வலைப்பதிவுகளுக்கு அடிமை ஆவது என்பது ஒரு புதிய நோய்தான். பல நண்பர்கள் குறுகிய கால விடுமுறை எடுத்துக்கொண்டு போவது உண்டு. சிலர் நெடுங்கால விடுமுறை எடுப்பார்கள். சிலர் கொடுமை தாங்காமல் ஒரேயடியாக விலகிவிடுவார்கள்.இந்த நோய் உங்களை தாக்கி இருக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகளை சொல்கிறேன்.நம் வாயால் நாமளே வீட்டில் சம்பந்தம் இல்லாமல் உளறுவது ஒரு வகை. அவைகளைப்பற்றி ஒரு சிறிய பார்வை.
சம்பவம் 1:
வீட்டில் ஒரு நாள் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.குழந்தை மழலையில் ஏதோ சொல்ல இனிமே ஓட்டலிலேயே சாப்பிடலாம் என்று குழந்தை சொல்வதாக நான் மொழிபெயர்த்தேன்.
"என்ன உள்குத்தா", என்றாள் வீட்டுக்காரி.
"என்னது? இந்த வார்த்தை உனக்கு எப்படி தெரியும்" என்றேன் நான்.
"நீதான அடிக்கடி சொல்ற", என்றுவிட்டு போய்விட்டாள்.
சம்பவம் 2:
திடீரென்று ஒரு நாள் மாலை ஆபிஸ் விட்டு வீட்டுக்கு சென்றால் எல்லோரும் கிளம்பி நிற்கிறார்கள்.இன்னைக்கு ஷாப்பிங், ஹோட்டல் போகலாம்னு சொன்னியே மறந்துட்டயா என்றார்கள்.
"நான் எப்ப சொன்னேன்?" என்றேன்
"காலைல கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து நீ எழுதிட்டு இருக்கறப்ப சொன்னியே"
",,,,"
"இது தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறது" என்றாளே பார்க்கணும்.
இந்த வாக்கியம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் அதான் அடிக்கடி நீ சொல்றியே என்கிறாள்.
சம்பவம் 3:
"என்னங்க, போன் ரிங் அடிக்குது,ஆனா யாரும் எடுத்தா கட் ஆவுது" என்றாள் வீட்டில்.
"அனானிமஸ் ஆப்ஷனை ரீமூவ் பண்ணணும், எலிக்குட்டி சோதனையை...
"என்ன சொல்றீங்க",என்று இடைமறித்தப்பின்தான் தெரிகிறது நாம் என்ன சொல்கிறோம் என்று.
ஆகவே பேரன்புடைய நண்பர்களே, இது போன்ற சம்பவங்கள் உங்களிடத்தில் தெரிந்தால் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.உங்களுக்கு தோன்றும் அறிகுறிகளை இங்கு பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
Friday, July 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
முத்து நீங்கள் சொல்வது போல் எனக்கும் பின்னூட்டம் இடுவது போல் இரவெல்லாம் கனவுகளிலும் தொல்லை :(((
....என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இதுதான் எனக்கு பிடித்த, நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை.
:))
நல்ல இடுகை.
இங்கே நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும்போது எங்களுக்குள் நாங்கள் பயன்படுத்தும் வார்த்தை *****த் தனம் [***** - ஒரு வலைப்பதிவர் பெயர் என்றறிக. ;) ]. பயன்படுத்தும் அர்த்தம் - போலி அறிவுஜீவித்தனம்.
உச்சக்கட்டம் - இதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டோம். சரி சரி, விட்டேன்.. ஏனென்றால் அதை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டிருந்தவள் நாந்தான்.
ரொம்பவும் பிடித்துப்போய் தமா்ஷாகப் பயன்படுத்துவது 'சொந்த செலவில் சூன்யம்' தொடர்.
இவற்றைத் தவிர இன்னும் சில வார்த்தைகள் இருக்கின்றன. நினைவில் வரமாட்டேனென்கிறது.
