியும் ஒரு காரணம்.

முத்து(தமிழினி) said...

ராகவன்,

விளையாட்டு ஈஸிய்யா..நான் எழுதிடுவேன்..

சாப்டுவெர் எல்லாம் பெரிய விஷயம்.அதான் அங்க சொன்னேன்...

இளவஞ்சியும தள்ளி விட்டுட்டார்னா நானே எழுத வேண்டியிருக்கும் என அன்புடன் எச்சரிக்கிறேன்.

சந்திப்பு,

முதலில் அவரை அறுவை பேட்ஸ்மென் என்றார்கள்.ஆனால் அவரை போல ஒருவரும் பேட்டிங் ஆர்டரி்ல் தேவை என்பதை இப்போது அனைவரும் உணருகிறார்கள்.

PKS said...

I dont know if one could say that Dravid did "keeping" in one day internationals to give place for Ganguly in the team. There was a period (people like Badri could tell when), where Dravid did not even find place in one day teams. He was consistently kept out of one day teams (sure, it was a bad decision looking at it now) because he used to score very slowly. Ganguly is THE person who brought Dravid into one day Team. Similarly Ganguly is THE person who brought many youngsters including Shewag (Ganguly gave up his one day opening slot for Shewag), Yuvraj, Kaif etc and told them to keep playing their game (means, their place wont be taken away due to few of their failures).

I have no issues in anyone praising Dravid (even I like him). However, in that exercise, writing as if Dravid kept wickets to give Ganguly a place in the team, is stretching the truth little too much.

Thanks and regards, PK Sivakumar

முத்து(தமிழினி) said...

Dear PKS,

This will not apply when ganguly was in peak form and dravid was struggling to keep his place in one day internationals...but once ganguly's form starts sliding especially when kaif and yuvraj are threatening the take the batting positions in middle order,that was the time that ganguly really struggled...(and dravid made to keep wickets)

it is true ganguly groomed these youngsters and it is really a irony that his place is taken away by the same people..this is because ganguly loses his fitness and he wants to continue even after his form slumps...

thanks PKS for visit and comments

Muthu

இளவஞ்சி said...

முத்து,

//பெங்களூர்ல் இருந்து தமிழ் தொண்டாற்றி வரும் கோ.ராகவன், இளவஞ்சி //

ஆஹா!! என்ன விளையாட்டு இது??? ராகவன் ரேஞ்சுல நானா? இதுதான் பூவோடு சேர்ந்த நாரும்...

சொந்த கதையையே ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எழுதறேன்! அடுத்தவங்க கதையா?! கண்டிப்பா எழுதறேன்னு சொல்ல மாட்டேன். முயற்சி செய்யறேன் முத்து...

rajkumar said...

//இன்போஸிஸ் போன்ற நிறுவனத்தை ஏன் தமிழனால் நிறுவ இயலவில்லை?//. இது தேவையற்ற ஆராய்ச்சி.

சிறந்த வணிகராக இருப்பதற்கும், பிறந்த மாநில அடையாளங்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமா என்ன?

அவ்வாறு ஆராய வேண்டுமென்றால் டி வி எஸ் மாதிரி ஏன் கன்னடர்கள் ஆரம்பிக்கவில்லை என பல கேள்விகள் கேட்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும், டிசி எஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ராமதுரை, மகாலிங்கம் என பல தமிழர்கள் காரணமாயிருந்துள்ளார்கள்.

மற்றபடி பிற மாநில சாதனையாளர்களை பற்றி எழுதும் உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்.

முத்து(தமிழினி) said...

ராஜ்குமார்

பாராட்டிற்கு நன்றி.
இது தேவையில்லாத ஆராய்ச்சி என்று நான் நினைக்கவில்லை. நான் நாராயணமூர்த்தியை இன்பொசிஸை மூட சொல்லவில்லை. பெங்களூரில் பல தமிழர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.பொதுவாக மென்பொருள்துறையில் தமிழர்கள் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏன் இது போன்ற ஒரு பெரிய நிறுவனத்தை நாம் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கம்தான் இது.

