Sunday, July 23, 2006

இஸ்ரேலும் இந்தியாவும்

இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் லெபனானை தாக்கிக்கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி சர்வதேசநாடுகள் எதுவும் கண்டுக்கொள்ளவே இல்லை. இஸ்ரேல் விஷயத்தில் அவர்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உள்ளது என்று புஷ்ஷில் தொடங்கி அமெரிக்க அரசாங்கத்தின் அனைத்து அல்லக்கைகளும் கூறிவிட்டனர்.

கொஞ்சமும் மனித தன்மையற்ற இந்த தாக்குதலில் ஏகப்பட்ட சிவிலியன்கள் உயிரிழப்பு என்று தகவல்கள் வருகின்றன. ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள் லெபனானை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்கு இருந்த வெளியேறிய இந்தியர்களில் கணிசமானோர் தமிழர்கள் போல் தெரிகிறது.நம்ம ஆளுங்க இல்லாத இடமே இல்லடா சாமி.

பம்பாயில் குண்டுவெடித்து ஏராளாமோனோர் இறந்தும் நம்மை பாகிஸ்தானை குற்றம் சொல்லக்கூட அமெரிக்கா விடவில்லை. ஆதாரத்தை எடுத்து வைத்து விட்டு பேசுங்கள் என்றுவிட்டனர். இந்தியா ஒருவேளை பாகிஸ்தானை தாக்கினால் கூட நமக்கு அமெரிக்க ஆதரவு கிடைக்காது. சீனாவும் பாகிஸ்தானை தான் ஆதரிக்கும்.ரஷியா கூட நமக்கு கண்மூடித்தனமான ஆதரவை தரும் நிலையில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே உணர்ச்சி வேகத்தில் இஸ்ரேலை போல் நாமும் செய்யவில்லை என்றெல்லாம் பேசுவது புத்திசாலித்தனம் அல்ல. அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் பேட்டை ரவுடி மாதிரி கலாட்டா செய்யும் இஸ்ரேலை ஆதரிப்பதும் நியாயமாகாது.

உருப்படியான தீர்வு இந்திய அரசாங்கம் புலனாய்வு பிரிவை பலப்படுத்த வேண்டும். உள்நாட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப் படவேண்டும். மத ரீதியான மோதல்களை தூண்டும் முயற்சிகளில் ஈடுபடும் அன்னிய சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும் தவிர்க்கப்படவேண்டும்.இஸ்லாமிய சமூகத்தில் உள்ள மிதவாத சக்திகள், மிதவாத அறிவுஜீவிகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.


நேற்று கோவையில் தமிழக போலீஸ் அதிரடி நடவடிக்கையில் சில தீவிரவாதிகளின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் நடைபெற வேண்டும்.

(points taken from express article)

17 comments:

Sivabalan said...

முத்து,

நல்லா சொல்லியிருக்கிறீங்க...

நேற்று இங்கே ரேடியோவில் பேசின Jews வர்ணனையாளர், அமெரிக்க அரசாங்கமும் மக்களும் இஸ்ரேலுடன் தான் இருக்கிறோம்..

வழக்கம்போல் இந்த பு.பி. இஸ்ரேலுக்கு ஆதரவாக எல்லா ஊடங்களையும் ஒத்து ஊதவைக்கின்றனர். ஏனென்றால் அனேக ஊடங்களில் இவர்கள் முக்கியமான இடங்களை பிடித்து வைத்துள்ளனர்.

இதற்கு எதிராக ரேடியோவில் ஒலித்த ஒரு அமெரிக்க குரல் இந்த Jews வர்ணனையாளர்களால் சப்பைக் கட்டு கட்டி முடிக்கப்பட்டது...

இந்தயாவில் பு.பி.க்கள் எப்படி இட ஒதுக்கீடு போன்ற விசயங்களை கையாளுகிறார்களோ அதே போல் இங்கேயும் இந்த விசயத்தை கையாளுகிறார்கள்...