எங்களைத் தவிர நண்பர்களின் அம்மாவும் இந்தப் பிரயோகங்களின் அர்த்தத்தை உணர்ந்து அவ்வப்போது எடுத்துவிடுவார். ஒரே கூத்துதான். :))
-0-
எல்லாவற்றையும்விட முக்கியமான விதயம் ஒன்று. அவ்வப்போது வந்து விழும் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இணையத்தில் கற்றுக்கொண்டவையாகவும் இருக்கின்றன. அது, என்னைப்பொருத்தவரை நல்ல பயனாக இருக்கிறது.
-மதி
ரெண்டாவது நிகழ்ச்சி பாதிவரைக்கும் எங்கள் வீட்டில் பலமுறை நடந்திருக்கிறது. மீதி நடந்ததில்லை. சூனியம் வச்சுக்கிறது பத்தி வீட்டுல பேசினதில்லை.
எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள்:
'என்னங்க தூங்காம புரண்டுக்கிட்டே இருக்கீங்க? யாராவது உங்களைத் திட்டியோ கிண்டல் பண்ணியோ எழுதிட்டாங்களா?'
'ஏன் அப்படி கேக்குற? ஆபிஸ் பிரச்சனையா இருக்கக்கூடாதா?'
'உங்களைப் பத்தித் தெரியாதா? எப்ப ஆபிஸைப் பத்திக் கவலைப்பட்டிருக்கீங்க? எப்பப் பாரு ப்ளாக் தான்'
***
'என்னங்க இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க? கமெண்ட்ஸ் அள்ளிக்கிட்டு போகுதா?'
'ஹிஹி'
:-)
இன்னொன்று:
"அண்ணே, நான் அனுப்பிச்ச மெயில் கிடச்சுதா?"
"கிடைச்சுதே, படிச்சதும் பின்னூட்டம் விட்டேனே..."
"என்னது..."
"I mean...ரிப்ளை பண்ணினேனே..."
:-)
ஸ்ரீகாந்த்.
பின்னுரீங்க தலைவா!
எழுத்துப்பிழையாரே. எங்கள் பதிவுக்கு எப்போது தங்கள் வருகை?
//என்னங்க, போன் ரிங் அடிக்குது,ஆனா யாரும் எடுத்தா கட் ஆவுது" என்றாள் வீட்டில்.
"அனானிமஸ் ஆப்ஷனை ரீமூவ் பண்ணணும், எலிக்குட்டி சோதனையை...//
இது சூப்பர்...
நல்ல வேலை..இதெல்லாம் நம்ம வீட்டுல நடக்கல..
ஆரம்பத்துல "என்ன...தேன்கூட்டுகுள்ள பூந்துட்டீங்களா" மட்டும்.. அப்புறம் அதுவும் நின்னுடுச்சு...
குமரன் சொன்ன மாதிரி இந்த டயலாக் மட்டும் எப்பவும் உண்டு : "உங்களைப் பத்தித் தெரியாதா? எப்ப ஆபிஸைப் பத்திக் கவலைப்பட்டிருக்கீங்க?"
எழுத்துபிழைகள் திருத்தப்பட்டன. நன்றி.இது ஒரு நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.
100 நிச்சயம்...
எங்க எல்.ஜி டீம்ல இருக்க ஒரு பய சொல்லுறான் ( பேசு அசோக்கு - சிவகாசி பய)
ரவி லேப்டாப்பை சீரியசா பாத்துக்கிட்டு இருந்தாருன்னா பதிகம் (பதிவுன்னு சொல்லத்தெரியாத பய) போடுறாருன்னு அர்த்தம்...
ஜாலியா பாத்துக்கிட்டு இருந்தாருன்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காருன்னு அர்த்தம் என்று...
பஞ்சாபிக்காரிக்கு ஒரே போறாமை..யூ கேன் டைப் மெயில் ஆல்சோ இன் டமிலா...வீ கேண்ட் டூ தட் அப்படீன்னு நொந்துக்கறா...
ஆறு மணி வேலை முடிஞ்சா - பெங்களூர்ல ஊர் சுத்த போய்க்கிட்டு இருந்த நானு கடந்த மூனுமாசமா - எட்டுமணிவரை அலுவலகத்துலே உட்கார வேண்டியதாயிடுச்சி...
காலையில ஒன்பது மணிக்கே வரவேண்டியதாயிடுச்சி...
