பாருங்க சார், அய்யாமாரே, அம்மாமாரே,இந்த குத்துசண்டை கத்துக்கறவங்க பிராக்டிஸ் பண்றதுக்காக ஒரு மணல் மூட்டையை கட்டி தொங்கவிட்டுருப்பாங்க.அதை குத்தி குத்தி பிராக்டிஸ் பண்ணுவாங்க.அக்னி நட்சத்திரம் படத்தில் பார்த்தீங்கன்னா பிரபு எக்சைஸ் பண்ணுவாரு பாருங்க.என்ன தான் குண்டாக இருந்தாலும் பிரபு அந்த படத்தில் செய்த ஸ்டைல், பாடி லாங்வேஜ் எல்லாம் சூப்பருங்க.ஒரு பணக்கார வீட்டு பையன், போலீஸ்காரன், காதலன் இந்த கெத்தை அப்படியே காட்டுவாரு.ரஜினி(?) படத்துல கூட இந்த மாதிரி சில காட்சி, சரத் படத்துல இந்த மாதிரி சில காட்சி பார்த்தாலும் அந்த பிரபு பாட்டு (அது என்னங்க பாட்டு) மாதிரி வரதீல்லீங்க.சரி இருக்கட்டும்.அதை ஏன் இப்ப சொல்ற என்று கேட்கறீங்களா?
தமிழ்மணத்தில் இப்பல்லாம் எந்த பிரச்சினை வந்தாலும் இந்த மணல் மூட்டை மாதிரி ஆயிட்டேங்க நானு, ஹிஹி. இவ்வளவு தகுதிக்கு மீறிய விளம்பரம் மனசோட ஒரு மூலைல சந்தோசமா இருந்தாலும் நியாயமான விளம்பரம் இல்லீங்க. என்னை விட பெரிய ஆளுங்க எவ்வளவோ இருக்காங்க.எனக்கு வந்த ஒரு வருசத்தில் ஏகப்பட்ட அனுபவம்னே..இந்த சீதா பிராட்டி மாதிரி நெருப்பில விழுந்தெல்லாம் என் கற்பை(கருப்பா..இல்லீங்க கற்பு) நிரூபிக்கற எண்ணமெல்லாம் இல்லீங்க...கதை எழுதத் கத்துக்கதானுங்க இங்க வந்தேன்...ஆனா நடந்தது வேறங்க.
பாலு சொன்ன மாதிரி நான் நேத்து போட்ட பதிவே சூடு அணைக்கற பதிவுதான்...சரி திரும்பவும் சொல்லிட்டாரேன்னு நெருப்பை அணைக்க ஒரு பாட்டு போடலாம்னு தான் நெனைச்சேன்.. ஏற்கனவே எனக்கு புடிச்ச தேவுடா பாட்டை போட்டாச்சி... .வேற பாட்டு என்னன்னே இருக்கு? அதுவும் இல்லாம பாட்டெல்லாம் அதிகம் நமக்கு தெரியாதுண்ணே. இந்த சினிமா பாட்டெல்லாம் எணையத்துல ஃப்ரியா(?) டவுன்லோட் செய்வாங்களாமே..அப்படி எதாவது ஃப்ரி சைட் இருந்தா சொல்லுங்கண்ணே..பாப்பம்...
ஒரு காரியம் செய்வோம்.நாளையோட எனக்கு முப்பது வயது முடியற இந்த நல்ல நேரத்துல நான் ஒரு உருப்படியான காரியம் செய்யறன்னே..ஒரு நாலு நல்லா எழுதக்கூடிய புதிய ஆசாமிகளை அறிமுகப்படுத்தறன்னெ..அதில் பாருங்க..இவங்க போலி நடுநிலைமை, போலி ஆன்மீக ஆசாமிகள் இல்லைங்கண்னே அதே சமயம் இந்த நாலு பேரும் நல்லா எழுதறவங்க அப்படின்னு நான் சொன்னேன்னா அது என் டேஸ்ட்டை வைச்சித்தாங்க... படிங்க..படிச்சிட்டு சொல்லுங்க..