என்னத்த சொல்ல...

இந்தியாவைப் பொருத்தவரையில் இக்கட்டுரையில் சொல்லியிருப்பதைப் போலத்தான்
கையாள்ப்படவேண்டும் என்பது என் எண்ணம்...

நன்றி

மாயவரத்தான் said...

ம்... இஸ்ரேலின் தாக்குதலுக்கு அந்த இரண்டு வீரர்கள் கடத்தல் மட்டும் தான் காரணமா?!

ஒரு சில லோக்கல் அல்லக்கைகள் தான் திரித்து பேசுகிறார்கள் என்றால் நீங்களுமா? இஸ்ரேல் என்பதால் இப்படி ஒரு பதிவா?!

இருந்தாலும் ஒரு + போட்டு விட்டேன்.

╬அதி. அழகு╬ said...

இஸ்ரேல் இராணுவத்தின் குறி தவறாத ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் புகைப்படங்களுக்கான சுட்டி:
http://www.fromisraeltolebanon.info/

தருமி said...

இந்தப் பிரச்சனைகள் தீர நீங்கள் சொல்வதுபோல எளிமையான வழிமுறைகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...? இன்னும் வரப்போகும் நிகழ்வுகளை நினைக்கும்போதே பயமாக இருக்கிறது.

பாரதிய நவீன இளவரசன் said...

talking, talking, talking....that is what India doing now and ever....our politians and intellectuals always 'Strongly Condemn' any terrorist attack and the talk of `strengthening the security and intellegence apparatus'...

........like Israel we cannot attack..........not because it is inhuman to toe the israel line, but due to lack of killer instinct in us...

.....not Israel, or US, for that matter, any european country, or Russia, or even China for that matter will never allow itself to play a defensive role, when it is attacked by an extra territorial power...they would first attack the suspected perbeter of crime setting aside all their other `burning' issues and mobilize public opinion against terrorism at national level .................and thats what US did in the aftermath of September 11 attacks..

US asks india to place proof of pak involvement in the blast. Well, pak involvment in previous terrorists acts have been proved beyond doubt...did US supported an Indian idea of attacking Pakisthan. US will never do any harm for Pakisthan as the latter is more helpful and listening to US than India...this is the reason for US asking India always to take the issue to negotiating table instead of war. It will not ask Israel to sit and negotiate with Lebanon, because it knows who will listen to them and who will not listen to them.

Suppose, if India acts in a proactive manner.....my dear brother, you and me will be accusing India of violation of human rights........and at that time, ironically, US will also support u and me against the govt. of India, in this case...

so dont blame US......and dont call me CIA...

anyhow, i am sure, you will agree with me in one thing....in strongly condemning the dastardical act of Israeli attack on Lebanon and the terrorist attack at Mumbai....

Boston Bala said...

ஹெசபொல்லாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அணு ஆயுதம் இருப்பதுதான் முக்கிய வித்தியாசம். அண்டை நாடு பலம் குன்றியிருந்தால், இஸ்ரேல் என்ன, இந்தியாவும் கூட களத்தில் குதித்திருக்கும்.

---கொஞ்சமும் மனித தன்மையற்ற இந்த தாக்குதலில் ஏகப்பட்ட சிவிலியன்கள் உயிரிழப்பு---

ஹெசபொல்லா இராணுவ வீரர்களைக் கடத்திக் கொண்டே இருப்பது மட்டும் மனிதத் தன்மையா? ஹமாஸ் கடத்தல்களுக்கு மட்டும் பாராமுகம் ஏனோ?

----அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் பேட்டை ரவுடி மாதிரி ---

இவ்வளவு எளிதாக இதை அர்த்தமாக்க முடியாது. 2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை விலக்கியவுடன் ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட வில்லை. சிரியாவின் ஆதிக்கம் அதிகரித்தது. பிரதம் மந்திரியே ஹெசபொல்லாவை 'எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.