பங்ச்சுவாலிட்டி பர்பார்மர் என்று அவார்டு கொடுத்து கொன்னுட்டானுங்க..
ரசித்துப் படித்தேன். இனிமேல்தான், நான் என்னவெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கேன் இந்தமாதிரின்னு ஒரு சுயமதிப்பீடு செஞ்சு பார்க்கணும்:))
"என்ன உள்குத்தா", என்றாள் வீட்டுக்காரி.
நிஜமான உள்குத்துன்னா இதுதான்.நல்லவேளை உங்க வீட்ல இப்போதைக்கு ஒரே ஒரு பதிவர்தான் :)
பாராட்டுகள் ரவி. :-)))
//நல்லவேளை உங்க வீட்ல இப்போதைக்கு ஒரே ஒரு பதிவர்தான்//
ஹிஹி வீட்டுக்காரம்மாங்களும் வலைபதிக்க வந்துட்டா அப்புறம் எவனாவது இங்க விவாதம்னு செய்யமுடியுமா? :)
இப்பவே "நீயெல்லாம் எழுதி" அப்படின்னு அவ சொல்றப்ப பக் பக்னு இருக்குது சார்.
//ரவி லேப்டாப்பை சீரியசா பாத்துக்கிட்டு இருந்தாருன்னா பதிகம் (பதிவுன்னு சொல்லத்தெரியாத பய) போடுறாருன்னு அர்த்தம்...//
என்னது பதிகமா? வடகம்னு சொல்லாம உட்டானே :))
//பின்னூட்டம் இடுவது போல் இரவெல்லாம் கனவுகளிலும் தொல்லை //
யார் வந்து இடுவது போலன்னு சொல்லவே இல்லையே கோவி..
(அப்பாடா சிம்ரன் சமாச்சாரத்தில் வாங்கியதை திருப்பியாச்சு :))
//எப்ப ஆபிஸைப் பத்திக் கவலைப்பட்டிருக்கீங்க? எப்பப் பாரு ப்ளாக் தான்'//
குமரன்,
இது சாதாரணம் ஆயிடுச்சுங்க..இந்த வார்த்தை கேக்கலைன்னா அவர் வலைப்பதிவுகளில் ஆழமாக இயங்குவதில்லை என்று அர்த்தம் :))
//எங்களுக்குள் நாங்கள் பயன்படுத்தும் வார்த்தை *****த் தனம் [***** - ஒரு வலைப்பதிவர் பெயர் என்றறிக. ;) ]. பயன்படுத்தும் அர்த்தம் - போலி அறிவுஜீவித்தனம். //
கிசுகிசு...கிசுகிசு..
நன்று தமிழினி - the best fun is that which is out of introspection !
//....என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?//
வழிபோக்கன்,
இது சரிதான் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
//"அண்ணே, நான் அனுப்பிச்ச மெயில் கிடச்சுதா?"
"கிடைச்சுதே, படிச்சதும் பின்னூட்டம் விட்டேனே..."//
:))
அந்த பின்னூட்டத்திலயாவது மாடரேசன் இல்லாம இருக்கே..
anony,
:))நல்ல மூட்ல இருக்கேன்.
அப்படியே நான் கத்துக்கிட்ட இன்னும் புரியாத வார்த்தைகளையும் சொன்னா பட்டுன்னு யாராவது விளக்கிருவாங்க..
தெரிஞ்சுக்கிட்டது:
1.மறுமொழி மட்டுறுத்தல்
2.எலிக்குட்டி ( எங்க அலுவல சிஸ்டம் அட்மினுக்கு போன் செய்து என் எலிக்குட்டி சரியா வேலை செய்யமாட்டேங்குது என்று சொல்லி - அவர் ஏதோ எலி ஒயர்களை கடிக்குது என்று ஏதோ ஒரு ஸ்ப்ரேயோடு ஆபிஸ் பாயை அனுப்பி ஒரே காமெடி போங்க )
புரியாத வார்த்தைகள்:
1.பின்நவீனத்துவம்
2.திம்மித்துவம்
இப்போதைக்கு 2 - 2 போது...மீதியை அடுத்த பின்னூட்டத்தில உஷார் பன்னுரேன்..