தாழ்வு மனப்பான்மையை நியாயப்படுத்துவதற்காக நாம் இதை பற்றி பேசாமல் இருக்கவேண்டாம்.

அடுத்தவனை பழிக்காமல் நாமும் முன்னேற ஆசைப்படுதலே என் எண்ணம்.

முத்து(தமிழினி) said...

இளவஞ்சி நன்றி,

விரைவில் எதிர்பார்க்கிறேன்.கன்னட சகோதரர்களை பற்றி எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறும்பன் said...

He is "Gang'uly" :-)
அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல) நம்ம கணக்குப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துழு எல்லாம் திராவிடரே ஆகையால் இராகுல் திராவிடரே ஆவார். இனிமே தமிழில் எழுதும் போது இராகுல் திராவிடர் என்று எழுதலாமே? -:))

Samudra said...

//அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல) நம்ம கணக்குப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துழு எல்லாம் திராவிடரே ஆகையால் இராகுல் திராவிடரே ஆவார். இனிமே தமிழில் எழுதும் போது இராகுல் திராவிடர் என்று எழுதலாமே? -:))
//

Carefull!

நான் திராவிட சமாச்சாரங்களை பற்றி இப்போது எதுவும் பேசுவதில்லை என்பதால் தான் உங்களுக்கு எல்லாம் குளிர்விட்டு போய்விட்டது. :)அவங்க அப்பாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்...நான் தென் இந்தியாவை சேர்ந்தவன் என்பதால் தான் "தென்னவன்" என்று பொருள் படும்படி "திராவிட்" என்ற எனது மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று.

முத்து(தமிழினி) said...

hahaha good joke samudra:)))


thank god dravid's father is not worrying about the roots of the word "dravid".

he is a true proud tamilian(dravidian)

மர்ம வீரன் said...

ஒருவரை உயர்த்தி பேச வேண்டுமென்றால் அடுத்தவனை தாழ்த்தி தான் ஆக வேண்டும் என்பது திராவிடர் குணம் போலும்.
திராவிட் சிறந்த ஆட்டகாரர் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டார் என்பதும் அதை செய்ய விடாமல் திராவிட் டிக்ளேர் செய்தது இராஜதந்திரம் என்பதும் வடிகட்டிய முட்டாள்தனம்.
அன்று டெண்டுல்கர் விளையாடிய விதம் தெரியுமா? 112 பந்துகளில் 50 ஓட்டங்கள், 209 பந்துகளில் 100 ஓட்டங்கள், 295 பந்துகளில் 150 ஓட்டங்கள், 348 பந்துகளில் 194 ஓட்டங்கள். அவர் தனது கடைசி 50 ஓட்டங்களை 58 பந்துகளில் எடுத்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் சிறு குழந்தைக்கும் தெரியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு நல்ல ஓட்ட விகிதம் என்று.
திராவிடரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக மற்றவரை தாழ்த்தி பேசும் உம்மை போன்றவர்கள் இருக்கும் வரை திராவிடர் உயர முடியாது. ஏதாவது எழுத வேண்டும் என்ற உமது ஆர்வம் புரிகிறது. ஆனால் எழுதும் முன் சற்று மூளையை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது

யாழினி அத்தன் said...

ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஆரம்பிச்சிட்டாங்க...

அய்யர், திராவிடன்...ஹும் எங்கேயோ உதக்கிதே...

Anonymous said...

ராகுல் அய்யர் எப்போதுய்யா திராவிடர் ஆனார்?

லக்கி திராவிடரின் வாய்ப்பை ராகுல் அய்யர் பெயர் மாற்றி தட்டிப்பறித்துவிட்டார் என்று ஒரு பதிவு போடுங்கள்.

லொடுக்கு said...

உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனைப் (ஆம்! என்னைப் பொறுத்தவரை) பற்றி பதிந்தமைக்கு மிக்க நன்றி.