கோலன் ஹைட்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம்' என்று இஸ்ரேல் காட்டாவிட்டாலும், இரண்டு கண், கை, கால் எல்லாம் போன பிறகு 'on eye for two eyes, two legs, two hands' என்பது போல் சீற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் 'நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்' என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு - செய்யும் அரசியலையும்; ஹமாஸ் வளர்ந்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கி ரஷியாவை மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்; மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, 'தானும் அடித்து ஆட வல்லவன்' என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும்; சேர்த்துப் பார்க்காமல், 'இஸ்ரேலின் தற்காப்பு' என்று பொதுமையாக்க இயலாது.


சுருக்கமாக, இஸ்ரேலையும் இந்தியாவையும் ஒப்பிட முடியவே முடியாது. பாகிஸ்தான் 'நான் தான் அனுப்பி வைத்தேன்' எறு சொன்னால் கூட இந்தியாவை அடங்கிப் போகுமாறு நீங்கள் சொன்ன அனைவரும் சொல்லி செல்வார்கள். எண்ணெய்க்கிணறு, அரசியல் வியூகம், யூதர்களின் தலைமை செல்வாக்கு, இந்தியாவின் வளர்ச்சி என்று அவர்கள் கவலைகள் வேறு. இந்தியாவில் தலைவலியை இந்தியாவேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

PRABHU RAJADURAI said...

"நேற்று கோவையில் தமிழக போலீஸ் அதிரடி நடவடிக்கையில் சில தீவிரவாதிகளின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டப்படவேண்டியது"

நினைத்தேன்...இப்படியெல்லாம் அறிவுஜீவித்தனமாக இங்கு எழுதுவார்கள் என! பின் ஏன் தீவிரவாதம் இங்கு வளராது?

சிறில் அலெக்ஸ் said...

இஸ்ரேல் சிவிலின்களைக் கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தன் போரில் காட்டும் தீவிரம் எல்லையை காத்துக் கொள்வதில் இருந்திருந்தால் கடத்தல் இருந்திருக்குமா?(நிஜத்தில் கடத்தல் எப்படி நடந்தது என தெரியவில்லை).

எனக்கென்னவோ முன்பு பனிப்போர் உலகை எச்சரித்துக்கொண்டிருந்ததுபோல இப்போது மத்தியகிழக்கு பிரச்சனை தூண்டவிடப்பட்டுள்ளது.

இது உலகளாவிய ஒரு கான்ஸ்பிரசி என்பது நிஜம். இல்லையென்றால் எப்படி வெறும் கொள்க்கை அடிப்படையில் துவங்கும் சில அமைப்புக்களுக்கு எளிதில் ஆயுதம் கிடைக்கிறது, அதுவும் இராணுவங்களை எதிர்க்குமளவுக்கு. பாக்கிஸ்தானிலும், லெபனானிலும் தாங்களே தீவிரவாதிகள் ஆயுதங்களை செய்துகொள்கிறார்களா என்ன?
ஆயுதச் சந்தை வியாபார யுத்திகளே இவை என நினைக்கிறேன்.

thamillvaanan said...

இப்போரில் சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்காக போரிற்கான நியாயத்தை தவறென்று சொல்லமுடியவில்லை.

இஸ்ரேலை பொறுத்தவரை அதன் தற்காப்புக்கான யுத்தம் என்பது தவிர்க்கமுடியாதது. இப்போரிற்கான உடனடிக்காரணங்களையும் கவனத்தில் கொள்வதோடு நீண்டகால காரணிகளையும் கவனித்தால் இது புலப்படும்.

இஸ்ரேலின் பிரதேசத்திற்குள் ஊடுருவி அதனது படைவீரர்கள் ஹிசபுல்லா போராளிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேவேளை இஸ்ரேல் லெபனான் எல்லையில் லெபனான் படைகளோடு இணைந்து ஹிசபுல்லா போராளிகள் செயற்பட்டு வருகிறார்கள்.