ஒங்க நெலம இப்பிடியா ஆகனும்..ம்ம்ம்..மங்களூரு போயும் மஞ்சக் குளிக்க முடியலையேங்குற மாதிரி ஆயிருச்சு பாத்தீங்களா?
இந்த உள்குத்து, சூனியங்கள்ளாம் எனக்குத் தெரியாது. ஆனா பின்னூட்டம் என்னையத் தொத்திக்கிச்சு. எல்லாம் பின்னூட்டந்தான் இப்போ.
சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் படுத்திய பெருமை இளவஞ்சியாரையேச் சாரும்.
எல்லோரும் நல்லா "ஜல்லியடிகிறாங்க",இதுக்கு ஒரு "மீள்பதிவு" போட்ருங்க முத்து.
பெரியாருக்கும்,ராஜாஜிக்கும் தெரியாத விஷயமெல்லாம் தெரிஞ்சுக்கலாம்-:)))))) (உங்க பதிவுல மறுமொழி இட கூட பயமாயிருக்குப்பா... படிக்கிறதோட சரி நம்ம.)
official mail அனுப்பினாகூட மறந்துபோய் "சிரிப்பான்" "அழுவான்" எல்லாம் போட்டிற்ரேன்!!!
நிறைய "உள்குத்து" பதிவா படிச்சு படிச்சு....LCD மானிடர் சாதா மானிடர் போல வீங்கிடுச்சு "அவ்வ்வ்வ்...."
நான் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டு அதை வீட்டில் என் கணவரிடம் பேசி (பேச்சு வாக்கில்), திட்டும் வாங்கினேன்.. இந்த வார்த்தைகள் அவரிடம் பேசியதற்கு அவர் எப்படி என்னை திட்டி இருப்பார் என நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.
1. தோடா
2. உதார்
3. சவுண்டு
4. உள்குத்து
//உங்களைப் பத்தித் தெரியாதா? எப்ப ஆபிஸைப் பத்திக் கவலைப்பட்டிருக்கீங்க?" //
சூப்பரப்பூ... அதேமாதிரி ஆபிஸ்ல எப்ப நம்மளப் பத்தி கவலைப்பட்டிருக்காங்க.. ஏதோ அவங்க விதி :-)
தலைவரே!
மேலே போட்ட பின்னூட்டம் நம்முடையது கிடையாது.... எலிக்குட்டி/புலிக்குட்டி/போட்டோ எல்லாம் match ஆவுதான்னு பாருங்க....
ஆனாலும் அந்தப் போலி பின்னூட்டம் சொன்னது உண்மைதான் போல இருக்கே :-)))))))))))
லக்கி,
ஆவ்வ்வ்வ்வ்வ்வ
குறும்புகாரர் ஒருவருக்கு,
ஹிஹி
//நிறைய "உள்குத்து" பதிவா படிச்சு படிச்சு....LCD மானிடர் சாதா மானிடர் போல வீங்கிடுச்சு "அவ்வ்வ்வ்...."//
வெடிச் சிரிப்பில் சுத்தியிருந்தவங்கல்லாம் நம்மளா லூசுன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இப்படி அப்பப்ப வெடிகளை போட்டு விட்டாதான் ரெடியேட்டர் கூல் ஆகுது. எப்பப்பாத்தாலும் முறுக்கிட்டு இருக்க முடியாதுல்ல...
நன்றி முத்து..
காலத்தை உணர்ந்த பதிவு.
எனக்கு இன்னும் வியாதி எதுவும் தொத்தல
நன்றி,
அசுரன்
முத்து,
சம்பவம் 1 :))))))
ராகவன்,
// சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் படுத்திய பெருமை இளவஞ்சியாரையேச் சாரும். //
அதன் மூலம் நானல்ல! எனக்குச் சொன்ன அந்த புண்ணியவானைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்! வாயில ஒருநாளைக்கு 10 முறையாவது வருது! :)
அந்த புண்ணியவான் விட்டது சிகப்புவின் முதல் பதிவில் இருப்பார்...
//
official mail அனுப்பினாகூட மறந்துபோய் "சிரிப்பான்" "அழுவான்" எல்லாம் போட்டிற்ரேன்!!!