//இன்னும் சொல்லப்போனால் கங்கூலிக்கு அணியில் இடம் கொடுப்பதற்காகவே விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல் திராவிட்.
//
ஆனால், சிரிப்பு மூட்டாதீர்கள் நண்பரே! நீங்கள் சொல்வது முரணாகும். டிராவிட் தனது சிறப்பான ஆட்டத்தை மெருகேற்றி, ஒருநாள் போட்டிக்கேற்ப விரைவுத்தன்மையை கூட்டாத நேரத்தில், அவருடைய சிறப்பான டெஸ்ட் சாதனைகளை மனதில் வைத்து துணிந்து 'இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக' விக்கெட் கீப்பர் என்ற பதவியே இல்லாமல் டிராவிடை கீப்பராக்கி வாய்ப்பு வழங்கினார் கங்குலி. இதை எப்படி திரிக்க மனம் வந்தது உங்களுக்கு? ஒருநாள் கிரிக்கெட்டில் டிராவிட் விரைவாக ரன் குவிக்க தொடங்கியதே ஸ்டம்புக்கு பின்னால் நிற்க தொடங்கிய பிறகு தான். அவரே இதை பல முறை கூறியுள்ளார்.

//கங்கூலி பிரச்சினையால் ஓபனிங் பேட்ஸ்மெனாக களம் இறங்கவும் நேர்ந்தது ராகுல் திராவிட்டுக்கு இந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது.
//

யார் டிராவிடை யார் ஓபனிங் இறங்கச் சொன்னது? கங்குலியா? இல்லவே இல்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் செய்திராத கங்குலியை (காமாரக்கள் கவனித்துக் கொண்டிருந்தன என அறிந்தும்) பிட்ச் நடுவில் வைத்து ஓபனிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டதும் அதற்கு கங்குலி மறுத்ததும் உலகமறிந்தது. அதை சவாலாகவும் தன்னை அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர் எனக் காட்டவும் தான் டிராவிட் ஓபனிங் செய்தார் அன்று. அதற்கெப்படி கங்குலி பொறுப்பாவார்? மாறாக கங்குலி மீது அவப்பெயர் சூட்டவே நான்கு பேர் மத்தியில் அவர் நடந்து கொண்டார் என்பதை தாங்களால் மறுக்க முடியுமா? அதை ஏன் அவர் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று பேசியிருக்க கூடாது?

//ஓட முடியாதவர் ( வி.வி.எஸ்.லட்சமண்), ஓட பிடிக்காதவர் (சவுரவ் கங்கூலி), பந்தை ஃபீல்டிங் செய்து எறிய முடியாதவர் ( கும்ளே) ஆகிய
//

அடுத்த கூத்து இது. நேர்மையாக கூறுங்கள். ஸ்லிப் பொஸிஷன் தவிர்த்து டிராவிடால் வேறெங்கேனும் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியுமா? இதை காரணமாக வைத்து இன்னும் கூட லட்சுமன் புறக்கணிக்கப் படுவது கொடுமை. லட்சுமனின் பேட்டிங் திறமை முன் யுவ்ராஜ்/கைஃப்/ராய்னா/கார்த்திக் நிற்கமுடியுமா? இல்லையேல் டிரவிடை விட லட்சுமன் மோசமான் ஸ்லிப் ஃபீல்டரா?

//டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டுக்கொண்டிருந்தபோது தடாலடியாக டிக்ளேர் செய்தது,
//

அத்தனை நேரம் டிக்ளேர் செய்யாதவர் 4 ரன்கள் அடிக்கவிடாமல் பொறுமையிழந்தது ஏன்? மனநோய்? ஏற்கனவே இந்தியாவின் பிடி ஓங்கியிருந்த அந்த போட்டியில் இந்த டிக்ளேர் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என கணக்கு போட்டார்?

//திராவிடனா ராகுல் திராவிட்//

ஹி ஹி. நான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த தலைப்பு. :)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?