இஸ்ரேலின் இருப்பை இதுவரை அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலை தொடரும்வரை இதற்கான தீர்வு காணப்படமுடியாது.

Muthu said...

நன்றி சிவபாலன்,

அரசியல்ரீதியாக இஸ்ரேலின் நிலையை ஆதரிப்பது எதிர்ப்பது ஒரு புறமிருக்க, பாலஸ்தீனர்களின் நியாயத்தை கவனிப்பது ஒருபுறமிருக்க சிவிலியன்களை கண்மூடித்தனமாக தாக்கும் இஸ்ரெலை எப்படி ஆதரிக்க முடியும்?

***************

மாயு,

இந்த லெபனானின் மீதான இஸ்ரெலின் தாக்குதலுக்கு அந்த கடத்தல் தான் காரணம் என்று இஸ்ரேலே சொன்னதாக படித்தேன்.இல்லையா?

சிவிலியன்கள் சாகிறாங்க குரு..அத பாருங்க...

(+ குத்துக்கு நன்றி ஹிஹி )

******************

அழகு,

இந்த சுட்டியை பார்த்தேன்.. என்ன சொல்லுவது?


**********

தருமி சார்,

நம்முடைய தீர்வு புதிய பிரச்சினைகளை உருவாக்கிவிடுமே..காஷ்மீர் பிரச்சினையை உண்மையாக தீர்க்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம் என்றால் புது கலாட்டா வந்துவிடாதா? :))

**************

Muthu said...

பாரதீயமாடர்ன்பிரின்ஸ்,

யதார்த்தம் இதுதான் நண்பரே...எந்த ஒரு நிலைமையையும் கொடுக்கப்பட்ட நிலைமைகளில் (context) முடிவு எடுத்துத்தான் செயல்படுகிறோம்.


நானும் பி.ஜெ.பி ஆட்சிக்கு வந்தபோது முதல்நாள் பாகிஸ்தானையும் இரண்டாம் நாள் ஆப்கானிஸ்தானையும் பிடித்துவிடுவோம்.பிறகு பகுதி பி.ஜே.பி வட்ட செயலாளரை பிடித்து இலங்கையை பிடித்துத்தர சொல்லி கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்.ஆனால் பங்களாதேசிடன் கூட உதை வாங்கினோம்.



ஆக உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதும் மக்களை சாந்தப்படுத்துவதும் மதவெறியை( இஸ்லாமிய மற்றும் இந்து) குறைப்பதும் தான் உருப்படியான வழி.

Muthu said...

பாலா,

இஸ்ரேலின் அரசியல் நிலைப்பாட்டை பேசவில்லை.அதிலும் ஏகப்பட்ட மாற்று பார்வைகள் உள்ளது என்பது ஒருபுறமிருக்க.. லெபனான் குட்டி நாடு என்பதால் சிவிலியன்களை கண்மூடித்தனமாக இஸ்ரேல் கொல்லலாமா?

இந்தியாவின் தலைவலியை இந்தியா தான் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் அது பாகிஸ்தான் மேல் குண்டு போடுவது கிடையாது என்று நினைக்கிறேன்.

********

பிரபு ராஜதுரை சார்,

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.


*********

சிறில்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சிவிலியன் கொலை இப்படி அதிகாரபூர்வமாக நியாயப்படுத்தப்படுவது நாகரீக சமுதாயத்திற்கு கேடு.

ஆயுத வியாபாரத்தையும் தாண்டியது இந்த பிரச்சினை என்று நினைக்கிறென்.

************


தமிழ்வாணன்,

நீங்கள் கூறிய அதே வாதத்தைத்தான் நண்பர் பாஸ்டன் பாலாவும் (நீண்ட கால காரணிகள்) கூறியுள்ளார். வேறு தீர்வு இல்லையா? சிவிலியன்கள் சாவது தான் தீர்வா என்பது நம் நிலை.