//
என்னோட பெரிய பிரச்சனை இது தான்.. விட்டா டாகுமென்ட்ல எல்லாம் கூட ஸ்மைலி போடுவேன் போலிருக்கு.. :)
/*
.. விட்டா டாகுமென்ட்ல எல்லாம் கூட ஸ்மைலி போடுவேன் போலிருக்கு..
*/
too late, i'm doing it already...
Certainly nice article.
Wish I do not get lost in this lost world.
மனம் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!
மிக நன்றாக இருந்தது!
பாராட்டுகள்!
முத்து,
பின்னூட்டங்கள் படிக்கும் போது அவ்வப்போது பலமாகச் சிரிப்பதும், சில பல புதிய தமிழ்ப் பதங்கள் பயன்பாடுகள் அறிவதும், நிறைய புதிய பார்வைக் கோணங்கள் அறிவதும் தமிழ்வலைப்பதிவுலகில் புதியவனாகிய எனக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
//// சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் படுத்திய பெருமை இளவஞ்சியாரையேச் சாரும். //
அதன் மூலம் நானல்ல! எனக்குச் சொன்ன அந்த புண்ணியவானைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்! வாயில ஒருநாளைக்கு 10 முறையாவது வருது! :) //
அந்த புண்ணியவான்... வரவனையான் அவர்கள்.
இந்த சொற்றொடரால் வந்த எல்லா புகழும் வரவனையானுக்கே:-)
நமக்கு இன்னும் அந்த அளவுக்கு முத்தல.... ஹி....ஹி.
ஆனால் தொடைத் தட்டியை பார்த்து அடிக்கடி சிரிப்பதை கண்டு என்னுடன் கூட வேலை செய்பவர்கள் ஒரு மாதிரி பார்பார்கள். மத்தப்படி மிக நல்ல பெயர் தான், வெட்டி பேச்சு பேசாம பொழுதனைக்கும் சிவா வேலையில் மிகுந்த கவனமாக இருப்பதாக.
ஹி... ஹி. அவிங்களுக்கு என்ன தெரியும், நம்ம என்ன வேலை பாக்குறோம் என்று......
:(
Me too....
Room mates 'pinnu'raanga!!!
ஏப்பா, எட்டி பார்த்து ஏழுவருசம் உள்ள போன கதையா,
ஒரு நா நான் சொன்னதை வச்சு ஊரே மாத்துகட்டுல சூனியம் வச்சுக்கிறீங்களே.
☺☺☺☺
☺☺☺☺
☺☺☺☺
☺☺☺☺
வரவணையான் அண்ணாச்சி!
நீர்தானா அது! உமக்கு கோடி புண்ணியம்! சீக்கிரமா வேற ஏதாச்சும் சொல்லிவிடுங்க... இந்த சூனிய மேட்டரு வீட்டுல இட்டிலி சண்டைல இருந்து ஆபீஸ்ல மீட்டிங் பாலிடிக்ஸ் வரைக்கும் விக்கிரமாதித்யனோட வேதாளம் மாதிரி மனுசனபிடிச்சுத் தொங்குது...
// ஏப்பா, எட்டி பார்த்து ஏழுவருசம் உள்ள போன கதையா //
ஆஹா! இது வேறயா? எட்டிப்பார்த்த கதையேதான்! இப்பத்தான் ஒண்ணரை வருசம் ஆகியிருக்கு! ( நான் வலைப்பதிந்து வரும் காலம்! ) :)))
//எல்லாவற்றையும்விட முக்கியமான விதயம் ஒன்று. அவ்வப்போது வந்து விழும் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இணையத்தில் கற்றுக்கொண்டவையாகவும் இருக்கின்றன. அது, என்னைப்பொருத்தவரை நல்ல பயனாக இருக்கிறது.//
மெய்யாலுமே இது மெய். இப்பொழுதெல்லாம் நண்பர்களிடம் பேசும் பொழுது கூட "இயன்ற வரை இனிய தமிழ்" தான். எங்க ஊர் (திருப்பத்தூர்) தமிழ், சென்னைத் தமிழை ஒத்தே இருக்கும்.
//சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறது//
Xcellent. நன்றி இளவஞ்சி.
Post a Comment