1.kuppusamy
இவரு ஏற்கனவே பங்கு வணிகத்தை பத்தி ஆழமா எழுதுனவரு.மற்ற விஷயங்களையும் தன்னால் எழுத முடியும்னு இந்த பதிவுல நிரூபிக்கறாரு. மனசை தொடும் எழுத்து. ஒரு சர்ச்சைக்குரிய கதையை எழுதியவர்(அதை ரகசியமா ரசிச்சவங்க பலபேர்)என்றாலும் சிறந்த எழுத்தாளர் இவர்
2.bonapert
மிக சிறப்பாக எழுதிக்கொண்டு இருப்பவர் . இவருடைய பாரதி கட்டுரை, மாப்ளா கலவர கட்டுரை உள்பட அனைத்து கட்டுரைகளும் உண்மையில் விஷயம் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும்.போலி நடுநிலைமையாளர்கள், புனித பிம்பங்கள் எக்ஸ்க்யூஸ்
3.voice of wings
அவசியமான விஷயங்களை பேசும் இந்த வார வலைப்பதிவாளரான இவருடைய கட்டுரைகளுக்கு சரியான விளம்பரம் இல்லை என்பது என் வருத்தம்..மறுமொழி மட்டுறுத்தல் செய்யாததும் ஒரு காரணம்.
4.varavanaiyan
வரவணையானின் எழுத்துக்களை உயர்தர காமெடி என்பேன் நான். சிறிது எளக்கிய தத்துவ(?) அறிமுகம் உள்ளவர்கள் ரசிக்கத்தக்க பதிவுகள்.அனைத்து பதிவுகளையும் படியுங்கள்.சின்ன சின்ன பதிவுகள்தான்
சண்டைங்களை பார்த்து டென்சன் பண்ணிக்காம இவங்க பதிவுகளை படியுங்க.. ஏதாச்சம் நல்ல கருத்தா இங்கெல்லாம் பின்னுட்டம் போடுங்க...பொழுது உருப்படியா போகும்.. அணைக்கறதுக்கு பதிலா பத்திக்குச்சின்னு யாரும் இங்க வந்து நீக்காதீங்கண்ணே....
ஹிஹி
35 comments:
பிறந்த நாள் வாழ்த்துகள் முத்து.
முத்து.
பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் (16.7.2006) இனிதே அமைய வாழ்த்துக்கள், ஹி...ஹி.... நாளைக்கு ஒரு நாள் கணிணிக்கு விடுமுறை (மத்த நாட்கள் மட்டும் என்ன பண்ணினனு கேக்கறது காதுல வுழுது....)
பிறந்த நாள் பிறந்த நாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள் மறந்த நாள்
Happy Birthday To You!
Happy Birthday To You!
(இலங்கைத் தமிழர்கள் பலருக்கும் தெந்தமிழகத்தினருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும்.)
முத்து, நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பதினாறும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க.
////தமிழ்மணத்தில் இப்பல்லாம் எந்த பிரச்சினை வந்தாலும் இந்த மணல் மூட்டை மாதிரி ஆயிட்டேங்க நானு////
காய்த்த மரம் கல்லடி படுதுன்னு விட்டுடுங்களேன்....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
இதெல்லாம் சூடு அணைக்கிற பதிவா? அது சரி! நான் வரலைப்பா..
நாளைக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)
இதெல்லாம் உகு - ன்னாலே சகஜமப்பா :))
இன்று புதிதாய் பிறந்தோம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
லக்கி,
//காய்த்த மரம் கல்லடி படுதுன்னு விட்டுடுங்களேன்....//
ஹிஹி அரசியல் வாழ்க்கையில் சாதாரணமப்பா...
நீங்க நேத்து உங்களுது இல்லைன்னு சொன்னீங்கள்ள ஒரு காமெண்ட.. அதை நீக்கியது தவறாமே:))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே.
எல்லா வளமும், நிறைந்த நலமுடனும் வாழ்க.
//கதை எழுதத் கத்துக்கதானுங்க இங்க வந்தேன்...ஆனா நடந்தது வேறங்க.
//
எனக்கு நடந்ததும் இதே தான்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்து.
ஏங்க தமிழ்மணத்துல சூடு தணிஞ்சா நான் எப்படி கரண்டு செலவு இல்லாம சுடு தண்ணியில குளிக்கிறது?
//பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் (16.7.2006) இனிதே அமைய வாழ்த்துக்கள்//
16.7.2006 இதப் பாத்துவுடனே என்னடா பிறந்த நாள் என்று ஏதோ ஒரு ஐ.பி அட்ரஸை தந்திருக்காருன்னு நினச்சேன். என் கண்ணு கொஞ்ச நாளாவே எந்த நம்பரப் பாத்தாலும்ம் ஐ.பி அட்ரஸாகவே தோணுது.