நாமும் பயங்கரவாதிகளினால் பல சிவிலியன்கள் உயிரிழப்புகளை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகம் said...

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது

இஸ்ரேலுக்கு தேவயான பணம் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா வாரி வழங்குகிறது. ஆனால் இந்தியாவிற்கு அது வழங்கவில்லை மாறாக பாக்கிஸ்தனுக்கு அமெரிக்கா உதவுகிறது

தயா said...

due to lack of killer instinct in us...

ஏங்க இந்த கொலைக்கைதிகளுக்கு (புத்தி தடுமாறி கொலை செய்தவர்களை விட்டுவிடுவோம்.)தண்டனைகள் தருவதற்கு பதில் இந்திய இராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்து எல்லையில் நிறுத்தி வைத்தாலென்ன?

(ஐயோ! எனக்கு புத்தி மாறிடுச்சோ?)

Unknown said...

முத்து அருமையானப் பதிவு, அதைத் தொடர்ந்து சில அருமையானப் பின்னூட்டங்கள்.
ஒரு விஷ்யத்தை இப்படிப் பலப் பேர் கூடி அலசி அலசி.. ஆறப் போட்டு காயப்போட்டு காரியங்களில் எந்த வித முன்னேற்றமும் காட்டாமல் நாம் காலம் தாழ்த்துகிறோமோ என எனக்குள் ஒரு சின்ன ஐயப்பாடு...

இங்கு கருத்து கூறியிருக்கும் பலரைப் போல் எனக்கு இந்த விஷ்யங்களில் ஆழ்ந்தத் தெரிதல் இல்லாத நிலையிலும் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்... எல்லாருக்கும் நல்லவனாக எல்லோராலும் எல்லாக் காலத்திலும் இருப்பது என்ப்து யாருக்கும் உயிரோடு இருக்கும் வரை சாத்தியமில்லை.. அப்படியிருக்க தீர்வுகள் குறித்து ஆலோசித்துக் கொண்டே இருப்பது மட்டும் எதற்கும் தீர்வாகாது

சந்திப்பு said...

முத்து இசுரேலை பேட்டை ரவுடி என்று சரியாக அடையாளப்படுத்தியுள்ளீர்கள். இசுரேலின் நோக்கமே அரபு நாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான். அமெரிக்காவுக்கோ அரபு நாடுகள் தன் கைக்குள் வரவேண்டும் என்பது. இதற்கு இசுரேலை பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்கவின் அடுத்த இலக்கு சிரியா... வடகொரியா இப்படியே போனால் உலக நாடுகளை நவீன காலனியாக்குவதில்தான் முடியும். எனவே, இன்றைக்கு நம்முடைய எதிரி அமெரிக்காதான். இதற்கு எதிரான கருத்துக்களை பலப்படுத்திட வேண்டும். சீனாவும், பாகிசுதானும் நமது நட்பு நாடுகள். பாகிசுதானை அமெரிக்கா இன்னொரு இசுரேலாக மாற்ற முயற்சிக்கிறது. ஒன்றுபட்ட இந்திய சுதந்திரப்போரில் பிரிட்டிசுக்கு எதிராக போரிட்ட பாரம்பரியம் உள்ளவர்கள் நாம் (இந்தியா - பாகிசுதான்) எனவே அமெரிக்காவுக்கு எதிரான விஷயத்தில் அவர்கள் (பாகிசுதான் மக்கள்) நம் பக்கம் நிற்பார்கள்.

Muthu said...

நன்றி நண்பர்களே,

தேவ்..நீங்கள் கூறியது உண்மைதான். விவாதித்து கருத்தொற்றுமை கொண்டு வந்து அதன்மூலம் ஏதாவது சாதிக்கமுடியுமா என்ற எதிர்ப்பார்ப்புதான்.

நடப்பது கடினம்தான் என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.ஆயிரம் இருந்தாலும் அதிகாரம்,படைபலம் தான் கடைசியில் வெல்கிறது.