பிறந்தநாள் வாழ்த்துகள் செயல்...
//ஒரு ஐ.பி அட்ரஸை தந்திருக்காருன்னு நினச்சேன். //
ஆகா இன்னிக்கு ஒரு வழி பண்ணாம போக மாட்டாங்க போல இருக்கே!!:-)
முத்து,
எப்பவுமே உங்க சந்தேகத்தை நான் தான் எப்பவும் போக்க வேண்டியது இருக்கு, ஹும்....
அந்த பாட்டு :-
"ரோஜா பூ ஆடி வந்தது,
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ ....."
இணையத்தில் பாட்டை தரையிறக்கம் செய்வதற்கு - mohankumars.com, coolgoose.com etc..,
பாட்டை கேட்பதற்கு - raaga.com, musicindiaonline.com etc.,
தோடா! முக்கியமான விசயத்தை மறந்துட்டேன் பாருங்க.
அதாங்க
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஜனம் தின் முபாரக் ஹோ !!!
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் முத்து
நன்றி முத்து அவர்களே,
உங்களுக்கு எனது மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். சுதந்திரமான , முழு திருப்தி அளிக்கின்ற, அனைத்து இன்பம் கிட்டுகின்ற எதிர்காலம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
அன்பின் முத்து,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
//இலங்கைத் தமிழர்கள் பலருக்கும் தெந்தமிழகத்தினருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும்.)//
மறக்க முடியுமா?
ஓ! முப்பதுதானா!(அவ்வளவு முதிர்ச்சி.. ) :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ம்ம்...
இப்ப உங்க செலவுல எனக்கும் சூனியம் வச்சு விட்டுருக்கிங்க
பார்ப்போம் யார் யாரெல்லாம் வந்து ரீவிட்டு அடிக்கறாங்கன்னு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்து. இது போல் பல நாட்கள் காணவும் அவைகள் மட்டுமின்றி வாழ்க்கையின் அனைத்து நாட்களும் இனிமையாகவும் அருமையாகவும் அமைய வாழ்த்துக்கள்..
30தானா? :-) நெஜமா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:)
செந்தழல் ரவி
முத்து,
பல்லாண்டு வாழ்க!
ராகவன்,
//இலங்கைத் தமிழர்கள் பலருக்கும் தெந்தமிழகத்தினருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும்.)//
பள்ளிப்பருவத்தில் என் உற்ற தோழனாக இருந்த இலங்கை வானொலியை நினைவு படுத்தியமைக்கு நன்றி!
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கடந்த 29 வருஷமா வாழ்த்த முடீலல்ல அதனால இதுவும் சேத்து 30 வருஷத்துக்கும் இப்ப சொல்லிக்கிறேனுங்க
கயமைபோலீஸ்,
உறுதியாக சொல்லமுடியாது...இந்த பதிவிலோ அல்லது அடுத்த பதிவிலோ நான் கயமைத்தனத்தை செய்யலாம்...
:)))
பிறந்த நாள் வாழ்த்துகள் முத்து.
30 ஆச்சா?! வெரிகுட்! :)
பெருமதிப்பு மிக்க 30+ குழுமத்திற்கு உம்மை வரவேற்கிறோம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முத்து!
//இலங்கைத் தமிழர்கள் //
முன்பு இலங்கை வானொலியில் மாலை சொல்லும் பிறந்த நாள் வாழ்த்து நினைவுக்கு வருகிறது.
பிறந்த நாள், இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.
Haappy birthdaay too yuuuu....
முத்து,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தங்களது வலைப்பூ உலக லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்.
வெறுமனே குத்து பயிற்சி பையாக மட்டும் இல்லாமல்., குத்துச்சண்டை வீரராகவும் நீங்கள் செயல்பட்டு வருகீறீர்கள்.
எனது பதிவையும் குறிப்பிட்டிருந்தமைக்கு மிக்க நன்றி. இதை எனது எழுத்துக்கான அங்கீகாரமாக/விளம்பரமாக கருதுகிறேன்.
நன்றி,
அசுரன்
இளவஞ்சி.
//பெருமதிப்பு மிக்க 30+ குழுமத்திற்கு உம்மை வரவேற்கிறோம்!//
அய்யா..28 முடிஞ்சி 2 வருசம் ஆயிருக்கு.. அவ்வளவுதான் :))
முத்து,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Post a Comment